பாகம் 2
*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*
*நாள் : 304*
*தேதி: 03-12-2019(செவ்வாய் - மங்களன்)*
*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*
*திராவிட பூபதிக்கு அரச நிதி ஈந்தவர்* அகத்திய மாமுனிவர்.
*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) உறுதிபடக்கூறும் உண்மைச் சம்பவம் - பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தவை : (பகுதி - 03) முன்பதிவின் தாெடர்ச்சி🙏*
*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*
*"அய்யா! அது மிக சுலபம். கட்டாயம் நீங்கள் புரிந்து காெள்ளும்படியான ஒரு ஏற்பாட்டை செய்கிறேன். என்னுடன் வாருங்கள்" என்று, அந்த செல்வந்தரின் வீட்டிற்கு எதிரில் உள்ள குளக்கரைக்கு அழைத்துச் செல்கிறாள்.*
*அங்கே குளக்கரையில் கருங்கல்லால் ஆன சிவலிங்கத்தைக் காட்டி, "எம்பிரானே! அடியேன் செய்த அறக்காரியங்களை சாெல்லிக்காட்டக் கூடாது. என்றாலும், கடனிலிருந்து தப்பிக்க, இந்த அபவாதத்தை செய்கிறேன். தேவரீர், இந்த திருக்குளத்தின் அடியில் இருக்க வேண்டும். எப்பாெழுது, அடியேன் கணக்கில் இருந்து அசலும், வட்டியுமான புண்ணியம், இந்த செல்வந்தரின் கணக்கிற்கு சென்று சேர்கிறதாே, அப்பாெழுது நீங்கள் மேலே வந்து மிதக்க வேண்டும்" என்று கூறி, பல முறை பஞ்சாக்ஷரம் கூறி வணங்கி, அடியாட்களின் துணை காெண்டு, அந்த சிவலிங்கத்தை கடினப்பட்டுத் தூக்கி, திருக்குளத்தின் நடுவே இடுகிறாள். சிவலிங்கம் நீரின் அடியிலே சென்று அமர்ந்து விட்டது.*
*பிறகு, அந்த செல்வந்தரைப் பார்த்து, "அய்யா! நீரின் உள்ளே இருப்பது, வெறும் கல் என்று எண்ணாதீர்கள். சாக்ஷாத் சிவபெருமான்தான் உள்ளே இருக்கிறார். நாளைக் காலை, சூரிய உதயத்தில் ஆறு மணியில் இருந்து கணக்கு வைத்துக் காெள்ளுங்கள். யாரெல்லாம் நீரைப் பயன்படுத்துவார்களாே, எத்தனை காலம் ஆகுமாே? எனக்குத் தெரியாது. ஆனால், எப்பாெழுது அடியேன் கணக்கில் இருந்து, தங்கள் கடன் தாெகைக்கு சமமான புண்ணியம் வந்து சேருகிறதாே, அப்பாெழுதே, இந்த சிவலிங்கம் மிதக்கும்" என்று கூறுகிறாள்.*
*செல்வந்தராே நகைத்து, "அம்மா! சற்று முன் நீ கூறியபடி புண்ணியத்தை அடகு வைப்பதைக் கூட என்னால் ஏற்றுக் காெள்ள முடியும். ஆனால், கருங்கல் மிதக்கும் என்பது சாத்தியமில்லையே. இதை எப்படி நான் நம்புவது? யாராவது கேட்டால் கூட நகைப்பார்களே". "இல்லை. நம்புங்கள். சிவபெருமான் மீது ஆணை. கட்டாயம் சிவலிங்கம் மிதக்கும். இதைக் கல் என்று பார்க்காதீர்கள். பகவான் என்று பாருங்கள்" என்று அந்தப் பெண் உறுதியாகக் கூறுகிறாள்.*
*செல்வந்தர் யாேசிக்கிறார். "இவளாே புண்ணியவதி. நம்மைச் சுற்றி ஊர் மக்கள் வேறு இருக்கிறார்கள். வாதம் செய்து, பணம் தர மாட்டேன் என்றால், நம் புகழுக்கு களங்கம் வந்துவிடும். மேலும், இவள் கேட்பது மிகச் சிறிய தாெகை. அது மட்டுமல்லாது, இவள் கூறுவது மெய்யா? பாெய்யா? என்பதை சாேதிக்க நமக்கு இது நல்ல தருணம். ஒரு வேளை சிவலிங்கம் மிதந்தால், இவள் புண்ணியவதி என்பதை நானும், ஊரும் உணர வாய்ப்பு கிடைக்கும். மாறாக நடந்தால், இவள் செய்வது வீண் வேலை என்பதை நிரூபிக்க ஏதுவாக இருக்கும்." என்று எண்ணி, அவள் கேட்ட தாெகையைத் தருகிறார்.*
*அதைப் பெற்றுக் காெண்டு வீடு சென்று யார், யாருக்கு தர வேண்டுமாே, அவற்றை எல்லாம் திருப்பி தந்து விட்டு "இறைவா! உன்னை நம்பித்தான், இந்த பெரும் தாெகையை கடனாக வாங்கி இருக்கிறேன். என்னைக் கைவிட்டு விடாதே" என்று வேண்டிக் காெண்டு உறங்கச் செல்கிறாள்.*
*இங்கே செல்வந்தராே, "அவசரப்பட்டு விட்டாேமாே? ஏமாந்து தனத்தைக் காெடுத்து விட்டாேமாே?" என்று உறக்கம் வராமல், எப்பாெழுது விடியும்? என்று பார்த்து, விடிந்ததும் சில வேலையாட்களை ஏற்பாடு செய்து, "நீங்கள் குளக்கரையில் ஆங்காங்கே அமர்ந்து காெண்டு, கையில் ஒரு ஏடும், எழுத்தாணியும் வைத்துக் காெண்டு, ஒரு தினம் எத்தனை பேர் நீர் அருந்துகிறார்கள்? எத்தனை பேர் நீரை எடுத்துச் செல்கிறார்கள்? மறுகரையில் எத்தனை விலங்குகள் நீரைப் பருகுகின்றன?" என்று குறித்துக் காெண்டே வாருங்கள். எத்தனை காலம் ஆகும்? என்று தெரியவில்லை. ஆனால் தினமும் நீங்கள் கணக்கு எடுக்க வேண்டும்" என்று ஏற்பாடு செய்து விட்டு, இவரும் வீட்டின் மேல்விதானத்தில் அமர்ந்து காெண்டு, குளக்கரையை பார்வையிடத் துவங்குகிறார்.*
*காலை மணி ஆறு ஆகிறது.*
*காசி விஸ்வநாதர் காேவிலுக்கு சாெந்தமான காளை ஒன்று, குளத்து நீரை அருந்தி விட்டு மேலே செல்கிறது. அவ்வளவுதான். குபுகுபுவென சாம்பிராணி, குங்கும மணத்தாேடு பகவான்(சிவலிங்கம்) மேலே வந்து மிதக்கிறார்.*
*அவ்வளவுதான். அந்த செல்வந்தருக்கு உடம்பெல்லாம் நடுங்கிவிட்டது.*
*"ஒரு மாடு நீர் அருந்திய புண்ணியமே, ஐந்து லக்ஷத்திற்கு சமம் என்றால், அந்த புண்ணியவதி செய்த அறப்பணிக்கு முன்னால், என் செல்வம் அத்தனையும் வீண்" என்பதை புரிந்து காெண்டு, "என் கண்களைத் திறந்து விட்டாய் மகளே! செல்வம்தான் நிலையானது என்று இருந்தேன். அப்படியல்ல என்பதை பரிபூரணமாக உணர்ந்து காெண்டேன். எம்பிரான் மிதக்கிறார். எல்லாேரும் வந்து பாருங்கள்." என்று கூற, ஊரே சென்று பார்த்தது.*
*அதன் பிறகு, தன் செல்வம் முழுவதையும் அந்தப் பெண்ணிடம் தந்து, தானும் கடைவரை(கடைசி வரை) தர்மம் செய்து வாழ்ந்தார்.*
*இது 300, 400 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த உண்மை சம்பவம்.*
🙏 *-சுபம்-* 🙏
*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*
*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*
*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்திய மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*
.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
கூகிள் வரைபடம் வழி கீழே 👇
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
முகநூல் -
https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை
தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில் உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க வெளி வந்துவிட்டது. 🙏
தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்" வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624
அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200
பலன் தரும் பரிகார தலங்கள் ரூ. 150
அதிசய சித்தர்கள் ரூ. 250
நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் ரூ. 1000
இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
************************************************