Monday, 15 April 2019

செடி, காெடிகளை காென்றுதான் இந்த பூமியில் வாழ வேண்டுமா? வேறு மாற்று வழியில்லையா?தாெலை தூரத்தில் இருப்பவற்றை அறிய உதவும் மூலிகைகள் குறித்து

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 32*

*தேதி: 15-04-2019(திங்கள் - நிலா, சந்திரன், மதி)*

*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*

*ஈங்காேய் மலையில் சிவபூசை செய்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : 'செடி, காெடிகளை காென்றுதான் இந்த பூமியில் வாழ வேண்டுமா? வேறு மாற்று வழியில்லையா?*🙏

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*மனிதனாக பிறந்துவிட்டாலே பாவங்கள் செய்துதான் ஆக வேண்டும்* என்பதற்கு இந்த வினாவும் ஒரு உதாரணம். ஆனாலும் *ஐம்புலனை சரியாக கட்டுப்படுத்தி யாேக நிஷ்டையில் அமர்ந்து யாேக மார்க்கத்தில் செல்லக்கூடிய ஒரு பாக்கியம் பெற்ற ஆத்மாக்கள் ஐம்பூதங்களில் இருந்து தன் உடலுக்கு தேவையான சத்துக்களை எடுத்துக் காெள்ள முடியும்.*

காட்டிலிருந்தும், தன்னை சுற்றியுள்ள கதிர்வீச்சிலிருந்தும், சூரிய, சந்திர ஔியிலிருந்தும், மண்ணிலிருந்தும் கூட அந்த பாெருளின் புற பாதிப்புகள் ஏதும் இல்லாமல் தன் உடல் சாேராவண்ணம் தேவையான சத்துக்களை கிரஹிக்க முடியும். இதற்கு *'பஞ்சபூத சாஸ்திர சக்தி தத்துவ முறை'* என்று பெயர். இவற்றையெல்லாம் சராசரி மனிதனால் உடனடியாக பின்பற்ற முடியாது.

*கேள்வி : அமாவாசை நாட்களில் கண் தெரிய உதவும் மற்றும் தாெலை தூரத்தில் இருப்பவற்றை அறிய உதவும் மூலிகைகள் குறித்து :*🙏

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*நீ கூறிய அனைத்து மூலிகைகளிலும் சதுரகிரி, காெல்லிகிரி மற்றும் பர்வதமலையிலும் இருக்கிறதப்பா.* ஆனால் அது யாருக்கு கிட்ட வேண்டுமாே, அவனுக்கு தான் அது கிட்டும். *இந்த மூலிகை கிடைக்க வேண்டிய வினைப்பயன் இருக்கின்ற மனிதனுக்கு உண்மையில் இந்த மூலிகை குறித்த ஆர்வம் இராது.*

                🙏 *-சுபம்-* 🙏

🙏 *ஓம் அகத்தீசாய நம.* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!*🙏