Monday, 30 May 2022

வெள்ளியங்கிரி மலை சென்று ஈசனை வழி பட எண்ணுவோர் கவனத்திற்கு

 வெள்ளியங்கிரி மலை சென்று ஈசனை வழி பட  எண்ணுவோர் கவனத்திற்கு  வெள்ளியங்கிரி மலை ஏறி ஈசனை வழி  பட எண்ணுவோர் கவனத்திற்கு...

2022 மே 31 வரை அனுமதி உண்டு....

மலை அடிவாரம் செல்ல கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து ஈஷா செல்லும் பஸ்ஸில் பூண்டி குறுக்கு ரோடு வரை சென்று .. அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் வெள்ளியங்கிரி மலை அடிவாரம் வரை செல்லவும்.

மலை அடிவார கோவிலில் அன்னதானம் 3  வேளையும் கிடைக்கிறது..

கீழே குடி தண்ணீர் கிடைக்கிறது..

மலைமேல் செல்லும் வழியில் 3 இடங்களில் குடிநீர் கிடைக்கிறது..

மலை ஏற தங்கள் கால்கள் நன்றாக இருந்தால் செருப்பு இல்லாமல் மலை ஏறலாம்.. பாதத்தில் பிரச்சினை என்றால் ஷூ செருப்பு  அணிந்து மலையேற அனுமதியுண்டு..

பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்ல வேண்டாம்..

குடி நீர் பாட்டில்களை மலை மேலே வீசி எறியாதீர்கள்..

வழியில் உள்ள கடைகளில் வாங்கும் உணவை சாப்பிட்டுவிட்டு குப்பைகளை அங்குள்ள குப்பைத்தொட்டியில் போடுங்கள்..

4 5 6 7மலைகளில் குளிர் காற்று  இருக்கும்..

சிறிய அட்டைப்பூச்சிகள் இருக்கும்.. தங்களின் மேல் அட்டை பூச்சி ஒட்டிக்கொண்டால் பதட்டப்படாமல் சிறிய துணியால் எடுக்கவும்.. வலி இருக்காது.பயம் வேண்டாம்..

ஈசனை தரிசித்து நலமுடன் திரும்புங்கள்..

மலை ஏறுவதற்கு மெதுவாக சென்றல் குறைந்தது 7 மணி நேரம் ஆகும்..

இறங்குவதற்கும் 7 மணி நேரம் ஆகும்.

தயவு செய்து சிவனின் நாமம் சொல்லிக்கொண்டு செல்லுங்கள்..

குத்து பாட்டு கேட்டுக்கொண்டு செல்லவேண்டாம்..

இவற்றை நினைவில் கொண்டு வெள்ளியங்கிரி ஈசனை தரிசித்து நலமுடன் திரும்புங்கள்...

தென்னாடுடைய சிவனே போற்றி..

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி

Sunday, 29 May 2022

My Nadi 29May22


 My Nadi 29May22



அகத்தியர் ஜீவ அருள் நாடி வாக்கு


பொகளூர் , கோவை


29.05.2022


 


வாசிப்பவர் - குருஜி இறைசித்தர் செந்தில்


கேட்பவர்  - தி. இரா. சந்தானம்


 


வாக்கு :


 


அருவாய் உருவாய் திருவாய் போற்றி


திருவாய் மலரடி பணிந்தாய் போற்றி


வருவாய் குகனே அருள்வாய் போற்றி


காவாய் கனகத்திரளே போற்றி


என் கயிலை மலையானே


போற்றி போற்றி போற்றி


 


சிரம் தாழ்ந்து வணங்கும் அடியோரின்


தேவ தேவனே போற்றி


 


சிரம் தாழ்ந்து அகஸ்தியன் நானே


என் நிலை இறக்கி


இக்கலியுகம் தன்னிலே


கந்த வடிவேலவனின் அருள் பெற்று


அருள் தனை உரைக்கிறேன் என் மைந்தனுக்கு


கேள் மகனே


 


இன்னவன் வாழ்வு தன்னிலே


சென்றுட்ட சிறு வேளையிலே


சிறியதோர் துயர் பட்டாய்


 


மனம் கலங்கி நின்றாய்


என் மைந்தா


உமை யாம் பக்குவ நிலை படுத்தவே


சிறு இன்னல் தந்தோம்


 


பக்குவ நிலை நீ பெற்றாய் , என் மகனே


நிறைவு பெறும் அப்பா உனது வாழ்வு


யாம் அன்றல்ல இன்றல்ல ,


என்றும் உமை காப்போம்


 


உன் அருகில் அல்ல


உம்முள் இருந்து


உமை யாம் காப்போம்


 


பூரண நல்லாசிகளே


நிலை பெறுவாய்


ஆலய கைங்கர்யங்கள் அதை


முன்னின்று செய் அப்பா


 


உமக்கு எம் பூரண நல்லாசிகள்


 


பெரும் உயர் நிலை நீ அடைவாய்


 


நிலை பெறுவாய் என் மகனே


என் மகனே


யாம் உனக்கு அன்றுரைத்தோம்


நீ செய்யும் தான தர்ம நிகழ் காரியங்களை


யாம் உற்று நோக்கி உள்ளோம்


யாம் மனமகிழ்ந்தோம் என் மழலையே


திரைவடிவில் காட்டாதே


தான தர்ம காரியங்கள் மேலோங்கும் அப்பா


உன் மனை தன்னிலே


யாகம் பூசை புனஸ்காரங்களை செய்


உமையவள் லோபாமுத்திரையுடன் உடன் இருந்து


உமை யாம் ஆசீர்வதிப்போம்

Saturday, 28 May 2022

அங்காள பரமேஸ்வரி - ஏனாடி செங்கோட்டை என்ற கிராமம்

 சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானா மதுரையில் இருந்து பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ளது ஏனாடி செங்கோட்டை என்ற கிராமம். இங்குள்ள ஆலயத்தில் அங்காள பரமேஸ்வரி தன்னுடன் 21 துணை தேவதைகளையும் 64 பிற கடவுட்களையும் வைத்துக்கொண்டு வீற்று உள்ளாள். ஒரு காலத்தில் வாரணாசியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணத்தை மேற்கொண்ட வேடன் ஒருவன் தன்னுடன் தான் வணங்கிய அங்காள பரமேஸ்வரியின் சிலையையும் கொண்டு வந்து இருந்தான். ஒரு நாள் அவன் ஏனாடி சின்னக்கோட்டை கிராமத்தை அடைந்தபோது அங்கு இருந்த ஒரு மரத்தின் அடியில் அதை வைத்து விட்டு பூ பழங்கள் போட்டு அதை பூஜித்தான். அங்காள பரமேஸ்வரிக்கு அந்த இடம் பிடித்துப் போய் விட்டதினால் தான் அங்கேயே இருக்க விரும்புவதாகவும் , அவனை மேற்கொண்டு அவனது யாத்திரையை தொடருமாறும் கூறினாள் . ஆகவே அவளை அங்கேயே விட்டு சென்று விட்டவன் பின்னர் திரும்பி வரவேயில்லை. காலப் போக்கில் அந்த சிலையை மண் மூடியது. எவரும் அதை கவனிக்கவில்லை. அந்த ஊரின் அருகில் இருந்த மரவாநேன்தல் என்ற ஊரை சேர்ந்த யாதவ பால்காரப் பெண்மணி ஒருவள் தினமும் அந்த வழியாக செல்வதுண்டு. ஒரு நாள் அவள் அந்த வழியே சென்றபோது தடுக்கி விழுந்து அத்தனை பாலும் அந்த சிலை மூடி இருந்த மண் மீது மீது கொட்டி விட்டது. அது தினமும் தொடர்ந்து அதே இடத்தில் நடந்தது. அந்த நேரத்தில் தன்னுடைய ஊமை பெண்ணை அழைத்துக் கொண்டு ஒரு பிராமணன் ராமேஸ்வரம் சென்று கொண்டு இருந்தார். அவரும் அந்த வழியாகவே சென்றார். அவருக்கு கிளம்புன் முன் ஒரு அற்புதம் நிகழ உள்ளது என ஆரூடம் கூறப்பட்டு இருந்தது. அவர் தனது ஊமை மகளுடன் அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு இருந்தபோது மீண்டும் அந்த யாதவப் பெண்மணி பால் பாத்திரத்துடன் அதே இடத்தில் விழுந்தாள். ஊமை பெண் அதைப் பார்த்துவிட்டு ' பால் குடத்துடன் அவள் விழுந்து விட்டாள்' எனக் கத்தினாள். ஆகவே ஊமையை பேச வைத்த அந்த இடத்துக்கு எதோ மகிமை உள்ளது என அவர் கிராமத்திடம் கூற அவர்களும் அங்கு வந்து அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது அங்காள பரமேஸ்வரியின் சிலை கிடைக்க அதை ஒரு வன்னி மரத்தடியில் அவர் பிரதிஷ்டை செய்தார். அப்போது ராமநாதபுரத்து மன்னனான சேதுபதியின் மனைவிக்கு தீராத வயிற்று வலி இருந்தது. பிராமணன் அவரிடம் சென்று அங்கு ஆலயம் அமைக்க உதவி கேட்டபோது அவர் தன் மனைவியின் நோயை குணப்படுத்தினால் அதை செய்வதாக வாக்கு தந்தார். அவர் மனைவி குணம் அடைந்தாள். ஆனால் மன்னன் தந்து இருந்த வாக்குறுதியை மறந்து விட்டார். பின்னர் ஒரு நாள் குதிரை மீதேறி அந்த இடம் வழியே செல்கையில் குதிரை தடுக்கி விழுந்து காயம் அடைந்தது. அங்காள பரமேஸ்வரி ஆலயத்து காவலாயை உதவி கேட்க அவனும், அந்த இடத்தில் இருந்த மண்ணை வீபுதி போல குதிரையின் நெற்றியில் தடவ அது உடனடியாக எழுந்து நின்றது. அப்போதுதான் மன்னனுக்கு தான் அங்கு ஆலயம் அமைப்பதாக கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வர உடனடியாக அங்கு ஆலயம் அமைக்க ஏற்பாடு செய்தார். அவளுக்கு உதவியாக இருக்க பாதாள ராக்கு, முத்து ராகாச்சி, முத்து இருளாயி, சந்தனக் கருப்பு, போன்ற இருபத்தி ஒரு துணை கடவுளுக்கும் அறுபத்தி ஒரு படை வீரர்களுக்கும் சிலைகள் வைத்தான். மூன்று கருவறைகள்- அங்காள பரமேஸ்வரி, சந்தனக் கருப்பு மற்றும் இருளாயி போன்றவர்களுக்கு ஏற்பட்டன. அங்காள பரமேஸ்வரி சுத்த சைவம். ஆகவே அவளைத் தவிர்த்து மற்ற தேவதைகளுக்கு மட்டுமே பலிகள் தரப்படுகின்றன.

வருடாந்திர விழா சிவராத்திரிக்கு இரண்டு நாட்கள் முன்னால் துவங்கி எட்டு நாட்கள் நடைபெறும். சிவராத்திரி அன்று அங்காள பரமேஸ்வரி பரி வேட்டை என்ற பெயரில் தான் முன்னர் புதைந்து இடம்வரை ஊர்வலமாக சென்றப் பின் அங்கிருந்து திரும்பி வருவாள். அன்றைய தினம் அவளுக்கு ஒன்பது விதமான தானியங்களை காணிக்கையாகத் தருவார்கள்.

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை அங்காள பரமேஸ்வரியின் துணை தேவதையான பத்திர காளிக்கு கர்பிணி ஆடு ஒன்றை பலியாகத் தருகிறார்கள்.

அங்காள பரமேஸ்வரிக்கு நிறைய பக்தர்கள் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் உண்டு. ஒரு முறை வைகை நதி நீர் கரை புரண்டு ஓடி அந்த ஆலயத்துக்குள்ளும் தண்ணீர் வந்துவிட்டது. ஆகவே அவளுடைய பக்தர்கள் மஞ்சள் கயிற்றை மஞ்சளுடன் சேர்த்துக் கட்டி அவள் கழுத்தில் போட்டு வைத்தப் பின் அதை ஒரு பானையில் வைத்து நதியில் போட வெள்ள நீர் உள்ளே புகவில்லையாம். வெள்ளமும் வடிந்ததாம்.

வாசி யோகம் , மூன்றாவது கண்


 VAASI YOGAM

[ 3ed eye ]

வாசியோகம்என்பது குருமுகமாக நெற்றிப் பொட்டைத் தொட்டுக் காட்டிப் பூட்டுத் திறக்க வழி செய்து, மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து வெளிப்படுத்தாது உள்ளுக்குள்ளேயே மேலும் கீழுமாக ஓட்டிச் சமாதி நிலை எய்தச் செய்வதாகும். அவ்வாறு இடகலை, பிங்கலை வழியாக மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கில் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு செய்தால் கபமெனும் எமனை எட்டி உதைக்கலாம். வாசியோகத்தினால் பிராணன் (காற்று) தங்கு தடையற்றுச் சுழுமுனையை நாடிச் செல்லும். வாசியோகம் பயிலப் பயில உடலில் மறைந்துள்ள தேவையற்ற ஊன் (கபம்) மறையும். இதனால் குண்டலினியை எழுப்ப அநுபவங்களைப் பெற்று சித்தியடையலாம்.இரு மூக்குத் துவாரம் வழியாகப் பிராணனை வெளிவிடாமல் ஒன்று சேர்க்கும்போது புருவ மத்தியில் அக்னிகலை தோன்றும். இந்த அக்னியில் நாட்டம் வைத்தால் (மனதை நிறுத்தினால்) கோபுரத்துக்குச் செல்லும் வாயில் பூட்டான நாசிமுனை புருவமத்தி திறந்து கொள்ளும். மறக்காமல் தினம் ஒருதடவை சாதனை செய்துவரவேண்டும். மெளனத்துடன் அடங்கி அமைதியாக இருந்தால் மதிஅமுதம் சுரந்துவிடும். மனம் தூங்காமல் தூங்கி சுகம் பெறும். இந்நிலை ஏற்பட மூக்கு மார்க்கமான மற்றோர் வீட்டிற்குச் செல்லாமல் நெற்றி மார்க்கமாக மேலே செல்லவேண்டும்.பிராணன் இயல்பாக உலவும் வழி இடகலை, பிங்கலைகளாகும். அவைகளை மாற்றிச் சுழுமுனையில் செலுத்துவதையே திருமூலர் கூறுகிறார். மூக்கின் வழியாக உள்ளே சென்று மீண்டும் மூக்கின் வழியாக வெளியே ஏறுகிற காற்றை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி மூலாதாரத்தில் மேல் உள்ள முதுகெலும்பின் அடிப்பாகத்தில் இருந்து முதுகெலும்பின் உள்ளே உள்ள சிறு துவாரம் வழியாகச் செலுத்தினால் அதாவது சுழுமுனை வழியாகச் செலுத்தினால் மூச்சானது சிறிது சிறிதாக மேலேஏறி அண்ணாக்கில் உள்ள துவாரத்தின் வழியாகப் புருவ மத்திக்கு வந்து அங்கிருந்து உச்சிக்குச் செல்லும். இவ்வாறு ஏற்றி இறக்கிச் செய்யும் மூச்சுப் பயிற்சியே வாசியோகம எனப்படும்.

சுழுமுனை வாசல் திறப்பதற்கான விபரம் :வாதம், பித்தம், சிலேத்துமம்(கபம்) மூன்றும் ஆகாது. எனினும் சிலேத்துமத்தின் சேர்க்கைதான் (சேத்துமம்) உச்சிக்குழிக்குக் கீழே உள்நாக்குக்கு மேலே எரிகிற பச்சை விளக்கை பங்கப் படுத்துகிறது. ஆகவே தான் சுழுமுனை வாசல் திறக்க கபம் வெளியேற வேண்டும். இதற்குக் காலைப் பிடித்தல் ஒன்றே வழி. (கால்-காற்று) காற்றில் உட்கலந்து ஊடாடி நிற்கும் நெருப்பை யோகிகள் உட்கொள்கிறார்கள். இந்தக் கனலால் கபம் அறுபடுகிறது. இந்தக் கபம் வெறும் சளி மாத்திரம் அல்ல. உடலெங்கும் ஒட்டிக் கிடக்கும் கசிறு. இதை புத்தவேதம், " உட்கவிழ்ந்த மேகம்" என்று கூறுகிறது. ஊத்தை சடலம், உட்குழிந்த பாண்டம் என்று உடல் அழைக்கப்பட்டதற்கு "கபமே" மூலகாரணம். எனவே கபத்தை எமன் என்றே அழைக்கலாம்."ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி" என்கிற திருவாசக அடியால் இதைத் தெளிவு பெறலாம். ஊன் என்பது ஊத்தைக்கசிறு, உடல் என்பதாக நாம் கொள்கிற பொருள் தவறு. இந்த ஊன் உருகுவதற்கு உள்ளொளி பெருகவேண்டும். வாசியோக சாதகர்கள் காற்றிலிருந்து (பிராணன்) நெருப்பைக் கொள்முதல் செய்கிறார்கள். இந்த நெருப்பின் நேயச் சேர்க்கையால் உள் ஒடுங்கிய பொறி உள்ளொளியாக விளக்கம் பெற்றுப் பெருகுகிறது. பிறகு உவப்பிலா ஆநந்தமாய்த் தேன் அமிர்ததாரையாக வருகிறது. இது வாசியோகத்தின் சிகர சாதனை என்று கருதலாம்.

கபம் என்பது உடல் துரியநிலை பெற (நிர்விகல்ப சாயுச்யநிலை) இடையூறாக இருக்கிறது. மாவுப்பொருட்கள் நிறைந்த உணவுகள் அனைத்தும் கபம் விளைகிற கால்வாய்கள் எனலாம். "கோழை கபம் தான் யமன்!" இதை நீக்க சித்தர்களால் ஆகாது. வாசியோகக் கனலாலே தான் எரிக்க முடியும்.புருவ மத்தியாம் நெற்றிக் கண் பூட்டுத் திறக்க :சுகாசனத்தில் அமர்ந்து தலை, கழுத்து உடல் நேராக நிமிர்த்தி, புருவமத்தியில் மனம்பதிந்து இரு இமைகளுக்கும் இடையில் நுண்ணறிவால் (உணர்வால்) பார்த்தால் அந்த இடத்தில் அசைவு காணும். பிராணனை மேலே தூக்கி உடலைத் தளர்த்தி,மனதை அந்த இடத்தில் செலுத்திப் பார். அறிவு நிற்கும் இடமாகிய புருவ மத்தியில் மனதை நிறுத்தி, காலை, மாலை 2 வேளையும் 11/2 மணி நேரம் பார்த்து வர வேண்டும். இவ்வாறு பழகி வந்தால்தான் பலன் காண முடியும். புருவ மத்தியில் உள்ள வாசல் திறக்கும்போது நீலம், பச்சை, வெள்ளை போன்ற நிறங்கள் தோன்றும்.புருவமத்தியில் நினைவை வைத்துத் தூண்டும்போது உண்டாகும் துன்பங்கள்: ் காதடைப்பு, கிறுகிறுப்பு உண்டாகிக் கண்கள் இருளும். உடல் வலி எடுத்து நடுக்கம் ஏற்படும். புலன்கள் வலிமை குன்றும். இந்நிலையை அநுபவித்துப் பார்த்தவர்களுக்கே தெரியும். மன உறுதி உள்ளவர்கள் மட்டுமே இதைத் தாண்டி மேலே வரமுடியும். மற்றவர்கள் தாண்ட மாட்டார்கள்.வாசி பார்க்கும் நெறி :வாசியானது மூக்குத் தண்டு நடுவில் (புருவமத்தி) வருவதே வல்லபம் ஆகும். யோகத் தண்டான முதுகுத் தண்டு நிமிரும். அப்போது கண்ணை இறுக்கி சிரமத்துடன் கிடந்து நெற்றியைப் பார்க்காதே. மனதால் அந்த இடத்தைக் காணவேண்டும். நடு நெற்றி முதல் பிரம்மரந்திரம் என்ற நாமம் போன்று வாசி ஏறும். (அந்நிலையைக் குறிக்கவே நாமம் என்கின்றோம்) அப்போது குமரியாகிய வாலை விளையாடுவதைக் காணலாம்.ஏமாந்து போகாமல் ஒரு நாமமார்க்கத்தில் தொட்டேறி உச்சி வழியாக பிரம்மரந்திரத்திற்குச் செல்லவேண்டும். அப்போது பேசாமல் சித்திரம் போல் அசையாமல் மோனத்தில் இருந்துகொண்டு புருவமத்தியை மனதால் காணும்போது உடல் லேசாகும். மேலே தூக்கும். மனமும், வாசியும் இடது புறம் போகாமல் வலது புறமாக சூரிய கலையில் ஓடும். இந்நிலையில் தன்னைத் தான் காணலாம். சாதாரண மனிதனுக்கும் தாது உயிர் நின்ற இடம் இதுதான். தன்னைத் தானே காணும் இடமும் (ஆன்ம தரிசனம்) நெற்றியடி புருவமத்தி, ஊசிமுனை துவாரம் உள்ள மூக்கின் அடிமத்தியாகும். எனவே, புருவ மத்தியில் நின்று உருளும் வாசியை அநுபவித்துப் பார்க்கவேண்டும். சாதனையில் முன்னேறினால் அந்தச் சித்தியை ஓராண்டுக்காலத்தில் பெறலாம். அதன் பின் நெற்றியில் நடு நாம வழியைப் பற்றிச் செல்வதே முத்திக்கு நேரான வழியாகும். இவ்வாறு செல்பவர்கள் முனிவர்களாக ஆகலாம்.இவ்வாறு கண் இரண்டையும், புருவ மத்தில் சுழிமுனையின் நடுவில் அசையாமல் பார்த்தால் அங்கு மூன்றாவது கண்ணாகிய ஞானக்கண்ணைக் காணலாம். இதனால் ஞானரசத்தைப் பருகலாம். உடல் ஒளியுறும். புலன்கள் தோறும் தேவையற்ற கருவிகள் அடங்கிப் போகும். அப்போது உடல் கற்பூர வாசனை வீசும். உலக விவகாரம் அற்றுப் போகும். வயோதிகம் குறைந்து வாழ்நாள் நீடிக்கும். மூக்கு மத்தியில் வாசி கொண்டு ஏற்றினால் நாசி மத்தியில் வாசி நீண்டு விடும். இந்நிலையில் தானாகவே வேண்டும்போது திறக்க, பூட்டச் செய்யலாம். அதாவது நினைத்த மாத்திரத்தில் புருவ மத்தியில் நின்று சமா தி நிலையை எய்தலாம் மேலும் அந்த வாயிலைத் தாண்டி உட்புகுந்து மேலே, (பிரமரந்திரம்) ஏறினவர்களுக்கு யோகத்தின் புராதனமாகிய யோகதண்டம், கமண்டலம், குகை போன்றவைகள் வேண்டாம்.

இதனால் குருவருளும் திரிகால ஞானத்திலுள்ள எல்லா சித்திகளும் உண்டாகி கர்மவினை மாறி தர்மம் ஆகும். நரை, மூப்பு, மரணம் இவை போகும்.மூலாதாரத்தில் இருந்து மூலக்கனல் எனும் வாசி முதுகுத் தண்டின் வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறி, பிடரி வரை வரும். உடல் முழுதும் ஓடாது முதுகுத் தண்டின் உள்ள நடு நாடிவழியாக வரும். அப்போது வாய் மூடி மெளனமாக உடல் ஆடாமல் அசையாமல் இருந்தால் வாசி சீறி எழும் வேகத்தால் உடலைப் பின்னால் தள்ளும். மீண்டும் வாசி கீழ் நோக்கிச் செல்லாமல் உள் நாக்கின் வழியாக மேலே செல்லும். அதன் பின்பு பிரம்மரந்திரத்தை அடைந்து வாசியானது உச்சிவெளியான சிதாகாசத்தில் கலந்ததால் அனைத்தும் தோன்றும். பஞ்ச பூதங்களும் அவர்களுக்கு ஏவல் செய்யும். சூரியன், சந்திரன், நட்சத்திரம், ஆகியவை அவர்களுடன் பேசும். இவர்களே சித்தர் நிலையை அடைந்தவர்கள் ஆவார்.இவர்கள் உடல் பல மாறுதல்களை அடையும். நடந்து செல்லாமலேயே ஆகாய மார்க்கத்தில் செல்லமுடியும். தொலைதூரம் நடப்பதைக் காணவும், தொலைதூரம் பேசுவதைக் கேட்கவும் முடியும். இவை எல்லாம் ஒரு நொடியில் நடக்கும். சாதாரண மனிதன் தெருவில் நடப்பது போல் பல உலகங்களில் உலவிவர முடியும். இவை எல்லாம் வாலையாகிய குண்டலினி சக்தி உடலில் உள்ளதால் நடைபெறும்.

காயசுத்தி விபரம் :காலனுக்கு உயிரை உண்ணும் வேலைதான். அவன் ஏவலால் சூலாயுதம் கொண்டு உயிரை எமன் கொண்டு செல்கிறான். எமனுக்கு எமனாய் இருக்கவேண்டுமானால் சூலனுக்கு சூரனாய் இருக்கவேண்டும். அதற்குக் கால சித்தியே துணையாகும். காலசித்தி பெற்றால் எமன் அணுகமாட்டான். வேலாயுதமாகிய வாசியில் எல்லாக்குற்றங்களையும் இரையாக இட்டால் பிராணன் வெந்து காயாது, பசி நீங்கும். கபம் போகும். காம உணர்வு நீங்கும். இவ்வாறு இருந்தால் காலன் நம்மை அணுக மாட்டான்.காயகல்பநிலை பெற விரும்பு துறவியர்களுக்கான உணவு, இருப்பிடம் மற்றும் பல விபரங்கள் கல்ப சாதனை செய்யவிரும்புபவர்கள் கடுமையான சக்தியுடன் இருக்கவேண்டும். தனிக்குடிசை (வீடு-மாடி) கட்டிக் கொள்ளவேண்டும். இந்நிலையில் நல்ல குருவும், சிஷ்யனும் தேவை.கருங்குறுவை அரிசி, பாசிப்பயிறு, மிளகு, சீரகம் இவைகளை வேகவைக்கக் கூடிய அளவுக்குக் காராம்பசுவின் பாலைச் சேர்த்துப் பொங்கி ஒரு வேளை சாப்பிடவேண்டும். மற்ற நேரங்க ளில் காராம்பசுவின் பால் மட்டும்தான் சாப்பிட வேண்டும். வேறு ஒன்றும் சாப்பிடக் கூடாது. மழை, வெயில், பனி, காற்று நான்கும் ஆகாது. பிரம்மசரிய விரதம், ஆகாரப் பத்தியம் கடுமையாக இருக்கவேண்டும். தவறினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இதனால்தான் இக்காயகல்ப சாதனை பற்றி சித்தர்கள் விவரமாகச் சொல்லாமல் மறைத்து விட்டுப் போய்விட்டார்கள். இந்தக் கடுமையான பத்தியம் இருந்து அஜபா காயத்திரி மந்திரம் செய்து வரும்போது மெளனமும் தொடர்ந்து இருந்து வந்தால், மாதாமாதம் செய்தால் 12 மாத பலனைப் பெறலாம். சிரத்தையுடன் தொடர்ந்து ஒவ்வொரு வருடமாகப் பனிரண்டு வருடங்கள் செய்து வந்தால் 12 வருட பலனையும் பார்க்கலாம். இதற்கு இடம், பொருள், ஏவல் மூன்றும் தேவை.

புருவ நடு திறந்து சஹஸ்ராரத்தில் நடனம் கண்டபின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்: சஹஸ்ராரத்தில் திருநடனம் காணும்போது கண்கள் சிவந்து காணப்படும். பாதம், ஆசனவாய் இவைகளில் எரிச்சலும், வலியும் இருக்கும். தினமும் கொஞ்சம் கொஞ்சமாகப் பயிற்சி செய்யவேண்டும். அப்போது வாசி செந்தீ போல் இருப்பதை நுண்ணறிவால் உணரலாம். இந்தச் செந்தீயாகிய வாசிய இடுப்பிற்குக் கீழே இருபிளவாக இருக்கும் கால்களுக்குச் செல்லுமாறு செலுத்தவேண்டும். ஒளி காணும்வரை செலுத்தவேண்டும். சாதனை காலத்தில் புருவமத்தி, உச்சி, பிடர் போன்ற இடங்களில் சுலபமாக ஒளி காணமுடியும். ஆனால் இடுப்பிற்குக் கீழே பாதம் வரை யோகக்கனல் வருவதற்கு நீண்ட காலப் பயிற்சி வேண்டும்.காலை, மாலை இருவேளையும் மூக்கு முனையில் இருவிழிகளை நிறுத்திப் பார்த்தால் இரு விழிகளுக்கிடையில் நேர் மத்தி புருவ மத்தியில் வாசியாகிய உயிர் புருவம் தட்டும். இந்த இடத்தில் மனம் பதிவதையே குரு என்பர். இந்நிலை வந்தால் கருவிக்கூட்டங்கள் ஒடுங்கி ஓடிப் போய் விடும். அதாவது புலன்களும், கருவிகளும் செயலிழந்துவிடும். மனம் திறந்து ஒளி வீட்டைக்காணலாம்.கருவி கரணங்கள் என்னும் தத்துவங்களை வென்ரதால் மனதை விட்டுக் கவலைகள் ஒழிகின்றன. புலன்கள் சுத்தமாகும். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமே இல்லை. புருவமத்தி என்னும் குன்றின்மீது ஏறி, பிரம்மரந்திரமாகிய மலை உச்சிக்குச் சென்று அம்பலதரிசனம் கண்டவரே மறையோகியும் குருவும் ஆவார்.

குரு வருளால் திருவாகும் யோக்கியதை உண்டாகும். சித்தர்களுக்கெல்லாம் அரசனாக வாழலாம். திரிகால தரிசனம் கிடைக்கும்.யோகிகள் தன் மரணத்தை மறந்து, சரீரத்தை பேணிப்பாதுகாப்பதை மறந்து நேரங்களையும் துறந்து காலை, மதியம், மாலை என்று மூன்று காலமும் வாசியை ஏற்றிச் சாதனை செய்தவர்கள். தூண்டாத ஜோதி யுடன் வெளிச்சம் காண்பர். காயகற்பம் கண்டவர்கள் அமுதத்தை உண்டு கலை சித்தி பெறுவார்கள். ஒளியைப் புருவ மத்தியில் ஏற்றியவருக்குக் கூட சஹஸ்ரார தரிசனம் சிலசமயம் கிட்டுவதில்லை. சஹஸ்ராரத்தில் சென்ற பிராணன் குளிகை போல் ஆகிவிடும். அவ்வாறு உச்சிக்குச் சென்று குளிகை ஆனால் ஆகாய மார்க்கத்தில் பறக்கும் ஆற்றல் உண்டாகும். பிராணன் பலப்பட பலப்பட ககனமார்க்கம் செல்லும் திறன் உண்டாகும். முக்திநிலை கூடும். இந்நிலையில் மனம் மெளனத்தில் இருந்து மோனத்தில் ஒடுங்கும். அஜபா காயத்ரியை (ஓம்) தியானம் செய்யச் செய்ய உயிர் வலுக்கும் குளிகையாகும். சஹஸ்ர தளத்தின் நடுவில் உள்ள கேசரங்களில் உயிர் நிற்கும். இதை விட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை.நெஞ்சுப்பள்ளமாகிய அநாஹதத்தில் பிராணன்(வாசி) வரும்போது நீண்ட காலத்திற்கு அங்கேயே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும். இந்நிலையில் யோகிகளுக்குத் திட சித்தம் ஏற்படாமல் சலனங்கள் உண்டாகும். உயிர் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும். அதற்கு மேல் விசுத்தி சக்கரத்திற்கு வரும். அதற்கு மேல் விரைவாக ஏறி புருவ மத்தியாகிய ஆக்ஞாசக்கரத்திற்கு வந்தால் சலனங்கள் மறைந்துவிடும். அதன் பிறகு நெற்றி வழி உச்சிக்குச் சென்று முட்டும். உச்சிக்குச் சென்று முட்டும் பிராணன் அங்கு சுற்றிச் சுழன்று வட்டமிடும். இதைப் பார்ப்பதே ஞானம் எனப்படும்.

இஞ்ஞானநிலையை விட்டு உயிர் கீழே இறங்கி பிடரிக்கு வந்தால் வாத, பித்த, சிலேத்துமம் அதிகரிக்கும். பித்தம் அதிகமாகும். மேன்மக்கள் இருவர் கூடினால் பலம் அதிகமாவது போல் பிராணனும் பித்தநீரும் ஒன்று கூடினால் உடல் தொல்லை அதிகமாகும். பிராணன் இன்னும் கீழே இறங்கி வந்தால் மும்மூர்த்தியானாலும் மரணம் அடைவார்கள். அதனால் எப்போதும் உச்சியிலே நிற்கவேணும். அப்படி இறங்கினாலும் மீண்டும் லகுவாக மேலே ஏற்ற வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையும் அமைதியான இடத்தில் மனமும், உடலும் இணங்கிய (காலம்) சுகாசனத்தில் இருந்து சாதனை செய்தால் வெட்டவெளியில் மனம் ஒடுங்கும். யோகசாதனையின் முடிவில் யோகத்திற்குத் தடையாக இருந்த நீர் கழிந்துவிடும். பிராணன் கபாலம் ஏறும். யோகம் 12 ஆண்டில் சித்தியாகும். அவரவர் புண்ணியத்திற்குத் தகுந்தபடி 3 ஆண்டு, 5 ஆண்டு, 8 ஆண்டு, 10 ஆண்டு 2 ஆண்டு என யோகம் சித்திக்கும். மேலே செல்லச் செல்ல யோகம் எளிதாகும். இடைவிடாது பயின்றால் சிற்பரத்தைக் காணலாம். இதுவே நெற்றிக்கண் திறத்தலாகும். இதற்கு மேலெ ஞானநிலை கூட உச்சி ஏறுவர். தலை உச்சியில் கபால மத்தியில் அண்ணாக்கிற்கு நேர் தூண்போல் 1 சாண் நீளம் ஒளி உண்டாவதைக் காணலாம். இந்நிலை வந்தால் நாவால் உணவு உண்ணாமல் உள்நாவால் அமுதம் உண்ணலாம்.அண்ணாக்கில் உள்ள துவாரமே 10-ம் வாசல். இதை ஊடுருவி மூலத்துண்டின் மூலம் உள்நாக்கு வழியே பற்றி வாசிக்குதிரை ஏறி ஒளி இடமாகிய காசிக்குச் செல். அங்கு பரை ஆடுவதைக் காண்பாய். அண்ணாக்கில் இருந்து உச்சிவரை செல்லும் மூல மார்க்கத்தை நடுநாடி, உயிர்நாடி, பிராணநாடி ஆகிய வழி சென்று உயிர் நடனத்துக்குக் கூத்தாடும்.

புருவ மத்தியை நோக்கி சாதனை செய்து கொண்டிருக்கும்போது நோய்கள் வந்தால் மருந்துகளால் குணமாகாது. யோகத்தால் அதை நிவர்த்தி செய்யமுடியும். சாதனையைப் பாதியில் நிறுத்தினால் நோயினையே அடைவார்கள். பொய் யோகியாகி விடும். ஞானபதம் கண்டவர்கள் பித்தர்கள் போல் தன்னை மறந்து காணப்படுவார்கள். சுழலில் அகப்பட்ட துரும்பு போல துடிப்பார்கள். இச்சமயத்தில் ஞானத்தால் ஊன்றி நின்று பித்தம் போக்கி எச்சரிக்கையுடன் இருந்து 1 வருடம் வரை சாதனை செய்யவேண்டும்.சாதனை செய்யும் ஒரு வருட காலத்தில் கிறுகிறுப்பு, மயக்கம் இவை தோன்றும். மயங்கி விழுந்த மண்டைக்குள் வாலை கூத்தாடும். இவ்விளையாட்டு ஒருவருடம் வரை நடக்கும். இதைக் குளிகை என்பர். இந்நிலை வரவிரும்பினவர்கள் யோகத்தில் மேல்நிலையில் உள்ளவர்கள். கபாலத்தில் உயிர் குளிகையாகி நிற்கும்போது ஏற்படும் உணர்வுகளாகும். முக்தி நிலையில் முழுமை பெற்று சித்தி பெற்ற ஞானிகளுக்கு நாடி, நரம்புகள் இறுகிக் காணப்படும். உடல், உயிர் இவைகளில் உண்டான மும்மலக் கசடுகள் நீங்கும். குண்டலினி சக்தி உடலில் இருந்து ஆடிப்பாடும். மனம், உடல், உயிர் மூன்றும் ஒன்றாய் கூடி ஒடுங்கி நிற்கும். ஒளி பெருகும், இருள்விலகும். இந்நிலை வந்தால் நரை, மூப்பு ஓடிப் போகும்.ஞானசித்தி பெற்ற பின்பு நாடி, நரம்புகள் இறுகும். ககன மார்க்கத்தில் செல்ல முடியும். பூமியில் நடப்பது போன்று வானத்தில் நடக்கலாம். வல்லபங்கள் அநேகம் உண்டு. மனதில் உற்சாகம் தோன்றும். கேட்டதெல்லாம் கிடைக்கும். வாலைத்தாய் குண்டலினி சக்தி முன்னே நின்று தொண்டு செய்வாள். இத்தகைய சக்தி பெற்ற உடல் உயிர் கேவலப் பிறவியாகாது. மனம் சித்தியும், உயிர் முத்தியும் பெறும். 2 வருடம் யோகம் செய்து சித்தி பெற்று அந்த சித்தியில் ஏமாந்துவிடாமல் அதன் பின் ஞானமார்க்கத்தில் இரட்னு வருடம் சித்துடன் சேர்ந்து விளையாடி முதிர்ச்சி அடைய வேண்டும்.பிரமரந்திர உற்பத்தி: பிரமரந்திரத்தில் ஊசி துவாரத்தில் உயிர் நிற்கும் நிலையே ஞானம் ஆகும். இந்நிலையில் உள்ளபோது திரிகால உணர்வும் தெரியும். ஆன்மா உச்சி மண்டையில் ஏறி வெட்டவெளியில் சென்று மூன்று காலத்தையும் உணரும். முதுகுத் தண்டின் எலும்பின் உள்ளே சிறிய ஊசியைச் செலுத்தும் அளவுள்ள துவாரத்தின் வழியாகப் பிராணன் செல்லும். இந்த எலும்பின் உள்ளே சிறிய ஊசியைச் செலுத்தும் அளவுள்ள துவாரத்தின் வழியாகப் பிராணன் செல்லும். இந்த எலும்பின் உள்ளே ஓடுகிற வாசியே ஆன்மாவாகும். இவ்வாறு எறிமுனை மூக்குக்கு வரும். வாயுவான ஆன்மா எலும்பில் உள்ள துளையின் வழியாகப் புருவ மத்தி ஏறும். இவ்வாறு ஆறு ஆதாரங்களைக் கடந்து புருவமத்தியின் வழியாக உச்சி மண்டைக்குச் செல்லும்.காயசித்தி பெற்ற பின்பு நரைத்த முடி கறுத்துவிடும். உடல் பலமடையும். சரீரம் வெகு காலத்துக்கு நிலைத்து நிற்கும். ஆன்மா உச்சி ரோமம் வழியாகச் சேர்ந்து ஏறி, ரோமக்கால்களைத் தொடர்ந்து பற்றி 12 அங்குலம் மேலே ஏறும் ஞானம் ஆகும். இந்நிலையில் உள்ளபோது திரிகால உணர்வும் தெரியும். ஆன்மா உச்சி மண்டையில் ஏறி வெட்டவெளியில் சென்று. உச்சிக்கு மேலே 12 அங்குலம் மேலே துவாதசாந்தப் பெருவெளியில் ஆன்மா செல்லும். அப்போது கூடுவிட்டுக் கூடு பாயும் நிலை  ஒடுங்கிவிட்டால் நிர்விகல்பசமாதி நிலையை அடையலாம். மெளன நிலை போல் மோனநிலை கிடைக்கும். மோன நிலையில் பிராணன் ஒடுங்கியபின் உயர்வு, தாழ்வற்ற நிலை ஏற்பட்டுவிடும். இதுவே எல்லாம் பிரம்மமயம். இதை எல்லாரும் அடையலாம். இதற்கே மறு பிறவி கிடையாது.

Thursday, 26 May 2022

சித்தர்கள் அருளிய காரிய சித்தி மந்திரங்கள்

 சித்தர்களின் குரல் முகநூல் பதிவில் இருந்து எடுக்கப்பட்டது


சுப்ரமணியர் மந்திரம்:-

                  புருவ மத்தி சுழுமுனையில் பார்வையை வைத்து "ஓம்-கிலி-ஓம்" என்று இலட்சம் உரு தியானிக்க சுப்ரமணியர் வடிவேலுடன் சோதி மயமாய்ப் பிரசன்னமாகி வேண்டிய வரமளிப்பார். கர்ம வினைகளை விலக்குவிப்பார்.


கணபதி மந்திரம்:-

                 ஓங்காரம் வரைந்து அதன் நடுவில் "உம்-ரீங்-கங்-கங்" என்று விபூதியிலாவது தங்க, வெள்ளித் தகட்டிலுவது எழுதி புருவ மத்தியில் மனதை வைத்துக் கொண்டு "உம்-ரங்-ஓம்-ஸ்ரீ-கங்-கங்-கணபதியே-நமா" என்று ஒரு இலட்சம் உரு செபம் செய்து வந்தால் தீட்சா மந்திரங்கள் சித்தியாகும். வல் பிணிகள் போம். சகல ஜீவன்களும் வசியமாகும், ஏவல் கேட்கும்


நந்தீசர் மந்திரம்:-

             "அங்-ரீங்-சிங்-சிம்-சிவா" என்று இலட்சம் உரு தியானிக்க புருவ மத்தியில் எண்ணம் இருக்க வேண்டும். தேகம் தங்கம் போல் பிரகாசிக்கும். யோக ஞான சித்தியும் உண்டாகும்.


அகத்தீசர்  மந்திரம்:-

"அம்-உம்-ஓம்-வம்-மம்-மகத்தான-அகத்தீசாய -நம"

         எண்ணங்கள் புருவ மத்தியில் வைத்து இலட்சம் உரு தியானிக்க.....


"யநம-சிவ" 

                என்று ஜெபித்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.


"அங்-சிவாய-நம"

                   என்று ஜெபித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.


"அரி-ஓம்-நமசிவாய" 

                என்று ஜெபித்தால் தேகத்தில் நோய் அணுகாது


"அம்-கிலி-சிவாய-நம"

                    என்று ஜெபித்தால் யோக சித்தி கிடைக்கும்.


"லங்-சிவாய-நம"

                   என்று ஜெபித்தால் ஆயுள் விருத்தியாகும்.


"இம்-ஏ-சிவாய-நம"

                     என்று ஜெபித்தால் ஓடாத பூத பிசாசுகளும் ஓடிவிடும.


"ஓம்-கிலியும்-நம-சிவாய"

                    என்று ஜெபித்தால் அரச வசியம, பல வசியம்.


"ஐயும்-நமசிவாய"

                     என்று ஜெபித்தால் படிப்பில் முதன்மையாக வரலாம்


"நமசிவாய"

                    என்று ஜெபித்தால் நினைத்தது நடக்கும்


"நமசிவாய-ஊம்-நமசிவாய"

                     என்று ஜெபித்தால் குளிர் ஜிரம் போகும்.


"நமசிவாயா-சூலிங்-நமசிவாய"

                        என்று ஜெபித்தால் பூமி நன்கு விளையும.


"நமசிவாய-மவ்வும்-சிவாய நம"

                        என்று ஜெபித்தால் அஷ்ட நாக விஷம் நீங்கும்


"ஓம்-குசம்-பிரேம்-சிவாய-நம"

                          என்று ஜெபித்தால் பசு பூமி பாக்கியம் கிடைக்கும்


"ஓங்-சங்-சிவாய-நம"

                      என்று ஜெபித்தால் தேவ கன்னிகள் வலிய வந்து சேருவார்கள்.


"லம்-அங்கிஷ-சிவாய-நம"

                        என்று ஜெபித்தால் முக்குணத்தையும் வெல்லலாம்.


"டங்-சிவச்-சிவாய-சிவாய-நம"

                         என்று ஜெபித்தால் பாதாள கமனம் சித்தியாகும்.


"ஓங்-ஐயும்-சிவாய-நம"

                       என்று ஜெபித்தால் ஆறு சாஸ்திரங்கள் மற்றும் கேள்வி ஞானம் பெறலாம்.


"லிங்க-லிங்க-ஓம்-சிவாய-நம"

                       என்று ஜெபித்தால் பொன்னுலகம் காணலாம்.


"சங்-வங்-சிவாய-நம"

                         என்று ஜெபித்தால்   ஜலஸ்தம்பமெழுப்பலாம். நினைத்தெல்லாம் உருவமாய் வந்து ஏவல் கேட்கும்.


"ஓம்-சிவாய-நம"

                      என்று ஜெபித்தால் அஷ்ட கருமங்களும் சித்தியாகும்.


"ஸ்ரீயும்-ஸ்ரீயும்-சிவ-சிவாய-நம"      

                         என்று ஜெபித்தால் கேட்டதெல்லாம் கொடுக்கும்.


"பிரங்-பிரங்குசாப-சிங்-சிவாய-நம"

                         என்று ஜெபித்தால் மரங்கள் காய்கனிகளை பறிக்க வளைந்து கொடுக்கும்.


"மங்-மங்-நங்-சிவாய-நம"

                  என்று ஜெபித்தால் பசிக்காது.


"வங்-லங்-வங்-லங்-சிவாய-நம"

                          என்று ஜெபித்தால் மழையில் நனையாமல் நடக்கலாம்.


"ஆகார-ஓம்-ஙங்-ங்-ஙங்-ஸ்ரீயும்-சிவாய-நம"

                      என்று ஜெபித்தால் தேவனை காணலாம்.


"இரிங்-ஸ்ரீறிங்-சிவாய-நம"

                    என்று ஜெபித்தால் ஆறுகள் பிரவாகமாக ஓடும்.


"சி-யம்-சிவ-சிவா-உங்-உங்-சிவாய-நம"

                   என்று ஜெபித்தால் கடலில் ஊடுருவி செல்லலாம்.


"சங்-சங்-யவசி-நம"

                   என்று ஜெபித்தால் வெந்நீர் ஜலத்தில் நடக்கலாம். இலட்ச கணக்கில் உருவேற்றி ஜெபம் செய்து வந்தால் சித்தியாகும்.


"ஐயும்-சிவாய-நம"

                       என்று ஜெபித்தால் தேவ விமானம் வந்து நிற்க்கும்.


"டங்-தெங்-கெங்-ஓங்-சிவாய-நம"

                        என்று ஜெபித்தால்  தருக்கள் உதவி செய்யும்.


"கங்-கங்-ஊங்-கங்-நசி-ஓங்"

                       என்று ஜெபித்தால் காமதேனு உதவி புரியும்.


"நுங்-நுங்-சிங்-ஓம்-நமோ"

                       என்று ஜெபித்தால் சக்தி வந்து உதவி புரிவாள்.

தண்ணீரை மட்டும் உணவாக கொண்டு வாழ முடியுமா.?

 Forwarded message from சித்தர்களின் குரல் lage


தண்ணீரை மட்டும் உணவாக கொண்டு வாழ முடியுமா.? சித்தர்கள் கடைபிடித்த நீர் உணவு.!


காலை, நண்பகல், இரவு என்று வேளைக்கு வேளை வகை வகையான உணவுகளையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கண்ட கண்ட பண்டங்களையும் பணியாரங்களையும் தின்று உடலைக் கெடுத்துக் கொண்டு, வாழ்நாளைக் குறைத்துக் கொள்ளாமல், இயற்கை உணவாகிய நீர் உணவை அருந்தி வந்தால் உடம்பில் நோய். அண்டாது, நீண்ட நாள் வாழலாம்.


காலையில், காலைக் கடன்களை முடித்து பல் துலக்கிய பின்பு காபி, டீ முதல் எந்த உணவையும் உட்கொள்ளக்கூடாது. அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பசி

எடுக்கும் போதெல்லாம் தண்ணீரையே

குடிக்கவேண்டும். உடம்பிலுள்ள

நச்சுத்தன்மைகள் சிறுநீர் மூலம், மலக் குடல் மூலம் வெளியேறிவிடும். தொடக்கக் காலத்தில் எவ்வளவு நேரம் நீர் மட்டுமே அருந்திக் கொண்டு இருக்க முடியுமோ அதுவரை இருக்கவும். அதிகமாகப் பசி எடுக்கும்போது, சாதாரணமான உணவு வகைகளை உட்கொள்ளலாம். சாதாரண உணவு வகைகளை உண்ணும்போது, கொழுப்பு சேர்த்த பொருள்களை நீக்கிவிட வேண்டும். வேண்டிய அளவுக்கு வேகவைத்த காய்கறிகளைக் குறைந்த அளவு உப்பு சேர்த்து உண்ணலாம்.


சப்பாத்தி, முட்டை கோஸ் சாப்பிடலாம்.

தொடக்கக் காலத்தில் ஒருவேளை உணவைக் குறைத்துக் கொண்டு நாளொன்றுக்கு இரண்டு வேளை உணவு மட்டும் உட்கொள்ள வேண்டும்.


இவ்வாறு பழகப் பழக நீர் உணவுக்கு

ஏற்றாற்போல் உடம்பின் தன்மைகள்

மாறிவிடும். அதன்பிறகு இரண்டு வேளை உணவிலிருந்து ஒருவேளை உணவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு, நீர் உணவு முறையை மேற்கொண்டு வந்தால்,

அவரவர் உடல் எடையைப் பொறுத்து, அதற்கு ஏற்றாற்போல் உடல் எடை குறையும். பின்பு உடல் எடை குறைவது நின்று விடும்.


எவ்வாறென்றால், அவரவர் உடல் எடையில் எவ்வளவு நச்சுப் பொருள்கள் உள்ளனவோ அவை வெளியேறும் போது உடல் எடை குறையும். நச்சுப்பொருள் இன்றி தூய்மையான உடலைப் பெறுகின்றபோது எடை குறைவது நின்றுவிடும். எடை குறைவது நின்றுவிட்டால், உடல் தூய்மையாகிவிட்டது என்று பொருள்.

தொடர்ந்து நீர் அருந்திக் கொண்டு வந்தால், உடல் ஒரே மாதிரியாக இருக்கும். எந்த மாற்றமும் ஏற்படாமல் நிலையாக இருக்கும். உடலிலிருந்து நோய்கள் அனைத்து நீங்கிவிடும். உப்புச்சத்து உடலிலிருந்து நீங்கிவிட்டால், கண்பார்வை மேலோங்கிக் கூர்மையாகும், பற்கள் வளமாகும். வியர்வை தோன்றாது. துர்நாற்றம் வீசாது. குளிக்க வேண்டும். பல் துலக்க வேண்டும். மலம் கழிக்க வேண்டும் என்னும் நிலை ஏற்படாது.


கழிவுகள் உடம்புக்குள் இல்லை யென்றான பின்பு கழிவுகள் வருவது எப்படி? உணவை எத்தனை வேளை உண்கிறோமோ அதற்குத்

தகுந்தவாறே நன்மைகள் கிடைக்கும். உணவு உண்பது குறையக்குறைய நன்மைகள் பெருகும். மூன்று வேளை உணவை உண்பவர் நோயாளியாக இருப்பர். இரண்டு வேளை உண்பவர் வாழ்க்கை இன்பத்தை நுகர்ந்து கொண்டிருப்பர்.


ஒருவேளை உணவை உண்பவர் யோகியாக இருப்பர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சரி, நீங்கள் சொன்னபடி நீர் உணவுமுறையை உண்டு வந்தால்

ஆரோக்கியமான வாழ்க்கை அமையுமா என்று கேட்கிறீர்களா? ஆம். அதற்கு உதாரணமாக சிலரின் வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிட வேண்டும்.


ஜைன மதத்தைச் சார்ந்த ஐகஐமுனி

சுவாமிஜிக்கு அப்போது வயது 65. அவர்

1997ஆம் ஆண்டு மே முதல் நாள் முதல் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வரை 365 நாள்கள் நீர் உணவை மட்டுமே உண்டு வாழ்ந்தார். நீர் உணவையும் இரண்டு, மூன்று வேளை உண்ணாமல், ஒரு வேளை மட்டுமே.

 அருந்தியிருக்கிறார். மருத்துவர்கள் சோதித்துப் பார்த்தபோது, அவருக்கு எந்தக் குறைபாடும் இல்லை என்று கண்டறிந்திருக்கிறார்கள். நீர் உணவு முறையை சுமார் எட்டு ஆண்டுகள்

ஆய்வு செய்தவர் கோவையைச் சார்ந்த

திரு.எஸ்.வெங்கடேசன் என்பவர். இவர் ஒரு பொறியாளர். 93 கிலோ எடை கொண்டவர்.


13.7.94 இல் நீர் இவர் முறையைத்

தொடங்கியிருக்கிறார். 4.4.95ல் இவரின் எடை 62 கிலோவாகக் குறைந்திருக்கிறது. சுமார் 9

மாதங்கள், ஒரு வேளை உணவை மட்டும்

உண்டு, மற்ற வேளைகளில் நீர் அருந்திக் கொண்டு, 25.10.94 முதல் 7.11.94 வரை இமயமலையிலுள்ள கங்கை உற்பத்தியாகும் கோமுகம் சென்று வந்துள்ளார்.


அப்பயணத்தின்போது, 18 கிலோமீட்டர் தூரம், மலையேற்றப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். நீர் உணவுமுறைக்கு ஆதாரமாக மேலும் ஒரு தகவல் கிடைக்கிறது. அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் நீர் உணவு முறையைப் பற்றி அறிவியல் முறைப்படி ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.


கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சார்ந்த மெக்கானிக்கல் என்ஜினியர், ஹுராரத்தன் மேனக் (வயது 64) என்பவர், 441 நாட்கள் உணவு எதுவும் உண்ணாமல் சூரிய ஒளி, காற்று, நீர் ஆகியவற்றை மட்டுமே உண்டு சுறுசுறுப்பாக இருந்ததை ஆய்வுத் திட்டம் பி.ஸி.வி என்று பெயர் சூட்டி ஆய்வு செய்தார்கள். முதற்கட்ட ஆய்வில், "மனிதன் உயிர் வாழ மிக மிகக் குறைந்த அளவு உணவே போதும்" என்று தங்கள் ஆய்வு முடிவை அறிவித்திருக்கிறார்கள்.


தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சித்தர்களும்

முனிவர்களும் மேற்கொண்டு வந்திருந்த "நீர் உணவு" முறை நாகரிக வளர்ச்சியின் காரணத்தினாலும் மேலை கீழை நாடுகளின் பழக்க வழக்கங்களின் படையெடுப்பினாலும் கடைப்பிடிக்கப்படாமல் தடைப்பட்டு

வந்துள்ளது. இதனால், இயற்கையான

வாழ்க்கை முறையிலிருந்து செயற்கையான வாழ்க்கையில் மோகம் கொண்டு நோய்க்கு இடமளித்து அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.


குடலைக் கழுவி உடலை வளர்க்கும் நீர்

உணவு முறையால் இரைப்பைக்கு ஓய்வு

கிடைக்கிறது. பழைய திசுக்கள்(இழையம்) மாறி, புதிய திசுக்கள்(இழையம்) வளர்கின்றன.


உணவுக்குழாய் தூய்மையாகிறது. கல்லீரல் போன்ற செரிமான உறுப்புகள், சிறுநீரகங்கள், வியர்வை நாளங்கள் புத்துணர்வு பெறுகின்றன. நுரையீரலில் தேங்கியிருக்கும் காபன் போன்ற கழிவுகள் வெளியேறுகின்றன.

உடம்பிலுள்ள உள்ளுறுப்புகள் அனைத்தும் தன்னைத் தானே அக சுத்தி செய்து கொள்கின்றன. உடற்பருமன், சர்க்கரை நோய், வயிற்றுப்புண், இரைப்பு, இளைப்பு, நாட்பட்ட தோல் நோய், நரம்பு நோய்கள், பெண்களுக்கு

மாதவிலக்கு தொடர்பான பிரச்னைகளும் நீங்குகின்றன. உடம்பில் நோய் எதிர்ப்பாற்றல் மிகுகிறது. அதனால் ஆட்கொல்லி நோய்களான புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களையும் இல்லாமல் செய்யும் நிலை ஏற்படுகிறது. உடலில் சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் இளமையும் பொலிவும் வந்தடைகிறது.

பட்டினிச்சாவு தடுக்கப்பகின்றது. நீண்ட நாள் வாழ வழி கிடைக்கிறது.


கல்லுக்குள் இருக்கும் தேரை தவளையும் இம்முறையை தான் பின்பற்றி வாழ்கிறது. எனக்கு தெரிந்து இந்த வகை நீர் உணவு நெல்லை மாவட்டம் ஆழ்வார்க்குறிச்சி அருகில்

உள்ள சிவசைலம் நல்வாழ்வு ஆசிரம

நிறுவனர் ஐயா இராமகிருஷ்ணன் அவர்கள் நான் சிறுவயதில் இருக்கும் போது அன்றாட வேலை செய்து கொண்டு பரிச்சித்து பார்த்தார் அதில் வெற்றியும் கண்டார். இப்போது அந்த

அனுபவத்தை பற்றி கேட்க அவர் நம்மிடத்தில் இல்லை.ஐயாவின் மகன் டாக்டர் திரு Goodlifeashram Nalvazhvu அவர்கள் இயற்கை முறையில் தந்தையின் வழியின் இயற்கை

மருத்துவராக இருந்து இயற்க்கை உணவுகளை உண்டு மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக இருந்து வருகிறார்.!

https://m.facebook.com/story.php?story_fbid=3223104027905827&id=1615171208699125

Monday, 16 May 2022

சில விதிமுறைகள்

 👉�உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம்.....


1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலைமூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது.


2. மாலை6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது.

கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.


3. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும்.


முடிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போடவேண்டும்.


4. காயத்ரி மந்திரத்தை 

பிரயாணத்தின்போது, சொல்லுதல்கூடாது

சுத்தமானஇடத்தில்தான் ஜபிக்கவேண்டும்.


5. கற்பூர ஹாரத்தி - சூடம்காண்பித்தல் பற்றி ..

சூடம் காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும்.


தொப்பிளுக்கு இரண்டு தடவை காண்பிக்கவேண்டும்

முகத்துக்கு ஒரு தடவை

கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்க வேண்டும்.


6. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.


7. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.


8. சிவனுக்கு உகந்தது = வில்வம் ஆகும் 

விஷ்ணுவிற்கு உகந்தது = துளசி ஆகும் 

விநாயகருக்கு = அருகம்புல் ஆகும் 

பிரும்மாவிற்கு உகந்தது = அத்தி இல்லை ஆகும் 

இவைகளை மாற்றி மற்றவருக்கு வைத்து வணங்க கூடாது.


9. கலசத்தின் அா்த்தங்கள்

கலசம்(சொம்பு) − சரீரம்

கலசத்தின் மேல் சுற்றியிருக்கும் நூல் − நாடி & நரம்பு

கலசத்தின் உள் இருக்கும் தீா்த்தம் (நீர்) − இரத்தம்

கலசத்தின் மேல் உள்ள தேங்காய் − தலை

கலசத்தின் மேல் உள்ள தேங்காயை சுற்றியிருக்கும் மாவிலை − சுவாசம்

கலசத்தின் அடியில் இருக்கும் அரிசி & இலை − மூலாதாரம்

கூர்ச்சம் − ப்ராணம்(மூச்சு)

உபசாரம் − பஞ்சபூதங்கள்.


10.தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்...

சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை,

தயிர் சாதம், பலகாரம்

வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்

ஆனி – தேன்

ஆடி – வெண்ணெய்

ஆவணி – தயிர்

புரட்டாசி – சர்க்கரை

ஐப்பசி – உணவு, ஆடை

கார்த்திகை – பால், விளக்கு

மார்கழி – பொங்கல்

தை – தயிர்

மாசி – நெய்

பங்குனி – தேங்காய்.


11. திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக 

கிடைக்கும்.


12. அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில் திருநீற்றை குழைத்து புசிகொள்ள கூடாது.


13. பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது (ஆகம முறைக்கு உட்பட்டது )


14. கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது.


15. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

Saturday, 14 May 2022

சிவாச்சாரியாருக்கு உரிய சில அனுஷ்டான மந்திரங்கள்

 சிவாச்சாரியாருக்கு உரிய சில அனுஷ்டான மந்திரங்கள் 


 ஆசன மந்திரம் :

1. ஓம் ஹாம் ஆத்ம தத்வாய ஸ்வதா

2. ஓம் ஹீம் வித்யா தத்வாய ஸ்வதா

3. ஓம் ஹூம் ஸிவ தத்வாய ஸ்வதா


பஞ்சகலா மந்திரம் :

1. ஓம் ஹ்லாம் நிவ்ர்த்தி கலாயை நம:

2. ஓம் ஹ்லீம் ப்ரதிஷ்டா கலாயை நம:

3. ஓம் ஹ்ரூம் வித்யா-கலாயை நம:

4. ஓம் ஹ்யைம் ஸாந்தி கலாயை நம:

5. ஓம் ஹ: ஸாந்த்யாதீத கலாயை நம:


ஸம்ஹிதா மந்திரம் :

1. பஞ்ச ப்ரஹ்ம மந்திரங்களும்

2. ஷடங்க மந்திரங்களும் ஒன்று சேர்ந்தது.


பஞ்ச ப்ரஹ்ம மந்திரம் :

1. ஈசானம்  : ஓம் ஹோம் ஈஸாந மூர்த்தயே நம:

2. தத்புருஷம்: : ஓம் ஹேம் தத்புருஷ வக்த்ராய நம:

3. அகோரம் : ஓம் ஹும் அகோர ஹ்ருதயாய நம:

4. வாமதேவம் : ஓம் ஹிம் வாமதேவ குஹ்யாய நம:

5. ஸத்யோஜாதம்: ஓம்ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம:


ஷடங்க மந்திரங்கள் :

1. ஹ்ருதயம் : ஓம் ஹாம் ஹ்ருதயாய நம:

2. சிரஸ் : ஓம் ஹீம் ஸிரஸே நம:

3. சிகை : ஓம் ஹூம் ஸிகாயை நம:

4. கவசம் : ஓம் ஹைம் கவசாய நம:

5. நேத்ரம் : ஓம் ஹெளம் நேத்ரேப்யோ நம:

6. அஸ்த்ரம் : ஓம் ஹ: அஸ்த்ராய நம:


காயத்ரீ :

1. அஸ்த்ர காயத்ரீ :

ஓம் ஸிவாஸ்த்ராய வித்மஹே காலாநலாய தீமஹி

தந்நோ அஸ்த்ர ப்ரசோதயாத்.

2. சிவ காயத்ரீ :

ஓம் தன் மஹேஸாய வித்மஹே வாக்விஸுத்தாய தீமஹி

தந்ந: ஸிவ: ப்ரசோதயாத்


ஸப்தகோடி மஹாமந்திரம் : 


1. நம:  2. ஸ்வாஹா 3. ஸ்வதா

4. வஷட் 5. வெளஷட் 6. ஹும் 7. பட்


3.9 கர ந்யாஸம் : 


3.9.1 ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்ற சிவ அஸ்திர மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே, சாண முத்திரையால், இடது, வலது கைகளால், மேலும் கிழுமாக இடது வலது கைகளைத் துடைத்துக் கொள்ள வேண்டும். இடது கையை இரு முறையும், வலது கையை ஒரு முறையும் அவ்வாறு செய்ய வேண்டும். கரங்களில் உள்ள அசுத்தங்களை எல்லாம், சிவாஸ்திரத்தால் உண்டான அக்நியால் எரித்ததாக பாவனை செய்துகொள்ள வேண்டும். பின்னர், ஓம் ஹெளம் சக்தயே வெளஷட் என்று கைகளை ப்ரஸன்ன முத்திரையாகக் கூட்டி, நெற்றியில் புருவங்களின் இடை வரை உயர்த்தி, அங்குள்ள சக்தி அம்ருதத்தால் கைகள் நனைந்து புனிதமானதாகப் பாவித்துக் கொள்ள வேண்டும்.


3.9.2 இரு கைகளும் சக்தி சிவ வடிவம் என்றுணர்ந்து, கட்டை விரல் ஒழித்த எட்டு விரல்களும் எட்டிதழத் தாமரைகளாகப் பாவித்து, உள்ளே மடங்கி உள்ள விரல் தாமரையின் விதை உருவாகும் பிந்து (பொகுட்டு) ஸ்தானத்தைத் தொடுவதாகக் கொண்டு, உள்ளங்கைகளில் சுண்டு விரலுக்குக் கீழே, புதன் மேட்டில், கட்டை விரலால் தொட்டு, ஓம் ஹாம் சிவாஸநாய நம: என்று நியஸித்து, சிவனுக்கு மந்திராஸனம் அளிக்க வேண்டும். ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவ மூர்த்தயே நம: என்று நியாஸித்து, சிவாஸனத்தில் சிவமூத்தியை எழுந்தருளச் செய்ய வேண்டும்.


3.9.3 பிறகு ஓம் ஹோம் ஈசான மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்டே, ஆள்காட்டி விரல்கள் நடு விரல்களைத் தொடாமல் விலகி இருந்து, அதன் நுனிகள் கட்டைவிரல் நுனிகளை தொட்டுக் கொண்டிருக்குமாறு (உஷ்ணீக முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் ஹேம் தத் புருஷ வக்த்ராய நம: என்று உச்சரித்துக் கொண்டே, ஆள்காட்டி விரல்கள் நடு விரல்களோடு சேர்ந்து இருக்கையில், அதன் நுனிகள் கட்டைவிரல் நுனிகளைக் தொட்டுக் கொண்டிருக்குமாறு (சின் முத்திரை (அ) சின்மய முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து, ஓம் ஹூம் அகோர ஹ்ருதயாய நம; என்று உச்சரித்துக் கொண்டே, நடு விரல் நுனிகள் கட்டைவிரல் நுனிகளை தொட்டுக் கொண்டிருக்குமாறு (யோக முத்திரை (அ) மோக முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். பிறகு, ஓம் ஹிம் வாம தேவ குஹ்யாய நம: என்று உச்சரித்துக் கொண்டிருக்குமாறு (திவ்ய முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். இறுதியாக, ஓம் ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்ட, சுண்டு விரல் நுனிகள்  கட்டைவிரல் நுனிகளை தொட்டுக் கொண்டிருக்குமாறு (ஆக்ர முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். சிவபெருமானுக்குரிய ஐந்து முகங்களையும் இந்த பஞ்ச ப்ரஹ்ம மந்திரங்களைக் கூறி நியாஸித்ததன் மூலம் தன் கரங்களின் விரல் நுனிகளில் எழுந்தருளியதாகப் பாவித்தல் வேண்டும்.


3.9.4 பிறகு உள்ளங்கைகளிலே, பெரு விரல்களால் தொட்டு (அதிஷ்டான முத்திரை) ஓம் ஹாம் ஹெளம் வித்யா தேஹாய நம: என்று நியாஸித்து, சிவனுக்கு வித்யா தேகம் கற்பிக்க வேண்டும். ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் என்ற மூன்று விரல்களால் உள்ளங் கைகளைத் தொட்டு (கடா முத்திரை), பின் கூப்பி, ஓம் ஹெளம் நேத்ரேப்யோ நம: என்று நியஸித்து, ஐயனின் த்ரிநேத்திரஙகளை த்யானிக்க வேண்டும். ஓம் ஹாம் ஹெளம் சிவாய நம: என்ற மூல மந்திரத்தை உச்சரித்தவாறே,சகல ஹஸ்த வ்யாப்த சக்தியினாலே, கைகளுக்குள்ளே, பெரு விரல்களால் நியஸித்து சிவனை ஆவாஹனம் செய்ய வேண்டும்.


3.9.5 பின்னர், ஓம் ஹாம் ஹ்ருதயாய நம; என்று உச்சரித்து, ஆக்ர முத்திரையால், இதயஸ்தான்தில் ந்யாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் சீரஸே ஸ்வாஹா என்று உச்சரித்து, திவ்ய முத்திரையால், (முன்) தலையில் ந்யாஸம் செய்ய வேண்டும். பிறகு ஓம் சிகாயை வெளஷட் என்று உச்சரித்து, யோக முத்திரையால், (குடுமி) சிகையில் ந்யாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து, ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்று உச்சரித்து, கவச முத்திரையால், உடலில் ந்யாஸம் செய்ய வேண்டும். பின்னர், ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்று உச்சரித்து, அஸ்த்ர முத்திரையால், கைகளில் ந்யாஸம் செய்ய வேண்டும். இந்த ந்யாஸத்தின் மூலமாக, கரங்களில், எழுந்தருளியுள்ள சிவபிரானுக்கு உரிய உரு உண்டானதாகக் கொண்டு த்யானிக்க வேண்டும்.


3.10.7 பின்னர், ஓம் ஹாம் ஹ்ருதயாய நம: என்று உச்சரித்து, ஆக்ர முத்திரையால், இதயஸ்தானத்தில் ந்யாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் சிரஸே ஸ்வாஹா என்று உச்சரித்து, திவ்ய முத்திரையால், (முன்) தலையில் ந்யாஸம் செய்ய வேண்டும். பிறகு, ஓம் சிகாயை வெளஷட் என்று உச்சரித்து, யோக முத்திரையால் (குடுமி) சிகையில் ந்யாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து, ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்று உச்சரித்து, கவச முத்திரையால், கண்டத்திலிருந்து நடு மார்பு வரை உடலில் ந்யாஸம் செய்ய வேண்டும்.


3.10.8 உஷ: முத்திரை எனப்படும் மோதிர விரல்களால் அங்கங்களைத் தொடும் முறையினால், ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்ற அஸ்த்ர மந்திரத்தை உச்சரித்து, இரு கைகளிலும் ந்யாஸம் செய்து சிவபிரானுக்கு அஸ்திரங்கள் அறிவத்ததாகப் பாவிக்க வேண்டும்.


3.10.9 தாளத்ரயம்: கோவிடாண முத்திரை என்று அழைக்கப்பெறும் கட்க முத்திரையால், ஓம் ஹூம் ஹ: அஸ்த்ராய பட் என்ற ஹூம்-படந்த (ஹூம்-ஐ முதலிலும், பட்- ஐ ஈறாகவும் கொண்டுள்ள) அஸ்திர மந்திரத்தை உச்சரித்தவாறே தாளத்ரயம் செய்ய வேண்டும். தாளத்ரயம் என்பது இடது உள்ளங்கையில் வலது கை கட்க முத்திரை விரல்களால் மும்முறை தட்டுதல், சிவசக்தி ப்ரகாசங்களுக்குக் கேடு செய்ய வரும் அசுரர் முதலியோரை விரட்டு பொருட்டுச் செய்வதே தாளத்ரயம்.


3.10.10. திக்பந்தனம் : விரல்களை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரல் மத்தியில் விரல் துடிக்கத் தெறிக்கும் சோடிகா முத்திரையால் ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்ற அஸ்திர மந்திரத்தை உச்சரித்தவாறே சிரஸ்ஸைச் சூழ மேலே எண்மருங்கிலும் திக்பந்தனம் செய்து அக்நி ப்ரகாசம் உண்டாக்கி அக்நி தேவரைக் காவல் வைப்பதாகப் பாவிக்க வேண்டும்.

3.10.11 அவகுண்டனம் : ந்யாஸ முத்திரையால் ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்ற கவச மந்திரத்தை உச்சரித்தவாறே சிரஸ்ஸைச் சூழ கீழ்நோக்கி மேலே அவகுண்டனம் செய்து மூன்று மதில்களும் அகழ்களும் அமைப்பதாகக் கொள்ளவேண்டும்.


3.10.12 பரமீகரணம் : நிறைவாக, ஓம ஹாம் ஹெளம் சிவாய வெளஷட் என்று உச்சரித்தவாறே கைவிரல்கள் சாதாரணமாக நீண்டிருப்பதான மஹா முத்திரையால் பாதம் முதல் சிகை வரை தடவ வேண்டும். பாதம் முதல் கேசம் வரை துடைக்கும் இந்த கிரியைக்கு பரமீகரணம் என்று பெயர்.

3.10.13 இந்த ந்யாஸத்தின் மூலமாக, சிவபெருமானை மந்திராஸனத்தில் எழுந்தருளச் செய்து, அவயவங்களைப் பாவித்து, ப்ரகாசமும், அக்நி கோஷ்டமும், அகழும் உண்டானதாகப் பாவித்து, பரமாமிர்தாபிஷேகம் செய்து, பின் தான் அவருடன் இரண்டறக் கலந்ததாக (ஏக பாவம் ஆனதாக) பாவித்தல் வேண்டும்.


3.9.6 பின்னர், அவகுண்டனம் செய்ய வேண்டும். அவகுண்டனம் செய்வது, சிவ-சக்தி எழுந்தருளியுள்ள தலத்தைச் சுற்றி மூன்று மதில்களும், மூன்று அகழிகளும் உண்டாவதாக எண்ணி அவகுண்டன முத்திரையால் ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்ற கவச மந்திரத்தை உச்சரித்தவாறே அந்த ஸ்தானத்தைச் சூழ வளைத்து மும் முறை சுற்றுவதாகும்.

3.9.7 நிறைவாக, ஓம் ஹாம் ஹெளம் சிவாய வெளஷட் என்று உச்சரித்தவாறே பரமீகரணம் செய்தல் வேண்டும். பரமீகரணம் என்பது, கைகளைக் கூப்பி வந்தனி என்றும் பெயருள்ள நமஸ்கார முத்திரை செய்து, கரங்களைத் தலைக்கு மேல் உயர்த்தி வணங்கி, பின் இதயத்திற்கு எதிரே கொண்டு வந்து முடிப்பது.

3.9.8 இதுவே சிவாச்சாரியார்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கரநியாஸம் செய்யும் முறையாகும்.


3.10 அங்க ந்யாஸம் :

3.10.1 கர ந்யாஸம் செய்து கொண்ட பின்னரே அங்க ந்யாஸம் செய்ய வேண்டும்.

3.10.2. ஓம் ஹ: அஸ்த்ராய ஹூம்பட் என்ற சிவ அஸ்திர மந்திரத்தை உச்சரித்துக் கொண்ட, சாண முத்திரை கொண்ட கைகளால், பாதம் முதல் சிரஸ்வரை துடைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அசுத்தங்களை எல்லாம், சிவாஸ்திரத்தால் உண்டான அக்நியால் எரித்ததாக பாவனை செய்துகொள்ள வேண்டும். பின்னர், ஓம் ஹெளம் சக்தயே வெளஷட் என்று கைகளை ப்ரஸன்ன முத்திரையாக கூட்டி, நெற்றியில் புருவங்களின் இடை வரை உயர்த்தி, அங்குள்ள சக்தி அம்ருதத்தால் உடல் முழுதும் நனைந்து புனிதமானதாகப் பாவித்துக் கொள்ள வேண்டும்.

3.10.3 திவ்ய முத்திரையால் இதயத்தைத் தொட்டு, ஓம் ஹாம் சிவாஸநாய நம: என்று நியஸித்து, சிவனுக்கு மந்திராஸனம் அளிக்க வேண்டும். மீண்டும் திவ்ய முத்திரையால் இதயத்தைத் தொட்டு, ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவ மூர்த்தயே நம: என்று நியாஸித்து, சிவாஸனத்தில் சிவமூர்த்தியை எழுந்தருளச் செய்ய வேண்டும்.


3.10.4 பிறகு, ஓம் ஹோம் ஈசான மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்டே, உஷ்ணீக முத்திரையால் தலை உச்சியில் நியாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் ஹேம் தத் புருஷ வக்த்ராய நம: என்று உச்சரித்துக் கொண்டே சின் முத்திரையால் நெற்றியில் நியாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து ஓம் ஹூம் அகோர ஹ்ருதயாய நம: என்று உச்சரித்துக் கொண்டே, யோக முத்திரையால் மார்பில் நியாஸம் செய்ய வேண்டும். பிறகு, ஓம் ஹிம் வாம தேவ குஹ்யாய நம: என்று உச்சரித்துக் கொண்டே, திவ்ய முத்திரையால் நாபியில் நியாஸம் செய்ய வேண்டும். இறுதியாக, ஓம் ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்டே, ஆக்ர முத்திரையால் வலது-இடது முழங்கால்களில் நியாஸம் செய்ய வேண்டும். சிவபெருமானுக்குரிய ஐந்து முகங்களையும் இம்மந்திரங்களைக் கூறி நியாஸித்ததன் மூலம் தன் அங்கங்களில் எழுந்தருளியதாகப் பாவித்தல் வேண்டும்.


3.10.5 பிறகு திவ்ய முத்திரையால் ஓம் ஹாம் ஹெளம் வித்யா தேஹாய நம: என்று மார்பில் நியாஸித்து, சிவனுக்கு வித்யா தேஹம் கற்பிக்க வேண்டும். ஆக்ர கண்ட முத்திரை என்று கூறப்படும் நேத்ர முத்திரையால் ஓம் ஹெளம் நேத்ரேப்யோ நம: என்று கண்களில் நியஸித்து, ஐயனின் த்ரிநேத்திரங்களை த்யானிக்க வேண்டும்.

3.10.6. பிறகு, ஓம் ஹாம் ஹெளம் சிவாய நம: என்ற மூல மந்திரத்தை உச்சரித்தவாறே, ஹ்ருதயஸ்தானத்திலே நியாஸித்து சிவனை ஆவாஹனம் செய்ய வேண்டும்.


3.10.14. இதுவே சிவாச்சாரியார்க்கு விதிக்கப்பட்டுள்ள அங்க ந்யாஸம் செய்யும் முறையாகும்

3.11. ஆத்மபூஜா த்யாநம்: நாதம் லிங்கம் என்றும், அதுவே ஸ்ரேஷ்டமான சிவம் என்றும், பிந்து பீடம் என்றும், அதுவே சக்தியாகிய ஆதார ஆஸநம் (அல்லது ஆவுடையார்) என்றும், ஆதேயமாகிய சிவம் பாணமென்றும் சொல்லப்படுகின்றது. சிவம் அன்னியில் சக்தி இல்லை; சக்தி அன்னியில் சிவம் இல்லை; இவை, புஷ்பத்தில் வாஸனை போலும், எள்ளில் என்னை போலும் அபேதமாக இருப்பதாக அறியவும். எனவே, (மாநஸீகமாக) ஸிம்ஹாஸநம் செய்து, அதிலே சிவாஸநம் செய்து, சாஸ்ரோக்தமான க்ரியைகளினாலே தேவதேவேச்வரனை சிவாச்சாரியார் பூஜை பண்ணவேண்டியது.

3.12 சகளீகரணம்: கர ந்யாஸமும், அங்க ந்யாஸமும், சேர்ந்து செய்வதற்கு சகளீகரணம் என்று பெயர்.


3.13. விசேஷ அர்க்யம்: 


3.13.1 சகளீகரணம் செய்த பிறகு, த்ரவ்ய சுத்தி செய்வதற்கும், மற்றபடி விதித்துள்ள விசேஷ நிகழச்சிகளுக்கும் சிவாச்சாரியார் (பஞ்ச பாத்திரத்தில்) புனித நீர் தயாரித்துக் கொள்வதே விசேஷார்க்யம்.

3.13.2 பொன், தாமிரம், வெள்ளி, பஞ்சலோகம், வெண்கலம், பித்தளை (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், இரும்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்) இவற்றுள் ஏதாவதொன்றால் செய்யப்பட்டுள்ள பஞ்சபாத்ரம்-உத்தரிணி அல்லது கெண்டி-கமண்டலம் போன்ற பாத்திரத்தைச் சுத்தப்படுத்தி எடுத்து வைத்துக் கொண்டு, அஸ்த்ர மந்திரத்தைக் கூறி அவற்றை மந்த்ர பூர்வகமாக மீண்டும் அலம்ப வேண்டும்.


3.13.3 நீரீக்ஷணம்: நிரீக்ஷணம் என்றால் பார்த்தல் என்று பொருள்படும். ஓம் ஹாம் சிவாய நம: என்று மூல மந்திரம் உச்சரித்து, நீரீக்ஷண முத்திரையால், பாத்திரத்தில் நிரப்பப்படும் சுத்தமான நீரைப் பார்க்க வேண்டும். அப்போது, அந்த நீரிலுள்ள குற்றங்களை ஸூர்யனாகிய வலக்கண்ணால் காய வைத்து, அக்நியாகிய நெற்றிக் கண்ணால் தகித்தெறிந்து விட்டு, சந்திரனாகிய இடது கண்ணில் ஊறும் அமுதத்தை அதனோடு கலப்பதாகப் பாவிப்பதே நிரீக்ஷணம் செய்தல் எனப்படும்.


3.13.4 ப்ரோக்ஷணம் : பிந்து ஸ்தானமாகிற புருவ மத்தியிலிருந்து பெறுகின்ற அம்ருத தாரா மயமாக சுத்த ஜலத்தை பாவித்துக் கொண்டு, ஹ்ருதய மந்திரத்தைக் கூறி, அதன்மூலமாக அந்த அம்ருத தாரா பாத்திரத்தினுள் சென்று நிரம்புவதாகப் பாவிக்கும் கிரியைக்கு ப்ரோக்ஷணம் என்று பெயர் கூறுவர்.


3.13.5 பிறகு, அந்த நீரிலே சந்தனம், புஷ்பம், அருகு, அக்ஷதை, ஆகியவற்றை இட்டு அலங்கரிக்க வேண்டும், தொடர்ந்து, ஆசமன, பஞ்ச ப்ரஹ்ம, வித்யாதேஹ, நேத்ர, மூல, ஹ்ருதய மந்திரங்களால் பூஜை செய் வேண்டும். ஸம்ஹிதா மந்திரத்தால் (பஞ்ச ப்ரஹ்ம + ஷடங்க மந்திரங்கள்) அபிமந்திரிக்க வேண்டும்.


3.13.6 தாடனம்: அஸ்திர மந்திரத்தால் அர்க்ய நீரை ரக்ஷõ பந்தனம் செய்வதற்குத் தாடனம் என்று பெயர். தூயதான நீரில் வியாபித்திருக்கும் சிவசக்தியரின் அருளை ப்ரகாசிக்கச் செய்யும் பொருட்டு, அஸ்த்ர மந்திரம் கூறி ஒரு முறை தட்டுதலே தாடனம்.

3.13.7 அப்யுக்ஷணம் : கவிழ்ந்த பதாகை முத்திரையால் அந்த நீரை சூடி, கவச மந்திரத்தை உச்சரித்து, அதிலுள்ள ப்ரகாசம் நீங்காது இருக்குமாறு செய்வதாக பாவித்தலே அப்யுதக்ஷணம்.


3.13.8 அடுத்து, அர்க்ய நீரில் நிரம்பியுள்ள சிவ-சக்தி ப்ரகாசத்திற்கு ஊறு செய்ய வரும் துர்தேவதைகளை விரட்ட தாளத்ரயம் சாய்ய வேண்டும்.

3.13.9 தொடர்ந்து, கவச மந்திரத்தால் திக்பந்தனுமும், கவச மந்திரத்தால் அவகுண்டனமும் செய்தல் வேண்டும்.


3.13.10 நிறைவாக, வெளஷடந்த மூல மந்திரத்தால் (ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவமூர்த்தாய வெளஷட்) தேனு முத்திரை கொடுத்து, சிறப்பாக அர்க்ய பாத்தி நீரைப் புனிதமாக்கிக் கொள்ளல் வேண்டும்.


3.13.11. மேற்சொன்ன கிரியையே விசேஷார்க்யம். இந்நிகழ்ச்சியின் மூலம் அர்க்ய நீரில் சிவசக்தி ப்ரகாசம் நிறைகின்றது.


3.14 சாமான்யார்க்யம் : சகளீகரணம் செய்த பிறகு, இரும்பு சம்பந்தப்படாத பாத்திரத்தில் வெளஷடந்த ஹ்ருதய மந்திரத்தை உச்சரித்தவாறு சுத்த ஜலத்தை நிரப்பி, அதில் ஏழு தடவை ப்ரணவ மந்திரத்தால் அபிமந்திரித்து, திக்பந்தனம், அவகுண்டனம் செய்ய வேண்டும். பிறகு,தேனு முத்திரை

கொடுத்து செய்து கொள்ளும் தீர்த்தத்திற்கு சாமான்யார்க்யம் என்று பெயர்


3.15 ஐவகை சுத்தி: பூஜை செய்யும் ஆச்சாரியார், பூஜை செய்யும் பொருட்டு, தூய்மை செய்து கொள்ளும் கிரியைகளுக்கு பஞ்ச சுத்தி என்று பெயர். அவையாவன (1) ஆத்ம சுத்தி (2) ஸ்தான சுத்தி (3) த்ரவ்ய சுத்தி (4) மந்த்ர சுத்தி (5) லிங்க சுத்தி.


3.16 ஆத்ம சுத்தி: சிவாச்சாரியார், தனக்குள் இறைவனை எழுந்தருளச் செய்வதே ஆத்ம சுத்தி. அதற்காக அவர் செய்யும் அனைத்துக் கிரியைகளும், அவரது உள்ளத்தளவிலே செய்யப்படுகின்றன; அதாவது, பாவனையாக செய்யப்படுகின்றன. அச்செயல்களாவன: 1. சரீரத்தில் உள்ள மலம், மாயை, கர்மா சம்பந்தமான புற அழுக்குகளை நீக்குதல் 2. பஞ்ச பூத தன்மாத்திரைகளால் ஏற்படும் அக அழுக்குகளாம் சப்தாதி குணங்களை நிக்குதல் 3. வலக்கால் பெரு விரலிலிருந்து உண்டாகும் காலாக்னியால் கர்ம சரீரத்தைப் பொசுக்குதல் 4. ப்ரம்மாந்திரத்தில் உள்ள அமிர்தத்தால் உள்ளும் புறமும் நனைத்துக் கொள்ளுதல் 5. நித்யத்வ, வியாபகத்வ, சுத்த தத்வ, யுக்த, பரமாகாஸாபிபூத்த, சுத்த சைதன்ய திவ்ய சரீரமாகத் தன் உடலை பாவித்துக் கொள்ளுதல் 6. ஹ்ருதய கமலத்தில் ஈச்வரனை மனோபாவனையால் பூஜித்தல் 7. நாபியில் உள்ள அக்னியில் ஹோமம் செய்து, ஹ்ருதய கமலத்தில் உள்ள இறைவனிடத்தில் சமர்ப்பணம் செய்து, உள்பூஜையை நிறைவு செய்வதாகப் பாவித்தல் 8. பிந்து ஸ்தானத்தில் ஈச்வரனை த்யானம் செய்து, புற பூஜையின் பொருட்டு ப்ரார்த்தனை செய்து, அதனைத் தொடங்க உத்தரவு கேட்டுப் பெற்றுக் கொள்ளுதல்.


3.17 ஸ்தான சுத்தி: சிவாச்சாரியார், பூஜை நடைபெறுகிற இடத்தில் விக்னங்கள் அணுகாமல் காப்பதாக பாவித்துச் செய்யும் கிரியைகளே ஸ்தான சுத்தி எனப்படும். அதற்காக அவர் செய்யும் கிரியைகளும், பாவனைகளும்: 1. அஸ்த்ர மந்திரத்தால் மூன்று தடவை தாளம் செய்து, சிட்டிகை போட்டு, ஸ்தலத்திலுள்ள தடைகளைப் போக்குதல் 2. அஸ்த்ர மந்த்ரத்தால் நான்கு மூலைகளிலும் அக்னி ப்ரகாசம் செய்தல் 3. கவச மந்த்ரத்தால் வலது ஆள் காட்டி விரலை மும்முறை சுழற்றி, மூன்று கோட்டைச் சுவர்களும், மூன்று அகழிகளும் உண்டாக்குதல் 4. வெளஷடந்த சக்தி மந்த்ரத்தைச் சொல்லி, தேனு முத்திரையை மேலும் கீழும் காண்பித்தி ரக்ஷõ பந்தனம் செய்தல்.


3.18 த்ரவ்ய சுத்தி: சிவாச்சாரியார், விசேஷ அர்க்யத்தால் புனித நீர் தயாரித்துக் கொண்டு, பிறகு அந்த நீரினால், தன்னையும், சுற்றி உள்ள மற்ற பூஜைக்கான  உதவியாளர்களையும், பூஜை செய்வதற்காக எடுத்துவைத்துள்ள சாதனங்கள், பொருட்கள் ஆகியவற்றையும் தூய்மை செய்வதாக பாவித்துச் செய்யும் கிரியைகளே த்ரவ்ய சுத்தி எனப்படும். அதற்காக அவர் செய்யும் கிரியைகளும், பாவனைகளும் 1. விசேஷ அர்க்யம் தயாரித்தல் 2. அஸ்திர மந்திரம் சொல்லித் தன் தலை மீது ப்ரோக்ஷணம் செய்து கொள்ளுதல் 3. பூஜா திரவியங்களை (அ) அஸ்திர மந்திரம் கூறி ப்ரோக்ஷணம் செய்தல் (ஆ) கவச மந்திரம் கூறி துடைத்து சுத்தம் செய்தல் (இ) ஹ்ருதய மந்திரம் சொல்லி அபிமந்திரித்தல் (ஈ) கவச மந்திரம் கூறி அவகுண்டனம் செய்தல் (உ தேனு முத்திரை கொடுத்து அனைத்தையும் அம்ருத மயாக்குதல் 4. அபிஷேகத்திற்கென வைத்திருக்கும் ஜலத்தின் மீது விசேஷார்க்ய ஜலத்திலிருந்து கொஞ்சம் புஷ்பத்தினால் எடுத்து விட்ட பிறகு, தேனு முத்திரை கொடுத்து அம்ருத மயமாக்குதல்.


3.19 மந்திர சுத்தி: சிவாச்சாரியார், தன்னுள் இறைவனை நிலைநிறுத்தித் தன்னை மந்திரங்கள் கூறுவதற்குத் தகுதி உடையவராகச் செய்து கொள்வதற்கு மேற்கொள்ளும் கிரியைகளே மந்திர சுத்தி எனப்படும். இது திரவிய சுத்தி செய்த பிறகே செய்யப்படும். முதலில் ஓம் ஹாம் சிவாஸநாய நம: என்று ஆஸனம் கற்பித்து, தன்னுடைய ஹ்ருதயத்தில் ஓம் ஹாம் சிவ மூர்த்தயே நச: என்று பூஜை செய்ய வேண்டும், பின்னர், நெற்றியில் புருவ மத்தியில் சந்தனத்தால் திலகம் இட்டு, மூல மந்திரத்தால் சிரஸிலே புஷ்பத்தால் பூஜித்து ஆத்ம பூஜை செய்ய வேண்டும். அடுத்து சம்ஹிதா மந்திரத்தையும், மூல மந்திரத்தையும் (ப்ரணவத்தை முதலிலும், நம: என்ற பதத்தைக் கடைசியிலும் உடைத்தானதாக) பஞ்ச ப்ரஹ்ம மந்திரங்களை ஹ்ரஸ்வமாகவும், ஷடங்க மந்திரங்களை தீர்க்கமாகவும், மூல மந்திரங்களை ப்லுதமாகவும் உச்சரிக்க வேண்டும். இதுவே மந்திர சுத்தி.


3.20 லிங்க சுத்தி : முதல் நாள் (அல்லது, முந்திய காலத்தில்) செய்த பூஜா திரவியங்களை லிங்கத்தில் மேலிருந்து களைந்து, பின்னர் அபிஷேகம் செய்து, நிறைவாக துடைத்தெடுத்து அலங்காரத்துக்கு ஆயத்தமாக்குவதே லிங்க சுத்தி எனப்படும். இது செய்ய வேண்டிய முறை : முதலில் சிவ காயத்ரியால் அர்ச்சனை : பூஜத்துடன் கூடிய ஹ்ருதய ஸ்வாஹந்தமான மூல மந்திரத்தால், ஸத்யோஜாதம் முதல் ஈசானம் வரையான ஐந்து சிரஸ்ஸிலும் சாமான்யார்க்யத்தைக் கொண்டு அர்க்யம்; தூப, தீபங்கள் காட்டுதல்; லிங்கத்தின் மேல் கையை வைத்து ஸத்யோஜாதாதி பஞ் பரஹ்ம மந்திரங்களை உச்சரித்தல்; அஸ்திர மந்திரங்களைக் கூறி நிர்மால்யங்களைக் களைந்து, ஈசான பாகத்தில் தயாராக வைத்துள்ள சுத்தமான பாத்திரத்தில், சண்டிகேச்வரரிடம் சமர்ப்பிப்பதற்காக, ஹ்ருதய மந்திரங்களைக் கூறியவாறே அந்நிர்மால்யங்களை வைத்தல்; அஸ்திர மந்திரத்தைச் சொல்லி லிங்கத்தையும் பீடத்தையும் அலம்புதல்; அஸ்திர மந்திரங்களைக் கூறி சாமான்யர்க்யத்தால் அபிஷேகம்; மூல மந்திரத்தால் ஐந்து தடவையும், சம்ஹிதா மந்திரம் - வ்யோம வ்யாபி மந்திரம் எண்பத்து ஒன்றினையும் சொல்லி அபிஷேக திரவியங்கள், பஞ்சாமிதாதி திரவியங்களால் அபிஷேகம்: குளிர்ந்த சுத்த நீரினால் ஸஹஸ்ர தாரா வழி அபிஷேகம்; ஹ்ருதய மந்திரம் கூறி அர்க்ய ஜலம், ஸ்நபன ஜலம் ஆகியவற்றால் அபிஷேகம்; நிறைவாக வெண்மையானதும், மெல்லியதானதும் சுத்தமானதுமான வஸ்த்ரத்தால் துடைத்து விடுதல். இதுவே லிங்க சுத்தி. இதன் பிறகே அலங்காரம்


3.21 கலாகர்ஷணம் : பாத்யாதி உபசாரங்களுக்குப் பிறகு, பஞ்ச ப்ரஹ்ம மந்த்ரங்கள், ஷடங்க மந்த்ரங்கள், வ்யோமவ்யாபி மந்த்ரங்கள் ஆகியவற்றை ஜபம் சொய்தவாறே, கிரீம் முதலாக வரிசையாக அஷ்ட த்ரிசத் கலா நியாஸம் செய்ய வேண்டும்; அதாவது, முப்பத்தெட்டு இடங்களில் முப்பத்தெட்டு கலைகளை வைக்க வேண்டும்.

3.22 அபிஷேகத்துக்குப் பிறகு, லிங்கம் ஆவுடையார் இவைகளை மெல்லிய, வெண்மையான, சுத்தமான வஸ்த்ரத்தினால் நன்றாகத் துடைத்து, சிவனுடைய சிரஸ்ஸிலே ஹ்ருதய மந்த்ரத்தைக் கூறி புஷ்பத்தை வைக்க வேண்டும்.


3.23 சிவோகம்பாவனை செய்யும் சிவாச்சாரியார் தன் வலக்கையில் சந்தனம் பூசிக்கொண்டு அதைச் சிவஹஸ்தமாகப் பாவிப்பர்; பின்னர் தன்னையே சிவமாகப் பாவனை செய்து கொள்வார்; தாம் புறத்தே பூஜிக்க இருக்கும் மந்திரங்களைக் கூறி, அந்தக் கையினால் தன் அகத்தையும் பூஜிப்பார்; இவ்வாறாக, காண்பானும் சிவம், காட்சியும் சிவம், காட்சிப் பொருளும் சிவம் என்ற முறையில் மூன்றும் ஒன்றித்த நிலையில் திரிகரண சுத்தியுடன், நிற்பதே சிவோகம்பாவனை.


3.24 நெற்றியில் குட்டு: விநாயகருக்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார் இரண்டு கைகளினாலும் விரல்களை மூடிக்கொண்டு , முஷ்டி முத்திரையைச் செய்துகொள்ள வேண்டும். இரண்டு கைகளிலும் நடுவிலுள்ள மூன்று விரல்களின் நடுப்பாகங்களால் நெற்றியின் இரண்டு பாகத்தையும் நன்றாகக் குட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதனால், கபோலத்தில் உள்ள அம்ருதமானது, சமஸ்தான சரீரத்தையும் நன்றாக நனைத்து ஸ்நானம் செய்விக்கின்றது. இந்த அம்ருத ஸ்நானத்தால் ஆணவம், கர்வம், மலம், மாயைகள் நீங்கி ஞானம் பிறக்க வழி கிடைக்கின்றது. இந்த அம்ருத ஸ்நானத்தை விநாயகர் முன்பு செய்தல் சிறப்பு


3.25 பூஜை செய்யும் திசை : கிழக்கு அல்லது மேற்கு முகமாக ப்ரதிஷ்டை ஆகியுள்ள சுவாமியை, சிவாச்சாரியார் வடக்கு முகமாக நின்று பூஜிக்க வேண்டும். தெற்கு அல்லது வடக்கு முகமாக உள்ள ஸ்வாமியை கிழக்கு முகமாக நின்று பூஜை செய்ய வேண்டும்


3.26 கட்டை விரலால் மட்டும் எடுத்து விபூதி அளித்தால் வியாதி உண்டாகும்; சுட்டு விரலால் விபூதி அளித்தால் மரணம் உண்டாகும்; நடு விரலால் விபூதி அளித்தால் புத்ர சோகம் உண்டாகும்; கனிஷ்டிகையால் (சுண்டு விரலால்) விபூதி அளித்தால் தோஷம் உண்டாகும்; ஆதலால் பெருவிரலும் மோதிரவிரலும் சேர்த்து விபூதி அளிக்க வேண்டும்.

3.27 அனைத்துக் கிரியைகளின்போதும், விதிக்கப்பட்ட மந்த்ரங்களையும் ச்லோகங்களையும் கூறுவதுடன், அந்தந்த இடத்துக்குரிய முத்திரைகளையும் தவறாது காட்ட வேண்டும். முத்திரைகள் கிரியைகளின் அங்கம்; 


சிவாச்சாரியார்


 


.1 ஆலயக் கிரியை வகைகள்: சிவாலயங்களில் நடைபெறும் கிரியைகள் மூவகைப் படுத்தப் பட்டுள்ளன: 1. நித்தியக் கிரியைகள் 2. நைமித்திகக் கிரியைகள் 3. காமியக் கிரியைகள். தினந்தோறும் (குறைந்தது ஒரு காலம், அதிகபக்ஷம் 12 காலம்) நிகழும் பூஜைகள் நித்தியக் கிரியைகள்.  ஏதாவது காரணங் கொண்டு நிகழ்வன நைமித்திகக் கிரியைகள் (நிமித்தம் என்றால் காரணம்). இவை நித்தியக் கிரியைகளை அன்னியில், செய்யப்பெறும் விசேஷக் கிரியைகள், அதாவது, சதுர்த்தி, ஷஷ்டி, சிவராத்திரி, ப்ரதோஷம், பௌர்ணமி, நடராஜர் அபிஷேகம், ஆவணி மூலம், பெரிய கார்த்திகை, மாசி மகம், ஆருத்ரா, விஷு, ஆடிப்பூரம், அன்னாபிஷேகம், ப்ரஹ்மோத்ஸவம், மகாமகம், அர்த்தோதயம், மஹோதயம், கும்பாபிஷேகம் போன்ற நாட்களில், அல்லது காலங்களில், அல்லது முஹூர்த்தங்களில் விசேஷமாகத் திட்டமிடப்பட்டுச் செய்யப்பெறும் நிகழ்ச்சிகள். ஒரு குறிப்பிட்ட பேறு பெற விழைந்து, ஒருவராலோ அல்லது பலர் ஒரு குழுவாகச் சேர்ந்தோ,


செய்யப்படும் கிரியைகள் காமியக் கிரியைகள். (காமிகாகமம்). திருக்கோவில் பூஜைகள் பெரும்பாலும் பொது ஜனங்கள் அனைவரது நன்மையயும் வேண்டிப் பொதுவாகச் செய்யப்படும் நிஷ்காம்யக் கிரியைகளே. ஒரு அன்பரோ அல்லது குழுவோ தமக்கென்று ஒரு பேற்றினை வேண்டி பூஜைகள் நிகழ்வித்தாலும், அவை திருக்கோவிலில் நிகழ்ந்தால், மஹா ஸங்கல்பமாக, பூஜையின் ஆரம்பத்தில் அனைவருக்கும் பொதுவாக அனைத்து நன்மைகளையும் வேண்டி, நிஷ்காம்யக் கிரியையாக வழிபாடுகளை நிகழத்துதலே முறை.


3.2 சிவபூஜை வகைகள்: சிவபூஜை ஆத்மார்த்தம், பரார்த்தம் என இரு வகைப்படும். இவ்விரு பூஜைகளுள்,சிவதீøக்ஷ பெற்ற யாவரும் ஆத்மார்த்த பூஜை செய்யலாம், பரார்த்த பூஜைகளே திருக்கோவிலில் நிகழ்வன. சிவதீøக்ஷ பெற்ற ஆதிசைவர்கள் (சிவாச்சாரியார், குருக்கள்), குருமுகமாகப் பயிற்சி பெற்று, ஆசார்யராக இருக்கத் தகுதி பெற்றபின்னரே பரார்த்த பூஜை செய்ய உரிமை பெறுவர்.

3.3. சிவாச்சாரியார்: சிவாலயங்களில் பூஜை செய்யும் அருகதை உள்ள சிவாச்சாரியார்கள் பதினாறு வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், எழுபது வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்று காமிகாமம் கூறிகின்றது.

3.4 சிவாச்சாரியாருக்கு விதிக்கப்பட்ட கிரியைகள்: சிவாச்சாரியார் (அல்லது சிவ தீøக்ஷ செய்து கொண்ட எவரும்) தினமும் செய்ய வேண்டி விதிக்கப்பட்டுள்ள ஸ்நானம், பூஜை, ஜபம், த்யானம், ஹோமம் போன்றவற்றிற்கும், சிவாச்சாரியாருக்கு உருடய நித்தியக் கிரியைகள் என்றே பெயர். தீøக்ஷ செய்துகொள்ளுதல் ப்ரதிஷ்டை செய்தல் போன்றவை அவருக்கான நைமித்திகக் கிரியைகள் எனப்படும்

3.5 சிவ த்யானம்: நம்முடைய ஹ்ருதய கமலத்திலாவது, துவாதசாந்தத்திலேயாவது சிவனை நிறுத்தி தியானம் செய்ய வேண்டும். நிஷ்களமான சிவனை, குரு உபதேசித்தபடி த்யானம் செய்து மூல மந்திரத்தால் (ஓம் ஹாம் சிவாய நம: அல்லது ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவாய நம:) ஜபம் செய்யவேண்டும். அப்படி நிஷ்களமான சிவனை த்யானம் செய்யும் சாமர்த்தியம் இல்லாதவர் சிவபெருமானுடைய விக்ரஹங்களில் தனக்குப் பிடித்தமான ஒருவரை மனதில் நிலைக்கச் செய்து, த்யானம், ஜபம் செய்தல் வேண்டும்


Source https://m.facebook.com/story.php?story_fbid=3216405928575637&id=1615171208699125

3.6 சைவக் கிரியைகளின் அங்கங்கள்: பாவனை, கிரியை, மந்திரம் என்னும் மூன்றும் சேர்ந்து பரிமளிப்பனவே சைவக் கிரியைகள். பாவனை என்றால் எண்ணுவது என்று பொருள். கிரியைகள் என்பதை முத்திரைகளுடன் செய்யப்படும் செய்கைகள். மந்திரங்கள் என்பவை முத்திரைகளுடன் செய்யப்படும் செய்கைகள். மந்திரங்கள் என்பதை எண்ணங்களுக்கு ஏற்ற கிரியைகளின் பயன்களைத் தர வல்ல சொற்றொடர்கள்.


Source