Friday, 30 September 2022

மகாகுரு அகஸ்தியர் துதிக்கும் நவராத்திரி நாயகி

 *🌸மகாகுரு அகஸ்தியர் துதிக்கும் நவராத்திரி நாயகி🌸*


அன்னை பராசக்தி, நவநவமாக வடிவெடுக்கும் சமயங்களில் எல்லாம் தன் பக்தர்களுக்கு நல்லனயாவற்றையும் அள்ளித்தருவாள் என்கிறது தேவி பாகவதம். அதற்கு உதாரணமாக, நவராத்திரியின் போது நவதுர்க்கா வடிவினளாகத் தோன்றி அம்பிகை அருள்வதைச் சொல்லலாம். அந்த தேவியை நவரத்தினமாலைசூட்டி ஆராதிக்கும்போது நாளும், கோளும் நன்மையே செய்யும் என்கின்றன புராணங்கள். எல்லோராலும் அப்படி நவரத்ன மாலையை அன்னைக்கு அணிவிப்பது சாத்தியமா? அதற்காகவே, நவமணிகளைக் கோத்ததுபோன்ற எளிய பாமாலை ஒன்றை ஆக்கி அளித்துள்ளார் அகத்திய மாமுனிவர். சித்தர்கள் யாவரிலும் மேலான அந்தக் குறுமுனியின் திருவாக்கில் மலர்ந்த அந்த எளிய துதி உருவானது, திருமீயச்சூர் திருத்தலத்தில்தான் என்பார்கள்.


ஒரு சமயம் அகத்தியருக்கு உபதேசங்கள் பலவும் செய்த ஹயக்ரீவர், லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமையையும் அவருக்குச் சொன்னார். அதனைக் கேட்ட அகத்தியர், அந்தத் துதியினைச் சொல்லி, அம்பாளை வழிபட ஏற்ற தலம் எது என்பதையும் கூறிடுமாறு வேண்டினார். பூவுலகில் மனோன்மணி பீடத்தில் அம்பிகை லலிதையாக அருளும் திருமீயச்சூர் திருத்தலத்திற்குச் சென்று லலிதாசகஸ்ரநாமத்தினைக் கூறி வழிபடுமாறு சொன்னார், ஹயக்ரீவப் பெருமான். அதன்படி திருமீயச்சூர் தலம் வந்து அன்னையின் ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி ஆராதித்தார், அகத்தியர். அப்போது லலிதா சகஸ்ரநாமம் முழுவதையும் சொல்வதன் பயனை, பாமர மக்களும் பெறவேண்டும் என்பதற்காக எளிமையான துதி ஒன்றை இயற்றினார். அதுவே லலிதா நவரத்னமாலை. இந்தத் துதியை தினமும் சொல்பவர் எல்லா வளமும் நலமும் பெற்று சிவசக்தியரின் அருளால் சிறப்புகள் யாவும் பெறுவதோடு, ஒப்பற்ற நவரத்ன மணிபோன்ற பிரகாசமான வாழ்வையும் அடைவர் என்பது அகத்தியரே அளித்துள்ள வாக்கு. பலன்தரும் அபூர்வமானதும் எளிமையானதுமான அந்தத் துதி உங்களுக்காக இங்கே தரப்பட்டுள்ளது. தூயமனதோடு, துதியைச் சொல்லுங்கள். அன்னை லலிதாபரமேஸ்வரியின் அருளால், அனைத்து நலனும் உங்கள் வாழ்வில் வந்து சேரும். ஒவ்வொரு நாளும் குறையாத நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் கூடும். ஆரோக்யமும் ஆயுளும் நீடிக்கும்.


ஸ்ரீ கணேசர் துதி


ஞான கணேசா சரணம் சரணம்

ஞான ஸ்கந்தா சரணம் சரணம்

ஞான சத்குரு சரணம் சரணம்

ஞானா னந்தா சரணம் சரணம்


காப்பு


ஆக்கும் தொழில் ஐந்தறனாற்ற நலம்

பூக்கும் நகையாள் புவனேஸ்வரி பால்

சேர்க்கும் நவரத்தின மாலையினைக்

காக்கும் கணநாயக வாரணமே


மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


வைரம்


கற்றும் தெளியார் காடே கதியாய்க்

கண்மூடி நெடுங் கனவான தவம்

பெற்றும் தெளியார் நிலையென்னில் அவம்

பெருகும் பிழை யேன் பேசத் தகுமோ!

பற்றும் வயிரப் படைவாள் வயிரப்

பகைவர்க்கு எமனாக எடுத்தவளே

வற்றாத அருட்சுனையே வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


நீலம்


மூலக் கனலே சரணம் சரணம்

முடியா முதலே சரணம் சரணம்

கோலக் கிளியே சரணம் சரணம்

குன்றாத ஒளிக் குவையே சரணம்

நீலத் திருமேனியிலே நினைவாய்

நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்

வாலைக்குமரி வருவாய் வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.


முத்து


முத்தே வரும் முத்தொழிலாற்றிடவே

முன் நின்றருளும் முதல்வி சரணம்

வித்தே விளைவே சரணம் சரணம்

வேதாந்த நிவாஸினியே சரணம் சரணம்

தத்தேறிய நான் தனயன்; தாய் நீ

சாகாத வரம் தரவே வருவாய்

மத்தேறு ததிக்கிணை வாழ்வடையேன்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


பவளம்


அந்த மயங்கிய வான விதானம்

அன்னை நடம் செய்யும் ஆனந்தமேடை

சிந்தை நிரம்ப வளம் பொழிவாரோ

தேன் பொழிலாமிது செய்தவளாரோ

எந்தயிடத்தும் மனத்தும் இருப்பாள்

எண்ணுபவர்க்கருள் எண்ண மிகுந்தாள்

மந்திர வேத மயப் பொருளானாள்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


மாணிக்கம்


காணக் கிடையா கதியானவளே

கருதக் கிடையா கலையானவளே

பூணக் கிடையாப் பொலிவானவளே

புனையக் கிடையாப் புதுமைத்தவளே

நாணித் திருநாமும் நின்துதியும்

நவிலாதவரை நாடாதவளே

மாணிக்க ஒளிக் கதிரெ வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!


மரகதம்


மரகத வடிவே சரணம் சரணம்

மதுரித பதமே சரணம் சரணம்

சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்

ஸ்ருதிஜதி லயமே இசையே சரணம்

அரஹர சிவ என்றடியவர் குழும

அவரருள் பெற அருளமுதே சரணம்

வரநவ நிதியே சரணம் சரணம்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே,


கோமேதகம்


பூமேவிய நான்புரியும் செயல்கள்

பொன்றாப் பயனும் குன்றா வரமும்

தீமேல் இடினும் ஜெய சக்தியெனத்

திடமாய் அடியேன் மொழியும் திறனும்

கோமேதகமே குளிர்வான் நிலவே

குழல்வாய் மொழியே தருவாய் தருவாய்

மாமேருவில் வளர் கோகிலமே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


பதுமராகம்


ரஞ்ஜனி நந்தினி அங்கணி பதும

ராகவி காஸவியாபினி அம்பா

சஞ்சல ரோக நிவாரணி வாணி

சாம்பவி சுந்தர கலாதரி ராணி

அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி

அம்ருத சொரூபிணி நித்ய கல்யாணி

மஞ்சுள மேரு ச்ருங்க நிவாஸினி

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


வைடூரியம்


வலையொத்த வினை கலை யொத்த மனம்

மருளப் பறை யாரொலி யொத்த விதால்

நிலை யற்றெளியேன் முடியத் தகுமோ

நிகளம் துகளாக வரம் தருவாய்

அலையற்றசை வற்று அநுபூதி பெறும்

அடியார் முடிவாழ் வைடூரியமே

மலையத் துவசன் மகளே வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.,

நூற்பயன்


எவர் எத்தினமும் இசைவாய் லலிதா

நவ ரத்தின மாலை நவின்றிடுவார்

அவர் அற்புத சக்தி யெல்லாம் அடைவார்

சிவரத்தின மாய்த் திகழ்வார் அவரே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


ஸ்ரீ லலிதாம்பிகை துதிப்பாடல்


ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்மாஸ னேச்வரி

ஸ்ரீ லலிதாம் பிகையே புவனேச்வரி (ஸ்ரீ)

ஆகம வேத கலாமய ரூபிணி

அகில சராசர ஜனனி நாராயணி

நாக கங்கண நடராஜ மனோகரி

ஞான வித்யேச்வரி ராஜ ராஜேச்வரி


பலவித மாயுனைப் பாடவும் ஆடவும்

பாடிக் கொண்டாடும் அன்பர் பதமலர் சூடவும்

உலக முழுதும் என தகமுறக் காணவும்

ஒரு நிலை தருவாய் காஞ்சிக் காமேச்வரி!


உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்

உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்

நிழலெனத் தொடர்ந்த முன்னூழ்க் கொடுமையை நீங்கச் செய்த

நித்யகல்யாணி பவானி பத்மேச்வரி

துன்பப் புடத்திலிட்டுத் தூயவனாக்கி வைத்தாய்

தொடர்ந்த முன்மாயம் நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்

அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் 

காணச் செய்தாய்

அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி...🙇‍♂️🙏


https://youtu.be/5e229dQNXis

Thursday, 29 September 2022

அகத்தியர் ஆலயம் எழுப்புதல்

 ஒரு வீட்ல எத்தனை பேரு இருக்கீங்களா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சீட்டு அந்த மாதிரி நீங்க வந்து மினிமம் அப்படின்னு சொல்லிட்டு கணக்கு வச்சு கொடுக்கலாம் உதாரணத்துக்கு ஒரு வீட்ல வந்து அஞ்சு பேர் இருந்தாங்க அப்படின்னா அஞ்சு சீட் எழுதிக் கொடுக்கலாம் அப்படின்னு நினைக்கிறேன்


ஓம் அப்படிங்கற பிரணவத்துக்குள்ள அனைத்துமே அடக்கம் அகத்தி என்ற எழுத்துக்குள்ள அனைத்து குருமார்களும் அனைத்து சித்தர்களும் முனிவர்களும் யோகிகளும் அடங்குவார்கள் உலோபாமுத்திரை அன்னை சக்தி வடிவம் அகஸ்தியரின் ஒரு பகுதி எனவே அவர்களும் அதனுள் அடங்குவார்கள் ஈசாய என்று அகத்தீசாய என்று கூறும் போது ஈசனும் அதனுடன் சேர்த்து வருகிறார் ஈசனுடன் சேர்த்து முப்பெரும் தேவர்கள் பிரம்மா விஷ்ணு சிவன் அவர்களுடைய பத்தினிகள் மற்றும் பார்வதி தேவி ஆகியோர்களும் அதில் அடங்குவார்கள் நமக என்று கூறும்போது அனைவருக்காகவும் பொதுவாக அவர்களை வணங்குகிறோம் என்று பொருளாகும் எனவே அகத்தீசாய நமக என்ற நாமத்தில் அனைத்தும் அடங்கும் என்பது பொருள்


பள்ளிக்கூடத்தில் சிறுவர்கள் ஒரு பாடத்தை ஒரு சொல்லை மறந்து விட்டால் அதனை அல்லது தவறாக எழுதி விட்டால் அதற்கு அந்த சொல்லை 100 முறை எழுதி வரும்படி என் ஆசிரியர் ஒரு தண்டனையாக கொடுப்பார் அது தண்டனை அல்ல அந்த சொல்லை மீண்டும் மீண்டும் எழுதும்போது அது நன்றாக உருப்பேற்று மனதில் ஆழமாக பதிகிறது பின்னரது தவறு செய்ய அல்லவோ மறக்கவோ வாய்ப்பு இல்லை எனவே அது போல நாம் நமது உள்ளிருக்கும் உயிர் சக்தியான அகஸ்திய சக்தியை மறந்து நிலையில் வாழ்வில் பல துன்பங்களுக்கு ஆளாகிறோம் அதனை ஞாபகப்படுத்தி கொள்ளவே அந்த நாமத்தை மீண்டும் மீண்டும் நாம் எழுதி வரும்போது அது நம்முள் ஆழமாக பதிந்து நமது வாழ்க்கைக்கு தேவையான அனைத்து செல்வங்களையும் அனைத்து நன்மைகளையும் வாரி வழங்கும் என்பது எள்ளளவும் ஐயமில்லை


லோபா முத்திரை அன்னை நதி வடிவமாக இருக்கிறார் அவருக்கு தாமிரபரணி என்று பெயர் அகஸ்தியர் முனிவர் மகாமுனிவர் மேரு மலையாக பொதிகை மலையாக தமிழகத்தில் இருக்கிறார் அந்த மலையில் இருந்து அகஸ்திய மலை என்று அழைக்கப்படுகிறது அந்த அகஸ்திய மலையிலிருந்து பொங்கி பாயும் நதியாக தாமிரபரணி என்ற லோபா முத்ரா அன்னையாருடன் சேர்ந்து இருவரும் தமிழகத்தில் அருள்பாலிக்கிறார்கள் அந்த நதியின் சிறப்பு தாமிரம் செப்பு அல்லது ஆங்கிலத்தில் காப்பர் என்று கூறுவார்கள் அப்படிப்பட்ட உலோகத்தில் நாம் அகஸ்தியர் நாமத்தை எழுதி கொண்டு இருக்கிறோம் அந்த உலோகம் செப்பு செப்பு காகிதம் என்று கூறப்படுவது தாமிரம் தாமிரபரணி அந்த குளோப முத்திரையின் வடிவமாகும் உலோக முத்திரை அகஸ்தியரை தாங்கும் விதமாக நாம் அகஸ்தியரின் நாமத்தை ஓம் அகத்தீசாய நமக என்று அந்த செப்பு காகிதத்தில் எழுதும்போது உலோப முத்திரை தாயும் அகஸ்தியரும் இணைந்த ஒரு சொரூபம் ஆகிவிடுகிறது சாதாரண செப்பு காகிதத்தில் அந்த மகிமை இல்லை ஆனால் அதிலே அகஸ்தியர் நாமத்தை பொறிக்கும் போது அந்த செப்பு காகிதம் உலோபா முத்திரை தாயராகவும் உடன் சேர்த்து அகஸ்தியரை தாங்கும் விதமாகவும் அமைந்து இந்த பூலோகத்தை ரஷிக்க நமது ஆலயத்தில் மண்ணிற்குள் கலந்து அனைவரையும் காப்பாற்றுவார்கள் என்பது நமது நம்பிக்கை ஓம் அகத்தீசாய நமக ஓம் லோபமுத்ராய நமக




எனது அனுபவங்கள்

 https://agathiyartrs.blogspot.com/


https://agathiyartrs.blogspot.com/






நமது பீடத்தின் கோரிக்கை செய்தி

 அகத்திய அடியவர்களுக்கு வணக்கம் 


நமது குருஜி அவர்களிடம் இருந்து வந்துள்ள செய்தி .


நமது அகத்தியர் ஆலய பணிகள் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே .

தற்போது அகத்தியர் கருவறை கட்டிடம் எழுப்பப்பட்டு வருகிறது . அங்கே அகத்தியர் விக்ரகம் பிரதிட்டை செய்யப்படும் இடத்தில் , பூமிக்கு அடியில் ஓம் அகத்தீசாய நமஹ , ஓம் அகத்தியர் திருப்பாதம் போற்றி ஓம் லோபாமுத்திராய நமஹ  என்று செப்பு காகிதத்தில் ஒரு லட்சம் உரு எழுதி மண்ணிற்குள் , அகத்தியர் விக்ரகம் அமையும் இடத்தில் போட வேண்டும் . அகத்தியரின் மேல் பக்தி கொண்டவர்கள் , அகத்தியருக்கு தனி ஆலயம் அமைய வேண்டும் என்று விரும்புவர்கள் , இந்த கைங்கர்யத்தில் கட்டாயம் பங்கு கொண்டு , ஒவ்வொருவரும் தலா குறைந்தது 108 முறையாவது செப்பு தகட்டில் எழுதி நமது பீடத்திற்கு வந்து சேருமாறு ஆவண செய்ய குருஜி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார் . 10-15 நாட்களுக்குள் அகத்தியர் நாம வாசகங்கள் மண்ணில் புதைக்கப்படும் , அதற்கு பிறகு கொடுத்தால் , கொண்டு செல்ல முடியாது , தளம் போடப்பட்டுவிடும். இந்த பெரும் புண்ணிய காரியத்தில் பங்கு பெறுபவர்களுக்கு  சித்தர் விக்ரகம் பிரதிட்டை செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ , அது கிடைக்கும் , நம்மால் அருவமாக  பீடத்தில் உருவமாக விக்ரகம் பிரதிட்டை செய்யும் வாய்ப்பு எப்போது யாருக்கு அமையுமோ , இப்பிறவியில் இல்லை என்றால் , பின் எப்பிறவியோ , எங்கு பிறப்போமோ , எப்படி பிறப்போமோ , தெரியாது . எனவே நமது கண் முன் இந்த வாய்ப்பு இப்பிறவியிலேயே வாய்க்கும் போது பயன்படுத்தி கொள்ள வேண்டும் . அகத்தியர் நேரிடையாக பக்தர்களிடம் உரையாடும் ஆலயம் ஆதலால் , அய்யாவின் நேரடி பார்வை பக்தர்களின் மீது விழும் , அவரவர் எழுதிய எழுத்துக்கள் , அதனால் தான் காலத்தால் நிலைத்து நிற்கும் செப்பு காகிதத்தில் எழுதி கொடுக்க சொல்கிறோம் . அந்த எழுத்துக்கள் பல வருடம் அப்படியே இருக்கும் , அவை இருக்கும் வரை அய்யனின் அருளும் நமக்கு எங்கிருந்தாலும் கிடைத்து கொண்டே இருக்கும் . பலருக்கு அய்யா அவர்கள் நாடியில் இவ்வாறு  உரைத்திருப்பார்கள் , உதாரணம் - நீ சென்ற பிறவிகளில் பிரதிட்டை செய்திட்ட சிவன் ஆலயம் இன்றும் மக்களிடையே வழிபாட்டில் உள்ளது - என்று முற்பிறவி பற்றி கூறும் போது சிலருக்கு உரைத்திருப்பார் , ஆகவே , இதனால் புரிந்து கொள்வது என்னவென்றால் , எவ்வளவு பிறவி ஆனாலும் , நாம் செய்யும் நற்கருமம் , பல பிறவிகளுக்கு தொடர்ந்து வந்து நாம் ஜென்மம் கடைத்தேற  முக்தி அடையும் வரை அகத்தியர் அருள் காலம் கடந்த நிலையில் துணை நிற்கும் . தயவு செய்து எவ்வளவு புண்ணியம் சேர்க்க முடியுமோ சேர்த்து கொள்ளுங்கள். 


மிக்க நன்றி 


இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று நினைக்கிறேன் , ஆனால் அலுவலக பணி வெகுவாக உள்ளதால் , சுருக்கமாக நமது வேண்டுகோளை  செய்கிறேன் 


அனைவரும் , அகத்தியர் நாமம் எழுதி குருஜி இடம் ஒப்படைக்கவும் 


சந்தானம்


ஓம் அகஸ்தியர் திருப்பாதம் போற்றி அகஸ்திய அன்பர்களே அகஸ்தியர் சித்தர் பீடம் புகலூர் தன்னிலே இருந்து குருஜி ஆலயம் அமைப்பதென்பது பெரும் புண்ணிய காரியம் அதுவும் அகத்தியருக்கு ஆலயம் அமைப்பது என்பது பெரும் புண்ணியம் இந்த புண்ணியம் தண்ணிலே அகஸ்திய என் மக்களே உங்கள் கரத்தால் செம்பு தகட்டினிலே ஓம் அகத்தீஸ்வராய நமக இல்லையேல் அகஸ்தியர் பாதம் போற்றி என்ற திருநாமத்தை ஒன்றுக்கு ஒன்று என்ற தகட்டினிலே ஆயிரம் எட்டு முறை அதற்கு மேலோ உங்களால் என்ற அளவு அகத்திய பெருமானின் திருநாமத்தை எழுதி அகஸ்தியர் பிரதிஷ்டை செய்யப்படும் இடம் தண்ணிலே அடிகளே பதித்து அத்தனை மேலே அமர்த்தி அகஸ்தியர் கைங்கரியமும் தனிலே செய்து புண்ணியத்தை பெறுவீர் மக்களே தகட்டினிலே ஒரு பக்கம் மற்றும் எழவும் பின்புறம் வேண்டாம் இந்த தகடுகள் கோயமுத்தூர் பூ மார்க்கெட் முத்தையா ஸ்டோரில் கிடைக்கும் பெற்றுக் கொள்ளுங்கள் தீர்ந்து பால் பைன் பேனாவுக்கு எழுதுவது உத்தமம் அழகைத் தரும் அகஸ்தியர் திருநாமம் போற்றி குரு குருஜி டி ஆர் சந்தானம் அகஸ்தியர் திருப்பாதம் போற்றி

Tuesday, 20 September 2022

கிரகப்பிரவேசம் செய்யும் முறை

 கிரகப்பிரவேசம் செய்யும் முறை:...............


வேதங்களில் வீடு கட்டத் தொடங்குவதற்கு கிருகாரம்பம் என்றும் வீடு கட்டி குடிபுகுவதற்கு கிருஹப்ரவேசம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இக்காலத்தில் இந்த புனிதமான புதுமனை புகுவிழாவை அதன் விதிமாறி ஆடம்பரப் பொருட்களை வைத்துச் செய்கின்றனர். நாம் வாழப்போகும் வீடு நம் மன விருப்பங்களை நிறைவேற்ற அதை ஒரு கோவில் போன்றும் இறைவன் வாழும் இடம் என்றும் கருத வேண்டும். அது எப்படி செய்வது முறை என்று அறிவோம்.


கிரகப்பிரவேசம் செய்யும் முறை:............... பஞ்சாங்க சுத்தியுள்ள சுபநாளில் மஞ்சளும் பசுமையும் கலந்த வண்ண அழைப்பிதழை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் குங்குமத்துடன் கொடுத்து வரும்படி சொல்ல வேண்டும். அழைப்பு நேரிலும் கடிதம் மூலமும் இருக்கலாம்.


தெய்வாம்சம் பொருந்திய இல்லம் அமைத்து குடிபுகும் போது அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் பேசுவதை நிகழ்ச்சியினூடே முடிந்த அளவு அந்த நேரத்தில் வைக்காமல் அடுத்த நேரத்தில் வைத்துக்கொள்ள பார்க்கலாம். கிரஹ வழிபாட்டுக்கு இடைïறு நேராத வண்ணம் செய்து கொள்ளலாம்.


கிரகப்பிரவேசத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளும் லக்ன முகூர்த்தங்களான 6-7 நேரங்களிலும் வைக்கலாம். காலை 9 மணிக்குப்பிறகு கிரகப்பிரவேசம் செய்தல் கூடாது. அதிகாலை 4 மணிக்குத் தொடங்கும் கிரகப்பிரவேச வழிபாட்டிற்கு 5 மணிக்கு வந்து அவசரமாக அள்ளிப்போட்டு விட்டு காலை விருந்துக்கும் வி.ஐ.பி. வருகைக்கும் முக்கியத்துவம் கொடுத்து நிகழ்வை ஏனோ தானோ என்று செய்தல் வேண்டாம்.


நாம் வாழப்போகிற இல்லம். பொறுமையாகச் செய்யலாம். ஆடம்பரமான கலாச்சார உடைகளை தவிர்த்து எளிய உடையை (வேட்டி, துண்டு, புடவைகளை) பூஜை நேரத்தில் உடுத்திக்கொண்டு அமர வேண்டும்.


வீடு கட்டியிருக்கும் பகுதியில் உள்ள ஒரு கோபுர வாசலில் சாமிபடம், அரிசி, உப்பு, பருப்பு, நிறை குடநீர், காமாட்சி தீபம், ஐவகை மங்களப் பொருட்கள் (5 வகை பழங்கள்) மஞ்சள், குங்குமம், கண்ணாடி, தாம்பூலம், தேங்காய் இவற்றுடன் தட்டு வைத்து கற்பூர ஆரத்தி காட்டி மங்கள வாத்தியங்களோடு வீட்டு வாசலுக்கு (பெண்கள் சொந்த கதை பேசாமல்) தெய்வத்துதிகளைச் சொல்லிக் கொண்டு வரவேண்டும்.


கோபூஜை:........... பெண்கள் மங்களப் பொருட்களோடு வீட்டு வாசலில் நிற்கும் போது பசுவை கன்றுடன் வீட்டைப் பார்க்கும்படி நிற்க வைத்து அதற்கு வீட்டு எஜமானர் அவர் மனைவியோடு பசுவின் அங்கங்களுக்கும் பொட்டு வைத்து, துணி, மாலை சாற்றி அரிசி, வெல்லம் கலந்த கலவையை கொடுத்து அகத்தி கீரையும் கொடுக்க வேண்டும்.


கன்றுக்கும் தரவேண்டும். இந்த நேரத்தில் பசுவை மாடு என்று பெண்கள் சொல்லவே கூடாது. பிறகு தூபதீப ஆராதனை செய்து வீட்டில் வசிக்கப்போகும் பெண் கையில் காமாட்சி தீபத்துடன் கணவனோடு பசுவை உள்ளே அழைக்க வேண்டும். பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும். இப்போது முக்கிய தெய்வ வழிபாட்டுடன் கிரகப்பிரவேச பூஜைகள் நடத்தப்பட வேண்டும். கணவன்-மனைவி மாலை அணிந்து அமர்க.


முதலில் விநாயகர் பூஜை:-.............. வானுலகும் மண்ணுலகும் வாழ மறை வாழப்பான்மை தரு செய்ய தமிழ்ப்பார்மிசை விளங்க ஞான மத ஐந்துகர மூன்று விழி நால்வா யானை முகனைப் பரவி அஞ்சலி செய்கிற்பாம்- விநாயகரை வணங்கிய உடன் விச்சின்ன அக்னி சந்தானம்-என்ற விதிப்படி ஐந்து காசுகளைத் தாம்பூலத்தில் கணவன் வைத்துக்கொண்டு மனைவி அர்க்கியம் (நீர் விட) விட வந்திருக்கும் வேத பண்டிதரிடம் தரவேண்டும். இது எதற்காக எனில் புதிதாகக் கட்டிய வீட்டில் முன்பு செய்யாத அக்னி காரியங்கள் விட்டிருந்தால் புதுப்பித்தல்.


கலச பூஜை:-............ மூன்று கலசங்கள் விநாயகர்+லட்சுமி+நவக்ரகம். நவக்ரஹ கலசங்கள் 9 தனியாகவும் பக்கவாட்டில் வைக்கலாம் மூன்று நுனி இலைகளில் நெல் அல்லது கோதுமை பரப்பி வைத்து அதன் மேல் மூன்று இலைகளைப் போட்டு பச்சை அரிசி போட்டு கலசம் வைக்க வேண்டும். அதற்கு துணி, மலர் போட்டு முறைப்படி அலங்கரிக்க வேண்டும்.


கிழக்கு முகமாக எஜமானர் மனைவியுடன் அமர வேண்டும். பிறகு, கையில் பவித்ரம் அணிந்து கொண்டு கலச பூஜையை பண்டிதர் மந்திரம் ஓதி செய்யும் போது மலர் போட்டு வணங்க வேண்டும். கற்பூர ஆரத்தி செய்து அதில் உள்ள அக்னி குண்டத்தில் இடவேண்டும்.


யாக வழிபாடு:- ..........இந்த வழிபாடு தொடங்கும் முன் அக்னியை அதன் மேடையில் பண்டிதர் உபதேவதைகளை திக்பாலகர்கள், துர்கை, விநாயகர், நட்சத்திர தேவதா, அபயங்கரர் வாஸ்து உள்பட வர்ணித்து பூர்வாங்க பூஜை செய்வார்.நெய், நவசமித்துக் குச்சிகளாலும் யாகக் கூட்டுப் பொருட்களாலும் வேத மந்திரங்களால் கிரகப்பிரவேச யக்ஞம் நடத்தப்படல் வேண்டும்.


ஓம் கம் கணபதியே நம.

சுவாகா ஓம் வக்ர துண்டாய

ஹீம் நமோ ஏரம்ப மதமோதித

மம சர்வ சங்கடம் நிவாரய நிவாரய

சௌபாக்யம் தேகிமே சுவாகா.


என்றும் நவக்கிரகங்களை அவர்களுக்குரிய மந்திரங்களால்


ஓம் ஆதித்யாய சுவாகா,

ஓம் சோபாய நம சுவாகா

ஓம் மங்களாய சுவாகா

ஓம் புதாய சுவாகா.

ஓம் ப்ருகஸ் பதியே சுவாகா,

ஓம் சுக்ராய சுவாகா,

ஓம் சனீஸ்வராய சுவாகா,

ஓம் ராகுவே சுவாகா,

ஓம் கேதுவே சுவாகா


- என்று கூறி யாகப் பொருளை அக்னியில் இடலாம். லட்சுமி ஹோமம்-வெட்டிவேர், வில்வப்பழம், மஞ்சள், தாம்பூலம் இவற்றாலும் அஷ்ட திரவியக் கலவையாலும் ஓமம் செய்தல் வேண்டும்,


ஓம் ஐம்ஹ்ரீம் ஸ்ரீம் மகாலட்சுமியை கமல தாரிண்யை சிம்ம வாகின்யை பவாயை சுவாகா- என்று சௌபாக்கிய லட்சுமியையும், ஓம் நம: கமலவாசின்யை என்று ஸ்வர்ண லட்சுமியையும், ஓம் உனபதுமாம் கீர்திச்ச மணினா சக என்று குபேர லட்சுமியையும் வழிபட்டு அக்னி பூஜை நடத்தி வாஸ்து பகவானையும் அவரது காயத்ரியால் யக்ஞ முறை செய்து இறுதியாக பூரண ஆகுதி என்ற யாக முடிவுறல் நிகழ்வை நடத்தி தூபதீப நிவேதனம் செய்து ஆரத்தி காட்டி வாசற் படிக்கு நிலை பூஜை செய்து ஆரத்தி செய்தல் வேண்டும்.


சில குடும்பங்களில் நிலைப்படி பூஜையை பசு உள்ளே வருமுன் செய்வார்கள். விதிப்படி செய்வதானால் அக்னியில் யாகப் பொருள் இட்டு மகாலட்சுமியை அழைத்த பிறகே படி பூஜை உத்தமம் ஆகிறது. நிலைவாசல் தேவதைகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து அலங்கரித்து வைக்கலாம். அடுப்படியில் பால் காய்ச்சுமிடத்தில் அன்னபூரணியை பூஜை செய்க.


பூரண ஆகுதி முடிந்ததும் அனைவருக்கும் ஆரத்தி பிரசாதம் கொடுக்கலாம். அஷ்டதிரவியம் என்ற எட்டுவகை பிரசாதம் கொடுத்த பின் மூன்று கலசங்களில் உள்ள நீரை முதலில் வைக்கப்பட்ட வருண கும்ப கலசநீருடன் சிறிது கலந்து வீடு முழுவதும் ஓம் கங்கேச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி தீர்த்தே அஸ்மின் சின்னிதிம் குரு. என்று கூறி தெளிக்க வேண்டும்.


பால் காய்ச்சுதல்:-............ ஒன்பது செங்கற்கள் அல்லது4-ஐ வைத்து பூ சந்தனம் குங்குமம் வைத்து புதிய பால் பாத்திரத்தில் பொட்டு வைத்து பால் ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் பொங்கி வந்த பின் கைகூப்பி வணங்கவும். கிரகப்பிரவேசம் நடத்தப்படும் இடத்தில் சாமி படத்தின் முன்பாக காய்ச்சிய பாலை வைத்து கணபதி, குலதெய்வம், இஷ்ட தெய்வம், லட்சுமி, சரஸ்வதியை நினைத்து நிவேதனம் செய்து ஆரத்தி காட்ட வேண்டும்.


கலசதாரை வார்த்தல்:- மிகப்பெரிய வீடு கட்டினாலும் சிறிய வீடு கட்டினாலும் கிரகப்பிரவேசம் முடிந்ததும் இதைச் செய்ய வேண்டும். இக்காலத்தில் இந்த வழக்கத்தை எல்லோரும் விட்டு விட்டார்கள். பூஜையில் வைக்கப்பட்ட மூன்று கலச நீரையும் மாடிப்பகுதியில் ஈசான்ய மூலையில் வேதபண்டிதர் உறவினர் நின்று கொண்டு வீட்டின் எஜமானர் மனைவியுடன் கீழே ஈசான்யத்தில் நிற்கச் செய்து அப்படியே தாரையாக ஊற்ற வேண்டும்.


அவர்களுக்குக் கலசநீரை அபிஷேகம் செய்வதால் சர்வ தோஷங்களும் விலகி லட்சுமி கடாட்சம் உண்டாகும். அடுத்ததாக பால் எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி முதலில் எஜமானர் மனைவியோடு அருந்த வேண்டும். தொடர்ந்து உறவினர், நண்பர்கள், பெண் கொடுத்தோர், பிள்ளையை கொடுத்தவர்கள் வாழ்த்துரையோடு சீர்வரிசை மொய், பொருட்கள் கொடுப்பார்கள். அவற்றை தட்டில் வைத்து கொடுக்கலாம்.


தொடர்ந்து வாழ்த்துரை வழங்குவதும் மாலை அணிந்து கிழக்கு முகமாக அமர்ந்து கொண்டு மங்கள ஆரத்தியை எடுக்கச் சொல்வது வழக்கம். அடுத்ததாக வாஸ்து தோஷங்கள் விலக, பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம்பழம் தற்கால வழக்கப்படி சுற்றி (திஷ்டி விலக) விட்டு வாசலில் உடைக்க வேண்டும்.


பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர் வீட்டிற்கு சம்மந்தியாக வந்திருப்பவர்கள் சீர் கொண்டு வந்திருக்கையில் அவர்களுக்கு தாம்பூலம், பதில் மரியாதை செய்வதும், சுமங்கலிகளுக்கு தாம்பூலம் மஞ்சள், குங்குமம் கொடுத்து வாழ்த்துப் பெறவும் அவசியமாக மறக்காமல் செய்தல் வேண்டும்.


கிரகப்பிரவேசம் செய்த வீட்டில் அந்த நாள் இரவு மனைவி விளக்கு ஏற்றி வைத்து துளசி துதி, மகாலட்சுமி மந்திரங்களைப் படித்தல் வேண்டும். வீட்டில் வருடத்திற்கு ஒரு முறை உங்கள் விருப்ப தெய்வ மந்திரங்களைக் கூறி யக்ஞ பூஜை செய்யுங்கள். பித்ருக்கள் படத்தைத் தனி அறையில் வைத்து ஆராதிக்கலாம்.


சாமி படங்களோடு சேர்த்து வைத்தால் தெய்வ சாந்நித்ய சக்தி அகன்று புது வீட்டில் இடர்கள் உருவாக வாய்ப்பு உண்டு. கிரகப்பிரவேச காலத்தில் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, குபேரன், பெருமாள், லட்சுமி படங்களை வைத்து வழிபடலாம். விருப்பப்படி எல்லாம் யந்திரங்களை வைத்து வழிபடுதல் வேண்டும்.


கிரகப்பிரவேச காலத்தில் யாகம் செய்யும் போது மோகன கணபதியை அக்னியில் ஆகுதி செய்து வழிபட்டால் பெண் திருமணத்தடை விலகி சீக்கிரம் கைகூடும். கல்வி விருத்திக்கு-ஹயக்ரீவ ஹோமம் சூன்யங்கள் அகன்று நிம்மதி பெற-ஆஞ்சநேயர் மூலமந்திர முறை. வீடு கட்ட, கடன் ஒரு ஆண்டுக்குள் தீர-அங்காரக மங்கல மந்திர ஹோமம். அரசாங்க நன்மை, பணி உயர்வு பெற- இந்திர பூஜை மந்திரம்.


குழந்தை பாக்கியம் உங்களுக்கே தடையாக இருந்தால்-அஸ்வினி தேவர்களை நினைத்து ஹோமம். இன்னொரு வீடு யோகம் வர பூமிலாப வாஸ்து முறை ஹோமம். வீட்டுக்குள் குடிபுகுந்ததில் இருந்து ஐஸ்வர்யமும் பொருளும் சேர்ந்திட சௌபாக்ய திரவ்ய லட்சுமி ஹோமம், தொழில் உயர்ந்து வர-குபேர சிந்தாமன மந்திர ஹோமம் என்று இலகு முறையில் சேர்த்து செய்து விட்டால் பலன் விரைவாகவும் இரட்டிப்பாகவும் கிடைக்க காணலாம்

Friday, 16 September 2022

பிறர் விட்ட சாபத்திலிருந்து தப்பிப்பது எப்படி

 *பிறர் விட்ட சாபத்திலிருந்து* *தப்பிப்பது எப்படி*?


யாரோ விட்ட சாபம்

தற்போது உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடுக்கின்றதா? 


மறைமுகமாக யாரோ விட்ட சாபத்திலிருந்து விடுபட சுலபமான பரிகாரம்!


ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடுகிறது என்றால், கட்டாயம் நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு கர்மவினை காரணமாக இருக்கும். 


அந்த வினை யாரோ ஒருவர் நமக்கு விட்ட, சாபமாக கூட இருக்கலாம். 


எத்தனையோ குடும்பங்கள், சில சாபத்தினால் கடைசிவரை தலை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு, வாரிசு கூட இல்லாமல் அழிந்து, போயிருக்கின்றது. 


ஒரு குடும்பத்தையே பஸ்பமாகும் அளவிற்கு, அடுத்தவர்கள் வயிறு எரிந்து விடும் சாபம் பலிக்கும் என்பது நிதர்சனமான உண்மை.


இப்படிப்பட்ட ஏதாவது ஒரு சாபம் உங்களுக்கு இருந்தது என்றால், அதை நிவர்த்தி செய்ய என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.


சேதாரம் இல்லாத 8(ஓட்டை,பூச்சி அரிக்காத) முழு மாஇலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.


ஒரு தேங்காயை உடைத்து, துருவி, அந்த தேங்காய் துருவலில் கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து பிசைந்து, தேங்காய் சர்க்கரை சேர்த்த கலவையை 

தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.


உங்கள் வீட்டில் கட்டாயம், உங்கள் வீட்டு குலதெய்வத்தின் படம் இருக்கும். 


அந்த குலதெய்வத்தின் முன்பாக மாஇலைகளை அடுக்கி வைத்துவிட வேண்டும். ஒரு மாவிலை பக்கத்தில், இன்னொரு மாவிலையை வைத்து காம்பு பக்கம் இறைவனை பார்த்தவாறும் நுனி பக்கம் உங்களை பார்த்தவாறு இருக்கும்படி வரிசையாக அடுக்கி வைத்து கொள்ளவும்.


அந்த மாவிலைகளின் மேல், தேங்காய் துருவல் சர்க்கரை கலந்த கலவையை, ஒரு ஸ்பூன் அளவு வைக்க வேண்டும். 


இப்படி, தேங்காய் சர்க்கரை கலவையை, நைவேத்தியமாக மாவிலைகளின் மீது வைத்தெ குலதெய்வத்துக்கு படைத்து உங்களுக்கு இருக்கும் சாபம் நிவர்த்தி ஆக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.


உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், இந்த பரிகாரத்தை யார் வேண்டும் என்றாலும் அவரவர் வீட்டிலேயே செய்யலாம்.


உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எப்படிப்பட்ட சாபமாக இருந்தாலும் அதற்கான விமோசனம் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இலலை.


தேய்பிறை அஷ்டமி திதியன்று இந்த பரிகாரத்தை செய்ய ஆரம்பிக்க வேண்டும். 


தொடர்ந்து 8 தேய்பிறை அஷ்டமி திதிகள் இந்த பரிகாரத்தை செய்து வந்தால், உங்களுக்கு இருக்கக்கூடிய எப்படிப்பட்ட சாபமாக இருந்தாலும், அது கட்டாயம் நிவர்த்தி அடையும்.


முழுமையாக நிவர்த்தி அடையவில்லை என்றாலும், அந்த சாபத்தின் தாக்கமானது கட்டாயம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதே போல் கண்ணுக்குத் தெரியாத தோஷமாக இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத சாபமாக இருந்தாலும், விலக வேண்டும் என்றால் சிறிதளவு அருகம்புல்லை எடுத்து வந்து, உங்கள் தலையில் வைத்து, தலைக்கு தண்ணீர் ஊற்றி  குளிக்க வேண்டும். 


அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஆவாரம்பூ பொடியை வீட்டில் வாங்கி வைத்து, ஒரு ஸ்பூன் அளவு, எடுத்து தலையில் தேய்த்து, தலைக்கு குளிக்க வேண்டும்.


மாதம் ஒருமுறை இந்த இரண்டு குளியல் முறைகளில் ஏதாவது ஒரு குளியலை செய்தாலே போதும்.


கண்ணுக்குத் தெரியாத தோஷமாக இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத சாபமாக இருந்தாலும் கட்டாயம் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


பௌர்ணமி தினத்தில் இப்படி குளித்தால், உங்களுக்கு இருக்கும் தோஷமும் சாபமும் முழுமையாக நீங்கும் என்பது உறுதி.


தொடர்ந்து 11 மாத பௌர்ணமி தினங்களில், இப்படி குளித்து வர வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


உங்களுக்கு, யார் எப்படிப்பட்ட கெடுதல் செய்தாலும், உங்கள் மனதார யாரையும் சபித்து விடாதீர்கள்! 


சில நேரங்களில் எதிர்பாராமல், நம் 

வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தைகளானது, அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் பெரிய விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. 


அடுத்தவர்களுடைய வாழ்க்கை கெட்டுப் போவதற்கு எக்காரணத்தைக் கொண்டும், நாம் விட்ட சாபம் காரணமாக இருக்கக் கூடாது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். 


எந்த ஒரு பரிகாரத்தை செய்தாலும் நம்பிக்கையோடு செய்து பலன் அடைய வேண்டும்.


Tuesday, 13 September 2022

கீவளூர்

 கீவளூர்


தேவர்களும், அசுரர்களும் மேருமலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை நாணாக்கி சுழற்றிக் கடைந்தபோது அமுதம் நுரைத்துத் தளும்பி மேலெழுந்தது. அப்போது கலயத்தை மீறிய துளியொன்று எட்டித் தெறித்து பாரதத்தின் மீது தவழ்ந்திறங்கியது. துளி இரண்டாக பிரிந்தது. ஒன்று பாரதத்தின் வடபாகத்திலும், இன்னொன்று தென் பாகத்திலுமாக விழுந்து ஆழ்ந்து நிலைபெற்றது. அமுதம் பரவிய தலத்தில் சுயம்புச் சிவமாக பொங்கினார், ஆதிசிவம். அங்கே இலந்தை மரம் ஒன்று துளிர்த்து வனமாகப் பெருகியது. இந்த வடபாகம் வடபதரிகாஸ்ரமம் என்று அழைக்கப்பட்டது.


‘பதரி’ என்றால் ‘இலந்தை’. அதுபோலவே கீழ்வேளூர் எனும் இத்தலத்திலும் இலந்தை மரங்கள் அடர்ந்து வளர்ந்தன. மகரிஷிகளும், முனிவர்களும் இப்பகுதியை தென்பதரிகாஸ்ரமம் என்றனர். சிவத்தின் ஞானாக்னியில் உதித்த கந்தப் பெருமானை இலந்தைவன ஈசன் அழைக்கும் காலமும் நெருங்கி வந்தது. ஆற்றுப்படையாக பெருகி ஓடியவனையே ஆற்றுப்படுத்த ஆவல் கொண்டது.


சூரபத்மன் அநியாயமாக தேவர்களையும், தேவேந்திரனையும், பூவுலகு உயிர்களையும் கொடுமைப்படுத்தி கொடூரம் செய்தான். பாதிக்கப் பட்டவர்களெல்லாம் மாறிமாறி கந்தவேலனின் பாதம் பிடித்தழுதனர். அக்னி குமாரன் தணலாக எழுந்தான். சூரபத்மன் முன் பற்றியெறியும் கானகம் போல கோபம் பெருக் கினான். போர் வளர்ந்தது. வதத்தில் முடிந்தது. எங்கு காணினும் ரத்தம்.


கந்தனின் அகமும், புறமும் உலைக் களமாக கொதித்துக் கொண்டிருந்தன. அசுர வதம்தான் என்றாலும் அவனை வீரஹத்தி தோஷம் சூழ்ந்தது. சூரபத்மன் அடாத செயல்களை செய்தவனாயினும் அவனும் ஒரு உயிரே. அதனால் அவனை வதைத்த பாவம் மெல்லியதாக கந்தனுக்குள் பரவியது. சித்தத்தில் நிறைந்த பேரமைதியை மெல்லிய அலையாக இது கலைத்தது.


சிவம் தன் குமாரனை நோக்கினார். அவன் அகம் களையிழந்து கிடப்பதைப் பார்த்தார். திருச்செந்தூரில் செம்மையாக தன் தந்தையை பூஜித்துக் கொண்டிருந்த மகனை தென் இலந்தை வனம் எனும் இத்தலத்தில் அமர்ந்து தவமியற்றச் சொன்னார். ஐந்து லிங்க அமைப்பையும், நவலிங்க பூஜையையும் அத்தலத்தில் செய்யுமாறு பணித்தார். வெற்றித் திருமகன் தம் பெரும் சேனையோடும், நவவீரர்கள் உள்ளிட்டோரோடும் இத்தலத்தில் தம் திருவடியை பதித்தார். இலந்தை இலைத் துளிர்கள் மழையாக அந்தப் பாலகனின் மீது சிலுசிலுவென கொட்டின.


கந்தர்  குதூகலமடைந்தார். அமுதத்தின் வாசம் இடைவிடாது அவரைத் துளைத்துக் கொண்டிருந்தது. சம்பிரதாயம் விடாமல், தன் அண்ணன் விநாயகனை மஞ்சளால் செய்வித்து தவத்தைத் தொடங்க, விக்னேஸ்வரன் விக்னங்கள் போக்கினான். எவ்வித கேடும் வராமலிருக்க கேடிலியப்பராக கிளர்ந்திருந்த தந்தையின் பாதம் பணிந்தான் முருகன். அருகேயே பாதாள கங்கை எனும் பொய்கையை பொங்கச் செய்தான். கயிலை நாதனையும், சௌந்தர நாயகியையும் கோயில் கொள்ளச் செய்தான். அதுவே கடம்பனூர் கோயிலாயிற்று.


அதற்கு அருகேயே சதுர்வேத மூர்த்தியாக லிங்கம் அமைத்து வழிபட்டான். அது ஆழியூராக அழியாப் புகழ் பெற்றது. வேறொரு திக்கில் சுந்தரேஸ்வரராக தந்தையை பாவித்து கோயில் அமைத்தான்.


அது இளம் கடம்பனூர் என்று இனிமையாக அழைக்கப்பட்டது. வடகிழக்கே சுந்தரகேசி   சோமநாதரை அர்ச்சித்ததால் பெருங்கடம் பனூர் என்று பெயர் பெற்றது. வடகிழக்கில் கடம்பர வாழ்க்கையில் லோகாம் பாளையும், சகள நாத ரையும் வழிபட்டு பஞ்சலிங்க பூஜையை பூர்த்தி செய்தான்.


அதுபோலவே ஒவ்வோரு தலத்திலும் தங்கி, சிவலிங்கம் நிறுவி, நவலிங்க பூஜையை நடத்தி ஈசனின் சாந்நித்திய சாரலில் நனைந்தான். மீண்டும் ஆதி இலந்தை வனநாதரிடம் ஓடோடி வந்தான். வீராதி வீரர்களை கொண்டும், தேவதச்சனை ஆலோசித்தும் பெருங்கோயில் எடுப்பித்தான். புஷ்கலம் எனும் பெயருடைய நூதன விமானம் செதுக்கினான். வேலாயுதத்தால் கோபுரத்தின் அக்னி மூலையில் கீறி திருக்குளம் உருவாக்கினான். சகல வீரர்களையும் மூழ்கியெழச் செய்தான். அது சரவண தீர்த்தம் என்று சீர் பெற்றது.


புறத்தில் வேள்வி புரிந்தவன் அகத்திலே மூண்ட பாவத்தீயை அணைக்க ஐந்து புலன் களையும் மெல்ல சுருக்கி தியானத்தில் அமர்ந்தான். புலன் குதிரைகள் அடங்க மறுத்தன. வெறி கொண்டு பிடரி சிலிர்க்க ஓட முனைந்தன அப்பனுக்கு செய்யும் ஆராதனையில் இத்தனை இடர்களா என்று அம்மையை வேண்டினார் ஆறுமுகப் பெருமான்.


பேராற்றல் பெற்றிருப்பினும் தாய்க்கு குழந்தையல்லவா குமரப்பெருமான்!  தாங்காத தவிப்போடு வந்தாள், அங்கு வீற்றிருந்த வனமுலைநாயகி. ‘தன் குழந்தையை எந்தத் தீயவையும் நெருங்க விடமாட்டேன்’ என எழுந்தாள். ஆகாயத்தில் வளர்ந்தாள். காளியாக சிவந்தாள். அஞ்சேல் எனக் கரம் காட்டினாள். அஞ்சேல் என்றவள் அஞ்சுவட்டத்தம்மனாக திருநாமங் கொண்டாள்.


குமரப்பிள்ளை குளிர்ந்தான். தனக்காக தாய் எண்திக்கிலும் பரவி காவல் காத்து நிற்கும் பேரன்பு கண்டு நெகிழ்ந்தான். தந்தையை உள்ளம் குளிரக் குளிர பூஜித்தான். சிவம் கந்தனுக்குள் தெள்ளோடையாகப் பாய்ந்தது. ஆறுமுகத்தின் மனம் ஒருமுகமாகி ஆதிசக்தியோடு ஆழமாகப் பிணைந்து கிடந்தது. தணலாகிக்கிடந்த கந்தன் தணிந்தான். அருள் பரப்பி தெள்ளமுதம் பொங்கும் தலத்தில் மீண்டும் அழகனானான்.


 தாய் மகிழ்ந்தாள். தந்தை சிவம் கேடுகளை அகற்றி தூய்மையாக்கி உச்சி முகர்ந்தார். பாலமுருகன் வீரக் கொலைப்பாவம் நீங்கும் பொருட்டு இத்தலத்தில் தந்தை ஈசனை பூஜித்ததால் இத்தலத்தை ‘பூசரண்யபுரம்’ என போற்றினர். கந்தப்பெருமான் விண்ணுலகில் உறையும் தலத்தை மேல்வேளூர் என்று அழைத்ததுபோல, பூவுலகில் நிரந்தரமாக தங்கித் தவமிருப்பதாலேயே கீழ்வேளூர் என்று பெருமையும் ஏற்பட்டது.


ஞான முனியான குறுமுனி அகத்தியர், கேடிலியப்பரை தரிசித்து ஆனந்தமானார். அகங்குழைந்து ஈசனின் முன்பு கண்ணீர் சொரிந்து நின்றார். மனமிரங்கி ‘என்ன வேண்டும் கேளுங்கள்’ என்று ஈசன் கேட்க, ‘தங்களின் திருத்தாண்டவத்தில் வலது பாதத்தையும் தரிசிக்க வேண்டும்’ என்று விண்ணப்பம் செய்தார். ஆடலரசர் இடக்கால் ஊன்றி வலக்கால் தூக்கி மாற்றி ஆடினார். அந்த பேரன்பு பொங்கி எழும் ஆனந்த தாண்டவத்தை கண்ட அகத்தியர் உள்ளம் குழைந்தார்.


இந்த தலத்தின் பிரதானச் சிறப்பு பெறும் விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.சந்திரகுப்தன் எனும் வைசியன் தன்னிடமிருந்த சகல செல்வத்தையும் இழந்தான். மனம் நொந்து திசை தேசம் தெரியாது ஈசனருளால் இத்தலத்தை அடைந்தான். திருக்கோயிலுக்குள் புகுந்து நந்தியம் பெருமானின் காலடியில் வீழ்ந்தான். கோயிலை மும்முறை வலம் வந்தான். ஈசன் அவனை கருணைக் கண்களால் கண்டார்.


இத்தலத்திலேயே நித்திய வாசம் புரியும் குபேரனுக்கு அவனை அடையாளம் காட்டினார். குபேரன் அவனுக்கு பக்தியும், புத்தியும், பொருளும் அளித்து ஆலயப்பணி செய்வித்தான். இன்றும் இத்தலத்தில் குபேரனுக்கு தனிச் சந்நதி உண்டு. குபேரனை வழிபடுபவர்கள் பெருஞ்செல்வம் பெற்று நீடூழி வாழ்வர்.


ஈசனின் சந்நதியில் பூஜித்து வந்த ஆதிசைவரின் மனைவி கருவுற்றிருந்தாள். சந்தோஷ செய்தி ஊர் பரவும் முன்னர் கணவன் இறந்தான். அவள் தன் தாய் வீடு சென்றாள். நிராதரவாக இருந்தவளுக்கு கேடிலியப்பனின் திருநாமம் ஒன்றே ஒரே ஆதாரமாக இருந்தது. நல்லதொரு நாளில் ஆண் மகவை பெற்றெடுத்தாள். தக்க பருவம் வந்தவுடன் கேடிலியப்பனுக்கு தொண்டு செய்யும் பணியை தன் மகனுக்கு அளிக்க வேண்டுமென்று கேட்டாள். உறவினர்கள் அது உன் பிள்ளையா என்று கேலி பேசினார்கள்.


அவள் கற்பை கேள்விக்குறியாக் கினார்கள். நிலைகுலைந்தவள் கேடிலியப்பரின் சந்நதி முன்பு மைந்தனின் கை பற்றி சத்தியம் செய்தாள். நம்ப மறுத்தார்கள். நகையாடினார்கள். அவளும் பற்றி எரியும் தீயில் பாய்ந்து செல்ல போகும் முன் எங்கிருந்தோ ஓர் ஹூங்காரத்துடன், மழு ஆயுதம் சுழன்று வந்தது. சட்டென்று நேராக இருந்த நந்தி நகர, கேலி பேசியோரின் சிரங்களை சரசரவென கொய்தது. பெண்ணின் கற்பினை உலகறிய உணர்த்தியது. அதனாலேயே இத் தலத்தில் இன்றும் நந்தி சற்று விலகியே இருக்கும்.


ஒன்றா... பலநூறா என்று கணக்கில்லாமல் இத்தலம் பற்றிய புராணக் கதைகள் நீண்டு கொண்டே போகின்றன. இத்தல பெருமானின் விளையாடல்களாக ஆயிரமாயிரம் நிகழ்வுகள். அஞ்சுவட்டத்து அம்மன் அருள் நிழலில் நிகழ்ந்தவை என்று பட்டியலாக நீளும் நிகழ்ச்சிகள். முருகப்பெருமானின் அற்பு தங்கள் என்று அள்ள அள்ளக் குறையாத விஷயங்கள். இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய அற்புதத் தலம்தான் கீழ்வேளூர். தற்போது வழக்கு மொழியில் ‘கீவளூர்’ என்கிறார்கள்.


‘முருகு’ என்ற பொருளுக்கு ‘அழகு’ என்பதுபோல இந்தக் கோயிலுக்குள் அத்தனை பேரழகும் கொட்டிக் கிடக்கின்றன. முழுக்கோயிலையுமே கற்றளியாக செய்திருக்கிறார்கள். கற்களை வைத்து வித்தை காட்டியிருக்கிறார்கள். இதற்குமேல் சிற்பங்கள் ஏதேனும் செய்ய முடியுமா என்று விரலுயர்த்தி சவால் விட்டிருக்கிறார்கள். ‘‘எண்டோளீசற்கு எழில் மாடம் எழுபது செய்து உல காண்ட’’ கோச் செங்கெட் சோழன் தான் இக்கோயிலையும் எடுப்பித்திருக்கிறான்.


பெரிய ராஜகோபுரம் நடுநாயகமாக கம்பீரமாக நிமிர்ந்திருக்கிறது. கோயிலுக்குள் நுழையும்போதே கற்கோயிலின் பிரமாண்டத்தை உணர்த்தும் வகையில் இடப்பக்கம் முழுதும் கல்லால் ஆன சிறு கோபுர அமைப்பை தரையிலிருந்து எழுப்பியிருக்கிறார்கள். இத்தலத்தில் வடக்கு பார்த்த கணபதியும், வடமேற்கில் சித்திர சிற்பம் கொண்ட ஆறுமுக மயில் வாகனனும் அழகுற உள்ளனர். கோயில் கட்டுமலை அமைப்பை உடையது.


அதற்குமுன்பு நந்தியின் சந்நதி சற்று நகர்ந்துள்ளதைக் காண்கிறோம். நந்திக்கு அருகேயே இத்தல நாயகர் முருகப்பெருமானின் சந்நதி உள்ளது. தந்தையின் சந்நதிக்கு செங்குத்தான படிகளில் ஏறிச் செல்கிறோம்.


அழகான தூண்கள். சிறு மண்டபம் போல காட்சியளிக்கிறது. பார்வதி திருமணத்தை விளக்கும் அற்புதமான சிற்பம் ஒன்று காணப்படுகிறது. அதையும் தரிசித்து சற்று உள்ளே நகர்கையில் கேடுகளை அழித்து அற்புத வாழ்வு தரும் கேடிலியப்பர் வீற்றிருக்கிறார்.


பார்த்தவுடனேயே மயிர்க்கூச்செரியும் சந்நதி. சுயம்புவாக உதித்தவன் இங்கே செல்வக் குமரனின் பாவம் தீர்த்தான். சந்நதிக்குள் அமுதத்தின் சாரல் வீசுவதால் நமக்குள்ளும் குளுமை பரவுகிறது. எத்தனை முறை தரிசித்தாலும் மீண்டும் பார்க்கத் தூண்டும் ஓர் அழகு மூர்த்தமாக கேடிலியப்பர் விளங்குகிறார். அப்பரடிகள் ‘‘கீழ்வேளூர் ஆளுங்கோவைக் கேடிலியை நாடுமவர் கேடிலாரே’’ என்று ஓரடியில் அழுத்தமாக தெரிவிக்கிறார். வெள்ளிக் கவசம் சாத்தி இன்னும் பிரகாசிக்கச் செய்திருக்கிறார்கள்.


 குகைக்குள் குடிகொண்டிருக்கும் தனிச் சிங்கத்தை சந்திப்பது போல மெல்லியதாக நடுக்கமும், பிரமிப்பும் அவ்விடத்தில் நமக்கு ஏற்படுகிறது. மாபெரும் சக்திக்கு முன்னர் மெல்லிய தூசாக மனம் சிறுத்துவிடும் மாயத்தை அச்சந்நதி செய்கிறது. மனம் பஞ்சுபோல் மாற கட்டு மலையிலிருந்து கீழிறங்கி பிராகாரத்தை சுற்ற வருகிறோம்.


அந்த கட்டுமலை முழுவதையும் கற்களாலேயே அமைந்திருப்பதைப் பார்த்து மூச்சே நின்று விடும் போலிருக்கிறது. என்ன பேரற்புதமான பணி. ஈசனை எவ்வளவு அற்புதமான கல் மாளிகைக்குள் அமர்த்தியிருக்கின்றனர். வார்த்தை களால் வடித்தெடுக்க முடியாத வனப்புடைய சிற்பச் செல்வங்கள் நிறைந்த பிராகாரம்.


காணக்காண கண்களில் நீர் பெருகுகிறது. அந்த பிட்சாடன மூர்த்தியின் சிலை எத்தனை நுணுக்கம். வீணாதர தட்சிணாமூர்த்தி நாத பிரம்மத்தில் தோய்ந்திருப்பதை எத்தனை தத்ரூபமாக கொண்டு வந்திருக்கிறார்கள். பசுபதியும், பார்வதியையும் எத்தனை அற்புதமாக புடைப்புச் சிற்பத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள்.


கட்டுமலை மேலே சிறு பிராகாரம் அமைத்திருக்கிறார்கள். சிங்க உருவங்களும், யாளிகளின் வரிசைகளும் அணிவகுப்பாக அமைந்திருக்கின்றன. வாழைப்பூ தொங்கல்களும், அதை மூக்கால் கொத்தும் கிளிகளையும் தோரணமாக்கியிருக்கிறார்கள். இந்த பூவுலகையே மறக்கடித்து தேவலோகத்தில் இறங்கிவிட்டோமா என்ற அளவுக்கு தெய்வச் சிலாமூர்த்திகளை அநாயாசமாகச் செதுக்கியிருக்கிறார்கள்.


பிராகாரத்தில் அகத்தியர், விஸ்வநாதர், மகாலட்சுமி, கைலாசநாதர், அண்ணாமலைநாதர், ஜம்புகேஸ்வரர், குபேரன், தேவேந்திரன் போன்றோருக்கு சிறு சிறு சந்நதியோடு தனிக்கோயில் கட்டியிருக்கின்றனர். அம்பிகை வனமுலை நாயகியைக் காண, வற்றாத வளங்கள் தானாய் பெருகும். இந்நாயகி வடகிழக்கில் பத்ரகாளி உருவத்தோடு அஞ்சுவட்டத்தம்மை என்ற திருநாமத்தோடு காட்சியளிக்கிறாள். பெயர்தான் பத்ரகாளி.


ஆனால், பார்ப்பதற்கோ பேரன்புமிக்க தாய்போல பரிவோடு இருக்கிறாள். வேண்டுவோர்க்கு வேண்டியவற்றை குறையாது கொடுக்கும் கொடை வள்ளலாக விளங்குகிறாள். பக்தர்கள் எப்போதும் இங்கு குவிந்தபடி உள்ளனர். பெருங்கோயிலையும் நின்று தரிசித்து கொடிமரத்தின் கீழ் விழுந்து பரவும்போது இலந்தையின் வாசமும், அமுதத்தின் சாரலும் உள்ளத்தில் இடைவிடாது வீசுவதை இதமாக உணரலாம். இத்தலம் திருவாரூர்- நாகப்பட்டினம் வழியில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது.

Sri Kediliappar Temple https://maps.app.goo.gl/2zJHjNvJFj2DYb7j8

Saturday, 10 September 2022

சூரியன்

 இன்று ஞாயிற்றுக்கிழமை 


சுகத்துக்கு சூரிய மூர்த்தியை வணங்கு' என்பது ஆன்றோர்கள் வாக்கு.


வாழ்வின் எல்லா நலன்களையும் வளங்களையும் அருளும் சூரியனை நாம் கடவுளாக வணங்குகிறோம். வேதங்கள் சூரியனை 'ஆயுளை வளர்க்கும் அன்ன ரூபம்' என்று போற்றுகின்றன. நம்முடைய பழந்தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில் தமிழகத்தில் 'உச்சிகிழான் கோட்டம்' என்ற பெயரில் சூரியபகவானுக்கான கோயில் இருந்ததைத் தெரிவிக்கிறது.


 சூரியவழிபாடு அவசியம். 

சூரியன் பிரத்யட்ச மான தெய்வம். எல்லாருமே கண்களால் கண்டு வணங்கக்கூடிய தெய்வம். சூரிய வழிபாடு அனைவருக்கும் பொதுவான வழிபாடு. உலக உயிர்கள் அனைத்தையும் தன் ஒளியினால் வாழவைப்பவர் சூரியன்.


அபயம் அல்லது எதற்கும் அஞ்சாத தன்மையை அளிப்பவர் நாராயணன் என்பது சித்தாந்தம். உயிரினங் களைஅச்சத்திலிருந்து காப்பவரே ஆதித்யன் என்ற சூரிய பகவான். இருள் சூழ்ந்திருக்கும்போது எல்லா உயிர்கள் அச்சத்தினால் மருண்டிருக்கின்றன. சூரியன் உதித்தவுடன் ஒளியினால் அச்சங்கள் தவிர்க்கப்படுகின்றன. இதனாலயே சூரிய நாராயணன் என்று பெயர் விளங்குகிறது.


ஆதிசங்கரர் ஆறுவித முக்கிய தெய்வங்களாகிய கணபதி, சுப்ரமணியர், அம்பிகை, சிவன், விஷ்ணு, சூரியன் என்று உபாசனா மார்க்கத்தை நாம் எல்லாரும் உய்யும் பொருட்டு உபதேசித்தருளினார். நமக்கு எந்த தெய்வத்திடம் ஈடுபாடு ஏற்படுகிறதோ அந்த தெய்வத்தையே துதிக்கலாம். முறையாகத் துதித்தால் எந்த தெய்வமும் அருள்புரியும் என்று நிலைநாட்டினார். 


சூரியனை விச்வரூப விராட்புருஷனாகிய விஷ்ணுவின் கண்களிலிருந்து தோன்றி வந்தவர் என்று சொல் வார்கள். அந்த ஆதிபுருஷனுடைய நேத்திரம் சூரியன் என போற்றப் படுவதாலேயே சூரியன் நமது கண்களுக்கும் அதிஷ்டான தெய்வமாக இருக்கிறார்.


சௌரம் என்ற சூரிய வழிபாட்டில் காயத்ரி ஜெபம் முக்கியமானது. வேதங்களில் சூரிய வணக்கமும் அடங்கியுள்ளது. உடல் ஆரோக் கியத்திற்காகவும், கண் பார்வை சிறப்பாக இருக்கவும் சூரியனை வழிபடுகிறார்கள். ஞானம் வேண்டியும் வழிபடலாம். ஆஞ்சனேய சுவாமி சூரியனுடன் சஞ்சரித்துக் கொண்டே ஞானோபதேசம் பெற்று "நவவியாகரண பண்டிதன்' என்ற பெருமையைப் பெற்றார். மகரிஷி யாக்ஞ வல்கியர் சூரியனை உபாசித்து சுக்ல யஜுர் வேதத் தைக் கற்றார் என்பதை அறிய முடிகிறது. திரேதாயுகத்தில் சூரியனைதான் முதன்மை தெய்வமாக வழிபட்டு வந்தார்கள்.


சூரியனுக்கென்று சிறப்புப் பெற்ற ஆலயங்களும் இருக்கின்றன. கும்பகோணத் திற்கு அருகிலுள்ள சூரியனார் கோவில் மிகவும் விசேஷமானது.


மாதங்கள்தோறும் சூரியன்...


ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் சூரிய பகவான் ஒவ்வொரு திருநாமம் கொண்டு நம்மைக் காத்துவருகிறார் என்று வேதங்கள் சொல்கின்றன. சித்திரை மாதத்தில் விஷ்ணு என்னும் திருநாமம் கொண்டு ஆயிரம் சூரியக்கதிர்களை வீசுகிறார்.


வைகாசியில் அர்யமான் என்னும் திருநாமம் கொண்டு ஆயிரத்து முந்நூறு கதிர்களை அனுப்புகிறார். ஆனி மாதம் விஸ்வஸ் என்ற பெயர் கொண்டு ஆயிரத்து நானூறு கதிர்களை வீசுகிறார். ஆடி மாதம் அம்சுமான் என்று ஆயிரத்து ஐந்நூறு கதிர்களைக் கொண்டிருக்கிறார். ஆவணி மாதம் பர்ஜன் என்ற திருநாமம் கொண்டு ஆயிரத்து நானூறு கதிர்களும்; புரட்டாசியில் வருணன் என்ற திருநாமம் கொண்டு ஆயிரத்து முந்நூறு கதிர்களுடனும் காட்சி தருகிறார். ஐப்பசியில் இந்திரன் என்னும் திருநாமம் சூடி, ஆயிரத்து இருநூறு கதிர்களால் ஜொலிக்கிறார். கார்த்திகை மாதத்தில் தாதா எனும் பெயர் கொண்டு ஆயிரத்து நூறு கதிர்களை வீசுகிறார். மார்கழி மாதத்தில் சூரியநாராயணனாக ஆயிரத்து ஐந்நூறு கதிர்களைக் கொண்டுள்ளார். தை மாதத்தில் பூஷாவான் என்ற திருநாமத்தில் ஆயிரம் கதிர்களைக் கொண்டுள்ளார், மாசி மாதம் பகன் என்ற திருநாமம் கொண்டு ஆயிரம் கதிர்களை பரவச் செய்கிறார். பங்குனியில் துவஷ்டா என்ற பெயரால் ஆயிரத்து நூறு கதிர்களை அனுப்பி உலகைக் காக்கிறார் என்று வேதங்கள் சொல்கின்றன.


ஸர்வ மங்கள் மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரநாசனம்

சிந்தா சோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தனம் உத்தமம்"


துதிகளில் எல்லாம் சிறந்த தான ஆதித்ய ஹ்ருதயம் எனும் மந்திரத்தை நாளும் ஓதி பாவங்களையும், கவலைகளை யும், குழப்பங்களையும் நீக்கிக் கொள்வோம். வாழ்நாளை நீட்டிக்கும், வளங்களை அளிக்கும் சூரிய பகவானை எப்போதும் போற்றுவோம்.


நன்றி

இனியகாலைவணக்கம்

வாழ்கவளமுடன்நலமுடன்

Sunday, 4 September 2022

*கர்ணனின் தானம்*

 .          *கர்ணனின் தானம்*

*எல்லோருக்கும் தானம் கொடுத்து நிறைய புண்ணியத்தை சம்பாதித்தான் கர்ணன் !!!  கண்ணனாலும், கர்ணனின் உயிரைப் பறிக்க முடியவில்லை.*

      *ஒரு மனிதனிடம் இறைவனே இங்கு பிக்‌ஷை கேட்கிறார் !!! அப்படி என்ன இருந்து கர்ணனிடம்? அதுவே அவன் செய்த புண்ணியம்.*

       *ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஒரு அந்தனனாக வேடமிட்டு கர்ணனிடம் வந்து அவனது புண்ணியத்தை யாசகமாக கேட்டான் !!!*

      *கொடுக்கும் குணத்தையே  பழக்கமாக  கொண்டிருந்த கர்ணன், சற்றும் யோசிக்காமல் புண்ணியங்கள் அனைத்தையும் உடனே தானமாக கொடுத்து விட்டான் !!! புண்ணியங்கள் அனைத்தையும் தானமாக கொடுத்து விட்டான் !!!*

      *புண்ணியம் வேண்டும் என்பதற்காகத்தான் நாம் எல்லோருமே தானம் செய்கின்றோம் !!!  ஆனால் அந்த புண்ணியத்தையே தானம் கேட்டால் யார்தான் தருவார்கள்?*

      *இருப்பினும் அனைத்து புண்ணியங்களையுமே தானம் செய்வதற்கு கர்ணன் எந்தளவுக்கு நல்லவனாக இருக்க வேண்டும்? அல்லவா ?*

      *நமக்கே கர்ணனை நினைத்தால் பொறாமையாக உள்ளதல்லவா ? கவலைப் படாதீர்கள் !!!  இது சாத்வீக பொறாமை தான் !!!  அதாவது, சிலரது நற்குணங்களைக் கண்டு பொறாமைப் பட்டால், அதன்விளைவாக நமக்கும் அந்த நற்குணங்கள் வந்துசேருமாம் !!!*


      *எந்த செயலிலும் எதிர்பார்ப்பு இருக்க கூடாதென கர்மயோகம் சொல்லுகின்றது. அதிலும் தானம் செய்கின்ற செயலில் நிச்சயமாக எதிர்பார்ப்பு இருக்கவே கூடாது.*

      *ஏனெனில், எதிர்பார்ப்போடு செய்யும் தானம் தான் வியாபாரம் !!!  எதிர்பார்ப்பின்றி செய்வது தான் உண்மையான தானம்.*

      *புகழுக்காகவோ, பகட்டுக்காகவோ, புண்ணியத்திற்காகவோ, கர்ணன் தானம் செய்யவில்லை !!!  கர்ணனின் தானம் எதிர்பார்ப்பற்றது.*

      *கொடுப்பதால் இழப்பு ஏற்படும் என்றுதான் நமக்கெல்லாம் தெரியும். ஆனால், அதிலும் ஒரு இன்பம் கிடைக்கும் என்று கருணை உள்ளம் கொண்டவருக்கே புரியும்.*

      *ஏழை எளியவர்களுக்கு எதிர்பார்ப்புமின்றி மனமுவந்து கொடுத்துப் பாருங்கள்.  அப்போது அவர்கள் முகத்தில் ஒரு சந்தோஷம் பிறப்பதை உணர்வீர்கள்.    அதைக் காணும்போது,  நமக்கு ஒரு இன்பம் தோன்றுவதையும் உணர்வீர்கள். அந்த இன்பத்தை ருசித்துப் பழகிவிட்டால் தானம் செய்வதை நிறுத்தவே மாட்டீர்கள்.*


      *கொடுப்பதால் கிடைக்கும் இன்பத்தை ருசித்து பழகிய கர்ணன் தன்னிடமுள்ள  புண்ணியத்தையும்  தானமாக தந்து புகழின் உச்சிக்கு சென்று விட்டான்.*

      *பற்றற்ற மனம் தான் தானம் செய்யும். அதற்கு, கருணை உள்ளமும் வேண்டும். இரண்டும் இருந்ததால் தான் எதிர்பார்ப்பின்றி தானம் செய்யமுடியும். ஆனால், புண்ணியத்தையும் தானம் செய்ய முடியுமென கர்ணன் நிரூபித்தது நற்குணத்தின் உச்சமாகும்.*

      *எனவே நாம் அனைவரும் கொடுப்பதால் கிடைக்கும் இன்பத்தை அனுபவிக்கவே பிறருக்கு இயன்றவரை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.*

      *கொடுக்க மனமில்லாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். அவர்களுக்கு சொல்லுகின்றேன்.  கொடுக்காதவர்கள் கொடுப்பவர்களை கெடுக்காதீர்கள் !!!*

      *ஆம் !!! எனதருமை ஆன்மீக உடன்பிறப்புக்களே !!! எங்கு பார்த்தாலும் சகுனிகள் நிறைந்துள்ள இந்த கலிகாலத்தில், நல்லவர்களாக வாழ்வது மிகவும் கடினம் என சலித்துக் கொள்ளாதீர்கள்.*

      *நன்றாக சிந்தித்துப் பாருங்கள் !!!

நமக்கு நாமே நன்மை செய்து கொள்வதற்காகத்தான் நாம் நல்லவர்களாக இருக்கின்றோம்.*

      *எனவே, நல்லவனாக வாழ்ந்து நற்கதியை அடைந்து உனக்கு நீயே நன்மை செய்து கொள் மானிடா உனக்கு நீயே நன்மை செய்து கொள்.*

      *முன்பின் அறியாத ஜீவன்கள் முதல் உன் குடும்ப உருப்பினர்கள் வரை எல்லோருக்குமே உதவி செய்து "உளமகிழ்ந்து" வாழ கற்றுக் கொள்.  இந்த நிலையான மகிழ்ச்சியை மனதில் நிலைநிறுத்துவதே, உண்மையான நிரந்தர பேரின்பம் !!!*

      *எல்லா ஏழைகளுக்கும் கடவுள் நேரில் வந்து உதவ இயலாத காரணத்தால் தான்,  கடவுள் உன்னையும் படைத்து, உனக்கும் கீழே உள்ளவர் கோடி என்பதை நீ உணர வைத்தார் !!! எதற்காக ? கொடுப்பதின் மூலம், அவர்களுக்கு, நீ இறைவனாக காட்சி தர வேண்டும், என்பதற்காக !!!*

      *இல்லாதவர்களுக்கு உணவளித்து பாருங்கள்.  உணவளிக்கும் உங்களை இறைவனாகவேக் காண்பார்கள் !!!*

      *அன்னதானமும் மிகச்சிறந்த ஆன்மீகம். இதனால்தான் பல முக்கிய கோவில்களில் எல்லாம்  அன்னதானம் என்ற பழக்கம் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது.*

      *எனவே, உளமகிழ்ந்து" வாழவும்,  ஆனந்தம் என்கிற உண்மையான மகிழ்ச்சி என அத்தனையும் நிலைக்க வேண்டுமா?*

    *1. நல்லவனாக இரு !!!*

    *2. அதிலிருந்து, உண்மையான பக்தி பிறக்கும் !!!*

    *3. இவ்வகையான நற்குணத்திலிருந்து உருவான உண்மையான பக்தி தான்  ஆன்மீகமாக வளரும்.*

    *4. இத்தகைய ஆன்மீகிகளுக்கு தான், ஆத்மஞானத்தை தேடத் தூண்டும் !!!இந்த மார்கமே, உன்னை இறைவனிடம் இட்டுச் செல்லும் இறைத்தேடல் எனப்படுவது !!!*

     *5. ஜீவன் உன்னுடலில் இருக்கும் போதே, உன்னில் இறைவனைக் காணலாம்.இதுவே, ஆத்மதரிசனம் அல்லது ஜீவன்முக்தி*

      *6. ஆத்மஞானத்தை பிறருக்கு தருவது ஞானதானம் !!! அதுவும் மிகச்சிறந்த தானமாகும்*

      *7. ஆத்மஞானம் பெறுவதே பிறவிப்பயன் !!! பிறருக்கு,  இத்தகைய பிறவிப் பயனைப் பெற செய்வது அனைத்திலும் மேலான தானம் !!!*

      *குறிப்பு : L K G Seat.க்கு = லட்சங்கள் + Medical Seat.க்கும் மேற்படிப்புக்கும்  = கோடிகள் என விஞ்ஞானத்தில் நம் பிள்ளைகளை முன்னேற்றுகிறோம் !!! எதற்காக?  பணத்தை ஈட்டுவதற்காக மட்டுமே அல்லவா?*

      *ஆனந்தமாக வாழ்வதற்கு பணம் தேவை இல்லை + மனம்தான் தேவை என்று எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம், நாம்? அந்த பணமோ, ஆசைகளையும் கவலைகளையும் பெருக்கவே பயன் படுகிறது !!!*

      *அதேசமயம், நாம் சாகும்வரை உருவாகும் அனைத்து கவலைகளில் இருந்து விடுபடவும், இறைவனை  புரிந்து கொள்ளவும், இறைவனை உணர்ந்து கொள்ளவும், இறைவனுக்குள் கலந்துவிடவும், ... இறுதியில், இறைவனாகவே ஆகிவிடுகின்ற மெஞ்ஞானத்திற்கு எதுவுமே தடையாக இருக்க கூடாது !!!*

      *பணப்பற்று, பொருட்பற்று, உறவுப்பற்று, புகழ்ப் பற்று, பதவிப்பற்று கௌரவப்பற்றையும்  குறைத்துக் கொள்ள முடியாதவனுக்கு கடவுளாலும் ஆத்மஞானம் கொடுக்க முடியாது !!!*

      *எல்லாவற்றிலும் பற்றுதலோடும், அதனால் உருவாகும் எண்ணற்ற கவலைகளோடும், சாகும்வரை பணத்தை தேடி ஓடிஓடி வாழ்கின்ற அஞ்ஞானிகளுக்கு மனித வாழ்க்கையே  நரக தண்டனையாகும்.*

      *நாம் வாழ்கின்ற இந்த அஞ்ஞான வாழ்க்கையே, ஒரு தண்டனை என்பதை புரிந்து கொள்ளாதவர்களை நாம் எவ்வாறு காப்பாற்றுவது?

      *"மனம் போன போக்கில் நம் மனம் செல்வதே கவலைகளைத் தேடிக் கொள்வதற்காகத்தான்",* என்பது நம் மனமே எவ்வாறு ஒப்புக்கொள்ளும்? இங்கே தான் பிரச்சனை தொடங்குகின்றது !!!

      *ஆத்ம ஞானம் பெற்றுக் கொள்வதற்கு முன் உங்களுக்கு, ஆயிரம் விதமான தடைகள் வருமாம், ... என புரிந்து கொள்ளுங்கள் !!!*