Sunday, 19 August 2018

பொது நாடி வாக்கு 19.08.2018




உலகெங்கும் உள்ள அகத்திய பக்தர்களே உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி இன்று ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி பொகளூரில் அகத்தியர் ஜீவநாடி படிக்கப்பட்டது

அதில் ஜீவ நாடி வாசிக்கும் இறை சித்தர் செந்தில் ஐயா அவர்களுக்கு சில பொதுவான விஷயங்களை அகத்தியர் அருள் உரைத்துள்ளார்

அவை கீழ்வருவன :

கேரளத்தை தொடர்ந்து தமிழகத்திலும் மழை பெருவாரியாக வரும்

தமிழகத்திலும் மழையினால் பெரு வெள்ளப்பெருக்கு ஏற்படும்

அதில் முக்கியமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் வட மாவட்டங்களுக்கு பாதிப்பு குறைவாக இருக்கும்

அநீதியும் அதர்மங்களும் பெருகிவிட்டதால் இவ்வாறு இயற்கை சீற்றம் ஏற்படுகிறது என்று அகத்தியர் உரைத்துள்ளார்

இயற்கை சீற்றங்களிலிருந்து தப்பிக்க நல்ல யாகங்கள் மற்றும் நல்ல யோகங்கள் செய்வதால் இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும் அகத்தியர் ஐயா அவர்கள் உரைத்துள்ளார்

மழை நிற்காமல் சுமார் 90 நாட்களுக்கு விடாமல் பெய்யும் என்றும் உரைத்துள்ளார்

இவை யாவும் வருகின்ற செப்டம்பர் அக்டோபர் நவம்பர் 2018 ஆகிய மாதங்களில் நடந்து தீரும் என்றும் அவர் உரைத்துள்ளார்.

இந்த இயற்கை சீற்றங்கள் மழையினால் மட்டுமே நிகழும் என்றும் வேறு வகையில் நிகழாது என்றும் அவர் உரைத்துள்ளார்

அகத்திய பக்தர்கள் யாவரும் இந்த இயற்கை சீற்றங்களிலிருந்து காப்பாற்றப்படுவார் என்று நாங்கள் அகத்தியரை முழுமையாக நம்புகிறோம், சுபம்.