Saturday, 2 September 2017

"அகத்தியம்" தமிழ் இலக்கண நூல்



 ⁠⁠⁠அகத்தியர் ஒரு நாள் திருக்கயிலை மலையில் இதுவரை தாம் உணர்ந்து அறியாத திவ்விய நறுமணம் ஒன்றினை உணர்ந்தார். அதனைப் பற்றி கயிலைநாதனிடம் வினவினார். அந்த நறுமணம் அங்கிருந்த ஓலைச்சுவடிகளின் நறுமணம் என அறிந்தார். அச்சுவடிகளில் இருந்த மொழி நறுமணத்தோடு, இனிமையும் மிகுந்து இருந்ததால் அதனைத் தமிழ் என்றார். அம்மொழியே தமிழ் மொழியாம்.
     “என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்டான்“ (கம்பராமாயணம்)
சிவபிரான் தமிழ் மொழியை அவருக்கு உபதேசம் செய்தார். தமிழ்மொழியுடன்தான் அகத்தியர் தென்திசை வந்தார். காடு திருத்தி நாடாக்கினார். 1) த்ருணதூமாக்கினி (தொல்காப்பியர்) 2) அதங்கோட்டு ஆசான் 3) துராலிங்கர் 4) செம்பூட்சேய் 5) வையாபிகனார் 6) வாய்ப்பியனார் 7) பனம் பாரணனார் 8) கழாரம்பனார் 9) அவினயனார் 10) காக்கை பாடினியார் 11) நற்றத்தனார் 12) வாமனனார் என்னும் பன்னிருவருக்குத் தமிழ்மொழியை உபதேசம்  செய்தார்.
1) எழுத்திலக்கணம் 2) சொல்லிலக்கணம் 3) பொருளிலக்கணம் 4) யாப்பிலக்கணம் 5) அணியிலக்கணம் என்ற ஐவகை இலக்கணங்கள் அடங்கிய அகத்தியம்என்னும் தமிழ் இலக்கண நூலை இயற்றினார்.

No comments:

Post a Comment