Wednesday, 10 April 2019

சித்தர்கள் ஆட்சி

*சித்தர்கள் ஆட்சி!!!!?*



பூமியில் *சித்தர்களின்* ஆட்சி துவங்குகிறது. கிபி 2017 முதல் கிபி 2037க்குள்  நமது பூமியில் *சித்தர்களின்* ஆட்சி துவங்குகிறது.

*சித்தர்கள்* பாரதத்தை மையமாகக் கொண்டு இந்த பூமியை ஆட்சி செய்யப் போகிறார்கள். பழனி மலையில் இருக்கும் நவபாஷாண முருகனின் சிலை சிதைந்து விட்டது நம் அனைவருக்கும் தெரியும். இந்த சிலையை *போகர்* நிறுவினார்.  அவர் இதேபோல் 9 நவபாஷாண சிலைகளை உருவாக்கி பழனி மலையும் அதைச் சுற்றியுள்ள சில இடங்களிலும் மறைத்து வைத்திருக்கிறார். அதேபோன்று  ஒரு முருகன் சிலை பழனி மலையில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஒரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு  இருக்கிறது.  அதை ஒரு நாகம் காவல் காக்கிறது.  கிபி 2017 முதல் கிபி 2037 க்குள்  *போகர்* விரும்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வேறு ஒரு சித்தரால் புதிய நவபாஷாண சிலை நிறுவப்படும். அவ்வாறு நிறுவப்பட்டதும் பாரதம் ஒரு வல்லரசு நாடாக மாறிவிடும்.

நமது பூமியில் *சித்தர்கள்* ஆட்சி துவங்கும் முன்பு *சித்தர்கள்* ஒவ்வொருவராக தவத்தில் இருந்து எழுந்து வர துவங்கியுள்ளனர் 2004 ஆம் ஆண்டில் உருவான மாபெரும் ஆழிப்பேரலை சுவாமி *காகபுஜண்டர் சித்தரின்* தவம் கலைந்து எழுந்ததற்கான ஆதாரமாக தினத்தந்தியில் ஒருவர் முழு பக்க கட்டுரையாக எழுதினார் இந்தியா மலேசியா சிங்கப்பூர் இந்தோனேசியா முதலான நாடுகளில் கரையோரங்களில் மனிதத்தன்மையற்ற குலை நடுங்கச் செய்யும் பல குற்றங்களில் விளைவாக கடலுக்குள் பல்லாயிரம் ஆண்டுகளாக தவத்தில் ஈடுபட்டிருந்த *காகபுஜண்டர்* தவம் கலைந்து சீற்றத்துடன் எழுந்தார் இதேபோல *போகர்* தவம் கலைந்து எழும்போது சென்னை மாநகரம் கடல் அலைகளால் கடுமையாக பாதிக்கப்படும்.

 தென்னிந்தியா இரண்டு தீவுகள் ஆக மாறும். கடற்கரையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் 100 கிலோ மீட்டர் உயரம் அலைகள் எழும்பி நகரங்களை நாசமாக்கிவிடும்.  700 கிலோ மீட்டர் வேகத்திற்கு புயல் வீசும்.

புயல் என்பது பூமிக்குள் தவம் செய்யும் சித்தர்கள் ரிஷிகள் முனிவர்கள் மேலே வரும்போது பூமிகளையும் அவர்களின் சக்தியின் வேகங்களைக்கொண்டு வரும்.  கல் மழை பொழியும்.  புதுப்புது வியாதிகள் மனிதனை தாக்கும். மலையடிவாரங்களில் உள்ள பல கிராமங்கள் அழியும். மொத்தத்தில் பேரழிவு மிகக் கடுமையாக இருக்கும்.

இந்த மாற்றங்கள் கிபி 2017 முதல் கிபி 2037க்குள் நடந்து முடிந்து விடும். அணைக்கட்டுகள் உடைந்து மின்சாரம் அறவே இருக்காது. இயற்கையின் சீற்றத்தால் மக்கள் தொகை பெருமளவு குறைந்துவிடும். நிலத்தில் அழிவு ஏற்படும்போது *கொங்கணவர்* தோன்றுவார்.  120 வருடம் வரை கொங்கணவர் ஆட்சி ஏற்படும்.

நேர்மையும் சத்தியமும் இருக்கும்.  தெய்வீகம் சேரும்.  காகித நோட்டுக்களே  இருக்காது.  தங்க நாணயங்கள் புழக்கத்துக்கு வந்து விடும். பல மேலை நாடுகள் அனைத்தும் பொசுங்கி  போய் விடும். அசுர சக்திகளை கல்கத்தா காளி அப்படியே அடக்கி ஒடுக்கி விடுவாள். பிறகு இந்த பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய பிரத்தியங்கரா தேவியினுடைய சக்தியானது *ஞான சித்தர்* உடைய ஆத்ம சக்தியின்  ஒளிப்பிழம்பாக தெரியும்.  இதனை *கமலமுனி நாடி* சூட்சுமமாக வெளிப்படுத்தியுள்ளது. 

இனி வரக்கூடிய காலமானது பிரம்மாவிடமிருந்து ஆஞ்சநேயரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. ஆஞ்சநேயர் தான் இப்போதைய பிரம்மா.  ஆஞ்சநேயர் உடைய செயலை முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறார் எல்லாம் வல்ல இறைவன். ஆஞ்சநேயர் மேலே இருக்கிறார். அவருடைய சூட்சும சக்தியோ  *ஞான சித்தர்* உடைய சரீரத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  இதை யாராலும் உணர முடியாது.

2037ல் தான் *ஞான சித்தரை* உலக நாடுகள் அனைத்தும் ஒப்புக்கொள்ளும். *இந்தியாதான்* உலகத்திற்கே  வல்லரசு ஆக போகிறது. உலகமே அதனுடைய ஆட்சியின் கீழ் வரப்போகிறது.  இதனை ஞானத்தினால் மட்டுமே உணரமுடியும். வெளி ஆற்றலால் ஒருபோதும் உணர முடியாது.


ஆனால் உலக நாடுகள் அனைத்தையும் இந்தியா தனது பாதத்தால் நசித்துக்கொண்டு ஆட்சி புரிய போகிறது. 2027ல் இருந்து உலகமே இந்தியாவிற்கு அடிமையாக போகிறது இதனை எல்லோரும் காலப்போக்கில் உணர்வார்கள்.

ஏனென்றால் மேலைநாட்டில் எல்லாம் மதம் என்ற கர்வத்தினால் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்திற்கும் சவாலாக *இந்தியா* உலகிற்கே வழிகாட்ட போகிறது என்று விவேகானந்தர் அன்றே  சொல்லிவிட்டார்.

உலகிற்கே வழிகாட்ட போகிற ஒரு *ஜோதி சென்னையில்* இருந்துதான் தோன்றப் போகிறது என்று தீர்க்கதரிசனமாக சொல்லிவிட்டார். ஆம் அந்த *ஞான சித்தர் சென்னையிலிருந்து* உலகிற்கே வழிகாட்ட போகிறார்.  பல மேலை நாடுகள் காணாமல் போகப் போகின்றன.

18 மாபெரும் சித்தர்கள் அனைவரும் இந்த *ஞானசித்தர்* இடம் வந்து பேசுவார்கள். வேதத்தில் உள்ள அத்தனை சக்திகளும் 2027 க்கு பிறகு
அந்த *ஞான சித்தருடன்* ஆவாகனம் ஆகிவிடும். உலகம் இதை எதிர்காலத்தில் வரக்கூடிய காலகட்டங்களில் உணரும். வரக்கூடிய தத்துவங்களில்  எல்லாம் அவர் பெயர் காலத்தால் அழியாமல் இருக்கப்போகிறது.


2037 க்குப்பிறகு *அவரால்தான்* தமிழ்நாடு உலகிற்கே வழிகாட்ட போகிறது. அவர் யார் என்பதை *பரஞ்சோதி சுவாமிகளுக்கு *அகஸ்திய முனிவர்* காட்டியுள்ளார். இதை *கமலமுனி*  நாடி மூலமாக புரிந்து கொள்ளலாம்.

*பழனி, திருவண்ணாமலை, திருப்பதி* இந்த மூன்று கோவில்கள் தான் இந்த உலகிற்கே வழிகாட்ப் போகின்றன. அதற்கு தகுந்தாற்போல் இந்த 3 கோவில்களிலும் பல நடைமுறைகள் அடியோடு மாற்றப்படும்.

இதிலே அடிப்படையாக *சித்தர்கள்* சொல்வது என்ன?  உலகத்தில் எல்லா மாற்றமும் வரும். *இந்தியா* வழிகாட்டும். அதிலும் *சென்னை* மாநகரத்தில் இருந்துதான் இந்த ஆளுகை எல்லாம் நடக்கும் என்று சொல்லிவிட்டார்கள்.

இது எல்லாம் *சித்தர்கள்* மூலமாக நடக்கும் என்று சொல்லிவிட்டார்கள். இதெல்லாம் நீங்கள் நடக்க காண்பீர்கள். . அதனால் நீங்கள் தேட வேண்டியது உலகியல் பொருள்களையல்ல. ஆன்மா சம்பந்தப்பட்டது. அதனால் வரக்கூடிய காலத்தில் நீங்கள் கடவுளுக்காக வேலை செய்வதற்கு நியமிக்கப்படலாம். இது தெரிந்தால், உங்களுக்கு ஆன்மீகம் என்பது புரிந்து விடும்.


தகவல்: *கமலமுனி நாடி ஆராய்ச்சி மையம்*