Wednesday, 4 September 2019

சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள் - அபானன் செயல்பாடு

*அஉம் அங்கயத்தின் மாமுகங்கொள் கோமான் பாதம் காப்பு*

*அஉம் அந்தமிலா மாயோன் தனக்கிளைய வல்லி, மாமயிலோன் தாயே, ஆதி பராபரை அம்பிகையின் பாதம் காப்பு*

*அஉம் வள்ளி தெய்வானை உடனுறை சேவல் கொடியோன் பாதம் காப்பு*

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

🌹🌸🌺🌸🌹🌺🌸🌹🌺

*சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்
*

இயற்கை உபாதைகளான, உடல் கழிவுகள் உடலைவிட்டு சரியான நேரத்தில் வெளியேற, அபானன் விரிந்து செயலாற்றுகிறது. எந்த வாயுவும், விரிவடைந்தால், உடலுக்குள் மிகுந்த சூட்டை உருவாக்கும். அபானன் விரிவடைந்து கழுத்து முதல், கால் வரை பரவி நிற்கும். அதை உடனேயே குளிரவைக்கவில்லை எனில், வேறு சில பிரச்சினைகளை கிளப்பிவிடும், என்றறிந்த பெரியவர்கள், *கழிவறைக்கு சென்று வந்த பின், கால்களில், கைகளில் நீர்விட்டு கழுவி, பலமுறை வாய் கொப்பிளிக்க வேண்டும் என உரைத்தார்கள். அப்படி குளிர்ந்த, சமனான நீர்விட்டு சுத்தம் செய்து கொள்கிற பொழுது, நாம் அறியாமல், அபானனை குளிர்வித்து உடல் இயக்கத்தை காப்பாற்றுகிறோம், என்பதே உண்மை.* இதையே, ஒரு சிலர் ஆசாரமாக, பாவித்து வருகிறார்கள்.

🌸🌹🌺🌸🌹🌺🌸🌹🌺
*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏