Friday, 5 April 2019

அதர்வணம்

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

*அகத்திய மஹரிஷிகள் அடியவரின் கேள்வி*
4ஆவது வேத்த்தை சித்தன் வழியில் அடியேனுக்கு விளக்க வேண்டுகின்றேன்?

*சித்தன் பதில்*:- சித்தர்கள், வாமாசாரத்தை (அதர்வண வேதத்தை) மருத்துவத்துக்காக மட்டும் உபயோகப்படுத்துவார்கள். அவர்களுக்கு எல்லா பிரயோகமும் கைவந்த கலை. எங்கு எப்பொழுது எதை செய்யவேண்டும் என்றாலும் கூட, *இறைவனின் அனுமதியுடன்தான் செய்வார்கள்.* அவர்கள் இறைவனின் செல்லப் பிள்ளைகள் மட்டுமல்ல, *இறைவனின் அபிமான கரங்கள். அவர்கள் வழிதான், இறைவன் இன்றும் பல அரிய திருவிளையாடல்களை,  நடத்துகிறான்.* மந்திரவாதம், செய்வினை இவைகள் அவர்கள் முன் காணாமல் போய்விடும். *மனிதர்கள், ஒரு பொழுதும் அந்த பாதைகளில் சஞ்சரிக்கவே கூடாது.* இன்று வாமாசாரம் இத்தனை வளர்ந்து நிற்க, இந்த மனிதர்கள்தான் காரணம். ஒருவன் கர்மாவில் அது எழுதப்பட்டிருந்தாலும், அதை எதிர்த்து போராடி வாழவேண்டும், இறை அருளை பெறவேண்டுமே தவிர, *எந்த ஒரு ஜீவனுக்கும் எதிராக அதை பிரயோகிக்கக்கூடாது.*

சித்தன் பதில் தொடரும்.....


*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*