Wednesday, 1 January 2020

அகத்தியர் வாக்கு - எத்தனை ஆசிகள் யாங்கள் வழங்கினாலும், தனத்தையே குறிகொண்டு வாழ்பவரை யாங்கள் கரை சேர்ப்பதில்லை.

🌺🌺🌺🌺🙏🌺🌺🌺🌺

*அஉம் அகத்திய மஹரிஷி பாதம் காப்பு*

🌸🌸🌸🌸🙏🌸🌸🌸🌸

*எத்தனை ஆசிகள் யாங்கள் வழங்கினாலும், தனத்தையே குறிகொண்டு வாழ்பவரை யாங்கள் கரை சேர்ப்பதில்லை.
*
சிறப்பான சிந்தை, உயர்ந்த குணம், எவருக்கும் உதவுதல், எதிரிக்கும் உதவுதல் என்ற மனம், மனத்தால் அணுவளவும் சூது இல்லாமல் இருப்பது, வாரி வாரி வழங்குவது போன்ற குணங்கள், எம்மை அருகே சேர்க்குமப்பா. மனம் ஒன்று நினைக்க, வாக்கு ஒன்று சொல்ல, செயல் ஒன்று செய்ய வரும் மாந்தர்களை யாங்கள் நன்றாக அறிவோம். அப்பனே! சரணாகதி அடைந்தால்தான் தேற முடியும். எம்மை பணிந்தாலும், பணியாவிட்டாலும் இறையை பணிய வேண்டும். எம்மை ஏற்றாலும், ஏற்காவிட்டாலும், *இறையை ஏற்கவேண்டும்.*
வெறும் வழிபாட்டை மட்டுமல்ல, சத்தியத்தை ஏற்கவேண்டும். ஏற்பதென்றால் மந்திர உருப்போடுவது மட்டுமல்ல, மனம் குன்றா தானம் அளிப்பதையும் ஏற்க வேண்டும். *எம்மிடம் கணிதம் பார்த்தால், இறையிடம் கணிதம் பார்த்தால், யாங்களும் கணிதம் பார்க்கவேண்டிவரும். *

-  அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

🌼🌼🌼🌼🙏🌼🌼🌼🌼

*அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக*

🌺🌺🌺🌺🙏🌺🌺🌺🌺