Sunday, 9 November 2025

அசேதனம்

 அடியேன் ஒரு திருமண வைபவதிற்க்கு சென்று இருந்தபோது அங்கே மணமக்களுக்கு மணமாகியபின் அணிவிக்க பெருமாள் பிரசாதம் கொண்டு வந்த ஓர் ஆலயத்தின் இளவயது  *அர்ச்சகர்* ஸ்வாமி கையில் அதுவும் கட்டை விரலில் ஒரு இஞ்ச் நீளத்தில் கூர்மை செய்ய பட்ட *நகமும்* அதற்க்கு அழகாக பூச்சும் செய்யபட்டு இருந்ததை கண்டு அடியேன் அவரிடம் 


ஸ்வாமி பெருமாள் *கைங்கர்யம்* செய்யும் தேவரீர் கையில் இப்படி நகம் வளர்க்கலாமா அது தவறல்லவா பொதுவாக ஆலய அர்ச்சகர்கள் பரிஜாரகர்கள் கைகளில் நகம் வளர்க்க கூடாது என்பது தானே ஆகம நியமனம் தேவரீர் வளர்த்து கொண்டது அதற்க்கு எதிராக தெரிகிறதே என்றதும்


ஸ்வாமி பகவான் *ந்ருசிம்மரே* நகம் வைத்து கொண்டு உள்ளார் எனவே அர்சகர்களான நாங்கள் வைத்து கொள்வது ஒன்றும் தவறல்ல என்றார்


அடியேன் அவரிடம் ஸ்வாமி *பார்த்தசாரதி* பெருமாள் மீசை மட்டும் வைத்துக்கொண்டு காட்சி தருகிறார் என்பதால் தேவரீர் மீசை மட்டும் வைத்துக்கொண்டு ஆராதனம் செயவீரா 


நாம் ( பகவத் கைங்கர்யம் செய்யும் எவரும் எந்த இனத்தவரும்) பகவத் கைங்கர்யம் செய்யும் போது அட்சதை தூவும் மலர் கண்டருள செய்யும் பதார்த்தம் பழங்கள் இன்னும் பல அல்லது காலை மதியம் மாலை என நித்ய *சந்தியாவந்தனம்* செய்யும் போது விடும் *அர்க்யம்* முதலானவை நகத்தில் பட்டால் அது பகவானுக்கு உகந்தது அல்ல


அவர் சற்று கோபத்துடன் அடியேனது கை விரலை திருப்பி பார்த்து உம்மிடம் நகம் வளரவில்லையா அல்லது அடியேனை பார்த்து பொறாமையா என கேட்டார்


அவரிடம் ஸ்வாமி *பூலோகத்தில்* அவதரித்துள்ள  நாமெல்லாம் *சேதனர்கள்* 


நம்மளோட கையில் வளரும் நகம் *அசேதனம்* 


கைவிரலில் உள்ள நகத்தோட வேர் மட்டுமே *சேதனம்* 


கைவிரலுடன் உள்ள வேரைத்தவிர விரல் தாண்டி நகம் வளர்ந்த தால் அசேதனம் ஆயிடறது


அதாவது *உயிரில்லாத* ஒரு (அ)சேதனத்தினை ஸ்பரிசிப்பது *பிரேத்த்தை* தொடும் தோஷத்துக்கு சமம்


அதனால தான் முற்காலத்தில் பெரியவர்கள் குழந்தைகளை கூட நகம் வளர்க்கக் கூடாது என வாரம் ஒரு முறை கட்செய்து விடுவார்கள்


அப்படி *அசேதனமான்* ஒரு நகத்தினை வளர்த்து அந்த நகம் வளர்ந்த கைகளைக் கொண்டே பெருமாளுக்கு கோயில்களில் ஆராதனம் இல்லத்தில் திருவாராதனம் முதலியன செய்விப்பது எவ்ளோ தோஷமானது அது எவ்ளோ பெரிய *துஷ்கர்மா* அதை செய்வது தகாது தேவரீர் உமது  அகத்துக்கு சென்றதும் மறக்காமல் நகத்தை கட் செய்து விடுங்கள் அல்லது காலையில் தீர்த்ததமாடும் முன் அதை வெட்டி விடுங்கள் என்றதும் 


ஏதும் பேசாமல் மாலையை போடவா வேண்டாமா என்றார் 


அடியேன் பெருமாள் பிரசாதமாக கொண்டு வந்து விட்டீரல்லவா இனி தேவரீர் என்ன செய்ய வேண்டுமோ செய்யும் என்றதும் மாலையை தம்பதிகளுக்கு சாற்றி சம்பாவனை பெற்று அடியேனிடம் தேவரீர் சொன்னதை கடைபிடிக்கிறேன் என்றபடியே சொல்லி விடை பெற்றார்


அன்பர்களே இவ்வுலகில் *தேகாவ்யசானம்* முடியறப்போ (தேக யாத்திரை முடியறப்போ) இந்த தேகம் அசேதனம் ஆகிவிடும் 


ஆனால் பகவான் மட்டும் தான் நித்ய சேதனன் திவ்ய சேதனன் அழிவில்லாதவன் பரிபூர்ணமானவன் தோஷமில்லாதவன்


நாமெல்லாம் அசேதனமா (சதைப் பிண்டமா கருவில் இருந்து) சேதனமா மாறி (அவன் பிராணன் குடுக்கறதுனால) பின்னர் அசேதனமா மாறி விடுகிறோம் (ஜீவன் அதாவது பிராணன் இந்த தேகத்தை தியாகம் பண்றப்போ) அசேதனத்தை பகவானுக்கு படிப்பதில்லை எமனிடம் அக்னி மூலமாக சமர்பித்த விடுகிறோம்


சரி அந்த அர்சகர் சொன்ன மாதிரி *ந்ருசிம்ஹர்* மட்டும் ஏன் அசேதனமான நகத்தை வைத்துக்கொண்டு உள்ளார்


இங்கே ஒரு விஷயம் *ந்ருசிம்ஹர்* பகவத் ஆராதனையை பகவத் கைங்கர்யமோ செய்பவரல்ல அவர் பூலோகத்தில் இருந்ததே ஓரிரு *க்ஷண* பொழுதுதான்


ஹிரண்யன் எங்கே உன் ஹரி என கேட்க


பிரஹலாதன் இங்கே அப்படின்னு எதை எங்கே கை காட்டுவானோன்னு எண்ணி பகவான் ஹரி உருவாய் (ஹரி என்பதற்கு சிங்கம் என்றொரு பொருள் உண்டு) அந்த மண்டத்தின் அனைத்து ஸ்தம்பத்துக்குளும் வியாபித்து காத்திருந்த அந்த சமயத்தில் ஹிரண்ய கசிபுவை வதம் பண்றதுக்காக தனது *நகங்களைக்* கூர் படுத்திண்டிருந்தானாம்


அதாவது நாமெல்லாம் சாதாரண *சேதனர்கள்* திவ்ய சேதனனான *எம்பெருமான்* அசேதனமான நகத்தினை வளர்த்திருந்தான் ஏனெனில் அவன் தோஷமற்றவன்


அதையும் விட ந்ருசிம்ஹன் நகம் வளர்த்ததே *துஷ்ட்டனை* சம்ஹாரம் பண்றதுக்காக தான்


ப்ரம்மாவிடம் ஹிரண்யன் வாங்கிய வரத்தின்படி அவனை எந்த *ஆயுத்த்தாலும்* அழிக்க முடியாது எனவே அவனின் மரணம் சம்பவிக்க எல்லா ஆயுதங்களையும் தன்னகத்தே கொண்ட சுதர்சன *சக்கரத்தாழ்வாரை* தன் நகமாக கொண்டு உருவெடுத்தான்


அதாவது தன்னோட பக்தன் ப்ரஹ்லாதனுக்காக நகம் என சக்கரத்தாழ்வாரை வளர்த்தான்


காரணம் தன்னோட பக்தர்களை காப்பாற்ற பகவான் நாராயணன் மகாவிஷ்ணு அனாதரட்சகன் ஆபத்பாந்தவன் ந்ருஸிம்ஹனை போல் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பண்ணுவான் என்பதே பகவான் நகம் வளர்த்த கதையின் பிரமாணம்


ஆனால் நாம் *பிரேத்த்துக்கு* சமமான நகத்தை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அகற்றவே வேண்டும்


எனவே அன்பர்களே இல்லத்தில் பகவத் ஆராதனம் செய்பவர்கள் கோயிலில் அர்ச்சகராக பரிஜாரகராக ஏன் பூ தொடுப்பவராக தளிகை செய்பவராக அத்யாபகராக என எந்த பகவத் கைங்கர்யம் செய்பவராக இருந்தாலும் நகம் வளர்ப்பதை தவிருங்கள் .

Source https://www.facebook.com/share/p/1CctY36u3c/

(2227)

No comments:

Post a Comment