Saturday, 12 January 2019

எனது ஜீவ நாடி - ஞான ஸ்கந்தர் பீடம், அந்தியூர்


நாடி வாசிப்பவர் - ஜெகதீஸ்வரன் அய்யா

பீடம்  - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் பீடம்

முருகன் அருள் பெறுபவர் - தி. இரா. சந்தானம், கோவை (91760 12104)

ஜெகதீஸ்வரன் அய்யாவின் குரு வாழ்த்து..........................

முருகர்நாடி துவக்கம்:
அனந்த நிலையோடும் அம்பலத்து ஆடுகின்ற அரசனை அடி பணிந்து போற்றி
கண்ட நன் மைந்தன் இவன் வந்தனன் முறையாக விடைகழி சேத்திரமது லாபம்

முறை கொண்டு லாபமதுகண்டதொரு வேலை இன்னவன் பூர்வ சென்ம அகத்தீசன் பிள்ளை

அகத்தியன் திரும நிலை போலும் அதே இவன் அவதாரம் இருந்ததாலும் இந்ததோர் ஜென்மம்.

அகத்தியன் தந்த சீடன், தனக்கு ஒரு முறையாகவே சேவையது செய்திடுவான்

பூர்வ நாடியதில் உரைத்திட்டேன், இல்லறவாசி, இரு சேய்களோடு இவன் வாழ்க்கை உண்டு.

இல்லறம் தன்னிலே இவனிருந்திட்டாலும் முறையாக துறவு இல்லை.

துறவு இல்லை, ஆனாலும் இல்லறத்துறவி போலும் முறையாக ஜோதிடம், சாத்திரம், வேதாந்தம், வைதீகம், சீர் புகழும் சித்தர்கள் தத்துவத்தை ஆய்வு செய்வான்.

கண்ட நண் முறையாக நல்லதோர் குருநாதனாய் அகத்தியனை இவன் வாய்க்கப்பெருவான்

அகத்தியர் சொல்படி நடப்பான்

அகத்தியனே வந்து வழி காட்டுவான்

லோபமுத்திரையும் உண்டு ஆதலால், மனைவி மாங்கல்ய பலன் உண்டு

சீர் புகழும் இரண்டு பிள்ளைகளும் சௌக்கியமாய் படித்து கரை ஏறும்.

இன்னவனும் கற்றவன். இன்னவனும் தொழில் செய்பவன்

இன்னவனும் சம்பாக்கியம் பெறுபவன்

இன்னவனும் சொந்த வீடு சொத்து சுகம் பெறுவான்.

மனைவியோடு மகிழ்ச்சியுடன் இரு பிள்ளைகளையும் கரை ஏற்றுவான்.

தவறேதும் இல்லை. அஞ்சேல்.

ஆயுள் அது பலன் தீர்க்கம்

முறையாக நண்மை, பலருக்கும் பயன்படத்தக்கவனாய், பரஉபகாரியாய்,

பலருக்கும் தொண்டு செய்பவனாய் இருப்பான்.

சீர் புகழும் போகன் ஆசீர்வாதம் உண்டு

பதஞ்சலி முனிவன் ஆசி இவனுக்கு உண்டு

அகத்தியனே இவனுக்கு குருநாதனாய் இருப்பதாலே சித்தர்கள் எவரை குறித்தாலும் அந்த சித்தர்கள் இவன் பக்கம் வந்து ஆசி இடுவதாலும், ஓர் சித்தன் என்று நினைத்திடாதே, ஒரு கோடி சித்தர் இவனுக்கு ஆசி இட தயாராய் இருப்பதால் இன்னவன் ஆன்மீக தொண்டு செய்வதற்கும், அகத்தியன் ஆலயம் கட்டுவதற்கும் பெரிய பெரிய பக்தர்கள் தொடர்பெல்லாம் வந்து சேரும்.

நற்கொண்டு நலமாக நன்மையது மனிதரூபத்திலே கந்தன் இவனுக்கு ஓரிடத்தில் தோன்றி காட்சி கொடுப்பேன்.

ஏற்கனவே இரு முறையும் கொடுத்துள்ளேன், இவன் அறியவில்லை.

நலமாக விடைகழி கந்தனை சேவிக்கும் நேரம் குராவடிக்கடியிலே காட்சி கொடுத்தேன்

ஒருதூதனை அனுப்பினேன் இவனை பார்க்க.

முறையாக நண்மை அகத்தியனும் வந்தான்

இருந்தாலும் அல்லவே கண்ணுக்கு தெரியாத காட்சி, இருப்பதும், சிலநாளும் இன்னவன் தனக்கே ஏழரை சனி காலம் அல்லவா, அண்ணவன் கந்தனவன் வரும் நேரம்,ஆன்மீக கதவுகள் இனி திறக்கும்.

அண்ணவன் இதுபோலும் சித்து விளையாட்டுகள் பல உண்டு.

கந்தனது ஆசீர்வாதம், பல கோடி சித்தனவன் இருப்பதாலே இன்னவன் லௌகீக பாதையிலும் பரிபூரணமாய் வாழ்வான்.

ஆன்மீக பாதையிலும் பரிபூரணமடைவான்.

ஆதலால் மண் சார்ந்தோ, மனை சார்ந்தோ, இடம் சார்ந்தோ முதலீடு கொள்.
முறையாக லாபமது உருவாகும்

கண்ட நன்மை குற்றம் போல அது இல்லை என்றிட்டாலும், ஏழரை சனி உள்ளான். சில கடன் வாங்க வைப்பான். ஆதலாலே வங்கி தனை நாடு.

நலமாக நன்மை, ஆன்மிகம் ஒருபுரமிருந்திட்டாலும் லௌகீக சேவையும் ஒர் கண்ணிலே வைத்துப்பார்.

நலமாக கந்த வடி வேலனே உரைப்பேன் இது. முறையாக ஆதலாலே உனக்கு அத்துணை சௌக்கியங்களும் தருவேன்

சீர்மைபெறும் முறையாக எல்லோராலும் புகழுகின்ற நிலை உனக்கு உண்டு
சோதிட மர்மங்களே உனக்கு வரும்.

பூர்வ ஜென்மத்தே நல்லதாம் நாடி சம்பந்த நூல்களெல்லாம் இன்னவனை இனி தேடி வரகூடும்.

நல்லதே அனுகூலம் இவனுக்கந்த பாக்கியங்களும் உண்டு, வாக்கு பலிதமும் உண்டு

சீருண்டு முறையாக ஓர் ஆசிரமம் அமைத்தும், அந்ததொரு ஆசிரமத்தை விருத்தி செய்வான்.
முறையாக கந்தனுக்கும் சேவை செய்வான்

நலமாக நன்மை நிலை கண்ட வேளை நல்லதொரு, பிள்ளைகள் குறித்த கவலை இல்லை, ஆனால் தாய் குறித்த கவலை அடிக்கடி வரும்.

தாயின் உடல் நிலை கவனம். தாயின் மன நிலை கவனம். தாயின் மன வேதனை இல்லாமல் பார்த்துக்கொள். தேவையில்லாமல் தொந்தரவு தருவது போல் இருந்திட்டாலும் அன்னவள் கூற்றும் உன்னை தொந்தரவு படுத்திடாது என்றிட்டாலும், உன் ஆன்மீக வளர்ச்சிக்கும், குல தெய்வமும் தாயும், இரண்டும் ஒன்று. சற்று கவனமாய் பார்த்துக்கொள்.

கண்ட நன் தாயாரின் ஆசீர்வாதம் அதிகம் பெறு. மனைவியையும் பெற வெய். பிள்ளைகளையும் பெற வெய். சுமூகமாக கொண்டு செல்ல வழிப்பார்.
நலமான லாபம் அதுவாகவும் இது போலும் எச்சரிக்கை அறிவிப்பதும் முறையாக நல்லதே.

நலமுண்டு லாபம். இது மட்டுமே உனக்கு சிக்கல், மற்ற அனைத்தும் சிறப்பாம்.

ஆதலால் முறையாக இன்னும் உனக்கு தவ வலிமை கூட்ட வேணும் என்பேன். முறையாகவே நண்மை, சித்தர் காடு சென்று வா.

நல்லதொரு ஓணம் மீன் தன்னில் செல் (திருவோணம் நட்சத்திரத்தில் செல்ல வேண்டும்). சீர்வகுல முறையாக இதற்க்கும் அதற்க்கும் ஒரு சம்பந்தம் உண்டாம். ஆதலாலே ஓணம் அதில் மீன் தன்னில் செல். உண்ட கோளும் உனைகூட்டும், மண் சித்தர்களும் உனக்கு துணை வருவர். தவ வலிமை தருவர். தவ வலிமை இருந்தால் தான் முறையாக இறைவடி காட்சி பெறுவது நடக்கும்.

நல்லதே முறையாக லாபம், சீர்மைபெறும் முறையாக லாபமது நண்மை. வெண்மை நிற ஆடையும், காவி நிற ஆடையும் அணிந்து செல்

நலமுண்டு நண்மையது பார்க்கும். சீராக சித்தர்கள் ஆசியை பெற்றுத்தரும்

நல்லதே புண்ணிய காரியத்தை கூட்டமைக்கும், கட்டுமானம் கட்டுதல், இடம் கொள்ளுதல், வண்டியோடு வாகனாதி வசதி வாய்ப்புகளை பெற வைக்கும்.



சூட்சுமத்தில் பல சித்தர் உனக்கு தொடர்பு பெறுவர் இனிமேலும் சித்தர்களுடன் பேசுகின்ற கலை உனக்கு வரும். நல்லதே அனுகூலம் உள்ளிருந்து பேசுவர். ஏதேனும் அசரீரி, வழியில் உனக்கு குரல் கேட்கும். நல்லதே இது நல்லதாம் அனுகூலம், துர்தேவதை, யட்சிணி இல்லை, கண்ட நன் அகத்தியன் அனுப்புகின்ற நல்லதொரு தேவதைகளாய் அது இருக்கும். சித்தர்கள் சம்பாசனயாகும்.

நலமாக அதன் பின்னர் நான் உனக்கு நாடி மர்மம் சுவடி மர்மம் எல்லாம் படிக்கின்ற சக்தியும் வரும். முறையாக இது உனக்கு இது அடித்தளமாம், முதற்ப்படியாம்.

முருகனது அருள் உனக்கு இருப்பதால், பயந்திடாதே, வழி காட்டுவேன் வடி வேலன்.

ஆனபடி குண்டம் ஒன்று கொண்டு வர வேனுமே.

முறையாக லாபம் அனுகூலமாகும் முறை கொண்டு, முறை கொண்டு காண் சீருண்டு முறையாகவே லாபம், நட்பாகவே நண்மை நிலை சித்தன் தரிசனம் நல்லதொரு ஓணம் தன்னிலே தரிசித்த பின்னே சிறப்பாக நல்லதொரு அரை அடி அளவிலே முறையாகவே ஒரு குண்டம் ஒன்று செம்பில் செய்து எடுத்து வா. (துத்த நாகம், மயில் துத்தம்).

நலமாக வேல் கொண்டு வா.  அடுத்து செய்யும் விவரமும் உரைத்திடுவேன், வினைஒட்டவே, கர்ம வினை கலைக்கவே, கந்தன் வேல் உனக்கு, பூசை அறிவித்தேன். பகை கொண்டோர் ஆனபடியாய், ஆதலால் அதை நீக்க வழியுண்டு வேல் பூசை.

ஆனபடியாய் கண்ட நண் முறையாக வேல் கொண்டு வா போதும். நட்பாக லாபம் அது உண்டு. சித்திரை திங்கள் உனக்கு வேல் பூசை உபதேசம் உரைப்பேன். வேல் கொண்டு வந்து சித்திரையில் அடுத்த நூல் கேள்.