Tuesday, 3 August 2021

ஆலய பணிகள் , இன்றைய விரிவுரை

 நமது பொகளூர் அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடத்தில் ஆலய பணிகள் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே .


முதலில் நிலம் வாங்கப்பட்டது , பின்னர் கம்பு சோளம் பயிர்கள் விதைக்கப்பட்டு , பறவைகளுக்கு உண்பதற்காக அளிக்கப்பட்டது .


பின்னர் ஆழ் துழாய் கிணறு அமைக்கப்பட்டு நிலத்தடி நீரை மேலே கொண்டு வருவதற்கு வழிவகை செய்யப்பட்டது 


பின்னர் நிலத்தை சமன்படுத்தி , மண் கொட்டி நல்ல சமதளமாக செய்யப்பட்டது 


பூமி பூஜை  முன்பாக முதலில் திருநெல்வேலி பாபநாசம் சென்று ஆலயத்தில் யாசகம் பெற்று , பின்னர் திருவண்ணாமலை சென்று யாசகம் பெற்று , பின்னர் அவிநாசி ஆலயம் சென்று யாசகம் பெற்று , அந்த யாசகம் பணத்தை கொண்டு பூமி பூஜை போடா தேவையான பொருட்கள் வாங்கப்பட்டு அந்த பணத்தில் தான் பூமி பூஜை போடப்பட்ட வேண்டும் என்ற அகத்தியர் உத்தரவு செயல்படுத்தப்பட்டது


பின்னர் , பூஜை போடப்பட்டு , அகத்தியர் நாமங்கள் செப்பு தகட்டில் எழுதி பூமியில் வைத்து பூமிக்கு அகத்தியரின் சக்தி கூட்டப்பட்டது 


தற்போது சுற்றுப்புற சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது .


சாதாரண வேலியாக இல்லாமல் , 25 தூண்கள் நிறுவப்பட்டு , அதனிடையில் கான்க்ரீட் அடித்தளம் போட்டு தூண்கள் இணைக்கப்பட்டு , அதன் மேல் ஹாலோ பிளாக் கற்கள் கொண்டு , சுமார் 7 அடி உயரத்தில் பிரமாதமாக சுற்றுப்புற சுவரெழுப்பப்பட்டு வருகிறது 


மேலும் நுழைவு வாயிலில் , 40 அடி உயர அலங்கார வளைவு கான்க்ரீட் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.


அடுத்ததாக அகத்தியர் குடில் அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது , மேலும் த்யான மண்டபம் , அன்னதான மண்டபம் , கோசாலை , சிவன் குடில் , கணபதி சன்னிதானம் , கழிவறைகள் , 27 நட்சத்திர மரங்கள் ஆகியவை அமைக்கும் திட்டமும் உள்ளது 


அணைத்து பணிகளும் அகத்தியரின் நேரடி மேற்பார்வையில் , ஜீவ அருள்  நாடியில் உத்தரவு பெற்று பின்னரே செய்விக்கப்படுகிறது .


தற்போதய தேவை 


1. சுற்றுப்புற சுவர் நிறைவு பெற இன்னும் 40 ,மூட்டை சிமெண்ட் , மற்றும் , சுமார் 600 ஹாலோ பிளாக் கற்கள் தேவையாக உள்ளது. இதன் மதிப்பு சுமார் 35,000 ரூபாய். பணமாக இல்லாமல் பொருளாக வாங்கி கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.


2. அடுத்த கட்டமாக அகத்தியர் குடில் ஆரம்பிக்க அய்யன் நாடியில் உத்தரவு அளித்துள்ளார் . மேலும் அகத்தியர் ஜீவ நாடியில் கூறும் போது , அலங்கார நுழை வாயிலில் இருபுறமும் கலசம் அமைத்து , நடுவில் ஓம் என்ற எழுத்தை வைக்குமாறு கூறி உள்ளார். அதற்கும் நிதி தேவையாக இருக்கிறது. நுழைவு வாயிலில் 10 ஆதி உயர அகத்தியர் லோபாமுத்ரா சிமெண்ட் சிலைகள் நிறுவப்பட திட்டமிடப்பட்டுள்ளது . மேலும்  வேல் ஒன்றும் பிரதிட்டை செய்ய உத்தரவு உள்ளது . அனைவற்றுக்கும் விருப்பமுள்ள பக்தர்கள் ஒவ்வொரு திட்டங்களையும் எடுத்து அதற்கு வேண்டிய பொருட்களையும் கட்டுமான கூலியையும் அளிக்கும் பட்சத்தில் ஒவ்வொன்றாக நிதானமாக செயல்படுத்தப்படும் . அப்படி தான் , நிதானமாக நிலம் வாங்குவது முதல் இது வரை பக்தர்கள் காணிக்கையை கொண்டே செயல்படுத்தி கொண்டு வருகிறோம்  


தற்போது அகத்தியர் குடில்  35 அடி நீளம் , 16 அடி அகலம் , அமைக்க இரும்பு அங்கிள் கம்பிகள் பொருளாக தானம் பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளன . மேலும் நுழைவு வாயிலில் 20 அடி அகலம் , 8 அடி உயரத்தில் இரும்பு கதவு செய்யப்பட்டு தயாராக உள்ளது.


தற்போது அகத்தியர் குடில் அமைக்க 2 லட்சம் செலவில் , தரை தளம் , சுற்று சுவர் , பாம்பே ஓடுகள் கொண்ட கூரை , அதன் உள்ளே தர்பையால் வேயப்பட்ட சிறு குடில் , ஆகியவை திட்டமிடப்பட்டுள்ள .

இந்த வார இறுதியில் , அமாவாசைக்கு மேல் வளர்பிறையில் , வேலைகள் துவங்க அகத்தியர் உத்தரவு கொடுத்துள்ளார்.


மேலும் அதன் தொடர்ச்சியாக த்யான மண்டபம் அதே குடில் முறையில் 36 அடி நீளம் 16 அடி அகலம் கொண்ட அளவில் அகத்தியர் குடில் அருகே அமைக்கப்படும் திட்டம் உள்ளது . இதன் கட்டுமான செலவு 2லட்சம் ஆகும் 


பின்னர் அன்னதான கூடம் , கழிவறைகள் ஆகியவற்றுக்கு சுமார் 2 லட்சம் வரை செலவு ஆகும்.


மொத்தமாக சுமார் 10 லட்சம் ரூபாயில் நமது அகத்தியர் ஆசிரமத்தை நிறைவு செய்யலாம்.


பக்தர்கள் மனமுவந்து பொருள் தானம் , நிதி அளித்து , நடத்தி கொடுக்க வேண்டுமாய் , அகத்தியர் ஆசிரமம் சார்பில் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.


கடவுளுக்கு இவை  எல்லாம் தேவையே இல்லை . நம்மை போன்ற மனிதர்கள் சிறு சிறு வாழ்வியல் பிரச்சனைகளால் அவதியுற்று , நோய் நிதிகளால் அவதியுற்று , வறுமையால் அவதியுற்று இருக்கும் சூழ்நிலையில் , ஆதரவு கூறவும் காப்பாற்றவும் , அறிவுரை கூறவும் , முக்கியமாக தர்ம வழி பாதை காட்டவும் , ஆன்மீக முன்னேற்றத்துக்கும் , சித்தர் வழி வாசி யோகா த்யான முறைகளை கற்று அறிவதற்கும் , மேலும் அவரவர் தேவைகளுக்கு ஏற்ப  காரிய சித்தி பெறுவதற்கும் , இறைவனுக்கும் நமக்கும் உண்டான ஒரு தொடர்பு தேவையாக உள்ளது , நமது வாழ்வு சிறக்க , ஏற்றம் பெற வேண்டி தான் இந்த ஆசிரமம் நிறுவப்படுகிறது . நிறைய நிதி கிடைக்கும் பட்சத்தில் , அன்னதானம் , ஆதரவற்ற முதியோர் காப்பகம் ஆகியவற்றை நிறுவி மக்கள் சேவை செய்ய சித்தர் பாதையில் பயணிக்கும் ஒவ்வொருவரும் எண்ணம் கொண்டு இந்த ஆசிரம வளாகத்தை நிறுவி , எதிர்காலத்தில் பல நூறு வருடங்களுக்கு இந்த சேவைகள் மக்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் வண்ணம் செய்ய வேண்டுமானால் , இது போன்றதொரு காலத்துக்கும் அழியாத , நேரிடையாக ஜீவ நாடி மூலம் அகத்தியருடன் உரையாடும் ஒரு இடம் பூமியில் மக்களுக்கு தேவை . தற்போதய கால கட்டங்களில் திடீர் மரணங்கள் சாதாரணமாகி விட்டன . யார் எப்போது மரணத்தில் இழுத்து செல்லப்படுவார் என்று அறியாத பீதி உள்ளது . நன்றாக இருக்கும் பொது காலம் தாழ்த்தாமல் இது போன்ற அறக்கரியங்களில் ஈடுபட்டு முடிந்த வரை புண்ணியம் சேர்த்தால் பல ஆபத்துக்களிலும் மரணம் நேராமலும் இந்த புண்ணியம் மட்டுமே காப்பாற்றும் . உலகத்தில் ஏற்கனவே வேற்று கிரக சக்திகள் தீராத நோய் உருவம் கொண்டு ஏற்கனவே மனித இனத்தை அழிக்கும் வரை ஓய மாட்டோம் என்று சூளுரை கொண்டுள்ள இந்த காலகட்டத்தில் , எவரெவர் சித்தர்களை வழிபட்டு அறக்கரியங்களில் ஈடுபட்டு உள்ளார்களோ அவர்களை சித்தர் நிச்சயம் அழிவில் இருந்து மீது காப்பார் என்பது உறுதி . இதை புரிந்து கொண்டு அழியும் பொருட்களான உடல்,சொத்து வீடு உறவு போன்றவை நிலையில்லாத பொருட்கள் விஷயங்களில் நிம்மதியை தேடாமல் , இறைவனின் திருவடி ஒன்றே சரணாகதி என்ற நிலை கொண்டு ,  பயணம் செய்வதற்கு நமது அகத்தியர் பீடம் ஒரு இடமாக இருந்து அகத்தியர் நேரடியாக வழி காட்டுவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை . கண்கூடாக பார்க்கும் உண்மை இது.


 எனவே இந்த அறக்காரியத்தை ஒரு செலவாக எண்ணாமல் , நாமும் நமது குடும்பமும் , நமது சந்ததிகளும் , நமக்கு அடுத்து வரும் தலைமுறைக்கும் ஒரு சரியான வழிகாட்டுதலாக இருக்க செய்யும் ஒரு அகத்தியர் ஆசிரமத்தை நமக்காக நாமே உருவாக்கி கொள்கிறோம் என்ற எண்ணத்தில் , நம்மால் முடிந்த சிறு சிறு உதவிகள் பணிகளை எடுத்து செய்வோம் . 


இந்த அகத்தியர் ஆசிரம பணி யில் அனைவரும் சமமே , நடத்துபவர் அகத்தியர் . எனவே எந்த கவலையும் , எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் , பணிகள் தாமாகவே நடைபெறுகின்றன . நிலம் வாங்குவதில் இருந்து இன்று வரை , அகத்தியர் பலருக்கும் கனவில் சென்று கூறி , உதவிகள் கிடைக்குமாறு செய்துள்ளார். பல அகத்திய பக்தர்களும் தாமாகவே முன்வந்து உதவி செய்த வண்ணம் உள்ளனர், இதில் யாரும் முன்னிலை கிடையாது. அனைவருக்கும் ஆலயத்தில் சம பங்கு உள்ளது. 


இப்படியான , இந்த தர்ம காரியத்தில் நீங்களும் ஈடுபட ஒரு வாய்ப்பாக இதனை கருதி உங்களால் இயன்ற உதவிகளை செய்து ஆலயம் ஆசிரமம் அமைக்க கை  கொடுக்கலாம். பணிகள் நிறைவு பெற்ற பிறகு இது போன்ற வாய்ப்புகள் அமையாது. 


ஓம் அகத்தீசாய நமஹ 

குருவடி சரணம் திருவடி சரணம் 


அடியேன், சித்தர் வழியில் 


தி. இரா . சந்தானம் 

கோவை

No comments:

Post a Comment