Saturday, 20 July 2019

ஆனிமாத முடிவில் ஏற்பட்ட, சந்திர கிரஹணத்துக்குப்பின், நல்லதை செய்கிற ஏழு கிரஹங்களும், ராகு, கேதுவின் பிடிக்குள் மாட்டிக் கொண்டுவிட்டது. இதனுடன், பஞ்ச பூதங்களும், அந்த இரு கிரகங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. இது, கார்த்திகை மாதம் முடியும் வரை தொடரும்.* ( ஜூலை15 - டிசம்பர் 15)

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

அகத்திய மஹரிஷிகள் அவர்களின் சித்தன் அருள் வலைதளத்தில் தற்போது உள்ள இக்கட்டான காலநிலை கூறித்து உரைத்த பதிவு. அனைவருக்கும் மற்றும் அனைத்து வலைத்தளங்களில் பகிரவும்.

*வணக்கம் அகத்தியர் மஹரிஷிகள் அடியவர்களே!*

சமீபத்தில், அகத்தியப் பெருமான், இறைவன் உத்தரவால், தன் சேய்கள் நலமாக வாழவேண்டும் என்பதற்காக, ஒரு அருள் வாக்கை அருளியுள்ளார். 

ஒரு அகத்தியர் அடியவர் அனு
ப்பித்தந்த, ஒலிநாடாவிலிருந்து, முக்கியமான விஷயத்தை, சுருக்கமாக, அடியேன் புரிந்து கொண்ட வரையில் கீழே தருகிறேன்.

*ஆனிமாத முடிவில் ஏற்பட்ட, சந்திர கிரஹணத்துக்குப்பின், நல்லதை செய்கிற ஏழு கிரஹங்களும், ராகு, கேதுவின் பிடிக்குள் மாட்டிக் கொண்டுவிட்டது. இதனுடன், பஞ்ச பூதங்களும், அந்த இரு கிரகங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. இது, கார்த்திகை மாதம் முடியும் வரை தொடரும்.*

( ஜூலை15  - டிசம்பர் 15)


இந்த காலகட்டத்தில், நிறைய அனிச்சையாக, சம்பவங்கள் நடக்கும். *மனித மனதை, எண்ணங்களை விஷப்படுத்தி, தனிப்பட்ட வாழ்க்கையில், குடும்பத்துக்குள், பொது வாழ்க்கையில், வேண்டாத விஷயங்களை நடத்திவைக்கும்.*

*இது, பக்தி மார்கத்தில், சித்த மார்கத்தில், மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்களையும் தடுமாற வைக்கும். தேவை இல்லாத கெட்ட பெயர், பேச்சு, தூற்றுதல், போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்கும்.*

இவ்வுலகில், நடக்கும் அனைத்தும் இறைவன் அருளால் நடப்பதால், *எவ்வளவோ பக்குவத்துடன் இருந்தாலும், சேய்கள் மனம் கலங்கத்தான் வேண்டிவரும்.*

ஆகவே, *இறைவன் உத்தரவால், அனைத்து சித்தர்களும், ரிஷிகளும், முனிவர்களும், அனைத்து ஆத்மாக்களையும், இந்த நேரத்தில், அருகிலிருந்து, வழி நடத்தி, காப்பாற்ற அனுப்பப்பட்டுள்ளனர்.*

நாம் காப்பாற்றப்பட்டு, வழி நடத்திட, என்ன செய்ய வேண்டும் என ஒரு வழியையும் அகத்தியப் பெருமான் அருளியுள்ளார்.

*இறைவனை, ஜோதி ரூபமாக, (அதுவே கல்யாணக் கோலம்), தினமும் காலையிலும், மாலையிலும் அவரவர், வீட்டில் ஒரு விளக்கேற்றி வைத்து, முடிந்தவரை, குறைந்தது ஒரு நாழிகையாவது, த்யானம் செய்யச் சொல்கிறார்.*

நடப்பது எதுவாயினும், மனதுக்கு பிடிக்காததாக இருந்தாலும், பொறுமையை கைபிடித்து, பெரியவர்கள் இருக்கிறார்கள் என்ற திடமான நம்பிக்கையில், இறைவனிடம் அர்ப்பண மனோபாவத்துடன் இருக்கச்சொல்கிறார்.

🙏நன்றி:- அகத்திய மஹரிஷிகளின் சித்தன் அருள் வலைதளம் 🙏

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*

https://youtu.be/6Wnr4VWw_BY