Friday, 29 March 2024

தும்புரு தீர்த்தம்

 திருமலையில் வருடம் ஒருமுறை திறக்கப்படும் 

இந்த இடத்திற்கு சென்றால் வாழ்வில் அதிர்ஷ்டம் ஏற்படும் 

திருப்பதி திருமலை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது அது ஒரு புனித தலம் என்றும். வேங்கட மலையில் வேங்கடாசலபதியாக அருள்புரியும் பெருமாளை தினந்தோறும் பல லட்சம் பக்தர்கள் வழிபடும் வைணவ கோயில் என்பதும் தான்.

புனிதமான இந்த திருப்பதி திருமலை பகுதியை சுற்றி பல சிறப்பு வாய்ந்த இடங்கள் இருக்கின்றன. 

அப்படியான ஒரு இடம் தான் 

தும்புரு தீர்த்தம்


. இந்த தும்புரு தீர்த்தத்தின் சிறப்புகள் 

தும்புரு தீர்த்தம் எனப்படும் புனித தலம் பற்றி திருப்பதி செல்வோர்கள் பலரும் கேள்விப்பட்டிருந்தாலும், வெகு சிலர் மட்டுமே இந்த தீர்த்தத்திற்கு சென்றிருப்பார்கள். 

ஏனெனில் இந்த தும்புரு தீர்த்தம் திருப்பதி மலையின் அடர்ந்த காட்டிற்குள் இருப்பதாலும், வருடத்திற்கு ஒரு முறை சித்ரா பௌர்ணமி தினத்தன்று மட்டுமே இந்த தீர்த்தத்திற்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவதே காரணங்கள் ஆகும்.

தும்புரு தீர்த்தம் உருவானது குறித்து பல கதைகள் கூறப்படுகிறது. 

புராண காலத்தில் கந்தர்வ இனத்தை சார்ந்த பெண் ஒருத்தியை அவளது சோம்பல் குணம் காரணாமாக இந்த தும்புரு தீர்த்தத்தில் தேரையாக இருக்கும் படி சபித்து விட்டு சென்றான்.

பல காலம் இங்கேயே தேரை வடிவில் வாழ்ந்த அந்த கந்தர்வ பெண் அகத்தியர் மகரிஷி தனது சீடர்களோடு இந்த தீர்த்தத்திற்கு வருகை தந்த போது, இந்த தீர்த்தத்தின் மகிமையை பற்றி தனது சீடர்களுக்கு சொல்லிக்கொண்டிருந்த போது தேரை வடிவில் இருந்த பெண் சாப விமோச்சனம் பெற்று, மீண்டும் தனது பழைய நிலையை அடைந்ததாக தல புராணம் கூறுகிறது.

தும்புரு தீர்த்தத்தில் நீராடி வழிபடுபவர்களுக்கு துரதிர்ஷ்டங்கள் நீங்கி, அதிர்ஷ்டங்கள் பெருகும் என்பது பல நூற்றாண்டுகாலமாக பக்தர்களின் திட நம்பிக்கையாக உள்ளது. 

ஒவ்வொரு வருடமும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தும்புரு தீர்த்தம் செல்வதற்கான தேதிகளை திருப்பதி திருமலை தேவஸ்தானம் வலைதள பக்கத்தில் அறிவிப்புகளை வெளியிடும். 

ஒரே ஒரு தினமும் மட்டுமே அனுமதி என்பதால் ஏராளமான பக்தர்கள் தும்புரு தீர்த்தம் செல்ல கூடுகின்றனர்.

தும்புரு தீர்த்தம் செல்வதற்கு திருமலையில் இருக்கும் பாபநாசம் அருவியிலிருந்து 16 கிலோமீட்டர் தூரம் இயற்கை எழில் பொங்கும் அடர்ந்த காட்டிற்குள் பாறைக்கற்கள் நிறைந்த வழியாக நடந்து செல்ல வேண்டும். 

கடினமான நிலப்பகுதி என்பதால் இங்கு வேறு எந்த ஒரு வாகன வசதிகளும் கிடையாது. 

வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், உடல்நலம் குன்றியவர்கள் இந்த பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அடர்ந்த காட்டின் வழியே நெடுதூரம் செல்ல வேண்டியிருப்பதால் இப்பயணம் மேற்கொள்பவர்கள் தங்களுக்கு தேவையான அளவு உணவு, குடிநீர் போன்றவற்றை உடன் எடுத்து செல்வது நல்லது. 

இப்பயணத்தில் பக்தர்களுக்கு உதவ திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் ஆங்காங்கே உதவி மையங்கள் திறக்கப்பட்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்யப்படுகிறது.

Tuesday, 26 March 2024

அய்யனார் பெயர்கள்

 265 அய்யனார் பெயர்கள்:-


ஆயிரம் பெயர்கள் அய்யனுக்கு உண்டு அவற்றில் எனக்கு தெரிந்த  சில பெயர்கள் 


  அய்யனாரை பல  இடங்களில்   பல பெயர்களில் வழிபடுகிறார்கள்..எனக்கு தெரிந்த  சில பெயர்கள்


அய்யனாரை  சில  இடங்களில்

 சாஸ்தாவாகவும் வழிபடுகிறார்கள்


1   கரையடி காத்த  அய்யனார்           

2   அடைக்கலம் காத்த அய்யனார்

3   நீர்காத்த அய்யனார்


4   அருஞ்சுனை காத்த அய்யனார்

5   சொரிமுத்து அய்யனார்

6   கலியணான்டி அய்யனார்


7   கருங்குளத்து அய்யனார்

8   குருந்துனடய அய்யனார்

9   இளம்பாளை அய்யனார் 


10 கற்குவேல் அய்யனார்

11 கொண்னறயான்டி அய்யனார் 

12 செண்பகமூர்த்தி அய்யனார்


13 திருவேட்டழகிய அய்யனார் 

14 சமணர்மலை அய்யனார் 

15 கூடமுடைய  அய்யனார்


16 சிறை மீட்டிய அய்யனார் 

17 எட்டிமுத்து அய்யனார்

18 செகுட்ட அய்யனார் 


19 வெட்டுடைய அய்யனார் 

20 மருது அய்யனார் 

21 வேம்பூலி அய்யனார் 


22 நிறைகுளத்து அய்யனார்

23 ஆதிபுதிரங்கொண்ட அய்யனார்

24 சித்தகூர் அய்யனார் 


25 பிரண்டி அய்யனார்

26 வீரமுத்து அய்யனார்

27 பாலடி அய்யனார் 


28 தந்தலை வெட்டி அய்யனார் 

29 கருமலை காத்த அய்யனார் 

30 அல்லல் தீர்த்த அய்யனார் 


31 ஹரி இந்திர அய்யனார் 

32 காடைபிள்னள அய்யனார் 

33 செல்லப் பிள்ளை அய்யனார் 


34 வீர பயங்கரம் அய்யனார் 

35 மாணிக்கக் கூத்த அய்யனார் 

36 வணங்காமுடி அய்யனார் 


37 குன்னிமலை அய்யனார் 

38 தூத்துவான் அய்யனார்

39 மாநாடு அய்யனார்


40 தலையூனி அய்யனார்

41 பொன்வண்டு அய்யனார்

42 பலவேசம் அய்யனார்


43 மருதமலை அய்யனார்

44 அல்லியூத்து அய்யனார்

45 வன்னிய அய்யனார்


46 எரிச்சீஸ்வர அய்யனார்

47 சுனை அய்யனார்,

48 வில்லாயுதம் உடைய அய்யனார் 


49 கோச்சடை அய்யனார்

50 மக்கமடை அய்யனார் 

51 வீரப்ப அய்யனார்


52 மஞ்சனீஸ்வர அய்யனார்

53 வெங்கலமூர்த்தி அய்யனார்

54 குரும்புடைய அய்யனார்


55 நீதியுடைய அய்யனார்

56 ஈடாடி அய்யனார்

57 செவிட்டு அய்யனார்


58 தேன்மலையாண்டி அய்யனார்

59 கலியுகமெய் அய்யனார்

60 கரந்தமலை அய்யனார்


61 பனையூருடைய அய்யனார்

62 அதிராம்சேரி அய்யனார்

63 மலம்பட்டி அய்யனார்


64 ஜடாமுனி அய்யனார்

65 ராசவெலி அய்யனார்

66 பொய் சொல்லாத மெய் அய்யனார்


67 அலங்கம்பட்டி அய்யனார்

68 புரோவர்த்தி அய்யனார்

69 ஐந்துமுடை அய்யனார்


70 அதினமிளகிய அய்யனார்

71 ஒடக்குலம் அய்யனார்

72 பாலாறுகொண்ட அய்யனார்


73 குன்னக்குடி அய்யனார்

74 குலம் அய்யனார்

75 வலையங்குளம் அய்யனார்


76 கருகப்பிள்ளை அய்யனார்

77 வெள்ளிமலை அய்யனார்

78 கருக்காச்சி அய்யனார்


79 பெரியகுளம் அய்யனார்

80 வளையங்குளம் அய்யனார்

81 செல்லபட்டி அய்யனார்


82 கடவுகாத்த அய்யனார்

83 செங்கமடை அய்யனார்

84 நல்லூடைய அய்யனார்


85 வல்லகுடி அய்யனார்

86 இடமறை அய்யனார்

87 சுண்டைக்காட்டு அய்யனார்


88 கூத்தினிகாட்டு அய்யனார்

89 வெள்ளவேடு அய்யனார்

90 அம்மச்சி அய்யனார்


91 நாகலிங்க அய்யனார்

92 உத்தம அய்யனார்

93 வெள்ளை வீர அய்யனார்


94 பெரியசாமி அய்யனார்

95 மூர்த்தி அய்யனார்

96 வேலங்கி அய்யனார்


97 சுயம்புலிங்க அய்யனார்

98 பராக்கிரப்பாண்டிப்பேரி அய்யனார்

99 வெற்றிவேல் அய்யனார்


100 ஐந்தருவி அய்யனார்

101 அழகிய அய்யனார்

102 குளத்தூ அய்யனார்


103 செம்புலி அய்யனார்

104அகலிகைசாபம்தீர்த்த அய்யனார்

105 படியேறும் அய்யானர்


106 குறும்பண்ட அய்யனார்

107 பேயாண்டி அய்யனார்

108 ஆறுமுக அய்யனார்


109 திருக்கோட்டி அய்யனார்

110 ஆதீனமிளகிய அய்யனார்

111 ஆனைமேல் அய்யனார்


112 வெங்கலமுடி அய்யனார்

113 சாகத அய்யனார்

114 வட்டத்தாழி அய்யனார்


115 பொன் அய்யனார்

116 புலியாண்டி அய்யனார்

117 சாத்த அய்யனார்


118 நடுவுடைய அய்யனார்

119 வேலடிபண்ணை அய்யனார்

120 சின்ன அய்யனார்


121 தேத்தாம்பட்டி மலையாண்டி அய்யனார்

122 வெள்ளுடைய அய்யனார்

123 வீரமலைஅய்யனார்


124 சோலைமலை அய்யனார்

125 குருவீரப்ப அய்யனார்

126 மஞ்சமலை அய்யனார்


127 செருவலிங்க அய்யனார்

128 சுண்டக்காட்டு அய்யனார்

129 அழகியவரத அய்யனார்


130 களத்திருடைய அய்யனார்

131 கலியுகவரத அய்யனார்

132 தண்டீஸ்வர அய்யனார்


133 வெள்ளந்திருவரசு வரத அய்யனார்

134 கரும்பாயிரம் கொண்ட அய்யனார்

135 நலலமுத்துஅய்யனார்


136 குன்னம் அய்யனார்

137 இராஜவளவண்டஅய்யனார்

138 பரமநாதஅயயனார்


139 பழங்குளத்து அய்யனார்

140 கொடைமுகி அய்யனார்

141 கரைமேல்அழகர் அய்யனார்


142 சிறைகாத்த அய்யனார்

143 மழைகாத்த அய்யனார்

144செல்வராய அய்யனார்


145 திருமேனி அய்யனார்

146 நல்லசேவு அய்யனார்

147 பூங்காவிடை அய்யனார்


148 முத்துபிரம்ம அய்யனார்

149 மெய்சொல்லி அய்யனார்

150 கலிதீர்த்த அய்யனார்


151 பெருவேம்பு அய்யனார்

152 தோளப்ப அய்யனார்

153 மோக்கமுடைய அய்யனார்


154 மெய்ஞானமூர்த்தி அய்யனார்

155 வளமுடைய அய்யனார்

156 கொத்தவல்லிஅய்யனார்


157 மஞ்சள்கூத்த அய்யனார்

158 கட்டியப்பஅய்யனார்

159 ஓலைகொண்ட அய்யனார்


160 நல்லகுருந்த அய்யனார்

161 பந்தமாணிக்க அய்யனார்

162 செல்லக்குட்டி அய்யனார்


163 காரியழகர் அய்யனார்

164 ஆலமுத்து அய்யனார்

165 சாம்பக மூர்த்தி அய்யனார்


166 வள்ளாள கண்ட அய்யனார்

167 குழந்தி அய்யனார்

168 கூரிச்சாத்த அய்யனார்


169 திருவீதிகொண்ட அய்யனார்

170 சிங்கமுடைய அய்யனார்

171 பொய்யாழி அய்யனார்


172 பிழைபொறுத்த அய்யனார்

173 வினைதீர்த்த அய்யனார்

174 வலதுடைய அய்யனார்


175 துல்லுக்குட்டி ஐயனார்

176 நீலமேக அய்யனார்

177 முடிபெருத்த அய்யனார்


178 மருதய அய்னார்

179 உருவடி அய்யனார்

180 பெருங்காரையடி மீண்ட அய்யனார்


181 பாதாள அய்யனார்

182 வழிகாத்த அய்யனார்

183 கருத்தக்காட்டு அய்யனார்


184 சுந்தரசோழ அய்யனார்

185 கீழ அய்யனார்

186 வடக்க அய்யனார்


187 திருவரசமுர்த்தி அய்யனார்

188 மைந்தனைக் காத்தாடையப்ப அய்யனார்

189 தாடையப்ப அய்யனார்


190 தொண்டமண்டலஅய்யனார்

191 இராம அய்யனார்

192 பெத்தபாட்டைஅய்யனார்


193 செல்லமுத்துஅய்யனார்

194 முதலியப்பஅய்யனார்

195 மருதப்பஅய்யனார்


196 பணங்காடி அய்யனார்

197 சேவூராயஅய்யனார்

198 கண்ணாயிரமூர்த்தி அய்யனார் 


199 தொரட்டை அய்யனார் 

200 சுப்பாணிகூத்த அய்யனார்

201 வழியடி அய்யனார்


201 காரியப்பஅய்யனார்

202 பொற்கண்டஅய்யனார்

203 துள்ளுவெட்டி அய்யனார்


204 கூரிச்சாத்த அய்யனார்

205 கிளிக்கூண்டு அய்யனார்

206 நல்லி அய்யனார்


207 ஈடாடி அய்யனார்

208 ஆதி அய்யனார்

209 பரமநாத அய்யனார்


210  ஸ்ரீ புலிக்கரை அய்யனார்

211 தடி கொண்ட அய்யனார்

212 குறுமலை பொய்யாலப்பன் அய்யனார்


213 அரியசுவாமி அய்யனார்

214  காரிய அய்யனார்

215 வெள்ளந்தாங்கி அய்யனார்


216 ஏரமுடி ஐயனார்

217 செங்கொழுந்து ஐயனார்

218 பொய்யாடமூர்த்தி ஐயனார்


அய்யானாரை  சில  இடங்களில் சாஸ்தா வாகவும் வழிபடுகிறார்கள்:-


219 ஆதிமணிகண்ட சாஸ்தா

220 பெருவேம்புடையார் சாஸ்தா

221 சமூகமடம் குளத்தய்யன் சாஸ்தா


222 அரிகரபுத்திர சாஸ்தா

223 குளகக்ரைசாஸ்தா

224 மடையுடையார் சாஸ்தா


225 கலைக்காவுடையார் சாஸ்தா

226 வேம்படி சாஸ்தா

227 எம்பெருமாள் சாஸ்தா


228 தர்ம சாஸ்தா

229 மருதவுடையார் சாஸ்தா

230 சௌந்தரிய சாஸ்தா

கரையடி காத்த  அய்யனார்  

கரையடி காத்த  அய்யனார்  


231 அய்யனார்பட்டி சாஸ்தா

232 மருங்கய்யன் சாஸ்தா

233 மேகமுடையார் சாஸ்தா

கரையடி காத்த  அய்யனார்  

கரையடி காத்த  அய்யனார்  


234 மருது உடையார் சாஸ்தா

235 சடையுடையார் சாஸ்தா

236 பூனுடையார் சாஸ்தா

237 வடமலை சாஸ்தா

238 பனையடியான் சாஸ்தா

239 எட்டுடையார் சாஸ்தா

240 ஹரிஹரபுத்திர சாஸ்தா

241 பட்டமுடையார் சாஸ்தா

242 தெற்கு உகந்த உடையார் சாஸ்தா

243 குளத்தூராயன் சாஸ்தா

244 கோயில் குளம் சாஸ்தா

245 மடையுடையார் சாஸ்தா

246 குளத்தூராய்யன் சாஸ்தா

247 தலைக்காவுடையாயார் சாஸ்தா

248 காரிசாஸ்தா கரவுடையார் சாஸ்தா

249 காரியமுடையார் சாஸ்தா

250 உலகுடையார்சாஸ்தா

கரையடி காத்த  அய்யனார்  

கரையடி காத்த  அய்யனார்  


251 அஞ்சனமெழுதிய கண்டன் சாஸ்தா

252 காரி அய்யன் சாஸ்தா

253 சடையுடைய கண்டன் சாஸ்தா

254 வெட்டுவெண்ணி கண்டன் சாஸ்தா

255 பிராஞ்சேரி கண்டன் சாஸ்தா

256 புன்னார்குளம்சாஸ்தா

257 ஊருக்குடைய கண்டன் சாஸ்தா

258 நயினார் உதய கண்டன் சாஸ்தா

259 புதுக்குளம் கண்டன் சாஸ்தா

260 பொன்னாயிரமுடைய கண்டன்சாஸ்தா

261 சடையுடைய கண்டன் சாஸ்தா

262 கான சாஸ்தா

263 குடமாடிசாஸ்தா

264 சுரைக்காவல் அய்யன் சாஸ்தா

265 அரி கோவிந்த சாஸ்தா🙏🙏🙏

சாப்பாட்டு மந்திரத்தின் பலன்


 

Thursday, 14 March 2024

"விநாயகா..கணேசா..என்னை காப்பாத்து பா!".. ஆக்ரோஷமாக வந்த யானை!.. மூதாட்டி கத்த கத்த நடந்த அதிசயம்🙏!

 "விநாயகா..கணேசா..என்னை காப்பாத்து பா!".. ஆக்ரோஷமாக வந்த யானை!.. மூதாட்டி கத்த கத்த நடந்த அதிசயம்🙏!




Wednesday, 13 March 2024

பாபநாசத்தில் தங்கி அகத்தியர் தரிசனம் செய்ய சுற்றுலா செல்ல வழிமுறைகள்

 பாபநாசத்தில் தங்கி அகத்தியர் தரிசனம் செய்ய சுற்றுலா செல்ல வழிமுறைகள்

https://kmtr.co.in/




Monday, 11 March 2024

குரோதி வருட தமிழ்ப் புத்தாண்டு

 மங்களகரமான குரோதி வருட தமிழ்ப் புத்தாண்டு வருட பிறப்பு வாக்கிய பஞ்சாங்கப்படி 13.04.2024 சனிக்கிழமை இரவு 08 மணி 15 நிமிடத்தில் ஸ்திர துலா லக்கினத்தில் சனி ஓரையில் குரோதி வருடம் பிறக்கின்றது.


விஷு புண்ணிய காலம் - மருத்துநீர் வைக்கும் நேரம்:-


13.04.2024 பிற்பகல் 04.15 மணி முதல் இரவு 2.15 மணி வரை

         (14.04.2024 - 12.15 AM) மணி வரை 


அணியும் ஆடைகள்:-


வெண்மையான பட்டாடை அல்லது வெள்ளைகரை அமைந்த பட்டாடை.


சங்கிரம தோஷ நட்சத்திரங்கள்:-


மிருகசீரிடம், திருவாதிரை, புநர்பூசம் 01,02,03 ம் கால்கள், சித்திரை, விசாகம் 04 கால், அனுஷம், கேட்டை, அவிட்டம்


கை விஷேடம் பரிமாறும் நேரங்கள்:-


14.04.2024 காலை 07.57 மணி முதல் 09.56 மணி வரை 


14.04.2024 காலை 09.59 மணி முதல் 12.01 மணி வரை 


14.04.2024 இரவு 06.17 மணி முதல் 08.17 மணி வரை 


15.04.2024 காலை 09.08 மணி முதல் 09.51 மணி வரை 


15.04.2024 காலை 09.55 மணி முதல் 10.30  மணி வரை 


"குரோதி வருட வெண்பா"

-------------------------------------------------


இடைக்காடரால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.


"கோரக் குரோதி தனிற் கொள்ளி மிகுங் கள்ளரினால் பாரிற் சனங்கள் பயமடைவார் - கார்மிக்க அற்பமழை பெய்யுமே மஃகங்குறையுமே சொற்பவிளையுண்டெனவே சொல்"

                  - இடைக்காடர்


பாடல் விளக்கம்:

             குரோதி தமிழ் ஆண்டு கோரமான வருடம். எங்கும் கொள்ளை களவு பகை பெருகும். திருடர்கள் மக்களை தாக்கி அழிப்பர். ஊரில் பயம் மிகுதியாகும். மழையும் தேவையான நேரத்தில் மிகவும் குறைவாகவே பொழியும். எங்கும் காய்கறிகளின் பற்றாக்குறை காணப்படும். பயிர்களும் அழிந்து போய் மிகவும் அற்பமான விளைச்சலைத் தரும் என்று வெண்பாவில் சொல்லப்பட்டுள்ளது.


குரோதி தமிழ் புத்தாண்டு 60 ஆண்டுகளில் 38வது ஆண்டாக உள்ளது. குரோதி என்றால் பகைக்கேடு என்று பொருள். குரோதி வருடத்தில் என்ன நடக்கும் வெண்பாவில் கூறப்பட்டுள்ளது.


பஞ்சாங்கம் கணிப்பு 2024-25

-------------------------------------------------------


2024ஆம் ஆண்டில் ஆதாயம் 47 ஆகவும் வருவாய் 71 ஆகவும் இருக்கும். புதிய வரிகள் விதிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். தனியார் நிறுவனங்கள் அதிக அளவிலான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.


குரோதி தமிழ் ஆண்டில் இயற்கை நிகழ்வுகளில் மழை வெள்ள பாதிப்பு அதிகமாக இருக்கும். 16 புயல்கள் உருவாகும். அதில் 4 புயல்கள் ஆரம்ப கட்டத்திலேயே வலுவிழந்து விடும்.9 புயல்கள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி கடும் சூறாவளி காற்றுடன் கனமழை பொழியும். வெள்ளம் அதிக அளவில் ஏற்படும்.


பூண்டு, வெங்காயம், புளி, மாங்காய், கடுகு, அரிசி விலை உயரும். மின்சார உற்பத்தி பாதிப்பால் மின்வெட்டு அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும். ரியல் எஸ்டேட் நிறுவனம் வளர்ச்சி அதிகரிக்கும். 


கண் நோய், இருமல், காதுவலி, விஷ காய்ச்சல் அதிக அளவில் மக்களை பாதிக்கும். புற்றுநோய்க்கு இந்தியா மருந்து கண்டு பிடிக்கும். வவ்வால்கள் தொல்லை அதிகமாக இருக்கும். 


கையில் பணம் வைத்திருப்பது குறையும். ஆன்லைன் வியாபாரம் சூடுபிடிக்கும். மோசடிகள் அதிகரிக்கும். பாக பிரச்சனைகள் சம்பந்தமாக அதிக வழக்குகள் ஏற்படும். போலீசார் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். 


வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களால் திருட்டு கைவரிசைகள் தமிழகத்தில் அதிகரிக்கலாம். பாரத திருநாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள அண்டை நாடான பாகிஸ்தான் அல்லது தெற்கு பகுதியில் உள்ள இலங்கை நமது நாட்டுடன் இணையும் சூழ்நிலை உருவாகலாம். 


சிறுபான்மையினர் வாழும் நாடுகளில் எல்லை பிரச்சனைகள் உருவாகி போர் மூளும் சூழல் உருவாகலாம். இந்தியாவில் பணப்புழக்கம் கடுமையாக பாதிக்கும். மின்சாரக்கட்டணம் கடுமையாக உயரும்.


குரோதி  சித்திரை மாதத்தில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.


குரோதி வருஷத்திய

தேவதை - அஜராபிரபு.

ராஜா - செவ்வாய்

மந்திரி - சனி, சேனாதிபதி,

அர்க்காதிபதி - சுக்கிரன்,

ரஸாதிபதி - குரு,

தானியாதிபதி - சூரியன்.


குரோதி தமிழ் வருடத்தில் ராஜாவாக செவ்வாய் வருவதால் பெருமளவு தீ விபத்துக்களும் வாகன விபத்துக்களும் உண்டாகும். அரசியல்வாதிகளுக்குள் சண்டையும் அதனால் குழப்பமும் உண்டாகும். குரோதி ஆண்டின் கடைசியில் அரசனுக்கு நோயும் கண்டமும் உண்டாகும். மந்திரியாக சனி வருவதால் நாட்டில் விலைவாசி உயரும். காய்கறிகள், கனிகள் விலை உயரும். அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படும் புதுவித நோய்கள் உண்டாகும். சேனாதிபதி, அர்க்காதிபதியாக சுக்கிரன் வருவதால் எல்லையில் போர் பயம் உருவாகும். காதல் திருமணங்கள் அதிகம் நடைபெறும். நாட்டில் நல்ல மழை பொழியும் பயிர்கள் செழித்து தானிய உற்பத்தி அதிகரிக்கும். விவசாயம் செழிக்கும்.


ரஸாதிபதியாக குரு வருவதால் கரும்பு விளைச்சல் அதிகரிக்கும். மஞ்சள் பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும். வருடம் முழுவதும் நல்ல மழை பொழிந்து விளைச்சல் அதிகமாகும். தானியாதிபதியாக சூரியன் வருவதால் சிவப்பு நிற பொருட்கள் விளைச்சல் அதிகமாகும். பீகார் மாநிலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். விளைச்சல் உற்பத்தி பாதிக்கும்.


குரோதி ஆண்டு கிரக நிலை:

--------------------------------------------------------

                  மேஷ ராசியில் சூரியன், குரு, மிதுனத்தில் சந்திரன், கன்னியில் கேது, கும்பத்தில் சனி, செவ்வாய், மீனத்தில் ராகு, புதன், சுக்கிரன் என நவகிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். இந்தாண்டு ஏப்ரல் 14, சித்திரை 1ம் தேதி, ஞாயிற்றுக் கிழமையில் மிதுன ராசியில் பிறக்கின்றது.


இந்தப்  புத்தாண்டு தினத்தின் சிறப்பு

----------------------------------------------------------------------- 


புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வதிலும், அலங்கரிப்பதிலும் தமிழர் செலவழிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது. புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும். வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும்.இத்துடன் கூட பல வீடுகளில், வெப்பத்தைத் தணிக்கும் நீர்மோர், இனிப்பைக் கூட்டும் பானகம் ஆகியவையும் அருந்தப்படுகின்றன. பின்னர் பருப்பு, வடை பாயசம் இவற்றுடன் கூடிய பெரிய விருந்து ஒன்றை, இந்த நாளில், மக்கள், குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினருட உண்டு மகிழ்கிறார்கள்.  இவ்வாறு நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் புதிய வருடத்தை மக்கள் துவக்குகிறார்கள்.


திருவிடைமருதூரில் கார் திருவிழாவும், திருச்சிராப்பள்ளி மற்றும் காஞ்சிபுரத்தில் மற்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. "மாங்காய்-பச்சடி" என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு உணவைக் கொண்ட ஒரு சிறப்பு விருந்தை குடும்பங்கள் ஒன்றாக அனுபவிக்கின்றன. உகாதி மற்றும் விஷூவின் போது தயாரிக்கப்படும் பொதுவான இனிப்பு சுவையான "பச்சடி" போன்ற உணவு வகைகளை ஒத்திருக்கிறது. இது வெல்லம், புளிப்பு பச்சை மாங்காய், துவர்ப்பு கடுகு, கசப்பான வேம்பு மற்றும் சிவப்பு மிளகாய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் கலவையாகும். 

வழக்கத்தின் மற்றொரு ஒருங்கிணைந்த பகுதி "பஞ்சாங்கம்" வாசிப்பது. வாசிப்பு பொதுவாக குடும்பத்தின் மூத்த உறுப்பினரால் செய்யப்படுகிறது. 


புத்தாண்டுக் கொண்டாட்டம்

------------------------------------------------------


தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை மாதம் முதல் நாள் அன்று அதிகாலையிலேயே துயில் எழுவது மிகவும் நல்லது. மற்ற தினங்களைப் போல அல்லாமல் இந்த சித்திரை மாதம் முதல் தினத்தன்று புத்தாண்டு பிறக்கும் புண்ணிய காலத்தில் உடல் வெப்பம் குறைந்து நோய்கள் தீரவும் தோஷ நிவர்த்திக்காகவும்  பல மூலிகைகள் சேர்ந்த மருத்துநீரை தலையிலும் உடம்பிலும் தடவி முதலில் நீராடுவது வழக்கம்.மருத்து நீரில் அனைவரும் குளியலை மேற்கொள்ள வேண்டும். மருத்து நீர் என்பது நமது முன்னோர்களால் தமிழ் வருடப் பிறப்பு அன்று குளிக்கும் போது பயன்படுத்தப்பட்ட ஒரு நீராகும். தற்கால தமிழர்கள் அதிகம் இதை பற்றி அறியாமல் இருக்க காரணம் இந்த மருத்து நீரை தயாரிக்க தேவையான பொருட்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்காததும், இதை தயாரிக்கும் முறை பற்றி அறியாததே ஆகும். எனினும் இந்த மருத்து நீரை தயாரிக்க நினைப்பவர்கள் ஒரு பாத்திரத்தில் சுத்தமான நீரை ஊற்றி அதில் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியால் செங்கழு நீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றில் சிறிதளவை போட்டு நன்கு காய்ச்சி நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டிலேயே இந்த மருத்து நீரை தயாரிக்க தெரியாதவர்கள், இப்புனித மருத்து நீரை, கோயில்களில் சேவை புரியும் அந்தணப் பெரியோர்களிடம் தயாரித்து தரும்படி கேட்டு பெற்று கொண்டு குளிக்க வேண்டும். 


குளிக்கும் போது தலையில் கொன்றை இலையையும், காலில் புங்கம் இலையையும் வைத்து குளிக்க வேண்டும். இப்படி செய்வதால் பிறந்திருக்கும் தமிழ் வருடத்திற்குரிய தோஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தோஷங்கள் நீங்க பெறும். மற்ற நட்சத்திரக்காரர்களும் இப்படி குளிப்பதால் அவர்களின் அனைத்து தோஷங்களும் நீங்கி, புதிதாக பிறந்திருக்கும் புத்தாண்டில் அதிர்ஷ்டங்கள் பெருகும். வெண்மையான பட்டாடை அல்லது வெள்ளைகரை அமைந்த பட்டாடைகளை அணிந்து கொள்வதால் பிறக்கின்ற புத்தாண்டு உங்கள் குடும்பத்தில் வளமையை கொடுக்கும் என்பது ஐதீகம்.

       பின்னர் உங்கள் வீட்டின் பூஜையறையில் பூரண கும்பம், கண்ணாடி, தீபம், போன்றவற்றை வைத்து, இஷ்ட தெய்வம் மற்றும் குல தெய்வ படங்களையும் தரிசித்து வணங்க வேண்டும். பிறகு உங்கள் வீட்டில் இருக்கும் வயதில் மூத்தோரான தாத்தா, பாட்டி, தாய், தந்தை மற்றும் இன்ன பிற பெரியோர்களை வணங்கி, அவர்களின் நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். பிறகு அருகிலுள்ள கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும். 


இந்த புத்தாண்டு தினத்தை உங்கள் குடும்பத்தோடு சேர்ந்து கொண்டாட வாழ்த்துக்கள். உங்கள் வீட்டில் தலை வாழை இலை விருந்தை அனைவரும் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.


புது வருட பிறப்பு நாளில் நல்ல செயல்களை மட்டுமே செய்யுங்கள்.  எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து விடுங்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இதுபோல ஒற்றுமையோடு ஆண்டு முழுவதும் இருக்க வேண்டிக்கொள்ளுங்கள்.


அனைவருக்கும் மங்களகரமான குரோதி   வருடம்  

தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

             - சித்தர்களின் குரல்.

Thursday, 7 March 2024

பாண தீர்த்தம் தரிசனம்


 

காகம் செலுத்திய இறுதி அஞ்சலி