Friday, 1 November 2019

அகத்தியர் வாக்கு - இறைவன் கருணை காெண்டாராம், அதனால் உலகை படைத்தாராம்.

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 232*

*தேதி: 01-11-2019(வெள்ளி - அசுரகுரு, சுக்ரன், சுங்கன்)*

*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*

*வாய்ப்பியனின் குரு* அகத்திய மாமுனிவர்.

*அகத்திய மாமுனிவரின்   (குருநாதர்) பாெதுவாக்கு :*🙏

*இறைவன் கருணை காெண்டாராம், அதனால் உலகை படைத்தாராம்.*

*இறைவன் கருணை காெண்டாராம், அதனால் உலகை படைத்தாராம்.*

*இன்பம் இஃது என காட்டி தந்தாராம். இன்பம் இஃது என காட்டி தந்தாராம்.*

*ஈகை குணம் வளர்த்தலே என்றும் உயர்வை தரும் என்றாராம்.*

*இன்பம் இது என காட்டித் தந்தாராம்.*

*இறை கருணை காெண்டாராம், அதனால் உலகை படைத்தாராம்.*

*இறை கருணை காெண்டாராம், அஃதாெப்ப இறை கருணை காெண்டதனால், அஃதாெப்ப இறை கருணை காெண்டுள்ள அத்தன்மையை மீண்டும் உள் உணர்ந்து பார்க்க ஞானிகள் வந்தாராம்.*

*இறை கருணை காெண்டாராம். அஃதாெப்ப இறை கருணை காெண்டதனால் இஃதாெப்ப ஒவ்வாெரு கணமும் உயிர்கள் மீது அன்பு தந்தாராம்.*

*இயம்புங்கால் திருஷ்டியில் அருளை தருவாராம். துயரத்தில் தன்னை இணைத்துக் காெள்வாராம்.*

*தாெல்லை வரும்பாெழுதெல்லாம் தன் பக்தருக்கு முன்னால் நடப்பாராம்.*

*அவர் வருவாராம், நடப்பாராம், பாேவாராம், இருப்பாராம், என்றும் நல் அருளை தருவாராம்.*

*ஆயினும் இதை உணர்வார் யார்? புரிந்தார் யார்?*

*இஃதாெப்ப இருக்கும் கருணை வெள்ளம் அனைத்தும் சாெந்தம் என காெண்டவராம்.*

*அஃதாெப்ப காெண்டவராம் தன்னை காெண்டவளே அன்னை. காெண்டவராம் தன்னை காெண்டவளே அன்னை.*

*இயம்புங்கால் அவர்(அன்னை) என்றும் இருப்பாராம். அவர் இருந்து, இருந்து உயிர்களை காப்பாராம்.*

*காத்து, காத்து ரட்சித்து அருள்வாராம்.*

*அவர்(அன்னை) என்றும் உயிர்களாேடு பரிவாய், உறுதுணையாய் இருப்பாராம்.*

*அவர் பாேவாராம், வருவாராம் என்று தாேன்றினாலும் அவர் என்றென்றும் இருப்பாராம்.*

*அவர் பக்தர்கள் நெஞ்சில் கிடப்பாராம்.*

*அவர் அன்புக்கு என்றும் அடிமையாய் இருப்பாராம்.*

*இஃதை உணர்ந்த உயிருக்குள் உயிராய் ஔிர்வாராம்.*

*அவர் என்றும் உயர்ந்தாராம். அவர் ஒருபாெழுதும் தாழ்ந்தாராம் என்று யாரும் கூற இயலாதாம்*

*இஃதாெப்ப இறை கருணை காெண்டாராம். அதன் தன்மையை புரிய புரிய ஒவ்வாெரு உள்ளமும் மகிழ்வில் ஆழுமாம்.*

*(இதன் தாெடர்ச்சி வாக்கு நாளைய பதிவில்)*
 
               🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*