Sunday, 8 December 2019

எனது அனுபவங்கள் 08.12.2019

நாங்கள் எல்லோரும் மாடியில் உள்ள வீட்டில் உறங்க செல்லும் முன் கீழ் வீட்டை பூட்டும் போது ஏதாவது ஒரு சிறிய சீரோ வாட்ஸ் பல்பு எரிய விட வேண்டும் என்று நினைத்ததுண்டு. ஆனால் பல்பு ஹோல்டரில் மின்சாரம் வரவே இல்லை. நேற்று இரவு அந்த மின்சார டப்பாவை தட்டி பார்த்தேன், அது உடைந்து இருந்தது. அதற்கு முந்தைய நாள் வேறு ஒரு பல்பு மாட்டி பார்த்தேன், அதுவும் எரியவில்லை. வெளியே செல்லும் போது ஒரு புது holder வாங்கி வந்தாவது போட வேண்டும் என்று எண்ணினேன்.  ஆனால் அதுவும் மறக்கடிக்கப்பட்டது. இன்றும் இரவு படுக்கும் முன் சிறிது வருத்தத்துடன் அகத்தியரை இப்படி இருளில் ஆழ்த்தி விட்டு செல்கிறோமே என்று நொந்து கொண்டு இருக்கும் போது, என் மனதினுள் அய்யன் வந்து, வீட்டின் வெளியே இருக்கும் டூ way switch ஐ யும் tube light ஐ யும் எரிய விட்டு குழப்பி, என் கைகள் தவறுதலாக அந்த அறியாத பல்பின் switch ஐ போடுமாறு செய்தார். என்ன ஆச்சரியம் அந்த பல்பு உடனே எரிந்தது. அகத்தியரிடம் கேட்டவுடன் உடனே நடந்தது, உடனடி தீர்வு... அன்றைக்கு 3 மாதம் முன்பு இப்படி தான் பைக்கை ரிப்பேர் செய்து கொடுத்தார். மீண்டும்  10 நாள் முன்பு வண்டியில் ஸ்டார்டிங் பிரச்சனை இருந்தது, எஞ்சின் சுமார் 2km தூரம் சென்ற பிறகே சூடானவுடன் சீராக ஓடும், அது வரை accelerator குறைத்தால் அணைந்து விடும்... இதை நினைத்து நொந்து கொண்ட போது திடீரென்று 10 நாள் முன்பு இந்த பிரச்சனை சரியானது, அதே ஆபீஸ் நிறுத்தும் இடம், அதே குளிர் காலம், அதே வண்டி தான், தானாக எப்படி சரியானது. இது இரண்டாவது முறை இவ்விதம் நடந்தது. சென்ற முறை வண்டி பழுதானதால் மிக சிரமப்பட்டு மழை வெள்ளத்தில் சிக்கி பேருந்தில் கடின முயற்சியுடன் வீடு வந்து சேர்ந்தேன். மறு நாள் எவ்வளவு முயற்சி செய்தும் மெக்கானிக் வந்து சேரவில்லை ... மனம் விட்டு நொந்த போது, உள்ளிருந்து குரல். ...இப்போது சென்று வண்டியை இயக்கவும்  என்று... இயக்கினால் ஒரே முயற்சியில் இயங்கியது..... இன்றைக்கு எரியாத பல்பு உடைந்த மின்சார டப்பா.....