ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583 THIS SITE IS BEST VIEWED IN GOOGLE CHROME BROWSER. இந்த வலைத்தளம் கூகிள் குரோம் என்ற சாதனத்தில் சிறப்பாக இயங்கும்.
Sunday, 26 October 2025
Friday, 24 October 2025
பஞ்சாமிர்த வண்ணம்
- ஆசிரியர்:பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்.
- மையக்கரு:முருகப்பெருமானின் பெருமைகளை ஐந்து பஞ்சாமிர்தப் பொருட்களான பால், தயிர், நெய், சர்க்கரை, தேன் ஆகியவற்றின் அடிப்படையில் பாடுவது.
- பயன்:இந்தப் பாடலை பாராயணம் செய்வதால் முருகனின் அருளை எளிதில் பெறலாம் என்று கூறப்படுகிறது.
- வரலாற்று நம்பிக்கை:இந்தப் பாடல்கள் ஒலிக்கும் இடத்திற்கு முருகப்பெருமானே வருவார் என்றும் கூறப்படுகிறது.
- பிரிவுகள்:இந்தப் பாடலில் உள்ள ஐந்து பகுதிகள் பஞ்சாமிர்தத்தின் ஐந்து பொருட்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
பஞ்சாமிர்த வண்ணம்
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய பஞ்சாமிர்த வண்ணம்
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய பஞ்சாமிர்த வண்ணம் முருகப்பெருமானுக்கு மிகவும் விருப்பமானது. முருகப்பெருமானே, இப்பாடல் பாராயணம் செய்யும் இடங்களில் வருவேன், இருப்பேன் என்று கூறியதாக வரலாறு. இப்பாடலை நாளும் பாராயணம் புரிந்தால், முருகனருள் எளிதில் கிடைப்பது உறுதி.
பஞ்சாமிர்த அபிஷேகப் பிரியரான முருகனுக்கு அந்த அபிஷேகம் செய்ய வசதியில்லாதவர்களும், அந்த அபிஷேகப்பலனை பெறும் வண்ணம் பரிபூஜண பஞ்சாமிர்த வண்ணம் என்ற நூலை எழுதினார். பாப்பன் ஸ்வாமிகள். இதைப்பாடி பயனடைந்தவர் பலர் உள்ளனர். முருகப் பெருமானுக்கும் இந்தப் பாடல்கள் மேல் அளவு கடந்த ஆசை உண்டு. எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் அநுமன் இருப்பான் என எவ்வாறு ஸ்ரீராமர் சொன்னாரோ அப்படியே முருகனும், இந்தப் பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களில் மயங்கி, “இந்தப் பாடல்கள் எங்கெல்லாம் பாடப் படுகிறதோ அங்கெல்லாம் நான் எழுந்தருளுவேன்.” என்று கூறியதாகக் குறிப்புகள் சொல்லுகின்றன என்பர் முருகனிடம் பற்றுள்ள ஆன்றோர் பலரும். என்றாலும் இது வெளித் தெரியும்படி நடந்த ஒரு நிகழ்வும் உண்டு.
திருச்செந்தூரில் ஆலய அர்ச்சகர் அநந்த சுப்பையருக்கு இந்தப் பரிபூர்ண பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. ராகமும், தாளமும் இவரை மயக்கி இருந்தது. இதைப் பாராயணம் செய்த வண்ணமே இருப்பார். அவருடைய நண்பரான சுப்ரமண்ய ஐயர் என்பவரும், இந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டு அவரும் இந்தப் பாராயணத்தில் கலந்து கொண்டார். மண்டபம் ஒன்றில் அமர்ந்து இருவரும் விடிய விடிய இந்தப் பாடல்களை ராகத்துடன் பாடி வந்தார்கள். தினமும் இது நடந்து வந்தது. ஒருநாள் இந்த மண்டபம் வழியே சென்ற முத்தம்மை என்னும் 80 வயதான பெண்மணி பாடல்களால் கவரப்பட்டு மண்டப்த்தினுள்ளே நுழைந்து இருவரும் இசையுடனும்,ஒருமித்த சிந்தனையுடனும் பாடுவதைக் கண்டு மனம் பறி கொடுத்தார். தினமும் அவரும் வந்து பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களைக் கேட்க ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்?பாடல் புனைந்தவருக்கோ, அல்லது பாடிப் பாடி உருகினவர்களுக்கோ காக்ஷி கொடுக்காமல் முத்தம்மைக்குக்காக்ஷி கொடுக்க எண்ணி இருக்கிறான் முருகன். அவன் திருவிளையாடலின் காரணமும், காரியமும் யார் அறிய முடியும்? ஒருநால் அது 1918-ம் ஆண்டு சித்திரை மாதம் வியாழக்கிழமை இரவு எட்டு மணி. வழக்கம்போல் பாராயணம் நடக்க முத்தம்மை கேட்டுக் கொண்டிருந்தார். மண்டபத்துக்குள் தன்னைத் தவிர இன்னொரு இளைஞனும் நுழைவதை முத்தம்மை கண்டார். நேரில் வராமல் யாரும் அறியா வண்ணம், தூணின் மறைவில் நின்று பாடலாய் ரசித்தான். அவனையே திரும்பித் திரும்பிப் பார்த்தார் முத்தம்மையார். யாராய் இருக்கும்? குழம்பிப் போனார். அவனை விசாரிக்கலாமா? அவனருகே சென்றால்! ஆஹா, அவனைக் காணோமே! இப்போது இங்கே இருந்தானே! எங்கே போனானோ? பாராயணம் முடிந்ததும், அவர்கள் இருவரிடமும் இது குறித்துச் சொன்னார் முத்தம்மை.
மறுநாளும் பாராயணம் தொடந்தது. விடிய விடிய நடந்த அந்தப் பாராயணத்தின் போது அதிகாலை சுமார் நாலு மணிக்கு முதல்நாள் வந்த அதே இளைஞன் மண்டபத்தினுள் வர,இப்போது இவனை விடக் கூடாது என முத்தம்மை அவனருகே சென்று, “நீ யாரப்பா?”என்று கேட்டார்.அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே, “நான் இந்த ஊர்தானம்மா. என்னைப் பின் தொடர்ந்து வந்தீரென்றால் நான் இருக்கும் இடக் காட்டுவேன்.” என்றான். முத்தம்மையும் சம்மதித்து அவன் பின்னே செல்ல, வீதியில் இறங்கி நடந்த அந்த இளைஞனோடு சற்று நேரத்தில் இளம்பெண் ஒருத்தியும் சேர்ந்து கொண்டு கை கோர்த்துக் கொண்டு நடந்தாள். இருவரும் நடக்க, முத்தம்மை தொடரக் கோயில் வந்தது. இளைஞன் திரும்பி முத்தம்மையைப் பார்த்து, “ அந்த அந்தணர்கள் இருவரும் இசைத்துக் கொண்டிருந்த பஞ்சாமிர்த வண்ணப் பாடல்கள் என் மனதைக் கவர்ந்தது. மகிழ்வைத் தந்தது. ஆனால், இன்னும் இசை சேர்க்கப் பாடவேண்டும் என அவர்களிடம் சொல்லு.இதை எங்கெல்லாம் இசையுடன் பாடுகின்றார்களோ, அங்கெல்லாம் நான் வருவேன். என் இருப்பிடம் இந்த திருக்கோயில்தான்,” என்று சொல்லியவண்ணம் இளைஞன் தன்னுடன் வந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு கோயிலுள்ளே சென்று மறைந்தான். முத்தம்மை விதிர்விதிர்த்துப் போனார். தன்னுடன் பேசியது சாக்ஷாத் அந்த முருகப் பெருமானே அல்லவா? ஆஹா, என்ன தவம் செய்தேன்!” என்று மனம் உருகிப் போனார்.
panchaamritavanam-பஞ்சாமிர்த வண்ணம்
https://www.youtube.com/watch?v=Pay7kY4M9HQ
1. பால்
இலங்கு நன்கலை விரிஞ்சனோ
டனந்த னுஞ்சத மகன்சதா
வியன்கொ டம்பியர் களும்பொனா
டுறைந்த புங்கவர் களுங்கெடா
தென்றுங் கொன்றைய ணிந்தோனார்
தந்தண் டின்றிர ளுஞ்சேயா
மென்றன் சொந்தமி னுந்தீதே
தென்றங் கங்கணி கண்டோயா
தேந்து வன்படைவேல் வலிசேர்ந்த திண்புயமே
யேய்ந்த கண்டர்கா றொடை மூஞ்சி கந்தரமோ
டெலும்பு றுந்தலை களுந்து ணிந்திட
வடர்ந்த சண்டைக டொடர்ந்துபே
யெனுங்கு ணுங்குக ணிணங்க ளுண்டரன்
மகன்பு றஞ்சய மெனுஞ்சொலே களமிசையெழுமாறே
துலங்கு மஞ்சிறை யலங்கவே
விளங்க வந்தவொர் சிகண்டியே
துணிந்தி ருந்துயர் கரங்கண்மா
வரங்கண் மிஞ்சிய விரும்புகூர்
துன்றுந் தண்டமொ டம்பீர்வாள்
கொண்டண் டங்களி னின்றூடே
சுண்டும் புங்கம ழிந்தேலா
தஞ்சும் பண்டசு ரன்சூதே
சூழ்ந்தெ ழும்பொழுதே கரம்வாங்கி யொண்டிணிவே
றூண்டி நின்றவனே கிளை யோங்க நின்றுளமா
துவந்து வம்பட வகிர்ந்து வென்றதி
பலம்பொ ருந்திய நிரஞ்சனா
சுகங்கொ ளுந்தவர் வணங்கு மிங்கித
முகந்த சுந்தர வல்ங்க்ருதா அரிபிரமருமேயோ.
அலைந்து சந்தத மறிந்திடா
தெழுந்த செந்தழ லுடம்பினா
ரடங்கி யங்கமு மிறைஞ்சியே
புகழ்ந்த வன்றுமெய் மொழிந்தவா
அங்கிங் கென்பத றுந்தேவா
யெங்குந் துன்றிநி றைந்தோனே
யண்டுந் தொண்டர்வ ருந்தாமே
யின்பந் தந்தரு ளுந்தாளா
ஆம்பி தந்திடுமா மணி பூண்ட வந்தளையா
வாண்ட வன்குமரா வெனை யாண்ட செஞ்சரணா
அலர்ந்த விந்துள வலங்க லுங்கடி
செறிந்த சந்தன சுகந்தமே
யணிந்து குன்றவர் நலம்பொ ருந்திட
வளர்ந்த பந்தனை யெனும் பெணாள் தனையணை மணவாளா
குலுங்கி ரண்டுமு கையுங்களா
ரிருண்ட கொந்தள வொழுங்கும்வேல்
குரங்கு மம்பக மதுஞ்செவா
யதுஞ்ச மைந்துள மடந்தைமார்
கொஞ்சும் புன்றொழி லுங்காலோ
ருஞ்சண் டன்செய லுஞ்சூடே
கொண்டங் கம்பட ருஞ்சீழ்நோ
யண்டந் தந்தம்வி ழும்பாழ்நோய்
கூன்செ யும்பிணிகால் கரம் வீங்க ழுங்கலும்வாய்
கூம்ப ணங்குகணோய் துயர் சார்ந்த புன்கணுமே
குயின்கொ ளுங்கடல் வளைந்த விங்கெனை
யடைந்தி டும்படி யினுஞ்செயேல்
குவிந்து நெஞ்சமு ளணைந்து நின்பத
நினைந்து யும்படி மனஞ்செயே திருவருண் முருகோனே.
2. தயிர்
கடித்துண ரொன்றிய முகிற்குழ லுங்குளிர்
கலைப்பிறை யென்றிடு நுதற்றில கந்திகழ்
கா சுமையா ளிளமா மகனே
களங்க விந்துவை முனிந்து நன்கது
கடந்து விஞ்சிய முகஞ்சி றந்தொளி
கா லயிலார் விழிமா மருகா விரைசெறி யணி மார்பா.
கனத்துயர் குன்றையு மினைத்துள கும்பக
லசத்தையும் விஞ்சிய தனத்திசை மங்கைகொள்
கா தலனான் முகனா டமுதே
கமழ்ந்த குங்கும நாத்த முந்திமிர்
கரும்பெ னுஞ்சொலை யியம்பு குஞ்சரி
கா வலனே குகனே பரனே அமரர்கடொழுபாதா
உடுக்கிடை யின்பணி யடுக்குடை யுங்கன
யுரைப்புயர் மஞ்சுறு பதக்கமொ டம்பத
வோ வியநூ புரமோ திரமே
ருயர்ந்த தண்டொடை களுங்க ரங்களி
லுறும்ப சுந்தொடி களுங்கு யங்களி
லூ ரெழில்வா ரொடுநா சியிலே மினுமணி நகையோடே.
உலப்பறி லம்பக மினுக்கிய செந்திரு
வுருப்பணி யும்பல தரித்தடர் பைந்தினை
யோ வலிலா வரணே செயுமா
றொழுங்கு றும்புன மிருந்து மஞ்சுல
முறைந்த கிஞ்சுக நறுஞ்சொ லென்றிட
வோ லமத யிடுகா னவர்மா மகளெனுமொருமானாம்
மடக்கொடி முன்றலை விருப்புடன் வந்ததி
வனத்துறை குன்றவ ருறுப்பொடு நின்றிள
மா னினியே கனியே யினிநீ
வருந்து மென்றனை யணைந்து சந்தத
மனங்கு ளிர்ந்திட விணங்கி வந்தரு
ளாய் மயிலே குயிலே யெழிலே மடவனநினதேரார்
மடிக்கொரு வந்தன மடிக்கொரு வந்தனம்
வளைக்கொரு வந்தனம் விழிக்கொரு வந்தனம்
வா வெனுமோர் மொழியே சொலுநீ
மணங்கி ளர்ந்தந லுடம்பி லங்கிடு
மதங்கி யின்றள மகிழ்ந்தி டும்படி
மான் மகளே யெனையா ணிதியே எனுமொழிபலநூறே.
படித்தவ டன்கைகள் பிடித்துமு னஞ்சொன
படிக்கும ணந்தரு ளளித்தவ னந்தகிர்
பா கரனே வரனே யரனே
படர்ந்த செந்தமிழ் தினஞ்சொ லின்பொடு
பதங்கு ரங்குந ருளந்தெ ளிந்தருள்
பா வகியே சிகியூ ரிறையே திருமலிசமரூரா
பவக்கட லென்பது கடக்கவு நின்றுணை
பலித்திட வும்ழை செறுத்திட வுங்கவி
பா டவுநீ நடமா டவுமே
படர்ந்து தண்டயை நிதஞ்செ யும்படி
பணிந்த வென்றனை நினைத்து வந்தருள்
பா லனனே யெனையாள் சிவனே வளரயின் முருகோனே.
3. நெய்
வஞ்சஞ்சூ தொன்றும்பேர் துன்பஞ் சங்கட மண்டும்பேர்
மங்கும்பேய் நம்பும்பேர் துஞ்சும் புன்சொல்வ ழங்கும்பேர்
மான் கணார் பெணார் தமா லினான்
மதியது கெட்டுத் திரிபவர் தித்திப்
பெனமது துய்த்துச் சுழல்பவ ரிச்சித்தே
மனமுயி ருட்கச் சிதைத்துமே
நுகர்தின துக்கக் குணத்தினோர்
வசையுறு துட்டச் சினத்தினோர்
மடிசொல மெத்தச் சுறுக்குளோர்
வலியே றியகூ ரமுளோ ருதவார்
நடுவே துமிலா ரிழிவார் களவோர்
மணமல ரடியிணை விடுபவர், தமையினு
நணுகிட வெனைவிடு வதுசரி யிலையே தொண்டர்கள் பதிசேராய்
விஞ்சுங்கார் நஞ்சந்தா னுண்டுந் திங்கள ணிந்துங்கால்
வெம்பும்போ தொண்செந்தாள் கொண்டஞ் சஞ்சவுதைந் தும்பூ
மீன் பதா கையோன் மெய்வீ யுமா
விழியை விழித்துக் கடுக வெரித்துக்
கரியை யுரித்துத் தனுமிசை சுற்றிக்கோள்
விழைவறு சுத்தச் சிறப்பினார்
பிணைமழு சத்திக் கரத்தினார்
விஜய வுடுக்கைப் பிடித்துளார்
புரமதெ ரிக்கச் சிரித்துளார்
விதிமா தவனா ரறியா வடிவோ
ரொருபா திபெணா யொளிர்வோர் சுசிநீள்
விடைதனி லிவர்பவர் பணபண மணிபவர்
கனைகழ லொலிதர நடமிடு பவர்சேய் என்றுளகுருநாதா
நஞ்சஞ்சேர் சொந்தஞ்சா லஞ்செம் பங்கய மஞ்சுங்கா
றந்தந்தா தந்தந்தா தந்தந் தந்தன தந்தந்தா
தாந் ததீ ததீ ததீ ததீ
ததிமிதி தத்தித் தரிகிட தத்தத்
திரிகிட தத்தத் தெயெனந டிக்கச்சூழ்
தனி நடனக்ருத் தியத்தினாண்
மகிடனை வெட்டிச் சிதைத்துளான்
தடமிகு முக்கட் கயத்தினாள்
சுரதனு வக்கப் பகுத்துளாள்
சமிகூ விளமோ டறுகா ரணிவா
ளொருகோ டுடையோ னனைவாய் வருவாள்
சதுமறை களும்வழி படவளர் பவண்மலை
மகளென வொருபெய ருடையவள் சுதனே அண்டர்கடொழுதேவா
பிஞ்சஞ்சூழ் மஞ்சொண்சே யுஞ்சந் தங்கொள்ப தங்கங்கூர்
பிம்பம்போ லங்கஞ்சா ருங்கண் கண்களி லங்குஞ்சீ
ரோங் கவே யுலா வுகால் விணோர்
பிரமனொ டெட்டுக் குலகிரி திக்குக்
கரியொடு துத்திப் படவர வுட்கப்பார்
பிளிற நடத்திக் களித்தவா
கிரிகெட வெக்கித் துளைத்தவா
பிரியக மெத்தத் தரித்தவா
தமியனை நச்சிச் சுளித்தவா
பிணமா முனமே யருள்வா யருள்வாய்
துனியா வையுநீ கடியாய் கடியாய்
பிசியொடு பலபிழை பொறுபொறு பொறுபொறு
சததமு மறைவறு திருவடி தரவா என்களிமுருகோனே.
4. சர்க்கரை
மாத முந்தினம் வார முந்திதி
யோக மும்பல நாள்களும் படர்
மாதி ரந்திரி கோள்க ளுங்கழல்
பேணு மன்பர்கள் பான லந்தர
வற்சல மது செயு மருட்குணா
சிறந்த விற்பன ரகக்கணா
மற்புய வசுரரை யொழித்தவா
வனந்த சித்துரு வெடுத்தவா
மால யன்சுரர் கோனு மும்பரெ
லாரும் வந்தன மேபு ரிந்திடு
வான வன்சுடர் வேல வன்குரு
ஞான கந்தபி ரானெ னும்படி
மத்தக மிசைமுடி தரித்தவா
குளிர்ந்த கத்திகை பரித்தவா
மட்டறு மிகலயில் பிடித்தவா
சிவந்த வக்கினி நுதற்கணா சிவகுருவெனுநாதா
நாத விங்கித வேத மும்பல்பு
ராண முங்கலை யாக மங்களு
நாத னுன்றனி வாயில் வந்தன
வேயெ னுந்துணி பேய றிந்தபி
னச்சுவ திவணெது கணித்தையோ
செறிந்த ஷட்பகை கெடுத்துமே
னட்புடை யருளமிழ் துணிற்சதா
சிறந்த துத்தியை யளிக்குமே
நாளு மின்புயர் தேனி னுஞ்சுவை
யீயும் விண்டல மேவ ருஞ்சுரர்
நாடி யுண்டிடு போஜ னந்தினி
லேயும் விஞ்சிடு மேக ரும்பொடு
நட்டமின் முப்பழ முவர்க்குமே
விளைந்த சர்க்கரை கசக்குமே
நற்சுசி முற்றிய பயத்தொடே
கலந்த புத்தமு தினிக்குமோ அதையினியருளாயோ
பூத லந்தனி லேயு நன்குடை
மீத லந்தனி லேயும் வண்டறு
பூம லர்ந்தவு னாத வம்பத
நேய மென்பது வேதி னந்திகழ்
பொற்புறு மழகது கொடுக்குமே
யுயர்ந்த மெய்ப்பெயர் புணர்த்துமே
பொய்த்திட வினைகளை யறுக்குமே
மிகுந்த சித்திகள் பெருக்குமே
பூர ணந்தரு மேநி ரம்பெழி
லாத னந்தரு மேய ணிந்திடு
பூட ணந்தரு மேயி கந்தனில்
வாழ்வ துந்தரு மேயு டம்பொடு
பொக்கறு புகழினை யளிக்குமே
பிறந்து செத்திட றொலைக்குமே
புத்தியி லறிவினை விளக்குமே
நிறைந்த முத்தியு மிசைக்குமே இதைநிதமுதவாயோ
சீத ளஞ்சொரி கோதில் பங்கய
மேம லர்ந்திடு வாவி தங்கிய
சீர டர்ந்தவி ராவி னன்குடி
யேர கம்பர பூத ரஞ்சிவ
சித்தரு முனிவரும் வசித்தசோ
லையுந்தி ரைக்கட லடிக்கும்வாய்
செற்கண முலவிடு பொருப்பெலா
மிருந்த ளித்தரு ளயிற்கையா
தேனு றைந்திடு கான கந்தனின்
மானி ளஞ்சுதை யாலி ருஞ்சரை
சேரு டம்புத ளாட வந்தசன்
யாச சுந்தர ரூப வம்பர
சிற்பர வெளிதனி னடிக்குமா
வகண்ட தத்துவ பரத்துவா
செப்பரும் ரகசிய நிலைக்குளே
விளங்கு தற்பர திரித்துவா திருவளர் முருகோனே.
5. தேன்
சூலதர னாராட வோதிமக ளாடநனி
தொழுபூத கணமாட வரியாட வயனோடு
தூயகலை மாதாட மாநளினி யாடவுயர்
சுரரோடு சுரலோக பதியாட வெலியேறு
சூகைமுக னாராட மூரிமுக னாடவொரு
தொடர்ஞாளி மிசையூரு மழவாட வசுவீர
சூலிபதி தானாட நீலநம னாடநிறை
சுசிநார விறையாட வலிசானி ருதியாட் அரிகரமகனோடே
காலிலியு மேயாட வாழ்நிதிய னாடமிகு
கனஞால மகளாட வரவேணி சசிதேவி
காமமத வேளாட மாமைரதி யாடவவிர்
கதிராட மதியாட மணிநாம வரசோகை
காணுமுனி வோராட மாணறமி னாடவிரு
கழலாட வழகாய தளையாட மணிமாசில்
கான மயி றானாட ஞானவயி லாட வொளிர்
கரவாள மதுவாட வெறிசூல மழுவாட வயிரமலெறுழோடே
கோலவரை ஞாணாட நூன்மரும மாடவிரை
கொளுநீப வணியாட வுடையாட வடனீடு
கோழியய ராதாட வாகுவணி யாடமிளிர்
குழையாட வளையாட வுபயாறு கரமேசில்
கோகநத மாராறொ டாறுவிழி யாடமலர்
குழகாய விதழாட வொளிராறு சிரமோடு
கூறுகலை நாவாட மூரலொளி யாடவலர்
குவடேறு புயமாட மிடறாட மடியாட அகன்முதுகுரமோடே
நாலுமறை யேயாட மேனுதல்க ளாடவிய
னலியாத வெழிலாட வழியாத குணமாட
நாகரிக மேமேவு வேடர்மக ளாடவரு
ணயவானை மகளாட முசுவான முகனாட
நாரதம கானாட வோசைமுனி யாடவிற
னவவீரர் புதராட வொருகாவ டியனாட
ஞானவடி யாராட மாணவர்க ளாடவிதை
நவிறாசனுடனாட விதுவேளை யெணிவாகொள் அருண்மலி முருகோனே.
துலா ஸ்நானம்
ஐப்பசி முதல் தேதியன்று காவேரி நதியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பர். துலாமாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும், பதினான்கு லோகங்களிலுள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவேரி நதியில் சங்கமமாவதால், அதில் நீராடுபவர்களின் எல்லாவிதமான விருப்பங்களும் நிறைவேறுவதுடன், இறுதிக்காலத்தில் எமவாதனையின்றி முக்தியும் கிட்டும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
துலாக் காவேரியின் நீர்த்திவலைகள் ஒவ்வொன்றும் புண்ணிய தீர்த்தமாகும். அதிலுள்ள மணல்கள் எல்லாம் தேவதைகள். அதனால்தான் உலகிலுள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி, மக்கள் தங்களிடம் கரைத்த பாவக் கறைகளைக் கழுவி புனிதமடைகின்றன. துலா மாதத்தில் காவேரியில் நீராடுபவர்கள், தங்கள் குடும்பத்தினரையும் சேர்த்து, மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள். மேலும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி, முன்னோர்களுக்கு பிதுர்பூஜை செய்து அன்னதானம், ஆடை தானம் அளித்தால் பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள். அழகு, ஆயுள், ஆரோக்கியம், சொல்வளம், கல்வி, வாழ்வில் சுகம் என எல்லாம் கிட்டுமென்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது. ஆதி, இடை, கடை என்னும் மூன்று அரங்கங்களையும் தன்னகத்தே கொண்டு, சதாசர்வ காலமும் பகவான் நாராயணனின் திருவடியைத் தழுவி வணங்கும் காவேரியின் பேறும் பெருமையும் தன்னிகரற்றது.
வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத காவிரி என காவிரியின் பெருமையை விவரிப்பதே துலா புராணம் ஆகும். ஐப்பசி மாதத்தில் தினமும் சூரிய உதயத்திற்கு முன் காவிரியில் நீராடி புனிதமாவதே துலா ஸ்நானம் வழிபாடாகும். இதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி 2 நாட்களில் நீராடுவது மிகவும் சிறப்பு. காவிரியில் புனித நீராடிய பிறகு துலா புராணத்தினை முழுவதுமாகவோ அல்லது ஒவ்வொரு பகுதியாகவோ தினமும் படிப்பது சகல நலன்களையும் தரும். பொதுவாக 2 நதிகள் கூடும் இடத்தை கூடுதுறை அல்லது சங்கமம் என்று கூறுவோம். தமிழ்நாட்டில் பவானி, உ.பி.யில் அலகாபாத், கர்நாடகாவில் திருமுக்கூடல் ஆகியவைகள் மிகவும் சிறப்பு வாய்ந்த சங்கம இடங்களாகும்.
ஒரு சமயம் சிவன் தன் வாகனமான இடபத்தின் மீது ஏறி உலகை சுற்றி வந்தார். அப்போது இடப வாகனம் செருக்கடைந்து சுற்றி வந்து காவிரியின் நடுவில் தங்கி விட்டது. அதன் கர்வத்தை அடக்க சிவன் தன் கால் விரலை ஊன்றி அதை பாதாளத்தில் அமிழ்த்தி விட்டார். பிறகு இடபம் மனம் வருந்தி இறைவனை வேண்ட சிவனும் மனமிறங்கி அந்த இடபத்தை அங்கேயே இருந்து காவிரியில் நீராடுவோர்க்கு அருள்புரிந்து வருமாறு கட்டளையிட்டு மறைந்தார். வானா அரசன் வாலி சிறந்த சிவபக்தன். அவன் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடு துறையில் அருளுகின்ற சிவனை வழிபட்டு வந்தான் என்றும், அவனே பிற்காலத்தில் ராவணனை ஒடுக்கியவன் என்றும் திருஞானசம்பந்தர் தன் பாடலில் தெரிவிக்கிறார். காவிரியிலிருந்து வெகுதூரத்தில் இருப்பவர்கள் ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராட செல்லலாம். இயலாதவர்கள் தாங்கள் நீராடும் நதியையே காவிரியாக கருதி நீராடுவது நல்லது. ஆயிரமானாலும் மாயூரமாகுமா என்பது பழமொழி. ஆயிரம் வருஷம் கங்கையில் தினம் குளித்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம் ஐப்பசி மாதத்தில் மாயவரம் காவிரியில் ஒரு நாள் குளித்தாலே கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.
Thursday, 23 October 2025
Wednesday, 22 October 2025
குமார தந்திரம்
ஸ்ரீ சுப்ரமண்ய ப்ரசன்ன மாலா மந்திரம்
----------------------------------------------------------------------------
ஸ்ரீ சுப்ரமண்ய ப்ரசன்ன மாலா மந்திரம், குமார தந்திரத்தில் ஹயக்ரீவரால் கூறப்பட்டதாகும். இந்த மந்திரம் எப்பேர்ப்பட்ட பிரச்சனையானாலும் ஒரு முறை கேட்டாலும், சொன்னாலும் முருகப் பெருமானே நேரில் வந்து, அந்த கஷ்டத்தை தீர்த்து வைப்பார் என ஹயக்ரீவரால் சொல்லப்பட்டதாகும்.
ஸ்ரீ சுப்ரமண்ய ப்ரசன்ன மாலா மந்திரத்தை தினமும் படித்து வந்தால் தீமைகள் அகலும், அனைத்தும் வசப்படும். நோய்கள் அகலும், பயம் விலகும். முருகப் பெருமானையே நேரில் வா என அழைப்பது போல் பொருள் தருவதாக இந்த மந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மந்திரம் முருகப் பெருமானை மட்டுமின்றி விநாயகர், சிவன், ஹயக்ரீவர்,குபேரர் என அனைத்து தெய்வங்களையும் போற்றுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ சுப்ரமண்ய ப்ரசன்ன மாலா மந்திரம்:
----------------------------------------------------------------------------
ஓம் நமோ பகவதே ருத்ரகுமாராய ஷடானனாய சக்திஹஸ்தாய அஷ்டாதச
லோசனாய சிகாமணி பிரலங்க்ருதாய
க்ரெளஞ்சகிரிமர்த்தனாய தார்காஸூரமாரணாய ஓம் ஸ்ரீம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஹூம் பட் நமஹ
ஓம் நமோ பகவதே கெளரீஸூதாய அகோரரூபாய உக்ரரூபாய ஆகாசஸ்வரூபாய் சரவணபவாய்
சக்திசூல கதா பரசுஹஸ்தாய
பாசாங்குச தோமர பாண முஸ்லதராய
அனேக சஸ்த்ராலங்க்ருதாய
ஓம் ஸ்ரீ ஸூப்ரம்மண்யாய ஹார நூபுர
கேயூர கனக குண்டல மேகலாத்யனேக்
ஸர்வாபரணலங்க்ருதாய ஸதானந்த சரீராய
ஸகல ருத்ர கணஸேவிதாய
ஸர்வ லோகவ சங்கராய
ஸகல பூத கண ஸேவிதாய
ஓம் ரம் நம் ளம்
ஸகந்தரூபாய சகலமந்த்ர
கணஸேவிதாய, கங்காபுத்ராய, சாகினீ - டாகினீ-பூத-ப்ரேத-பிசாச கணஸேவிதாய,
அசுரகுல நாசனாய, ஓம் ஸ்ரீம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஹூம் பட் நமஹ
முருகன் மந்திரம்:
---------------------------------
ஓம் நமோ பகவதே தேஜோரூபாய
பூதக்ரஹ ப்ரேதக்ரஹ, பிசாசக்ரஹ யட்சக்ரஹ, ராட்சசக்ரஹ,
பேதாளக்ரஹ, பைரவக்ரஹ, அஸூரக்ரஹூ, ஸர்வக்ரஹான் ஆகர்ஷய ஆகர்ஷய,
பந்தய பந்தய, ஸந்த்ராஸய ஸந்த்ராஸய, ஆர்ப்பாடய ஆர்ப்பாடய, ச்சேதய ச்சேதய,
சோஷய சோஷய, பலேன ப்ரஹரிய ப்ரஹரய, சர்வக்ரஹான் மாரய மாரய, ஓம் ஸ்ரீம் க்லீம்- ஹ்ரீம் ஹூம்பட் நமஹ
முருகனை வரவழைக்கும் மந்திரம்:
-------------------------------------------------------------------
ஓம் நமோ பகவதே மஹாபல பராக்ரமாய, மாம் ரக்ஷ ரக்ஷ, ஓம் ஆவேசய ஆவேசய,
ஓம் சரவணபவாய, ஓம் ஐம் க்லீம் ஸெள : ஐம் ஸர்வக்ரஹம் மம வசீகரம் குரு குரு,
ஸர்வக்ரஹம் ச்சிந்தி ச்சிந்தி, ஸர்வக்ரஹம் மோஹய மோஹய,
ஆகர்ஷய ஆகர்ஷய, ஆவேசய ஆவேசய, உச்சாடய உச்சாடய,
ஸர்வக்ரஹான் மம வசீகரம்
குரு குரு, ஓம் செள : ரம்- எம் ஏகாஹிக, வயாஹிக, த்ரயாஹிக, சாதுர்த்திக,
பஞ்சமஜ்வர, ஷஷ்டமஜ்வர, ஸப்தமஜ்வர, அஷ்டமஜ்வர,
நவமஜ்வர, மஹாவிஷமஜ்வர, ஸன்னிபாதஜ்வர, ப்ரும்மஜ்வர, விஷ்ணுஜ்வர,
யக்ஷஜ்வர, ஸகலஜ்வர ஹதம் குரு குரு, ஸமஸ்தஜ்வரம் உச்சாடய உச்சாடய,
பேதேன ப்ரஹரஹஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் ஹூம் பட் நமஹ
தீராத கஷ்டம் தீர்க்கும் மந்திரம்:
------------------------------------------------------------
ஓம் நமோ பகவதே த்வாதச புஜாய, தக்ஷகானந்த கார்க்கோடக சங்க மஹாசங்க
பத்ம மஹாபத்ம வாஸூகீ குளிக மஹாகுளிகாதீன் ஸமஸ்தவிஷம் நாசய நாசய,
உச்சாடய உச்சாடய, ராஜவச்யம், பூதவச்யம், அஸ்த்ரவச்யம் புருஷவச்யம்
ம்ருகஸர்ப்ப வச்யம் ஸர்வ வசீகரம் குரு குரு, ஜபேன மாம் ரக்ஷ ரக்ஷ, ஓம் சரவண பவ,
ஓம் ஸ்ரீம் க்லீம் வசீகரம் குரு குரு, ஓம் சரவணபவ ஓம் ஐம் ஆகர்ஷய ஆகர்ஷய,
ஓம் சரவணபவ ஓம் ஸ்தம்பய ஸ்தம்பய, ஓம் சரவணபவ ஓம் ஸம்மோஹய ஸம்மோஹய,
ஓம் சரவணபவ ஓம் ரம் மாரய மாரய, ஓம் சரவணபவ ஓம்-ஜம் ளம் உச்சாடய உச்சாடய,
ஓம் சரவணபவ, ஓம் ஸ்ரீம் வித்வேஷய வித்வேஷய, வாத பித்த
சலேஷ்மாதி வ்யாதீன் நாசய நாசய, ஸர்வ சத்ரூன் ஹன ஹன, ஸர்வ துஷ்டான்
ஸந்த்ராஸய ஸந்த்ராஸய, மம சாதூன் பாலய பாலய, மாம் ரக்ஷ ரக்ஷ,
அக்னிமுகம் ஜலமுகம் பாணமுகம் ஸிம்மமுகம் வ்யாக்ரமுகம் ஸர்ப்பமுகம் ஸ்னாமுகம்
ஸ்தம்பய ஸ்தம்பய, பந்தய பந்தய, சோஷய சோஷய, மோஹய மோஹய, ஸ்ரீம்பலம் ச்சேதய ச்சேதய, பந்தய பந்தய,
ஜபேன ப்ரஹரய ப்ரஹரய, ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் ஹூம் பட் நமஹ
ஹயக்ரீவர் அருளிய மந்திரம்:
--------------------------------------------------------
ஓம் நமோ பகவதே மஹாபல பராக்ரமாய, காலபைரவ காலபைரவ, உத்தண்ட பைரவ,
மார்த்தாண்ட பைரவ, ஸம்ஹாரபைரவ, ஸமஸ்த பைரவான் உச்சாடய உச்சாடய
பந்தய பந்தய, ஜபேன ப்ரஹரய ப்ரஹரய, ஓம் ஸ்ரீம் த்ரோடய த்ரோடய,
ஓம் நம் தீபய தீபய, ஓம் ஈம் சந்தாபய சந்தாபய, ஓம் ஸ்ரீம் உன்மத்தய உன்மத்தய, ஓம் -ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் - ஈம் - எம் - செள : பாஸூபதாஸ்த்ர நாராயணாஸ்த்ர.
ஸூப்ரம்மண்யாஸ்த்ர, இந்த்ராஸ்த்ர, ஆக்னேயாஸ்த்ர, ப்ரம்மாஸ்த்ர,
யாம்யாஸ்த்ர, வாருணாஸ்த்ர, வாயவ்யாஸ்த்ர, குபேராஸ்த்ர, ஈசானாஸ்த்ர,
அந்தரகாராஸ்த்ர, கந்தர்வாஸ்த்ர, அஸூராஸ்த்ர, கருடாஸ்த்ர, ஸர்ப்பாஸ்த்ர, பர்வதாஸ்த்ர, கஜாஸ்த்ர,
ஸிம்மாஸ்த்ர, மோஹனாஸ்த்ர, பைரவாஸ்த்ர, மாயாஸ்த்ர, ஸர்வாஸ்த்ரான் நாசய நாசய, பட்சய பட்சய, உச்சாடய உச்சாடய,
ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் சித்ரரோக, ச்வேதரோக, குஷ்டரோக.
அபஸ்மாரரோக, பட்சரோக, ப்ரேமேக, க்ரந்திரோக,
மஹோதர ரக்தக்ஷப, ஸர்வரோக, சவேதகுஷ்ட, பாண்டுரோக, அதிஸாரரோக,
மூத்ரக்ர்ஸ்ன, குல்மரோக, ஸர்வரோகான் ஹன ஹன, உச்சாடய உச்சாடய,
ஸர்வரோகான் நாசய நாசய, ஓம் ளம் ஸெள : ஹூ
ம் பட் நமஹ
மக்ஷிகா மசகா மத்குண பிபீலிகா மூஷிகா மார்ஜாலா சயேன க்ருத்ர வாயஸ
துஷ்ட பக்ஷிதோஷான் நாசய நாசய, ஓம் ஸ்ரீம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஈம் ளம் ஸெள :
சரவணபவ ஹூம்பட் நமஹ
இதி ஸ்ரீமத் குமாரதந்த்ரே ஹயக்ரீவ அகஸ்த்ய ஸம்வாதே சதமிதிபடலம் நாம ஓம்
#ஸ்ரீ_ஸூப்ரம்மண்ய_ப்ரஸன்ன_மாலா_மந்த்ரம் ஸம்பூர்ணம்.
சரித்திரம், தரித்திரம், பிரிவினை வாதம்
யூகோஸ்லாவியா (Yugoslavia) என்பது 1990-களில் இனவாத மோதல்கள், அரசியல் கொந்தளிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக முழுமையாகச் சிதைந்து, பல சுதந்திர நாடுகளாகப் பிரிந்தது.
(Successor States)
யூகோஸ்லாவியா சோஷலிஸ்ட் கூட்டாட்சிக் குடியரசு (Socialist Federal Republic of Yugoslavia) உடைந்து பின்வரும் ஆறு நாடுகள் உருவாயின:
ஸ்லோவேனியா (Slovenia) - 1991 இல் சுதந்திரம் அறிவித்தது.
குரோஷியா (Croatia) - 1991 இல் சுதந்திரம் அறிவித்தது.
மாசிடோனியா (Macedonia) - இப்போது வட மாசிடோனியா (North Macedonia) என்று அழைக்கப்படுகிறது; 1991 இல் சுதந்திரம் அறிவித்தது.
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா (Bosnia and Herzegovina) - 1992 இல் சுதந்திரம் அறிவித்தது.
செர்பியா மற்றும் மாண்டினீக்ரோ (Serbia and Montenegro) - இந்த இரண்டு நாடுகளும் முதலில் 1992 இல் "யூகோஸ்லாவியக் கூட்டாட்சிக் குடியரசு" (Federal Republic of Yugoslavia) என்ற பெயரில் ஒன்றாக இருந்தன. இது 2003 இல் "செர்பியா மற்றும் மாண்டினீக்ரோவின் கூட்டமைப்பு" எனப் பெயர் மாற்றப்பட்டது.
மாண்டினீக்ரோ (Montenegro) 2006 இல் செர்பியாவிலிருந்து பிரிந்து தனி நாடானது.
செர்பியா (Serbia) (இறுதியாகத் தனியாக மாறியது).
கொசோவோ (Kosovo) - 2008 இல் செர்பியாவிலிருந்து பிரிந்து சுதந்திரம் அறிவித்தது. இதன் சுதந்திரம் இன்னும் அனைத்துலக அளவில் முழுமையாக அங்கீகரிக்கப்படவில்லை.
சிதைவுக்கான முக்கிய காரணங்கள் (Key Causes for the Breakup)
யூகோஸ்லாவியாவின் சிதைவுக்குப் பின்வரும் காரணங்கள் முக்கியப் பங்காற்றின:
இன-தேசியவாதத்தின் எழுச்சி (Rise of Ethno-Nationalism): யூகோஸ்லாவியாவில் செர்பியர்கள், குரோஷியர்கள், போஸ்னியர்கள் போன்ற பல இனக் குழுக்கள் இருந்தன. நீண்ட காலமாக அடங்கியிருந்த தேசியவாத உணர்வுகள் 1980-களின் பிற்பகுதியில் மீண்டும் எழுச்சி பெற்றன.
ஜோசிப் ப்ரோஸ் டிட்டோவின் மரணம் (Death of Josip Broz Tito): யூகோஸ்லாவியாவை வலிமையான மத்திய அரசின் கீழ் வைத்திருந்த தலைவர் டிட்டோ 1980 இல் இறந்த பிறகு, மத்திய அரசின் பிடி தளர்ந்தது.
பொருளாதார நெருக்கடி (Economic Crisis): 1980-களில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை பிராந்தியங்களுக்கு இடையேயான பதட்டங்களை அதிகரித்தன. பணக்காரக் குடியரசுகள் (ஸ்லோவேனியா, குரோஷியா போன்றவை) ஏழைக் குடியரசுகளுக்கு (செர்பியா போன்றவை) நிதி அளிப்பதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தன.
கம்யூனிசத்தின் வீழ்ச்சி (Fall of Communism): கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிச ஆட்சிகள் வீழ்ச்சியடைந்தபோது, யூகோஸ்லாவியக் குடியரசுகளின் தலைவர்கள் ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் நாடினர்.
யூகோஸ்லாவியப் போர்கள் (Yugoslav Wars)
சுதந்திரப் பிரகடனங்கள் அமைதியானதாக இல்லை. குடியரசுகள் பிரிந்தபோது, செர்பியாவால் கட்டுப்படுத்தப்பட்ட யூகோஸ்லாவிய மக்கள் இராணுவம் (Yugoslav People's Army) மற்றும் பல்வேறு இனப் போராளிக் குழுக்களுக்கும் இடையே ஒரு தொடர்ச்சியான போர்கள் வெடித்தன.
1991-1995 வரை குரோஷியாவிலும் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவிலும் மிகக் கொடூரமான போர்கள் நடந்தன.
இந்தப் போர்கள் இனச் சுத்திகரிப்பு (Ethnic Cleansing), பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் சியுரப்ரேனிகா இனப்படுகொலை (Srebrenica genocide) போன்ற பயங்கரங்களை ஏற்படுத்தின.
இறுதியாக, செர்பியா மற்றும் மாண்டினீக்ரோவின் கூட்டமைப்பும் 2006 இல் பிரிந்தபோது, யூகோஸ்லாவியா என்ற தேசம் அதன் அனைத்து வடிவங்களிலும் முடிவுக்கு வந்தது.
பாம்பன் ஸ்வாமிகள்
சென்னை என்பது 16ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் கால் வைத்த இடம், ஆனால் அக்காலங்களில் அது மிகபெரிய நகரமாக உருவாகும் என யாரும் எதிர்பார்க்கவுமில்லை, இத்தனை கோடி மக்கள் அங்கு குவிவார்கள் என யாரும் கணிக்கவுமில்லை
ஆனால் இந்த நாட்டினை காக்கும் அந்த சித்தர்களும் முருகபெருமானும் இதனை அறிந்திருந்தார்கள், கோட்டை கட்டி ஆளும் ஐரோப்பியர்கள் இங்கு முழு மதமாற்றம் செய்வது சாத்தியம் என்பதை உணர்ந்திருந்தார்கள், அந்த ஆபத்தை தடுக்க அப்போதே வழி செய்தார்கள்
ஆச்சரியமாக அதற்கு பலநூறு வருடத்துக்கு முன்பே பட்டினத்தார் முதலிய ஞானியர் இதை அறிந்தே அங்கு வந்து பதிந்து கொண்டார்கள், 16ம் நூற்றாண்டில் ஒரு பக்கம் போர்ச்சுகீசியர் கடும் வேகத்தில் அப்பகுதியினை மதமாற்ற முயன்றபோதும் அவர்களை தொடர்ந்து பிரிட்டிசார் பெரிய அளவில் மதமாற்ற முயன்றபோதும் இந்த சித்தர்களும் ஞானியர்களும் தடுத்து நின்றார்கள்
தொடர்ந்து சித்தர்களும் முருகபெருமான் அடியார்களும் அங்கு வந்து அமர்ந்தார்கள், ஏகபட்டோர் அப்படி வந்தார்கள், வள்ளலார் போல் பலர் வந்தார்கள், அவர்கள் வந்திருககாவிட்டால் இவ்வளவு பெரிய அடியர் கூட்டம் அங்கு உருவாகியிராவிட்டால் சென்னை என்பது இன்று அந்நிய மதத்தின் வடிவமாக மாறியிருக்கும்
அதனை தடுக்க இந்த பிரபஞ்சத்தின் மகாசக்தி உருவாக்கி சென்னைக்கு அனுப்பியவர்களில் முக்கியமான சித்தர் பாம்பன் சுவாமிகள்
முருகபெருமான் காலம் காலமாக தமிழகத்தில் ஏதோ ஒரு உருவில் தன்னை நிறுத்தி கொண்டே இருப்பார், அகத்தியர் காலமுதல் அது உண்டு, யாராவது ஒரு அடியாரை ஆட்கொண்டு அவர்களை கொண்டு தன்னை தன் மகா சக்தியினை இந்த உலகுக்கு அவர் சொல்லி கொண்டே இருப்பார்
சூரியனின் வெளிச்சம் தாங்கி வரும் நிலவு போல அந்த அடியார்கள் இருளில் மக்களுக்கு வெளிச்சம் காட்டுவார்கள், முருகபெருமானின் ஜோதியாக எரியும் அந்த அடியார்கள் மக்களுக்கு முருகபெருமானின் அருளை மழைபோல் ஈர்த்து கொடுப்பார்கள், உரு தெரியாத உயிர்சக்தியினை பூமி உணவாக விளைவிப்பதை போல காணமுடியாத முருகபெருமானின் அருளை கண்முன் பெற்று கொடுப்பார்கள்
இப்படி முருகபெருமான் ஆட்கொண்ட அடியார்கள் நிரம்ப உண்டு, அகத்திய பெருமான் காலமுதல் கிருபானந்தவாரியார் காலம் இப்போது இருக்கும் சித்தர்கள் காலம் வரை நிரம்ப உண்டு , அவ்வரிசையில் 18ம் நூற்றாண்டில் கண்ட மிக பெரிய அடியார் பாம்பன் சுவாமிகள்
அவரின் காலமும் அந்த காலம் கொடுத்த இன்னல்களில் இருந்து மதத்தை மீட்க அவரின் வருகையும் சிலாகிப்பானது, முருகபெருமானின் அருளில் அவராலே காரிருள் நீங்கிற்று
அக்காலம் மதமாற்ற காலம் மிக பெரிதாக அட்டகாசம் செய்த காலம் , பிரிட்டிசாரின் ஆட்சியில் தேசம் சிக்கி அங்கு இந்துமதம் கடுமையாக ஒழிக்கபட்டு திரும்பும் இடமெல்லாம் மதமாற்றம் பெரிதாக இருந்த காலம்
அப்போதுதான் அவர் அவதரித்தார், ராமேஸ்வரம் அருகிலுள்ள பாம்பன் எனும் ஊரில் சாத்தப்பன் பிள்ளைக்கும் செங்கமலம் அம்மையாருக்கும் மகனாக 1850 வாக்கில் அவதரித்தார், அவரின் பிறந்த நாள் சரியாக தெரியவில்லை பெற்றோர் அழைத்த பெயர் அப்பாவு
இந்த அப்பாவுக்கு மிக சிறுவயதிலே முருகபெருமான் மேல் பெரும் பக்தி வந்தது, பெற்றோருக்கு அடுத்து அவர் அறிந்தது முருகபெருமான் எனுமளவு 6 வயதிலே முருகபெருமானை இறுக பற்றினார், அப்போதே பாலதேவராயரின் கந்த சஷ்டி கவசம் அவரை முழுக்க ஈர்த்திருந்தது
அவர் வளர வளர முருகபெருமான் மேலான பக்தியும் வளர்ந்தது ஒரு நாளைக்கு 36 முறை சஷ்டி கவசத்தை சொல்லும் அளவு அவருக்கு அந்த முருகபெருமான் அடியாராக மாறிபோனார்
பாலதேவராயரை போல தானும் உருக்கமான அழியாபாடல்களை பாடவேண்டும் என உறுதி கொண்டவர் அப்போதே அதை முடிவு செய்து தினமும் ஒரு பாடலை எழுதினார் பாடல் எழுதபட்டபின்பே உணவு உண்பதை வழமையாக்கினார்
இப்படி 100 பாடல்களை அன்றே எழுதினார், "“கங்கையை சடையிற் பரித்து” என தொடங்கிய அப்பாடல்கள் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அருணகிரிநாதரின் பெயரை தாங்கி நின்றது
இதனை எழுதும்போது அவருக்கு வயது 13, இந்த பாடல்கள்தான் பின்னாளில் அவர் "ஷன்முக கவசம்" எழுத முழு பயிற்சியும் காரணமுமாயிற்று
இவரின் இந்த உருக்கமான பக்தியினை இளம் வயதிலே வந்த பக்தியினை கண்டு இவர் சாதாரணமல்ல என்பதை உணர்ந்த சேது மாதவன் அவருக்கு விஜயதசமி அன்று ராமேஸ்வரம் கடலில் மூழ்கி குளிக்க வைத்து பின் முருகபெருமான் சடாஷரமந்திரத்தை சொல்லி கொடுக்க அதுவே அவரின் வாழ்வில் பெரிய மாற்றத்தை கொடுத்தது
அப்போது இன்னும் பிரகாசிக்க தொடங்கினார் சுவாமிகள்
அக்கால வாழ்வியல்படி பலவிதமான கலைகள், குதிரையேற்றம், போர்க்கலைகள் இன்னும் கணக்கு வழக்கு என பலவற்றை அவர் படித்தாலும் மனதில் முருகபெருமானின் பக்தியே பிரதானமாக வளர்ந்து நிலைத்து கொண்டிருந்தது
மனமெல்லாம் முருகன் சிந்தையெல்லாம் முருகன் என்றிருந்த அப்பாவுக்கு திருமணம் செய்வதில் நாட்டமில்லை ஆனால் பெற்றோரும் உறவுகளும் வற்புறுத்த வேறுவழியின்றி காளிமுத்தம்மாள் என்பவரை 1872ம் ஆண்டு மணந்து கொண்டார் அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர்
குடும்பம் அமைந்தாலும் அவர் மனதில் முருகனும் துறவறமுமே பெரிதாக இருந்தன ஆனால் பிள்ளைகளை வளர்ப்பதும் குடும்ப பொறுப்பை சுமப்பதும் தன் தர்மம் என்பதால் அவற்றையும் சுமந்தார்
பிள்ளைகளுக்கு ஏதும் நோய் என்றால் முருகபெருமானே அடியார் வேடத்தில் வந்து குழந்தைக்கு விபூதி கொடுத்து குணபடுத்திய காட்சியெல்லாம் நடந்தது
அந்நேரம் அவருக்கு பழனிக்கு செல்லும் ஆசை வந்தது, எப்படியாவது சென்றுவிடலாம் என நினைத்தவர் தனக்கு நெருக்கமானவரும் நண்பருமான அங்கமுத்து பிள்ளை என்பவரிடம் முருகபெருமான் தனக்கு பழனிக்கு வர உத்தரவிட்டதாக கூறினார் அவரும் உற்சாகமாக பழனி செல்ல இவருடன் தயாரானார்
ஆனால் அன்று மாலையே அந்த அதிசயம் நிகழ்ந்தது, நிழல் வடிவில் மயில்மேல் அமர்ந்த உருவம் பேசிற்று ,முருகபெருமான் தன்னிடம் நேரடியாக பேசியதில் மனம்கசிந்து நின்றார் அப்பாவு, அவரிடம் குரல் மட்டும் சொன்னது
"பழனிக்கு யாம் அழைத்தோம் என பொய் பகன்றீரோ? இனி யாம் அழைக்கும் வரை நீர் அங்கு வரவேண்டாம்" சொல்லிவிட்டு அக்குரல் மறைந்தது, அத்தோடு பழனி செல்லும் திட்டத்தை கைவிட்டார் அப்பாவு
இது நடந்து சில காலங்களில் அவர் தந்தையார் காலமானார் அப்போதுதான் முருகபெருமன் தன்னை ஏன் பழனிக்கு வரவிடாமல் தடுத்தார் என்பது அவருக்கு புரிந்தது
தந்தையாருக்கு பின் குடும்பத்தின் தோப்பு , நெல் வியாபாரம், இன்னும் குத்தகை தொழில் உள்பட எல்லாமும் அவர் தலையில் விழுந்தது, அவற்றை பொறுப்புடன் ஏற்று நடத்தி குடும்பத்தை காத்து வந்தார் அப்பாவு
அவருக்கு சொந்தமாக இரண்டு பெரிய தோப்புகள் இருந்தன, நிறைய வயல்கள இருந்தன, கடைகளும் வியாபாரமும் நிறைய இருந்தன அவற்றையெல்லாம் அவரே பராம்ரித்தார் ஆனால் அதில் ஒட்டவில்லை அவர் மனமெல்லாம் முருகபெருமானே நிறைந்திருந்தார்
இக்காலகட்டத்தில்தான் அவர் ஒரு பக்கம் இல்லறம் என்றாலும் இன்னொரு பக்கம் மிக மிக உருக்கமான முருக பக்தியில் பிரசித்தியான "ஷன்முக கவசம்" எனும் அந்த மிக சிறந்த பாடலை எழுதினார்
அக்காலகட்டம் அவருக்கு போராட்டமனது, உடல் ரீதியாக மனரீதியாக தொழில் ரீதியாக பெரும் போராட்டம் இருந்தது. வழக்குகளும் இன்னும் பல குழப்பங்களும் இருந்தன
அவற்றில் இருந்து தன்னை காக்கும்படிதான் அவர் ஷன்முக கவசத்தை எழுதினார், அது 1891ம் ஆண்டாக இருந்தது, 30 பாடல்களை கொண்ட ஷன்முக கவசம் எக்காலமும் சக்தி. வாய்ந்தது, பால தேவராயரின் சஷ்டி கவசம் போல மகா சக்தியும் பிரசித்தியுமானது
பின் முருகபெருமானுக்கு சாற்றும் பால், தயிர், நெய், தேன், சர்க்கரை என ஐந்து பொருட்களை குறிக்கும் வண்ணம் ஒரு பாடலை "பரி பூஜன பஞ்சாமிர்த வண்ணம்" என எழுதினார். அற்புதமான சக்திவாய்ந்த பாடல் அது
இவைகளை எழுதி முடித்தபோது அவரின் எல்லா சிக்கல்களும் தீர்ந்திருந்தன குழந்தைகளும் வளர்ந்திருந்தார்கள், அவர்களுக்கு செய்யவேண்டிய எல்லாமும் செய்தார், திருமணமும் நடத்திவைத்து தொழிலையும் நல்லபடியாக ஒப்படைத்தவர் தன் மகா பெரிய கனவான துற்வறம் நோக்கி நடந்தார்
அதுவரை அவரை கட்டியிருந்த இல்லற கடமைகள் எனும் சங்கிலியில் இருந்து தன்னை விடுவித்தவர், நீண்ட நாள் ஏக்கத்தின்படி ஆலய தரிசனம் செய்து ஒவ்வொரு இடமாக செல்ல தொடங்கினார்
அந்த காலகட்டத்தில்தான் பாம்பனில் இருந்து வந்ததால் பாம்பன் சுவாமிகள் என்றே அறியபட்டார்
மதுரை, திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருத்தணி எனும் திருத்தலங்களை தரிசித்து விட்டு காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார். காஞ்சிபுரத்தில் இருக்கும் தலங்களை தரித்துவிட்டு ஊர் திரும்புவதே அவர் திட்டமாக இருந்தந்து, அப்படி காஞ்சியில் இருந்து அவர் கிளம்பும்போது ஒரு இளைஞன் எதிர்பட்டார்
அவர் கேட்டார் "அய்யா என்ன காரணமாக காஞ்சிக்கு வந்தீர்? என்றான், அவரோ "ஆலயம் பல தரிசித்து முருகபெருமானை தேடி வந்தோம்" என்றார்
"அப்படியானால் குமரகோட்டம் செல்லாமல் திரும்புவது ஏன்?" என்றார் இளைஞர், காஞ்சியில் அப்படி ஒரு கோவில் இருப்பது அதுவரை சுவாமிகளுக்கு தெரியாது
அந்த இளைஞன் குமாரகோட்டம் கோவிலை காட்டிவிட்டு மறைந்தே போனான், அதுதான் கச்சியப்பர் கந்தபுராணத்தை அரங்கேற்றிய ஆலயம் என்பதும் முருகபெருமானே அவனுக்காக வாதாடினார் என்பதையும் அறிந்த சுவாமிகள் அங்கே தவம் செய்தார்
குமாரகோட்டம் கோவில்தான் அவருக்குள் பல மாற்றங்களை கொடுத்தது, அந்த ஆலயத்தில் தவமிருந்தபோதுதான் பல உள்முக மாற்றம் வந்தது, கண்ணீருடன் அம்முருகனை வணங்கியவர் பின் இனி முழுக்க துறவறம் என முடிவு செய்தார்
துறவறம் என்பதை அடைந்து ஞானம் பெறுவதை விட ஞானம்பெற்றுவிட்டு துறவறம் புகுதலே சரி, முருகனே தனக்கான உத்தரவை தரட்டும் என அவருக்குள் ஒரு குரல் ஒலித்தது
காரணம் முன்பு தன் விருப்பபடி பழனிக்கு செல்ல கிளம்பி முருகன் உத்தரவில்லாமல் சிக்கியதை போல முருகபெருமான் உத்தரவில்லாமல் துறவறம் புகுவது சரியல்ல என உணர்ந்தவர் அதற்கான உத்தரவை பெற கடுமையாக தவமியற்றினார்
1894ம் ஆண்டு அந்த கடுந்தவம் தொடங்கிற்று
பாம்பன் அருகே உள்ள பிரப்பன்வலசையின் மயானத்தில் ஒரு கொட்டகை அமைத்து அதனுள் ஒரு முள்வேலி அமைத்து நடுவில் குழிவெட்டி அமர்ந்து கொண்டார், குழியினை சுற்றி தடுப்பும் வைத்து அங்கே ஒரு கை செல்லும்படி பாதை வைத்த அவர் அனுதினமும் உப்பில்லா சோறு இரு பிடி மட்டும் வைக்க சொன்னார்
அப்படியே இன்னும் சொன்னார், ஒருவேளை அந்த அன்னம் உண்ணபடாமல் இருந்தால் தான் இனி இல்லை என கருதி அடுத்து வைக்க வேண்டாம் என அவர் சொன்னபோது சீடர்களுக்கு கண்கள் கலங்கின, அவரோ முருகபெருமான் தன்னை கைவிடமாட்டான் என ஆறுதல் சொல்லி "பரமேஸ்வரன் திருகுமாரா" என அழைத்து தவத்தில் அமர்ந்தார்
தவமென்றால் அது கடுமையான தவமாக இருந்தது, அப்போது பலவித போராட்டங்கள் அவரை சூழ்ந்தன , துஷ்ட சக்திகள் அவர் தவத்தை கலைக்க முயன்றன இன்னும் பல சோதனைகள் எல்லாம் கண்டார்
பேய்கள் தொந்தரவு செய்தன இன்னும் பல மாயைகள் அவர் தவத்தை கலைக்க முயன்றன, ஏழு நாட்கள் கடும் பிரயர்தனம் செய்து அவர் தவத்தை தொடர்ந்தார்
ஏழாம் நாள் முடிவில் அகத்திய முனி மற்றும் அருணகிரியாருடன் முருகபெருமான் அவருக்கு காட்சி கொடுத்தார் ,
அவர் காதில் ஒரு ரகசிய வார்த்தையினை சொல்லிவிட்டு மூவரும் மேற்கு திசை நோக்கி நகர்ந்தார்கள், சுவாமி தன் தவத்தைதொடர்ந்தார்
சரியாக 35ம் நாள் "எழுக" என ஒரு குரல் கேட்டது , "எம்பெருமான் முருகன் சொன்னால்தான் எழுவேன்" என்றார் முனிவர். "சொல்வது முருகனே" என குரல் சத்தமாக ஒலிக்க "எம்பெருமான் விருப்பம்" என சொல்லி எழுந்தார்
அது சித்திரை பவுர்ணமி நாளாக இருந்தது, சித்தர்களுக்கு உரிய மகா முக்கிய பவுர்ணமியாக இருந்தது. அப்பாவுவாக இருந்து பாம்பன் சுவாமிகளான அவர் இப்போது முழு சித்த நிலை எட்டியிருந்தார்
அதே 1895ம் ஆண்டு கார்த்திகை மாதம் அவர் துறவு பூண்டார், இம்முறை முழுக்க துறவியாகும் முடிவினை அறிவித்து வீட்டை விட்டு குடும்பத்தை விட்டு விடைபெற்றார்
குடும்பத்தாரும் நிறைவுடன் அவருக்கு விடை கொடுத்தனர், கூட்டை விட்டு அந்த ஞானபறவை பறந்தது
முதலில் அவர் கன்னியாகுமரியினை அடைந்தார், எல்லா ஞானியரும் முழுன்ஞானம் அடையும் அந்த குமரி முனையில் அவரும் அமர்ந்து தவம் செய்தார், குமரி கடலுக்கு அன்மையான சிறிய குன்றில் இருக்கும் குமாரகோவில் முருகபெருமான் ஆலயத்தில் வழிபட்டார், அங்கிருந்து சில பாடல்களை எழுதினார்
பின் வடக்கு நோக்கி நகர்ந்தார் வழியிலிருக்கும் பல ஆலயங்களை வழிபட்டவர் சென்னையினை அடைந்தார்
அங்கு வைத்தியநாத முதலி தெருவில் அவரை அறிந்தவர்கள் அவரை வரவேற்றனர், ஒரு அம்மையார் கனவில் முருகபெருமான் இவருக்கு அன்னம்படைக்க உத்தரவிட்டதை சொல்லி அவரை உபசரித்தார், அவருக்கு பங்காரு என பெயர், அந்த அம்மையாரை குமாரம்மாள் என பெயர் கொடுத்து ஆசீர்வதித்தார் சுவாமிகள்
இப்படி எங்கு சென்றாலும் முருகபெருமானின் அருள் அவரோடு இருந்தது
அவரின் வாழ்வில் அதிசயங்கள் வழமையாக தொடங்கின, முருகபெருமான் பரிபூரண அருளில் அவரை நடத்தினார், பல இடங்களில் மயிலாக குழந்தையாக அவருடன் விளையாடவும் செய்தார்
கந்தகோட்டம் உள்ளிட்ட பல தலங்களை சென்னையில் தரிசித்த சுவாமிகள், அங்கும் பல பாடல்களை பாடினார், அப்போதுதான் அவருக்கு காசி செல்லும் பெரும் விருப்பம் உண்டாயிற்று
அப்படியே 1896ம் ஆண்டு காசிக்கு கிளம்பினார் சுவாமிகள், தன் சீடர்களுடன் அந்த நீண்ட பயணத்தை மேற்கொண்டார், அவரை முருகபெருமானின் அருள் ஒன்றே நடத்தியது
பெஜவாடா, கோதாவரி, விசாகப்பட்டினம், ஜகந்நாதம், கல்கத்தா, கயா முதலிய இடங்களுக்கு சென்றவர் எல்லா ஆலய முர்த்திகளையும் முருகபெருமானாகவே வழிபட்டு மகிழ்ந்து காசியினை அடைந்தார்
காசியில் அவர் கங்கையில் நீராடி தவமிருந்தார், அங்கேதான் அவர் தாமிரபரணி நதிக்கரை ஞானியும் திருசெந்தூர் முருகபெருமானால் ஆட்கொள்ளபட்டருமான குமரகுருபரர், மொகலாய சுல்தானிடம் சகலாவல்லி மாலை பாடி அன்னையின் அருளால் அந்த குமரகுருபரர் அமைத்த மடத்தில் தங்கினார், அப்போதுதான் ஒரு தரிசனம் கண்டார்
அந்த தரிசனத்தில் வயது முதிர்ந்த அடியார் ஒருவர் இவருக்கு காவி உடை ஒன்றை கொடுத்து அணிய சொன்னார் , இது குமரகுருபரர் கட்டளை என உணர்ந்து அன்றுமுதல் காவி உடை மட்டும் அணிந்தார், வெள்ளை வேட்டியும் மேல் ஒரு வெள்ளை துணியும் அதுவரை அணிந்தவர் குமரகுருபர் மடத்தில் கண்ட தரிசனத்திற்கு பின் காவிக்கு மாறினார்
அவருக்கு காசியில் முழுக்க கரைந்துவிடும் எண்ணமே மேலோங்கிற்று ஆனால் முருகபெருமான் உத்தரவால் மீண்டும் தமிழகம் திரும்பினர்
சென்னையினை அன்மித்த திருவொற்றியூர், பழவேற்காடு, ஆண்டார்குப்பம் போன்ற திருத்தலங்களை தரிசித்து விட்டு சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூர் என்ற ஊரை அடைந்தார்.
அங்கு சிலர் அவர்மேல் வன்மம் கொண்டனர், காலம் காலமாக இருக்கும் தங்கள் அதிகாரம் மேல் இவர் கை வைத்ததாக எண்ணி பொருமியவர்கள் அவர்மேல் வழக்கு தொடுத்தார்கள் அதில் சுவாமிகளே வென்றார்கள்
அப்பக்கம் இருந்த பல மந்திரவாதிகள் துர்சக்தி மூலம் அவரை கொல்லமுயன்றார்கள் ஆனால் அவர்கள்தான் இறந்தார்களே தவிர சுவாமிகளுக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை
முருகபெருமான் அருளால் துஷ்ட மந்திரவாதிகளை ஒழித்த சுவாமிகள் அங்கு முருகன் வழிபாட்டை ஏற்படுத்தி கொடுத்தார், அப்படியே மதமாற்ற சக்திகள் பல அவரிடம் தோற்று ஓடின அங்கும் முருகபெருமானின் கொடியினை ஏற்றிவைத்தார்
வழக்கில் தோற்ற சிலர், ஒரு மந்திரவாதியின் மூலம் சுவாமிகளை கொல்லும் பொருட்டு ஒரு துர்த்தேவதையை ஏவினர்.
இப்படி பல இடங்களில் சுற்றியவர் 1914ம் ஆண்டு மீண்டும் சென்னைக்கு திரும்பி வழமை போல் தவமும் பாடல் இயற்றுவதுமாக முருகனில் கலந்திருந்தார், அவரை சுற்றி எப்போதும் கூட்டம் இருந்தது
அவர் விபூதி பூசிவிட்டால் நோய்கள் தீர்ந்தன, அவர் பார்வை பட்டாலே நலமெல்லாம் கூடின, அவரை சுற்றி தேனீக்களாய் மக்கள் கூடினார்கள்
அவருக்கு 1918ம் ஆண்டு வெப்பு நோய் வந்தது, அது தன் கர்மவினை என உணர்ந்தவர் "குமாரஸ்தவம்" எனும் பாடலை பாடி வணங்க அவருக்கு பரிபூரண சுகம் கிடைத்தது, இன்றளவும் எல்லா நோயில் இருந்தும் விடுவிக்கும் பாடல் அதுதான்
சுவாமிகளின் மிக பெரிய முயற்சி அருணகிரிநாதரின் குருபூஜை நாளை கண்டறிந்து அதனை கொண்டாடவைத்தது அதுவரை அருணகிரி நாதருக்கு குருபூஜை கொண்டாட்டம் என எதுவுமில்லை யாருக்கும் அந்த நாள் எது என்றே தெரியாது
சுவாமிகள்தான் மிகுந்த சிரத்தையோடு அவரின் குருபூஜை நாளை தேடி அது உத்தாரண்ய காலத்தில் இருந்து ஆறாம் மாத பவுர்ண்மி என கணக்கிட்டு ஆனி மூலம் என அதனை அறிந்து மக்களுக்கு சொல்லி கொண்டாட்டத்தை தொடங்கினார்
ஒப்பற்ற முருகபக்தனான அருணகிரியாரின் குருபூஜை விழாவினை தொடங்கி வைத்தவர் அவரே
பாம்பன் சுவாமிகளின் வாழ்வு ஒவ்வொரு நொடியும் முருகபெருமானால் வழிநடத்தபட்டது பெரும் ஆச்சரியமும் அற்புதங்களும் கலந்தது, அவை எல்லாமும் எழுத ஏடு தாங்காது என்றாலும் மிக முக்கிய சம்பவம் 1923ல் நடந்த அவரின் கால்முறிவும் அதிலிருந்து அவர் குணம்பெற்ற அற்புதமும், ஐரோப்பிய மருத்துவர்களே வாய்விட்டு அலறிய அந்த சம்பவமுமானது
சுவாமிக்கு அப்போது 72 வயதானது, சென்னை தம்பு செட்டி தெருவில் அவர் நடந்துவந்தபோது ஒரு குதிரை வண்டியால் நிலை தடுமாறி அவர் சரியா அவரின் கால் ஒன்றின் மேல் சக்கரம் ஏறிற்று, எடை அதிகமான அந்த வண்டி ஏறியதில் கால் மணிக்கட்டுக்கு மேல் சிதைந்தே போனது, ரத்தம் ஆறாக ஓட அவரை மருத்துவமனைக்கு அள்ளி சென்றார்கள்
அரச மருத்துமனையில் ஒரு ஆங்கிலேய பெண்மணி மருத்துவராக இருந்தார், அவர் கால் முறிந்த அளவை பார்த்துவிட்டு சொன்னார், "இந்த காலை இனி ஒட்டவைக்க முடியாது , பெரிதாக நொறுங்கிவிட்டது அதைவிட முக்கியமானது ஆங்கில மருந்து உப்பு, புளி, காரம் எல்லாம் உண்ணும் உணவுக்கே பலன் கொடுக்கும்,, இவரோ இந்துக்ளின் சன்னியாசி சாப்பாடு மட்டும் உண்பவர், அதனால் பெரிய பலன் இராது
இவருக்கு எங்களால் கொடுக்க கூடிய அதிகபட்ச சிகிச்சை காலை வெட்டி எடுப்பதுதான் மேற்கொண்டு காயத்தை குணபடுத்துவதும் இந்த மருந்தால் உறுதியில்லை அதனால் விவகாரம் சிக்கல், நாங்கள் முடிந்ததை செய்கின்றோம் பின் உங்கள் வழியில் கவனித்து கொள்ளுங்கள்" என நம்பிக்கையில்லாமல் பேசினார்
எனினும் பல சூழல்களால் கால் எடுக்கும் விஷயம் தள்ளிபோனது, மருத்துவர் ஆலோசனை இன்னும் சில காரணங்களால் கட்டுபோட்டு நாள் நீடிக்கபட்டது
சுவாமிகளின் சீடர்கள் உடைந்துபோனார்கள் ஆனால் ஒரு விஷயத்தில் அசந்தே போனார்கள், கால் ஒடிந்தபோது அவ்வளவு ரத்தம் வெளியேறியும் சுவாமியின் உடலில் ஒரு தளர்ச்சியுமில்லை அதனால் முருகன் அவரை காப்பான் என அவருக்காய் ஷன்முக கவசம் பாடிவழிபட்டார்கள்
அப்படியே முருகபெருமானிடம் சுவாமிகளும் ஷன்முக கவசம் பாடி வழிபட்டார்
1923 டிசம்பர் 27ல் அவர் அந்த விபத்தில் சிக்கினார், மருத்துவரின் இழுபறியில் நாட்கள் நகர்ந்தன, அந்நேரம் 1924, ஜனவரி 6-ம் நாள் இரவில் மயில் வாகனத்தில் தோன்றிய சண்முகக் கடவுள் ‘"யாமிருக்க பயமேன் , இன்னும் 5 நாளில் குணப்படுத்துவேன்’ என்று வாய் மலர்ந்தார்.
அந்நேரம் அவரின் சீடர்களுக்கும் ஒரு காட்சி வந்தது அதன்படி சுவாமியின் காலை ஒரு வேல் தாங்கிற்று, அவரின் உடைந்த காலை இரு வேல்கள் மேலும் கீழுமாக தைத்து நின்றன
அதனை அடியார்கள் ஓடி சென்று சுவாமிகளிடம் சொல்ல சுவாமியும் தனக்கு வந்த காட்சியினை சொன்னார், அடுத்த ஐந்தாம் நாள் அந்த அற்புதம் நிகழ்ந்தது
மருத்துவமனையில் அவர் இருந்த அறைக்கு வந்த மருத்துவர் அவரை காணாமல் தேடினார், அப்போது "என்னைத்தானே தேடுகின்றீர்கள்?" என நடந்து வந்தார் சுவாமிகள்
அவர் காலில் கட்டுமில்லை, காயமுமில்லை , அலறினார் அந்த பெண் மருத்துவர், "இது அதிசயங்களின் பூமி, இந்தியாவில் அதிசயங்கள் சாதாரணம்" என திரும்ப திரும்ப சொன்னார், பின் மருத்துவமனை விதிப்படி எக்ஸ்ரே எடுக்கபட்டது அங்கே கால்கள் இயல்பாய் இருந்தது அறியபட்டது
இந்த அதிசயத்தை அபப்டியே ஆவணமாக பதிவு செய்தார் மருத்துவர் "நம்பமுடியா அதிசயபடி இம்மனிதர் குணமடைந்தார்" என அவரது அறிக்கை கொடுக்கபட்டு சுவாமிகள் வெளிவந்தார் இன்றும் அந்த அறிக்கை மருத்துவமனையில் உண்டு
இன்று ராஜிவ்காந்தி பொதுமருத்துவமனை என பெயர் மாற்றபட்டாலும் அந்த மருத்துவனையின் மன்றோர் வார்டில் 11ம் எண் அறை சுவாமிக்கானது இப்போதும் சுவாமியின் படம் அங்கே உண்டு
சுவாமிகள் இப்படி சுகம் பெற்ற நிகழ்வு அற்புதமான நிகழ்வு அவரின் பக்தர்களால் "மயூர சேவன விழா " என கொண்டாடாப்டுகின்றது
அடுத்த ஆறு ஆண்டுகளில் பலவகையான திட்டங்களை தன் பக்தர்களுக்கான எதிர்கால திட்டமெல்லாம் வகுத்து கொடுத்து, சூரிய சந்திரர் உள்ளளவும் "மயூர சேன விழா" நடத்தவும் தனக்கு பின் தன் பக்தர்கள் எப்படி வழிநடக்க வேண்டும் என்பதையும் எழுதி வைத்தார் அது இன்றும் உயிலாக உண்டு
1929ம் ஆண்டு பிப்ரவரி மாதமே சென்னை திருவான்மியூர் கடற்கரையில் நிலம் பார்க்க சொன்னார், இவரின் சீடர்கள் தேடியபோது 3.5 ஏக்கர் நிலம் ஒன்று கிடைத்தது அது சாமிக்கு என்றவுடன் அவன் உடனே கொடுத்துவிட்டான்
அதே ஆண்டில் மே 29ம் தேதி, தேய்பிறை பஞ்சமி அன்று மாலை தன் சீடர்களிடம் நாளை காலை தனக்கு நெருக்கமான எல்லோரையும் வரசொன்னார், மறுநாள் காலை மே30ம் தேதி தேய்பிறை சஷ்டி அன்று சில வார்த்தைகளை பேசிவிட்டு, 500 ஆண்டுகாலம் தான் இங்கே வசிப்பேன் என சொல்லிவிட்டு சில பாடல்களை பாட சொன்னவர் அபடியே முருக பெருமானை துதித்தபடி முக்தி அடைந்தார்
அவரின் ஜீவ சமாதி திருவான்மியூர் கடற்கரையில் அமைக்கபட்டு இன்று பல்லாயிரம் மக்களால் வழிபடபடுகின்றது, சுவாமி சொன்னபடி ஐநூறு வருடங்கள் அவர் அங்கிருந்து அருள்பாலிப்பார்
பாம்பன் சுவாமிகள் இப்போதும் ஜீவனுடன் அவர் சமாதியில் உண்டு, அவர் அங்கிருந்து தன்னை நாடிவரும் எல்லா மக்களுக்கும் அருள்பாலிக்கின்றார், நம்பிக்கையுடன் அவரை அங்கு சென்று தொழுதால் நிச்சயம் முருகபெருமானோடு உங்களுக்கு அருள்பாலிக்க வருவார்
எங்கிருந்து அவரை முருகபெருமான் பெயரால் தேடினாலும் ஏதோ. ஒரு உருவில் வருவார், உரியநேரம் அவர் தன் வாழும் சமாதிக்கும் உங்களை அழைத்து கொள்வார்
சுவாமி பாடிய பாடல்களின் மொதத எணிக்கை 66666, ஆறுமுக பெருமானை அவர் இப்படி ஆறு இலக்க எண்ணில் பாடிவைத்ததெல்லாம் மெய்சிலிர்க்கும் ஆச்சரியம்
அவை ஆறு பகுதிகளாக உண்டு, முதல் மண்டலம் என்பது குமரகுருதாச சுவாமிகள் பாடல், இரண்டாம் மண்டலம் என்பது திருவலங்கற்றிரட்டு , மூன்றாம் மண்டலம் என்பது காசி யாத்திரையில் பாடபட்ட காசியாத்திரை, பரிபூரணானந்தபோதம், தகராலய ரகசியம் என்பது
நான்காம் மண்டலம் என்பது சிறுநூற்றிரட்டு, திருத்தலத்தரிசனத்தின் போது பாடிய கட்டளை கலித்துறை, சேந்தன்செந்தமிழ், பத்துப் பிரபந்தம், குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி, குமாரஸ்தவம், செக்கர் வேள் செம்மாப்பு, செக்கர் வேளிறுமாப்பு, சீவயாதனா வியாசம்.
ஐந்தாம் மண்டலம் என்பது திருப்பா, ஆறாம் மண்டலம் என்பது ஸ்ரீமத் குமார சுவாமியம் என வகுக்கபட்டுள்ளது
சுவாமி அவர் வாழ்ந்த காலத்தில் எப்படி மதிக்கபட்டார் என்றால் அன்றைய பெரிய படிப்பு படித்த தமிழ் மேதைகளான திருவிக மற்றும் மறைமலை அடிகளார் போன்றவர்கள் தமிழில் சந்தேகம் வந்தால் சுவாமி முன்னால் கைகட்டி வாய்பொத்தி நின்று தமிழ்சந்தேகத்தை தீர்க்கும் அளவு தெய்வகோலத்தில் இருந்தது
ஆம், சுவாமிகளே தமிழுக்கு முழு இலக்கணமாக விளங்கினார்
அவர் பாடிய பாடல்களெல்லாம் மாபெரும் பலன் அளிப்பவை, குமாரஸ்தவம் என்பது எல்லா நோயில் இருந்தும் விடுதலை கொடுக்கும்
அவரின் பகைகடிதல் பாடல் எல்லா பகையினையும் ஒழிக்கும், அவரின் சன்முக கவசம் எல்லா ஆபத்திலிருந்தும் காக்கும்
அவரின் "வேற்குழலி வேட்கை" பாடல் மகப்பேற்றை பெற்று தரும், அவரின் "அஷ்டக விகரக லலீலை" கர்மவினையினையினை தீர்த்து எதிரிகளை ஒடுக்கி பெரும் வாழ்வு தரும்
அவரின் பாடல்கள் ஒவ்வொன்றும் முறையாக படித்தால் பெரிய பலன் தருபவை, தேவாரம் திருவாசகம் போல் மிக பெரிய பலனை கொடுக்க கூடியவை
அங்கே தேவாரம்போல் இனிமை உண்டு, திருவாசகம் போல் உருக்கம் உண்டு, மாபெரும் பலன் நிச்சயம் உண்டு
காளிதாசனின் குமார சம்பவம் போல சாம வேதத்தின் பல பகுதிகளை வடமொழியில் இருந்து திரட்டி முருகபெருமானின் சிறப்புக்களை சொல்லி குகபரத்துவ கொள்கையினை நிறுவியவர் அவர்தான்
வேதம் சொன்ன முருகனை புராணங்கள் சொன்ன முருகனை வடமொழியின் வரிகளில் இருந்தே நமக்கு காட்டி தந்தவரும் அவர்தான்
பாம்பன் சுவாமிகளுக்கு முருகபெருமான் கொடுத்த வரம் என்னவென்றால் அவர் பாடிய பாடலை யாரெல்லாம் பாடி முருகபெருமானை வணங்குவார்களோ அவர்கள் நிச்சயம் அந்த பலனை பெறுவார்கள் என்பது, அதனை பாடி வைத்தார் சுவாமிகள்
“நான் பாடு பாட்டை நவில்பவர்க்கு நலம் நல்காய்
கான்பாடு வண்டறையும் கழுகுமலை முருகா”
எனைத் தள்ளினாலு மெனை நம்பினவர்த் தள்ளேல்
கனைத் தண்டை சிலம்ப வரும் கழுகுமலை முருகா”
என்பது அவர் பாடி வைத்த வரி
பாம்பன் சுவாமிகள் அருணகிரியாரை குருவாக கொண்டு அவர் சாயலில் வந்து பாடி முருகனை அடைந்தவர் என்றாலும் அவர் அருணகிரிநாதரின் இன்னொரு பிறப்பாகவே கருதபடுகின்றார்
நிச்சயம் அவர் முருகபெருமானின் பெரும் அருளால் தமிழகத்துக்கும் தமிழுக்கும் கிடைத்த பெரும் வரம் , தன் அடியாரான அவரால் முருகபெருமான் தமிழில் பெரும் பெரும் பாடல்களை சக்திமிக்க பாடல்களை தந்து தன் அருள் பெற வழி செய்த ஒப்பற்ற வரம்
ஏதோ மிகபெரிய ரிஷியின் அம்சமாக நம்மிடம் வந்து நம்க்கு பல அற்புதங்களை தந்த ஞானவரம், பெரும் பராக்கிரம வரம், சனாதனத்தின் தனி சக்திமிக்க வரம், அவரை நினைத்தாலே எல்லாம் நலமாகும்
வாழும் காலம் வரை எண்ணற்ற மக்களுக்கு வழிகாட்டியவர் இன்றும் அரூபியாய் நின்று எல்லோரையும் காத்து கொண்டிருக்கின்றார், அவரை அண்டியோர்க்கு நிச்சயம் பலன் உண்டு, முருகபெருமானின் அருளும் உண்டு
சஷ்டி விரத காலத்தில் அந்த பாம்பன் சுவாமிகளை மனதார நினைந்து முருகனை பணிந்து அவரின் பாடல்களை பாடுவோர்க்கு எல்லா நலமும், எல்லா வளமும் வரும், அவர்களின் எல்லா கர்மவினையும் தீர்ந்து எல்லா பிணியும் கவலையும் தீர்ந்து அவர்கள் பெருவாழ்வு வாழ்வார்கள், அற்புதமும் அதிசயங்களும் அவர்களுக்கு வாடிக்கையாகும் முருகபெருமானின் பெரும் அருளில் அவர்கள் எண்ணியதெல்லாம் ஈடேறி நீண்ட பெரும் ஆயுளும் கிடைக்கும் இது சத்தியம்.
பிரம்ம ரிஷியார்
Tuesday, 21 October 2025
ராசி வேதை
ராசி வேதை
ஸ்கந்தா ஜோதிடநிலையம் 9442809461 திருவண்ணாமலை
-----------------
வேதை என்றால் பகை என்று பொருள். ராசிகளை பஞ்சபூத தத்துவ ரீதியாக நெருப்பு,நிலம், காற்று , நீர் என வகைப்படுத்தியுள்ளனர்.
இதில் நெருப்பும்,நீரும் பரஸ்பர பகை, நிலமும் ,காற்றும் பரஸ்பர பகை.
இரண்டு ராசிகள் ஒன்றுக்கொன்று 6/8 ஆக அமைந்தால் அதை ராசி வேதை எனக்குறிப்பிடுவர். ஆயினும் அவ்விரண்டு ராசி தத்துவங்களும்,பரஸ்பர பகை தத்துவங்களாக அமைந்தால் மட்டுமே ராசி வேதை ஏற்படும், அவ்வாறு அமையாவிடில் வேதை இல்லை.
உதாரணமாக மேசத்திற்கு 6ஆம் வீடு கன்னி , மேசம்- நெருப்பு, கன்னி- நிலம். நெருப்புக்கும், நிலத்திற்கும் பகை இல்லை எனவே மேசத்திற்கும், கன்னிக்கும் ராசி வேதை இல்லை.
மேசத்திற்கு 8 ஆம் வீடு விருச்சிகம் , மேசம்- நெருப்பு, விருச்சிகம்-நீர். நெருப்புக்கும், நீருக்கும் பரஸ்பர பகை எனவே மேசத்திற்கும், விருச்சிகத்திற்கும் ராசி வேதை உண்டு.
அடுத்து ரிசபத்திற்கு 6ஆம் வீடு துலாம், ரிசபம் -நிலம்,துலாம்-காற்று, நிலத்திற்கும் , காற்றுக்கும் பரஸ்பர பகை ,எனவே ரிசபத்திற்கும் ,துலாம் ராசிக்கும் ராசி வேதை உண்டு.
ரிசபத்திற்கு 8ஆம் வீடு தனுசு. ரிசபம் -நிலம்,தனுசு-நெருப்பு, நெருப்புக்கும், நிலத்திற்கும் பகை இல்லை எனவே ரிசபத்திற்கும்,தனுசு ராசிக்கும் ராசி வேதை இல்லை.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் ஒற்றைப்படை நெருப்பு ராசிகளுக்கு 8 வதாக வரும் இரட்டைப்படை நீர் ராசி வேதையாக அமையும், 6வதாக வரும் இரட்டைப்படை நில ராசி வேதையாக அமையாது.
ஒற்றைப்படைகாற்று ராசிகளுக்கு 8 வதாக வரும் இரட்டைப்படை நில ராசி வேதையாக அமையும், 6 வதாக வரும் இரட்டைப்படை நீர் ராசி வேதையாக அமையாது.
இரட்டைப்படை நில ராசிகளுக்கு 6 வதாக வரும் ஒற்றைப்படை காற்று ராசி வேதையாக அமையும், 8 வதாக வரும் ஒற்றைப்படை நெருப்பு ராசி வேதையாக அமையாது.
இரட்டைப்படை நீர் ராசிகளுக்கு 6 வதாக வரும் ஒற்றைப்படை நெருப்பு ராசி வேதையாக அமையும், 8 வதாக வரும் ஒற்றைப்படை காற்று ராசி வேதையாக அமையாது.
அதாவது
நில ராசிக்கும், நீர் ராசிக்கும் 6 வது ராசி வேதை
நெறுப்பு ராசிக்கும், காற்று ராசிக்கும் 8வது ராசி வேதை
திருச்செந்தூர் செல்ல ரயில் விபரம்
💥 கோயம்புத்தூர் TO திருச்செந்தூர் தினசரி இப்படியும் ரயிலில் செல்ல முடியுமா 😱
➡️ கோயம்புத்தூரில் இருந்து திருச்செந்தூர் செல்வதற்கு தினசரி இணைப்பு ரயில் சேவை இரண்டு மார்க்கத்திலும் உள்ளது .....
➡️ கோயம்புத்தூரில் இருந்து நேரடி ரயில் கிடையாது // அதே நேரத்தில் பொள்ளாச்சியில் இறங்கி ரயில் மாறும் வசதி உள்ளது ✅
🚂 56113 கோயம்புத்தூர் பொள்ளாச்சி PASS
✓ வகை / கட்டணம் : சாதாரண ORDINARY
✓ சேவை : தினசரி
🟢 05:20 AM கோயம்புத்தூர் [[ புறப்படும் ]]
🟠 05:35 AM போத்தனூர்
🟠 05:55 AM கிணத்துக்கடவு
🟢 06:35 AM பொள்ளாச்சி [[ வருகை ]]
🔗 பொள்ளாச்சியில் இறங்கி வண்டி மாற வேண்டும் // பொள்ளாச்சி சந்திப்பில் 👇
🚂 16731 பாலக்காடு திருச்செந்தூர் விரைவு
✓ வகை / கட்டணம் : MAIL EXPRESS
✓ சேவை : தினசரி
🟢 07:20 AM பொள்ளாச்சி [[ புறப்படும் ]]
🟠 07:35 AM கோமங்கலம்
🟠 07:50 AM உடுமலைப்பேட்டை
🟠 08:30 AM பழனி
🟠 08:55 AM ஒட்டன்சத்திரம்
🟠 09:30 AM திண்டுக்கல்
🟠 09:43 AM அம்பாத்துரை
🟠 09:55 AM கொடைக்கானல் ரோடு
🟠 10:15 AM சோழவந்தான்
🟠 11:00 AM மதுரை சந்திப்பு
🟠 11:10 AM திருப்பரங்குன்றம்
🟠 11:20 AM திருமங்கலம்
🟠 11:40 AM விருதுநகர்
🟠 12:00 PM சாத்தூர்
🟠 12:20 PM கோவில்பட்டி
🟠 12:35 PM கடம்பூர்
🟠 12:50 PM வாஞ்சி மணியாச்சி
🟠 01:10 PM தாழையூத்து
🟠 01:30 PM திருநெல்வேலி சந்திப்பு
🟠 01:40 PM பாளையங்கோட்டை
🟠 01:54 PM ஸ்ரீவைகுண்டம்
🟠 02:01 PM ஆழ்வார் திருநகரி
🟠 02:08 PM நாசரேத்
🟠 02:15 PM கச்சன்விளை
🟠 02:19 PM குரும்பூர்
🟠 02:26 PM ஆறுமுகநேரி
🟠 02:30 PM காயல்பட்டினம்
🟢 03:25 PM திருச்செந்தூர் [[ வருகை ]]
💵 கட்டண விபரம் : MAIL / EXPRESS
• ₹70 : கோயம்புத்தூர் - திண்டுக்கல்
• ₹90 : கோயம்புத்தூர் - மதுரை
• ₹105 : கோயம்புத்தூர் - விருதுநகர்
• ₹140 : கோயம்புத்தூர் - திருநெல்வேலி
• ₹155 : கோயம்புத்தூர் - திருச்செந்தூர்
✅ கோயம்புத்தூரில் இருந்து திருச்செந்தூர் வரை செல்ல நேரடியாக கோயம்புத்தூரில் இருந்தே MAIL/EXPRESS டிக்கெட் எடுத்துக் கொள்ளுங்கள் !! அப்போது பொள்ளாச்சியில் இறங்கி மீண்டும் டிக்கெட் எடுக்க தேவையில்லை // பொள்ளாச்சியில் இறங்கி ரயில் மட்டும் மாறினால் போதும் .....
📌 முழுவதும் முன்பதிவு இல்லா விரைவு ரயில்
எனவே முன்பதிவு பெட்டிகள் கிடையாது ❌
✅ நீங்கள் கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி வரை பயணிக்கிறீர்கள் என்றால் சாதாரண பேசஞ்சர் ரயில் டிக்கெட் எடுத்தாலே போதும் || ₹10 மட்டுமே அது !! அதுவே திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ஏற போகிறீர்கள் என்றால் எக்ஸ்பிரஸ் வகை கட்டணம் எடுக்க வேண்டும் // கோமங்கலம் முதல் திருச்செந்தூர் வரை உள்ள அனைத்து நிலையங்களுக்கும் ....
➡️ மறு மார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்தும் கோயம்புத்தூர் வருவதற்கு இதேபோன்று இணைப்பு உள்ளது
Friday, 17 October 2025
கோவர்த்தன கிரி முற்பிறவி, இப்பிறவி
திருப்பம் தரும் திருமலையின் மூன்று பிறவியின் சரித்திரம்..
ஒரு மலை மூன்று யுகத்திலும் பகவானுக்கு உதவியது. எவ்வாறு உதவியது அது எந்த மலை என்ன!?
முதலில் ஒரு விஷயத்தை சொல்லி தெரிந்து கொள்ளுங்கள். அந்தக் காலத்தில் மலைகள் பறக்கும். அதற்கு இறக்கைகள் இருந்தது. ஒரு முறை இந்திரன் புஷ்பக விமானத்தில் வரும் பொழுது மலையும் பறந்து கொண்டிருந்ததால் சரியாக கவனிக்காமல் இவனது புஷ்பக விமா னம் மலையில் மோதி விட்டது. கோபமடைந்த இந்திரன் மலைகளின் இறக்கைகளை வெட்டி விட்டான் . அன்றிலிருந்து மலை பறக்கும் தன்மையை இழந்தது . இது ஒன்று.
இரண்டாவது நிலையாக பூமியில் இருக்கும் மலை பிறகு வளர ஆரம்பித்தது. உதாரணம் விந்திய மலை. விந்திய மலை வளர்வதை அகத்தியர் அடக்கினார். பிறகு ராமாயணத்தி ல் சுந்தர காண்டத்தில் மைந்நாகமலை. இது போன்ற மலைகள் பறப்பதும் வளர்வதும் அந் த காலத்தில் சர்வ சாதாரணமாக இருந்தது. இனி கதைக்கு வருவோம்.
கோகுலத்தில் இந்திர விழாவை தடை செய்த கிருஷ்ணன் கோவர்த்தன கிரி பூஜை செய்ய லாம் என்று சொன்னதால் அது கேட்டு வெகு ண்ட இந்திரன் வருணனை அழைத்து கோகுல த்தில் மழை பெய்வித்து கோகுலத்தையே அழி த்து விடுமாறு உத்தரவிட்டான். வருணனும் மிக பயங்கரமாக மழையை கோகுலத்தில் பொழிவித்தான்.
உடனே கோவர்த்தனகிரியை தனது சுண்டு விரலால் தூக்கி அணைத்து யாதவர்களையும் ஆடுகளையும் மாடுகளையும் மக்களையும் கோவர்த்தன கிரியில் வர செய்து அனைவரையும் மழையிலிருந்து காப்பாற்றினான்.
தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. கொட்டித்தீர்த்தது .குழந்தைகள் ஆடுமாடுகள் அனைவரும் ஆனந்தமாய் கோவர்த்தன கிரியில் இருந்து மழை பொழிவதை ரசித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது கோவர்த்தன கிரியும் நகைத்தது.
அதைக் கண்ட கண்ணன் கோவர்த்தனகிரியி டம் , "என்ன சிரிப்பு ? என் விரல் வலிக்குமே என்று உனக்கு வருத்தம் இல்லையா?? கவலை இல்லையா ?.. " என்று கேட்டான்.
அதற்கு கோவர்த்தனகிரி, " வலியா, உனக்கா?உலகம் முழுதும் தாங்குபவன் நீ. வராக அவதாரத்தில் பூமி முழுவதையுமே தாங்கி கடலிலிருந்து மேலே கொண்டுவந்தவன் தானே நீ.... உன்னை நம்பினால் உலகம் மேலே வரும் என்பது உண்மைதானே. மேலும் உனக்கு வலிக்க கூடாது என்ற காரணத்தினா ல் என்னால் இயன்றவரை என்னை லேசாக்கி கொண்டு விட்டேன் தெரியுமா.." என்று மலை வினவியது.
மேலும் கோவர்த்தனகிரி கூறியது. "இங்குள்ள மக்களின் முகங்களை பார்த்தாயா உன்னைச் சரண் அடைந்து உன் அருளில் நிழலில் ஒதுங்கும் அவர்களுக்கு முன் ஜென்மத்தில் செய்த முன்வினைப்பயன் என்ற ஒன்று கூட கிடையாது. அதற்கு நிரூபணம் நானே.." என்று கோவர்த்தனகிரி கூறியது.
அதற்கு கிருஷ்ணன், "முன் ஜென்மம் பற்றி பேசுகிறாயே.இது துவாபர யுகம். திரேதா யுகத்தில் நீ யாராக இருந்தாய் என்று உனக்கு நினைவு உள்ளதா ?.." என்று கேட்டார். அப்பொழுது மலையின் மனதில் போன ஜென்மத்து ஞாபகம் சிந்தனைகளோடு ஓடிற்று.
திரேதாயுகம் இராமாயண காலம் சேதுபந்த னம் நடந்துகொண்டிருக்கிறது. சேதுபந்தனத் திற்காக ஆஞ்சநேயர் வடக்கிலிருந்து பெரும் பெரும் மலைத் தொடரிலிருந்து ஒவ்வொரு மலையாக எடுத்துக்கொண்டு வந்து கொண்டி ருக்கிறார். அப்பொழுது மலைக் கூட்டத்தின் இடையே இருந்த சுமேரு என்ற மலையையும் கையில் எடுத்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஆகாசத்திலிருந்து பார்த்த அனுமன் சேது பந்தனம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது என் பதை அறிந்து அந்த மலையை அதே இடத்தில் வைத்தார். உடனே சுமேரு மிகவும் வருந்தி "பிரபு என் உற்றார் சுற்றம் உறவினர் சொந்தம் அண்ணன் தம்பி அனைவரும் சேது பந்தனத்திற்கு பயன்படுகிறது. நானும் அதற்கு பயன்ப டுவேன் என்று மிகவும் மகிழ்ச்சியாக
இருந்தது..."
" ஆனால் என்னை இப்படி பாதிவழியில் கீழே வைத்து விட்டீர்களே.." என்று கேட்டது. அது கேட்டு உடனே ஆஞ்சநேயர் ராமரிடம் சென்று இது போன்று கூற ராமர் அந்த மலையிடம் "அடுத்த ஜென்மத்தில் நீ கடவுளுக்கு பயன்படு வாய். காலம் கனிந்து வரும். அதுவரை காத்தி ரு என்று கூறுவாயாக.." என்று கூறினார் .
ஆஞ்சநேயரும் அதை அப்படியே வந்து சுமேரு விடம் கூறினார். இதுவே கோவர்த்தன கிரியி ல் முந்திய பிறப்பு. இரண்டாவது கோவர்த்தன கிரி இனி அடுத்த பிறப்பைபற்றி பார்ப்போம்.
ஏழுநாள் மழைக்குப் பிறகு இந்திரன் வந்து கண்ணனிடம் பணிந்து தான் செய்த தவறை மன்னித்து அருளுமாறு வேண்ட கண்ணனும் இந்திரனை மன்னித்தருளினான். இந்திரா தான் என்ற அகம்பாவம் மட்டும் என்றும் கூடாது. என்றுமே உன்னுடைய நிலையை உணர்ந்து கொண்டு செயல்படு. என்று கூற இந்திரன் சரணடைந்தவர்களை காக்கும் பக்தவச்சலா என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறி அவன் இந்திரலோகம் சென்றான்.
மழை நின்றவுடன் யாதவர்கள் அனைவரும் வீட்டிற்கு செல்ல கோவர்த்தனகிரியை பகவா ன் கீழே வைத்தார் .அப்பொழுது மலை பகவா னைப் பார்த்து பகவானே உனக்கு சேவை செய்யும் பாக்கியம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி என்று கூறியது.
அதை கண்டு நகைத்த கிருஷ்ணன், "மலையே நீ எனக்கு சேவை செய்தாயா? நான் அல்லவா உன்னைஏழு நாள் தூக்கிக் கொண்டு இருந் தேன். நான் அல்லவா உனக்கு சேவை செய் தேன்.." என்று கூறினார்.
உடனே கோவர்த்த னகிரி அபச்சாரம் அபச்சா ரம் என்று தன் கன்னத்தில் போட்டுக் கொண்ட து. " வார்த்தை களை மாற்றி பேசுகிறாயே கண்ணா. நீ தான் திருட்டு கண்ணன் ஆயிற் றே. நீ எதை சொன்னாலும் உலகமே கீதை என்று கேட்கும் .அடுத்து வரும் கலியுகத்திலா வது நான் உனக்கு சேவை செய்யும் வாய்ப்பை கொடு.." என்று கேட்டது.
கண்ணன் மலையை கனிவுடன் பார்த்தார். தா ன் தூக்கி நின்ற ஏழு நாட்களும் மலை தன்னைத்தானே இலேசாக்கி கொண்டதையும் எண்ணி பார்த்தார் பின்பு புன்முறுவலோடு அதன் வேண்டுகோளுக் கிணங்கி அதற்கு அருள் புரிந்தார்.
" மலையே உன்னை துவாபரயுகத்தில் ஏழு நாள் நான் தாங்கினேன். அதற்கு பதிலாக கலி யுகத்தில் நீ ஏழுமலையாகி என்னைத் தாங்கு வா யாக. நான் ஸ்ரீநிவாசனாக உன்மேல் கோயில் கொள்வேன் . மலையப்பன் என்று மக்கள் என்னை வணங்குவார்கள். அந்த இடம் திருப்பதி என்று அழைக்கப்படும். திருப்ப தியில் உன் மேல் தங்கும் நான் வரும் அனை வருக்கும் அனைத்தையும் வாரி வழங்குவேன்."
"உன் மலைமேல் ஏறி வந்து என்னை தரிசனம் செய்பவர்களுக்கு எல்லா வளங்களையும் நலன்களையும் செல்வங்களையும் ஆயுளையு ம் ஆரோக்கியத்தையும் வாரி வழங்குவேன்.." என்று கண்ணன் கோவர்த்தனகிரியிடம் கூறி னார். அதுவே இப்பிறவியில் ஏழுமலையாக சீனிவாசனை தாங்கிக் கொண்டிருக்கிறது.
இதுவே மலையின் மூன்று பிறவியாகும். திரேதாயுகத்தில் சுமேரு மலையாகவும் துவாபரயுகத்தில் கோவர்த்தனகிரியாகவும் கலியுகத்தில் ஏழுமலையாகவும் வரம் பெற்று பகவானின் அருளைப் பெற்று விளங்குகிறது.
ஏழுமலையானே வேங்கடவா...
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா...
ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம்...
🌸🌺🌸🌺
Thursday, 16 October 2025
ஏரல் சேர்மன் ஸ்வாமிகள்
*ஏரல்* *சேர்மன்* *அருணாசல* *சுவாமிகள்*
மனிதனாக பிறந்து மாமனிதராக வாழ்ந்து தெய்வமாகி, தன்னை அடிபணிந்து கை தொழுவோர்க்கு அருள்புரிகிறார்.
ஏரல் சேர்மன் அருணாசலம் சுவாமி. மனநோய், பேய்பிடி, விஷப் பூச்சிக்கடி, விஷப் பூச்சிகளின் தொல்லைகள், வீண்பயம், குடும்ப பிரச்னை, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை போக்கும் பரிகார தலமாக இந்த கோயில் திகழ்கிறது.
தென் மாவட்ட மக்களின் வழிபாட்டு தெய்வங்களில் ஏரல் சேர்மன் சுவாமியும் ஒருவர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கிராமம் மேலப்புதுக்குடி.
இங்கு பிறந்த குமாரசாமி நாடார் ஒரு நாள் தனது ஊருக்கு வந்த முனிவர் ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்து வந்து, பாத பூஜை செய்து, அருஞ்சுவை விருந்து அளித்தார்.
அப்போது அந்த முனிவர் ஒரு தெய்வீக ஏடு ஒன்றை குமாரசாமியிடம் கொடுத்தார்.
இந்த ஏட்டை தொடர்ந்து படித்து வந்ததன் பயனாக, மந்திரங்கள் சிலவற்றை கற்றுக் கொண்டு தினமும் தியானமும், பூஜையும் செய்து வந்தார்.
இதனால் அவருக்குள் ஒரு சக்தி உருவானது. அதன் பயனாக பாம்பு, பூரான் போன்ற கொடிய விஷ ஜந்துகள் கடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியம் பார்த்தார்.
பார்வை பார்த்தல் என்று அப்பகுதியில் இதை கூறுவர். குமாரசாமி நாடாரிடம் பார்வை (வைத்தியம்) பார்த்ததால் விஷம் இறங்கியது என்று அப்பகுதி மட்டுமன்றி சுற்றுவட்டாரங்களிலும் பேச்சு பரவலாகியது.
அந்த காலக்கட்டத்தில் தேள் கடி, பூரான் கடி முதலானவை அதிகமாக ஏற்படுவதுண்டு, சிலருக்கு விஷப்பூச்சிகள் கடித்து உடலில் சரும நோய்கள் ஏற்படுவதும் உண்டு.
அவ்வாறு வரும் சரும நோய்களிலிருந்து விடுபடவும், விஷமிறக்கவும் மதுரை தெற்கே இருக்கும் பெரும்பாலான மக்கள், ஏரல் வந்து குமாரசாமி நாடாரிடம் பார்வை பார்த்து செல்வார்கள்.
இவருடைய புகழ் நாளுக்கு நாள் மேலும் பரவியது. இவரது மறைவிற்கு பின் இவருடைய சந்ததிகள் இந்த பணியை செய்து வந்தனர்.
அந்த வழித்தோன்றலில் ஒருவர் ராமசாமி நாடார். இவரது மனைவி சிவனணைந்தம்மாள்.
இவர்களுக்கு திருமணம் முடிந்து ஆண்டுகள் பல கழிந்த பின்னும் குழந்தை இல்லை.
ஒரு நாள் தர்மம் கேட்டு, அவர்கள் இல்லம் வந்த காவி உடை தரித்த துறவி, “நீ செட்டியாபத்து சென்று அங்கிருக்கும் ஐந்து வீட்டு சாமியைத் தரிசனம் செய்து வா. உனக்கு ஆண் மகன் பிறப்பான்” என்று கூறினார்.
ஏரலில் இருந்து 28 கி.மீ தொலைவில் உள்ளது செட்டியாபத்து. அதன்படி தம்பதிகள் வண்டி கட்டி, செட்டியாபத்து கோயிலுக்கு சென்று தரிசித்து வந்தனர்.
அன்றைய தினம் ராமசாமிக்கு கனவு வந்தது. அதில் முந்தைய நாள் தர்மம் கேட்டு வந்த காவித்துறவி தோன்றி, உனக்கு ஆண் குழந்தை பிறக்கும்,
அதற்கு அருணாசலம் என்று பெயரிடு. அவன் தெய்வ நிலை கொண்ட குழந்தையாக வளருவான் என்று கூறினார்.
நாட்கள் சில சென்ற நிலையில் சிவனணைந்தம்மாள் கர்ப்பமுற்றாள். அதை வைத்தியச்சி கைபிடித்து சொன்னபோது மிகவும் சந்தோஷம் கொண்டனர் தம்பதியினர்.
ஏழு மாதமான நிலையில் சிவனணைந்த அம்மாளுக்கு மயக்கம், வாந்தி, சோர்வு என கருவுற்ற பெண்ணுக்கு இருக்கிற எந்த செயலும் இவரிடத்தில் இல்லை,
இதனால் சற்று குழப்பம் அவர்களுக்கு உருவானது. இப்படி இருக்கையில் நிறைமாதமாக இருந்த சிவனணைந்தம்மாள், விக்கிரம ஆண்டு புரட்டாசி திங்கள் பதினெட்டாம் நாள் உத்திர நட்சத்திரத்தில் அதாவது 2.10.1880 அன்று அழகான ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
குழந்தைக்கு அருணாசலம் என்று பெயரிட்டனர். உடனே ராமசாமி நாடார் வேண்டுதல் நிறைவேறிய சந்தோஷத்தில் செட்டியாபத்து கோயிலில் அழகிய மண்டபம் கட்டினார்.
அருணாசலம், மூலக்கரையில் இருந்த பாடசாலையில் கல்வி கற்றார்.
ஏரல், சிறுத்தொண்ட நல்லூர், பழையகாயல் போன்ற கிராமங்களில் பெருமளவில் சொத்துகள் இவர்களது குடும்பத்துக்கு இருந்தது.
அருணாசலம், பண்ணை விளையில் மேல்படிப்பு படித்தார். அங்கு அவர் ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டார்.
வாலிபப் பருவம் அவரை நெருங்க, அவர் தனது எண்ணத்தை இறை தேடலில் செலுத்தி வந்தார்.
தனது வழி முன்னோடிகள் செய்து வந்த விஷக்கடி மருத்துவத்தினையும் இவர் தொடர்ந்து செய்து வந்தார். இதனால் இப்பகுதி மக்களிடம் பேராதரவு இருந்தது. இதற்கிடையில் இவரது அறிவாற்றலையும், ஆங்கிலப் புலமையையும் கண்ட அன்றைய ஆங்கில அரசு இவரை சிறுதொண்ட நல்லூருக்கு முன்சீப்பாக (நிர்வாக அதிகாரி) நியமித்தார்கள்.
அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அருணாசலம், அதைச் சிறப்பாக செய்து வந்தார்.
சிறுவயதாக இருந்தாலும் வரி வசூல் செய்வது. அந்தக் கிராமத்தில் ஏற்படும் சிறு சிறு சண்டைகளை பஞ்சாயத்து பேசி முடிப்பது என்று 8 ஆண்டுகளாக இப்பணியை மிகச்சிறப்பாக செய்து வந்தார்.
இதற்கிடையில் ஒரு நாள் செய்த வசூலை உண்மை நிலவரமாக சொல்லாமல், குறைத்து மாவட்ட அதிகாரிக்கு சொல்லுமாறு, மேலதிகாரியான வருவாய்த்துறை அதிகாரி இவரிடம் கூற, பொய் சொல்ல வேண்டுமா என்று நினைத்த இவர் மறு நிமிடமே தான் வகித்து வந்த பதவியை துறந்து விட்டார்.
அந்தப் பதவியை விட்ட உடனே ஆன்மிகத்தில் தனது ஈடுபாட்டை அதிகமாக்கினார்.
சுற்று வட்டார கிராமங்களில் இருக்கும், தங்களது குடும்ப சொத்துகளை பார்வையிட அருணாசலம் வெள்ளை வேட்டியும், கோட்டும் அணிந்து தலைப்பாகையுடன் வெள்ளைக் குதிரையில் ஏறி செல்வார்.
அவருடைய ராஜ தோரணையை கண்டு உறவினர்களும், ஊராரும் வியந்து நிற்பர்.
இதற்கிடையில் அருணாசலத்துக்கு திருமணம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்து வந்தனர். இதையறிந்த அவர் 28 வயது ஆகட்டும். அப்ப பார்த்துக்கலாம் என்று கூறிவிட்டார்.
அப்பழுக்கற்ற மனிதராய், பிரம்மச்சாரியாக வாழ்ந்த இந்த மகானை கவனித்துக் கொண்டே வந்த, அப்போதைய மாவட்ட கலெக்டர்கள் பிஷப்வெஸ்டன், பிஷப்ஸ்டோன் ஆகியோர் பரிந்துரைப்படி ஏரல் பஞ்சாயத்துக்கு சேர்மனாக (தலைவராக) அருணாசலத்தினை நியமித்தார்கள்.
அந்தக் காலங்களில் ஊராட்சி, பேரூராட்சி தலைவர்களைகூட சேர்மன் என்று அழைப்பது வழக்கம்.
சேர்மனான அருணாசலம், ஏரலில் பள்ளிக்கூடங்களைத் தொடங்கினார். தெருவிளக்குகளை அமைத்தார்.
அந்த விளக்குகள் தற்போது போல அல்லாமல் எண்ணெயால் எரியும் தீப விளக்குகள்.
இந்த விளக்குகள் இரவு நேரங்களில் அணைந்து விடாமல் இருக்க பணியாளர்களை நியமனம் செய்தார்.
ஊருக்குள் கழிவு நீர் தங்காமல் இருக்க வடிகால் வசதி செய்து கொடுத்தார். ஊராட்சி எல்லைக்குள் மரக்கன்றுகள் நட்டார். அனைத்து மக்களிடமும் அன்போடு பழகி வந்தார்.
அதிகம் பேசாமல் அமைதியுடன் திகழ்ந்த அருணாசலம், தனது ஆன்மிக சக்தியால், பின் நடப்பதை முன் அறியும் திறன் பெற்றார்.
ஒரு நாள் அப்பகுதியைச் சேர்ந்த பால்நாடார் என்பவரைப் பாம்பு கடித்து விட்டது. அப்போது அவரைக் கடித்த பாம்பையே திரும்ப வரவழைத்து அந்த விஷத்தினை உறிஞ்சச் செய்தார்.
இதைக்கண்ட அனைவரும் மெய் சிலிர்த்தனர். அவருக்குள் ஏதே ஒரு தெய்வ சக்தி இருப்பதை அந்த ஊர்காரர்களும், உறவினர்களும் உணர்ந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு அவரை சேர்மன் சாமி என்றே அழைக்கத் தொடங்கினர்.
ஒரு சமயம் அவரது தங்கை ஒருவர் புளியங்காடு என்ற ஊரில் வசித்து வந்தார். அவர், சேர்மனிடம் ‘‘அண்ணே, என் வீட்டுக்கு வரமாட்டீங்களா’’ என்று கேட்டதற்கு, அவர் தனது போட்டோ ஒன்றைக் கொடுத்து இதை வைத்து என்னை பார்த்துக் கொள் என்று கூறினார்.
அவர் போட்டோவை வாங்கிக்.கொண்டு சென்ற சில நாளில் போட்டோ வைக்கப்பட்டிருந்த அந்த அறை திடீரென்று தீ பிடித்து எரிந்தது.
அப்போது அறை முழுவதும் எரிந்து சாம்பலானது ஆனால் சேர்மன் சுவாமியின் படம் மட்டும் நெருப்பில் எரியவில்லை இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
ஒரு நாள் காலை சேர்மன் சுவாமி அருணாசலம் எழுந்தவுடன் தனது தம்பி கருத்தபாண்டியை அழைத்து, காலம் கனித்து விட்டது. நான் சிவனடி செல்லும் நாள் வந்துவிட்டது.
வருகிற அமாவாசை அன்று ஆடிமாதம் 13ம் நாள் செவ்வாய்க் கிழமை (27. 07. 1908) அன்று உச்சிப் பொழுதில் என்னை எம்பெருமான் சிவனோடு அர்ப்பணித்துக் கொள்வேன்.
என்னுடைய உடலை விட்டு ஜீவன் போனாலும் நான் எப்போதும் உங்களுடன்தான் இருப்பேன்.
என்னை நம்பி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அளித்து வருவேன். அவர்களை காலம் காலமாக காத்துவருவேன். என் ஆவி பிரிந்தவுடன் நமது குல வழக்கப்படி என் உடலை எரித்து விடாதீர்கள்.
இறந்தோருக்குச் செய்யும் சடங்குகளை செய்து அப்படியே இருந்த நிலையில் குழி தோண்டி வையுங்கள்.
அப்போது வானத்தில் கருடன் ஒலி கொடுத்து என்னை மும்முறை வலம் வருவார். கருடன் நிழல் என் உடல் மீது படும்.
அப்போது என்னை உட்கார்ந்த நிலையில் மண்ணையும் மலரையும் கொண்டு மூடிவிடுங்கள்.
செய்ய வேண்டிய சடங்குகளை செய்யுங்கள் என்று முக மலர்ச்சியோடு சேர்மன் அருணாசலம் சுவாமிகள் கூறினார்.
சுவாமிகள் வாக்கினைக் கேட்ட கருத்தபாண்டி நாடார் கலங்கி கண்ணீர் வடித்தார். தன்னுடைய இறுதிக் காலம் இதுதான் என முடிவு எடுத்த சேர்மன் சுவாமிகள் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்றார்.
அங்குள்ள கோப்புகள் அனைத்தினையும் பார்த்து முறையாக கையொப்பம் வைத்தார். 28. 07. 1908. அவர் கூறிய நாள் வந்தது.
நிறைந்த அமாவாசை முன்னரே கருத்தபாண்டி நாடார் மூலம் தகவல் அறிந்த உற்றார், உறவினர், நண்பர்கள், நகர மக்கள் என பலரும் அவரது இல்லம் முன்பு ஒன்று கூடினர்.
பகல் 11 மணிக்கு சேர்மன் அருணாசலம் சுவாமி இதோ வருகிறேன் என்று கூடியிருந்த அனைவரையும் பார்த்து புன்னகை சிந்தும் பொன்முகத்தோடு கையசைத்தபடி தனது அறைக்குள் சென்றார்.
கட்டிலில் படுத்தார். கண்களை மூடினார். உச்சிப் பொழுது வந்தது. (பகல் 12 மணி) உறங்கிய நிலையிலேயே சிவனடி அடைந்தார்.
சுவாமி கூறியபடி தென்மேற்கில் உள்ள தாமிரபரணி நதிக்கரையில் படர்ந்த ஆலமரத்தின் அடியில் சுவாமியின் உடலை அமர்ந்த கோலத்தில் வைத்தனர்.
உரிய சடங்குகள் நடத்தப்பட்டது. கருடன் சங்கொலியுடன் சுவாமியை வலம் வந்தது. கருடன் நிழல் சுவாமி உடலில் பட்டது.
சுவாமிகள் படித்த நூல்கள், பயன் படுத்திய விலை மதிப்பு மிக்க பொருள்கள், உயர்ந்த அணிகலன்கள் ஆகியவற்றை சுவாமியின் காலடியில் வைத்து சுவாமி அமர வைக்கப்பட்டிருந்த குழியை மலர்களாலும், மண்ணாலும் நிரப்பினார்கள்
சுவாமி தெய்வ நிலையடைந்த ஒரு சில நாளில் அவர்களோடு வைக்கப்பட்ட விலை உயர்ந்த பொருள்களைத் திருடிச் சென்றிட திருடர்கள் குழியைத் தோண்ட முயன்றனர்.
அப்போது, பாம்புகள் கூட்டம் படையெடுத்து வந்தது. அவர்களை படமெடுத்து விரட்டியது. அஞ்சி நடுங்கிய திருடர்கள் ஓடினர்.
இந்தக்காட்சி ராமசாமி நாடாருக்கு கனவில் தெரிந்தது. அவர் உடனே ஓடி வந்து பார்த்தார்.
அங்கு மண் தோண்டப்பட்டு இருப்பதையும் அதன் அருகே கடப்பாறை மற்றும் மண்வெட்டி இருப்பதையும் கண்டார்.
உடனே இனி தனது தெய்வ மகனுக்குக் கட்டிடம் கட்ட வேண்டும் என்று நினைத்து சிறிய கட்டிடம் ஒன்றை கோயிலாகக் கட்டினார்.
எப்போதுமே ஆடு மாடு மேய்க்கும் சிறுவர்கள் மீது சுவாமிக்கு அலாதி பிரியம் உண்டு. சுவாமி சமாதி நிலை அடைந்தாலும் அந்தப் பிரியம் அவரை விட்டுப் போகவில்லை.
ஆகவே அந்த சிறுவர்களுக்குக் காட்சி கொடுத்தார். சுவாமிகள்
உயிரோடு இருந்த போது அவரிடம் நோய் தீர்க்க மருந்து வாங்கி உண்டவர் ஆதிதிராவிடப்பெண்ணான சுடலைப் பேச்சி.
அவர் தனக்கு நோய் தீரவில்லையே என்று சுவாமி சமாதிக்கு வந்து வேண்டி நின்றாள்.
நோயின் ரணம் தாங்காமல் அங்கேயே அழுதாள். உடனே அந்தப் பெண்ணுக்கு காட்சி கொடுத்த சுவாமி தீர்த்தமும் நிலக்காப்பும் உனக்கு மருந்தாகும் என்று கூறினார். அதன்படி அவரது நோய் தீர்ந்தது.
சேர்மன் சுவாமிகளின் அருளாற்றலின் தனிச்சிறப்பு மற்ற மாநிலங்களிலும் பரவியது.
அப்பகுதியைச் சேர்ந்த மரியாள் என்ற சிறுமி பூப்படையவில்லை. அவளது பெற்றோர்கள் பல மருத்துவரிடம் சென்று மருத்துவம் பார்த்தும் பலன் அளிக்கவில்லை. அந்த பெண்ணின் பெற்றோர் தெரிந்தவர்கள் மூலம் அறியப்பெற்று சேர்மன் சுவாமியின் கோயிலுக்கு மகளை அழைத்து வந்தனர்.
கோயிலுக்கு வந்த, அவர்கள் வீடு செல்வதற்கு முன்பு ஆற்றின் மறு கரையில் வைத்தே அவள் பூப்பெய்தினாள்.
அவர்கள் குடும்பம் ஆண்டாண்டுகளாக இங்கு வந்து வணங்கி செல்கின்றனர்.
கிறிஸ்வர்கள் புதைக்கப்பட வேண்டிய இடத்தில் அருணாசல சுவாமியை புதைத்து விட்டனர்.
ஆகவே அங்கு எழுப்பப்பட்டிருக்கும் சுவாமியின் கோயிலை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த சிலர் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.
அப்போது கலெக்டர்களாக இருந்தவர்கள் மெக்வர், டேவிட்சன் ஆகியோர் ஆவர். அவர்கள் இந்தக் கோரிக்கையை பிஷப்பாக இருந்த ஆர்தர் வில்லியத்திடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து கலெக்டர்கள், பிஷப்புடன் சேர்ந்து நெல்லையில் இருந்து ஏரலுக்கு குதிரையில் வந்தனர்.
கோயிலுக்கு வரும் முன்பு அவர்கள் வந்த குதிரைகள் முரண்டு பிடித்து நின்றன.
ஆகவே அவர்கள் குதிரையை விட்டு இறங்கி சுவாமியின் கோயிலுக்கு வர, கோயிலின் முன்பு சேர்மன் அருணாசலம் சுவாமி கணக்கு எழுதுவது போல அமர்ந்து இருந்தார்.
அந்தக் காட்சியை பார்த்த அவர்கள் வேர்வை கொட்ட அந்த இடத்தில் காலணிகளை கழற்றி விட்டு தனது தொப்பிகளை இடுப்பில் இறக்கி வைத்து விட்டு சுவாமியை வணங்கினர்.
நெல்லை சென்று சேர்ந்ததும் கலெக்டர், கோயில் உள்ள பகுதியான இரண்டு ஏக்கர் நிலத்தினை முறைப்படி பட்டாபோட்டு கொடுத்துவிட்டார்.
இந்த வரலாறு அரசு ஆவணங்களில் உள்ளது. சுவாமியின் தெய்வ நிலை பெற்ற ஆண்டு 1908. அன்றிலிருந்து மக்கள் ஏரலுக்கு கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இது குறித்து ஆங்கிலேய கலெக்டர் பேட்துரை என்பவர், 1916ம் ஆண்டு எழுதிய அரசு குறிப்பேட்டில் கூறியதாவது.
ஏரல் நகரில் சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாயத்து சேர்மனாக இருந்த அருணாசலம் என்பவரது கோயில் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகின்றது.
தீராத நோயால் கொடுமையடைந்த ஆதிதிராவிட பெண் ஒருத்தி கனவில் வந்த அருணாசலம் தனது சமாதியைச் சுற்றி வந்தால் உனது நோய் குணமாகும் என்று கூறினார்.
அதன்படி அந்தப் பெண் சுற்றி வந்தாள். அவளது நோய் குணமானது. அந்த அற்புதத்தின் செய்தி சுற்றி வட்டாரத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
சேர்மன் அருணாசல சுவாமி சமாதி, தாமிரபரணி கரையில் உள்ளது. தற்போது நாள் தோறும் அங்கு பூஜை நடந்து வருகிறது.
பில்லிசூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள புற்று மண்ணை மருந்தாக உண்ணுகிறார்கள்.
உடம்பிலும், கை, கால்களில் பூசி வருகின்றனர். அவர்களுக்கு உடனே குணம் தெரிகிறது என்று ஆங்கிலேய கலெக்டர் பேட்துரை என்பவர் திருநெல்வேலி கெஜட்டர் என்ற நூலில் எழுதியுள்ளார்.
மனிதனாக வாழ்ந்து தெய்வமாக வணங்கப்படும் சேர்மன் சுவாமி சமாதி, இருக்கும் இடத்தில் சுவாமியின் தந்தை தனது கைகளால் சிறிது மண்ணை எடுத்து லிங்கம் போல் பிடித்து வைத்துள்ளார்.
அந்த லிங்கம் தான் இன்று இரண்டு அடிக்கு மேல் வளர்ந்து உள்ளது.
தாமிரபரணி ஆற்று நீரில் லிங்கத்தினை பல ஆண்டுகளாக அபிஷேகம் செய்துவந்தும் அந்த லிங்கம் கரையாமல் உள்ளது.
அந்த லிங்க அபிஷேக தீர்த்தத்தினால் பல நோய்கள் தீருகிறது. குறிப்பாக வலிப்பு நோய், மனநோய், அரிப்பு, கட்டி என பல நோய்கள் தீருகிறது.
சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்து 100 வருடங்களைத் தாண்டி விட்டது. ஆனால் தற்போதும் சுவாமிகள் பல விதத்தில் தனது ரூபத்தினை மக்களுக்குக் காட்டி வருகிறார்.
திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி முதல்வராக பணியாற்றிய சற்குணம் என்பவர் ஒருசமயம் ஏரலுக்கு சுவாமியைக் கும்பிட குடும்பத்துடன் வந்துள்ளார்.
அவர்கள் தாமிரபரணியில் நீராடும் போது அவரது மகன் நீரில் முழ்கி விட்டான். உடனே அவர் ‘‘சேர்மா! என் மகனை காப்பாற்று’’ என குரல் எழுப்பியுள்ளார்.
அப்போது அங்கு வந்த பெரியவர் ஒருவர் ஆற்றில் இறங்கி அவர் மகனை காப்பாற்றியுள்ளார்.
அதன் பின் அவர் மகனை அன்போடு கட்டி அரவணைத்து விட்டு காப்பாற்றிய பெரியவருக்கு நன்றி சொல்ல அவரை கூப்பிட்ட போது அவரைக் காணவில்லை.
பல இடங்களில் தேடியும் அவரைப் போன்ற உருவத்தில் யாரும் இங்கே நடமாடவே இல்லை என்று அக்கம், பக்கத்தினர் கூறிவிட்டனர்.
ஆகவே மகனைக் காப்பாற்றியது சேர்மன் சுவாமிகளே என்று அவர் மட்டுமல்ல அனைவரும் நம்பினர்.
ஏரல் சுவாமி கோயிலில் மந்திர மை இடுவது வழக்கம். இந்த மந்திர மை ஆல், அரசு, வேம்பு, துளசி, வில்வம், சந்தனம், கற்பூரம் போன்ற பொருட்களைச் சேர்த்து யாகத்தில் நெய்யிட்டு எரித்து பஸ்பமாக்கி அதனை சுவாமியின் முன்னர் வைத்து வழிபாடு செய்து தருகிறார்கள்.
இந்த மந்திர மை பக்தர்கள் நெற்றியில் இடும் போது திருஷ்டி, பேய், பிசாசுகள் ஓடிப்போய்விடும். என்பது அனுபவ பூர்வமான நம்பிக்கை.
குலசேகரபட்டினம் அருணாசலப் பிள்ளை என்பவர் சுவாமி கோயிலுக்குத் தவறாமல் அரிசி தருவது வழக்கம்.
ஒரு முறை இரவில் தென்திருப்பேரையில் இருந்து அவர் அந்த அரிசியை ஒரு நார்ப்பெட்டியில் வைத்துக் கொண்டு ஏரலுக்கு வந்தார்.
அப்போது ஆற்றில் வெள்ளம் வந்த காரணத்தினால் தனியாக எப்படி அக்கரைக்குப் போவது என்று அவர் தவிக்க ஒரு பெரியவர் தனது பிரம்பை அவர் கையில் கொடுத்து இதைப் பிடித்துக் கொண்டு என் பின்னால் வா என்றார்.
பிள்ளை அந்த பிரம்பை பிடித்தவுடன் மறுகரை வந்து விட்டதை உணர்ந்தார். சரி நமக்கு உதவி செய்பவருக்கு ஏதாவது செய்யலாம் என்று அவர் அந்தப் பெரியவரைத் தேடிய போது அவரைக் காணவில்லை.
உடனே இங்கே இருந்த பெரியவரை எங்கே என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டார்”. பெரியவர் யாரு வந்தா... நீங்க ஒத்தையில் வாறீங்களேன்னுதான் நாங்க இங்க நின்னு உங்களை பாத்துக்கிட்டு இருக்கோம்” என்று சொன்னார்கள்.
அப்படியென்றால் அவரை வழிநடத்தி வந்தது சேர்மன் சுவாமிதான் என்று அனைவரும் கருதினர்.
ஆதி சங்கரர் தமது முப்பத்தியிரண்டு வயதிலும், சுந்தரர் தனது பதினெட்டாவது வயதிலும், ஏரல் சேர்மன் சுவாமி தனது 28வது வயதிலும் இறைவனின் திருவருள் பெற்று தெய்வமானார்கள்.
இங்கு சித்திரைத் திருவிழா, ஆடி அமாவாசை, தை அமாவாசை.ஆகிய மூன்று திருவிழாக்கள் முக்கிய விழாக்களாகும். மற்றும் மாதந்தோறும் வரும் அமாவாசையிலும், பௌர்ணமியிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
சுவாமியின் திருக் கோலம் இங்கு ராஜ திருக் கோலமாகும். நின்ற கோலத்தில் சுவாமி காட்சி தருகிறார்.
இங்கு நான்கு கால பூஜைகள் நடக்கிறது. திருநெல்வேலியிலிருந்து - திருச்செந்தூர் செல்லும் முக்கிய சாலையில் தென்திருப்பேரையில் இருந்து இடதுபுறம் திரும்பிச் சென்றால் ஏரல் தாமிரபரணிக்கரையில் சேர்மன் அருணாசல சுவாமிகள் அருளைப்பெறலாம்..✍🏼🌹
நமது சித்தர் பீடத்தில் 108 0பௌர்ணமி யாகங்கள் நிறைவு
1710.2016, 9 வருடம் முன்னர், இதே நாளில், அமது பழைய சித்தர் பீடத்தில் இருந்த போது பௌர்ணமி யாகம் செய்ய ஆரம்பிக்கப்பட்டது. வருடம் 12 பௌர்ணமி வீதம், 9 வருடங்களில் கணக்குக்கு 108 பௌர்ணமி நடந்து முடிந்துள்ளது.



















