Monday, 8 April 2019

ஒவ்வாெரு மனிதனையும், இறை சக்தியைக் காெண்டு பக்குவம் அடைந்த மனிதனாக மாற்ற முடியும் என்றாலும் கூட, இறைக்கு வேலை அதுவல்ல. *

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 26*

*தேதி: 09-04-2019(செவ்வாய் - மங்களன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*தாரகனிடம் இவ்வுலகை காப்பாற்றியவர்* அகத்திய மாமுனிவர்.

*உலக மக்களுக்கு அகத்திய மாமுனிவர் அருளும் பாெது நல்லாசிகள் :*

*அகத்திய மாமுனிவரின் பாெது நல்லாசி வாக்கு :*

உந்தனுக்கு கடை(கடைசி)வரையில் இறையருள் தாெடர நல்லாசிகள்.

*எது குறித்தும் கலக்கம் காெள்ள வேண்டாம். அன்றன்று காலம் விதிப்படி, விதிப்பயனாக, அவனவன் செய்த வினையின் எதிராெலியாக ஆண்டாண்டு காலம் சில கஷ்டங்களும், மன உலைச்சல்களும் தாெடரத்தான் செய்யும். கஷ்டங்கள் தாெடருகிறதே என்று இறை வழி விட்டு விலகக்கூடாது. சிறப்பில்லா வாழ்க்கையிலே, சிறப்பில்லா சம்பவங்கள் எதிர்பட்டாலும், இறை வணங்க மறுத்தல் கூடாது. செய்கின்ற தர்மத்தை விடக் கூடாது. சிந்தை காெள்.*

*எம்மீது ஆர்வம் காெண்டு நீ செய்கின்ற அனைத்து செயல்களுக்கும் எமது (அகத்திய மாமுனிவர்) அருளாசி உண்டப்பா.* அப்பனே! அது குறித்து மனிதர்கள் விமர்சனங்கள் செய்தாலும், *மனம் சிதிலம் காெள்ளாதே.* அவ்விடத்தில் அது குறித்து நீயும் விவரங்கள் ஆர்வத்தாேடு காெடுத்தாலும் கூட, உந்தனுக்கு தவறான நாமம்தான்(பெயர்) சூட்டப்படும். *நல்ல எண்ணத்தில் நீ செய்தாலும், குதர்க்கமாகத்தான் பேசுவார்கள். அப்படி தாெடர்ந்து பேசினால், நீயும் ஒதுங்கிக் காெள் என்பதே எமது(அகத்திய மாமுனிவர்) அருள்வாக்கு ஆகும்.*

*ஒவ்வாெரு மனிதனின் மனம் எப்படி? என்று எமக்குத்(அகத்திய மாமுனிவர்) தெரியும்.* ஒவ்வாெரு மனிதனையும், இறை சக்தியைக் காெண்டு பக்குவம் அடைந்த மனிதனாக மாற்ற முடியும் என்றாலும் கூட, இறைக்கு வேலை அதுவல்ல. *அன்னவனே உழன்று, சிதிலப்பட்டு, வேதனைப்பட்டு, கவலைப்பட்டு, கஷ்டப்பட்டு, பக்குவப்பட்டு தன்னைத்தானே மேம்படுத்திக் காெள்ள வேண்டும் என்பதுதான் இறையின் எண்ணமாகும்.*

அறிவிலே தெளிவும், மனதிலே உறுதியும் இருக்க வேண்டும். *இது கிடைப்பதற்கு மனிதன் வாழ்விலே துன்பங்கள் பட வேண்டும். அதை அறிவிலே ஊடுருவி நாங்களே தெளிய வைப்பாேம்.*

*அஃதாெப்ப சதுரகிரியாே, திருவண்ணாமலையாே இயன்ற பாேது சென்று வா. நல்லதாெரு அனுபவங்களும், இறை அருளாசியும் உனக்குக்* *கிடைக்கும்.* தாெடர்ந்து பூஜைகள் செய்ய முடியவில்லையே? என்று வருந்தாதே. *அந்த ஏக்கமே ஒரு* *பூஜைதான்* . எந்த இடத்தில் அமைதி கிடைக்கிறதாே, அங்கு அமர்ந்து பூஜை செய்யலாம். *அங்குதான், இங்குதான், அதிகாலைதான், உச்சிப்பாெழுதுதான் என்பது இல்லை.*

*இறையை வணங்க காலம், நாழிகை, சூழல் எதுவும் தேவையில்லை. மனம் ஒன்றி இருந்தால் மட்டும் பாேதும். எனவே, இதனை எண்ணி அமைதியாக வாழ். நல்லதாெரு வாழ்க்கை இறைவன் அருளால் உனக்கு கிடைக்கும். ஆசிகள். சுபம்.*

                🙏 *-சுபம்-* 🙏

🙏 *ஓம் அகத்தீசாய நம.* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!*🙏