Wednesday, 4 March 2020

குழந்தை இல்லாதவர்களுக்கு மறுபிறவி கிடையாது. வேதம் உணர்த்தும் உண்மை,

குழந்தை இல்லாதவர்களுக்கு மறுபிறவி கிடையாது.
வேதம் உணர்த்தும் உண்மை, உணர்ந்தவனுக்குப் பிறப்பில்லை

இரண்டு நாட்களுக்கு முன் நடந்த ஓர் சம்பவம்

நண்பர் ஒருவருக்கு குழந்தைகள் இல்லை அவரது சகோதரருக்கு இரண்டு பெண்கள் மட்டுமே ( இவர்களது அப்பா அம்மாவுக்கு இவர்கள் இருவர் தான் பிள்ளைகள் பெண்கள் கூட கிடையாது) அவர் அடியேனிடம் வந்து ஸ்வாமி நான் ஒரு குழந்தையை ஸ்வீகாரம் செய்து கொள்ளலாம் என உள்ளேன் ஒரு நல்ல நாளாக பார்தது சொல்ல முடியுமா என்றார்

அடியேன் அவரிடம் ஸ்வாமி எதற்க்காக இப்போ ஸ்வீகாரம் எடுத்துக்கொள்ள போகிறீர் என்றேன்

ஸ்வாமி அடியேனுக்கு குழந்தைகள் இல்லை என்னையும் என் மனைவியையும் ஏதோ குறை உள்ளவர்கள் போல் உறவினர்களும் நண்பர்களும் பார்க்கிறார்கள் அத்தோடு எனக்கு கர்மா பண்ண பிதுர் காரியம் செய்ய ஒரு பையன் வேண்டும் எனவே ஸ்வீகாரம் எடுத்துக் கொள்ளலாம் என உள்ளேன் என்றார்

அவரிடம் ஸ்வாமி நீர் ஏன் பகவானுக்கு எதிராக செயல்படுகிறீர் என்றேன்

ஸ்வாமி என்னை பார்தது பகவானுக்கு எதிராக செயல்படுகிறேன் என்கிறீரே நான் பகவானுக்கு நித்ய ஆராதனம் செய்கிறேன் சந்தியாவந்தணம் செய்கிறேன் நேரம் கிட்டும் போதெல்லாம் ஶ்ரீபாதம் தாங்கியாக செல்கிறேன் முடிந்த அளவு கோவில் கைங்கர்யங்கள் கைங்கர்யத்துக்கு தேவையான உதவிகள் செய்துவருகிறேனே தேவரீர் என்னை பார்த்து இப்படி பகரலாமா என்றார்

ஸ்வாமி இது எல்லாம் உம் கையில் உள்ளது செய்கிறீர் ஆனால் பகவான் வேண்டாம் என நிறுத்தியதை நீர் தொடங்கலாமா என்றேன்

ஸ்வாமி புரியவில்லை என்றார்

அடியேன் அவரிடம் ஸ்வாமி தேவரீர் ஸ்வீகாரம் எடுத்துக் கொள்ள போவதாக சொல்லும் போது பிதுர் கர்மா மற்றும் உமக்கு கர்மகாரியங்கள் செய்ய வேண்டியுள்ளதற்காக ஒரு ஆண் குழந்தையை ஸ்வீகாரம் செய்து கொள்ள போவதாக சொன்னீரல்லவா அதை தான் பகவானுக்கு எதிரான செயல் என்றேன்

எப்படி ஸ்வாமி என்றார்

ஸ்வாமி ஒருவனுக்கு இனிமேல் கர்மபலனே இல்லை இந்த பிறவியுடன் அவன் செய்த செய்யப்போகும் கர்மபலன் எல்லாமே முடிந்துவிடும் எனவே இவனுக்கும் இவன் மூலம் இவன் சந்ததிக்கும் எந்த கர்மாவும் செய்ய தேவையில்லை என பகவான் முடிவு செய்து குழந்தை பாக்யம் தராதபோது

பகவானை மறந்து ஊர்கார்ர்கள் சொந்தங்கள் வார்த்தைகளுக்கு சொல்லுக்கு பயந்து ஒரு குழந்தையை ஸ்வீகாரம் செய்து கொண்டு ( அந்த குழந்தையின் பூர்வகர்மா நிகழ்கர்மாகளை உமது தலையில் ஏற்றிக்கொண்டு) உமது கர்மாவை இதன் மூலம் மீண்டும் ஆரம்பித்து பகவானுக்கு எதிராக செயல்பட ஆயத்தமாகி விட்டீரே இது தேவையில்லாத ஒன்று உங்களது பிதுர்களுக்கும் உமக்கும் இனிமேல் கர்ம பலன் இல்லை எனவே பகவான் சந்ததி கொடுக்கவில்லை

இதை தான் பெற்றவர் செய்த பாவம் பிள்ளையாய் பிறந்ததாமே என்பர்

உமது பாவங்கள் தொலைந்து பிள்ளைகள் பிறக்காத போது இப்போது யாரோ ஒருவனின் பாவத்தை நீரும் சுமந்து பகவானையும் உமக்காக சுமக்கவைப்பது சரியல்ல

உமது சகோதரனுக்கு ஒரே ஒரு கர்மபலன் பாக்கியுள்ளது அதனால் பெண் குழந்தையை கொடுத்துள்ளார் என்றேன்

புரியவில்லையே என்றார்

ஒருவருக்கு குழந்தைகளை இல்லை என்றால் அவர்களுக்கு கர்மபலன் எல்லாம் முடிந்து அவர்கள் பகவானின் ஆசாரியரின் திருவடிகளை அந்த பிறவியுடன் அடைந்துய்வர் மறுபிறவி இல்லை என்பதே அர்த்தம்

பெண்பிள்ளை மட்டும் பிறந்தால் அந்த பெண்பிள்ளையின் மகன்  ( தன் தகப்பனாருக்கு பின்) செய்யும் தர்பணத்துடன் அந்த கர்மாவும் முடிந்து அவர்கள் பகவானின் திருவடிகளை ( அந்த குழந்தையின் காலத்துக்கு பின்) அல்லது ஆசாரியன் திருவடிகளை அடைந்து உய்வர்

எனவே ஸ்வீகாரம் எடுப்பதும் செயற்க்கை முறையில் குழந்தைகளை உறுவாக்கி கொள்வதும் தேவையில்லாத ஒன்று அது பகவானுக்கு எதிரான செய்கை

எனவே தான் முற்காலத்தில் மகப்பேறு இல்லாதவர்கள் தங்களது சொத்துக்களை ஆஸ்திகளை கோவில்களுக்கும் தர்மகாரியங்களுக்கும் அன்னசத்திரம் கட்டியும் டிரஸ்டுகள் என ஏற்படுத்தியும் பலதர்ம காரியங்களுக்கு எழுதிவைத்து சென்றனர்

உமக்கு பின் உம் பங்காளிகள் யாரேனும் அந்திம காரியம் செய்து அதன் மூலம் அவரும் அவரது சந்ததிகளும் கடைதேறுவர் எந்த நாதிகாரர்களும் பண்ண வில்லை என்றால் அந்த பாவத்தை போக்க அவர்கள் பகவானிடம் தண்டனை ஏற்பர் அவர்களும் அந்த அந்திம காரியத்துடன்( ஒரு வருட கைங்கர்யத்துடன்) உமக்கான மேற்கொண்டு கர்ம காரியங்களை செய்ய தேவையில்லை

அதை விடுத்து ஸ்வீகாரம் எடுப்பதும் என் சொத்தை உனக்கு தருகிறேன் உன் காலம் வரை எனக்கு வருடாவருடம் காரியம் செய் (செய்வாரா என்பது வேறு) என்றும் கூறி நாமே நமக்கான கர்மபலன்களை பகவானை மீறி ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை

ஊர் உறவு ஆயிரம் சொல்லலாம் உடம்பில் அந்த வம்ச உற்பத்தி அணுவை குறைத்து கர்மபலனை போக்கிய பகவானுக்கு நன்றி செலுத்தி

உமது செல்வங்களை பகவானுக்கும் ஏழைகளுக்கும் தேவைப்படும் உறவினர்களின் குழந்தைகளின் படிப்புகளுக்கும் ஆடைகளுக்கும் விவாகத்திற்க்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தும் அது போக மீதமிருந்தால் அபிமான கோவில் அல்லது பெற்றோர் பெயரில் ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தி பல நல்ல காரியம் செய்ய பயன்படும் படி ஏற்பாடு செய்து வையும் என்றேன்

அவர் தன்யோஸ்மி எனக்கு ஒரு தெளிவு கிட்டியது நேராக கோவிலுக்கு சென்று பகவானின் காலடியில் விழுந்து நான் செய்ய இருந்த தவறான செய்கைக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியவர்

ஒரு சந்தேகம் என்றார்

என்ன என்றேன்

ஸ்வாமி அப்படியானால் தசரத மகாராஜா ஏன் புத்ரகாமயேஷ்டி யாகம் செய்து பிள்ளை வேண்டும் என கேட்டார்?  என்றார்

ஸ்வாமி தசரதனுக்கு மகனாக பிறந்து அசுரர்களை அழிப்பேன் என பகவான் சங்கல்பம் செய்து பிறந்தார் அதனால் அவர் குலகுரு யோசனைபடி யாகம் செய்து பகவான் சங்கல்பத்தை நிறைவு செய்தார் யாரையும் ஸ்வீகாரம் எடுக்கவில்லை மருந்து மாத்திரை செயற்கை கருத்தரிப்பு என செய்துகொள்ளவில்லை பகவத் பிரசாதமாக வேள்வியில் கிடைத்ததை மனைவியரை உண்ண செய்து நாட்டுக்காக மகனை பெற்றார் அவருக்கும் பகவானே கர்மாவை செய்து உய்வித்தான்

அந்த யுகம் வேறு இந்த யுகம் வேறு

பகவானே சங்கல்பம் செய்து புத்திரன் கொடுத்தால் ஏற்க்கலாம் நாமாக வேறு மார்க்கத்தில் சென்று சந்ததிகளை உருவாக்குவது தவறு என்றேன்