Thursday, 30 March 2023

27 நட்சத்திர சிவாலயங்கள்


 

Tuesday, 28 March 2023

காற்றில் இருந்து பிராண சக்தி உணவு


 

காய்கறி மருத்துவம்

 *காய்கறி மருத்துவம்*


புடலங்காயை நாம் ஒரு மூலிகை என்பதை அறியாமலே பயன்படுத்தி வருகிறோம். இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் பயன்படுத்தவேண்டும். புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் இடைவெளி விட்டு ஒரு மண்டலம் சாப்பிட்டுவர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்துவிடும்.


எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும்.


அதிக உடல் சூட்டால் மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டால் அவர்கள் புடலங்கொடியின் இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் அதே அளவு கொத்தமல்லி சேர்த்து 300மிலி தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை கட்டுப்படும்.


இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து நாள்தோறும் 2 தேக்கரண்டிவீதம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதயநோய்கள் அனைத்தும் நீங்கும்.


புடலையின் வேரை கைப்பிடி எடுத்து மைய அரைத்து சில துளிஅளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால் மலமிளகி வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.


புடலங்காயை பொறியல் செய்து சாப்பிட நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு உள்ளவர்கள் புடலங்காயை எந்த வகையிலாவது சேர்த்துவர அனைத்து வகையான சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும்.


கடும் காய்ச்சல் உள்ளவர்கள் வெட்டிய புடலங்காய் 250கிராம் எடுத்து 300மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி 200மிலி குடித்தால் ஒரே நாளில் காய்ச்சல் இயற்கையாக நீங்கும்....

இன்று மார்ச் 29-03-2023 அசோகாஷ்டமி

 துன்பத்தை போக்கி இன்பத்தை தரும் அசோகாஷ்டமி!


இன்று மார்ச் 29-03-2023, சுபகிருது வருடம், பங்குனி 15, புதன்கிழமை, அஷ்டமி திதி 


சிறப்பு : அசோகாஷ்டமி,


சீதா தேவி மருதாணி மரங்களுக்கு வரமளித்த நன்னாலே அசோகாஷ்டமி நாளாகும். சுகம் தரும் மருதாணி மரத்திற்கு வட மொழியில் அசோகம் என்று பெயர். சோகம் என்றால் துன்பம். அசோகம் என்றால் துன்பமில்லாதது. அதனால் அசோகாஷ்டமி என்று பெயர். 


பங்குனி மாத அமாவாசையிலிருந்து எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதிக்கு துன்பத்தை போக்கி இன்பத்தை தரும் சக்தி உள்ளது.


ஶ்ரீராம நவமி அன்றோ அல்லது அதற்கு முதல் நாளோ வரும். அன்று சுத்தமான இடங்களில் மருதாணி மரங்களை பயிர் செய்விக்கலாம். மருதாணி மரம் இருக்கும்இடத்திற்கு சென்று அதற்கு தண்ணீர் ஊற்றலாம். மூன்றுமுறை வலம் வரலாம். 


முட்கள் இல்லாமல் ஏழு மருதாணி இலைகளை பறித்து அதை கீழ்கண்ட ஸ்லோகம் வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.


சீதையை கவர்ந்து சென்று இலங்கையின் ஒரு மலர்ச்சோலையில் சிறை வைத்தான் ராவணன். அந்த மலர்ச்சோலையில் சீதையின் உள்ளம் ராமனைப் பிரிந்த வருத்தத்தால் அனலாய் சுட்டது. சீதையின் சோகத்தைப் போக்குவதற்காக இலைகளையும் மலர்களையும் சீதையின் மேல் சொரிந்து அவளை சாந்தப்படுத்த முயன்றது அவள் அமர்ந்திருந்த மரம். சீதையின் தாபத்தையும் சோகத்தையும் தணித்த அந்த மரம் அசோகமரம் என்று கூறப்படும் மருதாணி மரமாகும்.


அந்த மரம் எப்படியாவது ஸ்ரீராமன் வந்து சீதையை மீட்டுச் செல்ல வேண்டும் என்று பகவானை பிரார்த்தனை செய்தது. அந்தப் பிரார்த்தனை விரைவில் நிறைவேறியது. சீதை அசோக வனத்தில் சிறையில் இருந்து விடுபட்டபோது அந்த மரங்கள் சீதா தேவிக்குப் பிரியா விடை கொடுத்தன. அப்பொழுது சீதை மருதாணி மரங்களை நோக்கி, ‘உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?’ எனக் கேட்டாள்.


அதற்கு அந்த மரங்கள், 'அம்மா, பதிவிரதையான தங்களுக்கு வந்த இந்தத் துன்பம் வேறு எந்தப் பெண்மணிக்கும் வரக்கூடாது’ எனக் கூறின. சீதா தேவியும், ’மருதாணி மரங்களான உங்களை யார் தண்ணீர் விட்டு வளர்த்து பூஜிக்கிறார்களோ, இலையை கைகளில் பூசிக் கொள்கிறார்களோ இலைகளை யார் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு எந்தத் துன்பமும் நேராது’ என்று வரம் அளித்தாள். 


ஆகவேதான், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் மருதாணி இலைகளை அரைத்து கைகளில் பூசிக் கொள்கிறார்கள். சீதா தேவி மருதாணி மரங்களுக்கு வரம் அளித்த நன்னாளே அசோகாஷ்டமியாகும். 


பங்குனி மாத அமாவாசையிலிருந்து எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதிக்கு துன்பத்தைப் போக்கி இன்பத்தைத் தரும் சக்தி உள்ளது. அன்று சுத்தமான இடங்களில் மருதாணி மரங்களை பயிர் செய்விக்கலாம். தண்ணீர் ஊற்றலாம். மூன்று முறை வலம் வந்து வழிபடலாம்.


அசோகா அஷ்டமி திருவிழா சிவன் மற்றும் பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜா திருக்கோயிலில் அசோகாஷ்டமியன்று தேர்த் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மகிழ்ச்சி மற்றும் வளமான வாழ்க்கைக்காக இந்த நாளில் தெய்வீக ஆசீர்வாதத்தைப் பெற பக்தர்கள் சக்தி தேவியை வணங்கி வழிபடுகிறார்கள்.


முட்கள் இல்லாமல் ஏழு மருதாணி இலைகளைப் பறித்து அதை கீழ்கண்ட ஸ்லோகம் சொல்லி வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.அல்லது அரைத்து பூசிக்கொள்ளலாம்.மருதாணி உடல் பிணிகளையும் தீர்க்கும்.


சொல்ல வேண்டிய ஸ்லோகம்.


த்வாம சோக நராபீஷ்ட மது மாஸ ஸமுத்பவ;

பிபாமி சோக ஸந்தப்தோ மாம் அசோகம் ஸதாகுரு.


இதன் பொருள்:  “ஓ மருதாணி மரமே உனக்கு அசோகம் (துன்பத்தை போக்குபவன்) எனப் பெயர் அல்லவா. மது என்னும் வஸந்த காலத்தில் நீ உண்டாகி இருக்கிறாய். நான் உனது அருளைப் பெறுவதற்காக உனது இலைகளை சாப்பிடுகிறேன். நீ, எனது துன்பங்களை விலக்கி  துன்பம் இல்லாமல் என்னை எப்போதும் பாதுகாப்பாயாக.”

மடப்புரம் பத்ரகாளியம்மன்

 #மடப்புரம் #பத்ரகாளி

மதுரையின் எல்லை தெய்வம் 


நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வருபவர்களிடம் சத்தியமாச் சொல்றேன் என்று சத்தியப் பிரமாணம் வாங்குவது தற்போதைய நடைமுறை. ஆனால், நீதிபதிகளே கோயிலுக்கு வந்து குற்றம்சாட்டப்பட்டவர்களைக் காளிக்கு முன்பாக சத்தியம் பண்ணவைத்து தீர்ப்பெழுதிய சம்பவங்கள் மடப்புரம் காளி கோயிலில் நடந்திருக்கின்றன.


மதுரைக்கு அருகில் சிவகங்கை மாவட்ட திருப்புவனத்துக்கு அருகிலிருக்கிறது #மடப்புரம். இங்கு வரண்ட வைகையின் விளிம்பில் (இப்போ தண்ணீர் இல்லா ஆறு ) ஆக்ரோஷ அவதாரமாக நிற்கிறாள் பத்ரகாளி.


ஒரு பிரளய காலத்தில் மதுரை மாநகரை வெள்ளம் சூழ்ந்தபோது மதுரையை ஆட்சி செய்த மீனாட்சி, மதுரையின் எல்லையைக் காட்டச் சொல்லி சிவனை வேண்டினார். அப்போது ஆதிசிவன் பாம்பு வடிவில் தோன்றி மதுரையின் நான்கு புறத்தையும் தன் உடலால் வளைத்துக் காட்டினார். அப்போது பாம்பின் படமும் அதன் வாலும் ஒன்றையன்று தொட்டுக்கொண்டு நின்ற இடம்தான் #படப்புரம் இதுவே மருவி மடப்புரமாக ஆனது.


ஒருமுறை பார்வதியை அழைத்துக்கொண்டு வேட்டைக்குக் கிளம்பிய சிவபெருமான், மடப்புரம் பகுதிக்கு வந்தார். காடு மிகப் பரந்து கிடக்கிறது. இதற்குமேல் உன்னால் வரமுடியாது தேவி... அதனால் நீ இங்கேயே இரு. நான் மட்டும் வேட்டையாடிவிட்டு வருகிறேன் என்று பார்வதியிடம் சொன்னாராம். ‘இந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் நான் மட்டும் தனியே இருப்பது எப்படி?’ என்று பார்வதி கேள்வி எழுப்ப, அய்யனாரை அழைத்து பார்வதிக்குத் துணையாக வைத்துவிட்டுப் போனார் சிவபெருமான். அப்போது பார்வதி, இந்த இடத்தில் நான் இருப்பதால் இந்த ஸ்தலத்துக்கு ஏதாவது சிறப்பைக் கொடுக்கவேண்டும் என்று கேட்க...


இந்த இடத்திலிருந்து மூன்று மைல் தொலைவில் இருக்கும் வைகையாற்றில் நீராடுபவர்களுக்கு காசியில் நீராடியதைக் காட்டிலும் கூடுதலான புண்ணியம் கிடைக்கும்! என்று வரம் கொடுத்தாராம் சிவபெருமான்.


அதன்பின்தான் மடப்புரத்தில் காளிவடிவில் தங்கினாள் சக்தி. காளிக்குத் துணையாக இருந்த அய்யனார் அடைக்கலம் காத்த அய்யனாராக இங்கே ஆட்சி செலுத்தினாலும், சக்தியின் வடிவமாக நின்றுகொண்டிருக்கும் பத்ரகாளிக்குத்தான் பிரதான 

சிறப்பு  வழிபாடு  !


சிவபெருமான் அருளிய வரத்தின்படி மடப்புரத்திலிருந்து மூன்று மைல் தொலைவுக்குள் வைகையில் நீராடுபவர்களுக்கு காசியில் நீராடியதைக் காட்டிலும் கூடுதலான புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்றும் தொடர்கிறது. காசு, பணம் செலவு செய்து காசிக்குப் போக முடியாதவர்கள் மடப்புரத்தை ஒட்டியுள்ள திருப்புவனத்துக்கு வந்து தங்களின் முன்னோர்களுக்குக் காரியங்கள் செய்து புண்ணியம் சேர்த்துக்கொண்டு போவது இன்றும் நடக்கிறது.


கோயில் வளாகத்துக்குள் வெட்டவெளியில்  நாக்கைத் துருத்தியபடி ஆக்ரோஷமாக நிற்கிறாள் பத்ரகாளி. காளியின் இரண்டு பக்கமும் பிரமாண்டமாக இரண்டு பூதங்கள். பதின்மூன்றடி உயரம் கொண்ட காளியின் தலைக்குமேல் ராட்சதக் குதிரை ஒன்று தாவியபடி நிற்கிறது.

காளியை மனமுருகி வேண்டி நின்ற பக்தர் ஒருவர் எந்த நேரமும் உனக்குப் பக்கத்திலேயே இருக்க எனக்கு வரம் கொடுக்கவேண்டும் என்றாராம். அவரது பக்தியை மெச்சிய காளி அவரைக் குதிரையாக மாற்றி, தனக்கு நிழல்தரும் குடையாக வைத்துக்கொண்டாராம். தன்னை நாடிவரும் பக்தர்களைத் தாமதமின்றிக் காப்பாற்ற ஆயத்த நிலையில் காளியின் வலதுகையில் திரிசூலம். அநீதியை அழிக்கத் திரிசூலம் ஏந்திநிற்கும் காளி, அழித்தவற்றை மீண்டும் எழவிடாமல் எரித்துச் சாம்பலாக்குவதற்காகத் தலையில் அக்னி கிரீடத்தைச் சுமந்து நிற்கிறாள்.


காளிக்கு எதிரே நெய்விளக்கு ஏற்றி வழிபட்டுவந்தால் நினைத்த காரியம் கைகூடி வரும். காளிக்குப் பிடித்தமான காணிக்கைப்பொருள் #எலுமிச்சம்பழ மாலைதான். காளிக்கு மட்டும் போடக்கூடிய மாலையில் நூற்றியோரு பழங்கள் கோக்கிறார்கள். குதிரைக்கும் சேர்த்து மாலை போடுவதென்றால் ஆயிரத்தோரு பழங்களைக் கோக்கவேண்டியிருக்கும்.


மடப்புரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் யாருக்காவது கொடுக்கல், வாங்கல் பிரச்னை என்றால் பெரும்பாலும் கோர்ட்டுக்கோ போலீஸக்கோ போவதில்லை. அவர்கள் நாடிவரும் கோர்ட், பத்ரகாளி கோயில்தான்.


காளிக்கு வலப்புறத்தில் சின்னதாக ஒரு திண்டு. இதன் பெயர் சத்தியக்கல். இரண்டு நபர்களுக்கிடையே பிரச்னை என்றால், இந்தத் திண்டில் இருவரும் சூடத்தை ஏற்றி, அணைத்து நாங்கள் தப்புச் செய்யவில்லை என சத்தியம் செய்யவேண்டும். பின்னர் கழுத்தில் அரளிமாலை போட்டுக்கொண்டு காளிக்கு வலப்புறமாக நிற்கும் பூதத்தைக் கட்டிப் பிடிதபடி, நாங்கள் தப்பு செய்யவில்லை என வாக்குக் கொடுக்க வேண்டும்.


இங்கு யாராவது பொய்ச் சத்தியம் செய்தால் முப்பது நாட்களுக்குள்ளாக அந்த நபரைக் குறைகேட்டுவிடுமாம் காளி. சில நேரம் பொய்ச் சத்தியம் செய்தவர்கள் மடப்புரத்து எல்லையைத் தாண்டுவதற்குள்ளாகவே காளியால் தண்டிக்கப்படுவதுண்டு. இப்படித் தண்டிக்கப்படுபவர்கள் மறுபடியும் காளியிடம் வந்து காணிக்கை செலுத்திப் பரிகாரம் தேடிக்கொண்டு போவது இப்போதும் நடக்கிறது.


இங்கு நடக்கும் இன்னொரு முக்கியமான வேண்டுதல் காசு வெட்டிப் போடுவது. காளியின் முகத்துக்கு எதிரே தரையில் ஒரு பட்டியக்கல் பதித்து வைத்திருக்கிறார்கள். அதற்குப் பக்கத்திலேயே உளியும் சுத்தியலும் வைத்திருக் கிறார்கள். அநியாயம் பண்ணுபவர்களைத் தட்டிக்கேட்க திராணி இல்லாதவர்கள் ஈரத்துணியுடன் இங்கு வந்து காளிக்கு எதிரே உட்கார்ந்து காசை வெட்டிப் போட்டு, அவங்களை எதுத்துக் கேக்க எனக்கு சக்தியில்லை. நீதான் எனக்கு கேட்டுக் கொடுக்கணும் என்று கண்ணீரும் கம்பலையுமாக முறையிடுகிறார்கள். இந்தக் கண்ணீருக்கு மனமிரங்கிவரும் காளி, அநியாயக்காரர்களை அடித்து எழுப்பி இம்சை பண்ணி அவர்களையும் தன்னுடைய வாசலுக்கு வரவழைத்து விடுகிறாள்.


#காளியின் #மகத்துவம் #தெரிந்த எவரும் இங்கு வந்து பொய்ச்சத்தியம் பண்ணத் துணிவதில்லை.


காளிக்குப் பின்னால் பிராகாரத்தில் வேப்பமரம் ஒன்று உண்டு. இதற்கும் தெய்வசக்தி இருக்கிறது. 

நீண்டநாட்களாகத் திருமணம் தடைப்பட்டு நிற்கும் பெண்கள் இந்த மரத்தின் மடியில் மஞ்சள் தாலியைக் கட்டி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்குகின்றன. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தங்களின் முந்தானையைக் கிழித்து வேப்பமரக்கிளையில் தொட்டில் கட்டி விட்டால் தாமதிக்காமல் அவர்களது வீட்டில் குவா குவா சத்தம் கேட்கிறது. வேப்பமரத்தில் கட்டப்பட்டுள்ள தாலி மற்றும் தொட்டில்களின் எண்ணிக்கை இதையெல்லாம் பறைசாற்றுகின்றன.


எல்லா நாட்களும் காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை கோயில் திறந்திருக்கிறது.


வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் இங்கே திருவிழா கணக்காகக் கூட்டம் கூடுகிறது. வாரத்துக்கு இரண்டு நாட்கள் இப்படித் திருவிழாக் கூட்டம் கூடுவதாலோ என்னவோ, பத்ரகாளிக்கென இங்கே தனியாக திருவிழா எதுவும் எடுக்கப்படுவதில்லை.


உண்மையான தர்மம், உண்மை நிகழ்வு

 #மனித #நேயத்தின் #மற்றொரு #பெயர் #ஆட்டோ #ரவி... 


ரவி என்கின்ற ரவிச்சந்திரன்....மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர் கடந்த 25 வருடங்களாக ஆட்டோ ஒட்டிவருகிறார்.பழைய வண்ணாரப்பேட்டையில் வாடகை வீட்டில் மனைவி, இரண்டு மகள்களுடன் வாழ்க்கையை நடத்திவருகிறார்.


சென்னைக் வரும் பல்வேறு மாநில பயணிகளுடன் பேசி பேசி கொஞ்சம் இந்தி கொஞ்சம் தெலுங்கு கொஞ்சம் மலையாளம் பேசக்கூடியவர்.

சமீபத்தில் அவர் செய்த ஒரு காரியத்தால் இன்று மக்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார்.

அப்படி அவர் செய்த காரியம் என்ன?


கோல்கத்தாவை சேர்ந்தவர் சங்கரதாஸ்(52)தன் தொழில் நிமித்தமாக சென்னை வந்தவர் சேப்பாக்கத்தில் இருந்து ரவியின் ஆட்டோவில் பயணம் மேற்கொண்டார்.


சங்கரதாஸ்க்கு தமிழ் தெரியாது, இந்தியில் தான் போகவேண்டிய இடத்தை சொல்லிக்கொண்டே வந்தவருக்கு திடீர் என பேச்சு தடைபட்டது, கண் இருண்டது, வேர்த்து கொட்டியது, அப்படியே மயக்கம் போட்டு ரவியின் தோளில் சாய்ந்தார்.

வண்டியில் வந்த பயணி இப்படி மயக்கம் போட்டு விழுந்துவிட்டாரே என நினைத்த ரவி கொஞ்சமும் தாமதிக்காமல் பக்கத்தில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார் அங்கே சங்கரதாசை பரிசோதித்த டாக்டர் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது உடனே ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகச்சொன்னார்.


ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் பெரிய டாக்டர்கள் யாரும் இல்லை என்ற நிலையில் அவர்கள் உடனே ஆம்புலன்ஸ் வைத்து ராஜீவ்காந்தி மருத்துவமனை அனுப்பிவைத்தனர்.


ஆட்டோவை அங்கேயே விட்டுவிட்டு ஆம்புலன்சில் சங்கரதாசுடன் ரவி பயணம் சென்றார், வழியில் சங்கரதாஸ் விடாமல் வாந்தி எடுக்க எல்லாவற்றையும் தனது உடம்பில் தாங்கிக்கொண்டார்,ஒரு கட்டத்தில் கையிலும் வாங்கிக்கொண்டார்.


ஆஸ்பத்திரியில் சங்கரதாசை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் இன்னும் ஐந்து நிமிடம் தாமதித்து வந்திருந்தாலும் இவரை உயிருடன் பார்த்திருக்கமுடியாது, ஆனாலும் இவரது உயிர் இன்னும் ஊசலாடிக்கொண்டுதான் இருக்கிறது,உடனடியாக ஆபரேஷன் செய்யவேண்டும் 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்தவேண்டும், அந்த கருவி வெளியில்தான் வாங்கவேண்டும் அதுவும் உடனே வாங்கவேண்டும் இல்லாவிட்டால் உயிர்பிழைக்க முடியாது என்றனர்.


சங்கரதாஸ் பையில் இருந்த செல்போனை எடுத்து கோல்கத்தாவில் உள்ள அவரது குடும்பத்தாரை தொடர்பு கொண்டபோதுதான் தெரிந்தது சென்னைக்கு ரயிலில் வரவே காசில்லாத குடும்பம் அது என்று.


ரவி கொஞ்சமும் யோசிக்காமல் தனது ஆட்டோ ஆர்சி புக்கை அடமானம் வைத்து முப்பதாயிரம் ரூபாய் திரட்டினார் நண்பர் ஒருவரிடம் நிலமையை சொல்லி 27 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றார் 57 ஆயிரம் ரூபாயை டாக்டர்களிடம் கொடுத்து நம்ம தமிழ்நாட்டை நம்பிவந்த ஒருவர் ஆதரவில்லாமல் இறந்தார்னு ஒரு கெட்ட பெயர் வரக்கூடாது டாக்டர் இந்தாங்க என்னால புரட்ட முடிந்ததுன்னு 57 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார்.


ஆமாம் சொந்த ஆட்டோவை அடமானம் வைச்சு இவரை காப்பாத்த துடிக்கிறீங்களே?இவரு யாரு உங்களுக்கு தெரிஞ்சவங்களா?என டாக்டர்கள் கேட்க, இவரு யாரு எதுன்னுல்லாம் தெரியாது, என் ஆட்டோவுல வந்த பயணி, என்னை காப்பத்துன்னு கேட்டு தோள்ல சாஞ்சா சக மனுஷன் அவ்வளவுதான், என்றதும் டாக்டர்கள் வியந்து போய் பேஸ் மேக்கருக்கு மிச்சம் தேவைப்பட்ட பணத்தை அவர்களே தங்களுக்குள் பங்கிட்டு கட்டி பேஸ்மேக்கரை வாங்கிவந்து மருத்துவர் ரவிசங்கர் தலைமையில் வெற்றிகரமாக ஆபரேஷனை முடித்தனர்.


இதற்குள் பத்து நாட்களாகிவிட்டது இந்த பத்து நாட்களும் சங்கரதாசிற்கு தானே காப்பாளராக இருந்து வார்டு வார்டாக கூட்டிச் செல்வது மருத்துவபரிசோனைகளுக்கு உட்படுத்துவது படுக்கவைப்பது சாப்பிடவைப்பது நேரநேரத்திற்கு மருந்து கொடுப்பது என பார்த்துக்கொண்டார்.

பகல் முழுவதும் சங்கரதாசை பார்த்துக்கொள்வார் இரவில் ஆட்டோ ஒட்டி அந்த வருமானத்தை வீட்டு செலவிற்கு கொடுத்துவிடுவார் காலையில் வீட்டில் பால் போட்டு எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரி வந்துவிடுவார்.தாளிக்காத உணவு கொடுக்க வேண்டும் என்பதற்காக மட்டும் ஒட்டல் ஒட்டலாக அலைந்து வாங்கிவந்து கொடுப்பார்.


இப்படியே இருபது நாட்கள் சங்கரதாசை கண்ணும் கருத்துமாக பார்த்து உடல் நல்லபடியாக தேறியதும் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ததும் சென்னையில் மூன்று வழிபாட்டு தலங்களுக்கு அழைத்துச் சென்றார் காரணம் சங்கரதாஸ் பிழைக்கவேண்டும் என்று அங்கெல்லாம் வேண்டிக்கொண்டிருந்தார்.


பிறகு நல்லபடியாக கொல்கத்தாவிற்கு ரயிலில் அனுப்பிவைக்கும் போது சங்கரதாஸ் பேசவே இல்லை கட்டித்தழுவி கண்ணீர்விட்டு அழுதார் அங்கே மொழிக்கு வழியேயில்லை அன்புதான் மேலோங்கியிருந்தது.


கிட்டத்தட்ட இருபது நாட்கள் கழித்து தனது ஆட்டோ நிறுத்தத்திற்கு வந்த ரவியை எங்கேப்பா இருபது நாளாக்காணோம் என்று அவரது நண்பர் கேட்டிருக்கிறார் இப்படி ஒரு விஷயம் நடந்துருச்சு அதான் வரமுடியலை என்று சொல்லியிருக்கிறார்.

என்னப்பா இவ்வளவு நல்ல விஷயம் செஞ்சுருக்கே இது நாலு பேருக்கு தெரியட்டும் என்றபடி தனக்கு தெரிந்த ஊடகங்களுக்கு சொல்லியிருக்கிறார்.


இதன் மூலம் இவரை தொடர்புகொண்ட எடிட்டர் மோகன் தன் பங்கிற்கு அடகு வைத்த ஆட்டோ ஆர்சி புக்கை மீட்டுக்கொடுத்திருக்கிறார்.இதே போல அடுத்தடுத்து பலரும் உதவி செய்ய முன்வர அதெல்லாம் வேண்டாம் நான் மனிதனாக என் கடமையை செய்தேன் அதற்கு எதற்கு வெகுமதி பாராட்டு எல்லாம் என்றபடி அடுத்த பயணியின் அழைப்பை ஏற்று ஆட்டோவை செலுத்துகிறார்.,,...


Monday, 27 March 2023

ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் அகஸ்தியர் அருவி பாபநாசம் திருநெல்வேலி.

 ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் அகஸ்தியர் அருவி பாபநாசம் திருநெல்வேலி.




Sunday, 26 March 2023

விழுந்த மரம் எழுந்து நின்ற அதிசயம்

 மழையில் விழுந்த அரசமரம் தானாக எழுந்து நின்ற அதிசயம் !! 

படவேட்டம்மன் மகிமை, 2023

#JayaPlus #Tree #Vellore #KVKuppam #வேப்பங்கனேரி #Veppanganeri



Friday, 24 March 2023

அகோர வீரபத்திரர்

 ஓம் ஸ்ரீ அகோர வீரபத்ர ஸ்வாமிணே

 நமோ நம:      

வடமொழியில் அகோர என்றால் கோரமற்றவர்  என்று பொருள்  எல்லா சிவன் கோவிலிலும் இவருக்கு தனி சந்நிதி உண்டு மயிலையில் இவருக்கு தனி கோயிலே உள்ளது  ஆட்டுத்தலையுைடைய தஷன் சிவனை குறித்து சொன்னது தான் மே மே என்று முடியும் சமகம் ஸ்ரீருத்ர பாராயணத்தோடு வரும். ஸ்ரீசிவபெருமான் தன்னுடைய ஜடா முடியை எடுத்து பூமியில் அடிக்க  அதிலிருந்து தோன்றியவர் தான் ஸ்ரீவீரபத்திரர் அங்காரகனாகவந்தவரும் சரபேஸ்வரராக தோன்றியவரும்  இவர்தான் இவருக்கு அரன் மைந்த புரம்   (அனுமந்தபுரம்) கோவிலில்  வெற்றிலை படல் மாலையாக சாத்துவார்கள்    

   கீழே சில ஷேத்திரங்களில் உள்ள ஸ்ரீவீரபத்திரரை தரிசிக்கலாம்

வரிசையாக தமிழ்நாடு சிறுவாச்சூர்  

ஆந்திரா கர்நாடகாவில் உள்ள

ஸ்ரீ வீரபத்திர ஸ்வாமி

ஜி.வீரபத்திரன்

Source https://www.facebook.com/100003933841468/posts/pfbid0BnEyAqvGK7sxbsrxZos5SwmqkDKbpsa5RTUHvyVSuEeF5oXJ1dwfTGjdcboqNydcl/?mibextid=Nif5oz







சில மலர் பூச்சொரியும் காட்சிகள்

 சில மலர் பூச்சொரியும் காட்சிகள்




Wednesday, 22 March 2023

தானம் ஒரு தர்மம்

 கோவை மாநகரில் தொழில் செய்து வரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சர்தார்ஜி சிங் ஒருவர் தனது குடும்பத்தினர் பிறந்த நாளை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு உணவு அளித்து தமிழில் முருகர் பாட்டு பாடி வணங்கி தர்மம் செய்யும் காட்சி



காரி ஆசான் மற்றும் ஒளவையார் கதை

 ஔவையார் காலத்தில் பெரும் பஞ்சம் நிலவியது .அப்போது கடையேழு வள்ளல்களில் ஒருவரான (பாரி , ஓரி , நள்ளி , ஆய் , காரி ,பேகன் , அதியமான் {அதியன்}) காரியை காரி ஆசான் என்றும் திருமுடிக்காரி என்றும்  அழைத்தனர்  அக்காலத்தவர் . காரி அதியமானின் அரசில் ஒரு சிற்றரசனாக இருந்து வந்தார். அப்பஞ்சத்தில்   துயருற்ற எழை , எளியவர்களுக்கு ,  தனது வரிப்பணத்தில்அதியமானுக்கு செலுத்த வேண்டிய நெல்லை  வாரி வழங்கினார் .

அப்போது அங்கு வந்த அதியமானின் வரி வசூல் செய்யும் அதிகாரிகள் காரியை கைது செய்து கொண்டு போய் சிறையில் அடைத்தனர் . அது கண்ட வெகுண்ட பொது மக்கள் அதிமானின் கோட்டை மதில் சுவரை  இடித்து காரியை விடுதலை செய்ய முயற்சி செய்தனர் .அப்போது அங்கு வந்த ஔவையார் , காரியை நாம் விடுதலை செய்து கொண்டு வருவோம் என உறுதி மொழி அளித்து சென்று அதியமானிடம் பேசுகிறார்.

அப்போது ஔவையார் “மக்கள் நன்றாக வாழ்ந்தால்தானே அரசும் வாழும் , வரப்புயர நீர் உயரும் , நீர் உயர நெல் உயரும் , நெல் உயரக் குடி உயரும் , குடி உயரக் கோன் உயர்வான் என்பதை மறந்தாயா? குடிகள் நன்றாக இருக்கும் வரைதான் அரசு  நன்றாக இருக்கும் .அக்குடிமக்கள் நன்றாக இருக்க நீ செய்யத் தவறியதைத்தான் காரி ஆசான் செய்தான் .நீ அவனைக் கைது செய்யலாமா ?” என்று கேட்கிறார்.

அது கேட்ட அதியமான் “உங்கள் அறிவுரைகள் எமது அகக்கண்களை திறந்தது .இப்போதே காரி ஆசானை விடுதலை செய்யச் சொல்லுகிறேன் ” என்றான் .

அப்போது ஔவையார் இவ்வளவு நல்ல உள்ளங்கள் இருந்த போதும் , உத்தமர்கள் இருந்த  போதும்  மழை ஏன் பொழிய மறுக்கிறது என்று இயற்கையைப் பார்த்து ஒரு பாடல் பாடுகின்றார் .

நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லோர்க்கும்  பெய்யும் மழை .

நெல்லுக்கு இறைக்கும் நீர் வாய்க்கால் வழியோடி ஆங்காங்கிருக்கும்  புல்லுக்கும் ஆகுமாம் . அதுபோல  நல்லவர் ஒருவர் உலகில் இருந்தால் அவரைக் காக்கும் பொருட்டாக உலகிற்கே மழை பொழியும் . இப்படி அவர் பாடியவுடனே மழை கொட்டித் தீர்த்தது.அவரது     தமிழுக்கு அவ்வளவு வன்மை இருந்தது.பஞ்ச பூதங்களை ஆளும் வல்லமை தமிழுக்கு உண்டு .அதைப் பாடும் புலவர்களுக்கும் உண்டு.அக்காலத்தில் அறம் பாடியே அநீதியை அழித்தவர்கள் , இயற்கையையும் சரி செய்தவர்கள் தமிழ்ப் புலவர்கள் .

ஓதி உணர்ந்த பயன் உலகினுக்கே தரும்

நீதி முறை வழுவா  வேதியராலே எல்லோர்க்கும்  பெய்யும் மழை

தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லோர்க்கும்  பெய்யும் மழை .

நான் மறைகளை ஓதி உணர்ந்த பயன் , அவற்றை உலகினுக்கு ஆக்கும் பயனால் தான் படித்த படிப்புக்கு பயன் . இப்படி செயலாற்றும்  நீதி முறை வழுவா  வேதியராலேதான் எல்லோருக்கும் மழை பொழியும் .

 

கண்ணும் கருத்தும் என , கண்ணும் கருத்தும் என

கணவனைக் கருதும் புண்ணிய மாதர்தம்  புகழ் கற்பினாலே

புகழ் கற்பினாலே புகழ் கற்பினாலே

எல்லோர்க்கும்  பெய்யும் மழை.

கண்ணும் கருத்தும் என கணவனைக் கருதும் கற்புடை மாதர்கள் கற்புத் திறத்தாலேதான்  எல்லோருக்கும் மழை பொழிகிறது  .

 

எண்ண அரிய தொழில் செய்து  அரிய தொழில் செய்து

இம்மாநிலம் உண்ண உணவு தரும் உழவர்களாலே

உழவர்களாலே உண்ண உணவு தரும் உழவர்களாலே

எல்லோர்க்கும்  பெய்யும் மழை.

இவ்வுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லோர்க்கும்  பெய்யும் மழை . 

Saturday, 18 March 2023

சித்தர் மருந்தியல்


 


டாக்டரைப் பற்றி

டாக்டர் எல். உமா வெங்கடேஷ், இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அக்குபஞ்சர் மருத்துவத்தில் MD பட்டம் பெற்றுள்ளார், மேலும் குத்தூசி மருத்துவத்தில் 14 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமும், பல்ஸ் பேலன்சிங்கில் 21 வருட அனுபவமும் கொண்டவர். அவர் சந்தோஷி மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையை நடத்தி வருகிறார். உடல்நலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஆராய்ச்சி செய்வதில் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். சிங்கிள் நீடில் சிஸ்டம் மூலம் ‘பல்ஸ் பேலன்சிங்’ எனப்படும் குத்தூசி மருத்துவத்தின் மேம்பட்ட நுட்பத்தை அவர் செயல்படுத்துகிறார். இங்கு, ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஐந்து கூறுகளும் சமநிலையில் உள்ளன. சிறுநீரக செயலிழப்பு, சர்க்கரை நோய், இதயக் கோளாறுகள், குழந்தையின்மை, தைராய்டு போன்ற பல்வேறு நோய்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்தது இவரது சாதனையில் அடங்கும். நவீன கால அறிவியலால் சில மருத்துவ மர்மங்களை அறிய முடியவில்லை. ஒரு நோயாளி ஒருவேளை 3 ஆண்டுகளுக்குப் பிறகும் பாதிக்கப்படக்கூடிய நோய்களைக் கண்டறிய முடியும். ஒரு நோயாளியின் 'நாடி' பற்றிய தெளிவான ஆய்வு, அந்த நபரின் உடற்தகுதி நிலை பற்றிய நுண்ணறிவை அளிக்கிறது. 6-10 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கு கூட அவர் தனது சிரமமில்லாத சுலபமான மனப்பான்மையில் சிகிச்சை அளிக்கிறார். நாடித்துடிப்பை சமநிலைப்படுத்துவதில் அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் மூலம், இந்த முழுமையான சிகிச்சை முறையின் மூலம் ஒருவர் ஆரோக்கியம், செல்வம் மற்றும் வெற்றியை அடைய முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.

விருதுகளைப் பெற்றவர்

ISHMA ஆனது "பல்ஸ் பேலன்சிங் மாஸ்டர் டிரெய்னர்"- மே 2013 விருதை வழங்கியுள்ளது.


அக்குபஞ்சர் சங்கத்தின் ‘மருந்தில்லா மருத்துவ உலகின் ஒளி விளக்கு 2003’ விருது.


மகா ஃபைன் ஆர்ட்ஸ் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 100 க்கும் மேற்பட்ட கிராமப்புற முகாம்களை நடத்தி சேவையில் பங்களித்ததற்காக ‘சாதனை செம்மல்’ விருது.


மருத்துவத் துறையில் அவரது பங்களிப்பிற்காக பத்திரிக்கை மற்றும் ஊடக சென்னையின் ‘ஜாம்பவான்’ விருது.


‘வாழ்நாள் சாதனையாளர்’ நேர்படபேசு மாத இதழ் மற்றும் லயன்ஸ் சங்கம் இந்த விருதை வழங்கியது.


‘சிங்கப்பேன். (லயன் லேடி)’ தாய் நேசம் அறக்கட்டளை இந்த விருதை வழங்கியது


‘டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்’ நினைவு சிறப்பு விருது


மைட்ரேயின் துடிப்பு சமநிலை

எண்-17A, சிப்பியின் பிளாட்

சீனிவாசன் தெரு, தி.நகர்

சென்னை, 600017

   சென்னை:-

மொபைல் எண்:+91 90259 35559

  ஹைதராபாத்:-

மொபைல் எண்: +91 9025935559 / 9884076153

   pulsebalance@gmail.com

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

 


குமரி மாவட்டம் கருங்கல் கப்பியறை அருகே பாத்திரமங்கலம் பகுதியில் மகாதேவர் கோவில் , நடந்த அதிசயம்

 கருவறை சிவலிங்கம் மீது அருவியாக கொட்டிய தண்ணீர்


கருங்கல், மார்ச் 17-


கருங்கல் மகாதேவர் அருகே கோவில் கோபுரத்தில் இருந்து கருவறை சிவலிங்கம் மீது அருவி போல் தண் ணீர் விழுந்து வடிந்த காட்சி பக்தர்களைமெய் சிலிர்க்க வைத்தது.


குமரி மாவட்டம் கருங்கல் கப்பியறை அருகே பாத்திரமங்கலம் பகுதியில் மகாதேவர் கோவில் உள்ளது. கோவிலில் ஸ்ரீராம் என் பவர் போற்றியாக உள் ளார். நேற்று காலை போற்றி வழக்கம்போல் நடை திறந்து கருவறை யில் தீபம் ஏற்றிவிட்டு வெளியே சென்று தண் ணீர் எடுத்து வந்தார்.


அப்போது அவர் கண்ட காட்சி அவரை மெய் சிலிர்க்க வைத் தது. கோவில் கருவ றையில் சிவலிங்கத்தின் மீது அருவி போல் தண்ணீர் விழுந்து வடி வதை கண்டு ஆச்சரியம் அடைந்தார். உடனே அங்கு நின்ற விஸ்வநா தன் என்பவரிடம் தெரி வித்தார். அவரும் அந்த அற்புதமான காட்சியை பார்த்து பக்தி பரவசம் அடைந்து, தனது செல்


கருவறை


போனில் அக்காட்சியை பதிவு செய்தார்.


இந்த காட்சி சுமார் 15 நிமிடம் வரை நீடித் தது. இந்த தெய்வீக மெய் சிலிர்க்கும் காட்சி தற்போது வாட்ஸ் அப், பேஸ்புக் என வலைதளங்களில் வைர லாகி வருகிறது. தற் போது கோடை வெயி லின் தாக்கம் அதிகரித்து உள்ள நிலையில், திடீ ரென்று கோபுரத்தின் அடிப்பகுதியில் இருந்து


சிவலிங் கம் மீது அருவிபோல் தண்ணீர் விழுந்த பாத் திரமங்கலம் மகாதேவர் கோவில், (உள்படம்) கருவறை சிவலிங்கம் மீது அருவிபோல் தண்ணீர் விழும் காட்சி.


கோவில் சுமார் 1000 ஆண்டுகள் வாய்ந்தது. பழமை காலப் சமூக போக்கில் பராமரிப்பு இன்றி இடிந்து சேதம் அடைந்தது. கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் மேற் கொண்டு கும்பாபிஷே கம் நடத்தப்பட்டது. இச்சம்பவத்தை நேரில்


பக்தர்கள் பரவசம்: இணையத்தில் வீடியோ வைரல்


பார்த்த அப்பகுதியை சேர்ந்த சாந்தகுமார் கூறுகையில், சிவலிங் கத்தின் மீது தானாகவே தண்ணீர் அபிஷேகம் நடந்த காட்சியை படம் பிடித்த பக்தர் ஒருவர் வீடியோவை அனுப் பிவிட்டு தகவல் தெரி வித்தார்.


உடனே நான் பைக் கில் கோவிலுக்கு வந்து பார்த்த போது சிவலிங் கத்தின் மீது தண்ணீர் மளமளவென பாய்ந்து கொண்டிருந்தது.


அருவி போல் சிவலிங் கத்தில் பாய்ந்த தண் ணரை பார்த்த பக்தர்கள் உறைந்து மெய்சிலிர்த்தனர்.


கருவறை நிரம்பி கோவில் நடை வழி யாக தண்ணீர் வெளியே பாய்ந்து கொண்டிருந் தது. இதனைப் பார்த்த நான் அதிர்ச்சியில் போனேன். கோவிலின் மேல் பகு தியில் தண்ணீர் தேங்கி நிற்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் மழை தண்ணீர் வரவும் வாய்ப்பு இல்லை. திடீ ரென தண்ணீர் வந்து சிவலிங்கத்தின் மீது விழுந்தது அதிசயமா கவே உள்ளது என்றார்.


அருள்மிகு சோமகமலாம்பிக்கை சமேத சோமநாத ஸ்வாமி, கீழ்ப்பழையரை

சோழர் தலைநகர் பழையாறையின் வரலாறு

கும்பகோணத்திற்குத் தென்மேற் ஐந்து கி.மீ தூரத்தில் பழையாறு என்னும் இவ்வூர் சோழர்களின் தலைநகராக இருந்து ள்ளது. அது முற்காலத்தில் ஒரு பரந்துபட்ட மாநகராக இருந்திருக்கிறது காலபோக்கில் அந்நகர் சிதைந்து, இன்று பல சிற்றூர்கானாகக் காட்சியளிக்கிறது. பிற்கால சோழர்கள் தாலத்தில் ஒரு தலைநகராக விளங்கியது

இந்தப் பிழையாறை நகர் குறித்து ஆய்வாளர்கள் எவரும் விளக்கி எழுதாத நிலையில், எழுதத் தலைப்பட்டவர்கள் பண்டாரத்தார். இந்த பழையாறை நகர் கி.பி ஏழாம் நுற்றாண்டிலேயே சிறந்து விளங்கியதா எனவும் கி.பி ஏழாம் நூற்றாண்டில் நந்திவர்ம பல்லவன் இந்த நகரில் ஓர் அரண்மனையும் நந்திபுர விண்ணகரம் என்னும் ஒரு திருமால் கோயிலையும் கட்டினார் என்று இவர் குறிப்பிடுகிறார் அதற்குமேலாக அவன் இந்த கரை மாமல்லபுரமும் காஞ்சியும் போலத் தனக்குறிய சிறந்த நகராக வைத்துக் கொண்தோடு நகரின் பெயரை நந்திபுரம் பிற்காலத்தில் சோழர் ஆட்சிக் காலத்திலும் பழையாறையாகிய நந்திபுரம் என்று வழங்கப்பட்டிருக்கிறது பழையாறை மாநரைத் தலைமையிடமாகக் கொண்டு அரசாட்சி செய்தவன் சுந்திர சோழன் என்பதை கல்வெட்டுச் சான்றுகளுடன் விளங்கும் பண்டாத்தார்,அந்நகர் கும்பகோணத்திற்குதென்மேற்கே மூன்று மைல் தூரத்தில் பழையாறை என்னும் பெயருடன் இந்நாளில் ஒரு சிந்நூராக உள்ளது அச்சிற்றூரையும் அதனைச் சூழ்ந்துள்ள: முழையூர்,பட்டீசுரம்திருந்நக்திமுற்றம்,சோழன் மாளிகை அரிச்சந்திரம்,ஆரியப்படையூர், பம்பப்படையூர் மணப்படையூர்,கோணப்பெருமாள் கோயில், திருமேற்றளி என்கின்ற திருமத்தடி


தாராசுரம், நாதன்கோயில்,என்று வழங்கும் நந்திரப் விண்ணகரம் ஆகிய ஊர்களையும் தன்னகத்தது கொண்டு முக்காலத்தில் பெரிய நகரமாக அது அமைந்திருந்தது என்பதை தேவாரப் பதிகங்கள் மற்றும் கல்வெட்டுகளில் அறியலாம். இன்றும் அவ்ஊர்களின் பழைய பெயர்கியிலே ஊர்கள் இருந்துவருகின்றது. சோழ மாளிகை என்ற ஊர் சோழ மன்னர்கள் அரண்மனை இருந்த இடம் எனவும் தாராசுரம் என்பது இராசராசரம் என்பதன் மரு௨. நாதன் கோயில் என்பது நந்திபுர விண்ணகரம் இருந்த ஊர் இராஜேந்திர பேட்டை என்பது இன்று பேட்டை தெரு என்றும் காங்கேயன்பேட்டை என்பது உடையாளூர் அருகில் உள்ளது. பம்பைபடை,ஆரியபடை புதுப்படை, மணப்படை என்ற நான்கு படை வீடுகள் இருந்த இடங்களின் பெயரில் இன்றும் கிரமங்களின் பெயர்கள் உள்ளன.


செயலாளர்: S.K.ஸ்ரீதர் இராஜராஜசோழன் ஆய்வகம் & அறக்கட்டளை நிறுவனர்


பேரரசன் இராஜராஜசோழன் வரலாற்று ஆய்வு மற்றும்பண்பாட்டு மையம் U.S.R.லோகநாதன் மு.ஊராட்சி மன்றத் தலைவர், உடையாளூர்


T.சங்கர் மு.ஊசராட்சி மன்றத் தலைவர் பழையாறை


Sri Somakamalambigai Samedha Somanadha Swamy Temple (Kezh thalli) https://maps.app.goo.gl/NTqLgE8WymTdKEbL6







Friday, 17 March 2023

மடத்துக்கு வரணும்னு நினைச்சே...வந்துட்டே......இனிமே சங்கரனாவது,கிங்கரனாவது

 கும்பகோணத்தில் வசித்து வந்த திரு சதாசிவம் ஒவ்வொருஅனுஷ தினத்தன்றும் காஞ்சியில் பெரியவாள் இருக்கிறாரா என்று உறுதி செய்து கொண்டு தன் பயணத்தை துவங்கி விடுவார்.வேறு எங்கேனும் வெளியூர்களில் முகாமிட்டிருந்தால் அப்போது பயணிக்கமாட்டார்.அப்படி ஒரு அனுஷதினத்துக்கு முதல் நாள் மாலை.....

பழங்கள்.கல்கண்டு வாங்கப் போனவருக்கு ஒரு சின்ன அதிர்ச்சி.ஒரு கடையும் காணவில்லை இவரின் முகத்தைப் பார்த்த கீரை வியாபாரி" என்ன சாமீ பையும் கையுமா கடைக்குப் பொறப்படறயா..மெட்ராஸ்ல ஏதோ அரசியல் பிரச்னையாம்.ஒரு கட்சிக்காரங்க கூட்டமாக திரண்டு வந்து எல்லாக் கடைகளையும் மூடச் சொல்லி உத்தரவு போட்டுட்டு போறாங்க. "அட ஈஸ்வரா வெளியூருக்கு பஸ்ஸெல்லாம் போறதோ!" என்று ஒரு கேள்வி போட்டார். கடைகளயே பூட்ட வெச்சவங்க பஸ்ஸுகளை போக விடுவாங்களா.. பிறகு மனைவியிடம் "என்ன ஜானகி இப்படி ஆயிடுத்து? நாளைய அனுஷத்திற்கு காஞ்சிபுரம் போக முடியமானு தெரியலயே..ஏன் இந்த சோதனை? என்று கலங்கியவர் மகா ஸ்வாமிகளை மனதுக்குள் நினைத்துப் பிரார்த்தித்துக் கொண்டார். ப்ராப்தம் இருந்தா அங்கே இருப்போம் என்று சொல்லிவிட்டு வாசலில் இரு பக்கத்தையும் பார்வையால் துழாவிக் கொண்டிருந்தார். வாசலில் நின்று கொண்டிருந்த சதாசிவத்தின் அருகே வெள்ளை நிற அம்பாஸடர் கார் ஒன்று வேகமாக வந்து நின்றது.. பஞ்சகச்சம் அணிந்து தும்பைப்பூ மாதிரியான வெள்ளை நிறத்தில் சட்டையுடன் விபூதி தரித்த ஒருவர்காரிலிருந்து கீழே இறங்கினார்.இறங்கியதைப் பார்த்ததும் சதாசிவ தம்பதிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. "சார் நமஸ்காரம்...எம்பேரு சங்கரன்.உள்ளே இருக்கிறதுஎன் மனைவி.தஞ்சாவூர்லேருந்து வந்திண்டிருக்கோம். மனைவிக்கு திடீர்னு தலைவலி.அவளுக்கு நல்ல டிகிரி காபி சாப்பிட்டா சரியாயிடும். இன்னிக்குன்னு பார்த்தா ஓட்டல் எதுவும் இல்லை.உங்களுக்கு சிரமம் இல்லேன்னா இரண்டு பேருக்கும் ஸ்ட்ராங்கா காபி போட்டு கொடுக்க முடியுமா?

"தாராளமா..உள்ளே வாங்கோ.காபி என்ன..டிபன் பண்ணணும்னா கூட பண்ணித் தர்றேன்" என்று கனிவாகச் சொன்னார். மணக்கும் காபியைக் குடித்து விட்டு வாயார வாழ்த்தினார்கள் அப்போது சதாசிவம்,"இப்போது எதுவரைக்கும் பயணப் பட்டுண்டுண்டிருக்கேள்?" ஒருவேளை சென்னை என்று சொன்னால் தொற்றிக்கொண்டு போகலாமே என்ற ஒரு நப்பாசை. "நான் காஞ்சிபுரத்துல பெரியவாளைத் தரிசிக்கப் போயிண்டிருக்கேன்.ஆறு மாசம் ஆஸ்திரேலியாவில் இருந்துவிட்டு போனவாரம்தான் தஞ்சாவூர் வந்தேன். நாளைக்கு அனுஷமா இருக்கு.நீங்களும் வரேளா? என்று அழைப்பு விடுத்தபோது சதாசிவம் தம்பதிகளுக்குஅடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நள்ளிரவு வேளையில் கார் வந்து நிற்பதைப் பார்த்து ஓடோடி வந்தார் மடத்து வாட்ச்மேன். சங்கரன் உடனே அவர்களைப் பார்த்து "உங்களை மடத்து வாசலில் இறக்கி விடுவதற்காகத்தான் இங்கே வந்தேன். நண்பர் பக்கத்துல இருக்கார். அவா கிரஹத்துல தங்கிட்டு நாளைக்குக் காத்தால உங்களை வந்து பார்க்கிறேன். என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சங்கரன். காலை மடத்துக்கு அருகே உள்ள கடைகளில் வாங்கிய பழங்கள்,கல்கண்டு,புஷ்பங்கள் போன்றவற்றை ஒரு மூங்கில் தட்டில் எடுத்துக்கொண்டு பஞ்சகச்சம் மற்றும் மடிசார் உடையுடன் பெரியவா தரிசனத்துக்காக காத்துக் கொண்டிருந்தனர் சதாசிவம் தம்பதிகள். சங்கரனை இடை இடையே தேடினார் நன்றி சொல்ல வேண்டும் என்ற அவாவில். ஸ்ரீமடத்தின் உதவியாளர் ஒருவர், சதாசிவத்தின் தோளைத் தொட்டு,"மாமா...கூப்பிட்டுண்டே இருக்கேன்..அப்படி யாரைத் தேடறேள்? பெரியவா உங்களைக் கூப்பிடறா....வாங்கோ,.எம்பின்னால்" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்தார். பின் தொடர்ந்தனர் தம்பதிகள் ."வாப்பா சதாசிவம்..கும்பகோணத்துல உனக்கு பழம் ஏதும் கிடைக்கலையோ? அதான் மடத்து வாசல்லயே வாங்கிண்டு வந்திருக்கே போலிருக்கு" என்று கேட்டபோது ஆடித்தான் போனார் சதாசிவம்."ஆமாம் பெரியவா.. அங்கே ஏதோ பிரச்னை.கடைகளும் இல்லை..பஸ்ஸும் இல்லை..." "அதான் சொகுசா ஒரு கார்ல நன்னா தூங்கிண்டே மடத்துக்கு வந்து சேர்ந்துட்டியே...அப்புறம் என்ன...இந்தா" என்று பிரசாதத்தை நீட்டவும் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் பிரசாதத்தை வாங்கிக்கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டார்.பிறகு "சங்கரன்னு ஒருத்தர்..அவர்தான் தன்னோட கார்ல என்னைக் கூட்டிண்டு வந்து நேத்து ராத்திரி இறக்கி விட்டுட்டுப் போனார்.அவருக்குத்தான் நன்றி சொல்லணும்"என்றார் குழைவாக."மடத்துக்கு வரணும்னு நினைச்சே...வந்துட்டே......இனிமே சங்கரனாவது,கிங்கரனாவது"என்று பெரும்குரல் எடுத்து, சிரிக்க ஆரம்பித்தது அந்த பரப்பிரம்மம். சதாசிவத்துக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.ஆனால் புரியாதது மாதிரியும் இருந்தது. "பஸ் எல்லாம் ஓட ஆரம்பிச்சுடத்து...மடத்துல போஜனம் பண்ணிட்டு,ஜாக்கிரதையா ஊர் போயிட்டு வா"என்று ஆசிர்வதித்தார் பெரியவா.

நடந்து முடிந்த காட்சிகளின் பிரமிப்பில் இருந்து மீள முடியாமல் வெளியே வந்த சதாசிவம்,நேற்று நள்ளிரவு தான் மடத்து வாசலில் இறங்கியபோது பணியில் இருந்த வாட்ச்மேனைக் கண்டு அருகில் அழைத்து ""ஏம்ப்பா..நேத்து ராத்திரி பன்னிரண்டு மணிக்கு ஒரு வெள்ளை அம்பாஸடர் கார்ல நான் மடத்து வாசல்ல இறங்கினபோது ஒரு பெரியவர் வண்டி ஓட்டிண்டு வந்தாரே ...அவர் திரும்ப இன்னிக்கு வந்தாரா?" என்று கேட்டார்.

"என்ன சாமீ.....நேத்து ராத்திரியா? எனக்கு டூட்டியே இல்லியே சாமீ...கலையில்தானே நான் வந்திருக்கேன்" சதாசிவம் மீண்டும் அதிர்ந்தார்,"இல்லேப்பா....நேத்து ராத்திரி உன்னைப் பார்த்தேனே....இதே இடத்து வாசல்ல..." என்றார்.புருவம் உயர்த்தி, "என்ன சாமீ நீங்க...சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்றீங்க.. நேத்திக்கு ராத்திரி செக்யூரிட்டி டூட்டிக்கு ஆளே இங்கு இல்ல சாமீ" என்று சொல்லிவிட்டுப் போனார். சதாசிவத்தின் கண்களில் ஜலம் தளும்பியது. "அப்படி என்றால் ...நேற்று இரவு என்னையும் என் மனைவியையும் கும்பகோணத்தில் இருந்து இங்கே கூட்டிக்கொண்டு வந்த சங்கரன் யார்?" என்று மனம் நெகிழ்ந்து அரற்றினார்.சர்வமும் உணர்ந்த சங்கரனாக அவருக்கு மகா பெரியவா ஒரு விநாடி காட்சி தந்து மறைந்தார், "பெரியவா,,," என்று பெரும் குரலெடுத்து அழைத்து அந்த மடத்தின் வாசலில் ....மண் தரையில்..... பெரியவா இருக்கும் திசையை நோக்கி சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார் சதாசிவம் கூடவே அவரது மனைவியும்..

Thursday, 9 March 2023

திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் விபரம்

 தினமும் ஐந்து முறை நிறம் மாறக்கூடிய சிவலிங்கம், வண்டு துளைத்த லிங்கம், உலகை சமநிலைப் படுத்த அகஸ்தியர் தென் திசைக்கு வர அவருக்கு கல்யாண சுந்தரராக திருமண காட்சியை காட்டிய திருத்தலம் என பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்ட தஞ்சாவூர், திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் பற்றிய முழு விபரம் இங்கு பார்ப்போம்.

திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் விபரம்

மூலவர் - கல்யாண சுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்)

அம்மன்/தாயார் - கிரிசுந்தரி, கல்யாணசுந்தரி

உற்சவ மூர்த்தி - கல்யாண சுந்தரேஸ்வரர்

விருட்சம் - வில்வம்

தீர்த்தம் - சப்தசாகரம்

புராண பெயர் - திருநல்லூர்

அமைந்துள்ள இடம்: தஞ்சாவூர் நல்லூர்


கோயில் திறக்கும் நேரம் - காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 வரை

மாலை 5.30 மணி முதல் இரவு 8 வரை


இந்த திருக்கோயில் அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயம் ஆகும். அமர்நீதிநாயனாரை ஆட்கொண்டதும், அப்பருக்கு திருவடி சூட்டிய பெருமை கொண்டது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். இந்த கோயில் தஞ்சை - கும்பகோணம் சாலையில் திருநல்லூரில் அமைந்துள்ளது.


கோயிலின் பெருமை

இமயமலையில் சிவன் - பார்வதி திருமண காட்சியைக் காண உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் திரண்டன. இதனால் வட திசை தாழ்ந்தது. தென் திசை உயர்ந்தது. உலக சமநிலை மாறுவதை சமப்படுத்த அகஸ்தியரை தென் திசைக்கு செல்லும் படி இறைவன் கட்டளையிட்டார்.

உன் பக்தன் எனக்கு மட்டும் தங்களின் திருமணத்தை காண ஆவல் இருக்காதா என கேட்டு வருத்தப்பட, இறைவனின் திருமணக் காட்சியை இந்த தலத்தில் காட்டி அருளினார்.

இந்த திருமணக் கோலத்தில் இருக்கும் மூர்த்திக்கு முன் அகஸ்தியர் மற்றொரு சிவ லிங்கத்டை வைத்து பூஜித்து பேறு பெற்றார்.

இந்த கல்யாணசுந்தரேஸ்வரர் சிவ லிங்கத்திற்கு பின் இன்றும் கல்யாணசுந்தரேஸ்வரர் - பார்வதி சிலையை காண முடியும்.


கோயிலின் அமைப்பு

கோயில் முன் குளமும், ஐந்து நிலைகள் கொண்ட ராஜ கோபுரம் உள்ளது. கோயில் வெளிப்பிரகாரத்தில் நதவனம், மடப்பள்ளி, விநாயகர், நடராஜர் சன்னதி, மகாகாளியம்மன் சன்னதி, கன்னி விநாயகர், முகுசுந்த லிங்கம், சங்குகர்ணன் லிங்கம், சுமதி லிங்கம், வருண லிங்கம், விஷ்ணு லிங்கம், பிரம லிங்கம் ஆகிய சிற்பங்கள் உள்ளன.


கல்யாணசுந்தரர் சுதை

மூலவர் அமைந்திருக்கும் பஞ்சவர்ணேஸ்வரர் சிலைக்கு பின் இருக்கும் கல்யாண சுந்தரர் சிலை சுதை சிற்ப வடிவில் உள்ளன.

சுதை - சுண்ணாம்பு, களிமண் உள்ளிட்டவை கலந்து செய்யப்பட்ட விக்ரகம்.


சப்தஸ்தானம்

சப்தஸ்தானம் எனும் ஏழுர்த்தலங்களில் திருநல்லூர், திருப்பாலைத்துறை, மட்டியான்திடல், பாபநாசம்,கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத்திடல், ஆகிய தலங்களாகும்.


மகம் நட்சத்திரத்திர கோயில்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த ஆலயத்தில் வழிபடுவது சிறப்பு. சுகப்பிரசவம் நடக்க இந்த கோயிலில் கர்ப்பிணிப் பெண்கள் வழிபாடு நடத்துகின்றனர். அதே போல் நினைத்த காரியம் சித்தி அடைய வழிபட வேண்டிய சிறப்பான கோயில் இதுவாகும்.


மற்ற புராண நிகழ்வுகள்

ஆதிசேஷணுக்கும், வாயு பகவானுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையின் போது கயிலை மலையிலிருந்து வாயுவால் வீசி எரியப்பட்ட இரு சிகரங்களில் ஒன்று தான் இந்த ஆலயம் அமைந்துள்ளது. மற்றொரு சிகரம் சுந்தரகிரி எனப்படுகிறது.

அப்பர் என அழைக்கப்படும் திருநாவுக்கரசருக்கு இறைவன் திருவடி சூடிய திருத்தலம்

தர்மண், குந்தி தேவி பூஜித்து பேறு பெற்ற திருத்தலம்.

முசுகுந்தன் இந்திரனிடமிருந்து பெற்ற திருவாரூரில் தற்போது இருக்கும் தியாகராஜ பெருமானை, இந்த தலத்தில் மூன்று நாட்கள் வைத்து பூஜித்து, பின்னர் திருவாரூரில் பிரதிஷ்டை செய்தார்.

லிங்கத்தின் மீது துளைகள்

பிருங்கு முனிவர் வண்டு வடிவில் வந்து இறைவனை வழிபட்ட ஆலயம்.

வண்டு வடிவில் இறைவனை வலம் வந்து வழிபட்டார். இதன் காரணமாக இந்த சிவலிங்கத்தின் மீது சில துளைகள் காணப்படுகின்றன.

தற்போது திருவெண்டுறை என அழைக்கப்படும் திருவண்டுதுறை வண்டுறை நாதர் கோயிலின் வரலாறும் இதையே கூறுகின்றது.


நிறம் மாறும் சிவலிங்கம்

இங்கு வில்வ மரத்தடியில் இறைவன் சுயம்புவாக தோன்றினார்.

பொன் நிறமாக இருக்கும் சிவலிங்கம், தினமும் வெவ்வேறு வேளைகளில் ஐந்து நிறங்களில் காட்சி தந்து அருள்பாலிக்கின்றார்.


தாமிர நிறம், இளஞ்சிவப்பு, பொன்னிறம், உருகிய தங்க நிறம், நவரத்தின பச்சை என மாறி மாறி காட்சி தந்து அருள் தருவதால் இவருக்கு பஞ்சலிங்கேசர் என பெயர் பெற்றுள்ளார்.

இந்த கோயிலில் அமர்நீதி நாயனாருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் முக்தி கிடைத்த திருத்தலம். இது குறித்த பிரதிமைகள் கற்சிலைகளும், செப்பு சிலையும் உள்ளன.

இங்கு சோழர் கால 22 கல்வெட்டுகள், ஒரு முஹய்சரர் கல்வெட்டு என 23 கல்வெட்டுகள் உள்ளன.


திருநாவுக்கரசர் பாடிய பதிகம்

அந்திவட் டத்திங்கட் கண்ணியன் ஐயா றமர்ந்துவந்தென்

புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பனோ

சிந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் சிறிதலர்ந்த

நந்திவட் டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.

நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்

சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார் செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்

இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி

நனைந்தனைய திருவடியென் றலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே..




Tuesday, 7 March 2023

கொல்லி மலை அரப்பளீஸ்வரர் கோவில்

 கொல்லி மலை அரப்பளீஸ்வரர் கோவில்



Friday, 3 March 2023

வாழும் கலை

 24 மணி நேரமும் யோகம், வாசி யோகம், அனைத்து உயிர்களும் 24 மணி நேரமும் வாசி யோகம் செய்து கொண்டு இருக்கின்றன. அட , அது தாங்க , நாம உள்ளே இழுத்து வெளியே விடும் சுவாசம். அதை செய்வது உயிர். உடல் அதனுடன் இணைந்துஇருக்க வேண்டும். அது இல்லாமல், உடலில் ஏற்படும் ஐம்புலன் அனுபவங்களில் சிக்கி பதிவு செய்து, மனம் என்ற ஒரு பதிவுகளால் சூழப்பட்டு யோகத்துடன் இணையாமல், வாழ்ந்து வருகிறோம். இந்த பிறப்பின் ஒரே நோக்கம் மற்றும் செயலே வாசி யோகம். 100 கோடி மக்கள் தொகை இருந்தாலும், 100 கோடி பெரும் ஒன்றாக செய்வது இந்த வாசி யோகம், வாசி யோகம் நின்றால் மரணம். அனைத்து வாழும் விலங்குகள் பறவைகள் செய்வது மூச்சு காற்று என்னும் வாசி யோகம்.  பறவைகள் விலங்குகளை விட மனிதர்கள் மேம்பட்ட வாசி யோகிகள். பறவைகள் விலங்குகள் வாசி யோகத்தில் தேர்ச்சி பெற்று மேம்படும் போது மனிதர்களாக பிறக்கின்றன. வாசி யோகம் மட்டுமே உலகத்தின் இயக்கம். உயிரின் செயல். நாம் அந்த யோகத்தில் இணைந்தால், மனதை சுவாசத்தில் கவனம் கொள்ள செய்து, எண்ணங்கள் அற்று, உயிருடன் உடலை இணைத்து இருந்தால், சுவாசம் உள்ளடங்கி உள்ளேயே ஓடும் நிலை கிடைக்கும். அந்த நிலையில் சகலமும் கிடைக்கும். மரணமில்லாத பெரும் வாழ்வு கிட்டும். 


பிறந்ததில் இருந்து 24 மணி நேரமும் இந்த நொடி வரை நடந்து கொண்டே இருக்கும் ஒரே செயல், வாசி யோகம் மட்டுமே. இறக்கும் கடைசி நொடி வரை வாசி யோகம் நடக்கும்.கண்ணுக்கு முன்னாள் உள்ளங்கையில் இருக்கும் இந்த பேருண்மையை புரிந்து கொள்ளாமல் எதை எதையோ தேடி அலைந்து, சுவாசத்தை துளி அளவேனும் கவனம் கொள்ளாமல், உயிருடன் உடன்படாமல் வாழ்வதால், உயிர் கொஞ்சம் கொஞ்சமாக தனது வாசி யோகத்தை குறைத்து குறைத்து, முதுமை எய்தி, இறப்பில் முடிகிறது. தானாக நடக்கும் வாசி யோகத்துடன் இணையாத இந்த உடலும் மனமும், காரணம் புரியாமல் நலிவுறுகிறது. 


தினமும் கொஞ்ச நேரம் சுவாசத்தை கவனியுங்கள். வேலை குடும்பம் பிழைப்பு நண்பர்கள் எல்லாமே நம்மை வாசி யோகத்தில் இருந்து திசை திருப்பும் மனதை பலப்படுத்தும் செயல்கள். கொஞ்ச நேரம் இதனை உணர்ந்து மனதை அலை பாய விடாமல் சுவாசத்தை கவனிக்க பழகுங்கள். பெரும் அமைதி கிடைக்கும், நிம்மதி இருக்கும். வாழ்வாங்கு வாழலாம்.


ஆக்கம்

தி. இரா. சந்தானம்

பேய் மிரட்டி மூலிகை

 

பேய் மிரட்டி