Tuesday, 27 June 2023

ஒளவை பிராட்டியார் ஞான குறள்

 Source சித்தர்களின் குரல், சிவசங்கர்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid036FDPJUsvJzSNuYgFA5DZmvUQy4nh7NKWtUC88stFb8k4AhVN6eHfX2uHtH42eDTql&id=1615171208699125&mibextid=Nif5oz


ஔவையின் ஞானக்குறள் - 06

------------------------------------------------------

அமுத தாரணை


இந்த அதிகாரத்தில் என்தாயார் ஒளவை பிராட்டியார் நமது உடலில் அமிர்தம் ஊறும் இடங்களைக் குறித்துத் தான் ஔவை பாடியுள்ளார். அமிர்தமானது உடலில் நாக்குப் பகுதியில் ஐந்து இடங்களில் சுரந்து கொண்டிருக்கிறது. இது இனிப்புச் சுவையுடையதாக இருப்பதால் அமிர்தம் என்று அழைக்கப்படுகிறது.

(01) அமிர்தம் நாவின் நுனியில் சுரக்கிறது. இனிப்புள்ள ஊற்றுநீர் போன்ற சுவை உடையது.

(02) புவனாமிர்தம் நாவின் நடுவில் சுரக்கிறது. இளகின இனிப்பான சர்க்கரைப் பாகுவைப்போல் சுவையுடையதாக இருக்கும். ஞானக் கிரியைகள் செய்யும்போதும், ஞானநிலையில் வரும். நினைவுகளின் உணர்வுகளாலும் இவ் அமிர்தம் சுரக்கிறது. 

(03) மண்டலாமிர்தம் - நாவின் அடியில் சுரக்கிறது. குழம்பிய சர்க்கரைப் பாகுவைப் போல் சுரக்கிறது.

(04) ரகசியாமிர்தம் - உள்நாக்கின் அடியில் சுரக்கிறது. முதிர்ந்த சர்க்கரைப் பாகுவைப் போன்று சுரக்கிறது.

(05) மௌனாமிர்தம் - உள்நாக்கிற்கு மேல்புறம் சுரக்கிறது. வெகு இனிப்புள்ள குளிர்ந்த மணிக்கட்டியைப் போல் சுரக்கிறது. அனுக்கிரகத்தினாலும் துரியநிலை அனுபவத்தாலும் இவ் அமிர்தம் சுரக்கும்.


பாடல்:- 01

-----------------


"அண்ணாக்குத் தன்னையடைத்து அங்கு அமிர்து உண்ணில்

விண்ணோர்க்கு வேந்தனு மாம்"


பொருள்:-

           "சாதகன் பார்வையையும் மனத்தையும் ஒருமுகப்படுத்தி ஞான தவம் செய்யும்போது, பிரணவ உச்சியில் உள்ள நாக்கின் மத்தியிலே சுரக்கும் அமிர்தத்தை உண்டாக்கால், விண்ணோர்களாகிய தேவர்களுக்கு அரசனாகுவான்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

                  திருவடி ஞான தவம் செய்யும்போது பார்வைக்கும் மனதிற்கும் முக்கியப் பங்கு ஒன்றுள்ளது. அது பார்வையையும் மனத்தையும் அகாரத்தில் (வலது திருவடி) ஒருமுகப்படுத்தி உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதுதான். அப்போது பிரணவ உச்சியில் உள்ள அண்ணாக்குப் பகுதியின் மத்தியில் இனிப்புச் சுவையுடைய நீர் ஊறி கரக்கும். இது அமிர்த நீராகும். இதை அப்படியே உண்டுவிடவேண்டும். அப்படி உண்டுவிட்டால், சாதகன் தேவர்களுக்கெல்லாம் அரசனாகிவிடுவான்.


பாடல்:- 02

-----------------


"ஈரெண் கலையினில் நிறைந்தஅமிர்து உண்ணில்

பூரண மாகும் பொலிந்து" 


பொருள்:-

           "ஈரெண் - ஈரெட்டு, இரு எட்டு - பதினாறு கலைகளையுடைய சத்திர கலையாகும். அப்படி சந்திர கலையில் நிறைத்துள்ள அமிர்தத்தை உண்ணும் தேகம், சந்திரனைப் போல் பொலிவுற்று ஒளிவீசிக் கொண்டிருக்கும்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

                சந்திர கலைகள் பதினாறு கொண்டு ஒளிவீசிக் எண்ணிக்கையிலான கலைகளைக் கொண்டு ஒளிவீசிக் கொண்டிருக்கும். பௌர்ணமி நாட்களில் இந்த பதினாறு கலைகளின் ஒளிவீசும் வெண்ணிறப் பொலிவுகளை நாம் காண முடியும். சந்திரனின் பதினாறு கலைகள் பௌர்ணமி தினத்தன்றே பூரணமாக வெளிப்படும். அதுபோல சந்திர கலையில் பார்வையையும் மனத்தையும் ஒருங்குவித்து ஞான தவம் செய்தால், அமிர்தம் ஊறி ஊற்றாய் சுரக்கும். அந்த சந்திர அமிர்தத்தை உண்டுவிட்டால். சந்திரப் பிரகாசத்தைபோல நமது தேகம் அடைய வேண்டியதைப் பூரணமாய்ப் பெற்று ஒளிவீசித் திகழும்.


பாடல்:- 03

-----------------


"ஓங்கார மான கலசத்து அமிர்து

உண்ணில் போங்காலம் இல்லை புரிந்து" 


பொருள்:-

             "போங்காலமில்லை - சாகும் நிலையில்லை. மரணமற்ற நிலை இது. சாதகன் ஞான தவம் செய்யும்போது பிரணவத்தின் உச்சியில் சுரக்கும் அமிர்தத்தை உண்டுவிட்டால், அவனுக்கு மரணமற்ற பெருநிலையை அடைந்திடுவான்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

                 ஓங்காரம் இருக்கும் இடமே கலசம் என்று உவமையாக ஒளவை கூறியுள்ளார். அமிர்தம் கலசத்தில் இருப்பதாக சொல்லப்படுவதுண்டு, கலசம் என்பது நமது தேகம். தேகம் அமிர்தமாக மாற வேண்டுமென்றால், தேகம் அமிர்தத்தை சாப்பிட வேண்டும். ஞான கர்மத்தின்போது பருதி, மதி, சுடர் ஆகிய முக்கலைகளையும் ஒருங்கே அக்கினிக் கலையில் கூட்டுவித்து தவம் செய்யும் போது ஓங்காரமாகிய பிரணவத்தில் சுரக்கும் அமிர்தத்தை உண்டுவிட்டால், மரணமற்ற பெருவாழ்வினை அடைந்துவிடலாம். இறப்பை வெல்லும் உபாயம் இது.


பாடல்:- 04

-----------------


"ஆனகலசத்து அமிர்தை அறிந்து உண்ணில்

போனகம் வேண்டாமல் போம் 


பொருள்:-

              "போனகம் என்பது உணவு, ஆகாரம் என்று பொருள். சாதகன் அவனுடைய ஞான சாதனையில் அமிர்தம் இருக்கும் இடத்தை அறிந்து, அவ் அமிர்தத்தை உண்டால், அவனுக்கு வேறு ஆகாரம் எதுவும் தேவைப்படாது" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

                 ஞான சாதனை செய்யும்போது பல்வேறு, பலதரப்பட்ட அனுபவங்கள் தோன்றித் தோன்றி வந்து கொண்டே இருக்கும். அவற்றை எல்லாம் சாதகன் கடந்து, கடந்து முன்னேறிப் போய்க்கொண்டே இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் அவனுக்கு அமிர்த நீர் ஊறி உடலில் அண்ணாக்கில் சொட்ட ஆரம்பிக்கும். அவ்வாறு சாதகன் ஞான சாதனையின் வாயிலாக தலையைச் சுற்றிலும் தாமரை மலரைப் போல் எட்டு இதழ்கள் இருப்பதைக் காண்பான். அந்த எட்டு இதழ்த் தாமரையின் நடுப்பகுதியில் அமிர்தம் சுரப்பதை அறிவால் அறிந்து உணர்ந்து உண்பான். அவ்வாறு உண்ணுவிட்டால் சாதகனுக்கு உணவின் தேவையானது இல்லாமலே போய்விடும்.


                ஸ்ரீவித்தை தந்திரத்தில் சாதகனின் தலையைச் சுற்றிலும் எட்டு இதழ்களில் எட்டு தேவதைகள் சர்வ சம்க்ஷோபண சக்கரத்தில் வீற்றிருப்பதாகவும், அவர்கள் ஒளியுடலில் இருந்துகொண்டு, சாதகர்களுக்கு வேண்டியதைத் தருவதாகவும் ஒரு யோக முறை ஒன்று உண்டு. ஸ்ரீவித்யா உபாசகர்கள் இதை அறிவார்கள். அத் தேவதைகளை "அனங்க தேவதைகள்" என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த எட்டிதழ் பற்றி திருமூலர் அவர்களும் பின்வருமாறு கூறுவதை ஒப்பு நோக்கவும்.


"ஊறும் அருவி உயர்வரை உச்சிமேல்

ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு

சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்

பூவின்றிப் சூடான் புரிசடை யோனே"

                - திருமந்திரம்:2535


உடலின் உச்சியாகிய தலைப் பகுதியில் சுரந்து பாய்கின்ற அருவியை உடைய, உயர்ந்த மலை உச்சிக்கு மேலே, நதி எதுவும் இல்லாமல் தானே நிறைந்து, தனது நீரைக் கீழ்நிலங்களுக்கு பாயவிடுகின்ற ஓர் அதிசயக் குளம் உண்டு. அக்குளத்தில் சேரும், கிழங்கும் இல்லாமலே செழிப்பான ஒரு செழுங்கொடியிற் பூத்த அதிசயத் தாமரையும் ஒன்று உண்டு. அந்தத் தாமரைப் பூவைத் தவிர வேறு பூக்களை புரிசடையோனாகிய சிவன் சூடிக் கொள்வதில்லை. சேறில்லாத குளம் என்பது நமது இரு கண்களே. கண்கள் மட்டும்தான். புலவர்கள் மலருக்கு ஒப்பிட்டுள்ளார்கள். மலரினைப் போல கண்களும் சுருங்கி விரியும் தன்மை கொண்டது. கண்களில் வரும் நீரே ஊறி வரும் அருவியாகும்; பின் அதுவே ஓடிவரும் ஆறாக மாறிவிடும்.


"ஒருங்கிய பூவும்ஓர் எட்டித ழாகும்

மருங்கிய மாயா புரி, அதன் உள்ளே

சுருங்கிய தண்டின் சுழினையின் ஊடே

ஒருங்கிய சோதியை ஒர்ந்தெழும் உய்ந்தே"

                  - திருமந்திரம்:2528


நெஞ்சத் தாமரையானது சேர்ந்து காணப்படும் எட்டிதழ்த தாமரையென்று சொல்லப்படும். பெருமைமிக்கதாகிய மாயாபுரி என்னும் இவ்வுடம்பின் உள்ளே காணப்படும் சுழிமுனைத் தண்டின் உள்ளே அடங்கிய அறிவுப் பேரொளியினை ஞான தவத்தால் அருளால் ஆராய்ந்து பெற்றிடுங்கள். அதுவே உகந்த வழியாகும். இனி அப்பேரொளிப் பிழம்பினை நினைந்து நினைத்து உற்றுப் பார்த்துப் பார்த்து உய்ந்து ஆய்ந்து எழுங்கள் என்றவாறு. சிலர் சகஸ்ரதளத்தை எட்டிதழ்த் தாமரை என்றும் அழைப்பதுண்டு.


“ஆறேஅருவி அகங்குளம் ஒன்றுண்டு

தூறே சிவகதி ணுண்ணிது வண்ணமுங்

கூறே குவிமுலைக் கொம்பளையாள் உடன்

வேறேயிருக்கும் விழுப்பொருள்தானே”

              - திருமந்திரம்:2979


சீவனின் சென்னியில் உள்ள சகஸ்ரதளம் என்னும் குளத்தை, ஆறு ஆதாரங்களின் வழியே பாய்ந்து செல்லும் அருவியாகிய உடலின் உயிர்சக்தி வந்து நிரப்பும். கீழே உள்ள உயிர்சக்தியை மேல்நோக்கிச் செலுத்தும் சிவகதி மிகவும் நுண்ணியது. சீவன் பெறும் சிவகதியின் முடிவில், குவிந்த முலைகளை உடைய சக்தி தேவியுடன் அனைத்துக்கும் வேறாக இருக்கும் மேலான சிவமும் விளங்கும். குவிந்த முலைகள் என்பது நமது இரு கண்களே ஆகும். கண்களை தனியே எடுத்துப் பார்த்தால் அது குவிந்த முலைபோல் இருப்பதைக் காணலாம்.


பாடல்:- 05

-----------------


"ஊறும் அமிர்தந்தை உண்டியுறப் பார்க்கில்

கூறும் பிறப்புஅறுக் கலாம்"


பொருள்:-

               "ஊறும் ஞான அமிர்தத்தை ஞான தவத்தில் பிரணவ உச்சியில் பார்த்து வரும்போது வரக்கூடிய அமிர்தத்தை உண்டால் பிறவிப்பிணி எனும் பிறப்பை அறுத்துவிடலாம்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

               சென்னியில் ஊறிவரும் அமிர்தத்தை அண்ணாக்கில் நின்று உண்டுவந்தால், தேகம் வச்சிர தேகமாக மாறிவிடும். சுத்த தேகம் அமைந்துவிடும். சுத்த தேகத்திற்கு ஞான தேகம் அமையும் நிலை அடுத்தடுத்து உருவாகிக் கொண்டே போகும். செய்யும் ஞான தவத்தின் மூலாக்கினியில் அமிர்தமானது உருகி ஊறி அண்ணாக்கின் வழியே கீழே விழும். அதை உண்டு பருக வேண்டும். அமிர்தம் உண்டபின் அவனுக்கு மரணமில்லை. பிறப்பை அறுக்கும் அமிர்த (சாவா நிலை) நிலை இது.


பாடல்:- 06

-----------------


"ஞான ஒளிவிளக்கான் நல்லஅமிர்து உண்ணில்

ஆனசிவ யோகி யாம்"


பொருள்:-

             "யாரொருவன் ஞான தவத்தின் மகிமையால் ஞான ஒளியை உண்டாக்கி அதனால் அமிர்தம் உருகி வருவதை உண்பவனோ, அவனே சிவயோகி என்று அழைக்கப்படுவான்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

               சிவயோகியாகும் தகுதி இங்கு ஒளவையால் கூறப்பட்டுள்ளது. திருவடி ஞான தவத்தின் மூலமாக தேகத்தில் யோகாக்கினியை உண்டாக்கி, பின் அதை அக்கினிக் கலையில் கொண்டு போகும் தந்திரத்தை அறிந்து, அங்கு ஞான ஒளியினைக் கண்டுவிடும்போது, ஒளியின் வெப்பத்தால் அங்குள்ள அமிர்தமானது உருகி அண்ணாக்கின் வழியே தொண்டைப் பகுதியில் கீழிறங்கும். அந்த அமிர்தத்தைப் பருகிவிட்டால் சாதகன் பிறப்பை அறுத்து மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்றிடுவான்.


பாடல்:- 07

-----------------


"மேலைஅமிர்தை விளங்காமல் தான்உண்ணில்

காலனை வஞ்சிக்க லாம்"


பொருள்:-

            "பிரபஞ்சப் பெருவெளி எனப்படும் உச்சிக்கு மேலேயுள்ள துவாத சாந்த வெளியிலிருந்து, சூரியக் கலையின் வழியே கீழே இறங்கும் அமிர்தத்தை உண்டுவிட்டால், காலன் எனும் எமனை ஏமாற்றி இறப்பைக் தடுத்துவிடலாம்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

              ஞான தவத்தில் சாதகன் நன்கு முன்னேறிச் செல்ல வேண்டும், துவாதசாந்தத்தில் அக்கினிக் கலையின் சோதியைக் கொண்டு போய்ச் சேர்க்க தந்திரம் தெரிந்திருக்க வேண்டும். உச்சிக்கு மேலேயுள்ள இத்தளத்தில் இருக்கும் அமிர்தமானது சூரியக் கலையின் வெப்பத்தின் காரணமாக உருகி கீழே வரும். இந்த அமிர்தமானது சூரிய கலையினால் உருகி மூன்று உளுந்தளவு பிரமாணமே கீழே வருவதால் உடனே அது ஆவியாகி விடும். அதனால் அமிர்தம் வரும்போது காலதாமதம் செய்யாமல் உடனே உண்டுவிட வேண்டும் என்பதைத்தான் "விளங்காமல் தான் உண்ணில்" என்றார். அதன்பிறகு எமன் அருகில் வரமாட்டான். எமனை வென்று சாகா நிலையில் இருந்திடலாம்.


பாடல்:- 08

-----------------


கால்அனல் ஊக்கம் கலந்த அமிர்துண்ணில்

ஞானம் அதுவாம் நயந்து


பொருள்:-

             "காலனல் - கால் + அனல் - வாயுக்களோடு கூடிய அக்கினி. ஊக்கம் - பிரணவ உச்சி. பிராண, அபான வாயுக்களைக் கொண்டுபோய் அக்கினியில் சேர்ப்பித்து, பின் இம்மூன்றையும் கொண்டுபோய் பிரணவ உச்சியில் சேர்த்துவிட்டால் உண்டாகும் அமிர்தத்தை உண்டால் ஞானம் உண்டாகிடும்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

               பிராணன், அபான வாயுக்கள் என்பது அகாரத்திலும் உகாரத்திலும் செயல்படும் சிவ, சக்திக் கலைகளின் பெயர்களாகும். சிவத்தை சக்தியோடு கலக்க வேண்டும். சிவசக்தியை அக்கினியோடு கலக்க வேண்டும். பின் சிவசக்தி அக்கினையை பிரணவ உச்சிக்குக் கொண்டுபோய் கலக்க வைக்க வேண்டும். இக்கலப்பில் அங்கு ஒரு வேதியியல் மாற்றம் அதாவது இரசவாதம் நடைபெற ஆரம்பிக்கும், ரசவாதத்தின் போது வெளிப்படும் வெப்பத்தில் அமிர்தமானது. உருகி கொட்ட ஆரம்பிக்கும். இந்த அமிர்தத்தை உடனே பருகி விட்டால், ஞானம் உண்டாகிவிடும். ஞான தவத்தில் பெற்ற அறிவு நமக்கு அமிர்தத்தை உருவாக்கிக் கொடுத்துவிடும்.


பாடல்:- 09

-----------------


எல்லையில் இன்னமிர்தம் உண்டுஆங்கு இனிதுஇருக்கில்

தொல்லை முதல்ஒளியே ஆம்


பொருள்:-

             "தொல்லை முதல் ஒளி - பழமையாகிய ஆன்ம ஒளி.   பிரபஞ்சப் பெருவெளியின் எல்லையில் அமிர்தத்தை உண்டு இனிமையாக ஆனந்தமாக இருப்பதற்கு பழமை வாய்ந்த அந்த ஆன்ம ஒளியே முதல்காரணமாகும்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

            ஆதிகாலம் தொட்டு இருந்துவரக் கூடிய ஞான சாதனைகளில் காணப்படும் ஆன்ம ஒளியினால் மட்டுமே, சாதகன் துவாதசாந்த வெளியில் உள்ள பொற்தளத்தில் இருக்கக் கூடிய அமிழ்தை கொடுக்க முடியும். வேறெந்த தந்திரங்களினாலும் இவ் அமிழ்தை கொடுத்துவிட முடியாது. அதற்கு திருவடி ஞான தவச் சாதனையே பெரும் உறுதுணையாக சாதகனுக்கு இருக்கிறது. இப்படி அரிதிலும் அரிதான அமிழ்தை ஞான சாதனையில் உண்டு பருகி இன்புற்று ஆனந்தக் கூத்தாடலாம். நடராஜத் தத்துவம் இதைத்தான் மறைபொருளாய் சொல்லிக் கொண்டிருக்கிறது, தெருக்கூத்து ஆடுபவனா தில்லைநாதன்? ஞானக்கூத்தை ஆடுபவன் சிவன். அக்கினிக் கலைகளை நான்கு கைகளிலும் ஏந்திக் கொண்டு அவன் ஆடும் கூத்து இருக்கிறதே. அது ஞானக் கூத்து; சென்னிக் கூத்து: ராஜக் கூத்து; நடராஜக் கூத்து. பருதி, மதி, சுடர் கலைகள் ஒன்றுகூடும்போது இந்த ஆனந்தக் கூத்தை நாமும் கண்டு இன்புற்று மகிழலாம்.


திருமூலர் அவர்கள்,


"ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா

ஒளியுளோர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும்

ஒளியிருள் கண்டகண் போலவேறு ஆயுள்

ஒளியிருள் நீங்க உயிர்சிவ மாமே"

             - திருமந்திரம் :1819


என்று ஒளியே உயிர் என்றும், காணும் கண் என்றும், உணரப்படும் சிவம் என்றும் கூறியுள்ளார்.


பாடல்:- 10

-----------------


"நிலா மண்டபத்தில் நிறைந்த அமிர்துண்ணில் உலாவலாம் அந்தரத்தின் மேல்"


பொருள்:- 

            "நிலா மண்டபம் - சந்திர கலை இருக்கும் இடம். அந்தரம் - ஆகாயம். சந்திர மண்டபத்தில் நிறைந்து காணப்படும் அமிர்தத்தை உண்டால், ஆகாயத்தில் உலாவி (சஞ்சரித்தல்) வரலாம்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

                ஞான தவ சாதனையின்மூலம் ஆகாயத்தில் கமனம் செய்யும் யோகநிலை இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திரக் கலையின் ஒலியைக் கொண்டு போய் அக்கினிக் கலையில் சேர்க்கும்போது, அக்கினிக் கலையில் உள்ள ஒளி ஆற்றல் ஒலியோடு சேர்ந்து அவ்விடத்தில் பெரு ஒளி வெடிப்பை உண்டாக்கும். அது சந்திர மண்டலத்தை தாக்கும். அப்போது சந்திர மண்டலத்தில் உள்ள அமிர்தம் உருகி வரும். அந்த சந்திர அமிர்தத்தை உண்டால், ஆகாயத்தில் எவ்வித பிடிப்புமில்லாமல் அந்தரத்தில் மிதந்து கொண்டு எங்கும் சென்றுவரும் கமன ஆற்றல் சித்தித்திடும். ஆனால், சாதகன் இவ்வகை சித்திகளில் கவனம் வைத்தால், ஞானத்தை இழந்துவிட நேரிடலாம். கவனம் தேவை என்றும் எச்சரிக்கிறார்....


        - திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து

          சித்தர்களின் குரல் shiva shangar

Monday, 26 June 2023

சென்னை வாழும் சித்தர்


 

திருவண்ணாமலை வாழும் அதிசய புண்ணிய ஆத்மாக்கள்

 சுமார் 20 ஆயிரம் முறை இவர் கிரி வலம் வந்திருப்பார் போல... சிவாய நமஹ ஓம் அருணாச்சல ஈஸ்வ ராய நமஹ, 



Wednesday, 21 June 2023

கந்தர் அனுபூதி பாடல் 15


 




உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில்

 சோழ அரசர்களில் ஒருவர் பட்டத்து யானை மீது உலா வருகின்றபோது, யானைக்கு மதம் பிடித்தது. அரசனும் பாகனும் திகைத்திருந்தனர். அப்போது இறைவன் அருளால் ஒரு சேவல் ஓன்று வந்து பட்டத்துயானையின் மீது ஏறி யானையின் மத்தகத்தின் மீது மூக்கால் கொத்தியது. அதன் பின்பு யானை மதம் நீங்கி இயல்பு நிலைக்கு வந்தது. அந்த சேவல் ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. வில்வ மரத்தடியில் தேடிப்பார்த்தபோது சிவலிங்கமொன்ரு இருப்பதைக் கண்டு அவருக்கு கோயில் எழுப்பினான்.




Tuesday, 20 June 2023

ரஜினிகாந்த் இமய மலை அனுபவம்

 ரஜினிகாந்த் இமய மலை அனுபவம்




Monday, 19 June 2023

இது எந்த ஊர், எந்த கோவில் என்று தெரியவில்லை. அபிஷேகம் செய்யும் பால் மயில் கழுத்தில் உள்ள நீல நிறம் போல மாறுகிறது.

 இது எந்த ஊர், எந்த கோவில் என்று தெரியவில்லை. அபிஷேகம் செய்யும் பால் மயில் கழுத்தில் உள்ள நீல நிறம் போல மாறுகிறது.




Sunday, 18 June 2023

ஆயுள் தோஷம் போக்க

 ஆயுள் தோஷம் போக்க


சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம். சந்திரனுக்கும் ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் அமையாது. அவர்கள் மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுள் தோஷம் போக்கி ஆயுளை விருத்தியாக்கும்.

Sunday, 4 June 2023

இந்தூர் கஜரானா மஹா கணபதி

 இந்தூர் கஜரானா மஹா கணபதி


இந்தூர் ரெயில் நிலையத்தில்  இருந்து சுமார் இரண்டு அல்லது மூன்று கிலோ தொலைவில் நகரத்துக்கு உள்ளேயே உள்ள கஜரானா கணபதி ஆலயத்திற்கு நேரடியாக சென்று வர டெம்போ ஆட்டோ மற்றும் பஸ்கள் நிறைய கிடைக்கின்றன.


சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்பு பெருமை வாய்ந்த அஹில்யா இராணியின் கனவில் ஒரு முறை வினாயகர் தோன்றி தான் இந்தூரில் கஜரானா பகுதியில் உள்ள ஒரு குளத்தில் மூழ்கிக் கிடப்பதாகவும்  தன்னை வெளியில் எடுத்து ஒரு ஆலயம் அமைத்து வழிபடுமாறு கூறினாராம். கஜரானா என்ற பகுதி இந்தூரில் மிகவும் நெரிச்சல் மிக்க பகுதியாக இருக்க என்ன செய்வது என முதலில் குழம்பியவள் தன்னுடைய கனவு பற்றி மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்தப் பின் வினாயகர் கொடுத்தக் கட்டளையை மீறக் கூடாதென முடிவெடுத்து கஜரானாவில் இருந்த ஒரு குளத்தை சுத்தம் செய்து தூர் வாரச் செய்தார். அப்படி செய்கையில் அந்த குளத்தினுள் புதைந்து இருந்த வினாயகர் விக்ரகம் கிடைத்தது. என்ன ஆச்சரியம். அந்த பிள்ளையாரும் அவருடைய கனவிலே தோன்றிய வினாயகரும் ஒரே மாதிரி இருந்தனர். உடனே அந்த விக்ரகத்தை சுத்தம் செய்து அந்த குளத்தின் எதிரிலேயே அகம முறைப்படி ஆலயம் ஒன்றை எழுப்பி விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்து 1735 ஆம் ஆண்டு அந்த ஆலயத்தில் பூஜைகளைத் துவக்கினாராம்.


சுமார் ஆறு அடி உயரமுள்ள வினாயகரின் சிலைக்கு இரு பக்கத்திலும் இரண்டு மனைவிகளை வடிவமைத்து உள்ளனர். அந்த ஆலயத்தில் ஏழு அல்லது எட்டுத் தலைமுறையாக பூஜைகளை செய்து வரும் பண்டிதர் அதன் பெருமையை மனம் மகிழ்ந்து கூறினார். பண்டிகை தினங்களில் முக்கியமாக புதன் கிழமைகளில் நடு இரவுவரை நீண்ட வரிசையில் மக்கள் நின்றிருந்து வினாயகரின் அருகில் சென்று அவரை வணங்கி வேண்டுதல்கள் செய்கின்றனர். குடும்பத்தில் அமைதியின்மை, தடை பெற்றுவரும் காரியங்கள் சித்தி பெற குடும்பச் சண்டை போன்றவற்றிக்கு நிவாரணம் பெற என பல்வேறு கோரிக்கைகளை வைத்து வேண்டுதல் செய்கின்றனர். வினாயகரை வேண்டிக் கொண்டு அந்த ஆலத்தில் உள்ள ஒரு மரத்தில் நோம்புக் கயிற்றைக் கட்டி வைத்துவிட்டு ஒரு தேங்காயை பூசாரியிடம் தந்து விட்டு வேண்டுதல்களை அவரிடம் கூறிவிட்டுச் செல்கின்றனர். அதை அவர் ஸ்வாமி பீடத்தில் வைத்து விடுகின்றார். எப்பொழுது தன் வேண்டுதல் பலிக்கின்றதோ அப்பொழுது அவர் அந்த ஆலயத்திற்குச் சென்று பூசாரியிடம் அதைப் பற்றிக் கூற அவர் பீடத்தில் இருந்து ஒரு தேங்காயை பிரசாதமாகத் தருகிறார்.


ஆந்த ஆலயத்திற்கு செல்லும் பல பக்தர்கள் கூறும் கதைகள் மெய்  சிலிர்க்க வைக்கின்றன.  எங்களுக்கே கஜரானா வினாயகரின் மகிமையைக்  குறித்த ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு முறை தேவாஸ் நகரில் எங்கள் வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள பணமும் தங்க, வைர நகைகளும் திருட்டுப் போய் விட்டன. திருடனைக் கண்டு பிடிக்க முடியவில்லை.  எங்களுடைய ஒரு நண்பர் வற்புறுத்தலினால் நாங்கள் மறுநாள் காலையில் காளியை வழிபடும் ஒரு மாந்த்ரீக ஜோதிடரிடம் சென்று திருட்டைக் குறித்து கேட்ட பொழுது அவரும் எங்கள் வீட்டில் திருடியவன் வெளியூரை சேர்ந்தவன் எனவும், அவன் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவன் எனவும், அவன் திருட்டுத் தொழிலில் கைதேர்ந்தவன் எனவும், அடுத்த மூன்று நாட்களுக்குள் அவனைப் பிடிக்காவிடில் அதன் பிறகு அந்த திருடனை பிடிக்கவே முடியாது, அவன் பிடிக்க முடியாத இடத்திற்கு சென்று விடுவான் எனக் கூறி  அவன் அந்த நேரத்தில் தங்கி இருந்த இடத்தைக் குறித்து சில தகவல்களைக் கூறினார். அதாவது தேவாஸில் இருந்து போபால் செல்லும் வழியில் சுமார் முப்பது  கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்தில்தான் இருக்கிறான்  என்று கூறினார்.


அவர் குறிப்பிட்ட பகுதியில் இருந்தது சிறு  கிராமம். அது திருட்டிற்கு  பெயர் பெற்ற இடம்.  போபாலுக்கு செல்லும் பஸ்கள் அங்கு நின்று விட்டுச் செல்லும். அந்த கிராமத்தருகில் இரவு ஒன்பது மணிக்கு மேல் தனியே வாகனங்கள்  மற்றும் காரில் செல்பவர்கள் செல்ல மாட்டார்கள். காரணம் தனியே செல்லும் வாகனத்தை மடக்கி அவர்களை கொள்ளையடித்துக் கொண்டு செல்பவர்கள் அங்கு அதிகம். கொள்ளையடிப்பது மட்டும் அல்ல, அவர்களைக் அங்கேயே தள்ளி விட்டு  வாகனத்தையும்  எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள். அதன் பின் வாகனங்களின் ஒரு பொருள் கூட கண்டு பிடிக்க முடியாத அளவு அதை அடுத்த சில மணி நேரத்தில் பிரித்து அவற்றை எடுத்துச் சென்று விடுவார்கள்.  ஆகவே தனியாக காரில் செல்பவர்களை எல்லையிலேயே போலிஸ் தடுத்து நிறுத்தி பாதுகாப்பிற்காக அங்கிருந்து ஐந்து அல்லது பத்து வாகனங்களை ஒன்றன் பின் ஒன்றாக செல்லும் வகையில் அனுப்பி வைப்பார்கள். ஆனால் ஒருவித பயத்தினால் அரசாங்க வாகனம் மற்றும் பஸ்ஸை கொள்ளை அடிக்க அந்த திருடர்கள்  வரமாட்டார்கள். 

நாங்கள் காவல் நிலைய அதிகாரியிடம் (அவரும் ஒரு முஸ்லிம் மதத்தவர்) அது குறித்து  கூறியும் அவர்கள் வேண்டும் என்றே அவனைப்  பிடிப்பதில் அசட்டையாக இருந்தார்கள். அதற்கான காரணம் அவர்களுக்கு இடையே இருந்த தொடர்ப்புக்கள்தான்  என்பது பின்னர் தெரிந்தது. ஜோதிடர் கொடுத்திருந்த கெடுவும் முடிந்தது.  திருடனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. மாதங்கள் ஓடி விட்டன. காவல் நிலையத்திலும் அவனைப் பிடிப்பதில் எந்த அக்கறையையும் காட்டவில்லை.  மனம் வெறுத்துப் போய் இருந்த எங்களிடம் எதேற்சையாக ஒருவர் நீங்கள் கஜரானா ஆலயம் சென்று அங்கு வேண்டிக் கொள்ளுங்கள் அவர் நிச்சயமாக வேண்டுதலை நிறைவேற்றுவார் எனக் கூறி எங்களை ஆலயத்திற்கு தாமே அழைத்துச் சென்றனர். நாங்களும்  அங்கு சென்று வேண்டிக் கொண்டு திரும்பினோம்.


என்ன அதிசயம் அதற்கு அடுத்த சில நாட்களிலேயே வெளியூருக்குத் தப்பி ஓடி விட்டிருந்த அதே திருடன் மீண்டும் எங்கள் வீட்டை ஒட்டியபடி பின்னால் இருந்த வீட்டில் திருட வந்தான். சொன்னால் நம்ப மாட்டீர்கள். எதிர்பாராத விதத்தில் அவன் வீதியில் விளையாடிக் கொண்டு இருந்த சிறு பையன்களினால் மாட்டிக் கொண்டான். (பிடிபட்ட திருடன் முஸ்லிம் மதத்தவர்தான் என்பதைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்தோம். காளி ஜோதிடர் கூறியது எத்தனை உண்மை!  அது மட்டும் அல்ல திருடன் பிடிபட்ட பின்னர் ஜோதிடர் கூறிய அதே இடத்தில் தான் மூன்று நாட்களும் தான் தங்கி இருந்ததை அவன் வழக்கு மன்றத்தில் ஒப்புக் கொண்டான். அதன் பின் அவன் போபாலுக்கு  திரும்பிச் சென்றுள்ளான். திருடுவதை தொடர்ந்து தொழிலாகவே செய்து கொண்டு இருந்தவன் மீது போபாலில் மட்டும் 35 வழக்குகள் பதிவாகி இருந்தன) களவு போன நகைகளில் பத்து சதவிகித தொகை கூட திரும்பக் கிடைக்கவில்லை என்றாலும் நாங்கள் மிகவும் போற்றி வைத்திருந்த முக்கியமான ஒரு பொருள் கிடைத்தது. திருடனை பிடிக்க முடியாதென ஜோதிடர் முதல் காவல்துறையினர்வரை பலர் கூறியும் பல மாதங்களுக்குப் பின் நாங்கள் கஜரானா கணபதியிடம் வேண்டிக் கொண்டப் பின்  அதே திருடன் மீண்டும் கிடைத்தான்.  அந்த மகிமையை என்னவென்று சொல்வது? அதனால்தான் எனக்கு இந்தூருக்குச் சென்றால் கஜரானா  ஆலயம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் எப்போதும் இருக்கும். 


அப்படிப்பட்ட சம்பவங்கள் பலருக்கும் நடந்துள்ளன. பிளவு பட்ட குடும்பம் ஒன்றானது, பிழைப்பது சாத்தியம் இல்லை என கைவிடப்பட்டவர் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் அந்த காயம் கூடத் தெரியாமல் நல்ல வாழ்கையை கொண்டு வாழ்ந்து வந்தார். வருடக் கணக்கில் தேங்கிக் கிடந்த வழக்கினால் மன அமைதியை இழந்தவர் ஆலயத்தில் சென்று வேண்டிக் கொண்ட அடுத்த சில நாட்களில் வழக்கு மீண்டும் எடுக்கப்பட்டு அவருக்கு சாதகமாக முடிந்தது. இப்படி பல பல கதைகள் உண்டு.


கஜரானா ஆலய வளாகத்துக்குள்  கால பைரவர், மகாலஷ்மி, சாயி பாபா, ஹனுமான், ராமபிரான், சிவலிங்கம், மற்றும் சனி பகவான் போன்றவர்களுக்கு தனித் தனி சன்னதிகள் உள்ளன.


திரிவேணி சங்க சனீஸ்வரர் ஆலயம்

 திரிவேணி சங்க 

சனீஸ்வரர் ஆலயம் 



உஜ்ஜயினியி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஏழு அல்லது எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உஜ்ஜயினியின் எல்லையில்  இந்தூருக்கு செல்லும் பாதையில் உள்ள இந்த திரிவேணி சங்க சனி ஆலயத்தில் இரண்டு சனி தேவர்கள் உள்ளார்கள். அவர்களில் ஒருவர் ஏழரை நாட்டு சனி தேவர் மற்றும் இரண்டாமவர் இரண்டரை ஆண்டு சனிஸ்வரர். அவர்களோடு வினாயகரும் காட்சி தருகிறார்.   இப்படியாக  ஒரே சன்னதியில் மூவரும் இருப்பது வேறு  எங்கும் கிடையாது. அவர்களது சன்னதியை சுற்றி உள்ள தனித் தனி சன்னதிகளில் மற்ற நவக்கிரக தேவர்கள் அமர்ந்து உள்ளார்கள்.  அவர்கள் ஒவ்வொருவரும் தந்திர சாதனாவின் யந்திர பூஜை செய்யப்பட்டு  ஸ்தாபிக்கப்பட்டு உள்ளார்களாம். இந்த ஆலயத்தின் இருபுறமும் மூன்று நதிகளான சிப்ரா, காந்தாரி மற்றும் கான் நதிகள் ஒன்றிணைந்து ஓடுகின்றன. சிலர் இதை பாணகங்கா எனும் நதி என்றும் கூறுகிறார்கள். இந்த நதியின் அடிப்பகுதியில் கண்களுக்குத் தெரியாமல் சரஸ்வதி நதி பூமிக்கு அடியில் ஓடிக் கலப்பதாகவும் ஐதீகம் உள்ளது (தற்போது சிந்துவெளி  நாகரீகத்தில் இருந்த சரஸ்வதி நதி மறைந்து விட்டது என்பது வரலாற்றுச் செய்தி ஆகும்). அமாவாசை சனிக்கிழமைகளில் இங்கு லட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து சனி பகவானை வழிபடுகிறார்கள்.


விக்ரமாதித்தியன் திரிவேணி சங்கம் -மூன்று நதிகள் கலக்கும் இடம்- என்ற இடத்தில் சனீஸ்வரரின் ஆலயத்தை நிறுவி அங்கு வந்து தவறாது வழிபட்டாராம். விக்ரமாதித்தியனுக்கு சனி பகவான் மூலம் வாழ்க்கையில் ஒரு பாடம் கிடைத்ததினால் அவர் சனி பகவானை உதாசீனப்படுத்தியதே இல்லை என்றும், அவர் தவறாது சனி பகவானை வழிபாட்டு வந்துள்ளார் என்பதும் இந்த ஆலயத்தை அவர் நிறுவியதின் மூலம் வெளிப்படுகிறது.


விக்கிரமாதித்தியனும் ஒரு தேவகணமே என்றாலும் சில கடமைகளை நிறைவேற்றவே அவர் பூமிக்கு வந்து உஜ்ஜயினியில் ஆட்சி செய்து கொண்டு இருந்தார். ஆரம்ப கால ஆட்சியில் ஒரு கட்டத்தில் விக்கிரமாதித்தியனுக்கு கர்வம் அதிகமாகி இருந்ததாம். அதற்குக் காரணம் அவருக்கு பிடித்த ஏழரை நாட்டு சனி தசை ஆகும். ஆனால் விக்ரமாதித்தியனோ சனி பகவானை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அவருக்கு ஏழரை நாட்டு சனி தசை வந்துள்ளதால் சனி பகவானை வணங்கி துதித்து வந்தால் அதன் தாக்கம் குறையும் என ஒரு பண்டிதர் கூறியும் அதை அவர் ஏற்கவில்லை, மாறாக தன்னை சனி பகவானினால் ஏதும் செய்ய முடியாது என்று இறுமாப்பாகக்  கூறிவிட்டு அந்த பண்டிதரை அவமானப்படுத்தி அனுப்பி விட்டார்.


ஒருமுறை ஒரு குதிரை வியாபாரி அவரது அரண்மனைக்கு வந்து தான் ஒரு அற்புதமான குதிரையைக் கொண்டு வந்துள்ளதாகவும், அதன் மீது ஏறி அமர்ந்து கொண்டு அதை ஒரு தட்டு தட்டினால் வானத்தில் பறக்கும் எனவும், இன்னொருமுறை தட்டினால் கீழே இறங்கும் எனவும் கூறினார். பண்டிதர் உருவில் முன்னர் வந்ததும் இப்போது குதிரை வியாபாரி உருவில் வந்ததும் சனி பகவானே என்பதை விக்கிரமாதித்தியனால் புரிந்து கொள்ள முடியவில்லை. விக்ரமாதித்தியன் அதை வாங்கியவுடன் அதில் ஏறி அமர்ந்து கொண்டு குதிரையை தட்டி விட அது வானத்தில் பார்க்கலாயிற்று. சற்று நேரம் பறந்தப் பின் அதை மீண்டும் தட்டி விட அதுவோ அவரை அரண்மனையில் இறக்கி விடாமல் எங்கோ ஒரு காட்டில் கொண்டு போய் வானத்தில் இருந்தே அவரை கீழே தள்ளி விட்டது. அது எந்த இடம் என்றுகூட விக்ரமாதித்தியனுக்குத் தெரியவில்லை. கீழே விழுந்ததில் உடம்பெல்லாம் நல்ல அடிபட்டு வலித்தது. சற்று நேரத்தில் அந்த வழியே வந்து கொண்டு இருந்த சில திருடர்கள் விழுந்து கிடந்த விக்ரமாதித்தியனை இன்னும் அடித்துப் போட்டு விட்டு அவரிடம் இருந்த அனைத்து நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு போய் விட்டார்கள். எப்படியோ அங்கிருந்து தப்பிப் போய் ஒரு நகரில் ஒருவர் வீட்டில் தங்கியபோது அந்த வீட்டில் இருந்தப் பெண்ணின் நகைகள் திருட்டுப் போய்விட்டன. அவர்களோ விக்ரமாதித்தியன் மீதே சந்தேகப்பட்டு அந்த ஊர் மன்னனிடம் முறையிட அவரும் தண்டனையாக அவரது கைகால்களை வெட்டி விட்டார். விய அனைத்தும் நடந்து கொண்டு இருந்தபோது  விக்ரமாதித்தியனுக்கு தன நினைவே இல்லை.


விக்கிரமாதித்தியனும் இப்படி சந்தித்து வந்த பல கஷ்டங்களுக்கும் இடையே எப்படியோ அங்கிருந்து கிளம்பிச் சென்று இன்னொருவரிடம் அடைக்கலமானார். அவருக்கு தான் வந்துள்ள இடம் உஜ்ஜயினிக்கு அருகில் உள்ள இடம் என்பது தெரியாது . அதே நேரத்தில்தான் அவரைப் பிடித்து இருந்த ஏழரை நாட்டு சனியும் விலகும் நேரம் வந்தது. ஒருநாள் அங்கு நடைபெற்ற ஒரு ஆலய விழாவில் ஏற்றப்பட்ட விளக்குகள் காற்றில் அணைந்து விட்டன. அப்போது விக்கிரமாதித்தன் வாயில் இருந்து சற்றும் தாமதிக்காமல் தீப ராக எனும் பாடல் வெளிவர அந்த விளக்குகள் தாமாகவே மீண்டும் எரியலாயின. முற்றிலும் மாறி இருந்த அவருடைய முகமும் தெளிவாயிற்று, அவருடைய அடையாளமும் புரியலாயிற்று. அப்போதுதான் அங்கிருந்தவர்கள் அவர் விக்கிரமாதித்தியனே என்பதை புரிந்து கொண்டு அந்நாள்வரை குதிரை மீது ஏரி வானத்தில் பறந்தவர் திடீர் எனக் காணாமல் போய் விட அவரைத் தேடி அலைந்து கொண்டு இருந்தவர்கள் அவரை அரண்மனைக்கு தூக்கிச் சென்றார்கள். அங்கு சென்றதும் மீண்டும் அதே பண்டிதர் சனி பகவானின் சக்தியை எடுத்துக் கூறி அவர் முன்னாள் தன சுய உருவில் பிரசன்னமானார். அதைக் கண்ட விக்கிரமாதித்தியனும் உடனடியாக சனி பகவானின் கால்களில் விழுந்து நமஸ்கரிக்க மீண்டும் அதே ராஜ தேஜஸ்ஸை விக்ரமாதித்தியன் அடைந்தார். அது முதல் அவர் சனி பகவானை தொடர்ந்து ஆராதித்து வந்ததும் இல்லாமல் சனி பகவானுக்கும் அங்காங்கே ஆலயங்களை நிறுவி வழிபட்டார். அதில் ஒன்றே திரிவேணி சங்கத்தில் உள்ள சனீஸ்வரர் ஆலயமும் ஆகும்.


சன்னதியில் வினாயகர், ஏழரை நாட்டு சனி தேவர், 

மற்றும் இரண்டரை ஆண்டு சனி தேவர்