Tuesday, 24 December 2019

அடியவர் கேள்வி*:- அகத்திய மஹரிஷி ஜீவ நாடியில் *நாவடக்கம் கொள் மகளே/மகனே* என்று பலருக்கு உரைத்துள்ளார். அதன் ஆழமான பொருள் விளக்க வேண்டுகின்றேன்.

*அஉம் அகத்திய மஹரிஷி பாதம் காப்பு*


*அடியவர் கேள்வி*:-
அகத்திய மஹரிஷி ஜீவ நாடியில் *நாவடக்கம் கொள் மகளே/மகனே* என்று பலருக்கு உரைத்துள்ளார். அதன் ஆழமான பொருள் விளக்க வேண்டுகின்றேன்.

*பதில்*:-


*”எந்த மனிதனிடம், ஒருவன், தேவை இல்லாமல் விவாதம் செய்து, அபவாதம் செய்து, வேதனையை இவன் ஏற்படுத்துகிறானோ, அந்த மனிதனுக்கு, இலவச சேவையாக, இவன் செய்த பூஜா பலன்களையும், புண்ணிய பலன்களையும் தாரைவார்க்கிறான், என்பது ஆன்மீகத்தின் பேருண்மையாகும்.*
அகுதொப்ப, உண்மையை மனதில் கொண்டு, சினத்தை தவிர்த்து, மௌனத்தை கடைபிடித்தால், எப்படி *ஒரு கஞ்சன், தன் தனத்தை, பேழைக்குள்ளே வைத்து வைத்து பூட்டுகிறானோ, அப்படி, இவன் செய்த பூஜா பலனும், புண்ணிய பலனும், மௌனத்தால் வியம் ஆகாமல் இருக்கும்." *

- அகத்திய பெருமான் அருள்வாக்கு!

🌹🌹🌸🌸🙏🌸🌸🌺🌺

*பொதிகை வேந்தன் புகழ் ஓங்குக*

🌸🌸🌺🌺🙏🌺🌺🌸🌸