Friday, 31 August 2018

காளி மந்திரம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பத்திரகாளி அம்மன் !
எல்லாவித இடையூறுகளும் நீங்கி, எல்லா காரியங்களிலும் வெற்றி பெற

ஜயந்தீ மங்களா காளீ பத்ரகாளீ கபாலினீ
துர்க்கா க்ஷமா சிவதாத்ரீ ஸ்வாஹா ஸ்வதா நமோஸ்துதே
ஜயத்வம் தேவிசாமுண்டே ஜயபூதார்த்தி ஹாரிணி
ஜயஸர்வகதே தேவி காளராத்ரி நமோஸ்துதே
மதுகைடப வித்ராவி விதாத்ரு வரதே நம:

ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்வி÷ஷா ஜஹி
மஹிஷாஸூர நிர்ணாச விதாத்ரி வரதே நம:
ரக்தபீஜவதே தேவி சண்டமுண்டவிநாசினி
சும்பஸ்யைவ நிசும்பஸ்ய தூம்ராக்ஷஸ்யச மர்தினி
வந்தி தாங்க்ரியுகே தேவி ஸர்வ ஸெளபாக்ய தாயினி

அசிந்த்ய ரூபசரிதே ஸர்வ சத்ரு வினாசினி
நதேப்யஸ் ஸர்வதா பக்த்யா சண்டிகே ப்ரணதாயமே
ஸ்துவத்ப்யோ பக்திபூர்வம் த்வாம் சண்டிகே வ்யாதிநாசினி
சண்டிகே ஸததம் யேத்வாம் அர்ச்சயந்தீஹ பக்தித:
தேஹி ஸெளபாக்யமாரோக்யம் தேஹிமே பரமம்ஸீகம்

விதேஹி த்விஷாதாம் நாசம் விதேஹி பலமுச்சகை
விதேஹி தேவி கல்யாணம் விதேஹி விபுலாம் ச்ரியம்
ஸூராஸூர சிரோத்ன நிக்ருஷ்ட சரணேம்பிகே
வித்யாவந்தம் யசஸ்வந்தம் லக்ஷ?மீவந்தம் ஜனம் குரு
ப்ரசண்டதைத்ய தர்ப்பக்னே சண்டிகே ப்ரணமதாயமே

சதுர்புஜே சதுர்வக்த்ர ஸம்ஸ்துதே பரமேச்வரீ
க்ருஷ்ணேண ஸம்ஸ்துதே தேவி சச்வத்பக்த்யா ஸதாம்பிகே
ஹிமாசல ஸூதாநாத பூஜிதே பரமேச்வரீ
இந்த்ராணீ பதிஸத்பாவ பூஜிதே பரமேச்வரி
தேவி ப்ரசண்ட தோர்த்தண்ட தைத்ய தர்ப்ப விநாசினி

தேவி பக்த ஜனோத்தாம தத்தானந்தோதயேம்பிகே
பத்னீம் மனோரமாம் தேஹி மனேவ்ருத்தானு ஸாரிணீம்
தாரீணீம் துர்க்க ஸம்ஸார ஸாகரஸ்ய குலோத்பவாம்
இதம் ஸ்தோத்ரம் படித்வா து மஹாஸ்தோத்ரம் படேன் நர:
ஸது ஸப்த சதீ ஸங்கயா வரமாப்னோதி ஸம்பதாம்.

Thursday, 30 August 2018

இராஜபாளையம் குருசாமி கோவிலின் ஸ்தல வரலாறு

இராஜபாளையம் குருசாமி கோவிலின் ஸ்தல வரலாறு



குருசாமி கோவில்,இராஜபாளையம் அம்பலபுளிபஜாரின் தெற்கு எல்லையில் அமைந்திருக்கிறது.

குருசாமி அவர்களின் பூர்விகம்,பெற்றோர்களைப்பற்றிய தகவல் இதுவரை இல்லை.

இவர் 12,000 ஆண்டுகளாக பழனிமலையில் தவம் செய்துவந்தார்;முதலில் இவருக்கு போகர் சித்தரின் தரிசனம் கிடைத்தது;அவரது வழிகாட்டுதலின் படி,தொடர்ந்து தவம் செய்தார்;அதன் பிறகு,
ஒருநாள் முருகக் கடவுள் இவருக்குக் காட்சியளித்தார்.

கடவுள்களில் சிவ தரிசனமும்,முருக கடவுள் தரிசனமும் அவ்வளவு சுலபத்தில் கிடைத்துவிடாது;பல கோடி ஆண்டுகள் தவம் இருந்து இன்னும் சிவ தரிசனம் பெறாமல் தவிப்பவர்கள் பல கோடி பேர்கள்;

முருக கடவுள் இவரிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்;

அதற்கு "பழனிமலையான இங்கேயே தங்கள் திருவடிகளிலேயே இருக்க வேண்டும்" என்று வேண்டியிருக்கின்றார்;அதற்கு முருகன் வரம் கொடுத்தார்;

"நீ குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு இல்லத்தில் பிச்சை ஏற்று உண்பாய்! பிச்சையளித்த பெண் உன்னிடம் பிள்ளை வரம் கேட்பாள்;நீயும் பெண் குழந்தை பிறக்க வரம் அளிப்பாய்; அப்பெண் குழந்தை உன் வளர்ப்புமகளாகி உனக்கு பணிவிடை செய்யும்.அக்குழந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் நீயே தந்தை ஸ்தானத்தில் இருந்து செய்வாய்.

நீ ஜீவ ஐக்கிய சமாதி அடைந்தபின் உன் வளர்ப்பு மகளும் அவர் தம் கணவரும் உன் சமாதியைப் பராமரித்து வருவார்கள்.அவர்கல் காலத்திற்குப் பின் அவர்கல் பிள்ளைகள் வழிவழியாகப் பராமரித்து வருவார்கள்.

நீ ஜீவ சமாதி அடையும் இடம் சிறப்புற்று விளங்கும்.நாள் தோறும் உச்சிக்கால பூஜையில் உனக்குக் காட்சியளிப்பேன்.தென் அழகாபுரி நோக்கிச் செல்" என வரம் அளித்தார்.(தென் அழகாபுரி என்பது இன்றைய ராஜபாளையம்)

குருசாமி காசியிலும் பழனி மலையிலும்பல காலம் தவம் மேற்கொண்டார் என்பதற்கு அக்கால ஒயில் கும்மியே சான்று!!!

காசியில் கன கோடி காலம்
ஆற்றங்கரையில் அநேக கோடி காலம்
பன்னிரெண்டாயிரம் வருஷம் பழனிமலையில்
நேர்த்தியதாகவே சாலியர்
கோத்திரம் நிலை நிறுத்த வந்த குருநாதன். . .

குருசாமிகளின் வளர்ப்புமகளின் பெயர் 'அன்னை பழனியம்மாள்'ஆகும்.அவரது கணவரின் பெயர் 'அய்யா அனஞ்சனேய பெருமாள்' ஆகும்.இவர்களின் வாரிசுகள் மூன்றுபேர்கள் ஆவர்.சி.சிவகுருநாதன் பூசாரி வகையறா; ரெ.சிவஞானம் பூசாரி வகையறா;சி.குருவாரெட்டியார் பூசாரி வகையறா இந்த மூன்று வம்சாவளியினர் இன்றும் குருசாமி கோவிலின் பூசாரியாக தொண்டுபுரிந்துவருகின்றனர்.இவர்கள் கடந்த 800 ஆண்டுகளாக பரம்பரையாக பூசாரியாக முறை வைத்து பூஜித்து வருகின்றார்கள்;

குருசாமி அவர்கள் ஆனிமாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜீவ ஐக்கியம் ஆனார்கள்.இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கார்த்திகை நட்சத்திரம் நின்ற நாளில் பிற்பகல் 3 மணியளவில் சுவாமிக்கு ஆண்டுகுருபூஜை வெகு விமரிசையாக நடைபெற்றுவருகிறது.அன்றும் ஒவ்வொரு கார்த்திகைக்கும் அன்னதானம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

ஆனி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் தொடர்ந்து பூஜைகள் நடைபெறும்.

குருபூஜை முடிந்து ஒரு மண்டலம் கடந்து(40 நாட்கள் கழித்து) ஒவ்வொரு  தமிழ் ஆண்டும் ஆவணி மாதம் 7 ஆம் தேதியில் குருநாதரின் சீடர்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியே சாலியர்களின் தெருக்கள் வழியே நகர்வலம் வந்து  குருசாமிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டுவருகின்றனர்.

ஏனெனில்,குருசாமி ஜீவ ஐக்கியமான 40 நாளில் லிங்கம் அமைக்கப்பட்டது;அதனால் 40 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றது.எனவே,ஆவணி 7 ஆம் தேதியானது பாலாபிஷேக நாளாகவும் இருந்து கொண்டாடி வருகின்றனர்.

தினமும் குருசாமி கோயிலுக்கு வந்து வழிபடுபவர்க்கு பணக்கஷ்டம் நீங்குகிறது;ஓராண்டுக்கு மேல் தினமும் குருசாமி கோவிலுக்கு வருபவர்களுக்கு அவர்களின் குடும்பக்குறைகள்,நீண்ட கால ஆசைகள் பூர்த்தியாகின்றன என்பது அனுபவ உண்மை.

ராஜபாளையம் நகரில் அமைந்திருக்கும் குருசாமி கோவிலுக்குள் வரும் போது ஒவ்வொருவரும் குறைந்தது 12 முறை வலம் வர வேண்டும்;அதன் பிறகே குருநாதனை தரிசிக்க வேண்டும்;அப்படி வலம் வரும் போது முருகக் கடவுளின் மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜபிக்க வேண்டும்;

முருகா,முருகா என்று ஜபிக்கலாம்;

ஓம் சரவணபவ,ஓம் சரவணபவ என்று ஜபிக்கலாம்;

கந்தா,கந்தா என்று ஜபிக்கலாம்;

பழனியாண்டவா,பழனியாண்டவா என்றும் கூட ஜபிக்கலாம்;

சண்முகா,சண்முகா என்று ஜபிக்கலாம்;

சிவலிங்க வடிவத்தில் குருநாதன் இருப்பதால் சிவமந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜபிக்கலாம்;

இன்றும் கூட தனது வம்சாவழியினர் பலருக்கு கனவிலும்,நேரிலும் குருநாதன் காட்சி கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்.

இன்றும் கூட பலர் இவரது ஜீவசமாதிக்குள் வந்ததும் இவரது அருளைப் பெற்று ஆன்மீகத்தில் அடுத்த லெவலுக்கு முன்னேற்றம் அடைகின்றார்கள்;

தினசரி காலையில் நடைபெறும் அபிஷேகத்திற்கு பால் அன்பளிப்பு செய்யலாம்;

இங்கே தாமாகவே விருப்பப் பட்டு அன்னதானம் செய்யலாம்;கோவில் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு விசாரிக்கவும்;


Wednesday, 29 August 2018

ஔவையார் ஜீவசமாதி ஆரல்வாய்மொழி .நாகர்கோவில் அருகில் உள்ளது

சிவாயநம

ஔவையார்

ஔவையார் ஜீவசமாதி
தமிழ் பாட்டி ஔவையார் -

குறிப்புகள் தமிழ்மொழியிலேயே முதன்முதலில் தோன்றிய நூலாக "அகத்தியம்" என்னும் நூலைச் சொல்வார்கள். அகத்தியரால் இயற்றப்பட்டு விநாயகரால் எழுதப்பட்ட நூல் என்று அருணகிரிநாதரால் திருப்புகழில் குறிப்பிடப்படுவது இந்நூல்தான்.  ஆனால் தற்சமயம் நம்மிடம் வழங்கும் தமிழ்நூல்களிலேயே மிகப்பழமையான நூல் தொல்காப்பியம். ஆகையால் இன்று நம்மிடம் இருக்கும் தமிழ்நூல்களில் காலத்தால் முதன்மையான நூல் தொல்காப்பியம். தமிழின் சிறப்புவாய்ந்த நூல்களில் திருக்குறþளே முதன்மை வகிக்கிறது. ஆனால் அனைத்து நூல்களுக்கும் இல்லாததொரு விசேஷ சிறப்பு ஒளவையின் நூலான.

"ஆத்திசூடி"க்கு உண்டு. ஆத்திசூடிதான் எழுதப்படிக்க ஆரம்பிக்கும்போதே தமிழில் கற்கப்படும் முதல் நூல்.

தாய்ப்பாலுடன் தமிழ்ப்பால் கலந்து ஊட்டப்படுவது ஆத்திசூடிதான். தமிழ்ப்பாட்டி "தமிழ்த்தாத்தா" என்று நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த உ.வே.சாமிநாதய்யரை அழைக்கிறோம். ஆனால் "தமிழ்ப்பாட்டி" என்று அழைக்கப்படுகின்ற பெருமையைப் பெற்ற ஒளவையோ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே தோன்றிவிட்டாள். வரலாறு ஒளவையின் வரலாறு, காலம் ஆகியவை இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. ஒளவையின் பெயரால் பல பாடல்களும், சில நூல்களும், சில கதைகளும் நிலவிவருகின்றன. அவற்றை வைத்துப்பார்க்கும்போது சுமார் ஆயிரத்தைன்னூறு ஆண்டுக் கால கட்டத்திற்குள் குறைந்தது மூன்று ஒளவையார்களாவது இருந்ததாகத் தோன்றும். அனைத்துக் கதைகளும் இணைக்கப்பட்டு, கதம்பமாக ஒரு வரலாறு பின்னப்பட்டு, அதுவே ஒளவையாரின் வாழ்க்கைச் சரிதமாக, செவிவழி மரபாகக் கூறப்பட்டு வருகிறது. அவர் ஆதி பகவன் ஆகிய இருவருக்குப்பிறந்து, பிறந்தவுடனேயே பெற்றோராலால் கைவிடப்பட்டு, பாணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டதாக அவ்வரலாறு கூறும். அவர் கன்னிப்பருவத்திலேயே முதுமையையும் துறவறத்தையும் விநாயகபெருமானின் பேரருளால் பெற்றதாகவும் அது கூறும். அதிகமானிடம் நெருங்கிய நட்பு பூண்டு, அவரால் ஆதரிக்கப்பட்டு, அவரிடமிருந்து கருநெல்லிக்கனி ஒன்றைப்பெற்று, உண்டு, அதன்மூலம் அழியாத உடலையும் நீண்ட ஆயுளையும் பெற்றார்; அதிகனுக்காக தொண்டைமானிடம் தூது சென்றார்; தமிழகம் முழுமையையும் நடையிலேயே வலம் வந்திருக்கிறார்; பல மன்னர்களுக்கு ஆலோசனைகளும் புத்திமதியும் சொல்லியிருக்கிறார்; மிக்க மன உரம் மிக்கவர்;

அஞ்சாமை, வைராக்கியம், ஈரம், இரக்கம், சொல்வன்மை, இறைவனின் திருவருள், அற்புத ஆற்றல்கள், சித்திகள் முதலியவை படைத்தவர்; எளிமையின் சின்னம்; ஏழையின் தோழி; பொன்னுக்கும் புகழுக்கும் பெரும்பான்மையான புலவர்கள் பாடி வரும்போது கூழுக்கும் பாடியவர்.

காதலில் தோல்வியடைந்த பேயொன்றைத் தன் ஆற்றலால் மீண்டும் "தமிழறியும் பெருமாள்" என்ற பெயரோடு பெரும்பண்டிதையாகப் பிறக்கச்செய்து, அந்தப்பிறவியில், இழந்த காதலை மீண்டும் பெறச்செய்தார். கம்பர், ஒட்டக்கூத்தர் ஆகியோருடன் போட்டியிட்டார். சங்கப்புலவர்களால் முதலில் புறக்கணிக்கப்பட்ட திருக்குறளுக்காக, சங்கப்புலவர்களை மீண்டும் கூட்டி, பொற்றாமரைத் திருக்குளத்தில் சங்கப்பலகையைத் தோன்றச்செய்து, அதன்மீது திருக்குறள் சுவடியை வைத்து, தாங்கச்செய்து, குறளின் சிறப்பை உணர்வித்து, அரங்கேற்றம் பெற உதவினார். பாரி வள்ளலின் இறப்புக்குப்பின்னர், அவரின் உயிர்த்தோழர் கபிலரின் மறைவுக்குப் பிறகு,

பாரிமகளிரை திருக்கோவலூர் மலையமான் திருமுடிக்காரி மன்னனுக்கு மணமுடித்து வைத்தார்.

சுந்தரமூர்த்தி நயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே யானை , குதிரை மீதேறிக்கொண்டு திருக்கயிலைக்குச் செல்லும்போது, விநாயகர் பூஜையைச்செய்து, விநாயகர் அகவலைபாடி, விநாயகப்பெருமானின் ஆற்றலால் அவர்களுக்கு முன்னரேயே உடலுடன் திருக்கயிலையை அடைந்தார். இவையெல்லாம் அந்த மரபுவழிக்கதைகளாலும் பாடல்களாலும் அறியப்படுபவை. வரலாற்று ஆய்வு ஆராய்ந்து பார்க்குமிடத்து மூன்று ஒளவையார்களாவது இருப்பது தெரியும்: சங்க காலத்தில் உள்ள ஒளவையே பாணர் குலத்தில் உதித்த விறலி. பேரழகியாக விளங்கி, பெரும்புலமையுடனும் தைரியத்துடனும் விளங்கியவர்; இவர்தான் கபிலர், பரணர், பாரி, அதிகமான் ஆகியோர் காலத்தில் வாழ்ந்தவர்; அதிகமானுக்காக தூது சென்றவரும் இவர்தான்.

அதிகமான் தந்த கருநெல்லிக்கனியை உண்டு, நீண்ட காலம் உயிருடன் இருந்தவர்; பாரிமகளிருக்கு மணமுடித்து வைத்தவரும் இவர்தான்.

இவருடைய பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.

சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சங்ககாலம் முடிவடைந்தது. நீண்ட காலம் உயிருடன் இருக்கும் காயசித்தி ஆற்றலைக் கருநெல்லியின் மூலம் பெற்ற ஒளவை, பின்னர், சங்கம் மருவிய காலத்தில், திருக்குறளை அரங்கேற்றம் செய்ய உதவியிருக்கலாம். இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், யோகசாத்திரங்களில் கரை கண்டவராக ஒளவையார்  காணப்படுகிறார். அப்போது இவர் விநாயக உபாசனையையும் செய்து வந்திருக்கிறார். விநாயக உபாசனை, குண்டலினி யோகம் ஆகியவற்றைத் தமிழகத்தில் பிரபலப்படுத்துவதில் இவர் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார்.

"ஒளவை குறள்" என்னும் சித்தர் நூலை எழுதியவரும் இவராக இருக்கலாம்.

சாகாக்கலையைப் பற்றி அந்நூலில் இவர் கூறியுள்ளார். எட்டாம் நூற்றாண்டில், சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தில் "விநாயகர் அகவலை"ப் பாடியவுடன் விநாயகரின் பேரருளால் தன் உடலுடன் திருக்கயிலையை அடைவதுடன் இந்த ஒளவையாரின் வரலாறு பூர்த்தியாகும். கம்பர், ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்த இன்னொரு ஒளவையார், பல தனிப்பாடல்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறார். அதன்பின், சில நூற்றாண்டுகளுக்குப்பிறகு, வேறொரு ஒளவையார் இருந்திருக்கிறார். இவரோ அல்லது கம்பர் காலத்து ஒளவையாரோதான் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய நூல்களை இயற்றியவர். ஆனால் இவர்களில் கடைசி ஒளவையார்தான் மூதுரையையும் நல்வழியையும் ஆக்கியுள்ளார். நூல்களின் சிறப்பு மிகப்பெரிய பெரிய நீதிநூல்கள் பலவற்றுள் காணப்படும் விஷயங்களின் சாரமாக அமைந்துள்ள அனைத்து நீதிகளையும் நீதிக்கருத்துக்களையும் "ஆத்திசூடி", கொன்றைவேந்தன்" ஆகிய நூல்களில் எளிய சொற்களால் அமைந்த, சிறிய வாக்கியங்களில் காணலாம். இளஞ்சிறார்கள் மிக எளிதாய்ப்படித்து, புரிந்து, மனனம் செய்துகொள்ளும்படி அமைந்தவை அவை. அத்தனை இளவயதில் மனனம் செய்யப்பட்டு விட்டதால், பசுமரத்தாணி போல் அவை மனதில் பதிந்துவிடுகின்றன. அவற்றைப் படித்த மனிதனின் அல்லது சொல்லக்கேட்ட மனிதனின் ஆழ்மனதின் மிக ஆழத்தில் பதிந்து விடுவதால் அந்த மனிதனின் சிந்தனை, செயல் யாவற்றிலும் அவை பிரதிபலிக்கும். சுருங்கச்சொன்னால், அந்த மனிதனின் மனச்சாட்சியை இந்த நீதி வாக்கியங்கள் உருவாக்கி, நிலை பெறவும் செய்கின்றன. சமுதாயத்தின் எந்த மட்டத்தில் இருப்போரும் இவற்றையெல்லாம் நீதிகளாகக் கற்று, கேட்டு வந்த காலங்களில், தமிழ் சமுதாயத்தினிடத்தில் குற்றச்செயல்களின் விகிதம் இன்றை விட குறைவாகவே இருந்திருக்கின்றது.

"பதஞ்சலி யோகசூத்திர"த்தைப் போன்ற சூத்திரங்களின் வடிவில் இந்நூல்கள் அமைக்கப்பெற்றிருக்கின்றன.

இவற்றில் "ஆத்திசூடி" மிகச்சிறிய வாக்கியங்களாலும் "கொன்றைவேந்தன்" சற்றுப்பெரிய வாக்கியங்களாலும் ஆகியவை. "இன்னதைச்செய்" அல்லது "இன்னதைச் செய்யாதே", "இப்படிச்செய்தால் நல்லது", "இப்படியெல்லாம் செய்தால் தீமை" என்ற பாங்கில் அவை அமைந்திருக்கும்.

"ஆத்திசூடி" என்ற பெயர் "ஆத்திமாலையை அணிந்திருப்பவன்" என்ற பொருளைத் தரும். இந்த இடத்தில் இது விநாயகரைக் குறிக்கிறது. "கொன்றைவேந்தன்" - சிவன்; அவனுடைய "செல்வன்" - விநாயகன். இந்த இரு பெயர்களுமே முறையே அந்த நூல்களின் கடவுள் வாழ்த்தின் முதல் இரு சொற்களாக அமைந்தவை.

ஆக, இரு நூல்களுமே தம்முள் கடவுள்வாழ்த்துப் பெற்ற கடவுள் நாயகனுடைய பெயரைத் தாங்கியே, காலத்தை வென்று நிற்கின்றன. "மூதுரை" என்னும் நூல் வெண்பாக்களால் ஆகியது. இது நீதிகளைக்கூறுவதோடு அல்லாமல், உலக உண்மைகளையும், நடப்புகளையும், யதார்த்தங்களையும், விளக்குகின்றது. ஒவ்வொரு கருத்துக்கும் உவமை கூறும் நயம் படைத்தது. முப்பது வெண்பாக்கள் உடையது இந்நூல். "நல்வழி" என்னும் நூலும் வெண்பாக்களினால் ஆனதுதான். இதில் உலகியல் வாழ்வின் உண்மையையும், ஊழின் வலியையும், இறை நம்பிக்கையையும் வலியுறுத்துகிறார் ஒளவையார். நாற்பது பாடல்கள் கொண்டது இன்னூல். இவையே தமிழ்மொழியின் தலையாய நீதிநூல்கள். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள சங்கத்தார் கோயிலில், தமிழ்ச் சங்கத்தின் தலைவர் "இறையனார்" என்னும் "திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுளின்" பக்கத்திலேயே அமர்ந்திருக்கும் பெருமையை ஒளவையார் பெற்றிருக்கி
றார் .


 ஔவையார் ஜீவசமாதி ஆரல்வாய்மொழி .நாகர்கோவில் அருகில் உள்ளது .திருநெல்வேலியிலிருந்து .பனங்குடி காவல்கிணறு .ஜெயா இன்ஜினியரிங் காலேஜ்
ஆரல்வாய்மொழி .

Tuesday, 28 August 2018

நவ கயிலாய விவரங்கள்

நவக்கிரக வரிசையில் ஒன்பது கோயிலைக் கட்டி நமது முன்னோர்கள் வழிபட்டு வந்தனர். அவற்றிற்கு நவ கைலாயம் என்று பெயரிட்டு, இன்றும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் புகழ் பெற்று விளங்குகின்றன. நவ கைலாய திருதலங்களை பற்றிய ஒரு தொகுப்பு(PDF) இணைக்க பட்டுள்ளது. படித்து, பயணம் செய்து ஈசனை வணங்கி அருள் பெற வேண்டுகின்றோம்! நன்றி!













யசோதை கிருஷ்ணரை உரலில் கட்டிப் போட்ட புனித இடம்.

யசோதை கிருஷ்ணரை உரலில் கட்டிப் போட்ட புனித இடம்.

"புனித தீர்த்தம் கண்ணில் உள்ள அனைத்து வகையான குறைபாடும் நீங்குமாம்!!!




திருப்பதி கோவில் வழிபாடுகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும்.

காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள்.

முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள்.

பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார்.

பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள்.

அந்நேரத்தில் ""கௌசல்யா சுப்ரஜா ராம... என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும்.

சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார்.

பின்னர் வீணையை இசைக்க,  வெங்கடாசலபதி அருகில் "போக ஸ்ரீனிவாச மூர்த்தி" பெருமாள் விக்ரஹத்தைக் கொண்டு வந்து அமர்த்துவார்கள்.

அவரை முதல் நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள்.

அந்த தொட்டிலிலிருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமரவைப்பர்.

சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும்.
சுவாமிக்கு பாலும் வெண்ணெயும் படைத்து "நவநீத ஹாரத்தி எனப்படும் தீபாராதனை செய்யப்படும்.
"விஸ்வரூப தரிசனம் என்றும் இதை சொல்வதுண்டு.

இந்த சேவையைக் காண ஒரு நபருக்கு கட்டணம் ரூ.120/-.

மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.

திருப்பதி மலையிலுள்ள ஆகாய கங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் வந்துசேரும்.

ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள்.
(பிரம்மோற்ஸவ காலத்தில் மட்டும் யானைமீது தீர்த்தம் எடுத்து வரப்படும்).

ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள்.

பின்னர் உத்தரணி (ஸ்பூன் போன்றது)யில் தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார்.

சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம்.

பின்னர் மீதி உள்ள தண்ணீரை சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்வார்கள்.

முழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை.

மூலவருக்கு பதிலாக அருகிலுள்ள போக ஸ்ரீனிவாச மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும்.

அப்போது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் கலந்த நீரால் அபிஷேகம் நடத்துவார்கள்.

பிறகு பசும்பால், சந்தனம், தேன், மீண்டும் மஞ்சள் தண்ணீர் என வரிசையாக அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பிறகு வஸ்திரம் சாத்தப்படும்.

 சுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள்.

குடை பிடித்து, சாமரத்தால் விசிறுவார்கள்.
இதன்பிறகு தீபாராதனை நடக்கும்.

இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும்.

🙏சுப்ரபாத பூஜையை அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னதியை திரை போட்டு மறைத்து, சுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும்.

அந்த நேரத்தில் முதல் நாள் சுவாமிக்கு அணிந்த மாலைகளை கோயிலுக்கு பின்னால் உள்ள பூக் கிணறில் கொண்டு சேர்ப்பார்கள்.

பின்னர் புதிய மாலைகள் சுவாமிக்கு கொண்டு வரப்படும். இதைக் கொண்டுவர ஜீயங்கார் என்பவர் உள்ளார்.
ஜீயங்காருக்கு உதவியாக ஏகாங்கி என சொல்லப்படுபவர் இருக்கிறார். 

ஜீயங்கார் முன்னால் நடக்க ஏகாங்கி பின்னால் வருவார். கூடவே முரசு வாத்தியத்துடன் ஒருவர் செல்வார்.

இவர்களுக்கு பின்னால் பள்ளி எழுச்சி பாட இருவர், திருப்பாவை பாட இருவர், புருஷ ஸுக்தம் சொல்ல இருவர் என ஒரு கோஷ்டியே திரண்டு வரும்.

பூ கட்டுவதற்கு என "யமுனாதுறை" என்ற இடம் கோயிலில் இருக்கிறது. அங்கிருந்து பூமாலைகள் சுவாமிக்கு அணிவதற்காக எடுத்து வரப்படும்.

காலை 3.45 மணிக்கு "தோமாலை சேவை" ஆரம்பமாகும்.

 சன்னதிக்கு பூக்கூடை வந்தவுடன் அர்ச்சகர் சுவாமியின் மார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சாத்துவார்.

பின்னர் சுவாமிக்கு மாலைகள் சாத்தப்படும்.

பெருமாளுக்கு மாலை சாத்தி முடித்து அடுக்கு தீபாராதனை செய்யப்படும். இதற்கு 25 நிமிடம் ஆகும். 

அதுவரை ஜீயங்காரும் மற்றவர்களும் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாசுரங்களை பாடுவார்கள்.

இதை பார்ப்பதற்கு ஒரு நபருக்கு கட்டணம் ரூ.220.
இதற்கும் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்.

இந்த சேவை ராமானுஜர் காலத்தில், "தோள் மாலை சேவை என சுத்த தமிழில் அழைக்கப்பட்டது.

 பின்னர் தெலுங்கில் "தோமாலா சேவா என மாறிவிட்டது.

🙏கொலுவு தர்பார்:
 ஏழுமலையான் கோயிலில் தோமாலை சேவை காலை 4.30 மணிக்கு நிறைவுபெறும்.

இதையடுத்து கொலுவு நிகழ்ச்சி 15 நிமிடங்கள் நடக்கும்.

இதற்காக உள்ள "கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி" விக்ரகம் ஏழுமலையான் சன்னதிக்குள் இருக்கிறது.

 இந்த விக்ரகத்தை வெள்ளி பல்லக்கில் வைத்து, வெள்ளி குடை பிடித்து சன்னதியில் இருந்து வெளியில் எடுத்து வருவர்.

ஒரு மறைவிடத்தில் வைத்து, எள்ளுப்பொடி, வெல்லம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து அர்ச்சனை நடத்தி ஆரத்தி காட்டுவர்.

பிறகு அர்ச்சகர் ஒரு பஞ்சாங்கத்தை பிரித்து, அன்றைய நாள், நட்சத்திரம், திதி உள்ளிட்ட விவரங்களை வாசிப்பார்.

அதன்பிறகு முதல்நாள் உண்டியலில் எவ்வளவு பணம் சேர்ந்தது, தங்கம், வெள்ளி வரவு ஆகிய விபரங்களை சுவாமியிடம் சொல்வர்.

 மூலவரே கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தியின் வடிவில் வெளியே வருவதாக ஐதீகம் உண்டு.

மூலவரிடமே நேரடியாக கணக்கு வழக்குகளைச் சொல்வதாக நம்பிக்கை. இந்த காட்சியைக்காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

🙏🔔முதல் மணி:
அர்ச்சனாந்திர தரிசனம் முடிந்ததும், வெங்கடாசலபதிக்கு முதல் நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது இரண்டு மணிகள் ஒலிக்கப்படும்.

அவருக்கு முதலில் தயிர்சாதம் படைக்கப்படும்.

மூலவருடன் விஷ்வக்சேனர், கருடன் மற்றும் நித்யசூரிகளுக்கும் (முக்தி பெற்றவர்கள்) இதே நைவேத்தியம் படைக்கப்படும்.

🙏🔔🔔இரண்டாவது மணி: இதையடுத்து மீண்டும் மணி அடிக்கப்பட்டு 2வது முறையாக நைவேத்தியம் படைக்கப்படும்.

அப்போது வராக புராணத்தில் உள்ள 108 நாமாக்களை கொண்ட அஷ்டோத்திர நாமா வாசிக்கப்படும். இதை பக்தர்கள் யாரும் பார்க்க முடியாது.

ஆனால், சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படும் செருப்புலு மற்றும் பணியார வகைகள் ஒரு குறிப்பிட்ட அளவு பக்தர்களுக்கு மட்டும் பிரசாதமாக வழங்கப்படும்.

🙏சகஸ்ரநாம அர்ச்சனை:
கொலுவு தரிசனத்தை அடுத்து சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கும்.

விஷ்ணு சகஸ்ரநாமம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வெங்கடாசலபதிக்கென தனியாக ஆயிரத்தெட்டு பெயர் சொல்லி சகஸ்ரநாமம் இருக்கிறது.

இதை செய்வதற்கு ஒரு நபருக்கு ரூ.120 கட்டணம். காலை 4.45 மணி முதல் 5.30 வரை இந்த அர்ச்சனை நடக்கும்.

நமது பெயர், குலம், கோத்திரம் ஆகியவற்றை முன் கூட்டியே சொல்லிவிட்டால் நமது பெயரில் அர்ச்சனை செய்வார்கள்.

இந்த தரிசனத்தின் போது பக்தர்களை அங்குள்ள ஊழியர்கள் யாரும் தள்ளி விட மாட்டார்கள்.

சகஸ்ரநாம அர்ச்சனை முடிந்து பூஜை நடத்தப்படும். இந்த பூஜைக்கு "அர்ச்சனாந்தர தரிசனம் என்று பெயர்.

இதை பார்க்க ஒரு நபருக்கு ரூ.200 கட்டணம். மூன்று மாதங் களுக்கு முன்பே பதிவு செய்துகொள்ள வேண்டும்.

காலை 5.30க்கு துவங்கும் இந்த பூஜை 6.30 மணி வரை நடக்கும்.

🙏சகஸ்ர தீப அலங்கார சேவை: ஊஞ்சல் மண்டபத்தில் தினமும் மாலை 5.30 மணிக்கு சகஸ்ர தீப அலங்காரம் (ஆயிரம் தீபங்கள்) செய்யப்படும். அப்போது அன்னமயா சங்கீர்த்தனம் பாடப்படும்.

இதற்கும் ஆயிரம் ரூபாய் கட்டணம் உண்டு. 5 பேர் பங்கேற்கலாம்.

அவர்களுக்கு வஸ்திரம் பிரசாதமாக வழங்கப்படும். திருமணமானவர்கள் இந்த வைபவத்தில் பங்கேற்பது சிறப்பானது.

🙏ஆபரணம் இல்லாத நாள்: வியாழக்கிழமைகளில் வெங்கடாசலபதிக்கு முக்கிய ஆபரணங்கள் எதுவுமின்றி வேட்டி மற்றும் வெல்வெட் அங்கி அணிவிக்கப் படும்.
அதன் மேல் அங்கவஸ்திரம் மட்டும் சாத்துவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு "சாலிம்பு என்று பெயர்.

மேலும் சுவாமிக்கு வழக்கமாக அணிவிக்கப்படும் திருநாமத்திற்கு பதிலாக நெற்றியின் மத்தியில் மெல்லிய நாமம் மட்டும் அணிவிக்கப்படும்.

🙏கல்யாண உற்சவம்:
திருப்பதி கோயிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் திருமண ஹால் இருக்கிறது.

அங்கு உற்சவரான மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருமணம் நடத்தப்படும்.

பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து இந்த திருமணம் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

 திருமண தடை உள்ள ஆண், பெண்கள் இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக கலந்துகொள்கிறார்கள்.

சுவாமிக்கும் தாயார்களுக்கும் மத்தியில் ஒரு திரை போடப் படும். பின்னர் அந்த திரை அகற்றப்பட்டு ஹோமங்கள் நடக்கும்.

ஒரு புரோகிதர் தாயார்களுக்கும் சுவாமிக்கும் திருமணம் செய்துவைப்பார்.

விழாக்காலங்களில் மட்டும் இந்த திருமணம் நிறுத்தி வைக்கப்படும்.

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு இரண்டு லட்டு, ஐந்து வடை, ஒரு பட்டு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத் துணி பிரசாதமாக தரப்படும்.

கல்யாண வைபவம் ஒருமணி நேரம் நடக்கும். பகல் 12 மணிக்கு திருமண உற்சவம் துவங்கும்.

 திருமண உற்சவத்திற்கு கட்டணம் ரூ.1000/-. இரண்டுபேர் அனுமதிக்கப்படுவார்கள்.

🙏ஊஞ்சல் சேவை:
மாலை 4 மணிக்கு கோயிலுக்கு வெளியே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஊஞ்சலில் ஆடும் காட்சியை பார்க்கலாம். இதை "டோலாத்ஸவம் என்பர்.

அப்போது வேத பாராயணம் செய்யப்படுவதுடன் மங்கள வாத்தியங்களும் முழங்கும்.

ஆயிரம் ரூபாய் செலுத்தி ஐந்து பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

அவர்களுக்கு 5 லட்டு, ஒரு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத்துணி தரப்படும்.

மாலை 5 மணிக்கு இந்த நிகழ்ச்சி நிறைவடையும்.

Sunday, 26 August 2018

பொது நாடி வாக்கு 26.08.2018


இன்று 26ஆகஸ்ட்2018 மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள பொகளூரில் ஓம் ஸ்ரீ அகத்தியர் சித்தர்கள் பீடத்தில் குருமுனி அகத்திய பெருமானுக்கு சிறப்பான முறையில் யாகம், அபிஷேகம், அலங்காரம் ஆகியவை செய்யப்பட்டு, அடியவர்களுக்கு மதிய உணவு அன்னதானம் ஆகியவை செய்யப்பட்டன.

பூசை முடிவில் அகத்தியர் அய்யாவிடம் பொது நாடி வாக்கு, அனைவர் முன்னிலையிலும் திரு. இறை சித்தன் செந்தில் அவர்களால் கேட்கப்பட்டது. அகத்தியரின் வரிகள் கீழ் வருமாறு :

சிங்கார திருத்தாண்டவம் புரியும் சிவ சிவனே போற்றிசீர்மிகு உலகை படைத்த பரனே போற்றிசிரம் தாழ்ந்து வணங்கும் அடியவரின் தேவதேவா போற்றிசிரம் தாழ்ந்தே பொதிகை வாழ் அகத்தியன் யானேஆனந்தத்திருத்தாண்டவம் ஆடும் என் அப்பன் நடராசரை தொழுதுஅருள் தனை உரைக்கிறேன் பொது தனிலே கேள் மகனே  இன்னவனே, அன்றுரைத்தேன் பிரம்ம முகூர்த்தம் தன்னிலே பூமி தேவி அவள் களங்கம் கற்பித்ததால் ஆக்ரோஷம் கொண்டாளே யாம் வளர்த்த தமிழ் மொழிக்கும் நச்சு பட்டதால் நிலை குலையுமே எண்ணிக்கையில் மூன்று திங்கள் தொண்ணூறு நாள் இன்றுரைக்கும் இடம் தன்னிலே இயற்கை சீற்றம் அது கோர தாண்டவம் ஆடுமப்பா தாண்டவம் சதிராடும், கடல் மட்டம் உயரக்கடவுமே, மழை நிய்யாது பெய்யும் வருண பகவானை மனமுருகி தொழுங்களேன் ஏன் அப்பன் ஈசன் ஆலயம் சென்று காலபைரவனுக்கு அகலிட்டு, மனை தனிலே அகலிட்டு, மனமுருகி தொழுதாலே வினை விட்டொழிந்து சகஜ நிலை திரும்புமப்பா. அண்டை மாநிலமதில் மீண்டுமோர் நிலத்தடுமாற்றம் நிகழுமேகர்மம் அது தலை தூக்கியதால் தர்மம் அதை நிலை நாட்டஇறைவனின் ஆட்டமே இதுவப்பா நான் தவமீன்ற என் அப்பன் பத்மநாப சுவாமி ஆலயம் தன்னிலே பொற்கதவை திறந்திட்டானே கள்ளனவன். கோவம் கொண்டானே இறைவனுமே, கோரத்தாண்டவமே நிறைவேறியதே ஆளுயர அலை வருமே அண்டமெல்லாம் நிலை நடுங்கும்தொழுவோனை விட்டொழிவானே ஆட்டமது நிலைக்குமப்பா, ஆட்டும் பால் அவனே அறிவானே முச்சொலுக்க நாட்டமொன்று முறையுடனே யாம் உரைப்போம், விழியுடனே கேள் மகனே வினையது விட்டொழியும் மனமது தளராதே மங்கையவள் செண்பக பூவினால் உமையவளை அர்ச்சித்து, நல்லெண்ணெய் தீபமிட்டு வெள்ளிக்கிழமை அன்று தொழுது வந்தாலே வினையெல்லாம் விலகி நிற்கும். வருண பகவான் மனமுருகி நிலை பெறுவானே. அன்றுரைத்தேன் அரசியல் துறை சார்ந்த பெரும் தலை உருளுமப்பா என்று மீண்டும் உரைப்பேன் கேள் மகனே, மீண்டுமோர் அரசியல் துறை சார்ந்த பெரும் தலை மீண்டும் ஒன்று உருளுமப்பா தடுமாற்றம் நிலை பெறுமே. பாவங்களை சர்வ நாசம் செய்யும் பாவநாசம் தனிலே மூழ்கும் நிலை உருப்பெருமேகால பைரவரை கனிவுடனே தொழுதாலே கஷ்டமெல்லாம் தீருமப்பா.வாழ்வது சிறக்க உமையவளின் நல்லாசி கிட்டுமே. - முற்றே - .

*****************************************************************************************
கேள்வி :
 அய்யா, தாங்கள் பொதுவில் உரைக்கும் விஷயத்தை மக்களுக்கு உரைத்தால் அதனால் உரைப்பவருக்கு கருமம் வந்து சேருமா?

ஸ்ரீனிவாச பெருமானின் திருநாமம் பெற்றவனே. நான் உனக்கு அன்றேயே உரைத்தேனே, நான் உன் அருகில் அல்ல, உன்னுள் இருந்து உமை காப்பேன் என்று, இப்பீடத்து ஆசான் வழி நின்றுபணி தன்னை செய் என்று. என் நாமம் அதை பறை சாற்று என்று உரைத்தேனே - சாற்றடா.உன் கர்மம் அதை நான் ஏற்பேன். கர்மம் கர்மம் என்றால் அத்தனை கர்மமும் எமக்கே, தர்மம் தர்மம் என்றால் அத்தனை தர்மமும் உமக்கே. கர்மத்தை யாம் காப்போம், தர்மத்தை நீ யாசி.பசுக்களின் வதையே இயற்க்கை சீற்றத்திற்கு முழு முதல் பொறுப்பேற்குமே, - முற்றே -

****************************************************************************************

Saturday, 25 August 2018

உலகில் முதல்முறையாக மிகப் பெரிய அளவிலான 7 அடி உயர ராகு பகவான், கேது பகவான் மற்றும் ஸ்ரீ காயத்ரி தேவி

உலகில் முதல்முறையாக மிகப் பெரிய அளவிலான 7 அடி உயர ராகு பகவான், கேது பகவான் மற்றும் ஸ்ரீ காயத்ரி தேவி ஆகியோர்களுக்கு முழு உருவ சிலைகள் ஒரே இடத்தில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டம் தளவாகுளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காயத்ரி பீடத்தில் நிறுவப்பட்டுள்ளது.










Sunday, 19 August 2018

பொது நாடி வாக்கு 19.08.2018




உலகெங்கும் உள்ள அகத்திய பக்தர்களே உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி இன்று ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி பொகளூரில் அகத்தியர் ஜீவநாடி படிக்கப்பட்டது

அதில் ஜீவ நாடி வாசிக்கும் இறை சித்தர் செந்தில் ஐயா அவர்களுக்கு சில பொதுவான விஷயங்களை அகத்தியர் அருள் உரைத்துள்ளார்

அவை கீழ்வருவன :

கேரளத்தை தொடர்ந்து தமிழகத்திலும் மழை பெருவாரியாக வரும்

தமிழகத்திலும் மழையினால் பெரு வெள்ளப்பெருக்கு ஏற்படும்

அதில் முக்கியமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் வட மாவட்டங்களுக்கு பாதிப்பு குறைவாக இருக்கும்

அநீதியும் அதர்மங்களும் பெருகிவிட்டதால் இவ்வாறு இயற்கை சீற்றம் ஏற்படுகிறது என்று அகத்தியர் உரைத்துள்ளார்

இயற்கை சீற்றங்களிலிருந்து தப்பிக்க நல்ல யாகங்கள் மற்றும் நல்ல யோகங்கள் செய்வதால் இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும் அகத்தியர் ஐயா அவர்கள் உரைத்துள்ளார்

மழை நிற்காமல் சுமார் 90 நாட்களுக்கு விடாமல் பெய்யும் என்றும் உரைத்துள்ளார்

இவை யாவும் வருகின்ற செப்டம்பர் அக்டோபர் நவம்பர் 2018 ஆகிய மாதங்களில் நடந்து தீரும் என்றும் அவர் உரைத்துள்ளார்.

இந்த இயற்கை சீற்றங்கள் மழையினால் மட்டுமே நிகழும் என்றும் வேறு வகையில் நிகழாது என்றும் அவர் உரைத்துள்ளார்

அகத்திய பக்தர்கள் யாவரும் இந்த இயற்கை சீற்றங்களிலிருந்து காப்பாற்றப்படுவார் என்று நாங்கள் அகத்தியரை முழுமையாக நம்புகிறோம், சுபம்.

Friday, 17 August 2018

வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களது பிறந்த நட்சத்திர ஸ்தலத்திற்கு உங்களின் நட்சத்திரம் வரும் நாளன்று சென்று வளம் பெறுங்கள்.

வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களது பிறந்த நட்சத்திர ஸ்தலத்திற்கு உங்களின் நட்சத்திரம் வரும் நாளன்று சென்று வளம் பெறுங்கள்...


<3 அஸ்வினி - முக்கிய ஸ்தலம் - கூத்தனூர்

மற்ற தலங்கள் - ஸ்ரீரங்கம், திருத்துறைபூண்டி, கொல்லிமலை.

<3 பரணி - முக்கிய ஸ்தலம் - நல்லாடை

மற்ற தலங்கள் - திருநெல்லிக்கா, கீழப்பறையார், பழனி, பட்டீஸ்வரம், திருத்தங்கல், திருவாஞ்சியம்.

<3 கார்த்திகை - முக்கிய ஸ்தலம் - கஞ்சானகரம்

மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருப்புகலூர், கீரனூர், திருச்செந்தூர், திருவொற்றியூர், கானாட்டுமுள்ளூர்.

<3 ரோஹிணி - முக்கிய ஸ்தலம் - திருக்கண்ணமங்கை

மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருவானைக்கோவில், ஜம்பை, கழுகுமலை, செம்பாக்கம், கொரட்டூர், நெல்லிச்சேரி, மன்னார்குடி, பெருமாள் அகரம், திருவரங்கம், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி.

<3 மிருகசீரிடம் - முக்கிய ஸ்தலம் - எண்கண்

மற்ற தலங்கள் - அம்பர் மாகாளம், ஓசூர், முசிறி, தாழமங்கை.

<3 திருவாதிரை - முக்கிய ஸ்தலம் - சேங்காலிபுரம்

மற்ற தலங்கள் - சிதம்பரம், அதிராம்பட்டினம்.

<3 புனர்பூசம் - முக்கிய ஸ்தலம் - சீர்காழி

மற்ற தலங்கள் - பழைய வாணியம்பாடி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பாசூர், திருவெண்ணெய்நல்லூர்.

<3 பூசம் - முக்கிய ஸ்தலம் - திருச்சேறை

மற்ற தலங்கள் - விளங்குளம், ஒழுந்தியாபட்டு, ஆவூர், கோனேரிராஜபுரம், பரிதிநியமம், திருச்சுழி, அழகர் கோயில்.

<3 ஆயில்யம் - முக்கிய ஸ்தலம் - திருப்புறம்பியம்

மற்ற தலங்கள் - திருந்துதேவன்குடி, நண்டான் கோயில், சங்கரன்கோயில், திருப்புனவாசல், புள்ளபூதக்குடி, திருவிடந்தை.

<3 மகம் - முக்கிய ஸ்தலம் - திருவெண்காடு

மற்ற தலங்கள் - திருக்கச்சூர், திருவரத்துறை, கீழப்பழுவூர், ஆலம்பொழில், அன்பில், திருவாலங்காடு.

<3 பூரம் - முக்கிய ஸ்தலம் - தலைசங்காடு

மற்ற தலங்கள் - நாலூர், கஞ்சனூர், திருவரங்குளம், புரசைவாக்கம்.

<3 உத்திரம் - முக்கிய ஸ்தலம் - கரவீரம்

மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருவக்கரை, செய்யூர், கூவத்தூர், மயிலாடுதுறை, இடையாற்றுமங்கலம்.

<3 ஹஸ்தம் - முக்கிய ஸ்தலம் - கோமல்

மற்ற தலங்கள் - தர்மபுரி, செய்யாறு, புவனகிரி, ஏமப்பூர் , எழிலூர், திருவாதவூர், திருவேற்காடு.

<3 சித்திரை - முக்கிய ஸ்தலம் - திருவையாறு

மற்ற தலங்கள் - அண்ணன்கோயில், தாடிக்கொம்பு, திருநாரயணபுரம், நாச்சியார் கோயில், திருவல்லம், திருவக்கரை, திருக்கோயிலூர், திருமாற்பேறு.

<3 சுவாதி - முக்கிய ஸ்தலம் - திருவிடைமருதூர்

மற்ற தலங்கள் - திருப்புடைமருதூர், பெரியதிருக்கோணம், கடத்தூர், பிள்ளையார்பட்டி, நயினார் கோயில், ஸ்ரீரங்கம்.

<3 விசாகம் - முக்கிய ஸ்தலம் - கபிஸ்தலம்

மற்ற தலங்கள் - திருமலைக்கோயில், அத்தாளநல்லூர், தீயத்தூர், திருநன்றியூர், நத்தம்.

<3 அனுஷம் - முக்கிய ஸ்தலம் - நாச்சியார் கோயில்

மற்ற தலங்கள் - திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருப்புனவாசல், திருக்கண்ணமங்கை, நீடூர், திருநன்றியூர்.

<3 கேட்டை - முக்கிய ஸ்தலம் - வழுவூர்

மற்ற தலங்கள் - பிச்சாண்டார் கோயில், பசுபதி கோயில், பல்லடம், திருப்பராய்த்துறை.

<3 மூலம் - முக்கிய ஸ்தலம் - மயிலாடுதுறை

மற்ற தலங்கள் - மாந்துறை, ஆச்சாள்புரம், பாமணி, கோயிலூர், குலசேகரப்பட்டினம், பொழிச்சலூர், மம்பேடு.

<3 பூராடம் - முக்கிய ஸ்தலம் - கடுவெளி

மற்ற தலங்கள் - நகர், சிதம்பரம், இரும்பை மகாகாளம்.

<3 உத்திராடம் - முக்கிய ஸ்தலம் - இன்னம்பூர்

மற்ற தலங்கள் - கோயம்பேடு, காங்கேயநல்லூர், பேளூர், கீழ்பூங்குடி, திருப்பூவனூர், திருக்கடிக்குளம், திருப்பூவணம், திருக்கோஷ்டியூர், திருக்குற்றாலம்.

<3 திருவோணம் - முக்கிய ஸ்தலம் - திருவிடைமருதூர்.

மற்ற தலங்கள் - ராஜேந்திரப்பட்டினம், திருமுல்லைவாயில், திருப்பாற்கடல்.

<3 அவிட்டம் - முக்கிய ஸ்தலம் - திருபூந்துருத்தி

மற்ற தலங்கள் - விருதாச்சலம், திருவான்மியூர், திருக்காட்டுப்பள்ளி, திருகொள்ளிக்காடு, திருமறைக்காடு, கொடுமுடி.

<3 சதயம் - முக்கிய ஸ்தலம் - திருப்புகலூர்

மற்ற தலங்கள் - கடம்பனூர், கோயில் கடம்பனூர், ஆதி கடம்பனூர், இளங்கடம்பனூர், வாழிக்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர் கோயில், மேலக்கடம்பூர் , பிச்சாண்டார் கோயில், மதுரை.

<3 பூரட்டாதி - முக்கிய ஸ்தலம் - திருக்குவளை

மற்ற தலங்கள் - ரெங்கநாதபுரம்.

<3 உத்திரட்டாதி - முக்கிய ஸ்தலம் - திருநாங்கூர்.

மற்ற தலங்கள் - தீயாத்தூர், வைத்தீஸ்வரன் கோயில்.

<3 ரேவதி - முக்கிய ஸ்தலம் - இலுப்பைப்பட்டு

மற்ற தலங்கள் - காருகுடி, இரும்பை மாகாளம், திருச்செங்கோடு.

Thursday, 16 August 2018

கேன்சர் வைத்தியம்




ஜீவ நாடி என்றால் என்ன

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

ஸ்ரீ அகத்தியர் ஜீவ நாடி -சில குறிப்புகள்

        இந்த குறிப்புகளிள் அடியேனிற்கு புரிந்த அல்லது தெரிந்து கொண்ட ,ஜீவ நாடி சம்பந்தபட்ட அனுபவங்களை எனது குரு ஸ்ரீ அகத்தியரின் அருள் கொண்டு பகிர்ந்து கொள்ளுகிறேன்.
     முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,ஜீவ நாடியில் தோற்றமும் அதன் நோக்கங்களும் தான்.கலியுகத்திலே மனிதன் தான் செய்ய வேண்டிய தான,தர்மங்களை மறந்து தான், தன் குடும்பம் என்ற சுய நல செய்கையிலே தனது வாழ்நாள் பொழுதை வீணடித்து விடுகிறான்.ஆகவே அவன் செய்ய வேண்டிய தான,தர்மங்களை அல்லது அவனை நெறிபடுத்த தோன்றியவையே ஜீவ நாடிகள்.பண்டைய காலத்தில் ரிஷிகளும்,சித்தர்களும் தங்கள் ஆசிரமங்களை ஆங்காங்கே நிறுவி,சத்சங்கங்களையும் தோற்றுவித்து,அந்தந்த யுக தர்மங்களை செய்ய தூண்டி கொண்டேயிருந்தார்கள்,ஆனால் கலியுக தர்மம் என்னவென்றால் எந்த தெய்வ சக்தியும் அல்லாது சித்தர்களே நேரில் தோன்றி தர்மங்களை போதிக்க கூடாது என்பதே ஆகும் .ஆகவே கலியுகத்தில் மக்களை நெறிபடுத்த தோன்றியவையே ஜீவ நாடிகள் ஆகும்.
நாடிகளில் பல வகை உண்டு அவையாதனில்,
1)காண்ட நாடி
இது விரல் ரேகையை கொண்டு,மனிதனின் விதி அல்லது கர்மத்தை பற்றி உரைப்பது.இது வள்ளுவ குலத்தினரால் உரைக்கபடுவது.
2)சம்ஹீதா நாடி
இது வட மாநிலங்களில் அதிகமாக காணப்படுவது.இது ஒருவர் நாடி வாசிப்பவரை அணுகும் நேரம் மற்றும் அவரது பிறப்பு சாதகத்தை கொண்டு அவரவர்களுக்கு உரிய பலன்களை உரைப்பது.
3)ஆசி காண்டம்
இது காண்ட நாடியில் காணப்படுவது.சித்தர்களின் ஆசியை பெற்று தருவது.இதில் ஒரு மனிதன் பெறக்கூடிய குருமார்களின் ஆசியை பெற்று தருவது
4)ஜீவ நாடி
இது நாடிகளிலே உயர்ந்தது. சித்தர்களும் ரிஷிகளும் நாடியில் பிரதட்சனமாகி தங்கள் சீடர்களுக்கு உரிய அறிவுரைகளை தெரிவிப்பது.இது தெய்வ புருஷர்கள் மட்டுமே வாசிக்க கூடியது.
5)போத்தி
இது ஒரிசா மாநிலத்தில் படிக்கபடுவது.
வெள்ளி  அல்லது தாமிர பலகையில் எழுத்துக்கள் தோன்றுவது
பிராமணர்களால்  மட்டும் படிக்க கூடியது.
     ஜீவ நாடிகள் என்பது  அவ்வப்போது தோன்றி கொண்டே இருக்கும்.சித்தர்கள் தாங்கள் விரும்பிய நபர்களை தேர்ந்து எடுத்து அவர்களை நன்றாக பயிற்சி கொடுத்து,அவர்கள் மூலமாக வாக்குகளை உரைக்க செய்வது.பொதுவாக தெய்வ அருள் பெற்ற அருளாளர்கள் மட்டும் வாசிக்க இயலும்.அவர்களுக்கு எழுத்துக்கள் தங்க நிறத்தில் புலப்படும்.இத்தகைய நாடிகள் சமீப காலத்தில்,சென்னையில் மறைந்த திரு.அனுமந்தாசன்,தஞ்சாவூரில் திரு.கணேசன்,மற்றும் ஸ்ரீ காக புஜண்டர் நாடியில் படிக்கும் ஸ்ரீ ரமணி குருஜி ,ஸ்ரீ அகத்திய ஜீவ நாடி ஆகிய இடங்களில் புகழ் பெற்று விளங்குகின்றன .
       நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,எப்போது இந்த ஜீவ நாடிகள் தோன்றுகின்றன.ஒவ்வொரு மகா சிவராத்திரியிலும் இந்த ஜீவ நாடிகள் தோன்றுகின்றன (ஸ்ரீ வெங்கடராம சித்தர்).சில ஜீவ நாடிகள் ரகசியமாக படிக்க படுகின்றன .சில ஜீவ நாடிகள் சித்தர்களின் ஆணைப்படி பொது மக்களுக்கும் படிக்க படுகின்றன.ஆனால் ஜீவ நாடி இயக்குவதில் சில சூட்சுமங்கள் உண்டு.அவையே ஜீவ நாடியை திறக்கும் சாவிகளாகும்.
 இந்த சூட்சுமங்களை புரிந்து கொள்ளாவிட்டால்,ஜீவநாடிகள் இயங்காது.தற்போது திரு.அனுமந்தாசன் வாசித்த நாடியில் நிலைமையும்  அப்படித்தான்.சித்தர்களின் அருள் இன்றி நாடியை படிக்க எந்த நபராலும் இயலாது.மேலும் ஜீவ நாடிகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் படிக்கும் நபரிடம் இருந்து வேறொரு நபருக்கு சித்தர்களின் ஆணைப்படி மாறி கொண்டேயிருக்கும் அல்லது சில தருணங்களில் மறைந்துவிடும்.
    ஜீவ நாடி சித்தர்கள் நம்முடன் தொடர்பு கொள்ள கூடிய ஒரு மீடியம் ஆகும்.மீடியமாகிய சுவடியை பயன்படுத்தும் மிகுந்த  பக்தி,சிரத்தை தான தருமங்கள் போன்ற வற்றை செய்யும் மனிதர்களாக தான் இருப்பார்கள் .மற்ற சாதாரண மனிதர்களால் படிக்க இயலாது.
   ஒவ்வொரு ஜீவ நாடியும் ஒவ்வொரு வகைப்படும்.சில ஜீவ நாடிகள் தருமத்துடனும் சில மந்திர மார்கங்களும்,சில பிராயசித்த மார்க்கங்களை  உரைகின்றன.சில ஜீவ நாடிகள் ஆலயம் மற்றும் வழிபாடு முறைகளை பற்றி தெரிவிகின்றன~
தெய்வதிருமிஸ்டிக் செல்வம்).சில ஜீவ நாடிகள் மடாலயங்களால் பாதுகாக்க படுகின்றன.
          தற்போது தமிழ் நாட்டில் பல ஜீவ நாடிகள் இருந்தும் பெரும்பாலும் அவை இயங்குவதில்லை.நாடி வாசிப்பவரின் அலட்சிய சுபாவமும் கேட்பவரின் அசிரத்தையாலும் தான்  சித்தர்கள் வாக்கு உரைப்பதில்லை.தொடர்ந்து செய்யும் தான தருமங்களை  பொறுத்துதான் ஜீவ நாடியில் தெள்ளிய முறைகளில் வாக்கு வரும்.
    அகத்தியர் ஞானம்

ஜீவ நாடி - முகவுரை

"அகத்தியன் வாக்கை, இந்த பூமியில், ஜீவ அருள் ஓலையில் பெறுவதற்கே, எத்தனையோ உயர்ந்த புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஜீவ அருள் ஓலையில் வாக்கை பெறுவது ஒருவகை புண்ணியம் என்றாலும், அந்த வாக்கை பெற்று, அதை நடைமுறைப்படுத்தாமல் இருந்தால் அதனால் கேட்கின்ற மனிதனுக்கு எந்த விதமான நற்பலனும் இல்லை என்பதை, எமை நாடுகின்ற மனிதர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் பார்ப்பதற்கும், பெறுவதற்கும் புண்ணிய பலன் வேண்டுமென்றாலும் கூட, அதனையும் தாண்டி ஒரு சில ஆத்மாக்களுக்கு நேரடியாக அவ்வப்பொழுது காட்சி தந்து வழி காட்டுவது என்பது வேறு நிலை. இது போல ஓலை வழியாக வழிகாட்டுவது என்பது வேறு நிலை." அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகஸ்தியர் ஜீவநாடி
ஓர் விளக்கம்

ஜீவ நாடியின் மூலம் நடந்து வருகின்ற அதிசயங்கள் ஏராளம்…ஏராளம்…
அதேசமயம
அகஸ்தியப்பெருமானின் வாக்கை ஒரு சாதாரண மனிதனின் வாக்காக எடுத்துக் கொள்கின்றவர்களுக்கு சாதாரணாமான பலன்களே நடந்து வருவதையும் அதேபோல் மிக உன்னதமாக மிகுந்த நம்பிக்கையுடன் ஜீவ நாடியை நம்பி அதில் உரைக்கும் செய்திகளை மனம் உருகி பக்தியோடு கடைபிடிப்பவர்களுக்கு 100% மிக மிக துல்லியமாக பலன்கள் நடந்து வருவதோடு மட்டுமல்லாமல்
அகஸ்தியப்பெருமானின் திருவிளையாடல்களையும் தமது வாழ்வில் காண்கின்ற ஒரு அதிசயத்தைப் பெறுகின்றார்கள். பரிகாரங்கள் கூட பெரிய அளவில் வருவதில்லை. ஆலய வழிபாடுகள்தான் அதிகம் வருகின்றன. ஒரு சிலர் காண்ட நாடி போல் இந்த ஜீவ நாடியை நினைத்துக் கொள்கின்றார்கள். காண்ட நாடியில் பெயர் ஊர் எல்லாம் வருகின்றது. ஆனால் ஜீவ நாடியில் முருகன் என்ன உங்களுக்கு உரைக்க வேண்டும் என்று விதித்துள்ளாரோ அதை மட்டுமே உரைப்பார். பணிரெண்டு காண்டங்களின் பலனை உரைக்க அகஸ்தியப்பெருமான் நாடி ஜோதிடரல்ல. கருணையே வடிவமான கடவுளிடம் ஜோதிடம் சொல்லுமாறு கேட்பது மிக மிக தவறு. ஆனால் துன்பமே தங்கள் வாழ்வாகப் பெற்றுள்ள மனிதர்கள் தங்கள் கர்ம வினையில் இருந்து விடுபடும் பொருட்டு கருணையே வடிவம் தாங்கி யார் வந்து அமர்கின்றார்களோ அவர்களின் கர்ம வினையை நீக்கும் பரிகாரங்களையும் சாப தோசங்களின் நிவர்த்திகளையும் உரைத்து நம்மை நல்வழிப்படுத்தும் பொருட்டே
அகஸ்தியப்பெருமான் நமக்காக கீழே இறங்கி வந்து ஜீவ நாடியில் தோன்றி வாக்கு உரைக்கின்றார். தங்கள் பிரச்சினை குறித்த கேள்விகளுக்கு உரிய விடை கொடுக்கின்றார். எனவே ஜோதிடம் கேட்கும் அனுகுமுறையில் ஜீவ நாடியை அனுகக்கூடாது. ஜோதிடம் ஜீவ நாடியில் நிச்சயம் வரும். ஆனால் அதை முடிவு செய்ய வேண்டியது அகஸ்தியப்பெருமானும் நாடி கேட்க வருகின்றவர்களின் கர்ம வினையுமே. ஜீவ நாடி என்பது ஜோதிடத்தின் வகையில் சேராது. இது இறைவனே உரைக்கின்ற அருள்வாக்கு. அருள்வாக்கு என்ற உடனேயே குறி சொல்லுமோ என்றும் எண்ணிவிடக்கூடாது. நமது தகுதியை அறிந்து ஜீவ நாடியில்
அகஸ்தியர்என்ன உரைக்கின்றார் என்பதை மட்டுமே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே நம்பிக்கை இருப்பவர்கள் மட்டுமே ஜீவ நாடி கேட்க முயற்சி செய்யுங்கள். ஒரு துளி மனதில் சஞ்சலம் வந்தாலும் நாடி பலிக்காது. முழு மனதுடனும் முருகன் மீது பக்தியுடனும் முழு நம்பிக்கையுடனும் இருந்து ஜீவ நாடி கேட்கும் பிராப்தமும் இருந்தால் மட்டுமே ஜீவ நாடி உங்களுக்கு 100% பலிக்கும் என்பதை மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். ு. எனவே பக்தி சிரத்தையோடு பக்குவத்தோடு வந்து ஜீவ நாடியை நம்பிக்கையுடன் கேளுங்கள்.இல்லாவிடில் நம்பிக்கை இருக்கும் எந்த இடத்திலும் பலன் கேட்டு வாழ்வில் வளம் அடையுங்கள். அங்கும் இங்கும் அலைவதைக் கைவிடுங்கள் தங்களுக்கு விருப்பமான மற்றும் நம்பிக்கையுள்ள் ஜோதிடரையோ மகானையோ ஏற்று அவர்களை நம்பிக்கையுடன் கடைபிடியுங்கள். அப்போதுதான் உங்கள் கர்ம வினை அகலும். அங்கும் இங்கும் அலைவதால் மட்டுமே கர்மவினை குறையாது. அகலமாக உழுவதைவிட ஆழமாக ஊழுவது மேல் எனும் பழமொழியை சிந்தியுங்கள். ஜோதிடர்களை மிகச்சாதாரணமாக அனுகாமல் உங்கள் வாழ்க்கையின் வழிகாட்டி எனும் நன்றி உணர்ச்சியோடு அனுகுங்கள். நிச்சயம் கடவுள் யாராவது ஒருவர் மூலம் நமது எதிர்காலத்தை உரைத்துக் கொண்டே இருப்பார். என்ன எழுதினாலும் உரைத்தாலும் இது கலியுகம். உண்மைகள் ஒதுங்கி இருப்பதுதான் நல்லது. எல்லாம் முருகன் செயல். எதற்காக இதை இவ்வளவு விளக்கமாகச் சொல்லவேண்டியுள்ளது என்பதால் ஜீவ நாடியின் மகிமையை உணராமல் ஜீவ நாடி கேட்கக் கூடாது என்பதற்கே. அகஸ்தியப்பெருமான் அடிக்கடி ஜீவ நாடியில் உரைக்கின்ற விஷயம் பக்தியும் நம்பிக்கையும் இல்லாதவர்களுக்கு இந்த ஜீவ நாடியை உரைக்கவோ தெரிவிக்கவோ கூடாது அப்படி உரைத்தால் அதைக் கேட்பவர்களுக்கு மிகவும் தீது என்கின்றார். அதனால்தான் யாராக இருந்தாலும் மிக எளிதில் எம்மிடம் நாடி கேட்டுவிட முடிவதில்லை.
அகஸ்தியப்பெருமான் ஜீவ நாடி கேட்க உரைக்கின்றாரோ அந்த மாதத்தில் வந்து மீண்டும் கேட்டு அடுத்த வழிபாட்டை செய்யத் துவங்குங்கள் பின்பு உங்கள் வாழ்க்கையே சிறுகச் சிறுக மாறுவதை அனுபவப் பூர்வமாக உணர்வீர்கள்

நம் போன்ற புரியாதோற்கு
அகத்தியர்
இறையருளால் இயம்பிடுவேன் இத்தருணம் இயம்பும்கால் பல்முனிவரோடு பிறர் நலன் தேடும் புண்ணிய ஆத்மாக்களையும் பணிந்து இயம்புவேன். காகபுஜண்டர், கும்பர், வசிட்டர் திருவடிகள் பணிந்து இத்தருணம் கருவுரார் யான் சில்வாக்கு, வாக்கும் பொதுவில் தடமாந்தருக்கும் வலுத்துவேன். என் நாமத்தில் பற்று கொண்ட சேயேனுக்கும் வலுத்துங்கால் தெய்வீகத்தை தெய்வீக நிலையிலிருந்து புரிதல் வேண்டுமப்பா.  வறிவிப்பேன் சேயே உன் ஒத்து தட மாந்தர்களும் எண்ணுகிறார்கள். வாக்கும் சித்தர்கள் யாது உரைக்கிறார்கள்? ஆகமத்தைதானே உரைகிறார்கள்.  வலுத்துவேன் முன்னர் அமரும் மாந்தனின் வதனதிரையை (முகத்திரை) கிழிக்குமாறு பகரவில்லை, பகர்ந்தாலும் அதை கூற அனுமதிப்பதில்லை.  பாலனே இது குறித்து இதழ் ஓதுபவனுக்கும் (நாடி வாசிப்பவருக்கும்), ஏனையோருக்கும் விசனம் உண்டு. பகரும்கால் எமக்கு எளிதப்பா.  எதிர் அமரும் மாந்தனின் வதனதிரையை கிழிப்பது, பகர்ந்தால் சிக்கலும், வேதனையும் எமக்கல்ல இதழ் ஓதுபவனுக்கே வந்து சேரும் என்பதால், என்பதாலும் பல உண்மைகளை கேட்கும் மாந்தராலும் ஏற்க இயலாது என்பதால்,  என்றென்றும் பட்டவர்த்தமான வாக்குகளை யாங்கள் பகருவதில்லை.  பகருவேன் உரைக்க வந்ததை பகரும்கால் பாலனே மெய்யை மெய் என ஏற்பதற்கு மெய்தன்மை கொண்டோர் வேண்டும் பாலகனே.  இஃது தடம் யாது என்று அறியாமலே பலர் வந்து போகிறார்கள்.  பகரும்கால் இதழ் ஓதுபவன் தோற்றமும் விருத்தமாக இல்லாது ஆன்மீகத்திற்கு பொருத்தமாக இல்லாது, இல்லாதும் இருப்பதாலே புஜண்டர், வசிட்டர், கும்பர் வாக்கினை அலட்சியம் செய்கிறார்கள். பகரும்கால் இஃது ஒப்ப இருப்பதால் மெய் தொண்டர்கள் வரக்கூடும் என்பதால் இவனை இஃது ஒப்ப தோற்றத்தில் இருக்க வைத்தோம், வைத்தோமப்பா ஜீவ அருள் நாடியை இவனிடம் சதம் சதம் மூடன் என்பதால். வருகிறாயே சேயே இதன் நுணுக்கத்தை ஆய்ந்துபார்.  வறியும்கால் முன்னரே அறிமுகமான ஆன்ம மாந்தனையோ, அனைவரும் அறிந்த துறவி கரத்திலேயோ வைக்காது இஃது நாடியை இவனிடம் வைத்த காரணம் பல இருந்தாலும்,  வறிவிப்பேன் ஏனையோர் உரைக்கும்கால் எம் கருத்தா, அவர்தம் கருத்தா என சிந்தனை சிதறல் வரக்கூடும்,  கூடுமப்பா இஃது ஒப்ப பல்வேறு ஆன்ம கருத்துகளை அறிந்த மாந்தன் கூறும் சமயம்,  கூறுகிறான் இவன் கருத்தினை சித்தர்கள் கருத்தா? என நினைக்க கூடும்.  கூறுகின்ற வாய்ப்பு உள்ளதால் ஆன்ம ஞானம் இல்லாத மூடனை தேர்ந்து எடுத்து,  திடம் கொண்டு நம்புகின்ற மாந்தர்களுக்கு வாக்கினை பகர்கிறோம். தெளிவுதான் இஃது இதழில் நல்கிறோம் அனைவருக்கும்.  திருப்தியும் இதில் காணாத மாந்தர்கள் அதிசயங்களை எதிர் நோக்குகிறார்கள், திருப்தியில்லை. வாழ்வுநிலை, தசநிலை, தனநிலை என எண்ணி, எண்ணி, எண்ணி தனத்தை தாராத சித்தர்கள் வாக்கை ஏன் ஏற்க வேண்டும் என எண்ணுகிறார்கள்.  இஃது ஒப்ப புஜண்டர், வசிட்டர், கும்பர் வந்து உரைப்பது எத்தனையோ பிறவிகளில் செய்த புண்ணியங்கள் ஒன்று சேர்ந்தாலும் நடவாதப்பா, என்றாலும் மாந்தர்கள் மீது கழிவு,  இரக்கம் கொண்டு இறைக்கு சமமான மாந்தர்கள் வாக்கு உரைத்தால் ஏற்காது,  எள்ளி நகையாடினால் எமக்கல்ல நட்டம். அம்மாந்தனுக்கே கட்டம்.  கட்டம் வந்த காரணம் கர்மவினை.  கர்மவினை அகற்ற கூறுகிறோம் பல்வழி.  கூறுகின்ற வழி ஏற்க இயலாது. கட்டம் தீர வேண்டும் என நினைத்தால் எங்ஙனம் சாத்தியம்.  குறிப்பேனே இத்தட மாந்தர்கள் ஆகட்டும்,  வேறு எவர் ஆகட்டும்,  கூறியபடி வாக்கு நடவவில்லை என வருந்தினால் அஃது எமது குற்றமல்ல.  கூறியது கூறியபடி ஏற்று மெய்தன்மையோடு,  திடம் கொண்டு சென்ற ஊழிலில் பாபம் செய்தோம். இனியாவது புண்ணியம் செய்வோம் என எண்ணி எண்ணி சதம் சதம் நீதியோடு வாழும் மாந்தருக்கு ஒரு போதும் பலியாமல் போகது. எத்தனை நெருக்கத்தில் வந்து வாக்கறிந்தாலும், வாக்கறியும் மாந்தர்கள் செய்யும் தவறை யாங்கள் அறிவோம் என்றாலும்,  அவன் மனநலம் கருதி சுட்டி காட்டாமல் விடுகிறோம்.  எஃது ஒப்ப இறையோ அனைவரையும் பொருத்தருளும் போது யாங்களும் பொருத்தருளுவோம், அருள்வோம் என்றாலும் அஃது தவறு என சுட்டி காட்டிய பின்னரும் தொடர்வது சரியல்ல. அறிவிப்பேன் சேயே மெய்யான வாக்கு வேண்டும் என உன் போல் பலர் வேண்டுகிறார்கள். அனைத்தையும் அறிந்த யாங்கள் மௌனமாக நகைத்து கொண்டே அனைத்தையும், அனைவரையும் கவனிக்கிறோம்.  அறிவாயே இத்தடத்தில் எவர் நாடி வந்தாலும் அமைதி காத்து வாக்கறிய வேண்டும். அகத்தில் துரிதம், துரிதம் என எண்ணுபவர்கள் அவர்கள் விரும்பியபடி வாக்கினை அறிய இயலாது.  அஃது ஒப்ப இதழ் ஓதுபவனும்,  நீயும் ஏக கருத்தை கவனம் கொள்ள வேண்டும்.  வேண்டுமப்பா பொறுமை,  பொறுமை வேண்டுவோருக்கு விளக்கங்கள் தந்தே ஆக வேண்டும். உளைச்சல் இன்றி. வலுத்துவேன் சூல முனிவரின் விருப்பமும் இறை விருப்பமே வாக்கினை பகர்வதும் பகராமல் போவதும்.  பகரவேண்டும் இன்னாருக்கு,  பகர வேண்டாம் இன்னாருக்கு என எம்மை நிர்பந்திக்க இயலாது.  பலன் அறிய வரும் மாந்தன் பக்குவமின்றிதான் இருப்பான்,  பக்குவமாக பாலகர்கள் எடுத்தியம்பத்தான் வேண்டும். பகருவேன் எதிரே அமரும் மாந்தன் சிறப்பில்லா எம் கொள்கைக்கு எதிரான மாந்தன் என்றாலும்,  இதழ் ஓதுபவனோ,  தட மாந்தர்களோ சினம் கொள்ள கூடாது.  எஃது ஒப்ப சூலமுனிவர்கள் அவர்களை கவனித்து கொள்வார்கள் என்றெண்டும்.  யாங்கள் இயம்புகின்ற கருத்தினை அறகருத்தினை தவிர ஏனைய கருத்தினை தெய்வீக சூட்சமத்தை ரகசியம் காத்திடல் வேண்டும்.  நன்றாக ஏககருத்தை கவனத்தில் கொள், கொள்ளப்பா தனத்தை எவன் விடாது பிடித்துள்ளானோ, குறிப்பேனே பிறரை எவன் அலட்சியமாக எண்ணுகிறானோ, குறிப்பேனே தானமோ, தர்மமோ அணுவளவும் செய்யாது எவன் உள்ளானோ, உள்ளானோடு அவனிடம் தெய்வீகமோ, சித்தர்களோ ஒருபோதும் இருப்பதில்லை. உரைப்பேனே உள்ளதை எல்லாம் எவன் ஈகிறானோ சித்தர்கள் உரைத்ததை சிந்தித்து பாராது சதம் சதம் ஏற்கிறானோ உணர்வாயே அவனே எங்கள் அருள் பெற்றவன், எங்கள் சேயவன்.சேயவனே சேயவனே சேயவனே என விளித்தால் மகிழ்வதும், சிறப்பாக எமது உயர் குணங்களை மட்டும் ஏற்காது இருப்பதும் அழகல்லா. செப்புவேன் எத்தனை ஆசிகள் யாங்கள் வழங்கினாலும் சிந்தையில் தனத்தையே குறிகொண்டு வாழ்பவரை யாங்கள கரை சேர்பதில்லை. சிறப்பான சிந்தை, உயர்ந்த குணம், எவருக்கும் உதவுதல், எதிரிக்கும் உதவுதல் என்ற மனம், மனதோடு நற்குணம் மனமாகி வாழ்வது, மனதால் அணுவளவும் சூது இல்லாமல் இருப்பது மறிவிப்பேன் வாரி வாரி வழங்குவது, இத்தகைய குணங்களே எம்மை அருகே சேர்க்குமப்பா. மனம் ஒன்று நினைக்க, வாக்கு ஒன்று சொல்ல, செயல் ஒன்று செய்ய இத்தடம் வரும் மாந்தர்களை யாங்கள் நன்றாக அறிவோம், அறிவோமப்பா அவர்களை பற்றி இத்தட மாந்தர்கள் விசனம் கொள்ள வேண்டாம், அவர்கள் குறித்து விமர்சனமும் ஏளன உரையும் இங்கு வேண்டாம். அறிவாய் அடுத்த மெய்யை இறை இறை ஞானம் ஞானம் எல்லாம் பகர்ந்து கொண்டு அஃது ஒப்ப ஒருவர் மீது ஒருவர் காழ்புணர்ச்சி கொண்டு, குறையும் கூறிகொண்டு அஃதோடு மமதையும் கொண்டு பவ்யம் போல் வெளிகாட்டி பகட்டை உள்ளே வைத்து வரும் மாந்தர்களும் உண்டு,உண்டப்பா என்றாலும் பக்குவம் ஆகட்டும் என்றே பொருத்துள்ளோம். உதட்டளவில் எமது நாமத்தை உச்சரித்து உள்ளே சித்தனாவது வாக்காவது உரைப்பது மெய் என்றால் அனைவர் நயனத்திலும் அச்சரத்தை காட்ட வேண்டியதுதானே. அஃது ஒப்ப ஒருவன் வருகிறான் எத்தனை சாதுரியம், வஞ்சகம் எம்மிடமே சாமர்த்தியமாக வாக்குரைப்பதாக எண்ணி பாதாளத்தில் வீழ்கிறானப்பா. அப்பனே சரணாகதி அடைந்தால்தான் தேற முடியும். இயம்புவது யாது எனில் சூழ்ச்சியாக வஞ்சமாக சாமர்த்தியமாக எம்மிடம் வாக்கறிய முயன்றால் எம்மிடம் பலன் கிட்டாது, என்றாலும் அனைவரும் எமது பிள்ளைகள் என்றே அரவணைத்து செல்வோம். எம்மை பணிந்தாலும், பணியாவிட்டாலும் இறையை பணிய வேண்டும். எம்மை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் இறையை ஏற்கவேண்டும். ஏற்பதென்றால் வெறும் வழிபாட்டை மட்டுமல்ல.சத்தியத்தை ஏற்கவேண்டும். ஏற்பதென்றால் மந்திர உரு போடுவது மட்டுமல்ல. மனம் குன்றா தானம் அளிப்பதையும் ஏற்கவேண்டும். எம்மிடம் கணிதம் பார்த்தால் இறையிடம் கணிதம் பார்த்தால் யாங்களும் கணிதம் பார்க்க வேண்டிவரும். எத்தனைதான் இயம்பினாலும் கர்மா செவியில் ஏற விடுவதில்லை. யாது செய்ய. எஃது ஒப்ப இவற்றை உரைக்கின்ற காரணம் கேட்கின்ற நீவீர் இஃது குறை இல்லாது வாழ பழகுவீர்.  மாந்தருக்கு தோன்றுவது எமக்கு புனிதமாக தோன்றாது, எமக்கு புனிதமாக தோன்றுவது மாந்தருக்கு புனிதமாக தோன்றாது.

ஆசிகள்...    சுபம் .
அகத்தியர் ஞானம்

இறைவனின் கருணையைக் காெண்டு இயம்புவது யாதென்றால் யாம் அடிக்கடி எமை(அகத்திய மாமுனிவர்) நாடுகின்ற மாந்தர்களுக்கு கர்மவினைகளின் தாக்கம் குறித்து எடுத்து இயம்பிக்காெண்டே இருக்கிறாேம். இஃதாெப்ப பாவவினைகள் ஒரு மனிதனை சுற்றி, பின்னிப்படர்ந்து காெண்டே இருக்கும் அந்த நிலையிலே ஒன்று நல்லதை செய்ய மனம் விரும்பாது. அடுத்தாக மேலும் தவறு மேல் தவறு செய்து பாவங்களை சேர்த்துக் காெள்ளவே தூண்டும். ஆனால் அந்த பல்வேறு பாவங்களிலும் எஃதாவது ஒரு புண்ணியம்(அவன்) இறைவழியில் வரவேண்டும் என்று இருக்கும் பட்சத்திலே அஃதாெப்ப ஆத்மாக்கள் மட்டுமே பிறக்கும் தருணம் ஓரளவு மனசாட்சிக்கு கட்டுப்பட்டு இறை ஆலயங்களை தரிசித்து, இயன்ற தர்மங்களை செய்து புண்ணியத்தை சேர்த்துக்காெள்ள வேண்டும்.*

*வெறும் தனத்தை சேர்த்துக் காெண்டு அதனால் ஆவது என்ன? என்ற ஒரு முடிவுக்கு வரும். ஆனால் அஃதாெப்ப நிலையில் வந்தாலும் மனம் தடுமாறும். பிறரை ஒப்பிட்டுப் பார்த்து 'அவர்களெல்லாம் இதுபாேல் எதுவும் செய்யாமல் நன்றாக வாழ்கிறார்களே? நேற்றைவிட இன்றைக்கும், இன்றைவிட நாளைக்கும் பாெருளாதாரத்தில் உயர்ந்து காணப்படுகிறார்களே? நாம் அவ்வாறில்லாமல் கடவுள், பிறவி, தர்மம் என்று ஒருவேளை தவறாக புரிந்துகாெண்டு செல்கிறாேமாே' என்றெல்லாம் குழப்பம் வரும்.*

*இதுபாேன்ற தருணங்களில் எம்(அகத்திய மாமுனிவர்) வழியில் வருகின்ற மனிதர்கள் பாெறுமையாேடும், திடசிந்தனையாேடும் இருக்க கற்றுக்காெள்ள வேண்டும். இஃதாெப்ப நிலையிலே ஒரு மனிதனின் வினைப்பயனை ஒட்டியேதான் வாழ்வு முழுவதும் நடக்கும் என்றாலும் யாம்(அகத்திய மாமுனிவர்) அந்த வினையில் வேறு வகையான மாற்றங்கள் செய்கிறாேமாே, இல்லையாே, தாெடர்ந்து இறைவழியில் வருவதற்குண்டான வலுவை தரத்தான் நாங்கள்(சித்தர்கள்) எமை நாடுகின்ற மாந்தர்களுக்கு உதவுகிறாேம். ஆனால் நல்லவனாக இருந்தால் மட்டும் பாேதாது. எமை நாடுகின்ற மனிதர்கள் மனாேரீதியாக வல்லவனாகவும் இருக்க வேண்டும்.*

*அது எங்ஙனம் என்றால் தன்னை சுற்றியுள்ள மனிதர்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். வெறும் தவறுகளையே செய்துகாெண்டு, சுயநலமாய் வாழ்ந்துகாெண்டு தனம்தான் பிரதானம் என்று வாழ்கின்ற மனிதர்களுக்கே அத்தனை தன்னம்பிக்கையும், தைரியமும் இருக்கும்பாெழுது, நிரந்தரமில்லாத ஒரு வாழ்வை நாேக்கி செல்கின்ற அந்த மனிதனே திடமாக இருக்கும்பாெழுது, இறைவனை நாேக்கி செல்கின்ற ஒரு மனிதன் திடமாக இருக்கவேண்டாமா? சிறிய கஷ்டம் வந்துவிட்டாலும்கூட, 'சித்தர்களை நம்பினாேம். சித்தர்கள் இப்படி செய்துவிட்டார்களே' என்று அங்கலாய்ப்பது என்பது எம்(அகத்திய மாமுனிவர்) வழியில் வருகின்ற மனிதர்களுக்கு இயல்பாகிக் காெண்டே இருக்கிறது. அல்லது இவையெல்லாம் நடக்கப்பாேகிறது என்று சித்தர்களுக்குத் தெரியாதா? ஏன் எச்சரிக்கைவில்லை? என்றும் கேட்கிறார்கள்.*

*எதைக் கூற வேண்டும், எதைக் கூறக்கூடாது என்று நாங்கள் மட்டும் முடிவெடுப்பதில்லை."இந்த இந்த ஆத்மாக்களுக்கு இதை, இதை உணர்த்து" என்று இறை கட்டளையிடுகிறது. அந்த கட்டளைக்கு ஏற்பவும், எமை நாடுகின்ற மனிதனின் மனாே திடத்திற்கும், பக்குவத்திற்கும் ஏற்பவும்தான் நாங்கள்(சித்தர்கள்) வாக்கை பகிர்ந்துகாெண்டே இருக்கிறாேம். ஆக கடுமையான ஊழ்வினை தாேஷம் ஒரு மனிதனை பாடாய்படுத்துகிறது. எந்த தாெழில் செய்தாலும் நஷ்டம் வருகிறது. அந்த நிலை இன்னும் அவனுக்கு 20 ஆண்டுகள் இருக்கும் என்று வைத்துக்காெள்வாேம். அந்த நிலை உள்ள ஒரு மனிதன் எமை நாடுகிறான். 'இன்னும் 20 ஆண்டுகள் உனக்கு கஷ்டம்தான் நீடிக்கும் என்று எமது வாக்கால் கூற இயலுமா? அவனுக்கு இருக்கின்ற கர்மவினைகளை எப்படி குறைக்க வேண்டும்? எந்த வினையை எப்படி மாற்ற வேண்டும்' என்றெல்லாம் நாங்கள் அனுமானம் செய்து இறையிடமும் உத்தரவைக் கேட்டு அதற்கு ஏற்றாற்பாேல் நாங்கள் செய்துகாெண்டே இருக்கிறாேம்.

*அஃதாெப்ப நிலையிலே அஃதாெப்ப மனிதன் வரும்பாெழுதெல்லாம் இதை செய், அதை செய்' என்றும், சில சமயங்களில் '03 மாதங்கள் ஆகட்டும், 06 மாதங்கள் ஆகட்டும். முன்பு உரைத்த வழிபாட்டை செய்' என்றும் கூறி அவனுடைய கர்மவினையை குறைக்க முயற்சி செய்கிறாேம். ஆனால் எமது வாக்கையாே, வாக்கின் நுட்பத்தையாே சரிவர புரிந்துகாெள்ள முடியாத நிலையிலே மனிதன் குழம்புகிறான். இங்கு வந்து விட்டாலாே, சித்தர்களின் வாக்கை கேட்டுவிட்டாலாே மறுதினமே எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று எண்ணுகிறான். தீரலாம். தீருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த அளவிற்கு ஒரு ஆன்மா தன்னை தயார் செய்து தகுதி படைத்திருக்கிறதா? என்று பார்க்கவேண்டும். பாெறுமை இருக்கவேண்டும்.*

*எனக்கு இப்படியெல்லாம் சாேதனை வருகிறது. நான் நம்புகிறேன். என் தாய், தந்தை இதை(ஜீவநாடி) நம்பவில்லை. என் மனைவி நம்ப மறுக்கிறாள். என் குழந்தைகள் நம்பவில்லை. அவர்களையும் உங்கள் வழியில் மாற்றுங்கள்' என்று காேரிக்கை வைப்பதும் நகைப்புக்குரியது (சிரிப்புக்குரியது). யாருக்கு இதில் எப்பாெழுது ஆர்வம் வரவேண்டும்? யாருக்கு இந்த வழி(ஜீவநாடி வழி) ஏற்புடையது என்றெல்லாம் பிறக்கும்பாெழுதே விதி தீர்மானித்துவிடுகிறது. அதைத் தாண்டி எம்(அகத்திய மாமுனிவர்) வழியில் வரக்கூடாத மனிதனை வேறு வழியில்லாமல் இங்கு வருகின்ற மனிதன் அழைத்துவந்தாலும் திசை மாறிதான் செல்வான்.*

*யாரையாவது அழைத்துவந்து 'இவன், எனக்கு வேண்டிய மனிதன். நல்ல அறப்பணிகள் செய்கிறான். இவனுக்கு வாக்கைக் கூறுங்கள் குருதேவா' என்றால், அந்த மனிதனின் அந்த பிறவியை மட்டும், ஒரு சில கால பழக்கம் மட்டுமே இங்கு வருகின்ற மனிதனுக்குத் தெரியும். ஆனால் அவனின் ஆதியாேடு அந்தரங்கம் அனைத்தும் எமக்குத்(அகத்திய மாமுனிவர்) தெரியும். அவனுக்கு வாக்கு உரைப்பதால் எவ்விதமான பலனும் இல்லை என்பது எமக்குத் தெரியும். அது மட்டுமல்லாது பல்வேறு மனிதர்கள் மூடர்களாகவே பிறந்து, மூடர்களாகவே வாழ்ந்து, மூடர்களாகவே இறக்கிறார்கள். அது அவனின் கர்மவினை. அஃதாவது அவர்களை பாெறுத்தவரை புறத்தாேற்றம் என்பது மிக முக்கியம்.*

*ஒரு ஆன்மீக அமைப்புக்கு செல்ல வேண்டும் என்றால் அந்த ஆன்மீக அமைப்பு உலகியல் ரீதியாக பலரும் அறிந்த ஒன்றாக இருக்கவேண்டும். இவன் உலகியல் ரீதியாக யாரையெல்லாம் மதிக்கிறானாே அவர்கள் எல்லாம் அங்கு வந்து பாேக வேண்டும். அந்த புறத்தாேற்றம் ஜாெலிக்க வேண்டும். அங்கு அவன் யாரை சந்திக்கிறானாே, எந்த சந்தியாசியை சந்திக்கிறானாே, அந்த பாேதகன் மிக உயர்ந்த இடத்திலே அமர்ந்துகாெண்டு மிகவும் ஆணவத்தாேடு நடந்து காெண்டாலும் அவனை சுற்றி பல்வேறு மனிதர்களும் இருக்க வேண்டும். அப்பேற்பட்ட மனிதனைதான் ஞானி என்றும், இறையருள் பெற்றவன் என்றும் பல்வேறு மனிதர்கள் நம்புகிறார்கள். தனம் இல்லாமலும், ஒரு கிழிந்த குடிசையில் அமர்ந்துகாெண்டும், ஒரு அழுக்கு துணியை சுற்றிக்காெண்டும் யாராவது ஒருவன் பாேதனை செய்தால், யாராலும் அந்த ஞானியை அடையாளம் காட்ட முடியாது. ஞானிகளும் தன்னை நாடி வருகின்ற மனிதர்கள் ஆயிரக்கணக்கில் வரவேண்டும் என்று எண்ணுவதில்லை. ஒரு சிலர் வந்தாலும், உண்மையைப் புரிந்துகாெண்டவர்கள் வந்தால் பாேதும் என்று என்றுதான் எண்ணுகிறார்கள்.*

*அதுபாேல்தான் இந்த ஜீவ அருள் ஓலையும்(ஜீவநாடி). இது எல்லாேருக்கும் ஏற்றது அல்ல. இதைப் புரிந்துகாெள்வதற்கும் ஒரு மனிதனின் ஜாதகத்தில் சில ஜாதக பலன்கள் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் லக்னத்தை சுபகிரகங்கள் பார்க்கவேண்டும். அதிலும் குரு பார்க்க வேண்டும். (இவ்வாறு) இல்லாத மனிதர்களை எத்தனை முறைதான் அழைத்து வந்தாலும், பாேராடி எடுத்து கூறினாலும், இங்கு அமர்ந்து நல்ல பிள்ளைபாேல் கேட்டுவிட்டு பிறகு வெளியே சென்று 'இவையெல்லாம் ஏற்புடையதல்ல. இதையெல்லாம் நம்பமாட்டேன்' என்று கூறிவிட்டு, எங்கு சென்றால் ஏமாறுவானாே, அங்கு சென்றுதான் ஏமாறுவான். இவையெல்லாம் அவனவன் கர்மவினை என்று எடுத்துக்காெண்டு இங்கு வருகின்றவர்கள் அமைதியை கடைபிடித்து எமது வழியில் வர நல்லாசிகள் கூறுகிறாேம்.*


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

எத்தனையோ எதிர்பார்ப்புடன் அகத்தியரை "நாடியில்" நாடி  அருள்வாக்கு கேட்கிற மனிதர்கள் நம்மிடை உண்டு. அவர் சொல்கிற எத்தனையோ பரிகாரங்களை செய்தும், நாம் எதிர்பார்ப்பது நடக்க தாமதமாகலாம். வருத்தப் படுவது வேண்டாம். அகத்தியப் பெருமானே, ஏன் என்று, அதற்கான காரணங்களை, பல தருணங்களில் விளக்கியுள்ளார்.

அகத்தியப் பெருமான் நாடியில் வந்து பலமுறை கூறிய அறிவுரைகளை, என் நண்பர் விவரித்த விஷயங்களை, எளிய முறையில், இங்கு தொகுத்து தந்திருக்கிறேன். அகத்தியப் பெருமான் அருள் தந்தும் ஏன் நடக்கவில்லை என்று நினைத்திருப்பவர்களுக்கும், நம்முள்ளே எழுந்து இன்றுவரை  விடை கிடைக்காமல் இருக்கும் ஒரு சில கேள்விகளுக்கும், இங்கு கண்டிப்பாக பதில் இருக்கும். அதை சரியாக தரம் பிரித்து பார்த்து, உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப, உங்களுக்கு அகத்தியர் கூறுகிற பதிலாக எடுத்துக் கொண்டு, அதன்படி நடந்து, பின்னர் அமைதி உங்களுக்குள் தவழ்ந்தால், இவைகள் உங்களுக்கென அகத்தியர் கூறிய பதில் என்று உணர முடியும்.
அகத்தியர் ஒரு சித்தர். அவரை நாடிக் கேட்கும் பொழுது நல்வழி காட்டுவார். நூற்றுக்கு தொண்ணூறு பேருக்கு நல்ல வழி, நல்ல பயன் கிடைக்கிறது. மற்றவர்கள், பொறுமையாக , மறுபடியும், மறுபடியும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயம் அவர்களுக்கும் அருள் புரிவார். இங்கு நம் கடமை என்பது, பரிகாரங்களை செய்வதோடு மட்டும் அல்லாமல், பொறுமையாக, நிறைய நல்ல விஷயங்களை நம்பிக்கையோடு செய்து கொண்டிருக்க வேண்டும். மனம் தளரக்கூடாது. கண்டிப்பாக நல்லது நடக்கும்.
பொதுவாக அகத்தியர் அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் வாக்கு கொடுப்பதில்லை. சோதனைகளை உண்டாக்கி, "உண்மையில் அவன்/அவள் நம்பிக்கையோடு வந்திருக்கிறார்களா? இல்லை சுயநலத்திற்காக வந்து கேட்கிறார்களா என்பதை அறிந்த பின்னர்தான், தனது தவவலிமையை கொண்டு, வியத்தகு காரியங்களை செய்து காட்டுவார். ஆகவே, கேட்பதில், நாம்தான் மிகத்தெளிவாக இருக்க வேண்டும். கேட்பது, நிலைத்து நிற்கும் விஷயங்களாக இருந்தால். நிச்சயமாக கிடைக்கும்.
அகத்தியர் வாக்கு சில சமயம் பொய்த்துவிட்டது போல் தோன்றும். ஆனால், சரியான நேரத்தில் அது விஸ்வரூபம் எடுத்து மீண்டும் பிரம்மாண்டமாக வெளியே வரும். இது தான் உண்மை.
"காரணமில்லாமல் பொறுத்திரு என்று அகத்தியன் கூற மாட்டேன். இது அவசரமான உலகம். பணம் கொடுத்தால் எதையும் சாதித்து விடலாம் என்று நம்புகிறார்கள். கலியுகம் என்பதால் அப்படி நடக்கவும் செய்கிறது. எப்போதைக்கு எப்போது எவன் ஒருவன் அகத்தியனிடம்  முழு நம்பிக்கையோடு வந்து வாக்கு கேட்கிறானோ அவனை நானே கைபிடித்து தூக்கி அழைத்துச் செல்வேன். நம்பிக்கை இல்லாதவர்களைப் பற்றி பொருட்படுத்தவே மாட்டேன். ஏனெனில், என்னை நம்பி வருபவர்களுக்கு பிற்காலத்தில் எந்தவிதத் துன்பமும் வரக் கூடாது. அவர்களின் எதிர்காலத்தை பிரம்மாவிடம் கேட்டு பிரம்மாவின் அனுமதியோடு அவர்களுக்கு நல்லது செய்வேன். இதற்கு சில காலம் ஆகலாம். பலருக்கு பிரம்மா இரக்கப்படாமல் கூடப் போகலாம். பிரம்மா மறுத்துவிட்டால், அதை நான் அப்படியே என் பக்தர்களுக்கு சட்டென்று நான் சொல்லிவிடமாட்டேன். மீண்டும் பிரம்மாவின் மனதை சாந்தப்படுத்த முயற்ச்சிப்பேன். எனது வேண்டுகோளை பிரம்மா உடனடியாக ஏற்றுவிட்டால் என் பக்தர்களுக்கு உரிய எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைப்பேன். இது நடக்கும், நடக்காது என்று வெட்டு ஒன்று துன்று ரெண்டாக சொல்லும் பழக்கம் அகத்தியனுக்கு இல்லை, அப்படிச் சொல்ல ஆரம்பித்தால் நூற்றுக்கு ஒருவர், இருவரைத் தவிர வேறு யாருக்கும் எந்தக் காரியமும் நடக்காது. "பொறுத்திரு" என்று சொன்னால் அவர்களுக்காக அகத்தியன் போராடிக் கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம். பக்தர்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறுகிறார். சரியாக புரிந்து கொள்வது நமது கடமை, பொறுமை மேலும் நல்லதை செய்யும்.
அனுபவப்பட்ட பின்தான் பலருக்கும் புரிகின்றது - பிரார்த்தனையும், பெரியோர்களின் வழிகாட்டலும்தான் ஒருவரை சோதனையிலிருந்து காப்பாற்றுகிறது என்று. நாம்தான் அவசரக் குடுக்கையாக நடந்து கொள்கிறோம், என்பதே அகத்தியரின் முடிவு.
அகத்தியர் சொன்னால் எல்லாமே நடக்கும் என்பது பொது விதிதான். ஆனால், சம்பந்தப்பட்டவர்களும்  தங்கள் பொறுப்பை உணர்ந்து அதன்படி நடந்து கொள்ளவேண்டும். ஒருவர், இருவர் என்றால் அகத்தியர் உடன் ஓடி வந்து உதவி செய்வார். ஒரு நாளைக்கு 1000 பேர் வந்து முறையிடுகிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் அருள் பாலிக்க வேண்டும் என்று அகத்தியருக்கும் ஆசைதான். ஆனால் அவருக்கும் எத்தனையோ பிரார்த்தனைகள் இருக்கின்றன. த்யானம் செய்ய வேண்டும். தெய்வம் இடும் கட்டளைகளை/கடமைகளை செய்யவேண்டும். அதற்காக, அவர் பல அவதாரங்கள் எடுத்து எல்லோரையும ் நிறைவு செய்ய முடியாது. எனினும் படிப்படியாக ஒவ்வொருவருக்கும் உதவி செய்வார். அதுவரை அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என அகத்தியப் பெருமானே பல முறை கூறியுள்ளார்.
அகத்தியப் பெருமான் சொன்ன பரிகாரங்களை செய்துவிட்டு, அடுத்த நாளே பலனை எதிர்பார்ப்பது தவறு. சிலருக்கு அவர்கள் செய்த கர்ம புண்ணியத்தால் உடனடியாக பலன் கிடைத்து விடுகிறது. பலருக்கு தாமதம் ஏற்படுகிறது. ஆதலில், பொறுமை, நம்பிக்கை  மிக அவசியம்.
குறுக்கு வழியில் பணம் சேர்ப்பவர்கள் எல்லோரும் பின்னொரு காலத்தில் அவல நிலைக்குத்தான் ஆளாக வேண்டிவரும். சிலருக்கு வாரிசு இல்லாமலே போய்விடும். பலருக்கு இருந்தும் அனுபவிக்க முடியாத நிலைக்கு நோய்கள் தாக்கும். இவை எல்லாம் உத்தேசித்துத்தான் "பொறுத்திரு சிலகாலம்"  என உரைக்கிறார்.
கர்மவினையை அனுபவிக்காமல் யாரும் தப்பிக்க முடியாது. அது இறைவன் இடுகின்ற கட்டளை.
ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அகத்தியர் ஒரு வழிகாட்டி. சிலவற்றை நேரடியாகவும் பலவற்றை மறைமுகமாகவும் சொல்வார். பயன்படுத்திக் கொண்டு செயல்படுவது அனைவருக்கும் நல்லது. அகத்தியர் சொன்னது நடக்கவில்லை என்றால் "விதி" இன்னும் இரங்கவில்லை என்று அர்த்தம். இதற்காக அகத்தியரை பழி சொல்வதில் அர்த்தமில்லை. இங்கு நம்செயல் சரி இல்லை, குறைந்த பட்சம், அகத்தியர் வாக்கில் நம்பிக்கை இல்லை, பக்தி இல்லை என்று அர்த்தம். முதலில் அவைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
எல்லோரும் அவரை தேடி வந்து, நாடியில்  வாக்கு கேட்பார்கள். ஆனால், முன் ஜென்மத்தில் அகத்தியரை வழிபட்டதால், இந்த ஜென்மத்தில் ஏழ்மையில் பிறந்தும், நாடியை அவர்கள் இருக்கும் இடத்திற்கு தூக்கிக் கொண்டு போய், அவர்களுக்காக அகத்தியர் நாடியில் வந்து அருள்வாக்கு கொடுத்து, அவர்கள் வாழ்க்கை செம்மையான பல நிகழ்ச்சிகள் உண்டு. அப்படிப்பட்ட புண்ணிய நிலைக்காக, இந்த ஜென்மத்திலேனும் நல்லதை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.
வீட்டில் நடத்தப்படும் யாகத்தின் புகை, அந்த வீட்டில் உள்ள குடும்பத்தாரை சுற்றி நின்று காப்பாற்றும். அதனால்தான் அகத்தியர் குறைந்தது, வாரத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில், வீட்டில் சாம்பிராணி புகை போடச் சொல்கிறார். அப்படி புகைக்கும் சாம்பிராணியில், சிறிதளவு நெய் சேர்த்துக் கொண்டால், யாகபலன் (பாதுகாப்பு) எளிதில் அனைவருக்கும் கிடைக்கும்.
நான்கு வேதங்களில், அதர்வண வேதமும் ஒன்று. அது மாந்த்ரீகத் தன்மை கொண்டது. இதனை பிரயோகிப்பவர்கள் தங்களை தாங்கள் உடல் சுத்தம் செய்து கொள்வதோடு, மற்றவர்களுக்கு மாந்த்ரீகத்தால் உதவி செய்யும் முன்பு தங்களைத் தாங்களே ஒரு பாதுகாப்பு வளயம் போட்டுக் கொள்ள வேண்டும்.  பெரும்பாலும் அதர்வண வேதத்தை யாரும் தவறாக பயன்படுத்துவதில்லை. ஒரு சிலர் தவறாக உபயோகப்படுத்தி, மற்றவர்களிடமிருந்து பணத்தை பிடுங்குகின்றனர். அதர்வண வேதத்தின் பெருமை இப்படிப்பட்டவர்களால்தான் வீழ்ச்சி அடைகிறது.
நாம் முற்பிறவியில் செய்த வினைதான் செய்வினையாக இந்த பிறவியில் நம்மை ஸ்ரமப்படுத்தும். இதை உண்மையான பிரார்த்தனையால் சரி செய்து கொள்ளலாம். ஆனால், அதை செய்பவர்கள் (மந்திரவாதம்) குடும்பம் சூன்யமாகிவிடும், ஏன் அவர்களுக்கு (செய்பவர்களுக்கு) மரணம் கூட, துர்மரணமாகிவிடும். (தயவு கூர்ந்து யாரும் இதன் பக்கம் சென்று விடாதீர்கள்.)
கணபதி யாகமும், மகாசுதர்சன யாகமும் செய்துவிட்டு ஒரு வீட்டுக்கு குடியிருக்கப் போனால், நாம் அறியாமலேயே அந்த வீட்டில் இருக்கும் துர்சக்திகள், பலமிழந்துவிடும். பாதிப்பில்லாமல் தப்பிக்கலாம். நிம்மதியாக வாழலாம். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை இந்த யாகங்களை செய்வது,  வைத்துக்கொண்ட (தெரிந்தோ/தெரியாமலோ) கழிவுகளை அகற்றும். குற்றால மலையில் உள்ள மலை பாம்புகளின் கொழுப்பு செண்பகதேவி அருவியில் கலந்து வருவதால், அது குஷ்ட நோயை குணப்படுத்தும் சக்தி கொண்டதாக மாறிவிடுகிறது. சதுரகிரியில் சித்தர்கள் இதை குணப்படுத்துகிறார்கள். தீர்த்தாமலையே ஒரு மூலிகை மலை என்பதால் ஆறு இடங்களில் சிறு அருவிபோல் மலைப் பாறையில் இருந்து தண்ணீர் கொட்டும். இது மருத்துவ குணம் கொண்டது. அந்த தீர்த்தமும் குஷ்டம் போன்ற கடுமையான எந்த சரும நோயையும் தீர்க்கும்.
குறுக்கு வழியில், தகாத வழியில் பொருள்/செல்வம் ஈட்டியவர்களுக்கு, அகத்தியர் துணை போவதில்லை. அவரவர் கர்மாவை அவர்களே அனுபவிக்கட்டும் என்று விட்டுவிடுவார். அதே சமயம் அவர்களை உயிர் ஆபத்திலிருந்தும் காப்பாற்றுவார்.  அது கூட, என்றேனும் அவர்கள் திருந்தி வாழட்டுமே என்கிற பரந்த எண்ணத்தில்தான்.
கோவில் சொத்தை கொள்ளை அடித்தால், சம்பந்தப்பட்டவர்களது, குடும்பம், வாரிசு பிற்காலத்தில், பைத்தியமாக வீதியில் ஆலயவேண்டிவரும், அல்லது மிகப் பெரிய விபத்தில் உடல் உறுப்புக்களை இழக்கவேண்டி வரும், அல்லது மரணம்வரை படுத்த படுக்கையில் விழ வேண்டிவரும். அதிலும், நரசிம்ஹர், ஆஞ்சநேயர் கோவில் சொத்துக்களானால், நிச்சயம் இப்படிப்பட்ட தண்டனைகள் உண்டு. இந்த தண்டனை இறைவனால் விதிக்கப் படுகிறது.
பக்தியும், நம்பிக்கையும் இல்லாத இடத்தில் வெற்றி இல்லை.
நோயுள்ளவன்தான் மருந்து சாப்பிடவேண்டும். அது போல அவரவர் கர்மாவுக்கு, அவரவர் தான் பரிகாரம் செய்ய வேண்டும்.

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in