Sunday, 31 October 2021

கெடுவதற்கு இவ்வளவு விடயங்களா?* *தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்

 *கெடுவதற்கு இவ்வளவு விடயங்களா?*

*தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்*

*தெரிந்து கொள்வோம்*


01) பார்க்காத பயிரும் கெடும்.

02) பாசத்தினால் பிள்ளை கெடும்,.

03) கேளாத கடனும் கெடும்.

04) கேட்கும்போது உறவு கெடும்.

05) தேடாத செல்வம் கெடும்,.

06) தெகிட்டினால் விருந்து கெடும்.

07) ஓதாத கல்வி கெடும்.

08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.

09) சேராத உறவும் கெடும்.

10) சிற்றின்பன் பெயரும் கெடும்,.

11) நாடாத நட்பும் கெடும்.

12) நயமில்லா சொல்லும் கெடும்.

13) கண்டிக்காத பிள்ளை கெடும்.

14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.

15) பிரிவால் இன்பம் கெடும்,.

16) பணத்தால் அமைதி கெடும்.

17) சினமிகுந்தால் அறமும் கெடும்.

18) சிந்திக்காத செயலும் கெடும்.

19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.

20) சுயமில்லா வேலை கெடும்,.

21) மோகித்தால் முறைமை கெடும்.

22) முறையற்ற உறவும் கெடும்.

23) அச்சத்தால் வீரம் கெடும்.

24) அறியாமையால் முடிவு கெடும்.

25) உழுவாத நிலமும் கெடும்,.

26)உழைக்காத உடலும்  கெடும்,.

27) இறைக்காத கிணறும் கெடும்.

28) இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்.

29) இல்லாலில்லா வம்சம் கெடும்.

30) இரக்கமில்லா மனிதம் கெடும்,.

31) தோகையினால் துறவு கெடும்.

32) துணையில்லா வாழ்வு கெடும்.

33) ஓய்வில்லா முதுமை கெடும்.

34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.

35) அளவில்லா ஆசை கெடும்,.

36) அச்சப்படும் கோழை கெடும்.

37) இலக்கில்லா பயணம் கெடும்.

38) இச்சையினால் உள்ளம் கெடும்.

39) உண்மையில்லா காதல் கெடும்.

40) உணர்வில்லாத இனமும் கெடும்,.

41) செல்வம் போனால் சிறப்பு கெடும்.

42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.

43) தூண்டாத திரியும் கெடும்.

44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.

45) காய்க்காத மரமும் கெடும்,.

46) காடழிந்தால் மழையும் கெடும்.

47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.

48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.

49) வசிக்காத வீடும் கெடும்.

50) வறுமை வந்தால் எல்லாம் கெடும்,.

51) குளிக்காத மேனி கெடும்.

52) குளிர்ந்து போனால் உணவு கெடும்.

53) பொய்யான அழகும் கெடும்.

54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.

55) துடிப்பில்லா இளமை கெடும்,.

56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.

57) தூங்காத இரவு கெடும்.

58) தூங்கினால் பகலும் கெடும்.

59) கவனமில்லா செயலும் கெடும்.

60) கருத்தில்லா எழுத்தும் கெடும்,.


இந்த 60  ஐயும் அறிந்து கொண்டால்?

நமது வாழ்க்கை கெடவே கெடாது,..


இந்த நாள் இனிதாகட்டும்...!!!

Saturday, 30 October 2021

அஷ்ட காளிகளின்_வரலாறு

 அஷ்ட காளிகளின்_வரலாறு


முதலில் அட்டகாளிகளின் பெயர்களை தெரிந்து கொள்வோம்.


1.மாரிமுத்தாரம்மன் என்ற (முத்தாரம்மன்,

வேம்புலியம்மன்)

2.உஜ்ஜைனி மாகாளி என்ற

(மாகாளி)

3.முப்பிடாதி

4.உலகளந்தாள் என்ற

(உலகம்மன்)

5.அரியநாச்சி என்ற (அங்கயற்கன்னி)

6.வடக்குவாச்செல்வி என்ற (செண்பகவல்லி,செல்லியம்மன்)

7.சந்தனமாரி என்ற(சடைமாரி,

ஆகாசமாரி)

8.காந்தாரி என்ற

(படைவீட்டம்மன்)


#வரலாறு:


🔱அசுரர் குலத்துபெண் தானாவதி தனக்கொரு ஆண்வாரிசு வேண்டும் என்று பிரம்மனை நோக்கித்தவம் இருந்தாள். தானாவதியின் கடும் தவத்தினை கண்ட பிரம்மன் அவள் முன்தோன்றி, தானாவதி கேட்ட வரத்தைக் கொடுத்தார். வரத்தின் பயனாக தானாவதிக்கு மகனாக தானாசுரன் பிறந்தான். அவன் எருமைத் தலையுடன் இருந்ததால் மகிஷாசுரன் என அழைக்கப்பட்டான்.


🔱வேதங்களையும், அனைத்து கலைகளையும் கற்றுணர்ந்த மகிஷாசுரன், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். மகிஷாசுரனின் தவத்தைக்கண்ட சிவபெருமான் அவன் கேட்ட வரங்களையெல்லாம் கொடுத்தார். வரங்களைப்பெற்ற மகிஷாசுரன் ஊர்வன, பறப்பன உள்ளிட்ட எந்த இனத்தாலும் எனக்கு மரணம் வரக்கூடாது. பெண் வயிற்றில் பிறக்காத பெண்ணால் மட்டுமே எனக்கு மரணம் நேரவேண்டும் என்று வரம் கேட்டான். அதனைக் கேட்ட சிவபெருமான் அப்படியே ஆகட்டும் என்றார்.


🔱வரங்களைப் பெற்ற மகிஷாசுரன் தனக்கு மரணம் நேர வாய்ப்பே இல்லை என்ற ஆணவத்தில் தான் ஆண்டு வந்த மகேந்திர கிரிபர்வதம் பகுதியில் தான் எண்ணியபடி ஆட்சி புரிந்தான்.(மகேந்திர கிரிபர்வதம் தற்போதைய மைசூர்) (மகிஷன் ஆண்ட ஊர் என்பதால் மகிஷாஊர் என்று அழைக்கப்பட்டது.


🔱அதுவே மருவி மைசூர் என்றானது)மகிஷாசுரனின் கொடுமைகளை பொறுத்துக்கொள்ள முடியாத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். இதனிடையே கயிலாய மலையில் பார்வதிதேவி, விநாயகர், முருகன் சகிதமாக சிவனுடன் இருக்கையில், விநாயகப்பெருமான், அன்னை சக்தியிடம்‘‘தாயே, தந்தை ஏன் கண்களை திறந்தபடி தியானம் செய்தார், தியானம் என்றாலே கண்களை மூடித்தானே செய்யவேண்டும் என்று வினா தொடுத்தார்.’’ அதற்கு பார்வதிதேவி ‘‘தந்தையின் கண் ஒளியினால் தான் அண்ட சராசரங்கள் இயங்குகிறது. அவர் கண்களை மூடினால் அகிலமும் இருட்டாகும்’’ என்றார்.


🔱அப்போது குறுக்கிட்ட முருகன் ‘‘தாயே, அப்படியென்றால் தந்தை ஒரு முறை கண்களை மூடிக்காட்டட்டும் பார்ப்போம்’’ என்றார்.

‘‘இதை எப்படி தந்தையிடம் கூற, என்று முருக பெருமான் கேட்க, அவரிடம் சொல்ல வேண்டாம், அதை நானே செய்கிறேன் என்று கூறியபடி, பார்வதிதேவி, தியானித்துக் கொண்டிருந்த சிவபெருமானின் கண்களை, தனது கரங்களால் மூடினார். மறுகனமே அகிலமும் இருளில் மூழ்கியது. உடனே சக்தியின் கரங்களை விலக்கிக்கொண்டு கண்ணை திறந்தார் சிவன்.


🔱‘‘என்ன விளையாட்டு இது’’ சினம் கொண்டார் சிவன். பணிந்தார் பார்வதிதேவி, ‘‘சுவாமி, பிள்ளைகள் கேட்டதற்காகச் செய்தேன். தாங்கள் பொறுத்தருள வேண்டும்’’ என்றார். இந்த செயலுக்காக நீ வருந்தியே ஆக வேண்டும் என்ற சிவன், நாகக்கன்னியின் வயிற்றில் அஷ்டகாளியாக பிறக்க வேண்டும் என்று சபித்தார்.


🔱இந்த சிறிய தவறுக்கு மானிட பிறப்பா, அதுவும் நாகத்தின் வழியாகவா! என்று வருத்தமுற்ற பார்வதி தேவி, அவ்விடத்திலிருந்து எழுந்து நகர முற்பட்டார். அப்போது சிவபெருமான் கடுஞ்சினம் கொண்டு நெற்றிக் கண்ணை திறந்தார். அதிலிருந்து வெளியான தீப்பிழம்புகள் பார்வதிதேவியின் மேனியை எட்டு பிண்டங்களாக்கின. அந்த எட்டு பிண்டங்களையும் கையில் எடுத்துக்கொண்டார் சிவன்.


🔱பாதாளலோகத்தில் நாகக்கன்னி மழலை வரம் வேண்டி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தாள். அவள் முன்தோன்றிய சிவன், தன்னிடமிருந்த எட்டுப் பிண்டங்களையும் சாப்பிடுமாறு கொடுத்தார். அதை உண்ட நாகக்கன்னியின் வயிற்றில் அது எட்டு முட்டைகளாக உருமாறி வெளிவந்தன. நாகக்கன்னி அந்த எட்டு முட்டைகளையும் அடைகாத்து வந்தாள். 41வதுநாள் ஆடிமாதம் பூரம் நட்சத்திரத்தன்று செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எட்டு முட்டையிலிருந்து எட்டு பெண் குழந்தைகள் பிறந்தன.


🔱முதலாவதாக பிறந்தாள் முத்துமாரி என்ற மாரிமுத்தாரம்மன், இவளை முத்தாரம்மன் என்றும் பக்தர்கள் அழைப்பதுண்டு.இரண்டாவதாக பிறந்தாள் பத்திரகாளி. இந்த அம்மையை வீரமனோகரி, வீரம்மன், எல்லைக்காளி, எல்லையம்மன்.


🔱மூன்றாவதாக மூன்று முகத்துடன் பிறந்தாள் முப்பிடாதி (பிடாரி, பிடதி என்றால் தலை என்று பொருள்). மூன்று தலைகள் இருந்ததால்

முப்பிடதி, முப்பிடரி என்று அழைக்கப்பட்டது, இதுவே மருவி முப்பிடாரி என்றும் முப்பிடாதி என்றும் அழைக்கப்படலாயிற்று. இத்தாயவளை முத்தாலம்மன் என்றும் அழைப்பர். மூன்று தலைகள் கொண்ட அம்மன் என்பதாலே மூன்றுதலையம்மனே முத்தலையம்மனாக, முத்தாலம்மனாக அழைக்கப்படலானாள். இந்த அம்மனே பிடாரி அம்மன், எல்லைப்பிடாரி என பல்வேறு நாமங்களில் அழைக்கப்படுகிறாள்.


🔱நான்காவதாக பிறந்தாள் உலகளந்தாள் என்ற உலகமாதா, இவளை உலகநாயகி என்றும் இத்தாயவள் துளிர்க்காத வனத்தில் அமர்ந்ததால் துலுக்கானத்தம்மன் என்றும் இவளை அழைப்பதுண்டு. பொன்னிறத்தில் ஜொலித்ததாலே பொன்னி அம்மன் என்றும் அழைக்கப்பட்டாள்.


🔱ஐந்தாவதாக பிறந்தாள் அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி, அன்னை இவளே நாகாத்தம்மனாகவும், நாகவல்லியாகவும் அழைக்கப்படுகிறாள்.

ஆறாவதாக பிறந்தாள் செண்பகவல்லி என்ற வடக்குவாசல்செல்வி, அன்னை இவள் செல்லியம்மன் என்றும் அழைக்கப்படுகிறாள். இந்த அம்பாளை படை வீரர்கள் வழிபட்டு வந்தனர். இதனால் இத்தாயவளை படைவீட்டம்மன் என்றும் அழைப்பர்.

ஏழாவதாக பிறந்தாள் சந்தனமாரி. இவளே சடைமாரி, ஆகாசமாரி என அழைக்கப்படுகிறாள். எட்டாவதாக பிறந்தாள் காந்தாரி.


🙏🦁🔱மகிஷாசுரமர்த்தினி🙏🦁🔱


🔱நாகலோகத்தில் நாகக்கன்னி பிள்ளைகள் எட்டு பேரையும் அன்போடும், அரவணைப்போடும் வளர்த்து வந்தாள். வளர்ந்து வந்த பிள்ளைகள் கன்னியர் ஆகினர். அம்மா, எங்கள் முகமும் உங்க முகமும் வேறுபட்டு உள்ளதே என்று கேள்வி எழுப்ப, எல்லாம் அந்த சிவனார் செயல் என்றாள் நாகக்கன்னி. உடனே சிவனிடம் எங்களை ஏன், தாயைப் போல் படைக்காமல் மனிதகுல பெண்களாக படைக்க வேண்டும். இந்த நாகலோகத்தில் மனித பிறப்பு எடுத்து என்ன பயனைப் பெறப்போகிறோம்.


🔱அதை அந்த சிவனிடமே கேட்போம் என்று கூறி, அக்காள் தங்கை எட்டு பேரும் சிவலிங்கத்தை வைத்து பூஜித்து சிவனை நோக்கி தவமிருந்தனர். அவர்களின் தவத்தைக்கண்ட சிவன் அவர்கள் முன்தோன்றினார். அஷ்டகாளிகள் சிவனிடம் தங்களின் பிறப்பு குறித்து கேட்க, சிவனும் பதில் கூறினார். மகேந்திரகிரி பர்வதத்தை ஆண்டு வரும் மகிஷாசுரனை வதம் செய்யவே உங்கள் படைப்பு என்று கூற, முத்தாரம்மன், தங்களின் வேண்டுகோளை ஏற்று மகிஷாசுரனை நாங்கள் அழித்து வந்த பின் எங்கள் எட்டு பேரையும் நீங்கள் மணமுடிக்க வேண்டும் என்றனர். அதற்கு சிவனும் ஒப்புதல் அளித்தார். மேலும் மகிஷாசுரனை அழிக்கும் வகையில் வரங்கள் கேட்க, அவர்களுக்கு அனைத்து வரங்களையும் நல்கினார் சிவபெருமான்.


🙏🦁🔱சாமுண்டீஸ்வரி🙏🦁🔱


🔱சிவபெருமான் ஆணைப்படி மகேந்திரகிரி பர்வதமலைக்கு வருகின்றனர். அஷ்டகாளிகள். மகிஷாசுரன் இடையே யுத்தம் நடக்கிறது. தனித்தனியாக நிற்பதை விட, ஒரு சேர நின்றால் தனது வலிமை அதிகம் என்பதை உணர்ந்து அஷ்டகாளிகள் எட்டு பேரும் ஒரு சேர அமைந்து சாமுண்டீஸ்வரியாக மாறி மகிஷாசுரனை வதம் செய்தனர். இறக்கும் தருவாயில் அரக்கன் மகிஷாசுரன், தாயே என்னை மன்னித்து விடுங்கள். வாழும் வரை மனித குலத்தில் ராஜாவாக இருந்தேன். இனி கானகத்தில் வாழும் உயிரிகளுக்கு ராஜாவான சிங்கமாக மாறி, தாயே உம்மை சுமக்கும் பாக்கியம் தந்தருள வேண்டும் என்றான்.


🔱ஆங்கார ரூபிணியாக இருந்த அன்னை சாமுண்டீஸ்வரி, சாந்த ரூபிணியாக மாறினாள். மகிஷாசுரனை மன்னித்து சிங்கமாக்கி, தனது வாகனமாக்கிக் கொண்டாள். அன்றிலிருந்து அஷ்டகாளிகள் எட்டு பேரும் ஒரு சேர நின்ற கோலத்தில் உள்ள தேவி மகிஷாசூரமர்த்தினி என்ற நாமத்தில் அழைக்கப்பட்டாள். தேவி மகிஷாசூரமர்த்தினி வந்தமர்ந்த இடம் திருத்தணி அருகேயுள்ள மத்தூர்.


அஷ்ட காளியர் பொதிகைமலை வருகை


🔱மகிஷாசுரனை வதம் செய்த பின் சிவபெருமான் தங்களை மண முடிப்பதாக கூறினாரே, ஆகவே, உடனே சிவனை மணம் முடிக்க கயிலாயம் செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் எட்டு பேரும் கயிலாயம் வருகிறார்கள். இதையறிந்த சிவன் நந்திதேவரை அழைத்து ரகசியம் கூற, அதன் படியே நந்தி தேவரும் எட்டு வண்டுகளை பிடித்து எட்டு குழந்தைகளாக்கி அஷ்டகாளிகள் வரும் வழியில் படுக்க வைத்திருந்தார். குழந்தைகள் அழுகுரல் கேட்ட அவர்கள் ஆளுக்கொரு குழந்தையை கையில் எடுத்துக்கொண்டு கயிலாயம் வருகிறார்கள்.


🔱சிவபெருமானிடம் தாங்கள் கூறியது போல எங்களை மண முடிக்க வேண்டும் என்கின்றனர். அப்போது சிவபெருமான் நான் உங்களிடம் கூறியது உண்மைதான். ஆனால் நீங்கள் கன்னியர்களாக வரவில்லையே, கையில் குழந்தையோடு அல்லவா வந்திருக்கிறீர்கள் என்றார். அப்படியானால்... என்று ஐயத்துடன் வினா தொடுத்தனர் அஷ்டகாளிகள்.


🔱நீங்கள் பூலோகம் செல்ல வேண்டும். மனித உயிர்களுக்கு அபயம் அளித்து காக்க வேண்டும். உங்களுக்கு எல்லா வரமும் தந்தருள்வேன் என்றார்.

வரங்களை பெற்றவர்கள் அய்யன் சிவபெருமான் ஆசியோடு பூலோகம் புறப்படுகின்றனர். அப்போது முத்தாரம்மன், சிவனிடம் சென்று தனக்கு தனியே ஒரு வரம் வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தப்பை உணர்ந்த பின் மன்னிக்கப்பட வேண்டும் அந்த வகையில் எனக்கு முத்து வரம் வேண்டும் என்று கேட்க, சிவபெருமானும் 108 முத்துக்களை உருவாக்கி, அதை ஓலை பெட்டியில் வைத்து கொடுத்தார்.


🔱முத்துக்கள் சக்தி வாய்ந்தவையா என்று வினா தொடுத்த முத்தாரம்மனிடம், நிச்சயமாக சக்தி வாய்ந்தவை தான் என்றார் சிவபெருமான். அப்படியானால் உங்களிடமே சோதித்து பார்க்கட்டுமா என்றாள் அன்னை. அய்யனும் புன்னகைத்தார். பெட்டியிலிருந்து எடுக்கப்பட்ட முத்துக்களை வாரி சிவபெருமான் மேல் இறைத்தாள் முத்தாரம்மன்.


🔱உச்சிமுதல் உள்ளங்கால் வரை முத்துக்கள் விழுந்து வலியால் வேதனைப்பட்டார் சிவன். அதைக்கண்ட உமாதேவி, அண்ணன் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டாள். அவர், முத்தாரம்மனிடம், நீ போட்டதை, நீயே தான் இறக்கிவிட வேண்டும் என்றார். எப்படி என்ற மறுகேள்வி கேட்ட முத்தாரம்மனிடம், அதற்கான வழிமுறையை சொல்லிக்கொடுத்தார் மகாவிஷ்ணு. அதன்படி தலைவாழை இலையை விரித்து, அதன்மேல் சிவபெருமானை படுக்கவைத்து, சக்தியின் சூலாயுதத்தால் உருவான வேம்பு மரத்தின் (வேப்ப மரம்) இலைகளைவைத்து முத்துவை இறக்கினாள் முத்தாரம்மன்.


🔱சிவபெருமானாலேயே தாங்க முடியவில்லை. மனித உயிர்கள் எப்படி தாங்கிக் கொள்ளும் என்று கருதி மகாவிஷ்ணு அந்த முத்துக்களை வாங்கி, கொப்பரையில் வறுத்து, அதன் வீரியத்தை குறைத்து அதன்பின் முத்தாரம்மனிடம் கொடுத்தார்.


🔱முத்துவரமும், தீராத நோய்களை திருநீற்றால் தீர்த்தருளும் வரமும் பெற்ற முத்தாரம்மன், முத்துக்கள் பெற்றதால் முத்துமாரி என்றும் முத்தாரம்மன் என்றும் அழைக்கப்படலானாள். அஷ்டகாளிகள் அங்கிருந்து பூலோகம் வருகிறார்கள். ஆளுக்கொரு பிள்ளையை கையில் வைத்தவர்கள் அந்த எட்டு பிள்ளைகளையும் ஒன்றாக்கினர். வழியில் கண்டெடுத்த அந்த பிள்ளைக்கு வயிரவன் என்று பெயரிட்டனர். கயிலாய மலையிலிருந்து புறப்பட்டவர்கள் பூலோகத்தின் சொர்க்கபுரியான பொதிகை மலைக்கு வந்தனர்.


🙏🦁🔱முத்துமாரி - முத்தாரம்மன்🙏🦁🔱


(வேம்புலி அம்மன்- கோலவிழியாள் - ஆயிரம் கண்ணுடையாள்)


🔱அஷ்ட காளிகளில் மூத்தவளான முத்துமாரி என்ற முத்தாரம்மன் தான் வந்ததை இவ்வையகம் அறிய வேண்டும் என்றெண்ணி, நெல்லை நகருக்கு வந்தாள். அங்கு வளையல் விற்கும் செட்டியாரிடம் சென்று தனக்கு வளையல் போடும்படி கூற, அவரும் வளையல் போட சம்மதித்தார். இருகைகள் தானே என்று நினைத்தவர் வியந்தார். காரணம் அன்னை முத்தாரம்மன் தனது எட்டு கரங்களையும் நீட்டி வளையல் போட்டுவிடும் படி கூறினாள். செட்டியார் வளையல் அணிவித்துவிட்டு பணம் கேட்டார். அன்னை முத்தாரம்மன் நான் தரவேண்டிய பணத்தை நெல்லை தெற்கு ரதவீதியிலுள்ள மணியக்காரரிடம் வாங்கிக்கொள் என்றார்.


(மணியக்காரர் என்றால் கிராம நிர்வாகி பொறுப்பு வகிப்பவர்)


🔱மறுநாள் நெல்லை நகருக்கு உரிய மணியக்காரரிடம் சென்ற வளையல்காரர் ‘‘மஞ்சள் பொட்டும், மங்கலபட்டும் அணிந்து வந்த மங்கை ஒருத்தி, தனது கைகளுக்கு வளையல் போட சொன்னார். அதற்குரிய பணத்தை உங்களிடம் வாங்கும்படி கூறினார்’’ என்று செட்டியார் கூற, அதைக் கேட்டு வீட்டுக்கு உள்ளேயிருந்து சினம் கொண்டு வந்தாள் மணியக்காரரின் மனைவி, யாரவள் என்று கேட்க, மறுகனமே அவள் நாவில் முத்து வந்தது. பேச முடியாமல் அவதிப்பட்டாள். சிறிது நேரத்தில் மேனியெங்கும் முத்துக்கள் படர அம்மை நோயால் அவதிப்பட்டாள். அஞ்சினார் மணியக்காரர். அன்றைய தினம் அவரது கனவில் தோன்றிய முத்தாரம்மன், தான் யாரென்பதையும், தனக்கு கோயில் கட்டி வழிபட்டால் உன் மனைவிக்கு வந்த பிணிமாறும், இனிவரும் காலம் வளமாகும் என்றுரைத்தாள். அதற்கு தாயே, தங்கள் விருப்பப்படி கோயில் கட்டுகிறேன் என்றுரைத்தார்.


🔱அப்போது முத்தாரம்மன் நெல்லை நகரில் தற்போது கோயில் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி, அங்கு ஒரு வேம்பு செடி முளைவிட்டிருக்கும். அதை நாகம் ஒன்று சுற்றியிருக்கும். நாளை காலை சூரிய உதயத்தின் போது இது நடக்கும். அந்த இடத்தில் எனக்கு கோயில் கட்டு. என்றுரைத்தாள். அதன்படி மணியக்காரர், பண்ணை வீட்டுக்காரர்கள் உதவியுடன் அந்த இடம் தேடி மறுநாள் காலையில் சென்றார். அங்கு அம்மன் கனவில் சொன்னது போலவே, வேம்பு செடியை நல்லபாம்பு ஒன்று சுற்றிநின்றது. அந்த இடத்தில் முத்தாரம்மனுக்கு கோயில் கட்டப்பட்டது. கோயிலில் மூலவர் முத்தாரம்மன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறாள். இவ்விடமிருந்து பல ஊர்களுக்கு அன்னை முத்தாரம்மன் திருவிளையாடல் நடத்தி அவ்வூர்களில் கோயில் கொண்டாள்.


🔱தென்மாவட்டங்களில் முத்தாரம்மன், மாரிமுத்தாரம்மன் என்ற நாமங்களில் வணங்கப்படும் இந்த அம்மனே முத்துமாரி, வேம்புலி அம்மன், கோலவிழி அம்மன், ஆயிரம் கண்ணுடையாள் முதலான நாமங்களில் அழைக்கப்படுகின்றாள். இந்த அம்பாளே வேப்ப மரத்தை புலியாக்கி அந்த புலியை தனது வாகனமாக்கிக் கொண்டாள். வேப்ப மரத்தை புலியாக்கியதாலே இந்த அம்மன் வேம்புலி அம்மன் என்று அழைக்கப்பட்டாள்.


🙏🦁🔱மாகாளி - ராஜகாளி🙏🦁🔱


🔱அஷ்டகாளியரில் இரண்டாவதாக பிறந்தவள் மாகாளி. திருச்சிரலைவாய் (திருச்செந்தூர்)பகுதியில் சூரபத்மனை சுப்ரமணியர் வதம் செய்தபோது, சூரபத்மனின் குருதி இந்த மண்ணில் விழுந்து விடக்கூடாது என்பதால் அந்த குருதியை வாங்கியதால் இந்த மாகாளி. வீரமாகாளி என்று அழைக்கப்படலானாள். திருச்செந்தூரிலிருந்து மீண்டும் பொதிகை மலை செல்ல முற்பட்டாள். வழியில் வீரைவளநாடு (குலசேகரப்பட்டினம்) என்ற பகுதியில் உள்ள கடற்கரையோரம் இருந்த வனச்சோலை வீரமாகாளிக்கு பிடித்து விட அங்கேயே வாசம் செய்தாள்.


🔱தான் இவ்விடம் வந்ததை, இப்பகுதியினர் அறியவேண்டும் என்று எண்ணிய வீரமாகாளி, குழந்தை முதல் குமரி வரையிலான பெண்களுக்கு நோய்களை ஏற்படுத்தினாள்.ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி, அப்பகுதியில் மந்திரத்திலும், மாந்திரீகத்திலும் பெரியவனாக திகழ்ந்த வல்லவராயரை நாடினர். அவர் சோழி போட்டு பார்த்தார். அதில் வந்திருப்பது அஷ்டகாளியர்களில் ஒருவரான மாகாளி என்பது தெரிந்தது. வல்லவராயர், ஊர் பிரமுகர்களிடம் சிலைக்கு வடிவத்தை வரைந்து கொடுத்து ‘‘இந்த உருவில் சிலை செய்து கோயில் எழுப்பி அம்மனுக்கு பூஜை பரிவாரங்கள் செய்து வழிபட்டு வாருங்கள். பிணிகள் அகலும். மணியான வாழ்க்கை ஒளிரும்'' என்றார். அதன்படி ஊரார்கள்கூடி அம்மனுக்கு கோயில் எழுப்பினர்.


🔱பின்னாளில் வீரமாகாளி என்ற உக்கிர பெயரை மாற்ற வேண்டும். அம்மன் சாந்தரூபிணியாக இருக்கவேண்டும் என்பதற்காக வீரமனோகரி என்று பெயர் வைத்து அழைக்கலாயினர். இந்தக்கோயில் திருச்செந்தூரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் உள்ளது.முத்தாலம்மன் - முப்பிடாதி அம்மன் - பிடாரி அம்மன்அஷ்ட காளியரில் மூன்றாவதாக மூன்று தலைகளுடன் அவதரித்தவள் முப்பிடாதி. பிடரி என்றால் தலை என்று பொருள். மூன்று தலைகள் இருந்தமையால் முப்பிடரி என்று அழைக்கப்பட்ட இந்த அம்மன் பின்னர் முப்பிடாரி என்று அழைக்கப்படலானார். இதுவே மருவி முப்பிடாதி என அழைக்கப்படலானது.


🔱இந்த சொல்லே தென் மாவட்டத்தில் வழக்கில் உள்ளது. முப்பிடாதி அம்மன் கோயில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் பரவலாக உள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் முப்பிடாதி அம்மனை முத்தாலம்மன் என்று அழைக்கின்றனர். முத்தலையம்மன் என அழைக்கப்பட்டது மருவி முத்தாலம்மன் என்று அழைக்கப்படலாயிற்று.சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் எல்லைப்பிடாரி அம்மனாக அருள் பாலிப்பதும் அன்னை முப்பிடாதி அம்மனே.


துலுக்கானத்து அம்மன் - பென்னி அம்மன் - உலகம்மன்


🔱அஷ்டகாளியரில் நான்காவதாக பிறந்த உலகம்மன். உலகளந்தாள் என்ற உலகமாதா, இவளை உலகநாயகி என்றும் அழைப்பர். இன்றைய சென்னை பல ஆண்டுகளுக்கு முன் கடலோரப் பகுதிகள் மண் மேடாக இருந்தது. புல், இலை, தழை எதுவும் முளைக்காத வனமாக இருந்தது. அந்த வனத்தில் வந்தமர்ந்தாள் இந்த உலகம்மன். எந்த தாவரமும் துளிர்க்காத வனத்தில் வந்தமர்ந்ததாலே துளிர்க்காத வனத்து அம்மன் என்று அழைக்கப்பட்டாள். அதுவே மருவி துலுக்கானத்தம்மன் என்றானது. அம்பாள் பொன்னிற மேனியோடு ஜொலித்ததாலே பொன்னி அம்மன் என்றும் அழைக்கப்பட்டாள்.


நாகாத்தம்மன் - நாகவல்லி - அரியநாச்சி


🔱அஷ்டகாளியரில் ஐந்தாவதாக பிறந்தாள் அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி, அன்னை இவளே நாகாத்தம்மனாகவும், நாகவல்லியாகவும் அழைக்கப்படுகிறாள். நாகத்தின் வயிற்றிலே பிறந்ததாலும், நாக உடலோடும் மனித பெண் முகத்தோடும் அருட்பாலிக்கும் தாயான இந்த அம்மன் நாகரம்மன் என்றும் அழைக்கப்படுகிறாள். நாகாத்தம்மன், நாகவல்லி, நாகம்மன், நாகேஸ்வரி ஆகிய நாமங்களில் வணங்கப்படுகிறாள்.


செல்லியம்மன் - செண்பகவல்லியம்மன் - வடக்குவாச்செல்வி


🔱அஷ்டகாளியரில் ஆறாவதாக பிறந்தாள் செண்பகவல்லி என்ற வடக்குவாசல் செல்வி, அன்னை இவள் செல்லியம்மன் என்றும் அழைக்கப்படுகிறாள். கயிலாயமலையில் சிவபெருமான் வடக்கிலிருந்து தென் முகமாக வீற்றிருக்கிறார். அந்த சிவபெருமானுடைய முகம் பார்க்கும் விதமாக தென் திசையிலிருந்து வடக்கு முகமாக வீற்றிருக்கிறாள். வடக்கு முகமாக வாசல் கொண்ட கோயிலில் அருட்பாலிப்பதால் இந்த அம்மன் வடக்குவாசல் செல்வி என்று அழைக்கப்படுகிறாள். துர்க்கையின் அம்சம் என்பதாலே இந்த அம்பாளை ராகு காலத்தில் வழிபட்டால் பலன்கள் அதிகம் கிட்டுகிறது.


சந்தனமாரி - சடைமாரி - ஆகாசமாரி


🔱அஷ்டகாளியரில் ஏழாவதாக பிறந்தாள் சந்தனமாரி. இவளே சடைமாரி, ஆகாசமாரி என அழைக்கப்படுகிறாள். இந்த அம்மன் சாந்த சொரூபினி அஷ்ட காளியர்கள் எல்லோருமே சிங்கத்தை வாகனமாக்கி வலம் வர, இத்தாயவள் மட்டும் மானை வாகனமாக்கிக் கொண்டவள்.

சந்தன மேனியவள், குளிரச்சியானவள். மழையை பெய்ய வைக்கும் தாயானவள் என்பதால் ஆகாசமாரி என்றும் அழைக்கப்படுகிறாள்.


படைவீட்டம்மன் - காந்தாரி அம்மன்


🔱அஷ்டகாளியரில் எட்டாவதாக பிறந்தாள் காந்தாரி. வீரர்கள் தங்களுக்கு அச்சத்தை போக்கி வீரத்தை நிலைநிறுத்தி அருள் புரிய வேண்டும் என்று அந்தக் காலத்தில் படைவீரர்கள் இந்த அம்மனை வணங்கி வந்தனர். படை வீரர்கள் தங்கியிருக்கும் பகுதியே படை வீடு என்று அழைக்கப்பட்டது.


🔱அந்த படை வீடுகளில் இந்த அம்பாளை வைத்து பூஜித்து வந்தனர். இதனாலே இந்த அம்மன் படைவீட்டம்மன் என்று அழைக்கப்பட்டாள்.ஆங்கார ரூப சக்தியான இவளுக்கு கோபத்தை ஏற்படுத்தி பூஜித்தால் வேகம் கொண்டு எதிரியை வதம் செய்து வேண்டுவோரை காப்பவள்.


🔱மிளகாய் கொண்டு பூஜிக்கும் பூஜையை ஏற்பதாலும் (காந்தல்- எரிச்சல்) கொண்டு அனல் கக்கும் பார்வையுடன் திகழ்வதாலும் இந்த அம்மன் காந்தாரி அம்மன் என்று அழைக்கப்படலானாள். காந்தம் - ஈர்ப்பு என்று இன்னொரு பொருள்படும். அந்த வகையில் இந்த அம்மன் மனமுருக வேண்டுவோருக்கு வேகமாக அருட்கரம் நீட்டுவதாலும் காந்தம் போன்று பக்தர்களை ஈர்க்கும் தன்மையோடு இருப்பதாலும் இந்த அம்மன் காந்தாரி அம்மன் என்று வணங்கப்படுகிறாள்.

Friday, 22 October 2021

ஜார்கண்ட் அனுமார் கோயிலில் வானரங்கள் சேவை

 ஆதியும் அந்தமும் இல்லாத.... தோற்றுவார் இல்லாத...


 சனாதன இந்து தர்மம் இறைவனே உருவாக்கியிருக்கும் தர்மம். அதற்கான அடையாளங்கள் இவை.👇🏾   


ஜார்கண்டில் மலைமீது உள்ள ஸ்ரீ ராமர் கோவில்.  மாலை நேரத்தில் கோவில் தீபாராதனையின் போது  அவரது ஸ்ரீ அனுமன் வானர சேனைகள் எங்கிருந்தோ வந்தோ மிகுந்த உற்சாகத்தோடு தவறாமல் மணி ஓசை  எழுப்பி இறைவனுக்கு தொண்டு செய்து விட்டு செல்கிறது.👇🏾


 *அதிசயங்கள் நிறைந்த சனாதன ஹிந்து தர்மம்.*




Thursday, 21 October 2021

உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்

 உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்

""""""""""""""""""""""""""


நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி, சிவபெருமானை வணங்கி வந்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.


#அசுவினி :-


தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து

உந்தன் சரண் புகுந்தேன்

எக்கால் எப்பயன் நின் திறம்

அல்லால் எனக்கு உளதே

மிக்கார் தில்லையுள் விருப்பா

மிக வடமேரு என்னும்

திக்கா! திருச்சத்தி முற்றத்து

உறையும் சிவக்கொழுந்தே


#பரணி :- 


கரும்பினும் இனியான் தன்னைக்

காய்கதிர்ச் சோதியானை

இருங்கடல் அமுதம் தன்னை

இறப்பொடு பிறப்பு இலானைப்

பெரும்பொருள் கிளவியானைப்

பெருந்தவ முனிவர் ஏத்தும்

அரும்பொனை நினைந்த நெஞ்சம்

அழகிதாம் நினைந்தவாறே.


#கார்த்திகை_கிருத்திகை :-


செல்வியைப் பாகம் கொண்டார்

சேந்தனை மகனாக் கொண்டார்

மல்லிகைக் கண்ணியோடு

மாமலர்க் கொன்றை சூடிக்

கல்வியைக் கரை இலாத

காஞ்சி மாநகர் தன்னுள்ளார்

எல்லிய விளங்க நின்றார்

இலங்கு மேற்றளியனாரே.


#ரோகிணி :-


எங்கேனும் இருந்து உன்

அடியேன் உனை நினைந்தால்

அங்கே வந்து என்னோடும்

உடன் ஆகி நின்றருளி

இங்கே என் வினையை

அறுத்திட்டு எனை ஆளும்

கங்கா நாயகனே

கழிப்பாலை மேயோனே.


#மிருகசீரிடம் :-


பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி

பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி

எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி

என் சிந்தை நீங்கா இறைவா போற்றி

விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி

மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி

கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி


திருவாதிரை/ஆதிரை :-


கவ்வைக் கடல் கதறிக் கொணர்

முத்தம் கரைக்கு ஏற்றக்

கொவ்வைத் துவர் வாயார்

குடைந்து ஆடும் திருச்சுழியல்

தெய்வத்தினை வழிபாடு செய்து

எழுவார் அடி தொழுவார்

அவ்வத் திசைக்கு அரசு

ஆகுவர் அலராள் பிரியாளே.


#புனர்பூசம் :-


மன்னும் மலைமகள் கையால்

வருடின மாமறைகள்

சொன்ன துறைதொறும் தூப்பொருள்

ஆயின தூக்கமலத்து

அன்னவடிவின அன்புடைத்

தொண்டர்க்கு அமுது அருத்தி

இன்னல் களைவன இன்னம்பரான்

தன் இணை அடியே.


#பூசம் :-


பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய

மூர்த்திப் புலி அதளன்

உருவுடை அம்மலைமங்கை

மணாளன் உலகுக்கு எல்லாம்

திருவுடை அந்தணர் வாழ்கின்ற

தில்லை சிற்றம்பலவன்

திருவடியைக் கண்ட கண்கொண்டு

மற்று இனிக் காண்பது என்னே.


#ஆயில்யம் :-


கருநட்ட கண்டனை அண்டத்

தலைவனைக் கற்பகத்தைச்

செருநட்ட மும்மதில் எய்ய

வல்லானைச் செந்நீ முழங்கத்

திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு

இறையைச் சிற்றம்பலத்துப்

பெருநட்டம் ஆடியை வானவர்

கோன் என்று வாழ்த்துவனே


#மகம் :-


பொடி ஆர் மேனியனே! புரிநூல்

ஒருபால் பொருந்த

வடி ஆர் மூவிலை வேல் வளர்

கங்கையின் மங்கையொடும்

கடிஆர் கொன்றையனே! கடவூர்

தனுள் வீரட்டத்து எம்

அடிகேள்! என் அமுதே!

எனக்கு ஆர்துணை நீ அலதே.


#பூரம் :-


நூல் அடைந்த கொள்கையாலே

நுன் அடி கூடுதற்கு

மால் அடைந்த நால்வர் கேட்க

நல்கிய நல்லறத்தை

ஆல் அடைந்த நீழல் மேவி

அருமறை சொன்னது என்னே

சேல் அடைந்த தண்கழனிச்

சேய்ன்ஞலூர் மேயவனே.


#உத்திரம் :-


போழும் மதியும் புனக் கொன்றைப்

புனர்சேர் சென்னிப் புண்ணியா!

சூழம் அரவச் சுடர்ச் சோதீ

உன்னைத் தொழுவார் துயர் போக

வாழும் அவர்கள் அங்கங்கே

வைத்த சிந்தை உய்த்து ஆட்ட

ஆழும் திரைக்காவிரிக் கோட்டத்து

ஐயாறு உடைய அடிகளே.


#அஸ்தம் :-


வேதியா வேத கீதா விண்ணவர்

அண்ணா என்று

ஓதியே மலர்கள் தூவி ஒருங்கு

நின் கழல்கள் காணப்

பாதி ஓர் பெண்ணை வைத்தாய்

படர் சடை மதியம் சூடும்

ஆதியே ஆலவாயில் அப்பனே

அருள் செயாயே.


#சித்திரை :-


நின் அடியே வழிபடுவான்

நிமலா நினைக் கருத

என் அடியான் உயிரை வவ்வேல்

என்று அடர்கூற்று உதைத்த

பொன் அடியே இடர் களையாய்

நெடுங்களம் மேயவனே.


#சுவாதி :-


காவினை இட்டும் குளம் பல

தொட்டும் கனி மனத்தால்

ஏவினையால் எயில் மூன்று

எரித்தீர் என்று இருபொழுதும்

பூவினைக் கொய்து மலரடி

போற்றுதும் நாம் அடியோம்

தீவினை வந்து எமைத்

தீண்டப்பெறா திருநீலகண்டம்.


#விசாகம் :-


விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை

வேதம் தான் விரித்து ஓத வல்லனை

நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை

நாளும் நாம் உகக்கின்ற பிரானை

எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை

என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற

கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக்

காணக் கண் அடியேன் பெற்றவாறே.


#அனுஷம் :-


மயிலார் சாயல் மாது ஓர் பாகமா

எயிலார் சாய எரித்த எந்தை தன்

குயிலார் சோலைக் கோலக்காவையே

பயிலா நிற்கப் பறையும் பாவமே.


#கேட்டை :-


முல்லை நன்முறுவல் உமை பங்கனார்

தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்

கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு

ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே.


#மூலம் :-


கீளார் கோவணமும் திருநீறும்

மெய்பூசி உன் தன்

தாளே வந்து அடைந்தேன் தலைவா

எனை ஏற்றுக்கொள் நீ

வாள் ஆர் கண்ணி பங்கா!

மழபாடியுள் மாணிக்கமே

ஆளாய் நின்னையல்லால்

இனியாரை நினைக்கேனே.


#பூராடம் :-


நின் ஆவார் பிறர் அன்றி நீயே ஆனாய்

நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்

மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்

மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய்

பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய்

பூமி மேல் புகழ்தக்கப் பொருளே உன்னை

என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால்

ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே.


#உத்திராடம் :-


குறைவிலா நிறைவே குணக்குன்றே

கூத்தனே குழைக்காது உடையோனே

உறவு இலேன் உனை அன்றி மற்று அறியேன்

ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே

சிறைவண்டு ஆர் பொழில் சூழ்திருவாரூர்ச்

செம்பொனே திருவடுதுறையுள்

அறவோனே எனை அஞ்சல் என்று அருளாய்

ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே


#திருவோணம்_ஓணம் :-


வேதம் ஓதி வெண்நூல் பூண்ட

வெள்ளை எருது ஏறி

பூதம் சூழப் பொலிய வருவார்

புலியின் உரிதோலார்

நாதா எனவும் நக்கா எனவும்

நம்பா என நின்று

பாதம் தொழுவார் பாவம்

தீர்ப்பார் பழன நகராரே.


#அவிட்டம் :-


எண்ணும் எழுத்தும் குறியும்

அறிபவர் தாம் மொழியப்

பண்ணின் இடைமொழி பாடிய

வானவரதா பணிவார்

திண்ணென் வினைகளைத்

தீர்க்கும் பிரா திருவேதிக்குடி

நண்ணரிய அமுதினை

நாம் அடைந்து ஆடுதுமே.


#சதயம் :-


கூடிய இலயம் சதி பிழையாமைக்

கொடி இடை இமையவள் காண

ஆடிய அழகா அருமறைப் பொருளே

அங்கணா எங்கு உற்றாய் என்று

தேடிய வானோர் சேர் திருமுல்லை

வாயிலாய் திருப்புகழ் விருப்பால்

பாடிய அடியேன் படுதுயர் களையாய்

பாசுபதா பரஞ்சுடரே.


#பூரட்டாதி :-


முடி கொண்ட மத்தமும் முக்கண்ணனின்

நோக்கும் முறுவலிப்பும்

துடிகொண்ட கையும் துதைந்த

வெண்ணீறும் சுரிகுழலாள்

படி கொண்ட பாகமும் பாய்புலித்

தோலும் என் பாவி நெஞ்சில்

குடி கொண்டவா தில்லை அம்பலக்

கூத்தன் குரை கழலே.


#உத்திரட்டாதி :-


நாளாய போகாமே நஞ்சு

அணியும் கண்டனுக்கு

ஆளாய அன்பு செய்வோம்

மட நெஞ்சே அரன் நாமம்

கேளாய் நம் கிளை கிளைக்கும்

கேடுபடாத்திறம் அருளிக்

கோள் ஆய நீக்குமவன்

கோளிலி எம்பெருமானே.


#ரேவதி :-


நாயினும் கடைப்பட்டேனை

நன்னெறி காட்டி ஆண்டாய்

ஆயிரம் அரவம் ஆர்த்த

அமுதனே அமுதம் ஒத்து

நீயும் என் நெஞ்சினுள் நிலாவிளாய்

நிலாவி நிற்க

நோயவை சாரும் ஆகில் நோக்கி

நீ அருள் செய்வாயே.


ௐ திருச்சிற்றம்பலம் 🙏🇮🇳🙏

Tuesday, 19 October 2021

ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் ஒரு Code Number உள்ளது. Google Map-ல் அதனை Type செய்தால் கோயிலை எளிதில் அடையலாம்

 ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் ஒரு Code Number உள்ளது. Google Map-ல் அதனை Type செய்தால் கோயிலை எளிதில் அடையலாம்.


திருக்கோயிலின் Code Number கோயிலின் பெயருக்கு அருகில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (i.e., திருக்கொட்டையூர் - கோடீஸ்வரர் திருக்கோயில் (NCN044) 


I. கும்பகோணம் to திருவைக்காவூர்


1. திருக்கொட்டையூர் - கோடீஸ்வரர் திருக்கோயில் (NCN044) 

(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)

கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது


2. திருவலஞ்சுழி - கபர்தீஸ்வரசுவாமி திருக்கோயில் (SCN025) 

(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)

திருக்கொட்டையூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.


3. சுவாமிமலை - சுவாமிநாதசுவாமி திருக்கோயில் 

(முருகரின் நான்காவது படை வீடு)

திருவலஞ்சுழியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.


4. புள்ளபூதங்குடி – வல்வில்ராமன் திருக்கோயில் 

(திவ்ய தேசம்)

சுவாமிமலையிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.


5. ஆதனூர் - ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்

(திவ்ய தேசம்)

புள்ளபூதங்குடியிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.


6. இன்னம்பூர் - எழுத்தறிநாதர் திருக்கோயில் (NCN045)

(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)

ஆதனூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.


7. திருப்புறம்பயம் - சாட்சிநாத சுவாமி திருக்கோயில் (NCN046)

(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)

இன்னம்பூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.


8. திருவிசயமங்கை - விஜயநாதர் திருக்கோயில் (NCN047)

(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)

திருப்புறம்பயத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.


9. திருவைக்காவூர் - வில்வவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில் (NCN048)

(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)

திருவிசயமங்கையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.


* * * * *

II. கும்பகோணம் to திருந்துதேவன்குடி


1. ஒப்பிலியப்பன் திருக்கோயில் (திவ்ய தேசம்)

கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.


2. திருநாகேஸ்வரம் - நாகநாதசுவாமி திருக்கோயில் (SCN029)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

ஒப்பிலியப்பன் கோயிலிருந்து அரை கி.மீ தொலைவில் உள்ளது.


3. தேப்பெருமாநல்லூர் - விஸ்வநாதசுவாமி திருக்கோயில் (பதிவில் காணும் கோயில்)

திருநாகேஸ்வரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.


4. திருபுவனம் - கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோயில்

(சரபேஸ்வரர் கோயில்)

தேப்பெருமாநல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.


5. திருவிசைநல்லூர் - சிவயோகிநாத சுவாமி திருக்கோயில் (NCN043)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

திருபுவனத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.


6. திருந்துதேவன்குடி - கற்கடேஸ்வரர் திருக்கோயில் (NCN042)

(நண்டாங் கோயில்)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

திருவிசைநல்லூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.


* * * * *

III. கும்பகோணம் to திருவாவடுதுறை


1. திருவிடைமருதூர் - மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (SCN030)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது


2. தென்குரங்காடுதுறை - ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் (SCN031)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

திருவிடைமருதூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.


3. திருமங்கலக்குடி - பிராணநாதேஸ்வரர் திருக்கோயில் (NCN038)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

தென்குரங்காடுதுறையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.


4. சூரியனார் கோயில் - சிவசூரியப் பெருமான் திருக்கோயில்

திருமங்கலக்குடியிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.


5. கஞ்சனூர் - அக்னீஸ்வரர் திருக்கோயில் (சுக்ர ஸ்தலம்)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

சூரியனார் கோயிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.


6. திருக்கோடிகாவல் - திருக்கோடீஸ்வரர் திருக்கோயில் (NCN037)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

கஞ்சனூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.


7. திருவாவடுதுறை - மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் (SCN036)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

திருக்கோடிகாவலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.


* * * * *

IV. கும்பகோணம் to ஊத்துக்காடு


1. தாராசுரம் – ஐராவதீஸ்வரர் திருக்கோயில்

கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.


2. பழையாறை – சோமேஸ்வரர் திருக்கோயில் (SCN024)

(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)

தாராசுரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.


3. பட்டீஸ்வரம் – தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் (SCN023) (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)

பழையாறையிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.


4. திருசத்திமுத்தம் – சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் (SCN022)

(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)

பட்டீஸ்வரம் கோவிலுக்கு ½ கி.மீ தொலைவில் உள்ளது.


5. ஆவூர் (கோவிந்தகுடி) – பசுபதீஸ்வரர் திருக்கோயில் (SCN021)

(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)

திருசத்திமுத்தம் கோயிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.


6. ஊத்துக்காடு - காளிங்கநர்த்தனர் திருக்கோயில்

ஆவூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.


* * * * *

V. கும்பகோணம் to திருக்கொள்ளம்புதூர்


1. திருக்கருகாவூர் – முல்லைவனநாதர் திருக்கோயில் (SCN018)

முல்லைவனம் - விடியற்கால வழிபாட்டிற்குரியது.

(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)

கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.


2. திருஅவளிவநல்லூர் – சாட்சிநாதசுவாமி திருக்கோயில் (SCN100)

பாதிரி வனம் - காலை வழிபாட்டிற்குரியது.

(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்

திருக்கருகாவூரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது.


3. ஹரித்துவாரமங்கலம் (அரதைப்பெரும்பாழி) - பாதாளேஸ்வரர் திருக்கோயில் (SCN099)

வன்னிவனம் - உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது.

(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்.

திருஅவளிவணல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.


4. ஆலங்குடி – ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் (SCN098)

பூளைவனம் - மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது.

(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்.

அரித்துவாரமங்கலத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது


5. திருக்கொள்ளம்புதூர் – வில்வவனநாதர் திருக்கோயில் (SCN113)

வில்வவனம் - அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது.

(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்.

ஆலங்குடியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது.


* * * * *

VI. கும்பகோணம் to நாதன் கோயில்


1. சிவபுரம் - சிவகுருநாதசுவாமி திருக்கோயில் (SCN067)

(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)

கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.


2. சாக்கோட்டை (கலயநல்லூர்) - அமிர்தகலசநாதர் திருக்கோயில் (SCN068)

(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)

சிவபுரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.


3. கருவளர்ச்சேரி - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில்

(குழந்தை பேறு வேண்டுபவர்கள் இக்கோயிலில் வழிபடலாம்)

சாக்கோட்டையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.


4. மருதநல்லூர் (கருக்குடி) – சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில் (SCN069)

(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)

கருவளர்ச்சேரியிலிருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது.


5. கீழக்கொருக்கை – பிரம்மஞானபுரீஸ்வரர் திருக்கோயில்

(அவிட்டம் நட்சத்திரக்காரர்களின் பரிகார ஸ்தலம்)

மருதநல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.


6. நாதன் கோயில் (நந்திபுர விண்ணகரம்) - ஜெகந்நாத பெருமாள் திருக்கோயில்

(திவ்ய தேசம்)

கீழக்கொருக்கையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.


* * * * *

VII. கும்பகோணம் to கபிஸ்தலம்


1. கும்பகோணம் - நாகேஸ்வரர் திருக்கோயில் (SCN027)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.


2. கும்பகோணம் - கும்பேஸ்வரர் திருக்கோயில் (SCN026)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

நாகேஸ்வரர் கோயிலில் இருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.


3. திருநல்லூர் - பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் (SCN020)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

கும்பகோணத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது


4. பாலைத்துறை - பாலைவனநாதர் திருக்கோயில் (SCN019)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

திருநல்லூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.


5. பாபநாசம் - ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில்

(108 சிவலிங்க கோயில்)

பாலைத்துறையிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.


6. கபிஸ்தலம் - ஸ்ரீ கஜேந்திர வரதன் திருக்கோயில்

(திவ்ய தேசம்)

பாபநாசத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.


* * * * *

VIII. கும்பகோணம் to குடவாசல்


1. அழகாபுத்தூர் - ஸ்வர்ணபுரீஸ்வரர் (படிக்காசுநாதர்) திருக்கோயில் (SCN066)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் நாச்சியார் கோயில் போகும் வழியில் இருக்கிறது. திருநறையூர் என்ற ஊரின்

முன்னால் அழகாபுத்தூர் உள்ளது


2. திருநறையூர் - சித்த நாதேஸ்வரர் திருக்கோயில் (SCN065)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

அழகாபுத்தூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. திருநறையூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மிக அருகில் கோயில் உள்ளது.


3. நாச்சியார்கோவில் - திருநறையூர் நம்பி திருக்கோயில்

(திவ்ய தேசம்)

சித்த நாதேஸ்வரர் கோயிலில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ளது.


4. திருப்பந்துறை (திருப்பேணுப்பெருந்துறை – சிவானந்தேஸ்வரர் திருக்கோயில் (SCN064)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

நாச்சியார்கோயிலில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.


5. ஆண்டான் கோயில் – ஸ்வர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் (SCN097)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

திருப்பந்துறையிலிருந்து 13 கி.மீ. தூரத்தில் உள்ளது.


6. திருச்சேறை – சாரநாதப்பெருமாள் திருக்கோயில்

(திவ்யதேசம்)

ஆண்டான் கோயிலில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ளது.


7. திருச்சேறை – சாரபரமேஸ்வரர் திருக்கோயில் (SCN095)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

சாரநாதப்பெருமாள் கோயிலில் இருந்து 1/2 கி.மீ. தூரத்தில் உள்ளது.


8. நாலூர் – பலாசவனேஸ்வரர் திருக்கோயில்

சாரபரமேஸ்வரர் கோயிலில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.


9. திருநாலூர் மயானம் - ஞானபரமேஸ்வரர் திருக்கோயில் (SCN096)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

நாலூரிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.


10. குடவாசல் - கோணேஸ்வரர் திருக்கோயில் (SCN094)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

திருநாலூர் மயானத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.


* * * * *

IX. கும்பகோணம் to திருப்பாம்பரம்


1. திருநீலக்குடி - நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் (SCN032)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

கும்பகோணத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது.


2. திருவைகல் மாடக்கோவில் - வைகல்நாதர் திருக்கோயில் (SCN033)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

திருநீலக்குடியிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது.


3. கோனேரிராஜபுரம் - உமா மஹேஸ்வரர் திருக்கோயில் (SCN034)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

திருவைகல் மாடக்கோயிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.


4. கருவேலி (திருக்கருவிலி கொட்டிட்டை) - சற்குண நாதேஸ்வரர் திருக்கோயில் (SCN063)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

கோனேரிராஜபுரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.


5. திருஅன்னியூர் - அக்னீசுவரர் திருக்கோயில் (SCN062)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

கருவேலியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது.


6. திருவீழிமிழலை - வீழிநாத சுவாமி திருக்கோயில் (SCN061)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

திருஅன்னியூரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது.


7. சிறுகுடி - சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில் (SCN060)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

திருவீழிமிழலையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.


8. திருப்பாம்பரம் - பாம்பு புரேஸ்வரர் திருக்கோயில் (SCN059)

(தேவாரப்பாடல் பெற்ற தலம்)

சிறுகுடியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

* * *

* திருக்கோயில்களின் குளங்களை சீரமைப்பதால், மழைநீர் சேகரிப்புக்கு குளங்கள் பெருமளவு உதவியாக இருக்கும்.

இந்த குளங்கள் பண்டைய காலம் முதலே நிலத்தடிநீர் நிலையை மேம்படுத்த உதவிகரமாக இயங்கி வந்துள்ளன.


நம் தமிழ்நாட்டின் பழமையான திருக்கோயில்களை பாதுகாப்போம்.

கோயில் குளங்களை தூர்வாரி சீரமைப்போம்.



மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்:

 மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்:



1168 – 75 -> சுவாமி கோபுரம்

1216 – 38 -> ராஜ கோபுரம்

1627 – 28 -> அம்மன் சந்நிதி கோபுரம்

1315 – 47 -> மேற்கு ராஜா கோபுரம்

1372 -> சுவாமி சந்நிதி கோபுரம்

1374 -> சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம்


1452 -> ஆறு கால் மண்டபம்

1526 -> 100 கால் மண்டபம்

1559 -> சௌத் ராஜா கோபுரம்

-> முக்குரிணி விநாயகர் கோபுரம்

1560 -> சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்

1562 -> தேரடி மண்டபம்

1563 -> பழைய ஊஞ்சல் மண்டபம்

-> வன்னியடி நட்ராஜர் மண்டபம்


1564 – 72 -> வடக்கு ராஜா கோபுரம்

1564-72 -> வெள்ளி அம்பல மண்டபம்

-> கொலு மண்டபம்

1569 -> சித்ர கோபுரம்

-> ஆயிராங்கால் மண்டபம்

-> 63 நாயன்மார்கள் மண்டபம்

1570 -> அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்


1611 -> வீர வசந்தராயர் மண்டபம்

1613 -> இருட்டு மண்டபம்

1623 -> கிளிக்கூட்டு மண்டபம்

-> புது ஊஞ்சல் மண்டபம்

1623 – 59 -> ராயர் கோபுரம்

-> அஷ்டஷக்தி மண்டபம்


1626 -45 -> புது மண்டபம்

1635 -> நகரா மண்டபம்

1645 -> முக்குருணி விநாயகர்

1659 -> பேச்சியக்காள் மண்டபம்

1708 -> மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்

1975 -> சேர்வைக்காரர் மண்டபம்


மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டியவர்களும், அந்த கால கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்களும்:


குலசேகர பாண்டியன் -> 1168 – 75.

மாறவர்மன் சுந்தரபாண்டியன் -> 1216 – 38.

பாராக்ரம பாண்டியன் -> 1315 – 47.

விஸ்வநாத நாயக்கர் -> 1529 – 64.


கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1564 – 72.

வீரப்ப நாயக்கர் -> 1572 – 94.

கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1595 – 1601.

முத்துகிருஷ்ணப்பா நாயக்கர் -> 1601 – 09.


முத்து நாயக்கர் -> 1609 – 23.

திருமலை நாயக்கர் -> 1623 – 1659.

ரௌதிரபதி அம்மாள் மற்றும்

தோளிமம்மை -> 1623 – 59. (Wives of ThirumalaiNaicker )

முத்து வீரப்ப நாயக்கர் -> 1659


சொக்கநாத நாயக்கர் -> 1659 – 82.

முத்து வீரப்ப நாயக்கர் -> 1682 – 89.

விஜயரங்க சோகநாத நாயக்கர் -> 1706 – 32.

மீனாட்சி அரசி -> 1732 – 36


 மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளதை நம்மில் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை🌹.

அவை:

1) மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்',

2) சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்',

3) இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்',

4) தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்',

5) தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்

அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள் .

அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.

திருவாரூரில் பிறந்தால் புண்ணியம்,

காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம்,

காசியில் இறந்தால் புண்ணியம்,

சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம்,

திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் .

மதுரையில் பிறந்தாலும் 

மதுரையில் வாழ்ந்தாலும் 

மதுரையில் இறந்தாலும் 

மதுரையில் வழிபட்டாலும் 

மதுரையை நினைத்தாலும் புண்ணியம்.

சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில்

இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்கை ஊர்கள்.👇👇👇

சீறா நாகம் - நாகமலை

கறவா பசு - பசுமலை

பிளிறா யானை - யானைமலை

முட்டா காளை - திருப்பாலை

ஓடா மான் - சிலைமான்

வாடா மலை - அழகர்மலை

காயா பாறை - வாடிப்பட்டி

பாடா குயில் - குயில்குடி

Sunday, 17 October 2021

திருவண்ணாமலை மன்னருக்கு ஈசன் மகனாக பிறந்த வரலாறு

 அண்ணாமலையாா் திருவடிகளை அன்புடன் வணங்குகின்றேன். திருவண்ணாமலை மன்னருக்கு ஈசன் மகனாக பிறந்த வரலாறு.


அண்ணாமலையார் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம் தினத்தன்று பள்ளி கொண்டாபட்டு கிராமத்துக்கு சென்று வல்லாள மகாராஜாவுக்கு மகனாக இருந்து திதி (தர்ப்பணம்) கொடுத்து வருகிறார்.


உலகத்துக்கே படியளப்பவர் சிவபெருமான். அவர் காலடி நிழலில் இளைப்பாறத்தான். ஆன்மீகத்தில் பக்குவப்பட்டவர்கள் ஆணவம், அகந்தையை விட்டு, விட்டு அலை மோதிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் அம்மையும், அப்பனுமாகத் திகழும் ஈசன், மன்னர் ஒருவரை தன் தந்தையாக ஏற்றுக் கொண்டார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்த அதிசயம் திருவண்ணாமலையில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. 


பரம்பொருள் ஈசனால் தந்தையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஈடு, இணையற்ற அந்த சிறப்பைப் பெற்ற பெருமைக்குரியவர் வீர வல்லாள மகாராஜா. யாகஅக்னி வம்சத்தில் உதித்த அவர் வட தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களின் ஒரு பகுதியை உள்ளடக்கிய சாம்ராஜ்ஜியத்தின் மன்னராக திகழ்ந்தார். 

ஹோய்சாளப் பேரரசின் கடைசி மன்னரான அவர் தற்போது கர்நாடகாவில் உள்ள ஹளபேடு நகரை முதல் தலைநகரமாகவும், திருவண்ணாமலையை இரண்டாம் தலை நகரமாகவும் கொண்டு 1291-ம் ஆண்டு தொடங்கி 1343-ம் ஆண்டு வரை 52 ஆண்டுகள் ஆட்சி செய்தார். வீர வல்லாள மகாராஜா மிகச் சிறந்த சிவபக்தன். தினமும் ஈசனுக்கு பூஜை செய்து வழிபடுவதை வழக்கத்தில் வைத்திருந்தார். அண்ணாமலையார் மீது அவருக்கு அதிக பக்தி இருந்தது. இதனால் திருவண்ணாமலை ஆலயத்தில் அவர் செய்த திருப்பணிகள் ஏராளம். 


5-ம் பிரகாரத்துக்கும் 4-ம் பிரகாரத்துக்கும் இடையே உள்ள கோபுரத்தைக் கட்டியது அவர்தான். 1328- ம் ஆண்டு கட்ட தொடங்கப்பட்ட அந்த கோபுரம் 1331-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. அவர் நினைவாக அந்த கோபுரம் வல்லாள மகாராஜா கோபுரம் என்றழைக்கப்படுகிறது. அந்த கோபுரத்தைக் கட்டி முடித்த போது அவருக்குள் கர்வம் தலை தூக்கியது. ‘‘எவ்வளவு அழகான பெரிய கோபுரத்தைக் கட்டி இருக்கிறேன்’’ என்று தற்பெருமைக் கொண்டார். 


இதைப் பார்த்த ஈசன், அவருக்கு அறிவுச்சூடு போட முடிவு செய்தார். அந்த கோபுர வாசல் வழியாக திருவீதி உலாவுக்கு வர மறுத்து விட்டார். திருவிழாவின் 10-வது நாள்தான் வல்லாள மகாராஜாவுக்கு தன் தவறு புரிந்தது. உடனே அண்ணாமலையார் முன்பு விழுந்து, வணங்கி மன்னிப்பு கேட்டார். அதன் பிறகே அண்ணாமலையார் 10-வது திருவிழா அன்று மட்டும் அந்த கோபுர வாசல் வழியாக வந்தார். இன்றும் அந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது. 


அண்ணாமலையார் அருளால், வல்லாள மகாராஜாவின் ஆட்சி மிகச் சிறப்பான ஆட்சியாக நடந்தது. இயற்கை வளங்களை நேர்த்தியாக பயன்படுத்தியதால் அவரது ஆட்சியில் மக்கள் சுபிட்சமாக வாழ்ந்தனர். எல்லா செல்வங்களும் அவர் காலடியில் கொட்டி கிடந்தன. என்ன இருந்து, என்ன பயன்? கொஞ்சி மகிழவும், நாட்டை வழி நடத்தவும் அவருக்கு வாரிசு இல்லை. குழந்தை இல்லாத ஏக்கம் அவரை மிகவும் தவிக்க வைத்தது. 


குழந்தைப் பேறுக்காகவே அவர் 2-வதாக சல்லமா தேவி என்ற பெண்ணை மணந்தார். அவளாலும் வல்லாள மகாராஜாவின் வாட்டத்தைப் போக்க இயலவில்லை. அண்ணாமலையாரிடம் கண்ணீர் விட்டு அடிக்கடி தன் தவிப்பை வெளிப்படுத்துவார். வல்லாள மகாராஜாவின் இந்த துயரத்தைப் போக்க அண்ணாமலையார் அருமையான ஒரு திருவிளையாடலை நடத்தினார். துறவி கோலம் பூண்டு அரசவைக்கு வந்து வல்லாள மகாராஜாவை சந்தித்தார். 


தன்னை நாடி வரும் சிவனடியார்களை வரவேற்று நன்கு உபசரித்து அனுப்புவது வல்லாள மகாராஜாவின் வழக்கமாகும். சிவனடியார்கள் எது கேட்டாலும், மறுக்காமல் செய்து கொடுப்பார். துறவிக் கோலத்தில் வந்திருந்த ஈசனைக் கண்டதும் அவரது மனம் பரவசம் அடைந்தது. வரவேற்று உபசரித்தார். பிறகு, ‘‘சுவாமி தங்களுக்கு அடியேன் என்ன உதவி செய்யட்டும்?’’ என்று கேட்டார். 


இந்த கேள்வியை எதிர் பார்த்துதானே ஈசன் வந்திருந்தார். துறவிக் கோலத்தில் இருந்த அவர், ‘‘என்னுடன் இன்று ஒரு நாள் மட்டும் தாம்பத்திய உறவுக்கு ஒரு பெண் வேண்டும்’’ என்றார். இதைக் கேட்டதும் வல்லாள மகாராஜாவுக்கும், அரசவையில் இருந்தவர்களுக்கும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. என்றாலும் கேட்பவர் சிவனடியார் அல்லவா? அவரது இந்த விருப்பத்தை பூர்த்தி செய்ய வல்லாள மகாராஜா உத்தரவிட்டார். 


படை வீரர்கள் திருவண்ணாமலையில் தாசிப் பெண்கள் குடியிருக்கும் பகுதிக்கு சென்று அழைத்தனர். ஆனால் எந்த ஒரு தாசியும் கிடைக்கவில்லை. 

எல்லா தாசிப் பெண்களும் ஒவ்வொரு ஆடவருடன் இருந்தனர். இதுவும் சிவபெருமானின் திட்டப்படி நடந்ததாகும். தாசிப்பெண் கிடைக்காததால் படை வீரர்கள் வெறும் கையுடன் அரண்மனைக்கு திரும்பினார்கள்.


இதையடுத்து தாசிப் பெண்ணை அழைத்து வர வல்லாள மகாராஜாவே புறப்பட்டு சென்றார். பொன், பொருள் உள்பட என்ன கேட்டாலும் அள்ளி, அள்ளித்தர தயாராக இருப்பதாக சொல்லியும் ஒரு தாசி கூட கிடைக்கவில்லை. மன்னர் கவலையோடு அரண்மனை திரும்பினார். அவரது மனவாட்டத்தை கண்ட இளையராணி சல்லமா தேவி, அந்த சிவனடியாரின் விருப்பத்தை தான் பூர்த்தி செய்து உதவுவதாக கூறினாள். 


சிவனடியார் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்தாள். துறவியை வணங்கி, ‘‘சுவாமி என் கணவர் உமக்கு அளித்த வாக்குறுதி ஒரு போதும் தவறாது. அருணாசலமே நீயே துணை’’ என்றபடி சிவனடியாரை தொட்டாள். அடுத்த வினாடி துறவி வேடத்தில் இருந்த அண்ணாமலையார் ஒரு அழகான குழந்தையாக மாறினார். இதைக் கண்டு சல்லமா தேவி பிரமித்தாள். அந்த குழந்தையை வாரி எடுத்து உச்சி முகர்ந்தாள். 


தகவல் அறிந்து வல்லாள மகாராஜா விரைந்து வந்தார். இது அண்ணாமலையாரின் திருவிளையாடல்தான் என்பதை புரிந்து கொண்டு கைக்கூப்பி வணங்கினார். அடுத்த வினாடி அந்த குழந்தை ஓளியாக மாறி மறைந்தது. அப்போது ஒரு அசரீரி கேட்டது. ‘‘குழந்தைப் பேறு வேண்டி மனத்துயரம் அடைந்துள்ள பக்தனே, நீ மனம் கலங்க வேண்டாம். இந்த பூலோகத்தில் உம் ஆயுள் முடியும் போது யாமே, உனக்கு மகனாக இருந்து உன் ஈம காரியங்களை செய்து முடிப்பேன். ஒவ்வொரு ஆண்டும் அந்த சடங்குகளை செய்வேன் என்றார்.


இதனால் வல்லாள மகாராஜா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த அதிசயம் நிகழ்ந்த சில ஆண்டுகளில் கோவில்களையெல்லாம்இடித்து ஹிந்து தர்மத்தை அழிக்க  டெல்லி  இஸ்லாமிய  சுல்தான் படை படையெடுத்து வந்தது. சுல்தானின் படைகளுக்கும் வீர வல்லாள மகாராஜாவுக்கும் இடையே போர் ஏற்பட்டது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்டிருந்த வல்லாள மகாராஜா படை முன்பு  சுல்தானால் தாக்குபிடிக்க முடியவில்லை. பள்ளி கொண்டாபட்டு பகுதியில் முகாம் அமைத்து தங்கி இருந்த போது வல்லாள மகாராஜாவை சுல்தான் நயவஞ்சகமாக ஏமாற்றி கொன்றான். 


வல்லாள மகாராஜாவின் இறுதிச் சடங்குகளை பள்ளி கொண்டாபட்டு அருகே ஓடும் கவுதம நதிக்கரையில் அண்ணாமலையார் செய்து முடித்தார்.

அன்று தொடங்கி இன்று வரை அண்ணாமலையார் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம் தினத்தன்று பள்ளி கொண்டாபட்டு கிராமத்துக்கு சென்று வல்லாள மகாராஜாவுக்கு மகனாக இருந்து திதி (தர்ப்பணம்) கொடுத்து வருகிறார். 

அன்றைய தினம் காலை அண்ணாமலையார், திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு பள்ளிகொண்டாபட்டு கவுதம நதிக்கரைக்கு வருவார். அங்கு திதி கொடுப்பார். 


அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பள்ளிகொண்டாபட்டுக்கு திரண்டு வந்து தம் மூதாதையருக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். ஈசன் திதி கொடுக்கும் போது, தாங்களும் அவ்வாறு செய்தால் தங்கள் மூதாதையர்களுக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். 


இந்த நிகழ்ச்சியின் போது அண்ணாமலையாருக்கு சம்பந்தம் கட்டும் முறை நடைபெறும். அதாவது அண்ணாமலையாரை தங்கள் ஊர் சம்மந்தியாக ஏற்று பட்டாடை சாத்துவார்கள். பள்ளிகொண்டாபட்டு அருகில் உள்ள சம்மந்தனூரை சேர்ந்தவர்களே இதை ஆண்டாண்டு காலமாக செய்து வருகிறார்கள். இதனால்தான் அந்த ஊருக்கு ‘‘சம்மந்தனூர்’’ என்ற பெயர் ஏற்பட்டது. 


வல்லாள மகாராஜாவுக்கு அண்ணாமலையார் திதி கொடுத்து முடிந்ததும், சம்மந்தி முறையில் உள்ளவர்கள் எல்லாரும் வாங்கப்பா... என்று அழைப்பார்கள். அதற்கு சம்மந்தனூர்காரர்கள், ‘‘மாப்பிள்ளையை (அண்ணாமலையாரை) கொஞ்ச நேரம் காத்திருக்க சொல்லுங்கள்’’ என்று உரிமையோடு சொல்வார்களாம்.

இப்படி பலவிதமான சடங்குகளுடன் அண்ணாமலையார் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பிறகு வழி நெடுக மண்டக பூஜைகளை ஏற்றுக் கொண்டு அண்ணாமலையார் ஆலயத்துக்கு திரும்புவார். 


அரசன் இறந்து விட்டால், அவனது மகனைத்தானே அடுத்த மன்னனாக முடிசூட்டுவார்கள். அந்த மரபின்படி மறுநாள்  அண்ணாமலையாருக்கு அரசராக முடிசூட்டும் விழா ஆலயத்தில் நடைபெறும். இதன் மூலம் அண்ணாமலையார் ஆண்டவனாகவும், அரசனாகவும் இருந்து தங்களை காப்பதாக திருவண்ணாமலை சுற்று வட்டாரப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.


உலகில் எந்த மன்னனுக்கும் இத்தனை ஆண்டுகளாக இறைவனே திதி (தர்ப்பணம்) கொடுக்கும் சிறப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வல்லாள மகாராஜா மிக, மிக கொடுத்து வைத்தவர். அவரது சேவையைப் போற்றும் வகையில் திருவண்ணாமலை ஆலயத்துக்குள் அவர் உருவச்சிலை உள்ளது. அதோடு கோபுரத்திலும் சிலை வடித்துள்ளனர். 


தமிழ்நாட்டில் எந்த சிவாலயத்திலும் சிவபெருமான், யாருக்காகவும் இப்படி ஆலயத்தை விட்டு வெளியில் வந்து திதி கொடுப்பதில்லை. திருவண்ணாமலை ஆலயத்தில் மட்டுமே ஆண்டு தோறும் இந்த அதிசயம் நடக்கிறது.

Saturday, 16 October 2021

ஸ்ரீ சக்கரத்தின் ஒன்பது ஆவரணகளின் விளக்கம்

 ஸ்ரீ சக்கரத்தின் ஒன்பது ஆவரணகளின் விளக்கம்.


*_ஸ்ரீ சக்கரம்_* 


எந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீசக்கரம் என்பது ஆன்றோர் வாக்கு.


ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம், மனித குலத்துக்கு சங்கரரின் அருள்கொடை. காஞ்சி காமாட்சியம்மன் கோயில், திருவானைக்காவல், திருவொற்றியூர் போன்ற எண்ணற்ற தலங்களில் இந்த ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீசக்கரத்தின் மகிமை


மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் உபாயமே ஸ்ரீசக்கரம். உலகை ரட்சிக்கும் நாயகியான ராஜராஜேஸ்வரி மகாமேருவில் உறைபவள். மகாமேருவின் உருவையே ஸ்ரீசக்கரத்தில் பொறிக்கிறார்கள். மகாசக்தியை மந்திரம், எந்திரம், தந்திரத்தால் வழிபடுவர். இம்மூன்றும் முக்கோணத்தின் மூன்று மூலைகள். அன்னையின் அருளைப் பெற, ஸ்ரீசக்கர வழிபாடே சிறந்தது என்கிறது தேவி புராணம்.


மூன்றின் பலம்


முக்காலங்கள், மும்மூர்த்திகள் அனைத்தும் அன்னையின் அமைப்புகளே. இதன்பொருட்டே திரிபுரசுந்தரியை மகாமேரு என்னும் மந்திரம், எந்திரம், தந்திரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் மூலம் வழிபடு கின்றனர். அனைத்து விதமான சக்கரங் களுக்கும் தலையாயது இந்த ஸ்ரீசக்கரம். அதன்பொருட்டே ஸ்ரீசக்கரத்தினை `ஸ்ரீசக்கர ராஜ’ என்றே ஆன்மிகத்தில் சிறந்த மகான்கள் குறிப்பிடுவர். ஒன்பது நிலைகளைக் கொண்ட ஸ்ரீசக்ரத்தினைப் பூஜிக்கும் முறை நவா ஆவரணம் என அழைக்கப்படும்.தேவி கட்கமாலா கூறும் நவ ஆவரணம் - சிறு விளக்கம்

முதல் நவாவரனத்தில்


முதல் ஆவரணம்


இந்த ஆவரணத்தின் கிரகமாக வியாழ பகவான் விளங்குகிறார். முதல் ஆவரணத்தை வணங்குபவர்களுக்கு எல்லா செல்வங்களும் நிலைக்கும். தடைகள் நீங்கும். புத்தி பலம் கூடும்.


முதல் நவாவரனத்தில் முதல் ரேகை

இது பூபுரம் எனப்படும். ஸ்ரீ லலிதா மகாதிரிபுரசுந்தரியின் நகரத்தின் (ஸ்ரீ புரம் என்பது தேவியின் சாம்ராஜ்யம் ) துவக்கம். நான்கு வாயில்களுடன் கூடியது. இதில் மூன்று ரேகைகள் உண்டு. இதன் தேவி திரிபுராபகவதி. 

முதலாம் ரேகை தேவதைகள் - பத்து மஹா சித்திகள் - வெண்மை நிறம்.


அணிமா சித்தி = சாந்த ரசம்

லகிமா சித்தி = அற்புத ரசம்

மகிமா சித்தி = கருணை ரசம்

ஈசித்வா சித்தி = வீர ரசம்

வசித்த்வ சித்தி = ஹச்ச்பய ரசம்

ப்ராகாம்ய சித்தி = பீபத்ச ரசம்

புத்தி சித்தி = ரௌத்ர ரசம்

இச்சா சக்தி = பயானக ரசம்

ப்ராப்தி சித்தி = சிருங்கார ரசம்


இரண்டாம் ரேகை தேவதைகள் -அஷ்ட மாதர்கள்- சிகப்பு நிறம் 


பிராஹ்மி = காமம்

மாகேஸ்வரி = குரோதம்

கௌமாரி = லோபம்

வைஷ்ணவி = மோகம்

வாராஹி = மதம்

மாகேந்திரி = மாத்சர்யம்

சாமுண்டி = புண்ணியம்

மகாலட்சுமி = பாபம்


மூன்றாம் ரேகை தேவதைகள் -முத்ரா தேவதைகள் - மஞ்சள் நிறம் 


சர்வ சம்க்ஷோபினி =சஹச்ர கமலம்

சர்வ வித்ராவினி = மூலாதாரம்

சர்வாகர்ஷினி =ச்வாதிச்டானம்

சர்வ வசங்கரி = மணி பூரகம்

சர்வோன்மாதினி = அனாகதம்

சர்வ மகான்குசா =விசுத்தி

சர்வ கேசரி = லம்பிகா ஸ்நானம்

சர்வ பீஜா = ஆக்ஞை

சர்வ யோனி = துவாத சாந்தம்

சர்வ த்ரிகண்டா = ஒன்பது ஆதாரம்


இரண்டாவது ஆவரணம்


பதினாறு யோகினிகள் வாசம் செய்யும் தாமரைப் பூ ரூபம் இது. மனதின் தீய எண்ணங்கள் நீங்கும். அகம் தூய்மையாகும்.

இது பதினாறு இதழ் கமலம். 5 பிராணன் , 5 ஞானேந்திரியங்கள் ,5 கர்மேந்திரியங்கள் ,மனம் ஆக பதினாறு இதழ்கள். வெண்மை நிறமுடைய இதில் பதினாறு ஆகர்ஷன சக்திகள் உண்டு. 


காமாகர்ஷினி =ப்ரித்வி

புத்தியா கர்ஷ்சினி =அப்பு

அஹங்கார கர்ஷினி =தேஜஸ்

சப்தா கர்ஷினி = வாயு

ச்பர்சா காசினி =ஆகாசம்

ரூபா கர்சினி =ச்ரோத்திரம்

ராசா கர்ஷினி =த்வக்

கந்தா கர்ஷினி =சக்சுஸ்

சித்த கர்ஷினி = ஜிக்வை

திரியா கர்ஷினி = க்ராணம்

ச்ம்ருத்யா கர்ஷினி = வாக்

காமா கர்ஷினி = கைகள்

பீஜா கர்ஷினி = பாதம்

ஆத்மா கர்ஷினி = பாயு

அம்ருதா கர்ஷினி = உபஸ்தம்

சரீரா கர்ஷினி = மனம்


மூன்றாவது ஆவரணம்


பூஜிப்பவரின் மனதை ஒருமுகப்படுத்தும் தேவதைகள் எட்டு தாமரை இதழ்களில் வாசம் செய்வதாக ஐதீகம். இவர்கள் பக்தியின் மேன்மையை பக்தர்களுக்கு அளிப்பவர்கள்.இதன் தேவி திரிபுரசுந்தரி. செம்பருத்தி பூ போன்ற நிறம். சிவபெருமானைத் தத்துவமாகக் கொண்டது. எட்டு தாமரை இதழ்களால் ஆனது. எட்டு தேவதைகளை கொண்ட சக்கரம். பக்தனின் அச்சத்தை நீக்கி பாதுகாப்பை அளிக்கும் தேவதைகள் :


1) அனங்க குசுமா 

2) அனங்க மேகலா 

3) அனங்க மதனா 

4) அனங்க மதனாதுரா 

5) அனங்க ரேகா 

6) அனங்கவேகினி 

7) அனங்காகுசா 

8.) அனங்கமாலினி 


இந்த எண்மரும் மிகவும் உக்கிரமான தேவதைகள் . ஸ்ரீ சக்கரத்தை பூஜிப்பவர்களுக்கும்,வழிபடுபவர்களுக்கும், அவர்களின் எதிரிகளை அடக்கி தேவையெனில் அழித்து பக்தர்களை காப்பாற்றுவார்கள்.


நான்காவது ஆவரணம்


இந்த ஆவரணத்தில் 14 யோகினிகள் வாசம் செய்கின்றனர். சந்திரன் வடிவில் அன்னை காட்சி தருவாள். புத்திர பாக்கியத்தை அளிக்கும் ஆவரணம் இது.பரமாத்மா பதினான்கு புவனங்களிலும் நிறைந்திருப்பதை விளக்கும் வகையில் பதினான்கு முக்கோணங்களை கொண்ட சக்கரம். இது மாதுளம் பூ நிறமுடையது . இந்த ஆவரணத்தின் தலைவி திரிபுரவாஸினி .


நாடிகள் 1) அலம்புஸா 2) குஹூ 

3) விஸ்வோதரி

4) வாசனா 

5) ஹஸ்தி 

6) ஜிஹ்வை பசோவதி 

7) பயஸ்வினி

8.) காந்தாரி

9) பூஷா 

10) சங்கினி 

11) சரஸ்வதி

12) இடை

13) பிங்கலை

14) சுஷும்னை 

எனும் பதினான்கு நாடிகளின் சக்திகளே பதினான்கு கோண தேவதைகள்.

தேவதைகள் :

1) ஸர்வ ஸம்க்ஷோபிணி 

2) ஸர்வ வித்ராவிணி 

3) ஸர்வா கர்ஷிணி 

4) ஸர்வாஹ்லாதினி 

5) ஸர்வ ஸம்மோகினி 

6) ஸர்வ ஸ்தம்பினி 

7) ஸர்வ ஜ்ரும்பிணி 

8.) ஸர்வ வசங்கரி 

9 )ஸர்வ ரஞ்சனி 

10) ஸர்வோன்மாதினி 

11) ஸர்வார்தஸாதினி 

12) ஸர்வ ஸம்பத்தி பூரணி

13) ஸர்வ மந்த்ரமயீ 

14) ஸர்வ த்வந்த்வ க்ஷயங்கரி


ஐந்தாவது ஆவரணம்


பத்து கோணங்களில் பத்து யோகினிகள் வாசம் செய்கின்றனர். உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் தரும்.திரிபுராஸ்ரீ என்னும் அம்பிகையை தலைவியாக கொண்ட இந்த சக்கரம் பத்து முக்கோணங்களை கொண்டது. குருவை இறையுருவாக வழிபடுதல் இந்த சக்கரத்தின் சிறப்பு.

தேவதைகள் சக்தியர் (10 வாயுக்கள் ) 

1) சர்வ சித்திப்ரதா ------ பிரானன் 

2) சர்வ சம்பத்ப்ரதா ------ அபானன் 

3) சர்வ ப்ரியங்கரி ------ வியானன் 

4) சர்வ மங்கள காரிணி ------ உதானன் 

5) சர்வ காமப்ரதா ------ சமானன் 

6) சர்வ துக்க விமோசனி ------ நாகன் 

7) சர்வ ம்ருத்யுப்ரசமனீ ------ கூர்மன் 

8.) சர்வ விக்ன நிவாரணி ------ கிரிகரன் 

9) சர்வாங்க சுந்தரி ------ தேவதத்தன் 

10) சர்வ சௌபாக்ய தாயினி ------ தனஞ்சயன்


ஆறாவது ஆவரணம்


அன்னை சூரியனின் உருவில் இருக்கும் ஆவரணம் இது. பொறாமை இருளை அகற்றி, அருளின் ஒளியை ஏற்ற உதவும்.வழிபடுவோரின் ஜீவனை பாதுகாக்கும் சக்கரம். இதில் பத்து கோணங்கள். செம்பருத்தி பூ நிறம். இதன் தலைவி திரிபுரமாலினி.

இந்த ஆவரண தேவதைகள் 

1) சர்வக்ஞா 

2) சர்வ சக்தி 

3) சர்வைஸ்வர்ய ப்ரதா 

4) சர்வ ஞானமயீ 

5)சர்வ வியாதி வினாசினி 

6)சர்வா தார ஸ்வரூபா 

7)சர்வ பாவஹரா 

8)சர்வானந்தமயீ 

9) சர்வரக்ஷா ஸ்வரூபினி 

10) ஸர்வேப்ஸித பலப்ரதா 


ஏழாவது ஆவரணம்


புதன் கிரகம் அமையப்பெற்ற ஆவரணம். இந்த ஆவரணத்தை பூஜிப்பதின் மூலம் ஆத்ம ஞானம் பெருகும்.ரோகம் என்பது வியாதி, ஹரம் என்பது நீக்குதல். அஞ்ஞானம் என்பதே எல்லா ரோகங்களுக்கும் காரணம் .இந்த சக்கரத்தின் தேவி திரிபுராசித்தா. சிகப்பு நிற மலர்களால் அர்ச்சிக்கப்படுகிறாள். எட்டு முக்கோணங்களை கொண்டது இந்த ஆவரணம். இந்த சக்கரத்தை வழிபடும்போது அறியாமை மட்டுமின்றி உடல் ரீதியான வியாதிகளும் நீங்கும். 

இந்த ஆவரண தேவதைகள் : 

1) வசினீ 

2)காமேச்வரி 

3)மோதினி 

4)விமலா 

5)அருணா 

6)ஜயிநீ 

7)சர்வேச்வரி 

8)கௌலினி 

சீதம், உஷ்ணம், சுகம், துக்கம், இச்சை, சத்வம், ரஜஸ், தமஸ் ஆகியவைகள் சீர்செய்யப்படுவதால் மனமும், உடலும் பாதுகாக்கப்படுகிறது. 


எட்டாவது ஆவரணம்


மகா திரிபுரசுந்தரியாக அன்னை வீற்றிருக்கும் ஆவரணம் இது. அங்குசம், பாசம், கரும்பு வில் மற்றும் பாணம் ஆகிய அம்பாளின் நான்கு ஆயுதங்கள் இந்த ஆவரணத்தில் வழிபடப்படுகின்றன.சர்வ சித்தி என்பது ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் குறிக்கும். இது மூன்று கோணங்களை உடையது. பாசம், அங்குசம், பாணம், கரும்புவில் ஆகிய ஆயுதங்களின் மண்டலங்கள் இவற்றில் உள்ளது. 

இந்த யந்திரம் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி வடிவமானது. அக்னி, சூரிய, சந்திர வடிவமான இந்த ஆவரணத்தில் 

1) காமேச்வரி 

2) வஜ்ரேஸ்வரி 

3) பகமாலினி 

என மூன்று தேவதைகள் . இந்த ஆவரணத்தின் தலைவி திரிபுராம்பா.


ஒன்பதாவது ஆவரணம்


பேரின்பத்தை நிலைபெறச் செய்யும் ஆவரணம் இது. அர்த்தநாரீஸ்வரர் வீற்றிருக்கும் இந்த ஆவரணத்தைப் பூஜிப்பதின் மூலம் சகல நன்மைகளும் ஏற்படும்.முழுநிறைவான ஆனந்தமயமான நிலையில் சிவனோடு இணைந்து அன்னை தம்பதிசமேதராக அருள் பாலிக்கும் இடம். ஸ்ரீ வித்யை, ஸ்ரீ சக்கர வழிபாடு சாக்த மரபு என்பது சிலர் கருத்து. சாக்தம் என்பது அம்பாளை மட்டுமே வழிபாடு செய்வது . ஆனால் சிவனையும் சக்தியையும் இணைத்து சிவசக்தி ஐக்கிய ரூபமாக வழிபடுதலே ஸ்ரீ வித்யையின் சிறப்பு. சிவமின்றி சக்தி இயங்காது. சக்தி இன்றி சிவமும் அசையாது.

இதர எட்டு ஆவரணங்களையும் பூஜித்து படிப்படியாக பண்பட்டு ஒன்பதாவது ஆவரண பூஜையின் போது உபாசகன், தான் பரபிரம்மத்தின் அங்கம், தன்னுள் இறைவன் நிறைந்திருக்கிறான் என்ற உணர்வை அடைகிறான்.

இந்த ஸ்ரீசக்ரத்தில் வீற்றிருந்த அன்னையே ஸ்ரீ மகாதிரிபுரசுந்தரி. ஸ்ரீ ராஜராஜேஸ்வரியும் இந்த அன்னையே.

ஒன்பதாவது ஆவரணத்தில் வீற்றிருக்கும் அன்னைக்கு காமேஸ்வரி என்றும் சிவனுக்கு காமேஸ்வரன் என்றும் திருநாமம். இந்த சிவசக்தி ஐக்கிய நிலையே இந்து மதத்தில் வழிபாடு செய்யப்படும் அனைத்து தெய்வங்களுக்கும், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், ஈரேழு லோகம், உயிர்கள் அனைத்திற்கும் மூலம்.


புவனேஸ்வரி கவசம்

 புவனேஸ்வரி கவசம்! அன்புருவாம் அம்மையை அகத்துள் உணர்ந்திடலாம் மாதாவும் முன்வந்து மஹத்தான வரமருள சொன்னபடி செய்து நீ சுகமடைவாய் மனமே கேள். !


ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம் சக்தி


புவனேஸ்வரி கவசம்

அங்குச பாச மேந்தி அபயமே வரதம் தாங்கும்

பங்கயக் கரத்தள் பீதாம்பரமணி யிடையள் பொற்பூண்

பைங்கள நிரம்பப் பூண்டாள் பதினாறு கலையெழுத்துள்

பொங்கிய ஓரெழுத்தாள் புவனேசி பாதம் போற்றி

கணபதியே சரணம் கணநாதா ரக்ஷிப்பாய்

கந்தனுக்கு மூத்தோனே கவசத்தைத் தந்திடுவாய்

மாதாவின் கவசத்தை மங்களம் பெருகிடவே

மங்கள கணபதியே மகிழ்ந்தெனக் கருள்வீரே

பஞ்சமுக கணபதியே மனமாசறுத்துத் தேசருளி

வல்லபை கணபதியே வல்வினைகளைப் போக்கி


மஹத்தான உன்னருளை மாரிபோல் பொழிந்திட்டு

பூலோகம் உய்வுபெற புவனேசி கவசமீவாய்

புவனேச்வரித் தாயே புவனமெல்லாம் உய்வுபெற

புண்ணியத்தால் உன்நாமம் போற்றுகிறேன் கேட்டிடம்மா

என் ஹ்ருதயத் துள்ளிருந்து என்னறிவாகியே நீ

சீர்மிக்க மாதாவே சீக்கிரமே வந்திடம்மா

பாக்கியம் பலவேண்டிப் பகர்கின்றேன் கவசத்தை

பாலாம்பிகைத் தாயே பரிவுடனே வந்திடம்மா

படைப்புக்கும் முன்புள்ள பராசக்தித்தாயே கேள்

பாலன் இவனையுமே பார்த்து நீ ரக்ஷிப்பாய்


மூவர்கள் போற்றி ஏத்தும் முதல்வியே புவனேசி

தேவாதி தேவர்களும் தேவியுன்னை வழிபட்டே

சாகாவரம் பெற்று சர்வசக்தி எனப் புகழும்

லலிதாம்பிகைத் தாயே சடுதியில் வந்திடம்மா

மார்க்கண்ட மாமுனிவர் மஹான் துர்வாஸரிஷி

அகஸ்தியரிஷி போன்றோர் அன்னையுன்னை வழிபட்டே

இன்றும் இருந்துகொண்டு இவ்வுலகிற் கருளுவதை

என்னவென்று நானுரைப்பேன் என்தாயே உன் மகிமை

வாராஹி தேவியே வந்திப்பேன் உன் அடியை

பாதம் நகம் விரலைப் பார்வையால் நீ காத்திடம்மா


முழங்கால் இரண்டையுமே மலைமகளே காத்திடம்மா

தொடைகள் இரண்டையுமே துர்க்கை நீ காத்திடம்மா

பின்புறத்தை நாரஸிம்மி பிறழாது காத்திடம்மா

வயிற்றைப் பைரவியே வலியவந்து காத்திடம்மா

மார்பை சிவதூதி மாண்புடனே காத்திடம்மா

வலதிடது தோளை வைஷ்ணவியே காத்திடம்மா

மனோன்மணித்தாயே என் மார்பையுமே ரக்ஷிப்பாய்

மஹாத்ரிபுர சுந்தரி நீ மனத்தையும் காத்திடம்மா

என் ஹ்ருதயத்தில் புவனேசி நீ இருந்து ரக்ஷிப்பாய்

கழுத்தை மாஹேந்திரியும் முகத்தை காத்யாயனியும்


தலையைத் தாக்ஷாயணியும் தலைக்குள் சிவ சக்தித்தாயும்

கண் காது வாய் மூக்கைக் காமாக்ஷியும் காத்திடம்மா

பற்கள் அனைத்தையுமே பத்மாக்ஷி காத்திடம்மா

நாக்கை வாக்தேவி நயமுடன் காத்திடம்மா

புருவங்களிரண்டையுமே பூதேவி காத்திடம்மா

புருவங்களின் நடுவில் ஸ்ரீதேவியிருந்து காப்பாய்

கண்ணொளி யாயிருந்து காப்பாய் காமேச்வரித்தாயே

கண்களின் மணிகளையே காலஹந்த்ரி காப்பாய் நீ

கண்ணிமையைக் காத்திடம்மா காத்யாயனித்தாயே

அங்கங்களனைத்தையுமே ஆதிசக்தி காத்திடம்மா


என்னை நீ ரக்ஷிப்பாய் என் தாயே ரக்ஷிப்பாய்

பூரணி பூமியிலும் மேலே பவானித்தாயும்

திக்குகள் தோறுமே திருபுராம்பா காத்தருள்வாய்

மேல்கீழ் குறுக்கெல்லாம் மூகாம்பா ரக்ஷிப்பாய்

காத்திடம்மா காயத்ரீ கண்ணிமைபோல் காத்திடம்மா

வாராஹி கௌமாரி நாரஸிம்மி ரக்ஷிப்பாய்

சண்டிகை சக்தி கௌரி சங்கடங்கள் தீர்த்திடுவாய்

அஷ்டலக்ஷ்மித் தாயே அமர்ந்திடம்மா என்னுடனே

பிரியா திருந்திடம்மா ப்ரத்யக்ஷம் ஆகிடம்மா

புவனேச்வரித்தாயே புவனமெல்லாம் நிறைந்தவளே


புவனேசி என்றாலே புண்ணியம் பெருகிடுமே

புண்ணிய புருஷர்கள் புவனேசித் திருநாமம்

போற்றிடுவர் போற்றியுமே புண்ணியத்தைப் பெருக்கிடுவர்

திருவடியும் பற்றிடுவர் திருநாமம் ஜெபித்திடுவர்

நாமத்தின் மஹிமையினால் நமனையும் வென்றிடுவர்

ஸகல ஸெளபாக்யமும் ஸாயுஜ்ய முக்தியுமே

தந்திடுவாள் புவனேசி தரித்திரத்தை ஓட்டிடுவாள்

சாந்தியின் வடிவுகொண்ட ஸர்வேசி நமஸ்காரம்

சிரத்தை வடிவான ஸ்ரீமாதா நமஸ்காரம்

காந்தியின் வடிவான காமாக்ஷி நமஸ்காரம்


லக்ஷ்மியின் வடிவான லலிதாம்பா நமஸ்காரம்

விருத்தியின் வடிவான வ்ருத்தாம்பா நமஸ்காரம்

ஸ்மிருதியின் வடிவான ஸ்கந்தமாதா நமஸ்காரம்

தயையின் வடிவான தர்மாம்பா நமஸ்காரம்

துஷ்டியின் வடிவான துக்கஹந்த்ரீ நமஸ்காரம்

மாத்ரு வடிவான மஹாதேவி நமஸ்காரம்

மயக்க மகற்றிடுவாய் மாஹேசி நமஸ்காரம்

தேவியே புவனேசி தினமுன்னை நமஸ்கரிப்பேன்

தீராத வியாதிகளைத் தீர்த்து நீ ரக்ஷிப்பாய்

அகந்தையை ஒழித்திடுவாய் அம்மா புவனேசி


பிறவிப்பிணி தீர்ப்பாய் பிரம்மசக்தித்தாயே கேள்

என் துன்பத்தைத் துடைத்திடவே தீப துர்க்கையாய் வந்திடம்மா

துர்காம்பிகைத் தாயே துரிதத்தை விலக்கிடம்மா

அஷ்டமா ஸித்திகளை அடியேனுக் கருளிடம்மா

மாகாளியாய் வந்து மனமாயையை ஒழித்திடம்மா

சாமுண்டீச்வரியே ஸம்சயத்தைப் போக்கிடம்மா

காளிகா தேவியே காத்திடம்மா என்னையும் நீ

வாராஹியாய் வந்து வழியில் காத்தருள்வாய்

இந்திராணித்தாயே இம்மையில் நீ ரக்ஷிப்பாய்

வைஷ்ணவி மாதாவாய் வந்து வரமருள்வாய்


கௌமாரித் தாயே நீ காத்திடம்மா உள்ளிருந்து

ப்ரஹதாம்பிகைத் தாயே பிரமையையும் போக்கிடுவாய்

துன்பம் துயரத்தைத் துடைத்துக் காப்பாற்றிடவே

காமக் குரோதத்தைக் கலக்கி விரட்டிடவே

சத்துருவாம் பகைவனையும் சம்சய அரக்கனையும்

துஷ்டர்களை விரட்டிடவே வனதுர்கா வந்திடம்மா

பத்துத் திக்கிலுமே பத்ரகாளி காத்திடம்மா

மாதா பாலாம்பிகையே மாயையைப் போக்கிடம்மா

சும்ப நிசும்பனைப் போல் அகந்தையை அழித்திடம்மா

ஸிம்ம வாஹனத்தில் ஜய துர்க்கே வந்திடம்மா


ஜகத் ஜனனி ஜகன்மாதா ஜய புவனேசித்தாயே

மமதையில் மயங்காமல் மாதங்கி காத்திடுவாய்

அனைத்தையும் கொடுக்கும் அன்னபூர்ணேச்வரியே

குறையற்ற கல்வியைக் கொடுத்திடுவாய் கலைவாணி

மஹிஷாசுரனையும் மற்றுமுள்ள தூம்ரனையும்

சண்டனையும் முண்டனையும் ரத்தபீஜாசுரனையும்

அகம்பாவ அசுரர்களை அழித்தவம்மே ஸ்கந்தமாதா

சாமுண்டீஸ்வரியே சந்தோஷமெனக்கருள

சக்தியாய் வந்திடம்மா புவனாம்பிகைத் தாயே

சத்துசித்தின் வடிவான சித்தேச்வரித் தாயே


ஜயந்தி மங்களா காளி ஜயஜய போற்றி போற்றி

பத்ரகாளி கபாலினியே பராபரே போற்றி போற்றி

பூரண புராதனியே புவனேசி போற்றி போற்றி

அகிலாண்டேச்வரியே அன்னையே போற்றி போற்றி

ஆதிபராசக்தியான ஆசோபனா போற்றி

கள்ளம் கபடம் நீக்கும் காமாக்ஷியே போற்றி

கருணைக் கடலான வம்மே காத்யாயனியே போற்றி

ஆயிரம் நாமமுள்ள ஆதி புவனேசி போற்றி

சாந்தி சுகம் தருவாய் ஷண்முகன் தாயே போற்றி

ஹயக்ரீவர் போற்றி ஏத்தும் ஆதிலலிதா போற்றி


சிரத்தா பக்திதரும் சிவகாமி போற்றி போற்றி

கலிதோஷம் அகற்றுவிப்பாய் கல்யாணி போற்றி போற்றி

ஏகாக்ஷரம் தருவாய் வேதவேத்யா போற்றி போற்றி

ஈசனுள் குடியிருக்கும் புவனேசி போற்றி போற்றி

லக்ஷ்மி வாணி போற்றும் லலிதாம்பா போற்றி போற்றி

ஹ்ரீங்கார ரூபமான புவனமாதா போற்றி போற்றி

ஹரிப்ரம்மேந்திரர்கள் அகத்துள்ளோய் போற்றி போற்றி

ஸர்வேசி ஸாக்ஷிரூபே ஸர்வக்ஞே போற்றி போற்றி

ககாரார்த்தா கபாலினி காலஹந்த்ரி போற்றி போற்றி

ஹம்சமந்த்ர மயமான ஹம்ஸவதி போற்றி போற்றி


லகாராக்ய லதாபூஜ்யா ராஜேச்வரி போற்றி போற்றி

ஹ்ரீம் மத்யா ஓங்காரி ஜகன்மாதா போற்றி போற்றி

ஸநகாதி முநித்தேயே ஸச்சிதானந்தே போற்றி போற்றி

கல்யாணீ காதிவித்யே கமலாக்ஷி போற்றி போற்றி

லகாரிணீ லப்தரூபே லப்தசக்தே போற்றி போற்றி

ஹ்ரீங்கார மூர்த்தித் தாயே புவனேசி போற்றி போற்றி

பஞ்ச தசாக்ஷரித்தாயே பவநாசினி போற்றி போற்றி

ஸ்ரீமாதா ஸ்ரீமஹாராஜ்ஞீ சீருடனே வந்திடம்மா

ஸிம்ஹாஸனேச்வரியே சீக்கிரமே வந்திடம்மா

சிதக்னிகுண்ட ஸம்பூதா சித்ரூபி வந்திடம்மா


ஸர்வாபரண பூஷிதையே ஸர்வேசி வந்திடம்மா

சிவாயெனப் பெயர்கொண்ட சிந்தாமணி வந்திடம்மா

மங்களத்தைச் செய்திடம்மா மாதா புவனேஸ்வரியே

ப்ரும்ம விஷ்ணு ருத்ரன் ஈசானன் நால்வருடன்

ஸதாசிவனையுமே பீடமாக்கிக் கொண்ட சிவே

ஐவரான மஞ்சத்தில் அமர்ந்து ஜோதியானவளே

கதம்பவனவாஸினியே காமகோடி வரமருள்வாய்

சாக்தப் பிரணவத்தை சடுதியில் தந்திட்டு

கல்மஷங்களைப் போக்கிக் கலிதோஷ மகற்றிடுவாய்

நகக்கண் வழியாக நாரணனைச் சிருஷ்டித்தோய்


ஹரிஹர ப்ரம்மாக்கள் அனன்யமாய்த் தொழுதேத்தும்

தேவர்களும் முக்தர்களும் தினமும் தொழுதேத்தும்

ஸித்தர்களும் பக்தர்களும் ஜன்மமெல்லாம் தொழுதேத்தும்

புவனேஸ்வரித்தாயே போதுமம்மா இப்பிறவி

மறுபிறவி இனிவேண்டாம் மாதா புவனேஸ்வரியே

பிறவிப்பயன் தந்த புவனேஸித் தாயே கேள்

பற்றினேன் திருவடியைப் பற்றறுப்பாய் புவனேசி

புவனேசி உன்நாமம் பிணியறுக்கும் திருநாமம்

என்றுணர்ந்தேன் உன்னருளால் என்தாயே புவனேசி

மூலமந்த்ராத்மிகையே முக்தியும் தந்திடம்மா


பக்தனுக்கு வசமாகும் பார்வதியே வந்திடம்மா

பயத்தைப் போக்கிவிடும் பரதெய்வமே வருவாய்

நிர்மலா நித்யா நிராகுலா வந்திடுவாய்

மோகநாசினித்தாயே மோகத்தைப் போக்கடிப்பாய்

பாபநாசினி தாயே பாபத்தைப் போக்கிடுவாய்

கோபத்தைப் போக்கடிக்கும் க்ரோத சமனித்தாயே

லோபித்தன மகற்றும் லோபநாசினியே கேள்

சந்தேகம் அகற்றுவிக்கும் ஸம்சயக்னீ கேட்டிடம்மா

பாபநாசினி மாயே பந்தத்தைப் போக்கிடம்மா

பேதபுத்தியை அகற்றும் பேதநாசினியே கேள்


மரணபய மகற்றிடுவாய் ம்ருத்யுமதனித் தாயே

சுகத்தைத் தந்தருள்வாய் சுகப்ரதா சுகமருள்வாய்

துராசாரத்தை யோட்டும் துராசாரசமனீ கேள்

ஸர்வேச்வரீ ஸர்வமயீ ஸர்வ மந்த்ரஸ்வரூபிணியே

மாஹேச்வரீ மஹாதேவி மஹாலக்ஷ்மீ சுந்தரியே

மஹாரூபே மஹாபூஜ்யே மஹாபாதக நாசினியே

பானுமண்டல மத்யஸ்தே பைரவி பகமாலினியே

பத்மாஸனே பகவதி பத்மநாப சகோதரியே

புருஷார்த்த ப்ரதே பூர்ணே போகினி புவவேஸ்வரியே

தத்வாஸனே தத்வமயீ தத்துவத்தை உணர்த்திடுவாய்


குமாரகணநாதாம்பா அஹங்காரம் அகற்றிடுவாய்

ராஜ ராஜேச்வரித் தாயே ராஜ்யலக்ஷ்மீ வரமருள்வாய்

ஸச்சிதாநந்தரூபிணியே ஸதாநந்தம் தந்திடுவாய்

ஸ்ரீசக்ர ராஜநிலயே ஸ்ரீமத் த்ரிபுர சுந்தரியே

ஸ்ரீலலிதாம்பிகைத் தாயே சீக்கிரமே வரமருள்வாய்

வரமருள்வாய் வரமருள்வாய் வந்திப்பேன் புவனேசி

புவனேசி திருவடியைப் புண்ணியத்தால் பற்றிவிட்டேன்

சிக்கெனப் பற்றிவிட்டேன் புவனேசி உன்னடியை

பற்றெல்லாம் அறுத்திடுவாய் பராசக்தி புவனேசி

பிறந்து பிறந்திளைத்தேன் பிறவாவரமருள்வாய்

லக்ஷ்மி குபேர வசியம்

 வியாழக்கிழமை  குபேர பூஜை செய்யுங்கள் ||


எப்போதும் செல்வம் வீட்டில் நிலைத்து நிற்க ஒவ்வொரு வியாழக்கிழமை மாலையில் லஷ்மி குபேர பூஜை செய்யுங்கள்.


குபேர ஹோரையில் லஷ்மி குபேரரை வழிபட செல்வம் நிலையாக வரும். 


பணம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது !!!


சரி குபேர ஹோரை என்றால் என்ன ?

 

வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மிக்கு உரிய நாள் என்பது போல், 


வியாழக்கிழமை குபேரருக்கு உரியது. 


அதிலும் வியாழக்கிழமை மாலை 5.00மணி முதல் இரவு 6.30மணிவரை உள்ள காலத்தை குபேர ஹோரை என்றே சொல்வார்கள்.  


இந்த நேரத்தில் குபேரனுக்கு குத்து விளக்கில் நெய் தீபமேற்றி, அதிரசம், பாயசம், கற்கண்டு, ஊறுகாய் வைத்து குபேரனை வழிபட்டால், கடன் தொல்லைகள் அகன்று, செல்வ பெருக்கம், குடும்ப சந்தோஷம் அதிகரித்தல் என நற்பலன்கள் அதிகரிக்கும் என்பார்கள். 


வீட்டில் செல்வம் சேர சில வழிகளை செய்து பாருங்கள் நம்பிக்கையுடன் !!


வீட்டில் ஏற்றும் இரண்டு காமாட்சி விளக்கில் நெய் போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.


வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத் தட்டுப்பாடு நீங்கும்.


வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர் பணம் கிடைக்கும். 


எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.


நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு நீர் அருந்த தரவும். 

பின் மஞ்சள் குங்குமம் தரவும். 


இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.


அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. 

தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.

அன்று பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. 

முதலில் பித்ருக்களை வழிபட்ட பிறகே எந்த பூஜையும் செய்ய வேண்டும்.


வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.

பணம் ஓடிவிடும்.


பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் அதாவது மஹான்களின் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.


வெள்ளிக்கிழமை  சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மஹாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது  குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும்.


அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும்.


யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன் உச்சம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ர ஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.


பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும்.45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.


முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.


வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.


பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும். [அது துலா லக்னம் மற்றும் ரிஷப லக்னம்]


பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.


பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டித லையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் காவிரி நீரில் விடவும் பணப் பிரச்சனை தீரும்.


தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை  உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.


குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் பின்னர் முகம் மற்றும் தலையை துடைக்கவும் தரித்திரம் விலகும்.


தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர்  ஆகலாம்.


பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.ஆனால் விடாமல் முயற்சி செய்து பாருங்கள்.


அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப்பெட்டியில் வைக்கபணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது.


குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் மஹாலஷ்மி கடாட்சம் ஏற்படும்.


தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு ஸ்துதி, விஷ்ணு சஹஸ்ரநாமம் கனகாதார ஸ்தோத்ரத்துடன் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்ய வாசம் செய்வாள்.


மஹாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபட வசிய முண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.


அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமை வரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும்.


வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.


ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று வீட்டில் சத்திய நாராயண பூஜை தொடர்ந்து செய்ய செல்வங்களை பெறலாம்.


ஐப்பசி மாத வளர்பிறையில் மஹாலட்சுமியை  வழிபடசெல்வம் பெருகும்.


தொடர்ந்து  11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்கு சொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை மாலைஅணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபட சொர்ணம் ஆகர்ஷணமாகும்.


மகாலட்சுமிக்கும், குபேரருக்கும் திரிதள வில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை அணிவித்திட பணம் குவியும்.


ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்து அவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.


சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.


வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்க செல்வம் சேரும்.


மஹாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதள வில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும்.


சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திடசெல்வம் சேரும்.


சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.


சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர் பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.


பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகலசெல்வங்களும் வசமாகும்.


வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன் வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும்.


மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.


ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம் ஆகர்ஷணமாகும்.


தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி  படத்தில்காலை எழுந்தவுடன் கண் விழித்திட பண வரத்து கிடைக்கும்.


தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம் நிலையாக தங்கும்.


சொர்ணாகர்ஷண பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட,தொடர்ந்து 9 வாரம் செய்து வர குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.


குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் பணம் வரும்.


குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும் இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.


திருமலை வெங்கடாஜலபதிக்கு  வெண் பட்டு அணிவித்து வழிபட செல்வம் சேரும்.


துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.


சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம்கிட்டும்.


செவ்வாய் கிழமையில் செவ்வரளி கொண்டு முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம்பெருகும்.


ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபடபூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.


கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக் கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்து பணப் பெட்டியில் வைக்க பணம் சேரும்.


சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்ன தானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்கு நம்மிடம் வந்து சேரும்.


ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு அணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும் நெற்றியில் இட்டு வர பணம் வரும்.


வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டுஅர்ச்சிக்க  தனலாபம் கிட்டும்.


ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவி பணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும்.


தொடர்ந்து 18 நாள் ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேதபண்டிதர்களை கொண்டு செய்ய லஷ்மி கடாஷம் நிரந்தரமாகும்.


ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூப ஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம் நீங்கி தனலாபம் பெறலாம்.


கனக தாரா ஸ்தோத்திரத்தினை தினமும் கூறியும் கேட்டு வர பணம் கிடைக்கும்.


வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்து மஞ்சளாக பிடித்து அவர்களை  நினைத்து வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.


மஹாலட்சுமிக்கு  பச்சை பட்டினை அணிவித்து வணங்க பணம் வரும்.


கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மஹா சங்கடஹர சதுர்த்தியில் அர்ச்சித்து வணங்க தொழிலிலுள்ள தடை நீங்கி தனலாபம் கிட்டும்.


அல்லது கணபதி ஹோமம் மற்றும் ஸ்ரீ ஸுதர்சன ஹோமம் மாதம் ஒருமுறை செய்தால் பணம் தடையின்றி கிடைக்கும்.


பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டிதினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும் வசமாகும்.


செல்வத்திற்கு உரியவள் மஹாலஷ்மி வெள்ளிக்கிழமை தினம் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை வழிபாட்டால் பணம் கிடைக்கும்.


தினமும் லஷ்மிகுபேரரை மனதார வழிபட பணம் தடையின்றி கிடைக்கும்.


இந்திராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வு வாழ பணம் கிடைக்கும்.


வியாழன் அன்று குரு ஓரையில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்ய செல்வம் சேரும்.


வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன்,மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 33வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.


செந்தாமரையில் அமர்ந்துள்ள அஷ்ட லஷ்மியை வழிபட பணம் கிடைக்கும்.


கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் நாராயண சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.


அவரவர் குல தெய்வத்தை தினம் அதிகாலை நேரத்தில் நம்பிக்கையுடன் வழிபட பணம் கண்டிப்பாக வரும்.


அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில்முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்த அளவின் மடங்குகள் பணம் வரும்.


திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி தாயார் படம் வைத்து தினமும் வழிபட பணம் வரும்.


தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திர சாஸ்திரப்படி பூஜை செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.


சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடி கணக்கில் பணம் கிடைக்கும்.


ஆந்தையை தினமும் வழிபட பணம் கிடைக்கும்.


ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம்,அடிக்கடி பார்க்க பணம் வரும்.


தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம் குறையாது.


பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் மற்றும் ஆசனவாயை தொட்டு வணங்க பணம் ஏதாவது ஒரு வழியில் கிடைக்கும்..


குபேர காயத்ரி மந்திரம்


ஓம் யஷ ராஜாய வித்மஹே

வைஷ்ரவணாய தீமஹி

தந்நோ குபேர ப்ரசோதயாத்.


108 முறை


அடடா இதெல்லாம் செய்து பார்த்து விட்டேனே ஆனால் எனக்கு ஒன்றுமே கிடைக்கவில்லையே என்றால் அது உங்கள் கர்மா.


சிறிய உதாரணம் குழந்தைகள் கீழே விழுந்துவிட்டால் மீண்டும் எழும் மீண்டும் விழுந்து விட்டால் மறுபடியும் எழும் அல்லது முயற்சி யாவது செய்யும்.


அதே போல் தான் நாமும் கிடைக்கவில்லை என்றால் மீண்டும் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.


தர்மோ ரஷதி ரஷிதஹ 🙏🏻🙏🏻


ஜெய் ஸ்ரீராம்

சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

சிவபெருமான் பற்றிய சிறப்பு செய்திகள்

 🐘🐘🐘🐘உ🐘🐘🐘🐘

🙏🚩🍁சிவ சிவ🍁🚩🙏

🙏🔥ஓம் நமசிவாய🔥🙏




*🔥சிவபெருமான் பற்றிய சிறப்பு செய்திகள்*


சிவபெருமான் ஒவ்வொரு கோவில்களிலும் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.


* பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவ பெருமானை வழிபட்டதால் சிவ லிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் 🔥பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திரு நாமத்துடன் அருள்பாலிக்கிறார்.


* ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்தபோது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை ரத்தினகிரியில் காணலாம். இங்கு சிவபெருமான் 🔥ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.


 

* தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் அங்கு சங்கு வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார் ஈசன். இறைவனுடைய பெயர் 🔥சங்காரண்யேஸ்வரர்.


* கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் 🔥சிவன் நெய் மலையாக காட்சி தருகிறார். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.


* அமர்நாத்தில் உள்ள பனிலிங்கம் சந்திரனைப்போலவே 15 நாளில் வளர்ந்து பௌர்ணமியில் முழு 🔥லிங்கமாகவும் அடுத்த 15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.


* கரூர் 🔥பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடதுபுறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.


* அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திருவிஜயமங்கையில் தரிசிக்கலாம். இங்கு இறைவன் 🔥விஜயநாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.


* செம்பனார்கோயிலில் உள்ள சிவபெருமான் 🔥சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயருடன் 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.


* காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் 🔥சிவன் எட்டுக்கைகளுடன் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்.


* மகாராஷ்டிரா மாநிலம் எல்லோரோ குகைகளுக்கு அடுத்து உள்ள “குஸ்மேசம்’ என்னும் ஊரில் உள்ள சிவலிங்கம் குங்குமத்தால் ஆனது.


* பொதுவாக பெருமாள் கோயிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோயில்களில் மட்டும் சடாரி வைக்கப்படுகிறது. அவை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில், மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில் ஆகும்.


* திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமௌலீஸ்வரர். அவர் மும்முகலிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவ முகமாகவும், தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகின்றனர்.


* ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள “அனுமன் காட்டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம். ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.


* பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெயாக மாறுகிறது. இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.


* தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர் இருக்கிறார்.


* ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில் அருள்புரிகிறார். 1. காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வர் மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சி கைலாசநாதர் கோயில்.


* தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நாலூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாபழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் பிலாச வனேஸ்வரர்.


* மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திபருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல் கரத்தில், மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

      திருசிற்றம்பலம்

சிறுகதை, மரணத்தில் விதியும் மதியும்

 சிறுகதை, மரணத்தில் விதியும் மதியும் 


#விதியை_மதியால்_நிஜமாகவே_வெல்ல__முடியுமா ??????


ஒரு மிகப்பெரிய மலையின் அடிவாரத்தில் அழகிய காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டில் ஒரு பறவை மிகவும் இன்பமாக சுற்றித்திரிந்து உலா வந்துகொண்டிருந்தது.


அப்பொழுது மலைமீது ஆகாயத்தில், மேகங்களுக்கு இடையில் சில தேவர்கள் வேகமாக மிதந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களைக் கண்ட அந்த அழகிய பறவை ஒரு பெரிய மரத்தின் மேல் உள்ள கிளையில் தன் இறகுகளை மடித்து சற்றே அமர்ந்தது.


ஆகாயத்தில் முதலில் அக்னி தேவன் செல்வதையும் அவர் பின்னால் வாயு தேவன் மற்றும் அனைத்து தேவர்களும் செல்வதைக் கண்டு பறவை ஆச்சரியமடைந்தது.


அனைத்து தேவர்களுக்கும் பின்னால் தேவேந்திரன் செல்வதையும் பறவை கவனித்தது. பறவைக்கு தேவர்கள் அனைவரும் எங்கு செல்கிறார்கள் என்று புரியவில்லை.


"சரி, நம் வேலையை பார்ப்போம்" என்று எண்ணி பறவை அருகிலிருந்த மாமரங்களில் இருந்து விழுந்திருந்த மாம்பழங்களை கொத்திக் கொண்டு இருந்தது.


வயிறார சில மாங்கனிகளை உண்ட பின்னர் சற்று இளைப்பாற எண்ணி ஒரு மரக்கிளையில் சாய்ந்தது.


அப்பொழுது அனைத்து தேவர்களும் ஆகாயத்தில் ஏதோ பேசிக்கொண்டு தேவலோகத்திற்கு திரும்பிச் செல்வதை உறங்கும் கண்களோடு பறவை கவனித்தது.


பறவை ஒரு நிமிடம் அதிர்ந்து போனது. அதன் அதிர்ச்சிக்கு என்ன காரணம் தெரியுமா?


அனைத்து தேவர்களையும் கண்ட பறவை இறுதியில் எமதர்ம ராஜன் கதையையும் பாசக் கயிற்றினையும் சுமந்துகொண்டு நடந்து வரும் காட்சியை கண்டதனால்தான்.


பறவை சற்று அச்சம் அடைந்தது. ஒருவர் இறக்கும் தருவாயில் அல்லவா எமதர்மனை காண இயலும். அப்படி எனில் தாம் மரணமடைய போகின்றோமா என்றெல்லாம் பறவை சிந்தித்தது. ஆனால் எமதர்மன் தன்னைக் காணவில்லை என்று பறவை நிதானம் அடைந்தது.


என்ன ஆச்சரியம்! அடுத்த நொடியே எமதர்மன் தன் தலையை திருப்பி தொலைதூரத்தில் உள்ள கானகத்தில் உள்ள மரக்கிளையில் சாய்ந்து கொண்டிருந்த பறவையை பார்வையிட்டான்.


அந்த பார்வையே பறவையை நிலைகுலையச் செய்தது.


எமதர்மர் சில வினாடிகள் பறவையை நோக்கிவிட்டு தேவர்களை பின் தொடர்ந்து சென்றுவிட்டார்.


இந்த அச்சமயமான சம்பவம் பறவைக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை எமதர்மன் என்னைத்தேடி இந்த கானகத்திற்கு வந்துவிட்டால் என்செய்வேன்? எங்கே போவேன்? இந்த அச்சத்திலிருந்து எப்படி நான் விடுதலை அடைவேன்?


சிறிது நேரம் சிந்தித்ததில் பறவைக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அது என்னவென்றால் தான் எமனின் பிடியிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் எம்பெருமான் மகாவிஷ்ணுவை துதிக்க வேண்டும் என்று முடிவு செய்தது.


கண்களை இறுக மூடிக்கொண்டு நாராயணனை அகக்கண்ணால் வழிபடத் தொடங்கியது.


கண்ணில் கண்ணீர் மல்க பரந்தாமனை துதி பாடியது பறவை!


பறவையின் இசை கேட்டு இன்பமுற்று நாராயணர் தன் கருட வாகனத்தில் ஏறி பறவையைக் காண கானகத்திற்கு வந்தார்.


"பறவையே! உனது கண்களை திறவாய்!உனது பக்தி மயமான துதியைக் கேட்டு யாம் அகம் மகிழ்ந்தோம்! உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள்" என்று நாராயணர் புன்னகையுடன் வினவினார்.


பறவை மெதுவாக கண்களைத் திறந்து, "ஐயனே! வைகுண்ட வாசா! உனது வைகுண்டத்தில் எனக்கு ஒரு சிறு இடம் அளிப்பாயா? எமதர்மராஜன் என்னை தன் கண்களால் மிரட்டி விட்டுச் சென்றார். நீ அறியாதது ஒன்றுமில்லை. என்னை நீயே காப்பாற்ற வேண்டும்!" என்று நெகிழ்ச்சியுடன் உரைத்தது.


நாராயணரும், "அப்படியே ஆகட்டும்!" என்று பறவைக்கு அருள்மொழி மொழிந்தார்.


பறவை மிக்க மகிழ்ச்சி அடைந்தது. சில நொடிகளிலேயே நாராயணர் பறவையை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்.


வைகுண்டத்தை அடைந்த பறவை அளப்பரிய இன்பத்தைப் பெற்றது. நாராயணர் வைகுண்டத்தில் ஒரு குளத்திற்கு அருகில் உள்ள சிறிய பாறையை பறவைக்கு காண்பித்து, "பறவையே! நீ இந்த குளத்தை சுற்றியும், பாறைக்கு அருகிலும் எங்கு வேண்டுமெனிலும் சுற்றித்திரிந்து விளையாடிக் கொள்ளலாம்! வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டாம்." என்று கூறி விட்டு தன் பத்தினியான மகாலட்சுமியை காணச் சென்றார்.


பறவை ஆனந்தமடைந்து குளத்திற்கு அருகில் சிறிது நேரம் விளையாடியது. பின்னர் பாறைக்கு பின்னே உள்ள சின்னஞ்சிறு செடிகளில் உருண்டு பிரண்டு இன்புற்றது. ஆனால் சற்று நேரத்திலேயே குளமும் பாறையும் பறவைக்கு சலித்துப் போயின.


பறவை சற்று தூரத்திற்கு பறந்து சென்றது. வைகுண்டத்தின் பரந்துவிரிந்த இயற்கை அழகினை கண்டது. குளத்திற்கு சற்று தூரத்திலுள்ள ஒரு பெரிய மாமரத்தை கண்டது. அதன்மேல் பறவை சென்று அமர்ந்தது. சில மாங்கனிகளை உண்டது. சற்று நேரத்திலேயே எங்கிருந்தோ வந்த ஒரு வேடனது அம்பானது அந்தப் பறவையின் இதயத்தை துளைத்தது. பறவை தன் கண்களில் நீர் மல்க மரத்திலிருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.


அப்பொழுது எமதர்மராஜன் பறவைக்கு அருகில் நடந்து வந்து அமர்ந்துகொண்டார். பறவை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தருணத்தில் எமதர்மரிடம், "பிரபு! தாங்கள் என்னை கண்டுவிட்டீர்கள் என்று அச்சம் அடைந்து எனது வசிப்பிடத்தை நீங்கி வைகுண்டம் அடைந்தேன். ஆனால் தாமோ இங்கு வந்த எனது உயிரை பறித்துவிட்டீர்! விதியை மதியால் வெல்ல நினைத்து இறுதியில் தோல்வியையே சந்தித்தேன். என்னாளிலும் விதியை வெல்ல ஒருவராலும் முடியாது என்று நான் நன்கு உணர்ந்து கொண்டேன்" என்று உரைத்தது.


எமதர்மராஜன் பறவையின் கூற்றைக் கேட்டு மெல்ல சிரித்தார். "அன்பிற்குரிய பறவையே! நான் ஏன் உன்னை மலையிலிருந்து கவனித்தேன் என்று நீ அறிவாயா? நீ உயிர்விடும் தருவாயில் வைகுண்டத்தில் இருக்க வேண்டும் என்பதே உனது விதி! ஆனால் நீ இருந்ததோ இந்த வைகுண்டத்தில் இருந்து தொலை தூரத்திலுள்ள உனது வசிப்பிடத்தில். நீ ஒரு வேளை உனது வசிப்பிடத்தை நீங்கி இங்கே வந்து இருக்காவிடில் நான் உனது உயிரை பறித்து இருக்க இயலாது. என் பணியை நீயே எளிதாக்கிவிட்டாய்! மதியை செயல்படச்செய்வதும் செயல் இழக்கச்செய்வதும் விதியே ஆகும். ஆனால் ஒன்றை அறிந்துகொள்! விதி என்றும் சதி செய்யாது! விதி நமக்கு இறுதியில் மிகப்பெரிய நன்மையைத் தரும். இன்று நீ மட்டும் வைகுண்டம் வரவில்லை எனில் இன்னும் பல ஆயிரம் பிறவிகள் எடுத்திருப்பாய்! நீ வைகுண்டத்தில் உயிர் துறப்பதால் மறுபிறவியின்றி இறைவனடி இணைந்தாய்! எல்லாம் நன்மைக்கே! விதி என்ன நிகழ்வை நிகழ்த்தினாலும் அதன் சூழ்ச்சமத்தை புரிந்துகொள்பவரே மதியில் சிறந்தவராவார்!" என்று எமதர்மர் எடுத்துரைத்தார்.


இந்த அற்புத உண்மையைக் கேட்டு பறவை ஆனந்தக் கண்ணீருடன் தன் இறுதி பிறவியிலிருந்து விடுதலை பெற்றது.


இனி நீங்களே கூறுங்கள்!


விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா அல்லது அந்த நிகழ்வும் விதியின் விளையாட்டா?

பல்லிகேஸ்வரர்

 *பல்லிகேஸ்வரர்*



#அனைத்து சிவ சொந்தங்களுக்கும் இனிய காலை வணக்கம் ...!🙏🙏🙏


#திருச்சிற்றம்பலம் ...!🔥🔥🔥


! அர்த்தஜாம அழகர் ! 🍀🍀🍀


🧞‍♂️ சிதம்பரம் நடராஜர் கோவில் அர்த்தஜாம பூஜை (இரவு பூஜை) மிக விசேஷமானது. அனைவரும் பார்க்க வேண்டிய நிகழ்வு. சைவத்தின் தலைநகராக கொண்டாப்படும் சிதம்பரத்தில் அர்த்தஜாமம் மிக தாமதாக அனைத்து சிவாலயங்களிலும் அர்த்தஜாமம் முடிந்த பிறகு இரவு 9 மணிக்கு மேல் நடைப்பெறும். 


🧞‍♂️ இதனைக் கண்டால் அனைத்து சிவாலயங்களிலும் அர்த்தஜாமம் கண்ட பலனை தரும். அனைத்து கோயில்களிலும் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் பைரவ மூர்த்திக்கு வழிபாடு நடத்தப்படும். அவருடைய வழிபாட்டுடன் அன்றைய பூஜை முடிந்ததாகக் கருதப்படும். 


🧞‍♂️ சிதம்பரத்தில் நடராஜர் பள்ளியறை சேர்ந்த பின் பிரம்மசண்டிகேஸ்வரர், பைரவ வழிபாட்டுக்குப் பிறகு, அர்த்தஜாம அழகர் எனப்படும் க்ஷேத்திர பாலகன் பூஜிக்கப்படுகிறார்.ஜோதிடன் ஒருவன் பலரது சாபத்தால் மறுபிறவியில் பல்லியாகப் பிறந்தான். அப்படி அவன் பிறந்த இடம் சிதம்பரம். 


🧞‍♂️ சித்சபையின் கொடுங்கைகளில் வசித்த பல்லிக்கு புண்ணியவசத்தால் சிவ பக்தி உண்டானது,நடராஜப் பெருமானின் திருவருள் கைகூடியது, அழகிய சிவகணமாகும் பேறு கிடைத்தது, கோயிலை இரவில் காக்கும் வேலையும் கிடைக்கப்பெற்றது. அவரே அர்த்தஜாம அழகர்.

 

🧞‍♂️ சித்சபையின் ஈசான பாகத்தில் தேவ சபையின் மேற்குச் சுவரில் அமைந்துள்ள மாடத்தில், சித்சபையை நோக்கியவாறு அர்த்தஜாம அழகர் காட்சி தருகிறார். சித்சபையின் கூரையில் பிரம்மசண்டிகேஸ்வரரின் சந்நிதிக்கு அருகில் அந்த பல்லியும் பொறிக்கப்பட்டுள்ளது. 


🧞‍♂️ அர்த்தஜாம அழகர், ஈஸ்வர அம்சம் என்றும், பைரவ அம்சம் என்றும், துவாரதேவதா அம்சம் என்றும், தர்மராஜர் அம்சம் என்றும் பலவித கருத்துக்கள் உண்டு.


🧞‍♂️ நாள்தோறும் பள்ளியறைபூஜை, பைரவ பூஜையைத் தொடர்ந்து, அர்த்தசாம அழகருக்கு வழிபாடு நடைபெறும். அப்போது மணம் பொருந்திய தாம்பூலத்தை நைவேத்தியம் செய்வார்கள்.

 இவர் பல்லி வடிவில் வழிபட்ட ஈஸ்வரன், பல்லிகேஸ்வரர் என்ற பெயரில் இரண்டாம் பிராகாரத்தில் தட்சிணா மூர்த்திக்கு அருகில் எழுந்தருளியுள்ளார். 


🧞‍♂️ அர்த்தஜாம அழகரை வழிபட்டால், களவு போன அல்லது தொலைந்து போன பொருட்கள் திரும்பக் கிடைத்திடும், செல்வங்கள் நிலைத்து நிற்கும், கடன் தொல்லைகள் நீங்கும், செல்வங்கள் சேர்ந்திடும் என்பது நம்பிக்கை...!👣👣👣

பூசணிக்காய் சாம்பார்

 நமது ஆதிசிவன்ஆன்மீக  குழுவிலிருந்து


நாம் நன்றாக வசதி வாய்ப்புகளுடன் வாழ்வதை பார்த்து, வயிற்றெரிச்சல் படுபவர்களுடைய கண் பார்வையிலிருந்து, கண் திருஷ்டியில் இருந்து எப்படி தப்பிப்பது?



தன்னுடைய குடும்பம் சந்தோஷமாக வாழ்கிறதா இல்லையா என்பதை சிலபேர் பார்ப்பதே கிடையாது. அடுத்தவங்க குடும்பத்தில் என்ன நடக்குது. பக்கத்து வீட்டுக்காரங்க எப்படி வழறாங்க, சொந்தக்காரர்கள் நண்பர்கள் எப்படி வாழறாங்க, என்பதை நோட்டம் விட்டுக்கொண்டே இருப்பார்கள். அடுத்தவர்கள் நன்றாக வாழ்ந்தால் சில பேருக்கு அது பிடிக்கவே பிடிக்காது. ‘இவனுக்கெல்லாம் இவ்வளவு பெரிய வாழ்க்கையா இவனுக்கு வந்த வாழ்வைப் பாரு’ என்று அடுத்தவர்களைப் பார்த்து பொறாமை படுபவர்களின் எண்ணிக்கைதான் இந்த காலத்தில் அதிகமாக உள்ளது. இதற்காக ஒட்டுமொத்தமாக எல்லாரையும் பார்த்து பொறாமை படுபவர்கள், என்று சொல்லிவிட முடியாது. அடுத்தவர்கள் நன்றாக இருப்பதைப் பார்த்து சந்தோஷப்படும் சில நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கிறது.


சரி, நம்முடைய வீட்டில் ஒரு விசேஷம் வைத்திருக்கின்றோம். அது திருமணமாக இருக்கலாம் அல்லது புதுமனை புகுவிழா வாக இருக்கலாம் அல்லது வளைகாப்பு, மஞ்சள் நீராட்டு விழா, பிறந்தநாள் கொண்டாட்டம், இப்படி எந்த விழாவாக இருந்தாலும் சரி அந்த விழாவிற்கு வருகை தருபவர்கள் எல்லோருமே நல்ல எண்ணம் கொண்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது.



உங்களுடைய வீட்டு விசேஷத்திற்கு வருபவர்கள் எல்லாருமே உங்களுடைய சொந்தக்காரர்கள் நண்பர்களாக இருந்தாலும், உங்களுடைய இந்த ஆடம்பரமான விசேஷத்தை பார்த்து நிச்சயமாக ஒரு சிலராவது கண் திருஷ்டி வைப்பார்கள். வயிற்று எரிச்சல் படுவார்கள். அந்த கண் திருஷ்டியில் இருந்து அவர்களுடைய வயிற்றிலிருந்து நாம் எப்படித் தப்பிப்பது? இதைப்பற்றித்தான் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.


முதலில் இந்தப் இந்த பரிகாரத்திற்க்கு நாம் பயன்படுத்த போக்கும் பொருள் பூசணிக்காய். இதை கல்யாண பூசணிக்காய் என்றும் சொல்லுவார்கள். உங்க வீட்டு விசேஷங்களில் இந்த கல்யாண பூசணிக்காயை வைத்து சாம்பார் வைத்து, வீட்டிற்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு விருந்து வைக்க வேண்டும். அவ்வளவு தான். இந்த சாம்பாரில் இருக்கும் பூசணிக்காயை சாப்பிட்டு முடித்த பின்பு அவர்களுக்கு ஏற்படும் கெட்ட எண்ணங்கள் ஆக இருந்தாலும் சரி, அவர்கள் உங்களுக்கு சாபம் கொடுத்தாலும் சரி, அவர்கள் வயிறு எரிந்து உங்கள் மீது கண் திருஷ்டி போட்டாலும் சரி, அந்த எதிர்மறை ஆற்றல் அனைத்தும் நேர்மறை ஆற்றலாக மாறி விடும்.


பூசணிக்காவிற்கு ஆன்மீக ரீதியாக ஒரு மகத்துவம் உண்டு. அதாவது பூசணிக்காயை சாப்பிடுபவர்கள் உடைய மனதை குளிரச் செய்யக்கூடிய சக்தி இந்த பூசணிக்காய்க்கு உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த பூசணிக்காய்க்கு கல்யாணப் பூசணிக்காய் என்று பெயர் வந்ததற்கு காரணம் என்ன தெரியுமா.



அந்த காலத்திலெல்லாம் கல்யாண வீடுகளில் விருந்து என்றால், அந்த விருந்தில் கட்டாயமாக இந்த பூசணிக்காயில் தான் சாம்பார் வைப்பார்களாம். காரணம் கல்யாணத்திற்கு வருபவர்களுடைய கண்திருஷ்டி ஆக இருக்கட்டும் ‘அட இவர்களுக்கெல்லாம் இவ்வளவு பெரிய வாழ்வா? இத்தனை ஆடம்பரமாக திருமணம் செய்கிறார்களே’ என்று நினைக்கும் பொறாமை குணம் ஆக இருக்கட்டும், அந்த கெட்ட எண்ணம் கல்யாணம் நடத்துபவர்களுடைய வீட்டிற்கு எந்த ஒரு பாதிப்பையும் தரக்கூடாது என்பதற்காகத்தான் பூசணிக்காய் சாம்பார் வைக்கப்பட்டது.


ஆனால் காலப்போக்கில் அது மாறிவிட்டது. பூசணிக்காய் என்றாலே அது திருஷ்டிக்கு மட்டும் பயன்படுத்தக் கூடிய பொருள் என்று மாற்றி விட்டோம். திருஷ்டிக்கு பயன்படும் இந்த பூசணிக்காய், அடுத்தவர்களுடைய வயிற்றெரிச்சலை தணிப்பதற்கும் அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்பது நம்மில் பல பேருக்கு தெரியாது.



இனி உங்கள் வீட்டில் ஏதாவது விசேஷமாக இருந்தாலும் சரி அல்லது உங்களுடைய வீட்டில் ஏதாவது விருந்துக்கு ஏற்பாடு செய்தாலும் சரி அதில் பூசணிக்காயை வைத்து ஒரு பலகாரம் செய்து விடுங்கள். பூசணிக்காயை சாம்பார் தான் வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பூசணிக்காய் அல்வா செய்து கொடுத்தாலும் சரி தான். ஆகமொத்தத்தில் வீட்டிற்கு வருபவர்கள் பூசணிக்காயை சாப்பிட்டு விட்டால் அவர்களுடைய எதிர்மறை எண்ணங்களின் மூலம் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. விஷயம் அவ்வளவுதாங்க. எதிரிகளை சமாளிக்க சூட்சமமான சுலபமான வழிகளில் இதுவும் ஒன்று. நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி கொள்ளலாம்.


நன்றி. 🙏