Wednesday, 29 September 2021

ஒளவை மூதுரை

 

மூதுரை

வாக்குண்டாம். பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் கடவுள் வாழ்த்து உட்பட 31 வெண்பாக்கள் உள்ளன.


கடவுள் வாழ்த்து



வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

பொருள்: பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது 
பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், 
பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும் 
கிடைக்கும்

நூல்

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
'என்று தருங்கொல்?' என வேண்டா- நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.

பொருள்: ஒருவர்க்கு உதவி செய்யும்போது, அதற்கு ப்ரதியுபகாரமும், 
நன்றியும் எப்போது கிடைக்கும் என்று கருதி செய்யக்கூடாது.  
எப்படிப்பட்ட நீரை வேர் மூலம் உண்டாலும், நன்கு தளராது 
வளர்ந்துள்ள தென்னை மரம் அந்நீரை சுவையான இளநீராக தந்து 
விடும்.  அதுபோல ஒருவர்க்கு செய்த சிறு உதவியும் பெரிய 
விதத்தில் நமக்கு ஒரு காலம் நிச்சயம் நன்மை பயக்கும்.

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.

பொருள்: நல்லவர்களுக்கு செய்யும் உதவி, கல்லின் மேல் 
எழுத்தைச் செதுக்குவது போன்றது.  அது எவரும் அறியும் 
வண்ணம் என்றும் நிலைத்திருக்கும்.  அப்படியல்லாது 
இரக்கமற்றவர்களுக்கு செய்யும் உதவி எவர்க்கும் பயன்தராது.  
அது நீரின் மேல் எழுதும் எழுத்துக்களைப் போன்று பயனின்றி 
நிலைக்காது போகும்.


இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்
இன்னா அளவில் இனியவும்- இன்னாத
நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே
ஆள் இல்லா மங்கைக்கு அழகு.

பொருள்: இளமையில் வறுமையும், இயலாத முதுமையில் செல்வமும் 
பெற்றால் அதனால் துன்பமே.  அனுபவிக்க முடியாது.  அது 
பருவமில்லாத காலங்களில் பூக்கும் பூக்களைப் போன்றது.  அதைப் 
போல் துணைவனில்லாத பெண்களின் அழகும் வீணே.

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

பொருள்: நற்பண்பு இல்லாதோரிடம் நன்கு பழகினாலும் அவர்கள் 
நண்பர்களாக மாட்டார்கள்.  நம் நிலை தாழ்ந்தாலும் 
நற்பண்புள்ளோர் சிறந்தவர்களாகவே பழகுவர். அவர்கள் நட்பு 
எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாத பாலைப் போன்றது.  
தீயிலிட்டு சுட்டாலும் மேலும் மேலும் வெளுக்கும் சங்கினைப் 
போன்றது அவர் நட்பு.


அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.

பொருள்: கிளைகளோடு கூடிய நீண்ட மரங்களும் பருவத்தில் 
மட்டும் பழங்களைத் தரும்.  அது போல மேன்மேலும் முயன்றாலும் 
நாம் செய்யும் கார்யங்கள் தகுந்த காலம் கூடினால் மட்டுமே பயன் 
தரும்.


உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ?-கல்தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்
தளர்ந்து விளையுமோ தான்.

பொருள்: கல் தூண் ஓரளவுக்கு மேல் பாரத்தை ஏற்றினால் 
உடைந்து விழுந்து விடுமேயல்லாது, வளைந்து போகாது.  அது 
போலவே மானக்குறைவு ஏற்பட்டால் உயிரை விட்டு விடும் 
தன்மையுள்ளவர்கள் எதிரிகளைக் கண்டால் பணிவதில்லை.

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்.

பொருள்: அல்லிப்பூ நீரின் அளவு எவ்வளவு இருக்கிறதோ 
அவ்வளவே வளரும்.  நாம் கற்ற நூல்களின் அளவே நம் அறிவு.  
முற்பிறப்பில் செய்த புண்ய கார்யங்களின் அளவே நாம் இப்போது 
அனுபவிக்கும் செல்வம்.  குணம் நாம் தோன்றிய குலத்தின் 
அளவே.


நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

பொருள்: நல்லவர்களைக் காண்பதும், நமக்கு நன்மை பயக்கும் 
அவர் சொல்லைக் கேட்பதுவும், அவர்கள் குணங்களை 
மற்றவரிடத்தில் சொல்வதுவும், அவர்களோடு சேர்ந்து இருப்பதுவும் 
நல்லது.

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

பொருள்: தீயவர்களைப் பார்ப்பதும், பயனற்ற அவர் சொல்லைக் 
கேட்பதுவும், அவர்களைப் பற்றி அடுத்தவர்களிடத்தில் 
சொல்வதுவும், அவர்களோடு சேர்ந்து இருப்பதுவும் நமக்குக் 
கெடுதியே.

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

பொருள்:  உழவன் நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் அங்கிருக்கும் 
புல்லுக்கும் பயனைத் தரும்.  அது போலவே இந்தப் பழமையான 
உலகில் நல்லவர் ஒருவர்க்காகப் பெய்யும் மழை (பலன்கள்) 
எல்லாருக்குமே பயனைத் தரும்.

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம்-கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல்.

பொருள்:  நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே 
ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை.  அது போலவே 
பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் 
துணையின்றி முடிவதில்லை.

மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா-கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்.

பொருள்: தாழம்பூவின் மடல் பெரிதாக இருந்தாலும் வாசம் 
தருவதில்லை.  ஆனால் அதனின் சிறிய மகிழம்பூவோ நல்ல 
வாசனையைத் தருகிறது.  பெருங்கடலின் நீர் துணி தோய்க்கக் கூட 
உதவுவதில்லை, ஆனால் அதனருகிலேயே தோன்றும் சிறு ஊற்று 
குடிப்பதற்கும் நல்ல நீரைத் தருகிறது.  எனவே உருவத்தை வைத்து 
ஒருவரை எடை போடக் கூடாது.

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்-சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம்.

பொருள்: கிளைகளோடும், கொம்புகளோடும் காட்டில் நிற்பவை 
மரங்கள் அல்ல.  சபையின் நடுவே ஒருவர் தரும் ஓலையில் 
எழுதியிருப்பதைப் படிக்கத் தெரியாதவனும், அடுத்தவர் மனதை 
அறியாதவனுமே மரம் போன்றவன்.

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து-தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

பொருள்: காட்டில் மயில் ஆடுவதைப் பார்த்த வான்கோழி உடனே 
தன்னையும் அதைப் போலவே நினைத்து தன்னுடைய அழகில்லாத 
சிறகை விரித்து ஆடுவதை போன்றதே, கல்வி கற்காதவன் 
சொல்லும் கவிதையும், அதனால் ஒரு பயனும் இல்லை.  விஷயமும் 
இல்லை.

வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல்-பாங்குஅழியாப்
புல் அறிவாளருக்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம்.

பொருள்: புலிக்கு நோயைக் குணமாக்கிய விஷத்தைப் போக்கும் 
வைத்யன் உடனே அதற்கே உணவாவது நிச்சயம், அதைப் 
போன்றதே நன்றி அறியாத அற்பர்களுக்கு நாம் செய்யும் 
உதவியும். கல்லின் மேல் எறியப்பட்ட பானையைப் போல அந்த 
உதவியும் நம்மையே உடன் அழித்து விடும்.

அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா-மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.

பொருள்: நீர் பாயும் தலை மடையில் பல சிறு மீன்கள் ஓடிக் 
கொண்டிருந்தாலும், கொக்கு வாடியிருப்பதைப் போலக் காத்துக் 
கொண்டிருக்கும்.  எது வரை? தனக்குரிய பெரிய மீன் வரும் வரை. 
அதைப் போலவே அறிஞர்களின் அடக்கமும்.  அதைக் கண்டு 
அவர்களை அலக்ஷ்யம் செய்து வென்று விட நினைக்கக்கூடாது.


அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு.

பொருள்:  குளத்தில் நீர் வற்றிய உடன் விலகிச் செல்லும் 
பறவைகள் போல, நமக்குத் துன்பம் வந்தபோது நம்மை விட்டு 
விலகிச் செல்பவர்கள் உறவினர் அல்லர்.  அந்தக் குளத்திலேயே 
அப்போதும் சேர்ந்து வாடும் கொட்டி, அல்லி, நெய்தல் 
கொடிகளைப் போல, நம்முடனேயே நம் துன்பங்களையும் பகிர்ந்து 
கொள்பவர்களே நம் உறவு.

சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்?-சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்?

பொருள்:  தங்கத்தால் ஆன பானை உடைந்து சிதறினால், அதன் 
சிதறலும் தங்கமே.  ஆனால் மண்பானை உடைந்து போனால்? 
அதைப் போன்றதே சிறந்த பண்புடையவர்களுக்கும், 
மற்றவர்களுக்கும் உண்டாகும் தாழ்வும்.

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நானாழி-தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன்.

பொருள்:  தோழி! எவ்வளவு தான் அமுக்கி, பெரும் கடலிலே 
முகந்தாலும், ஒரு நாழி (படி) அளவுள்ள பாத்ரம் நான்கு படி நீரை 
முகவாது.  நல்ல கணவனும், செல்வமும் நிறைந்திருந்தும் நமக்குக் 
கிடைக்கும் சுகத்தின் அளவும் அதைப் போன்றதே.  அது நம் முன் 
ஜன்ம நல் வினைகளின் அளவைப் பொறுத்தது. 

உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு.

பொருள்:  வ்யாதி நம்முடனேயே பிறந்து நம்மைக் கொன்று 
விடுகிறது.  எனவே உடன் பிறந்தோர் எல்லாரையும் நம் உறவு 
என்று நினைக்க முடியாது.  உடன் பிறக்காது எங்கோ பெரிய 
மலையில் இருக்கும் மருந்து நம் வ்யாதியைத் தீர்ப்பது போல,  
அன்னியரும் நமக்கு நன்மை தருபவராக இருக்கக் கூடும்.

இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின்-இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும்.

பொருள்: நல்ல மனைவி மட்டும் அமைந்து விட்டால் அந்த 
இல்லத்தில் இல்லாதது என்று எதுவுமே இல்லை.  ஆனால் அந்த 
இல்லாள் (மனைவி) குணமில்லாதவளாக (இல்லாள்) இருந்து 
விட்டாலோ, கடுமையான எதிர் வார்த்தைகள் பேசி விட்டாலோ 
அந்த இல்லம் புலியின் குகை போலாகி விடும்.

எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.

பொருள்: மட நெஞ்சே! திட்டத்தோடு கற்பக மரத்திடம் 
சென்றாலும், எட்டிக்காயே கிடைத்ததென்றால் அது நம் முன் 
வினைப் பயனே.  விதியில் எழுதியுள்ளபடிதான் நமக்குக் 
கிடைக்குமே அல்லாது நாம் நினைப்பதெல்லாமா நடந்து விடும்?

கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே-வில்பிடித்து
நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்.

பொருள்:  சிறு வேறுபாடு வந்தாலே தாழ்ந்தோர் பிளந்து போட்ட 
கல்லைப் போலப் பிரிந்து விடுவர்.  பெரும் சினத்தால் பிரிந்தாலும் 
பெரியோர், பிளந்த தங்கத்தைப் போல மீண்டும் சேர்ந்து விடுவர்.  
அவர்கள் கோபம், ஒருவர் எய்த அம்பால் நீரில் உண்டான 
வடுவைப் போன்றதே.

நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.

பொருள்: குளத்தில் பூத்திருக்கும் தாமரையை அன்னப்பறவை 
சேர்ந்தது போல கற்றவர்களைக் கற்றவர்களே விரும்பிச் சேர்வர்.  
சுடுகாட்டில் பிணத்தைக் காக்கைச் சேர்வது போல, கல்வி 
அறிவில்லாத மூடரை, மூடர்களே சேர்வர்

நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு-நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.

பொருள்: தன்னிடம் விஷமிருப்பதை அறிந்து நாகப்பாம்பு மறைந்து 
வாழும்.  விஷமில்லாத தண்ணீர்ப் பாம்போ பயமில்லாது எங்கும் 
வெளியில் திரிந்து கொண்டிருக்கும்.  அதைப் போலவே நெஞ்சில் 
குற்றம் உடையவர்களும் அதை மறைத்தே வாழ்ந்து கொண்டிருப்பர், 
குற்றமில்லாதவர்களோ கபடமின்றி வெளியில் திரிந்து 
கொண்டிருப்பர்.

மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன்-மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு.

பொருள்: ஒப்பிட்டு பார்க்கும் போது, அரசனை விட, கசடறக் 
கற்றவனே மேலானவன்.  ஏனென்றால், அரசனுக்கு அவன் 
தேசத்தைத் தவிர வேறெங்கும் சிறப்பு இல்லை.  ஆனால் 
கற்றவனுக்கோ அவன் செல்லுமிடமில்லாம் சிறப்பு.

கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்-மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்.

பொருள்: கற்றறிந்தவர் வார்த்தை கற்காதவர்களுக்கு துன்பத்தைத் 
தரும்.  தர்மம் தீயவர்களைத் அழிக்கும், மெல்லிய வாழைக்கு 
அதன் கன்று அழிவைத் தரும்.  வாழ்க்கைக்குப் பொருந்தி 
நடக்காத மனைவி அந்த வீட்டிற்கு அழிவைத் தருவாள்.

சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்
கந்தம் குறை படாது; ஆதலால்-தம்தம்
தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால்
மனம் சிறியர் ஆவரோ மற்று?

பொருள்:  தேய்ந்து மெலிந்திருந்தாலும் சந்தனம் மணம் 
குறைவதில்லை.  அதைப் போலவே தாராள குணம் படைத்த 
அரசர்களும் தன் பொக்கிஷம் குறைந்த காலத்தும் மனம் 
மாறுவதில்லை

மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம்- திரு மடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து
போம் போது அவளோடும் போம்.

பொருள்: ஒருவனைச் சூழ்ந்து வாழும் இனிய சுற்றமும், 
அவனுடைய பெரும் செல்வமும், அவன் அழகும், அவன் குலப் 
பெருமையும் லக்ஷ்மி கடாக்ஷம் ஒருவனுக்கு இருக்கும் வரையில் 
தான்.  அவள் அகலும் போது இவையனைத்தும் போய் விடும்.

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.

பொருள்: தன்னை வெட்டுபவனுக்கும் நிழலைத் தந்து காக்கும் 
மரத்தைப் போல, அறிவுடையார் அவர்தம் உயிருக்கே தீங்கு 
செய்பவனையும் இயன்ற வரைக் காக்கவே செய்வர்.




மூதுரை முற்றிற்று.

Thursday, 23 September 2021

ஸ்ரீ தையல்நாயகி பாமாலை

 ஸ்ரீ தையல்நாயகி பாமாலை 



ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!

ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!


எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளையம் பூக்கண்கள்

இயல்பான அழகு வடிவம்

இனிய முகம் தாமரை இருசெவிகள் செந்தாழை

இறைவிநிறம் நல்ல பவளம்


கள்ளிருக்கும் ரோஜாப்பூக் கன்னங்கள் அல்லியில்

கடைந்ததோர் இரண்டு கால்கள்

கைகளும் விரல்களும் கனகாம்பரம் மல்லி

கற்பகப் பூவில் தோள்கள்


புள்ளிருக்கும் வேளூர் பூவையுன்அங்கமெல்லாம்

பூக்களாய் மலர்ந்திருக்க

பூவுடல் கொண்டவுனை வர்ணித்துப் பாமாலை

பூமாலையோடு தந்தேன்


வல்லவள் நின் அருளாலே வரும் துயரை போக்கியொரு

வரம்தந்து காக்க வருவாய் - அம்மா

வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே

வளம் காண வைக்கும் உமையே. 1


பால் கேட்டு அழுததோர் பிள்ளைக்குச் சீர்காழிப்

படித்துறையில் பால் கொடுத்தாய்

பச்சை வெற்றிலைதுப்பிக் கவிகாள மேகத்தைப்

பாட்டரசன் ஆக்கி வைத்தாய்


வேல்கேட்ட பிள்ளைக்குச் செந்தூரில் சமர்செய்ய

விருப்பமுடன் வேல் கொடுத்தாய்

விளையாடும் ஏழரைச் சனியோடு கிரகங்கள்

விலகிடும் வழி அமைத்தாய்


நூல்கேட்ட ஞானத்தில் நூறுகவி பாடுமெனை

நோக்கி நீ எது கொடுத்தாய்

நொடிப்பொழுதில் என்வாழ்வில் படிப்படியாய் துயரங்கள்

கிழைவதற்கு ஏன் விடுத்தாய்


வாழ்வரசி இனி எனது வருங்காலம் செல்வங்கள்

வரும் காலம் ஆக்க வருவாய் - அம்மா

வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே

வளம் காண வைக்கும் உமையே. 2


தா வென்று கேட்டவுடன் கொடுப்பதனால் தானுன்னைத்

``தாய்'' என்று சொல்லிவைத்தார்

தலைமகளுன் சந்நிதியில் கலைமகளின் அருளாலே

தமிழ் பாடி வரங்கள் பெற்றார்


சேய்ஒன்று எதிரினிலே கதறுவது கேட்காமல்

செவிமூடி நிற்க லாமோ?

சிறுபிழைகள் இருந்தாலும் மன்னித்து அருள்காட்டும்

தேவியவள் நீயல் லவோ


ஆயகலை அத்தனையும் அறிந்தவனை நோய்நொடிகள்

அணுகவிடல் முறையாகுமோ

அரியதொரு செல்வத்தை உரியமகன் ஏற்காமல்

அனுதினமும் வாட லாமோ?


வாயுவென வேகமாய் வந்தெனது துயர்தீர்த்து

மகிழ்ச்சியினைக் கொடுக்க வருவாய் - அம்மா

வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே

வளம் காண வைக்கும் உமையே. 3


தங்கநிகர் குணத்தோடு தைரியமும் தருகின்ற

தமிழ்ச் செல்வி போற்றி போற்றி

தரணியிலே புகழ்காண வரமளிக்கும் சுந்தரியாம்

தாமரைப் பூமாது போற்றி


மங்கையர்க்கு மாலைகளும் மன்னவர்க்கு வேலைகளும்

மகறுழ்ந்தளிக்கும் அரசி போற்றி

மாதரசி உண்ணா மலைஅழகு சிவகாமி

மங்கை மீனாட்சி போற்றி


பொங்கி வரும் துயரத்தைப் பொடியாக்க வரும் அன்ன

பூரணி கல்யாணி போற்றி

யோகமுடன் வாழ்வுதரும் பூங்கொடியாம் விசாலாட்சி

புனித உமாதேவி போற்றி


மங்களங்கள் அத்தனையும் எங்களது வீடுவர

மாதரசி கூட்டி வருவாய் - அம்மா

வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே

வளம் காண வைக்கும் உமையே. 4


மலைபோன்ற செல்வத்தை குவித்து வைத்திருந்து நான்

மற்றவர்க்கு உதவ வேண்டும்

மழலையின் குணத்தோடு முதுமையிலும் இளமையாய்

மகிழ்வோடு வாழ வேண்டும்.


கலைதவழும் மேடையெல்லாம் பூமாலை அணிந்து நான்

கௌரவம் பெறவும் வேண்டும்.

கவிபாடும் எனதுகுரல் கேட்டவுடன் தெய்வமெலாம்

காட்சி தந்து அருளவேண்டும்.


நிலையான புகழ்தந்து உற்றாரும் மற்றாரும்

நேசிக்கும் உறவு வேண்டும்.

நீ எனது துணையாகி நான் செல்லும் பாதைக்கு

நேர் வழிகள் காட்டவேண்டும்


வளையாடும் கரத்தழகி பகை வென்று எந்நாளும்

மறுக்காமல் காக்க வருவாய் - அம்மா

வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே

வளம் காண வைக்கும் உமையே. 5


சிறுவயதில் உன்பெருமை தெரிந்திருந்தால் உன்னைச்

சேவித்து மகிழ்ந்தி ருப்பேன்!

தெரியாமல் செய்த பிழை அத்தனையும் மன்னிக்கத்

தேடி வந்த ழுதிருப்பேன்!


புரியாமல் எடுத்த இப்பிறவிதனில் மங்கையரின்

போகத்தை அளந்தி ருந்தேன்!

பொன்னோடும் பெண்னோடும் வருமின்பம் போதுமெனப்

புரியாமல் வாழ்ந்திருந்தேன்!


திருநாளில் உன் பெருமை தெரிந்ததும் தொடர்ந்துநான்

செவ்வாயில் விரதம் வைத்தேன்!

தித்திக்கும் அருள்தன்னை சித்திக்க வரம்வேண்டி

சிங்காரப் பாட்டி சைத்தேன்!


பருவத்தில் நான்செய்த பாவத்தை மன்னித்துப்

பாவை நீ காக்க வருவாய் - அம்மா

வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே

வளம் காண வைக்கும் உமையே! 6


திருக்கழுக் குன்றத்தில் கழுகுக்கும் மதியத்தில்

தினந்தோறும் சோறு உண்டு!

திருநாளாம் பொங்கலில் நந்தியெனும் மாட்டுக்கும்

தித்திக்கும் பொங்கல் உண்டு!


வருஷத்தில் ஒருநாளில் வடையோடு அன்னத்தை

வைரவரும் காண்ப துண்டு!

வளர்கின்ற புற்றுக்குள் ஒளிகின்ற பாம்புக்கும்

வார்க்கின்ற பாலு முண்டு!


அர்ச்சித்து வழிபட்டு அன்னையே உனையெண்ணும்

அடியேனுக் கென்ன உண்டு!

அன்று தினம் அளந்தபடி என்றைக்கும் நடந்திடவே

அருள்புரிய வேண்டும் அம்மா!


மரம் வைத்த நீதானே தண்ணீரும் விடவேண்டும்

மறந்திடல் முறையாகுமோ - அம்மா

வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே!

வளம் காண வைக்கும் உமையே! 7


கழுதையெனும் பிறவியை எடுத்தாலோ நிச்சயம்

கழுத்திலே பொதி யிருக்கும்!

காளைமாடாகவே பிறந்திடின் நிச்சயம்

கழனியில் கால் இருக்கும்!


பழுதான பிறவியாம் நாயாகப் பிறந்தாலோ

பகலிரவு விழிக்க வேண்டும்!

பறவையாய்ப் பிறந்தாலும் மரங்களின் உச்சியில்

பதியங்கள் போட வேண்டும்!


அழுதாலும் தொழுதாலும் அன்னையே உனையன்றி

யாரெனக்கு தவுவார்கள்?

ஆறறிவு கொண்டதோர் மனிதனாய் என்னை நீ

அகிலத்தில் படைத்த பின்னால்


வழிகாட்ட மறுப்பதும் நியாயமா? என் விழியில்

வடிந்து நீர் ஓடலாமா? - அம்மா

வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே

வளம் காண வைக்கும் உமையே. 8


புல்லாகிப் பூடாகிப் புழுவாகி இருந்தாலோ

புலம்பியே தீர வேண்டும்!

பொன்னாக அணிகின்ற மனிதனாய்ப் பிறந்தநான்

புதுயுகம் காண வேண்டும்!


கல்லாகி நிற்கின்ற தெய்வம் நீ இல்லையெனக்

காட்டிட விரைந்து வருக

கனதனம் நீதந்து காசினியில் புகழ்தந்து

காவலாய் நின்று அருள்க!


முள்ளாக மலராக மோதிடும் வாழ்க்கையில்

முற்றும் நான் நம்பி வந்தே!

மோதகப் பிரியனின் தாயான உன்னிடம்

முறையீடு செய்யு கின்றேன்!


பல்லக்கு பரிவாரம் பார்த்திடும் ராஜாங்க

பவனியை எனக்கு அருள்க - அம்மா

வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே

வளம் காண வைக்கும் உமையே! 9


எவருக்கு எதுவேண்டும் என்பதை அறிந்த நீ

ஏறிட்டுப் பார்க்க வில்லை!

இருகரம் கூப்பியுன் சந்நிதியில் நிற்கும் நான்

எதுகேட்டும் மாறவில்லை!


சிவல்புரியில் வாழ்கின்ற சிங்காரம் தந்ததோர்

செந்தமிழ் கவிதை மூலம்!

சீர்கொண்ட பதிகங்கள் பத்தையும் கேட்டுநீ

சிரமத்தை அகற்ற வேண்டும்!


கவலைக்கு மருந்தாகும் கடவுளே உனைநம்பி

காலங்கள் போக்கி விட்டேன்!

காப்பாற்ற வேண்டியது உன்பொறுப் பல்லாது

காசினியில் யார் பொறுப்பு!


மகன்கேட்டு தாய்எதுவும் மறுப்பதில் முறையில்லை

மனமிரங்கி வந்து அருள்க! - அம்மா

வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே

வளம் காண வைக்கும் உமையே. 10


கவிஞர் சிவல்புரி சிங்காரம்

மகா பரி நிர்வாணம்

 *புத்தர் தன் கடைசி நேரத்தில் கூறினார்*


என் உடலை இயற்கைக்கு மீண்டும்

ஒப்படைக்கப் போகிறேன் 


நான் அனேக உடல்களைப் பயன் படுத்தி உள்ளேன் 


ஆனால் இதற்கு முன்பு இயற்கைக்கு நன்றி சொல்லியது இல்லை 


இதுதான் கடைசி இனி நான் உடலுக் குள் புக மாட்டேன் 


இதுதான் நான் வாழ்கின்ற கடைசி வீடு கடைசி இருப்பிடம் 


நான் என் உடலைத் திருப்பித் தர வேண்டும் 


இது அனேக வேலைகளைச் செய்து விட்டது 


இது என்னை ஞானத் திற்கு இட்டுச் சென்றது 


இது நல்ல சாதனமாக இருந்தது 


இது எல்லா வகையிலும் எனக்கு உதவியாக இருந்தது 


ஆகவே இயற்கைக்கு நன்றி சொல்லி விட்டு 


இந்த வீட்டை திருப்பி கொடுக்க வேண்டும் 


ஏனெனில் இந்த உடல் இயற்கை எனக்கு கொடுத்த வெகுமதி 


நான் முழு உணர்வுடன் இதைக் கொடுக்க வேண்டும் 


அதன் பிறகு அவர் தன் உடலை ஒப்படைத்தார் 


அவர் உடலைச் சுற்றி ஒரு ஒளி இருந்தது 


அவர் உடல் சக்தியாக மாறி இந்தப் பிரபஞ்சத்துடன் கலந்து விட்டது 


அவருடைய மரணம் உள்ளுணர்வுடன் கூடிய மரணம் 


பிறகு அவர் தனது மனதை ஒப்படைத்தார் 


அப்பொழுது நறுமணம் பரவியது 

புத்தரின் மனம் ஒரு நறுமணம்தான் 


கள்ளங் கபடமற்ற தூய்மையான வாழ்க் கையின் நறுமணம் 


பிறகு அவர் தன் ஆன்மாவை ஒப்படைத்தார் 


இந்த மூன்று விஷயங்களும் ஒப்படைக்கப் பட்ட பின்னரே அவர் இறந்தார். 


இதுதான் மகா பரி நிர்வாணம் 


இதுதான் மகாசமாதி



கிருஷ்ண பக்தரான பூந்தானம்

 *கண்ணன் கதைகள் - 71*


*வானரதம்*


கிருஷ்ண பக்தரான பூந்தானம் செய்யும் பாகவத உபன்யாசங்களை மக்கள் மிகவும் நேசித்தார்கள். கேரளாவில் உள்ள கொட்டியூர் என்னும் ஊரில் உள்ள சிவன் கோவில் வருடத்தில் சில நாட்களுக்கு மட்டுமே திறந்திருக்கும். பூந்தானம் கொட்டியூர் சென்று அங்குள்ள குளத்தில் நீராடி, சிவபெருமானை வழிபட்டு மிகுந்த சந்தோஷத்துடன் அங்கேயே சில நாட்கள் தங்கினார்.


தினசரி கோவிலில் சிவன் முன்னால் பாகவத ப்ரவசனம் செய்தார். 

நூற்றுக்கணக்கான மக்கள் அவருடைய இனிமையான பிரவசனத்தைக் கேட்டார்கள்.


ஸ்ரீமத் பாகவதத்தில் கிருஷ்ணர் விளையாட்டாக ருக்மிணியிடம், சிசுபாலன், ஜராசந்தன், சால்வன் போன்றோர் இருக்கும்போது என்னை ஏன் திருமணம் செய்தாய் என்று பரிஹாஸமாகப் பேச, ருக்மிணி மயங்கி விழ, பின்னர் கிருஷ்ணர் சமாதானம் செய்வதைக் கூறும் ஸர்க்கம்.


பூந்தானம் இந்தப் பகுதியை வாசித்து முடித்து, அடுத்த நாள் தொடர்வதற்கு வசதியாய் அந்த அத்தியாயத்தின் முடிவில் அடையாளம் வைத்தார். ஆச்சர்யப்படும் வகையில் அடுத்த நாள் அவர் வைத்த அடையாளம் அந்த ஸர்க்கத்தின் தொடக்கத்தில் இருந்தது. அதனால் மறுபடியும் அந்த ஸர்க்கத்தையே வாசித்தார். மீண்டும் சில நாட்களுக்கு இவ்வாறு தொடர்ந்து நடந்தது. கோவிலை மூட வேண்டிய நாள் வந்தது. பூந்தானம் பிரவசனத்தை முடித்து, வீட்டிற்குத் திரும்பும் வழியில் பாகவத புத்தகத்தைக் கோவிலிலேயே மறந்து வைத்துவிட்டு வந்ததை உணர்ந்தார். அதை எடுக்க மீண்டும் கோவிலுக்குச் சென்றார். ஆனால் நடை சாத்திவிட்டார்கள். யாருமே அருகில் இல்லை.


அவர் ப்ரவசனம் செய்த பாகவத அத்தியாயத்தின் அதே பகுதியை யாரோ கோவிலின் உள்ளிருந்து சொல்வதைக் கேட்க முடிந்தது. சாவி த்வாரத்தின் வழியே உள்ளே பார்த்தார். அங்கே அவர் கண்ட காட்சி!!! பரமசிவனே அதைப் படித்துக் கொண்டிருந்தார். பார்வதிதேவியும், பூதகணங்களும் அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பூந்தானம் அசையாமல் அதைக் கேட்டார். கடைசியில் சிவன் பார்வதியிடம், நான் படித்த இந்த பாகவத ஸர்க்கம் உனக்குப் பிடித்ததா? என்று கேட்க, பார்வதி, “ நன்றாக இருந்தது, ஆனால் பூந்தானம் சொன்னதைப்போல் இல்லை” என்று கூறினாள். சிவனும், உண்மைதான் நானும் பூந்தானம் சொல்வதையே கேட்க ஆசைப்படுகிறேன். அதனால்தான், தினமும் அவர் வைத்த அடையாளத்தை இந்த ஸர்க்கத்தின் தொடக்கத்தில் வைத்தேன் என்று கூறினார்.


வெளியே நின்றுகொண்டிருந்த பூந்தானம் இதைக் கேட்டவுடன் மெய்சிலிர்த்து, க்ருஷ்ணா, க்ருஷ்ணா என்று உரக்கக் கூறினார். அவர் மீண்டும் பார்த்தபோது, சிவபெருமானும் பார்வதியும் மறைந்து விட்டனர். பாகவதத்தை ஏனைய தெய்வங்களும் நேசிக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவமே சான்று.


இவ்வாறு பாகவத பாராயணத்திலும், கிருஷ்ண நாமத்திலும் பூந்தானத்தின் காலம் ஓடியது. பூந்தானத்திற்கு வயதாகியது. ஒரு நாள் கிருஷ்ணன் பூந்தானத்தை ‘என்னிடம் வா’ என்று அழைத்தார். மிகுந்த சந்தோஷமடைந்த பூந்தானம், வீட்டில் உள்ளவர்களிடம், நாளை விஷ்ணுதூதர்கள் நம் இல்லத்திற்கு வருகிறார்கள். வீட்டை நன்கு அலங்கரியுங்கள்; யாரெல்லாம் கிருஷ்ணனைக் காண வருகிறீர்கள் என்று கேட்டார். எப்போதும் கிருஷ்ணனை நினைத்து அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று அவரது வீட்டாரும், அவ்வூர் மக்களும் நினைத்தார்கள். அடுத்த நாள் வானரதம் வருவதைக் கண்ட அவர், மனைவியிடம் சீக்கிரம் வா, நாம் செல்லலாம் என்று கூறினார். அவர் மனைவிக்கு சமையற்கட்டில் வேலை இருந்ததால் உள்ளே சென்றுவிட்டாள். அப்போது, அவர் வீட்டில் வேலைசெய்த ஒரு பெண், நான் வருகிறேன், என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று வேண்டினாள். பூந்தானமும் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டார். வேலை முடிந்து அவர் மனைவி வந்து பார்த்தபோது வேலைசெய்த அந்தப் பெண்மணி இறந்திருந்தாள். பூந்தானத்தைக் காணவில்லை; பூந்தானம் கிருஷ்ணனோடு ஐக்கியமாகிவிட்டார்.


ஓம் நமோ நாராயணாய!

குருவாயூர் கேசவன்

 ஸ்ரீராமஜெயம்🙏

ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏

ஸ்ரீமதே ராமானுஜாயா நம:🙏



🌹🌺 *ஏகாதசி நாளில் எதுவும் உண்ணாமல் விரதமிருந்து கிருஷ்ணரின் சேவையில் ஈடுபட்ட  பக்த யானை-  விளக்கும் எளிய கதை* 🌹🌺

-----------------------------------------------------------------


🌺🌹 குருவாயூர் கேசவன் -  கேரளாவின் குருவாயூரில் மிக முக்கியமான பக்த யானை . இது அதிசயமான மற்றும் தனித்தன்மை வாய்ந்த இறைவனுக்கு சேவை செய்த மகத்தான யானைகளில் ஒன்றாகும். 


🌺நீலம்பூரில் இருந்த வலியா ராஜா மலபார் கலகத்தில் தனது பறிக்கபட்ட சொத்துக்கள் திரும்ப பெற்றால் குருவாயூரப்பனுக்கு தனது வசம்முள்ள பல யானைகளில் ஒரு யானையினை தானமாக தருவதாக வேண்டிகொண்டார் .


🌺தனது முழு சொத்துகளையும் திரும்பப் பெற்றபின் அவர் தனது வேண்டுதலை நிறைவேற்றினார்..  (கோவிலுக்கு யானையினை தானமாக கொடுப்பது கேரள மாநிலத்தில் உள்ள பொதுவான ஒரு வழிபாட்டு முறையாகும் இதுவும் ஒரு வகையான காணிக்கையாக ஏற்றுக்கொள்ளபடுகிறது.)


🌺மகாராஜாவின் ஆசை நிறைவேறியது அதனால் அவர் வாக்குறுதியை நிறைவேற்றினார்.   1922 ஆம் ஆண்டில் யானை ஒன்றை வழங்கினார்.  அந்த யானைதான் பிரபலமான குருவாயூர் கேசவன்.


🌺யானைக்கு கேசவன் என பெயரிடப்பட்டது. கேசவன் பொதுவாகவே மிகவும் உன்னதமான குணமும், அமைதியாகவும் சில நேரங்களில் முன்னுக்கு பின் முரணாகவும் நடந்து கொள்ளும். 


🌺கேசவன் வந்த போது, பத்மநாபன் என்ற யானை பகவத் கைங்கர்யத்திற்கு ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.


 🌺1923ல் இருந்து கேசவன் யானை கிருஷ்ணரின் சேவையில் தீவிரமாக ஈடுபடலானார். கேசவன் தனக்குச் சில சொந்த விதிகள் வைத்திருந்தார். அவர் உணவு பழக்கங்களில் மிகவும் தேர்ந்தவர்; மற்ற கோயில் யானைகளை விட கேசவன் மிகவும் வித்தியாசமானவர்.


🌺குருவாயூர் ஶ்ரீ கிருஷ்ணரின் கோவிலை தவிர வேறு கோயில்களுக்கு செல்லமாட்டார். கட்டாயப்படுத்தினாலும் அடித்தாலும் அமைதியாக அடிவாங்கிக்கொண்டு கண்ணீர் விடுவார். ரகளை செய்யமாட்டார்.


🌺கேசவன் ஏகாதசி நாளில் எதுவும் உண்ணாமல் விரதமிருப்பார். குருவாயூரப்பனை தவிர வேறு எந்த விக்ரகங்களையும் தன் மீது சுமக்க அனுமதிக்க மாட்டார்.. குருவாயூரப்பன் திடம்பை ஏந்தி தன் மேல் அமர வருபவர்களுக்கு மட்டுமே கேசவன் தன் முன்னங்கால்களைத் தாழ்த்தி ஏற உதவுவார். ஆலவட்டம், குடை, வெண்சமரம் போன்றவற்றை ஏந்தி நிற்போர், பின்னங்கால் துணை கொண்டே ஏற உதவுவார். தனி மனிதனாக தன் பாகன் கூட தன் மேல் ஏறி அமர அனுமதித்ததில்லை கேசவன்.


🌺ஒருமுறை அவர் தனது யானைப் பாகர்களை மதிக்காமல் ஆலயத்திற்கு விரைந்து சென்றார். அந்த இடத்திலுள்ள எல்லோரும் அதைக் கண்டு பயந்தனர் மக்கள் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு ஏழையான, உதவியற்ற குஷ்டரோகியை கேசவன் தனது தும்பிக்கையால் தூக்கி பாதுகாப்பான ஒரு மூலையில் பத்திரமாக வைத்தார் என்று கண்டபோது அவர்கள் ஆச்சரியம் மடைந்தார்கள். ஒரு முறை குருவாயூர் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து மூலவரை காக்க மணல் மூட்டைகளைக் கொண்டு வந்து தீயை அணைத்தார். 




🌺1973 ஆம் ஆண்டில் கேசவன் "கஜராஜன்" (யானைகளின் அரசன்) என்ற பட்டம் அளித்துக் கோவிலில் முதல் முறையாக யானையின் சேவையை பொன்விழா ஆண்டு (கோல்ட் ஜூபிலியாகக்) கொண்டாடப்பட்டது.


🌺1976 ஆம் ஆண்டு,  டிசம்பர் 2 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி நாளில்  திருவிழாவில் கேசவன் தனது நித்ய சேவை செய்து கொண்டிருந்த போது,  இறைவனிடம் தனது வணக்கத்தை சமர்பித்துக் கொண்டு, நமஸ்கரிக்கும் பாணியில் தனது உடலை மண்ணில் அர்ப்பணம் செய்துகொண்டே, கேசவனின் உயிர் பிரிந்தது. அவர் வைகுண்ட பிராப்தியடைந்தார்.🌹🌺


------------------------------------------------------------------------


🌻🌺🌹 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* 🌼🌻🌺🌹


ஓம் நமோ நாராயணாயா🙏




Wednesday, 22 September 2021

எனக்கு நானே குரு - குரு உபதேசங்கள்

 எனக்கு நானே குரு - குரு உபதேசங்கள்


மனிதர்கள் பேசுவது , செய்வது எல்லாமே மனதின் வெளிப்பாடு . எண்ணங்களின் வெளிப்பாடு . எண்ணங்கள் பேச்சு , சொல் மூலம் வெளிப்படுகிறது . பலரும் கூறுவார்கள் , இறைவனை உள்முகமாக பார்க்க வேண்டும் , உள்ளே செல்ல வேண்டும் , நம்முள்ளேயே இறைவன் இருக்கிறார் , நம் உள்ளேயே ஜோதி உள்ளது என்றெல்லாம் கூறுகிறீர்கள் . அதற்கு அர்த்தம் அர்த்தம் தான் என்ன . எப்படி உள்ளே செல்வது . வெளியே செல்வதற்கு சாலை , வாகனம் என்றெல்லாம் உள்ளது. உள்ளே செல்வது எவ்வாறு என்று கேள்வி வரும் . இதற்கு விடை மிகவும் எளிமையானது. வெளிப்பாடு - அதன் எதிர் சொல் - உள்பாடு . மேற்கே செல்ல வேண்டும் என்றால் கிழக்கு க்கு எதிர் திசையில் செல்ல வேண்டும் . மேற்கு எது என்று தெரியாவிட்டால் பரவாயில்லை , கிழக்குக்கு எதிர் சென்றால் அது தான் மேற்கு . அதே போல எப்படி வந்தோமோ அதே வழியில் தான் வெளியே போக வேண்டும். அதே போல் , வெளிப்படும் போது செயல் செய்கிறான்  - உதாரணம் , சிரிப்பு அழுகை வியப்பு ஆகியவை , மனதின் அனுபவத்தை வெளிப்படுத்துகின்றன . உள் படுத்த வேண்டுமானால் , எதுவும் வெளிப்படுத்தாமல் வெறுமனே இருக்க வேண்டும் , சிரித்தாலோ , அழுதாலோ , கோவப்பட்டாலோ , வியந்தாலோ , அது வெளிப்பாடு ஆகி விடும் . உள்ளே செல்ல முயற்சி செய்பவர்கள் இவ்வாறு வெளிப்பாடு செய்யாமல் இருந்தால் , அதன் எதிர் திசை ஆன உள்பாடு ஏற்படும் . அதே போல் நடத்தல் , தூக்குதல் .... போன்ற எந்த அசைவுகளும் வெளிப்பாடு ஆகும் . அதன் எதிர் திசை - அசைவற்று இருத்தல் , அது உள்ளே செல்ல வழி வகுக்கும் . நாம் வெளிப்படாமல் வெளிப்படுத்தாமல் இருந்தாலே , நாமே தானாக உள்ளே , உள்முகமாக ஒன்றி இருப்போம். கண்களால் பார்ப்பது , பார்க்கும் பொருட்களை மனதுக்கு கொண்டு சென்று அதன் மூலம் எண்ணம் உருவாகி , சொல் மூலமாகவோ செயல் மூலமாகவோ வெளிப்படும் . எனவே உள்முகமாக இறைவனை நோக்கி செல்ல வேண்டும் என்றால் , கண்களை மூடி இருக்க வேண்டும் . கண் திறந்து பார்த்தால் வெளிப்பாடு , அதன் எதிர் திசை , கண் மூடி இருத்தல் - அதுவே உள்முகம். பேச்சு , சொல் என்பது மனதில் உள்ள எண்ணங்களின் வெளிப்பாடு. அதன் எதிர் செயல் "மௌனம் ". மௌனம் உள்முகம்.  இதில் உனக்கு தெளிவாக புரிந்திருக்கும் , பஞ்ச இந்திரியங்கள் கண் காது மூக்கு செவி தொடுஉணர்வு , அனைத்துமே வெளிப்படுத்தும் செயல்களை செய்கின்றன . அதே போல் உள்பாடு என்பது இறைவன் நிலை என்றால், வெளிப்பாடு என்பது இறைவன் அற்ற நிலை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் . மனிதர்கள் என்ன செய்கிறீர்கள் , பெரும்பாலும் இறைவனில் இருந்து விலகியே வாழ்கிறீர்கள் , மௌனம் என்பது கிடையாது , அசைவற்ற நிலை என்பது கிடையாது , கண் மூடி இருத்தல் கிடையாது . சும்மா இருந்தால் சலிப்பு வருகிறது என்கிறீர்கள் . எவ்வளவு நேரம் சும்மா இருப்பது . பொழுது போகவில்லை என்கிறார்கள் . அனைவருக்கும் இறைநிலை பற்றி தெளிவு வேண்டும் , வெளிப்பாடு என்றால் என்ன , அதன் நிலை என்ன , உள்பாடு என்றால் என்ன , அதன் நிலை என்ன என்று புரியாததால் , உள்படாமல் வாழ்க்கை இறைவனில் இருந்து விலகியே முடிந்து போகிறது . முடிவில் இறந்த போது எந்த வித வெளிப்படுதலும் இல்லாமல் முழுவதும் உள்முகமாகி போகிறது . அந்த உள்முகம் சமாதி ஆகாது , என் என்றால்  மனம் உள்முகத்துக்கு உடன்பட வேண்டும் . உடன்படாததால் , அதற்கு மரணம் என்று பெயர் . அதுவே மனம் உடன்பட்டு , மேற்கூறிய நிலைகளில் உள்முகமாக சென்றால் , அதுவே சமாதி , மரணம் ஆகாது , மீண்டு வெளிப்படலாம். இதற்கு பெயர் தான் த்யானம் , உள்முகப்படுதல் , ஏன்  த்யானத்தில் அசைவற்று இருக்க வேண்டும் , ஏன் கண்களை மூட வேண்டும் , ஏன் மெளனமாக இருக்க வேண்டும் , எது வெளிப்படுதல் , எது அதன் எதிர் திசையில் உள்படுதல் என்று இப்போது விளங்கி இருக்கும் . இது விளங்கா விட்டால் எப்படி த்யானம் செய்ய முடியும் . என்ன செய்கிறோம் எதற்கு செய்கிறோம் என்று தெளிவு வேண்டும், அப்போது தான் அது சித்தி பெரும் . ஆலயம் சென்று இறைவழிபாடு செய்தல் என்பதும் புற செயலே . அதிலே இறைவனை புறத்தில் உருவகப்படுத்தலாம் . இறைவனை யாரும் காண முடியாது. உன்னை  நீயே கண்ணாடி இல்லாமல் காண முடியாது . நீ தான் அது. அது நீயாக இருக்கிறது . வெளிப்படுத்தலில் , நீ அதுவை உணராமல் விலகி தூர செல்கிறாய் . அது மரணத்தில் போய் முடியும் 


எனவே இறைவனை வெளியே பார்க்க முடியாது , வெளியே பார்க்க வேண்டுமானால் இறைவனுக்கு ஒரு பெயர் , ஒரு ஊர் , ஒரு வடிவம் , எல்லாம் கொடுத்து பார்க்க வேண்டும் .  பின்னர் பூஜை செய்து, மனம் அமைதி கொண்டு , நமக்கே தெரியாமல் மனம் உள்முகமாக பயணம் செய்கிறது , சதா இறை சிந்தனை , சதா இறை பூஜை , சதா ஜெபம் ஆகியவை செய்யும் போது , உள்முகம் ஓரளவுக்கு சாத்தியப்படுவது போல இருக்கும் . ஆனால் முழுவதுமாக வெளியே இருந்து நீங்கி , அமைதியாக அமர்ந்து அசைவில்லாமல் , கண்மூடி மௌனத்தில் இருந்தால் நாமே இறைவனாகி உணர்வோம் . அது தான் யோகம் த்யானம் எல்லாமே . அவன் தான் யோகி சித்தர் , அவனே குரு , அவனே இறைவன் . அவனுக்கு ஊர் பேர் கிடையாது , உருவமும் கிடையாது . இறைவன் நிலை முழுவதும் ஆகும் நிலையில் ராமலிங்க வள்ளலார் போல மாணிக்க வாசகர் போல புற உருவம் மறைந்து ஒளிமயமாகும் .

Saturday, 18 September 2021

திருமண் காப்பு

 #கேள்வியும்_பதிலும்.


#கேள்வி:

திருமண் காப்பு எல்லா நேரத்திலும் அவசியமா? 


கர்மா செய்யும் போது மட்டும் அணிந்தால் போதாதா? 


சாதாரண நேரத்தில் ஶ்ரீசூர்ணம் மட்டும் அணிந்தால் போதும் தானே?

 

விளக்கவும்...


#பதில்: 


திருமண் காப்பு என்பதை விட ஊர்த்வ புண்டரம் என்று அழைப்பதே மகத்துவமானது.


ஊர்தவம் என்றால் மேல் நோக்கி 

என்று அர்த்தம்.


பொதுவாக ஶ்ரீவைணவர்களுக்கு எல்லா வைதிக கர்மாக்களுக்குமே திருமண் காப்பு  என்பது முக்கிய அங்கமாகும்.


 அதை தரிக்காமல் வைதிக கர்மாக்களைச் செய்தால் வீணே என்பதை பல நூல்களை கொண்டு ஸ்தாபனம் செய்கிறார்கள் நம் சித்தாந்த ஆச்சாரியார்கள்.


அவற்றில் அடியேன் அறிந்தவரையில் முக்கியமான சில விளக்கங்கள்.


காலையிலும மாலையிலும் ஹோமம் பூஜை முதலியவற்றை செய்யும் போதும் திருமண் காப்பு தரித்தவனே பரிசுத்தமானவன் ஆகிறான் என போதாயநர் ரிஷிகூறிஉள்ளார்.


திருமண் காப்பு இல்லாவிட்டால் ஶ்ரீவைணவன் ஒரு கர்மாவும் செய்ய தகுதியற்றவனாகிறான் என்று பராசர்ய ஸம்ஹிதா என்ற நூல் கூறுகிறது.


யஜ்ஞம் தானம் தபஸ் ஹோமம் போஜனம்(உணவு உண்ண ) பித்ரு தர்ப்பணம் போன்றவை எல்லாம் செய்ய திருமண் காப்பு இல்லாவிட்டால் அந்த செயல் வீணாகும் என பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.


பிரம்மச்சாரி, குடும்பஸ்தன்,  வானப்ரஸ்தன், ஸந்யாசி எல்லாரும் 

திருமண் காப்பு தரிக்க வேண்டும்

இதையும் பிரம்மாண்ட புராணம் சொல்லுகிறது.


பூவுலகில் இருந்து மகாபாபம் செய்பவர்களையும் எந்த புண்ட்ரமானது (மேல் நோக்கி) நல்ல கதிக்கு அழைத்து செல்கின்றதோ அதற்கு ஊர்த்துவ புண்ட்ரம் எனப் பெயர். 


அதை விடாமல் தரிக்க வேண்டும் 

ஸ்ரீ நாரதீயம் என்ற நூல் கூறுகிறது.


திருமண் காப்பு ( திருநாமம்) என்பது  ஶ்ரீவைணவர்களால் முன் நெற்றியில்  இட்டுக்கொள்ளப்படும் புனிதமான வைணவ சின்னம்.


இதையே திருமண் காப்பு தரித்தல்

 என்று நாம் கூறுகிறோம்.


வைணவத்தின் முழுமுதல் கடவுளான ஸ்ரீமன் நாராயணனின் பாதங்களைக் குறிப்பது திருமண் என்னும் திருநாமம் ஆகும்.


வைணவ ஆதார தத்துவம் நாராயணன் ஒருவனே பரமபுருஷன் ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பதாகும்.


தீபத்தை ஸ்ரீ சுர்ணம் என்றும் அழைக்கிறோம். 


ஸ்ரீ சுர்ணம் மகாலட்சுமியின் அடையாளமாகும்.


இந்தப் திருமண் புனிதமான இடங்களிலிருந்து சேகரிக்கப்படுகிறது. 


எப்படி உவர் மண் நம் ஆடையினைத் தூய்மைப் படுத்துகிறதோ, அவ்வாறே திருமண்ணும் வைணவனின் உள்ளத்தையும் செயலையும் தூய்மையாக்குகிறது.


வைணவத்தின் ரகசியத் தத்துவம் உணர்த்துவது என்னவெனில் திருமண் ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்கள் அதை எப்போதும் நாம் தரித்திருக்க வேண்டும்.


 ஸ்வாமி நம்மாழ்வார் தம் 

திருவாய் மொழியில்


நெற்றியுள்நின்றென்னையாளும் நிரைமலர்ப்பாதங்கள்சூடி

கற்றைத்துழாய்முடிக்கோலக் கண்ணபிரானைத்தொழுவார்

ஒற்றைப்பிறையணிந்தானும் நான்முகனும் இந்திரனும்

மற்றையமரருமெல்லாம் வந்தெனதுச்சியுளானே என்கிறார்


#அதன்_அர்த்தம் 


ஒற்றை பிறை அணிந்தவனானா

அதாவது சந்திரசேகரனாகிய சிவபெருமானும்


நான்முகனும் ( பிரமதேவனும்)


இந்திரனும் (தேவேந்திரனும்)


மற்றை அமரரும் எல்லாம்

(மற்றுமுள்ள எல்லாத் தேவர்களும்)


வந்து என் நெற்றியுள்

( நெற்றியில் படிந்திருந்து) 


நின்று என்னை ஆளும் நிரை மலர் பாதங்கள் சூடி 


அதாவது என்னையாள்கின்ற மலரொழுங் கமைந்த பகவானின் திருவடிகளை (தங்கள் தலையிலே) சூடிக்கொண்டு)


கற்றை துழாய் முடிகோலம் கண்ணபிரானை (செறிந்த திருத்துழாயாகிற  வளையமணிந்த எம்பெருமானை)


தொழுவார்( வணங்காநிற்பர்கள்).


அத்தகைய பெருமை வாய்ந்த எம்பெருமான்  எனது உச்சி உளான்

(என் தலையின்மேலேயானான் என்கிறார்) நமக்கு கவலையில்லை.


எனவே பகவானை நம் தலைமேல் இருக்க செய்ய எப்போதும் திருமண் காப்பு அணிவது நலம்.

 

காலை தீர்த்தாமாடிய பின்பும் 


மதியம் மாத்யாஹனியம் செய்யும் முன்பும் 


( சரியாக திருமண் காப்பு தெரியாத பட்சத்தில்) 


மாலையில் அலுவலகம் சென்று வந்த பின்போ,


அல்லது சாதாரணமாகவே முகம் கை கால் அலம்பி திருமண் காப்பு தரிப்பது உச்சிதம்.


எந்த காரணத்தை கொண்டும் பகவானையும் பிராட்டியையும் (ஶ்ரீ) பிரிக்கும் முகமாக ஶ்ரீசூர்ணம் மட்டும் அணிவது தவறான ஒரு செயல்.


காரணம் பகவானிடமிருந்து தாயாரை பிரித்ததால் இராவணன் பட்ட அழிவு நமக்கு தெரியும் தானே. 


எனவே எக்காரணம் கொண்டும்  திருமண் இன்றி  ஶ்ரீசூர்ணம் மட்டும் தரியாதீர்கள்.


அதனால் வாழ்வில் நலம் கிட்டாது.


தாயார் இன்றி பகவான் இல்லை.


எனவே தாயாரை பிரித்தால் பகவத் அனுகூலமும் கிட்டாது


ஶ்ரீவைணவர்களான ஆன நாம்  எப்போதும் திருமண் காப்பு அணிந்தே காட்சி தருவோம்.


தீட்டு காலங்களில் என்னிடம் இருந்து ஶ்ரீ ( சுபம்) விலகியுள்ளது என குறிக்கவே வெறும் திருமண் அணிகிறோம்.


அதாவது தாயரை பிரிந்து பகவான் துன்பப்பட்டது போல் துக்கத்தில் உள்ளோம் என்பதை குறிக்கவே விடு திருமனை சீதக நாட்களில் தரிக்கிறோம்.


பிறப்பின் போது பகவானே உம்மை விட்டு இந்த ஆத்மா பிரிந்து மீண்டும் இப்பூலகில் ஜனித்து விட்டதே என்ற வருத்தத்திலும் 


இறப்பின் போது பகவானே எங்களுடன் இருந்து பழகிய அந்த ஆத்மா தன்னுடன் எங்களையும் உம்மிடம் சரணடைய அழைத்து செல்லாமல் சென்றுவிட்டதே என்ற வருத்தத்திலும்


பகவானே தாயரை பிரிந்து தேவரீர் எப்படி துன்பப்பட்டீரோ அதுபோல் துன்பமடைகிறோம் என்பதை குறிக்க விடுதிருமண் இடுகிறோம்.


எனவே எக்காரணம் கொண்டும் திருமண்காப்பு இன்றியோ 


ஶ்ரீசூர்ணம் மட்டும் தரித்து கொண்டோ இராதீர்.


துக்க காலத்தில் விடுதிருமனுடனும் 


சாதாரண காலத்தில் திருமண் காப்புடனும் இருக்க பழகுங்கள்.


தன்யோஸ்மி....


ஜெய் ஶ்ரீராம்!

வஸ்திர தானம்

 👗👚👔வஸ்திர தானம்🥼👘👕


நம் வேதத்தில் வஸ்திரத்தை குறித்து மிகவும் விசேஷமாக கூறப்பட்டுள்ளது.


 கரையில்லாத வஸ்திரத்தை அணியக்கூடாது. கரையுள்ள வஸ்திரத்தை மட்டுமே அணிய வேண்டும்.


 ஸ்நானம் செய்து முடித்தவுடன் நாம் கட்டியிருக்கும் வஸ்திரத்தை கீழே போட்ட பிறகு அதை கால்களால் எடுக்கவோ மிதிக்கவோ கூடாது.


 ஏனென்றால் தேவதைகள் அனைவரும் வஸ்திரத்தில் குடியிருப்பார்கள். வேதத்தில் வஸ்திரத்தை செய்யும் முறை, வஸ்திரத்தில் தேவதைகள் எப்படி குடி புகுவார்கள் என்பதை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் தான் வஸ்திரம் மிகவும் மகத்தானது.


 கரையுள்ள வஸ்திரத்தை யாருக்கேனும் அளித்தால் அவர்கள் பல தலைமுறைகள் நீடூடி வாழ வேண்டும் என்று நாம் நினைப்பதற்கு சமம். 


அதே போல் யார் கொடுத்தாரோ அவரும் பல தலைமுறைகள் நீடூடி வாழ வேண்டும் என்று ஸங்கல்பம் ஆகும். இதனால் தான் வஸ்திரத்தை தரும் பொழுது கரையில்லா வஸ்திரத்தை தரமாட்டார்கள். கரையுள்ளவையே தருவார்கள்.


"சர்வம் சிவமயம் ஜகத்"(நெசவு)துணி நெய்யும் நெசவுக் கலையின் மூலமாகவும்;நெசவாளிகள் மூலமாகவும் நாம் பல தத்துவ விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். ஆணிலும் பெண்மை உண்டு;பெண்ணிலும் ஆண்மை உண்டு.


 முன்பே அதனை கூறியது அறிவியல் அல்ல. முன்பே ஆன்மீகம் கூறிவிட்டது.(அர்த்த நாரீஸ்வரர் வடிவம் அதுதான்) வேட்டியோ புடவையோ;அவை இரண்டுக்குமே குறுக்கு நெடுக்கில்; குட்டையான குறுக்கிழையும் உண்டு.


 நீண்ட நெடுக்கிழையும் உண்டு. இதனை நேரிழை என்பர். நேரிழை என்றால் பெண் என்று பொருள். (நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்;சீச்சீ இவையும் சிலவோ விளையாடி...மாணிக்க வாசகர்.


 திருவெம்பாவையில்) ஆடையில் ஓடும் நீண்ட நூலிழை பெண்.அதில் குறுக்கே ஓடும் குட்டை நூலிழை ஆண். (உலகியல் வாழ்வில் பெண்ணே அதிக பங்கு வகிப்பவள் என்பதை இது காட்டுகிறது.


 அதனால்தான் இல்லற வாழ்வில் அனைத்து செயல்களிலும் பெண்ணுக்கே முன்னுரிமை தருகிறார்கள்.


 ("Ladies first"என்ற ஸ்லோகனை ஆங்கிலேயன் நம்மை காப்பி அடித்து பின்னால் சொன்னான். முதலில் அதை நாம்தான் சொன்னோம்) அப்படியானால். ஆணையும் பெண்ணையும் சேர்த்து நெசவு நெய்ததுதான் இல்லற வாழ்க்கையா?ஆமாம் அதுதான் உண்மை. 


அதை கூறுவதே இந்த வேஷ்டி புடவை முதலான ஆடைகள். அதனால்தான் விழாக்களில் ஒருவருக்கொருவர் வேட்டி வைத்து தருவது. புடவை வைத்து தருவது. குறைந்த பட்சம் ஓர் ரவிக்கை பிட்டாவது வைத்து தருவது எல்லாம் வந்தது. 


ஆம் உலகில் நெருக்கமாய் பின்னிப் பிணைந்த முதல் இண்டர் நெட் வலைத்தள சேவையே இந்த புடவை வேட்டிதான்.


 அதனால்தான் பூர்வ அபர கிரியைகள் எல்லாவற்றிலுமே இந்த துணி என்ற

 பொருளுக்கு மட்டும் முக்கியத்துவம் மிக அதிகமாய் உள்ளது. தானங்களில் வஸ்த்ர தானமும் இதனால்தான் வந்தது.                         


ஸ்வேதாரண்ய சர்மா, திருவெண்காடு 


🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

துளஸியின்_மகிமை -- குட்டி கதை

 .               #துளஸியின்_மகிமை


       ஏழை ஒருவர் தினமும் அதிகாலையில் எழுந்து காட்டுக்குச் சென்று கீரை வகைகளைப் பறித்து, அதைச் சந்தையில் விற்று அதில் வரும் பொருளைக் கொண்டு குடும்பத்தைச் சமாளித்துக் கொண்டிருந்தார். அவர் தினமும் அதிகாலையில் எழுந்து காட்டுக்குப் போகும் போது வழியில் ஒரு குடிசையில் முநிவர் ஒருவர் சிறு பெருமாள் விக்கிரகத்தை வைத்து துளஸி இலையால் பூஜை செய்வதைப் பார்த்துக் கொண்டே போவார். 


      ஒரு நாள் காட்டில் கீரை வகைகளைப் பறிக்கும் போது அதனருகே துளஸிச் செடியும் வளர்ந்திருப்பதைக் கண்டார். அப்போது அவருக்கு முனிவர் பூஜை செய்யும் துளஸி இலை ஞாபகம் வந்தது. இந்த துளஸியையாவது பறித்துக் கொண்டு முநிவர் செய்யும் பூஜைக்கு அர்ச்சனைக்காகக் கொடுப்போமே என்று துளஸியையும் சேர்த்துப் பறித்து கீரைக் கட்டோடு போட்டு, தலைமீது வைத்து முநிவரின் குடில் நோக்கி வந்தான். ஆனால் அவன் பறித்துப் போட்ட கீரைக் கட்டில் ஒரு சிறு கருநாகம் இருந்ததை அவன் கவனிக்கவில்லை.


      முநிவரின் குடில் அருகே வந்து நின்றான் ஏழை. முநிவர் ஏழையைப் பார்த்தார். அவன் பின்னே யாரோ ஒருவர் நிற்பதைக் கண்டார். பின் தன் ஞானதிருஷ்டியில் அவர் யார் என்று அறிய முயன்று கண்களை மூடினார். ஏழையின் பின்னே நிழல் போல் க்ரகங்களில் ஒருவரான ராகு பகவான் நின்றிருந்தார். முனிவர் ஏழையிடம், அப்பா! உன் தலையிலுள்ள கீரைக்கட்டை அப்படியே வைத்திரு. ஒரு ஐந்து நிமிடம் அதை கீழே இறக்கவேண்டாம். இதோ வந்துவிடுகிறேன் என்று கூறி குடிலின் பின்பக்கம் சென்று ஒரு மந்திரத்தை உச்சரித்து ஏழையின் பின்னே நின்றிருந்த ராகு பகவானை அழைத்தார். 


      ராகு பகவானும் முநிவர் முன்னே வந்து நின்று வணங்கி, ஸ்வாமி, தாங்கள் என்னை அழைத்த காரணம் என்ன? என்று கேட்டார். முநிவரும் ராகு பகவானை வணங்கி, ராகு பகவானே! எதற்காக இந்த ஏழையே பின் தொடர்ந்து வருகிறாய்? என்ன காரணம் என்று நான் அறியலாமா?


      ராகு பகவான், ஸ்வாமி! இந்த ஏழையை இன்று நான் ஒரு சிறு கருநாகம் உருவெடுத்து இவனைத் தீண்டவேண்டும் என்பது இவனுக்கு எழுதப்பட்ட கிரக விதி. ஆனால் இவன் என்றுமில்லாத அதிசயமாக இன்று திருமால் விரும்பும் துளஸியை இவன் சுமந்ததால் இவனை என்னால் துண்டமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். இவன் தலையில் சுமந்திருக்கும் துளஸியை உங்களிடம் கொடுத்த அடுத்த கணமே அவனைத் தீண்டிவிட்டு, என் கடமையை முடித்துக் கொண்டு நான் கிளம்பிச் சென்று விடுவேன் என்றார்.


      துறவிக்கு, ஏழை மேல் பரிதாபம் ஏற்பட்டது. எவ்வளவு ஆசையாக நம் பூஜைக்காக துளஸியைப் பறித்துக் கொண்டு வந்துள்ளான். அவனைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும் என்றெண்ணி, ராகு பகவானே! அவனை நீ தீண்டாமல் இருக்க ஏதேனும் பரிகாரம் உள்ளதா? என்று கேட்டார். ராகு பகவான், ஸ்வாமி! இத்தனை காலம் நீங்கள் பெருமாளுக்கு பூஜை செய்த புண்ணியத்தின் பலனனை அந்த ஏழைக்கு தாரை வார்த்துக் கொடுத்தால் அவனது தோஷம் நீங்கப் பெற்று, நான் அவனை தீண்டாமல் சென்று விடுவேன் என்றார்.


      முநிவர் மகிழ்ந்து, அவ்வளவுதானே! இதோ இப்பொழுதே நான் இதுவரை பெருமாளுக்கு செய்த பூஜையின் பலனையெல்லாம் அந்த ஏழைக்குத் தாரை வார்த்துத் தருகிறேன் என்று கூறி, ஏழைக்கு தன் பூஜையின் பலனைத் தாரை வார்த்துக் கொடுத்தார். ராகு பகவானும் முநிவரின் தர்ம குணத்தை எண்ணி மகிழ்ந்து மறைந்து போனார்.


      கீரைக் கட்டில் இருந்த கருநாகமும் மறைந்தது. முநிவர் ஏழையிடம் ஒரு கட்டளையிட்டார். அப்பா, இனி நீ தினமும் என் பூஜைக்கு துளஸி பறித்து வரவேண்டும். சரியா? என்றார். ஏழைக்கு மகிழ்ச்சி. நம்மால் பெருமாளுக்கு பூஜை செய்ய முடியாவிட்டாலும் முநிவர் மூலம் இப்படி ஒரு கொடுப்பினை கிடைக்கிறதே என்று நினைத்து மகிழ்ந்து கொண்டே இல்லம் நோக்கிச் சென்றான். 


        வைகுண்டவாஸன் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் ஆழ்ந்த பக்தியே. பக்தியோடு எதைக் கொடுத்தாலும் பரவசமாய் அவன் ஏற்பான்.


                              அமரபாரதி

மந்திரங்களின் தாத்பர்யம்

 பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர் J K  SIVAN  -


75  ''மந்த்ர  மஹிமை''



மஹா பெரியவா  ஒரு முறை அற்புதமாக  ஒரு  பிரசங்கம் செய்திருக்கிறார்.  அது  மந்த்ரங்கள் என்றால் என்ன?  யார் அவற்றை உருவாக்கியது? . அவற்றின் சக்தி என்ன?   இது போன்ற  நமக்கு  தெரியாத விஷயங்கள் பற்றி நன்றாக யோசித்திருக்கிறார்.   ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது படிப்பதற்கு.  அதன் சாராம்சம் தருகிறேன்.

எவ்வளவு  கஷ்டங்கள், சிரமத்தோடு இந்த பிரபஞ்சம் இயங்கி  வருகிறதே. இதையெல்லாம்  உருவாக்கி, நிர்வகிப்பது யார்? அந்த பரமாத்மா விடமிருந்து தான் நாம்  காணும் அனைத்தும், நாம் கேட்கும் சப்தம், நாம் அனுபவிக்கும் சகலமும் உருவாகியது.

நாம் கண்ணால் காண்கிறோமே, காதால்  கேட்கிறோமே, அதற்கு  முன்னால்  அவை  எல்லாம் ஆகாசத்தில் உண்டாகிறது. அங்கிருந்து தான் நமக்கு வருகிறது. பிரபஞ்சமே அப்படி உருவானது தான். பிரபஞ்சத்தில் இருக்கும் பஞ்ச பூதங்களும் மனிதனின் உடம்பிலும் உள்ளது.  வெளியே காணும் ஆகாசம்  நமது ஹ்ருதயத்தில் உள்ளது. ஹ்ருதயாகாசம் என்று அதற்கு பெயர்.  சமாதி நிலையில் யோகிகளால் அதை   அனுபவிக்க முடிகிறது. சாதாரணர்கள் நம்மால் அறிய முடியவில்லை.   அப்படி உணரும்போது வெளி, உள்ளே என்று இல்லாமல் எல்லாம் ஒன்றாக கலந்துவிடுகிறது.   அந்த  நிலையில் யோகிகளால், ரிஷிகளால்  ஆகாசத்தில் உருவாகும் சப்தத்தை கேட்க முடிகிறது.  அந்த சப்தங்களை அவர்கள்  கிரஹித்து நமக்கு  சொல் வடிவத்தில் சப்தங்களாக தந்தது தான் வேத மந்திரம்.  எங்கோ யாரோ  பாடுவது காற்றில் செலுத்தப்பட்டு காரிலிருந்து   ரேடியோ  ஆன்டென்னா  ரஹித்து நாம்  சிற்றலைகளில்  கேட்கிறோமே  அது போல்  நமக்கு தந்தது. ரேடியோக்கள் தான் ரிஷிகள்.

எந்த யோகியும், எந்த ரிஷியும் மந்திரங்களை உருவாக்க வில்லை.  ''கண்டு பிடித்தார்கள்'' .  ஆகாசத்தில் இருப்பதை  கிரஹித்தார்கள். அவை  ஆதி அந்தமில்லாத, அநாதி.  ''மந்த்ர த்ரஷ்டா'' என்றால் மந்திரங்களைக்  கண்டுபிடித்தவர்கள் என்று அர்த்தம். அவர்களை ''ரிஷி'' என்கிறோம்.  அவர்கள் , ''மந்த்ர கர்த்தா'' என்று செய்தவர்களோ,  உருவாக்கியவர்களோ  இல்லை.  வேத மந்த்ரங்கள்  அனைத்தும்  பரமாத்மாவின் மூச்சு. 

இந்த வேத மந்திரங்களின் அர்த்தம் முக்கியம் இல்லை.  சப்தம் தான் ரொம்ப முக்கியம்.  உச்சரிப்பு. உச்சாடனம் தான் அதி முக்கியம். அது தான் மந்த்ர சக்தி. மந்த்ர அக்ஷரங்களை சரியான அளவில் ஸ்வரத்தோடு  உச்சரிக்கவேண்டும். 

எனக்கு தெரிந்து  மாயவரம் பக்கம் ஒரு தேள் கொட்டு, கடிக்கு, மந்திரிப்பவர் ஒருவர் இருந்தார். அவர் சொல்லும் மந்திரத்தை தப்பில்லாமல் உச்சரித்தால் கடி விஷம், கொட்டு வலி உடனே நீங்கியதை பலரிடம் அறிந்திருக்கிறேன்.   பலரால் சொல்ல முடியாது என்பதால்  அவர்களுக்காக அவரே  உச்சரிப்பார்.   அந்த மந்த்ரத்தின்  அர்த்தம் கேட்டால், தெரியாது என்பார்.

பில்லி சூனியம், போன்ற கெட்டவை  செய்யும்  மாந்த்ரீக, மந்திரங்களும் அப்படித்தான்.  சரியான உச்சரிப்பில், உச்சாடனத்தில் தான் அதன் சக்தி.  அந்த காலத்தில் இப்படி பலருக்கு கெடுதல் செய்யும் மாந்த்ரீகர்களின் வாயில்  பல்லை தட்டிவிடுவார்கள், அது தான் தண்டனை. ''பல் போனால் சொல் போச்சு''.  சரியாக உச்சரிக்கமுடியாது. மந்திரம் பலனளிக்காது. 

காயத்ரி மந்திரம், பித்ரு ஸ்ரார்த்த மந்திரம், கல்யாண மந்திரம் எல்லாம் சரியாக,  அளவோடு, ஸ்வரத்தோடு,  சொல்லும் வாத்தியார்கள்  மூலம் அறிந்து  சொன்னால் தான் பலன்.  இக பர நன்மைகள் தருபவை இந்த வேத மந்த்ரங்கள்.

''அதெப்படி சார்  நமக்கு கேட்காமல் ரிஷிகளுக்கு மட்டும் ஆகாசத்திலிருந்து தனியாக  இந்த மந்திரங்கள் காது கேட்கும்?''

அங்கு தான் நமக்கும்  யோகிகள், ரிஷிகளுக்கும் உள்ள வித்யாசம் இருக்கிறது.  நம்மால் காண முடியாததை , கேட்க  முடியாததை, கிரஹிக்க  முடியாததை, உணரமுடியாததை அவர்கள் பல வருஷங்கள் தவமிருந்து பெற்ற சக்தி அது. அவர்களால் தான் நாம்,  நம்மால்  அறிய முடியாததைஅறிகிறோம், பலன் பெறுகிறோம். அந்த  நன்றி கலந்த பக்தி இருந்தால் போதும். நமது சக்திக்கு, புத்திக்கு எட்டாத அவற்றை அறிந்து எளிதாக வேத மந்திரமாக  சப்தமாக  அக்ஷரமாக அவர்கள் தந்திருக்கிறார்கள். 

ரஷ்யா  அமெரிக்கா  ஜப்பான் ஊர்களில் நடப்பதை நாம்  நேரில் பார்க்கிறோமா, கேட்கிறோமா?, பத்திரிகை காணொளி மூலமாக  தெரிந்து கொள்வது போல் ரிஷிகளின் மந்த்ரங்கள் நமக்கு அறிவூட்டுகிறது.

ஆபஸ்தம்பர் யார் தெரியுமா

 *ஜலத்தை அந்தரத்தில் நிறுத்திய ஆபஸ்தம்பர்.* 👇👇👇

 *யஜூர் வேதம் அனுசரிக்கும் பிராமணர்கள் முக்கால் வாசி பேர் ஆபஸ்தம்ப ஸுத்ரத்தை சேர்ந்தவர்கள் ! ஆனால் இந்த ஆபஸ்தம்பர் என்ற ரிஷி யார் ? இவர் பெயர் காரணம் என்ன ?* 

 *ஒரு சமயம் வேதவிற்பன்னரான ப்ராஹ்மணர் ஒருவர் ஸ்ராத்தம் செய்தார். போஜனம் செய்விக்க ஒரு ப்ராஹ்மணருக்காகக் காத்திருந்தார். வெகு நேரம் கழித்து ஒரு பிராஹ்மணர் வந்தார். அவர் நல்ல பசியுடன் இருந்தார். அவரை அமர்த்தி இலை போட்டு தானே பரிமாறினார் கர்த்தா.* 

 *வந்த பிராஹ்மணர் சாதாரண மனிதர்களைக் காட்டிலும் அதிகமாகச் சாப்பிட்டார். ப்ராஹ்மணனுக்கு நல்ல பசிபோலும் என்று எண்ணி இவரும் கேட்கக் கேட்கப் போட்டார். போடப் போட அனைத்தும் ஒரு நொடியில் காலியாயிற்று!* 

கர்த்தாவின் கண்களில் முதலில் இருந்த வினயம் மறைந்து ஏளனம் குடிகொண்டது. அதைத் தன் செயல்களிலும் காட்டினார். அதைப் பொருட்படுத்தாத அதிதி 'இன்னும் போடு!¸ 'இன்னும் போடு!' என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

அபரிதமாக உண்டும் த்ருப்தி யடையாமல் தனக்கு வேண்டுமென்றே தொல்லை கொடுக்க இவர் வந்திருக்கிறார் என்று கர்த்தா நினைத்தார். சமைத்தவை எல்லாம் காலியாகிவிட்டன! 'இன்னும் வேண்டும்! கொண்டு வா!' என்று ப்ராஹ்மணர் கேட்கவே கர்த்தாவுக்குக் கோபம் வந்துவிட்டது. 

காலியான சமையல் பாத்திரத்தைக் கொண்டுவந்து பிராஹ்மணரின் இலையின் மேல் கவிழ்த்து 'த்ருப்தி ஆயிற்றா!' என்று கேட்டார். (போஜனம் முடிந்தபோது கர்த்தா ப்ராஹ்மணர் களை 'த்ருப்தாஸ்தா' என்று கேட்கவேண்டும். 

திருப்தியடைந்த ப்ராஹ்மணர்கள் 'த்ருப்யத:' என்று 3 முறை சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் ஶ்ராத்தம் நல்ல முறையில் பூர்ணமடைந்தது என்று அர்த்தம்) ஆனால் அந்த பிராஹ்மணர் 'ந' என்று சொன்னார்! 'எனக்கு திருப்தி இல்லை' என்பது இதன் பொருள். 

கர்த்தாவுக்கு கோபம் தலைக்கேறியது. 'இவர் கேட்கக் கேட்க கொண்டுவந்து கொட்டினேனே! மலை போல உணவுப் பண்டங்களைத் தின்றுவிட்டு திருப்தி இல்லை என்று சொல்லி என்னை அவமானப்படுத்தி நான் செய்த ஶ்ராத்தத்தையும் இந்த ப்ராஹ்மணர் கெடுத்துவிட்டாரே' என்று சினந்தார். 

கர்த்தா நல்ல தபஸ்வியே. கோபத்தால் முகம் சிவந்த அவர் சாபம் கொடுக்க கையில் ஜலத்தை எடுத்து அபிமந்திரித்து பிராஹ்மணரின் தலையில் எறிந்தார். 

அப்பொழுதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. வந்த பிராஹ்மணர் தன் கை அசைவினால் அபிமந்திரித்து எறிந்த ஜலத்தை அந்தரத்தில் நிறுத்தினார்! 

கர்த்தா இதைப் பார்த்து பிரமித்து நின்றார். தான் எறிந்த நீரை அந்தரத்தில் நிறுத்திய அவர் சாதாரண மனிதர் அல்ல¸ தன்னை விட உயர்ந்தவர் என்பதை அறிந்து¸ 'பூஜ்யரே! நீங்கள் யார்? என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறீர்கள்?' என்று கேட்டார். 

அதற்கு அந்த பிராஹ்மணர் பதிலளித்தார். 'நான் ஒரு முனிவன். நான் அதிகம் உண்டதால் என்னை ஏளனம் செய்தாய். உன் பார்வை களாலும் செயல்களாலும் என்னை அவமதித்தாய். 

ஶ்ராத்தத்திற்கு வரும் பிராமணர் களிடம் உன் மூதாதையர்களின் ஒரு அம்சத்தை வைத்து பகவான் அனுப்புகிறான் என்பதை மறந்து நீ நடந்து கொண்டாய். உனக்கு புத்தி புகட்டவே நான் இப்படி நடந்து கொண்டேன். ஶ்ராத்தத்தை பய பக்தியுடன் கோப தாபங்களை விட்டுச் செய்யவேண்டும் என்பதைத் தெரிந்து கொள்!' என்றார். 

அதற்குக் கர்த்தா¸ 'ஸ்வாமி! என் தவறை நான் உணர்ந்து கொண்டேன். க்ஷமியுங்கள். இனி இம்மாதிரித் தவறுகளைச் செய்யமாட்டேன். நான் செய்த ஶ்ராத்தம் பூர்ணமாகவில்லையே! அதற்கு என்ன செய்ய வேண்டும்?' என்று வினவினார். 

 **அதற்கு அந்த பிராஹ்மணர்¸ நான் 'ந' என்று சொல்லி ஶ்ராத்தம் பூர்ணமாகாமல் இருக்கிறது. புருஷ ஸூக்தம் பாராயணம் செய்!* 

 *இந்த தோஷம் பரிகாரம் ஆகும்!' என்றார். அதை பாராயணம் செய்து ஶ்ராத்தத்தை முடித்தார் கர்த்தா.*ஜலத்தை அந்தரத்தில் நிறுத்தியதால் அவரை ஆபஸ்தம்பர் என்று அழைத்தார்கள்* 

ஶ்ராத்த காலத்தில் புருஷ ஸூக்தமும் காடகோபநிஷத்தும் பாராயணம் செய்யும் நியமம் இருக்கிறது. *ஆப என்றால் நீர். நீரை ஸ்தம்பிக்க வைத்து அந்தரத்தில் நிறுத்தியதால் அவர் ஆப ஸ்தம்பரானார்.* *

*ஆபஸ்தம்பரின் க்ருஹ்ய சூத்ரம் பிரஸித்தமானது* . 🙏

மகாளய பக்ஷம் 2021

 *மகாளய பக்ஷத்தில் திதி விவரங்கள்* *பற்றிய பதிவுகள்*


21-9-21 பிரதமை திதி

22-9-21 துவிதியை

23-9-21 திருதிதியை

24-9-21 சதுர்த்தி ( மஹாபரணி)

25-9-21 பஞ்சமி

26-9-21 ஷஷ்டி

28-9-21 ஸப்தமி (மஹா வியதீ பாதம்)

29-9-21 மத்யாஷ்டமி

30-9-21 நவமி

1-10-21 தசமி

2-10-21 ஏகாதசி

3-10-21 துவாதசி

4-10-21திரயோதசி

5-10-21 சதுர்தசி ( போதாயன அமாவாசை)

6-10-21 மஹாளய அமாவாசை,


மஹாளயத்தின் போது என்ன காய்கறிகள் தவிர்க்க வேண்டும.


1. முட்டகோஸ்

2.நூக்கல்

3.முள்ளங்கி

4.கீரை

5.பீன்ஸ்

6.உருளைகிழங்கு

7.காரட்

8.கத்தரிக்காய்

9.வெண்டைக்காய்

10.காலிஃபளவர்

11.ப்ரெக்கோலி

12.பட்டாணி

13.வெங்காயம்

14.பூண்டு

15.பெருங்காயம்

16.தக்காளி

17.கத்தரிக்கா

18.சொள சொள

19.சுரக்காய்

20.வெள்ளை பூசணி

21.மஞ்சள் பூசணி

22.முருங்கக்காய்

23.கோவக்காய்

24.பீட்ருட்

25.பச்சைமிளகாய்


மஹாளயத்தின் போது சேர்க்க வேண்டிய காய்கறிகள் :


அவரைக்காய்

புடலங்காய்

பயத்தங்காய்

வாழத்தண்டு

வாழைப்பூ

வாழக்காய்

சக்கரவள்ளி

சேனை

சேப்பங்கிழங்கு

பிரண்டை

மாங்காய்

இஞ்சி

நெல்லிக்காய்

மாங்கா இஞ்சி

பாரிக்காய்

பாகற்காய் 

மிளகு

கரிவேப்பிலை

பாசிப்பருப்பு

உளூந்து

கோதுமை

வெல்லம்


*ஓம் நமசிவாய*



மஹாளய பக்ஷத்தை எப்படி செய்யவேண்டும்


க்ருஷ்ணபக்ஷ ப்ரதமை முதல் 

ஶுக்லபக்ஷ ப்ரதமை வரை

அதாவது

(21ம்தேதி முதல் 07ம் தேதி வரை)

17 நாட்களும் திலதர்ப்பணமாக பக்ஷமஹாளயமாக செய்யவேண்டும்.


அல்லது முக்யமான புண்யதினங்கள்

மஹாபரணீ.கபிலஷஷ்டி.

மஹாவ்யதீபாதம்.மத்யாஷ்டமீ.

அவிதவாநவமீ.ஏகாதஶீ.

ஸன்யஸ்த மஹாளயம்.

கஜச்சாயை.ஶஸ்த்ரஹதம்.

அமாவாசை.போன்ற தினங்களிள்

மட்டும் தர்ப்பணம் செய்யலாம்.


கடைசிபக்ஷமாக ஒருதினமாவது

மஹாளயத்தை செய்யவேண்டும்.


1.தினமும் செய்வது 

(பக்ஷமஹாளயம்)

2.முக்யதினங்களிள் செய்வது (புண்யதின மஹாளயம்)

3.ஒருநாள் செய்வது 

(ஸக்ருன் மஹாளயம்)


புரட்டாசி.ஐப்பசி மாதங்களிள் அப்பா&அம்மா ஶ்ராத்தம் வந்தால்

ஶ்ராத்தம் முடிந்து க்ருஷ்ணபக்ஷத்தில்

மஹாளயத்தை செய்யவேண்டும்.

இது ஒருநாள் மட்டும் மஹாளயம்

செய்பவர்களுக்கு மட்டும்.


பக்ஷ மஹாளயம் செய்பவர்கள்

பஞ்சம அபர பக்ஷத்திலேயே

தினமும் தர்ப்பணம் செய்யலாம்.

இவர்களுக்கு பிதா&மாதா ஶ்ராத்தங்கள் வந்தாளும் ஏதும் தடையில்லை


1.ஹோமத்துடன் செய்வது 

பார்வண மஹாளயம்


2.போஜனத்துடன் ஹிரண்யமாக செய்வது 

போஜனபூர்வ ஹிரண்யரூப மஹாளயம்


3.போஜனம் இல்லாமல் அரிசி.பாசிப்பருப்பு.வெல்லம்.

காய்கறிகள்.தக்ஷினை போன்ற த்ரவ்யங்களை கொடுத்து 

செய்வது ஆமரூப மஹாளயம்.


இதில் நம் ஶக்திக்கு  எப்படியெல்லாம் நம்மால் செய்ய முடியுமோ அதை மிக ஶ்ரத்தையாக செய்யவேண்டும்.


[மஹாளய பித்ருக்கள் வரிசை]

1.விஶ்வேதேவர்

2.பித்ராதிகள் (அப்பா முதல் மூன்று)

(தாயார் இல்லாதவர்களுக்கு மட்டும்)

3.மாத்ராதிகள் (அம்மா முதல் மூன்று)

4.மாதாமஹாதிகள் 

(அம்மாவின் அப்பா முதல் 6பேர்)

5.இரண்டுவம்ஶ காருணிக

பித்ருக்கள்.

6.மஹாவிஷ்ணு

ஆக மொத்தம் 6 ப்ராஹ்மணாளுக்கு த்ரவ்யங்கள் தந்து செய்யவேண்டும்.


அப்பா இல்லாத அனைவரும்

மஹாளயத்தை செய்யவேண்டும்.

17 நாட்களும் நியமமாக இருக்கவேண்டும்.

பித்ரு ஸம்பந்தமான கார்யங்களை மட்டும் செய்யவேண்டும்.

வபனம் செய்து கொள்ளக்கூடாது.

எண்ணெய் ஸ்னானம் செய்யக்கூடாது.

ஸ்த்ரீ ஸம்போகம் கூடாது.

வெளியில் எதுவும் சாப்பிடக் கூடாது.

ஆசாரமாக சமைத்து 

சாப்பிட வேண்டும்.

ஒருவேளை அன்னத்துன் சாப்பாடு

ஒருவேளை அன்னமில்லாமல் சாப்பாடு என்ற ஆஹார கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும்

மருந்து சாப்பிடுபவர்கள்

சாப்பாட்டு நேரத்தைத்விர 

மற்ற நேரங்களில் பழம்.பால்.

உப்பு இல்லாமல் கஞ்சி.

போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

தோஷமில்லை.


வெங்காயம்.பூண்டு.முருங்கை.

கத்தரி.முள்ளங்கி.சுரைக்காய்.

புழுங்கல் அரிசி.

சேமியா.பாக்கெட்உணவு.

வெளியில் உணவு.

குளிக்காமல் சமைத்தஉணவு.

இவைகள் கூடாது.

தினமும் மஹாளயம் செய்தாலும்

ஒருநாள் மட்டும் மஹாளயம் செய்தாலும்  

17 நாட்களும் நியமம் உண்டு.



*Pitru Paksha Shraddha 2021:* 


Pitru paksha homage to ancestors through food and water offerings in the form of Pind Pradhan and tarpan. 


The duration of the Pitru paksha is 16 lunar days in the lunar month of Bhadrapada /Ashwin as per the Hindu calendar.


 People from the south and west India follow this in the lunar month of Bhadrapada and


 people from the north follow this in the month of Ashwin. It begins with the full moon day or a day after the full moon day and ends on Mahalyaya Amavasya. Pitru paksha Shraddha has different names depending upon the region and language.



Pitru Paksha 2021 dates :

Starts on Purnima Shraddh on September 20th, Monday, 2021, and ends on Sarva Pitru Amavasya also known as Mahalaya Amavasya October 06, 2021, Wednesday.


Importance of Pitru Paksha:


According to Hindu scriptures, there are three debts called Dev, Rishi, and Pitru debts. People offer food and water to fulfill their ancestors who come to the earth planet during Pitru paksha. As a tribute and tradition, people perform Pitru Karya in Pitru paksha and are followed by Devata Karyas after Pitru paksha. 


When we follow this order one will get good results from Devata pujas. Pitrus bestow Santana (generation), Santrupti (happiness), and Sampath (wealth). So this afterlife ritual is very important.


This Pitru paksha shraddha is also known in different names depending upon the region and language.



Pitri Pokkho, Sola Shraddh, Kanagat, Jitiya, Mahalaya Paksha., Apara Paksha, Pitri paksha etc.

பக்தியிலே ஒன்பது விதமான பக்தி பற்றி பேசுகிறான் ப்ரஹ்லாதன்

 பக்தியிலே ஒன்பது விதமான பக்தி பற்றி பேசுகிறான் ப்ரஹ்லாதன். 


நீ படித்ததில் உத்தமமான விஷயம் எது? என்று அப்பா ஹிரண்யகசிபு கேட்டதற்கு அவன் மடியிலேயே உட்கார்ந்து கொண்டு சொன்னான் ப்ரஹ்லாதன்.


************************************


ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ ஸ்மரணம் பாதசேவனம்

அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் சத்யம் ஆத்மநிவேதம்

இதி பும்ஸார்பிதா விஷ்ணௌ பக்திஸ்சே நவ லக்ஷணா


***********************************

( ஶ்ரீ​மத் பாகவதம் ஸப்தம ஸ்கந்தம்)


ஒன்பது வித பக்தியைப் பற்றி அந்தக் குழந்தை சொன்னான்.


 அதில் முதல் பக்தி ச்ரவண பக்தி. 

காது கொண்டு பகவானைப் பற்றிக் கேளுங்கள்!


பார்க்க வேண்டும் என்றால் கண்களைத் திறக்க வேண்டும்.


கேட்க வேண்டும் என்றால் காதைத் திறக்க வேண்டும் என்று இருக்கின்றதோ?


காதைத் திறந்தே வைத்திருக்கிறான் பரமாத்மா.


எதையும் அநாவசியமாகப் பார்க்காதே


அநாவசியமாகப் பேசாதே


ஆனால் சத் விஷயங்களை மகான்களிடத்தில் கேட்டுக் கொண்டேயிரு .


கேட்டால் தான் இந்த ஆத்மா ஷேமத்தை அடையும். கேட்டுக் கேட்டே வரவேண்டும் 


எல்லாம் படித்தே சம்பாதித்து விட முடியாது. வேதாந்த விஷயங்களை மகான்களிடத்தில் கேட்க வேண்டும் . அதனால் தான் காதுக்கு​ மூடியே போடாமல் வைத்துள்ளான்.


அதன் பிறகு கீர்த்தனம், ஸ்மரணம் எல்லாம். காற்றில்லாத இடத்தில் தீப ஜ்வாலை எப்படி ஆடாமல் அசையாமல் எரியுமோ, அந்த மாதிரி

 ‘ஆப்ரயாணாத் தத்ராபி. த்ருஷ்டந்’ என்கிறது​

ப்ரம்ம சூத்திரம்.


பகவானுடைய பெருமையை நாம் எப்போது கேட்கிறோமோ அன்றிலிருந்து த்யானம் பண்ண வேண்டும். அவனுடைய


 "திருவடியைப்​ பிடித்து பாத சேவனம் பண்ண வேண்டும்".


பகவானுக்கு தாஸனாய் இருக்க வேண்டும்;

அவனுடன் தோழமை கொள்ள வேண்டும்; 

சர்வத்தையும் ஆத்ம நிவேதனம் பண்ண வேண்டும் ; 

இதில் ஒன்று சித்தித்து விட்டால் போதும்.


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


கேட்டல் 

^^^^^^^^^^

என்பதில் பரீக்ஷித் மஹாராஜா மாதிரி கேட்டவர்கள் கிடையாது​.


சொல்வதில்

^^^^^^^^^^^^^^

சுகப்ரம்மம் மாதிரி சொன்னவர்கள் இல்லை.


ஸ்மரணம் 

^^^^^^^^^^^

பண்ணுவதில் ப்ரஹ்லாதன் மாதிரி ஸ்மரித்தவர்கள் இல்லை.


பாத சேவனம் 

^^^^^^^^^^^^^^^^^

பண்ணியதில் மஹாலக்ஷ்மி மாதிரி இல்லை.


விழுந்து விழுந்து சேவிப்பதில்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 அக்ரூரர் போன்று யாரும் இல்லை.


அர்ச்சித்ததில்

^^^^^^^^^^^^^^^^

புஷ்பத்தை இட்டு 

பகவானை அர்ச்சித்ததில் த்ருவனுடைய வம்சத்தில் வந்த ப்ருது சக்ரவர்த்தி போன்று யாரும் இல்லை.


தோழமை

^^^^^^^^^^^^^

கொண்டதில் அர்ஜுனன் போன்று யாரும் இல்லை .


தாசனாய்

^^^^^^^^^^^^

பகவானுக்கு தாஸனாய் நின்றதில் ஆஞ்சநேயன் மாதிரி யாரும் இல்லை .


அற்பணம்

^^^^^^^^^^^^

தன்னையே பகவானுக்கு அர்பணித்ததில் பலிசக்ரவர்த்தி மாதிரி யாரும் இல்லை.


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


ஒன்பது விதமான பக்திக்கு இப்படி ஒன்பது விதமான பேர் நமக்கு உறுதுணையாக

சாட்சியாக

இருக்கிறார்கள்.


இதில் முதல் பக்தி ஸ்ரவணம். கேட்டல் என்பது வந்துவிட்டால் அதுவே நம்மை உயர்த்தி விடும்*.


ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மன் திருவடிகளே போற்றி ! போற்றி ! 

கோவிந்தா கோவிந்தா ஹரி கோவிந்தா

சரணம் !சரணம் !!சரணம் !!!!

ஆத்மா பிறப்பிறப்பு ரகசியங்கள்

 ஆத்மா🙏🙏


*பூலோகத்தில் ஒரு பிறவியை எடுக்கும் முன் இறைவனுக்கும் ஆத்மாவிற்கும் பெரிய சொற் போரே நடக்குமாம்*..


 *இந்த கலியுகத்தில் நான் பிறக்கமாட்டேன் என்று இறைவனிடம் ஆத்மா அடம் பிடிக்குமாம்*..


 *அதற்கு இறைவன் ஆத்மாவிடம் சொல்லுவாராம்*.


*நீ பிறக்கும் பொழுது நீ இரண்டு வழிகளில் வாழ உனக்கு வாய்ப்பை கொடுத்து அனுப்புகிறேன்.*


 *அந்த இரண்டை கொண்டு*

*நீ உன் இஷ்டம் போல வாழ்ந்து ஒன்று என்னை வந்து அடையலாம்*.


*இரண்டு உன் மனசு போல வாழ்ந்து திரும்ப திரும்ப பூலோகத்தில் பிறக்கலாம்*..


*இரண்டும் உன் கையில் தான் இருக்கிறது*. *உன் வாழ்க்கையில் எந்த விதத்திலும் நான் தலையிட மாட்டேன்*

*நீ என்னை அழைத்தால் ஒழிய*.


*இங்கு தான் சரணாகதி வெளிப்படுகிறது*. *ஒரு ஜீவனுக்கு உரிய ஜீவ ஸ்வாதந்தரியத்தை*

*உனக்கு கொடுத்து அனுப்புகிறேன்*.


*இறைவன் கொடுத்த விளக்கங்களும் உண்மைகளும்* 


*ஒரு ஆத்மா கர்ப்பத்தில் சிசுவாக வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது ஏழாவது மாதம் வரை ஞாபகத்தில் இருக்குமாம்*..


 *ஏழாவது மாதத்தில் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவிற்கு* 


*எல்லாம் ஞாபகம் வந்து இறைவனை அழைக்குமாம்.* .


*என்னை இனிமேல் பிறக்க வைக்காதே*. *எனக்கு இந்த மனிதப்பிறவி வேண்டாம் என்று கெஞ்சுமாம்*.


*அப்பொழுது “ஷடம்” என்னும் வாயு இறைவனை அழைக்கும்* *ஏழாவது மாத சிசுக்களை மூடி அவைகளை சுற்றி ஒரு கவசத்தை உருவாக்கும்.*


 *அந்தக்கவசத்திற்கு சென்ற பிறவியின் ஞானம்,* *ஞாபகங்கள் எல்லாவற்றையும் மறக்க வைக்கும் சக்தி உள்ளது.*


சிசு குழந்தையாக பிறந்து இந்த பூலோகத்தில் ஒரு பிறவியை எடுத்து கலி காலத்தின் தாக்கங்களாலும் விஹாரங்களாலும் பாதிப்புக்கு உள்ளாகி எல்லா பாவங்களையும் செய்து திரும்ப ஒரு பிறவிக்கு வித்திட்டு இந்த பூலோகத்தில் இருந்து பிறந்து விடுகிறோம்.


உங்களுக்கு தெரியுமா? 


*வைஷ்ணவ கோவில்களில் பெருமாளின் திருவடிகளை கொண்ட "சடாரி" என்னும் பாதத்தை நம் தலையில் வைப்பார்கள்*. 


*அது ஏதற்கு என்றால் "நான் கர்ப்பத்தில் இருந்தாலும் ஒரு பிறப்பை எடுத்து இருந்தாலும் எனக்கு உன் நினைனவாகவே இருக்க வேண்டும்*. 


*மறதியை கொடுக்காமல் ஷடம் என்னும் வாயுவிடம் எனக்காக போராடி உன்னுடைய ஞாபகம் எப்பொழுதும் இருக்கும் படி எனக்கு அருள்வாயாக* *என்று பெருமாளை வேண்டி கொள்வது தான் நமக்கு சடாரியை தலையில் வைக்கும் தாத்பர்யம்*.


நீங்கள் நினைப்பது என் காதுகளில் விழுகிறது.இறைவன் எவ்வளவு கொடியவன் என்று. நீங்கள் நினைப்பது மிகப்பெரிய தவறு. இந்த உண்மைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.


ஒரு குழந்தை பிறக்கையிலே வாழக்கூடிய இரண்டு வாய்ப்புகளை கொடுத்து அனுப்புகிறான் இறைவன். ஒன்று ஆத்மா மற்றொன்று மனசு.. .


 நீங்கள் ஆத்மாவை ஆதரமாக கொண்டு வாழ்ந்தால் இறைவனை சென்றடையலாம்.. 


உங்கள் மனதை ஆதாரமாக கொண்டு வாழ்ந்தால் பாவங்கள் செய்து இந்த பூலோகத்தில் முடிவில்லா பிறவிகளை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கலாம். முடிவு நம் கையில்.


ஒவ்வொரு ஜீவனுக்கும் ஜீவ ஸ்வாதந்த்ரியம் என்னும் ஜீவனுக்குண்டான சுதந்திரத்தை கொடுத்து தான் அனுப்புகிறான்.


ஆத்மா இறைவனுக்கும் நமக்கும் உண்டான பாலம். மனசு நமக்கும் இந்த பூலோகத்திற்கும் இருக்கும் பாலம். வாழும் வகை நம் கையில் தான் இருக்கிறது.


எல்லாவற்றிற்கும் மேல் இன்னொரு உண்மையையும் தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன் #அந்தர்யாமியாக இருந்து கொண்டிருக்கிறான். 


இதயத்தின் வலது பாகத்தில் ஒரு நெல்லின் நுனியை நூறு பகுதிகளாக பிரித்தால் அதில் ஒரு சிறு பகுதி மிஞ்சுமே அந்த அளவில் நம்முடனேயே வாழ்ந்து கொண்டிருகிறான்.


 இறைவனின் ஐந்து அவதாரங்களில் இந்த அந்தர்யாமி அவதாரமும் ஒன்று.


நாம் எல்லோருமே இறைவன் நமக்குள் வாழ்ந்து கொண்டிருப்பதை அனுபவித்து இருக்கலாம். நாம் தவறான வழியில் ஒரு காரியத்தை செய்யும் பொழுது நமக்குள் இருந்து ஒரு குரல் நம் தவறை சுட்டிக்காட்டும் தெரியுமா?. அந்தக்குரலுக்கு சொந்தகாரர் இறைவனே..


இறைவன் ஒவ்வொரு பிறவியிலும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்க இருக்க காரணம் என்ன தெரியுமா? மனிதனுக்கு வாழ்க்கையில் மாற்றங்கள் என்பது எந்த நொடியிலும் வரலாம்.. ஏதாவது ஒரு பிறவியில் இவன் திருந்தி ஆத்மாவை ஆதாரமாக கொண்டு வாழ ஆரம்பித்து இறைவனை அழைத்தால் அந்த நொடியே இவனை ஆட்கொண்டு வழி நடத்தி தன்னுடன் அழைத்துக்கொள்ளத்தான்..


ஏன் தெரியுமா? நாம் அனைவருமே இறைவனின் சொத்து. இறைவன் அவன் சொத்தை அடைய என்னென்ன வழிகள் இருக்கிறதோ அத்தனையும் கையாண்டு நம்மை அடைய முயற்சிக்கிறான். ஆனால் நாம் ஒவ்வொரு பிறவியிலும் இறைவனையும் ஏமாற்றி நம்மையும் ஏமாற்றி கொள்கிறோம். 


திரும்பவும் நமக்கு ஞானம் வருவகற்கு அறுபது வருடமாகிறது. இது ஒரு தொடர்கதையாக ஆகி விட்டது. 🙏🏼🙏🏼


 *ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண*🙏🙏

Tuesday, 14 September 2021

அருமையான ஆன்மீக தகசல்கள்



சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை.....

திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்


2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்....

ஐப்பசி பவுர்ணமி


3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்.....

தட்சிணாமூர்த்தி


4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?

திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)


5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்.....

திருக்கடையூர்


6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்......

பட்டீஸ்வரம்


7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்.........

திருமூலர்


8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்.......

திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)


9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது...........

துலாஸ்நானம்


10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது.........

கடைமுகஸ்நானம்


11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்.....

கோச்செங்கட்சோழன்.


'1. நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்த இடம்....

அஹோபிலம்(சிங்கவேள்குன்றம்) 


2. நரசிம்மவழிபாட்டிற்கு மிக உகந்தவேளை....

பிரதோஷ வேளை(மாலை 4.30-6))


3. இரணியனை சம்ஹரித்த நாள்...

சதுர்த்தசி திதி


4. நரசிம்ம வழிபாட்டிற்குரிய நட்சத்திரம்...

சுவாதி(நரசிம்மரின் ஜென்ம நட்சத்திரம்)


5. பக்தன் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் பக்தன்...

(பக்த) பிரகலாதன்


6. அஹோபிலத்தில் நரசிம்மருக்கு எத்தனை கோயில்கள் உள்ளன?

ஒன்பது (நவநரசிம்மர் கோயில்)


7. நரசிம்மருக்குரிய நிவேதனம்...

பானகம், தயிர் சாதம்


8. பிரகலாதனுக்கு ஹரி மந்திரத்தை உபதேசித்தவர்...

நாரதர்


9. நரசிம்மரின் பெயரைக் கொண்ட தமிழ்ப்புலவர்...

கம்பர்(தூணில் அவதரித்தவர் என்பதால் நரசிம்மருக்கு கம்பர் என்று பெயர்)


10. நரசிம்மரின் பெருமையை எப்படி குறிப்பிடுவர்?

""நாளை என்பது இல்லை நரசிம்மனிடத்தில்''


1. மாரியம்மனாக வழிபடப்படும் ரிஷிபத்தினி....

ஜமதக்னி ரிஷியின் மனைவியான ரேணுகாதேவி.


2. கண்ணன் ....பாம்பின் மீது நடனம் ஆடினார்

காளிங்கன்


3. தேவர்களின் குருவாக இருப்பவர்...

பிருகஸ்பதி (வியாழன்)


4. குதிரை முகம் கொண்ட பெருமாள்...

ஹயக்ரீவ மூர்த்தி


5. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்....

நடராஜர்(கூத்து என்றால் நடனம்)


6. விநாயகர் மீது சங்கரர் பாடிய பாடல்...

கணேச பஞ்சரத்னம்


7.  வள்ளலாருக்கு அண்ணியாக வந்து சோறிட்ட அம்மன்...

திருவொற்றியூர் அம்மன்


8. சூரியனின் அம்சமாக குந்திக்கு பிறந்த பிள்ளை...

கர்ணன்


9. குடத்தில் இருந்து பிறந்ததால் அகத்தியரை ...என்பர்

கும்பமுனிவர்(கும்பம் என்றால் குடம்)


10. பாற்கடலைக் கடைந்த மலையைத் தாங்க விஷ்ணு எடுத்த அவதாரம்...

கூர்மாவதாரம் (ஆமையாகி மலையைத் தாங்கினார்)


1. ஆதிசேது என்று அழைக்கப்படும் தலம்...

வேதாரண்யம்


2. கோயில் மாநகரம் என்று போற்றப்படும் தலங்கள்...

மதுரை, காஞ்சிபுரம்


3. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்...

சிதம்பரம்


4. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்...

காசி


5. பூலோக வைகுண்டம் என்று பெயர் கொண்ட தலம்...

ஸ்ரீரங்கம்


6. சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்...

திருவண்ணாமலை


7. திருவேரகம் எனப்படும் முருகனின் திருத்தலம்...

சுவாமி மலை


8. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்...

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்


9. பூலோகத்தில் காண முடியாத திவ்யதேசங்கள்....

திருப்பாற்கடல், வைகுண்டம்


10. "ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் மக்களுக்கு உபதேசித்த தலம்...

திருக்கோஷ்டியூர்


1. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்...

மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)


2.கோயில்களில் ஆண்டுதோறும் நடக்கும் உற்சவம்.... 

பிரம்மோற்ஸவம்


3. கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறைநடத்த வேண்டும்?

12 ஆண்டுகள்


4. ஆதிசங்கரரின் தாயார் பெயர்...

ஆர்யாம்பாள்


5. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்...

சின்முத்திரை 


6. கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்...

சுந்தரர்


7. தேய்பிறையில் வரும் சதுர்த்தியை எப்படி குறிப்பிடுவர்?

சங்கடஹர சதுர்த்தி


8.தட்சிணாயண புண்ணிய காலத்தில் வரும் முதல் மாதம்...

ஆடி


9. திருநாவுக்கரசருக்கு பெற்றோர் இட்ட பெயர்....

மருள்நீக்கியார்


10. பன்னிருதிருமுறைகளில் முருகன் மீது பாடப்பட்ட பாடல்...

நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை


1. காளிதாசருக்கு அருள்புரிந்த காளி எங்கு வீற்றிருக்கிறாள்?

உஜ்ஜயினி


2. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்...

ஸ்ரீசைலம்(ஆந்திரா)


3. சிம்மவாகினியாக வந்து மகாலட்சுமி கோலாசுரனை அழித்த தலம்....

மகாராஷ்டிரா கோலாப்பூர் 


4. தசரா பண்டிகை அரசு விழாவாக நடைபெறும் திருத்தலம்....

மைசூரு சாமுண்டீஸ்வரி கோயில்


5. ராமகிருஷ்ணருக்கு அருள் செய்த காளி எங்கு கோயில் கொண்டிருக்கிறாள்? 

கோல்கட்டா தட்சிணேஸ்வரம் 


6. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்...

ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்



7.அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட யோகபீடத்தில் அருளும் அம்மன்...

குற்றாலாம் குழல்வாய்  மொழியம்மை


8. சரஸ்வதிதேவி மற்றும் பிரம்மதேவருக்கு கோயில் இருக்கும் தலம்...

புஷ்கரம்(சக்திபீடங்களில் இத்தலம் காயத்ரிபீடமாகும்) 


9. தர்மசம்வர்த்தினி என்னும் திருநாமம் கொண்டு அறம் வளர்க்கும் அம்பிகை தலம்...

திருவையாறு


10. மகராஷ்டிராவில் தைரியத்தை அருளும் அம்பிகையாக விளங்குபவள்....

பவானி (வீரசிவாஜியின் இஷ்ட தெய்வம்)  


(1) வயலூரிலுள்ள சுவாமி மற்றும்  அம்பாளின் பெயர்...

ஆதிநாதர், ஆதிநாயகி அம்மன்.


(2) வள்ளி அவதரித்த தலம்?

வள்ளிமலை (வேலூர் மாவட்டம்)


(3) மயில்வாகன முருகப்பெருமானை இப்படி அழைப்பர்...

ஸ்ரீசிகி வாஹனர். 


(4) ஆங்கில வருடப்பிறப்பு அன்று படிப்பூஜை நடக்கும் அறுபடைத்தலம்...

திருத்தணி


(5) தமிழ் ஆண்டுகள் அறுபதும் படிகளாக அமைந்த தலம்....

சுவாமிமலை


(6) சூரசம்ஹாரத்திற்கு வெற்றிப் பரிசாக இந்திரன் முருகனுக்கு அளித்த பரிசு.......

தன் மகள் தெய்வானை


(7) மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் முருகன் வீற்றிருக்கும் மலை....

பத்துமலை


(8) திருச்செந்தூரின் புராணப்பெயர்.....

திரிபுவனமாதவி சதுர்வேதிமங்கலம்


(9) குமரகுருபரர் முருகனை எவ்வாறு அழைக்கிறார்....

சைவக்கொழுந்து, சிவக்கொழுந்தீஸ்வரர்.


(10) பழநியில் முருகப்பெருமானை  எப்படி அழைப்பர்...

தண்டாயுதபாணி



(1) ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை...

பந்தளராஜா ராஜசேகரன்


(2) மாலை அணிவித்த ஆண்களை ஐயப்பன் என்பர், பெண்களை..........என்போம்

மாளிகைப்புறம்


(3) சபரிமலையில் ஐயப்பன் வீற்றிருக்கும் ஆசனம்...

பத்மாசனம்


(4) பதினெட்டாம் படி எதனால் அமைக்கப்பட்டுள்ளது....

கிருஷ்ண சிலை என்னும் ஒருவகை மரத்தால். அதன் மேல் பஞ்சலோகத் தகடு வேயப்பட்டுள்ளது.


(5) எருமைத்தலை அரக்கி மகிஷியை மணிகண்டன் கொன்ற இடம்...

எருமேலி


(6) ஐயப்பன் மாலையில் எத்தனை துளசிமணிகள் இருக்கலாம்... 

54 அல்லது 108


(7) சபரிமலை செல்வோர் அணிய  வேண்டிய ஆடையின் நிறம்...

நீலம் அல்லது கருப்பு


(8) சபரிமலை சன்னிதானம் தவிர 

வேறு எங்கிருந்தெல்லாம் மகரஜோதியை தரிசிக்கலாம்....

அப்பாச்சி மேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு


(9)கன்னி மூல கணபதி கோயில் அமைந்த இடம்....

பம்பைக் கரை


(10) "சபரிமலை' என்ற பெயரிலுள்ள  "சபரி' என்பது யார்...

ராமபக்தையான ஒரு மூதாட்டியின் பெயர், ராமனுக்கு காய்ந்த இலந்தைப் பழத்தை

பக்தியுடன் கொடுத்தவர்.


1. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்....

திருவண்ணாமலை


2. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த  ஆழ்வார்....

திருமங்கையாழ்வார்


3. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்....

பரணிதீபம் (அணையா தீபம்)


4. அருணாசலம் என்பதன் பொருள்...

அருணம்+ அசலம்- சிவந்த மலை


5. ஆறாதாரங்களில் திருவண்ணாமலை... 

ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்


6. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்...

பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்


7. ""கார்த்திகை அகல்தீபம்'' என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு... 

1997, டிசம்பர் 12


8. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்...

திருவண்ணாமலை (கிளி கோபுரம்)


9. கார்த்திகை நட்சத்திரம் ....தெய்வங்களுக்கு உரியது

சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்


10 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்.....

24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)  


1. நாரதரின் கையிலிருக்கும் வாத்தியம்...

மகதி யாழ்


2. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்....

அனுமன்


3. ராமானுஜர் அவதரித்த திருத்தலம்..

ஸ்ரீபெரும்புதூர்


4. கந்தபுராணத்தை வடமொழியில் எப்படி குறிப்பிடுவர்?

ஸ்காந்தம்


5. தன் பெருவயிற்றில் உலகத்தை அடக்கியிருப்பவர்?

விநாயகர்


6. அகிலாண்டநாயகியின் அருள்பெற்ற தமிழ்ப்புலவர்..

கவிகாளமேகப்புலவர்


7. தேவாரத்தில் முருகனை "செட்டியப்பன்' என்று சொன்னவர்...

சுந்தரமூர்த்தி சுவாமிகள்


8. நான்கு திவ்யதேசங்கள் ஒரு சேர அமைந்த கோயில்...



காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில்


9. பாலமுருகன் வீற்றிருக்கும் மயிலின் பெயர்....

இந்திரமயில் 


10. நரசிம்மர் அவதரித்த தூண் எத்தலத்தில் உள்ளது?

அகோபிலம்(ஆந்திரமாநிலம்)- உக்கிர ஸ்தம்பம்



(1) தர்ம சாஸ்தா அவதாரம் எடுத்த இடம்.....

"அம்பலமேடு' அல்லது "பொன்னம்பல மேடு


(2) ஐயப்பனின் நான்கு படை வீடுகள்......

குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில், மாம்பழத்துறை


(3) மகரஜோதி தரிசனம் கிடைக்கும் நாள்......

தை மாதம் (மகரம்) முதல் தேதி மகர சங்கராந்தி மாலை 6.30 மணி


(4) பம்பை ஆற்றங்கரையில் காணப்படும் அடிச்சுவடு பெயர்......

ஸ்ரீராமர் பாதம்.


(5) கேரளத்தில் கன்னிசாமி பூஜையை எப்படி அழைக்கின் றனர்....



"வெள்ளம் குடி' அல்லது படுக்கை 

(6) மாலை போட்ட சிறுவனை எவ்வாறு அழைக்க வேண்டும்....

மணிகண்டன்


(7) ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்க வேண்டிய நாட்கள்......

41 நாட்கள்


(8) மஞ்சமாதா கோயிலிலுள்ள இதர தெய்வங்கள்.....

நாகராஜா, நவக்கிரகங்கள்


(9) ஐயப்ப சுவாமியின் நண்பர்.....

வாபர்


10) ஐயப்ப பக்தர்களின் தாரக மந்திரம்......

 "சுவாமியே சரணம் ஐயப்பா' 


1. பதினெட்டுப்படி ஏறும் ஒவ்வொருவரும்... கட்டுவது அவசியம்

இருமுடி


2. ஐயப்பனுக்கு மிகவும் விருப்பமான அபிஷேகம்....

நெய்


3. ஐயப்பனைத் தாலாட்டித் தூங்க வைக்கும் பாடல்....

ஹரிவராசனம்


4. எந்த ஆண்டில் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கும்வழக்கம் உருவானது...

1950ல் மேல்சாந்தி ஈஸ்வரன் நம்பூதிரி இந்த முறையை உருவாக்கினார்.


5. ஐயப்பனின் வரலாறு எப்புராணத்தில்இடம் பெற்றுள்ளது?

பூதநாத புராணம்


6. மணிகண்டன் புலிப்பால் பெறச் செல்லும்போது யாரை வதம் செய்தார்...

மகிஷி


7. தர்மத்தை நிலைநாட்டிய அவதாரம் என்பதைக் குறிக்கும் ஐயப்பநாமம்...

தர்ம சாஸ்தா


8. ஐயப்பனுக்கு உதவியாக இருந்தவர்களில்குறிப்பிடத்தக்கவர்....

வாபர்


9. ஐயப்பன் மீது அன்பு கொண்ட மகிஷி ..... அம்மனாக மாறினாள்

மாளிகைப்புறத்தம்மன்


10. சாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம் என்று எந்நிகழ்ச்சியில் கோஷமிடுவர்?

பேட்டை துள்ளல் 



1. ஹரிஹர சுதன் என்பதன் பொருள்....

சிவ, விஷ்ணுவின் மகன்


2. ஐயப்பனை.... கிரக தோஷ பரிகாரமாக வழிபடுவர்.

சனிகிரகம்


3. திருவிதாங்கூர் ராஜா, ஐயப்பனுக்கு வழங்கிய தங்கி அங்கியின் எடை...

450 பவுன்


4.தர்மசாஸ்தாவுடன் போரிட்ட அரக்கி....

மகிஷி


5. ஐயப்பனின் ஜென்ம நட்சத்திரம்....

(பங்குனி) உத்திரம்


6. எருமேலியில் பக்தர்கள் வண்ணம் பூசியபடி ஆடுவது...

பேட்டை துள்ளல்


7. பேட்டை துள்ளலில் சொல்லும் சரணகோஷம்.....

சாமி திந்தக்கதோம்! ஐயப்ப திந்தக்கதோம்!


8. ஐயப்பனின் அன்புக்காக காத்திருக்கும் அம்மன்...

மாளிகைபுறத்தம்மன்


9. ஐயப்பனுக்கு விருப்பமான பிரசாதம்....

அரவணை என்னும் கட்டிப்பாயாசம்


10. சபரிமலையில் இரவு பூஜையின் போது பாடப்படும் பாடல்....

ஹரிவராஸனம். 




1. கண்ணன் இன்றும்  மன்னனாக ஆட்சி செய்யும் திருத்தலம்...

துவாரகை


2. விநாயகப்பெருமானுக்குரிய கணேச பஞ்சரத்னத்தைப் பாடியவர்...

ஆதிசங்கரர்


3. பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமான் மீது பாடிய கவசநூல்...

சண்முகக் கவசம்


4. "நமசிவாய' என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது? 

திருவாசகம்


5.தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?




அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்) 


6. யாதுமாகி நின்றாய் காளி என்று உமையவளைப் போற்றிய புலவர்...

பாரதியார்


7. வெற்றியைத் தரும்முருகப்பெருமானுக்குரிய தமிழ் மந்திரம்....

வேலு(ம்) மயிலும்


8. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்....

அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)


9. "கடை விரித்தேன் கொள்வார் இல்லை' என்று வருந்திப் பாடிய அருளாளர்....

வள்ளலார்


10. ராமபிரானுக்காகப் போர் புரியக் கிளம்பிய ஆழ்வார்...

குலசேகராழ்வார் 



1. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?

108


2. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்...

காரைக்காலம்மையார்


3."மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று நடராஜரிடம் வேண்டியவர்......

அப்பர்(திருநாவுக்கரசர்)


4. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்..

ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)

முயலகன்


5. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்....

குற்றாலம்


6. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்...

சங்கார  தாண்டவம்


7. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?

வெள்ளியம்பலம்(மதுரை)


8. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்...

பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)


9. நடராஜருக்குரிய விரத நாட்கள்....

திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்


10. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்.... 

களி.  


1. சூரியவழிபாட்டால் உண்டாகும் நற்பலன்....

ஆரோக்கியம்


2. ராசி மண்டலத்தில் சூரியனுக்குரிய ராசி...

சிம்மம்


3. சூரியவழிபாட்டுக்குரிய மூன்று நட்சத்திரங்கள்....

கார்த்திகை, உத்திரம், உத்திராடம்


4. சூரியனை முழுமுதல் கடவுளாக வழிபடும் மதத்தை.... என்று அழைத்தனர்.

சவுரம்


5. சூரியபகவானுக்குரிய நவரத்தினம்....

மாணிக்கம்


6. வேதமந்திரங்களில் சூரியன் .....மந்திரத்திற்கு உரியவராவார்

காயத்ரி


7. சூரியனும் குருவும் சம்பந்தப்பட்டால் ஒருவருக்கு ....உண்டாகும்

பக்தியோகம்(அ) ஆன்மிக யோகம்


8. சூரியதேவனை....... நாயகன் என்கிறது ஜோதிட சாஸ்திரம்

நவக்கிரகநாயகன்


9. சூரியனின் வடதிசைப்பயணமான உத்ராயணத்திற்குரிய காலம்...

தை முதல் ஆனி வரை


10. எருக்குஇலை வைத்து நீராடி சூரியனை வழிபடும் நாள்...

ரதசப்தமி(தை சப்தமி) 


1. நாரதரால் மகரிஷியாக மாறிய வால்மீகியின் இயற்பெயர்.

ரத்னாகரர்


2. சரஸ்வதி அந்தாதியைப் பாடிய புலவர்....

கம்பர்


3. அயோத்தி என்பதன் பொருள்...

யுத்தமில்லாத இடம்


4. தசரதருக்காக புத்திரகாமேஷ்டியாகம் செய்த ரிஷி...

ரிஷ்யசிருங்கர்


5. ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் ராமனின் தம்பி...

லட்சுமணர்


6. விஸ்வாமித்திரருக்கு ராஜரிஷி பட்டம் வழங்கியவர்...

பிரம்மா


7. பிரகலாதன் என்பதன் பொருள்....

எல்லோராலும் நேசிக்கப்படுபவன்


8. விதேகநாட்டில் பிறந்ததால் சீதைக்கு .... என்று பெயர்.

வைதேகி


9. இந்திரனுக்கு உடம்பெங்கும் கண்ணாகும்படி சபித்த முனிவர்...

கவுதமர்


10. தசரதரின் அவையின் தலைமைப்புரோகிதர்...

சதானந்தர் 


1. திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்...

தாயுமானசுவாமி


2. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்....

காளஹஸ்தி


3. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்...

பிருங்கி


4. திருமூலர் எழுதிய திருமந்திரம் ....திருமுறையாகும்

பத்தாம் திருமுறை


5. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்...

திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது.


6. மகாவிஷ்ணுவின் வில்லான சாரங்கத்தின் அம்சமாகப் பிறந்தவர்...

திருமங்கையாழ்வார்


7. கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய புராணம்....

கந்தபுராணம்


8. தமிழ்வியாசர் என்று அழைக்கப்படுபவர்....

நாதமுனிகள்(நாலாயிர திவ்யபிரபந்தத்தைத் தொகுத்தவர்)


9. ஆண்டாளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட திருப்பாவை ஜீயர்...

ராமானுஜர்


10. விப்ரநாராயணர் என்பது யாருடைய இயற்பெயர்...

தொண்டரடிப்பொடியாழ்வார் 




1. முருகன் தலங்களில் மலையில்லாத மலைக்கோயில்...

சுவாமிமலை(மலை அமைப்பில் கட்டப்பட்டகோயில்)


2. விபூதி என்பதன் நேரடியான பொருள்...

மேலான செல்வம்


3. சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்...

கஞ்சனூர் 


4. ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை?

12


5. மதுரையில் உள்ள சித்தரின் பெயர்....

சுந்தரானந்தர்


6. ராமநாமத்தை கருடபுராணம் எப்படி குறிப்பிடுகிறது?





அமுதம்

7. திருவாய்மொழியைப் பாடிய ஆழ்வார்.....

நம்மாழ்வார்


8. சர்க்கரைப் பந்தலில் தேன்மழை எனப்படும் பாகவதப் பகுதி....

பத்தாம்பகுதியான கிருஷ்ணரின் வரலாறு


9. இறைவனும் இறைநாமமும் ஒன்றே என்று கூறியவர்....

ராமகிருஷ்ண பரமஹம்சர்


10. கர்நாடகத்தில் உள்ள ஒரே பாடல் பெற்ற சிவத்தலம்...

திருக்கோகர்ணம் 



1.பிரளயவெள்ளத்தில் அமிர்த கும்பத்தைவீழ்த்தியவர்....

கிராதமூர்த்தி(வேடுவராக வந்த சிவன்)


2.கும்பகோணத்தில் அருளும் மங்களாம் பிகை.... பீடம்

மந்திரபீடேஸ்வரி பீடம்


3. கும்பேசர் குறவஞ்சி எழுதிய புலவர்....

கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்


4. கும்பகோணம் தலத்தின் விசேஷமான தீர்த்தங்கள்....

காவிரியாறு, மகாமகக்குளம்


5.கும்பகோணத்தைத் தமிழில்...என்று அழைப்பர்

குடமூக்கு, குடந்தை


6. ஆழ்வார் என்று அழைக்கப்படும் பெருமாள்...

கும்பகோணம் ஆராவமு தாழ்வார்- சாரங்கபாணிப்பெருமாள்


7. சாரங்கபாணி கோயிலில் உள்ள இருவாசல்கள்...

உத்ராயண, தட்சிணாயன வாசல்கள்


8. மாசிமகத்தன்று 

சூரியன்....ராசியிலிருந்து.... ராசியைப் பார்க்கிறார். கும்பத்திலிருந்து சிம்மத்தை


9."நடந்தகால் நொந்ததோ' என்று குடந்தை சாரங்கபாணியிடம் உருகியவர்....

திருமழிசையாழ்வார்


10. மூலவரும் உற்சவரும் சமம் என்பதால் சாரங்கபாணிகோயிலுக்கு .... என்று பெயர்

உபயபிரதான திவ்யதேசம் 


1. திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்...

ஆச்சாள்புரம்(திருப்பெருமணநல்லூர்) 


2. நாவுக்கரசரின்உடன்பிறந்த சகோதரி....

திலகவதி


3. சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார்...

சேரமான் பெருமாள் நாயனார்


4. "அப்பா! நான்வேண்டுவன கேட்டருள்புரியவேண்டும்' என்ற அருளாளர்...

வள்ளலார்


5. மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை......

மங்கையர்க்கரசியார்


6. மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்?

அரிமர்த்தனபாண்டியன்


7. திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவமன்னன்...

மகேந்திரபல்லவன் 


8. நடுக்கம் தீர்த்தவிநாயகர் அருள்பாலிக்கும் சிவத்தலம்...

வேதாரண்யம்


9. ஆண்டாள் பாடிய ""வாரணமாயிரம்'' என்பதன் பொருள்...

ஆயிரம் யானை


10. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடலை பெரியாழ்வார் எத்தலத்தில் பாடினார்?

மதுரை கூடலழகர் கோயில் 


1. சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் ...

தத்புருஷ முகம்(கிழக்கு நோக்கிய முகம்) 


2. சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை?

எட்டு


3. மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது?

மாசி தேய்பிறை சதுர்த்தசி 


4. மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்?

4 கால அபிஷேகம்


5. வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும்விதம்.....

நமசிவாய


6. முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்?

சிவாயநம


7. சிவசின்னங்களாக போற்றப்படுபவை...

திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம)


8. சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை?

அருவுருவம்


9. பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம்....

ராமேஸ்வரம்


10. சிவவடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம்...

தட்சிணாமூர்த்தி 



1. அத்திரி முனிவரின் மனைவி....

அனுசூயா


2. ராவணன் யாருடைய தம்பி ....

கரன்


3. அழகியாக மாறிய சூர்ப்பனகையின் பெயர்....

காமவல்லி


4. சூரியனின் அம்சமாகப் பிறந்தகுரங்கு மன்னன்....

சுக்ரீவன்


5. அனுமனுக்கு சிரஞ்சீவி பட்டம் அளித்தவள்....

சீதாதேவி 


6. தேவலோகத்தில் பணிசெய்யும் தலைமைத் தச்சர்....

மயன்


7. பிரம்மாவின் அம்சமான கரடி இனத்தலைவர்...

ஜாம்பவான்


8. ஆதிகவி என்று சிறப்பிக்கப்படும் வேடன்...

வால்மீகி


9. தசரதருக்கு அந்திமக்கிரியை செய்த பிள்ளை...

சத்ருக்கனன்


10. வினதைக்குப் பிள்ளையாக அவதரித்த பறவை....

கருடன் 


1. கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்?

12


2. குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில்...

குற்றாலம் குற்றாலநாதர் கோயில்


3. ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம்...

வில்வமரம்


4. ஆயுள் அதிகரிக்க எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும்?

கிழக்கு


5. நவக்கிரகங்கள் ஒன்பது பேரும் நேர்வரிசையில் அருளும் கோயில்...

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில்


6. அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரி...

மானசரோவர்


7. திருப்பள்ளி எழுச்சியின் போது கோயிலில் பாடும் ராகம்....

பூபாளம்


8. தேங்காய் உடைப்பதற்கு பதிலாக துருவி நிவேதிக்கப்படும் கோயில் எது?

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் (தேங்காய் உடைத்தால், சுவாமியின் யோகநித்திரை கலைந்து

விடும் என்பதால்)


9. தேவலோக மரமான கற்பகமரத்தில் வீற்றிருக்கும் தெய்வம்....

ஸ்வர்ண வர்ஷினி


10. வீணை இசையை விட இனிய மொழி பேசும் அம்பிகை எங்கு அருள்கிறாள்?

வேதாரண்யம் (யாழைப் பழித்த மொழியாள்) 



1. ஐயப்பன் அவதரித்த நட்சத்திரம்....

உத்திரம்


2. ஐயப்பனால் வதம் செய்யப்பட்ட மகிஷியின் முற்பிறவி பெயர்....

லீலாதேவி


3. சபரிமலைக்குச் செல்லும் காட்டுவழியில் உள்ள கோட்டைகள்....

ஏழு


4. பழநிமலையில் புனிததீர்த்தமாகக் கருதப்படும் நதி...

சண்முகநதி


5. பங்குனியில் திருக்கல்யாணம் நடைபெறும் படைவீடு...

திருப்பரங்குன்றம்


6. வள்ளி,தெய்வானை முற்பிறவியில் யாருடைய மகள்கள்?

திருமால்


7. வள்ளி, தெய்வானையின் முற்பிறவி பெயர் என்ன?

அமுதவல்லி, சுந்தரவல்லி 


8. பங்குனி சுவாதிநாளில் அவதரித்த சிவனடியார்....

புனிதவதியார்(காரைக்காலம்மையார்)


9. ஆளுடைய பிள்ளையார் என்று போற்றப்படும் நாயன்மார்....

திருஞானசம்பந்தர்


10. குழந்தை முருகன் பவனி வந்த மயில்...

இந்திரமயில் 


1. திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?

81 


2. பதிகம் என்பதன் பொருள்...

பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு


3. சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல்...

சிவஞானபோதம்


4. உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை....

டமருகம் அல்லது துடி


5. விநாயகரின் பெயரான "சுமுகன்' என்பதன் பொருள்....

நல்ல முகத்தை உடையவர்


6. வாய்மையே வெல்லும்(சத்யமேவ ஜெயதே) என்பது இடம்பெற்றுள்ள உபநிஷதம்...

முண்டக உபநிஷதம்


7. ஆதித்ய ஹ்ருதயத்தை எப்போது பாராயணம் செய்ய வேண்டும்?

சூரியோதய வேளையில்


8. அனுபூதி என்பதன் பொருள்....

இறைவனுடன் இரண்டறக் கலத்தல்


9. தாயாரின் மூலமே பெருமாளை அடைய முடியும்என்பதை எப்படி குறிப்பிடுவர்?

புருஷாகாரம்(பரமாத்வோடு சேர்ப்பவள்)


10. உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பிகை.....

மதுரை மீனாட்சி 


1. மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர்.....

மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை


2. மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர்....

தடாதகைப் பிராட்டி


3. பழங்காலத்தில் மதுரை ..... என்று அழைக்கப்பட்டது.

நான்மாடக்கூடல், ஆலவாய்


4. மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம்...

கடம்ப மரம்


5. மீனாட்சி.... ஆக இருப்பதாக ஐதீகம்.

கடம்பவனக் குயில்


6. மீனாட்சி கல்யாணத்தை நடத்திவைக்கும் பெருமாள்....

திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள்


7. மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்...

குமரகுருபரர்


8.மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர்....

மகாகவி காளிதாசர்


9. சொக்கநாதரை தேவேந்திரன் வழிபடும் நாள்...

சித்ராபவுர்ணமி


10. மீனாட்சியம்மனுக்கு தங்க ஷூ காணிக்கை கொடுத்த ஆங்கிலேய கலெக்டர்...

ரோஸ் பீட்டர் 



1. கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்ட காலம் எது?

சாலிவாகன சகாப்தம் 807 பங்குனி உத்திர நட்சத்திரம்(தற்போது சாலிவாகன (தெலுங்கு) ஆண்டு 1933) . அதாவது, 1126 ஆண்டுகளுக்கு முன் அரங்கேற்றப்பட்டது.


2. கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்ட ஊர்

ஸ்ரீரங்கம்


3. ராமனின் பெற்றோர் தசரதர்-கோசலை. தசதரதரின் பெற்றோர் யார்?

அஜன்- இந்துமதி


4. கைகேயின் நாடு, ஊர் எது?

கேகய தேசம், ராஜக்கிரகம்


5. அயோத்தி நகரம் யாரால் உருவாக்கப்பட்டது?

சூரிய குல அரசன் மனு


6. ராஜாஜி எழுதிய ராமாயணத்தின் பெயர்...

சக்கரவர்த்தி திருமகன்


7. தசரதரின் மந்திரி சுமந்திரருக்கு தரப்பட்டிருந்த பெருமை என்ன?

அந்தரங்க அமாத்தியாயன் என்ற பதவி...அரசரின் அந்தப்புரத்திற்குள்ளும் நுழையும் உரிமை பெற்றவர்.


8. ராம சகோதரர்கள் பிறந்த நட்சத்திரம்...

ராமன்- புனர்பூசம், பரதன்- பூசம், லட்சுமணன்- ஆயில்யம், சத்ருக்கனன்- மகம்


9. கோசலநாடு என்ற சொல்லின் பொருள்

மயில்கள் நிறைந்த நாடு


10. ஜனகர் என்ற சொல்லுக்கு பொருள் என்ன?

தந்தை 


1. புலவர் இளம்பெருவழுதி அழகர்மலையைப் பரிபாடலில்... என்று குறிப்பிடுகிறார்.

மாலிருங்குன்றம்


2. முதல் ஆழ்வார்கள் மூவரில் கள்ளழகரைப் பாடியவர்கள்....

பூதத்தாழ்வார், பேயாழ்வார்


3. அழகர்கோவில் கள்ளழகர் யாருக்காக வைகையாற்றில் எழுந்தருள்கிறார்?

மண்டூக மகரிஷி


4. பழங்காலத்தில் அழகர்கோவில் எவ்வாறு அழைக்கப்பட்டது?

திருமாலிருஞ்சோலை


5. அழகர்கோவிலில் புனித தீர்த்தமாக விளங்கும் சுனை....

நூபுர கங்கை


6. நூபுரகங்கை என்பதன் பொருள்....

சிலம்பாறு


7. கள்ளழகரை காணும் பக்தர்கள் எழுப்பும் சரண கோஷம்....

கோவிந்தா கோவிந்தா


8. அழகரை வைகையாற்றில் வரவேற்கும் பெருமாள்....

மதுரை வண்டியூர் வீரராகவப்பெருமாள்


9. வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் சப்பரம்.....

ஆயிரம் பொன் சப்பரம்


10. கள்ளர் கோலத்தில் அழகர் அழகர் உடுத்தியிருக்கும் ஆடை...

கண்டாங்கி.



1. ராமனுக்குரிய ஜென்ம நட்சத்திரம்...

புனர்பூசம்


2. "திரு' என்ற அடையோடு கூடிய இரு நட்சத்திரங்கள்...

திருவாதிரை, திருவோணம்


3. ரோகிணி நாளில் மகாவிஷ்ணு எடுத்த அவதாரம்...

கிருஷ்ணர்


4. ஒவ்வொரு ராசியிலும் இடம்பெறும் நட்சத்திரம் எத்தனை?

இரண்டேகால்


5. சரஸ்வதிக்கும், அனுமனுக்கும் உரிய நட்சத்திரம்....

மூலம்


6. ஆண்டாள் பூவுலகில் அவதரித்த நன்னாள்...

ஆடிப்பூரம்


7. நரசிம்மர் தூணைப் பிளந்து கொண்டு வந்த நாள்...

சதுர்த்தசி திதி, சுவாதி நட்சத்திரம்


8. முருகப்பெருமானுக்கு உகந்த இரு நட்சத்திரங்கள்....

கார்த்திகை, விசாகம்


9. சுபநிகழ்ச்சிகளை செய்ய ..... நட்சத்திரத்தன்று நாள் நட்சத்திரம் பார்க்கத் தேவையில்லை என்பர்.

ரோகிணி


10. நட்சத்திரமண்டலத்தில் முதல் நட்சத்திரமாகத் திகழ்வது...

அசுபதி 



1) ராமனின் மனைவி சீதை, மற்ற சகோதரர்களின் மனைவியர் யார்?

லட்சுமணன்- ஊர்மிளா, பரதன்- மாண்டவி, சத்ருக்கனன்- சுருதகீர்த்தி


2) சூரியனின் நட்பு கிரகங்கள் எவை?

செவ்வாய், குரு, சந்திரன்


3) குற்றாலநாதரின் அம்பாள் பெயர்...

குழல்வாய்மொழி நாயகி


4) நவக்கிரகங்களில் சந்திரனுக்குரிய தலம் எது?

திங்களூர் (தஞ்சாவூர் மாவட்டம்)


5) காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்?

ஜுரகேஸ்வரர்


6) தன்வந்திரியின் கையில் இருக்கும் பூச்சி

அட்டை


7) "பக்தவத்சலன்' என்று அழைப்பது யாரை?

நரசிம்மர்.


8) "பக்தவத்சலன்' என்பதன் பொருள் என்ன? பக்தர்களிடம் கருணை உள்ளவன் 

(வத்சலம்- கருணை)


9) இறைவன் நமது உள்ளத்தில் கட்டை விரலளவு உள்ளான் என்று கூறும் நூல் எது?

ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யம்


10) "நாயேன்' என்று நாய்க்கு தன்னை சமமாக தன்னைக் கருதி பாடிய சிவபக்தர் யார்?

மாணிக்கவாசகர் 



1. இலங்கை மீது படையெடுக்க ராமன் குறித்த நட்சத்திரம்...

உத்திரம்


2. ராவணனின்மனைவி மண்டோதரியின் தந்தை..

மயன்


3. மாரீசன் ராமனை எப்படி அழைத்தான்?

நரசிம்மா...!


4. வானரங்களுக்கு அழகு எது என்று ராவணன் கூறினான்?

வால்


5. விபீஷணனின் மனைவி பெயர்...

சரமை


6. தேவர்கள் உத்தரவுபடி அனுமனை சோதித்த அரக்கி...

நாகங்களின் தாய் சுரசை


7. ராமபாணத்தால் துளைக்கப்பட்ட மரம்..

ஆச்சா மரம்


8. கடலில் பாலம் (சேதுபந்தனம்) அமைத்தவன் யார்?

நளன்


9. சேதுபந்தனம் என்பதன் பொருள்...

சேது- பாலம், பந்தனம்- கட்டுதல்


10.சேதுபந்தனம் அமைக்க எத்தனை நாள் ஆனது?

மூன்று 



1. திருச்செந்தூரின் புராதனப் பெயர்....

திருச்சீரலைவாய்


2. தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர்...

இறையனார்(சிவபெருமானே புலவராக வந்தார்)


3. திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம்....

சூலைநோய்(வயிற்றுவலி)


4. சூரபத்மனின் தங்கையான ஆட்டுமுகப்பெண்...

அஜமுகி


5. அம்பிகைக்கு உரிய விரதம்....

சுக்கிரவார விரதம்(வெள்ளிக்கிழமை)


6. பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம்....

தோணியப்பர்(சீர்காழி)


7. நோய் நீங்க அம்மனுக்கு செய்யும் வழிபாடு

மாவிளக்கு


8. இடும்பன் காவடியில் இருக்கும் இருமலைகள்.....

சிவகிரி, சக்திகிரி


9. மீனாட்சியின் தமிழ்ப் பெயர்...

கயல்விழியாள்(மீன் போன்ற கண்களைக் கொண்டவள்)


10. முருகப்பெருமான் சாந்தமே வடிவாக அருள்புரியும் தலம்....

திருத்தணி 



1. "தாசமார்க்கம்' என்னும் அடிமைவழியில் சிவனை அடைந்தவர்...

திருநாவுக்கரசர்


2. "தம்பிரான் தோழர்' என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர்......

சுந்தரர்


3. பஞ்சாமிர்த வண்ணம் பாடி முருகனை அபிஷேகித்தவர்...

பாம்பன் சுவாமிகள்


4. திருத்தணி முருகனை கண்ணாடியில் தரிசித்த அருளாளர்....

வள்ளலார்


5. "பயந்த தனிவழிக்குத் துணை முருகா' என்று வழிகாட்டியவர்.....

அருணகிரிநாதர்


6. ராமானுஜருக்கு எட்டெழுத்து மந்திரம் (ஓம் நமோ நாராயணாய) உபதேசித்தவர்...

திருக்கோஷ்டியூர் நம்பிகள்


7. திருமாலின் சாரங்க வில்லின் அம்சமாக அவதரித்தவர்.....

திருமங்கையாழ்வார்


8. திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி நாயன்மார்களைச் சிறப்பித்தவர்...

சேக்கிழார்


9. சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடி போற்றியவர்...

சேந்தனார்


10. ஐந்தாம் வேதமாகக் கருதப்படும் பாரதத்தைப் பாடியவர்...

வியாசர் 



1. வைகுண்ட வாசலில் காவல்பணிசெய்யும்இருவர்....

ஜெயன், விஜயன்


2. திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து வந்தவர் யார்?

கூன்பாண்டியனின் அமைச்சர் குலச்சிறையார்.


3. மகாவிஷ்ணு வராகமாக அவதாரமெடுத்து யாரை வதம் செய்தார்...

இரண்யாட்சன்


4.பிரகலாதனின்பெற்றோர்...

இரண்யகசிபு (இரண்யன்), கயாது


5. கும்பகர்ணன் பிரம்மாவிடம் .... வரம் பெறுவதற்காகத் தவம் செய்தான். 

நிர்தேவத்துவம் (தனக்கு ஈடான தெய்வம் வேறில்லை) 


6. ராமபட்டாபிஷேக செய்தியைச் சொன்ன கூனிக்கு கைகேயி கொடுத்த பரிசு...

முத்துமாலை


7. திருவாலங்காட்டில் காளியுடன் சிவன் ஆடிய நடனம்..

சண்ட தாண்டவம்


8. மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவாக காட்சி அளித்தது எந்த மரத்தடியில்...

குருந்த மரம்(ஆவுடையார்கோவில்)


9. அப்புத்தலம் (நீர் தலம்) என்று போற்றப்படும் சிவாலயம்...

திருவானைக்காவல்


10. தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் நால்வர்....

சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர் 


1. மதுரையை ஆண்ட கூன்பாண்டியனின் கூன் நிமிர்ந்த பின் ஏற்பட்ட பெயர்....

நின்றசீர் நெடுமாறன்


2. ஆதிசங்கரர் முக்தி பெற்ற திருத்தலம்...

முக்திநாத்(நேபாளம்)


3. "சரவணபவ' என்பதன் பொருள் ....

நாணல் காட்டில் பிறந்தவன்


4. வசிஷ்டமுனிவர் வளர்த்த பசு.....

நந்தினி


5. கவுசிகன் என்பது.... ரிஷியின் பெயர்

விஸ்வாமித்திரர்


6. அர்ஜூனனுக்கு வில்லினால் ஏற்பட்ட பெயர்...

காண்டீபன்


7. ராமனின் அம்பு .... வடிவத்தில் இருக்கும்

பிறை சந்திரன்


8. திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்...

ராமானுஜர்


9. ஆதிசேஷனின் அம்சமாகப் பிறந்த ராமனின் தம்பி....

லட்சுமணன்


10. "சிவசிவ என்றிட தீவினை மாளும்' என்று கூறியவர்...

திருமூலர் 


1. பிருத்வி(மண்) தலம் என்று சிறப்பிக்கப்படும் இரு சிவத்தலங்கள்....

காஞ்சிபுரம், திருவாரூர்


2. சிவாயநம என்பதை .... பஞ்சாட்சர மந்திரம் என்று கூறுவர்.

சூட்சும (நுட்பமான)பஞ்சாட்சரம். பஞ்சாட்சரம் என்றால் "ஐந்தெழுத்து மந்திரம்'.


3. மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்...

பூசலார் நாயனார்


4. அன்பின் சொரூபமாக அம்பிகை விளங்கும் தலம்....

திருவாடானை( அன்பாயியம்மை அல்லது சிநேகவல்லி)


5. அறுபத்துமூவர் விழாவிற்கு பெயர் பெற்ற சிவத்தலம்...

மயிலாப்பூர் கபாலீஸ்வரர்


6. கர்நாடகா திருநாராயணபுரத்தில் இருக்கும் ராமானுஜரை .... என்பர்.

தமர் உகந்த திருமேனி (தனக்குத் தானே வடித்த சிலை)


7. அகோபிலம் என்ற சொல்லின் பொருள்...

சிங்ககுகை(அகோ- சிங்கம், பிலம்- குகை)


8. திருப்பதி மலையில் நந்தவனம் வைத்து கைங்கர்யம் செய்தவர். .....

அனந்தாழ்வார்


9. வைகுண்டத்தில் பெருமாள் அருகில் இருக்கும் பேறு பெற்றவர்கள்....

நித்யசூரிகள்(முக்தி பெற்றவர்கள்)


10. பிருந்தா என்னும் சொல்லின் பொருள்....

துளசி. 



1. குரு தலமான ஆலங்குடியின் புராதனப் பெயர்...

திருஇரும்பூளை


2. உலக உயிர்களுக்கெல்லாம் குருவாக விளங்குபவர்.....

தட்சிணாமூர்த்தி(சிவபெருமான்)


3. ராசிசக்கரத்தில் பெயர்ச்சி பெறும் குரு யார்?

நவக்கிரக குருவான பிருகஸ்பதி 


4. குருவிற்குரிய நட்சத்திரம்...

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி 


5. ஜாதகத்தில் குருதிசை எத்தனை ஆண்டுகள் நடக்கும்?

16 ஆண்டுகள்


6. குரு பார்க்கும் பார்வை எத்தனை?

ஐந்தாம், ஏழாம், ஒன்பதாம் பார்வைகள்


7. மேஷ குருவின் பார்வை பெறும் ராசிகள்...

சிம்மம், துலாம், விருச்சிகம் 


8. குருவிற்கு உகந்த மலர்...

முல்லை


9. பிருகஸ்பதி என்பதன் பொருள்...

கல்வியில் சிறந்தவர்


10. குருவை வழிபடுவதால் ஏற்படும் பலன்...

செல்வவளம், திருமணயோகம், புத்திரப்பேறு, ஞானம். 


1. ராமனுக்காக படையெடுக்க முயன்ற ஆழ்வார்...

குலசேகராழ்வார்


2. சுக்கில பட்சம் என்று எதைக் குறிப்பிடுவர்?

வளர்பிறை


3. வெள்ளியம்பலம் என்று போற்றப்படும் சிவத்தலம்....

மதுரை


4. பிச்சைப் பெருமான் என்று குறிப்பிடப்படுபவர்...

பிட்சாடனர் (சிவனின் ஒரு வடிவம்)


5. கோயிலில் துர்க்கையம்மனை எத்திசை நோக்கி அமைப்பர்?

வடக்கு


6. சதுரகிரியில் மகாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர்....

அகத்தியர்


7. ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்....

தட்சிணாமூர்த்தி


8. தெய்வீக திசைகள் என்று கருதப்படுபவை....

வடகிழக்கு(ஈசானம்) தென்மேற்கு(கன்னிமூலை)


9.முருகப்பெருமானுக்கு முகங்கள் ஆறு... கண்கள் எத்தனை?

பதினெட்டு (முகத்துக்கு ஒரு நெற்றிக்கண்ணும் உண்டு என்பது ஐதீகம்)


10. சுக்ரீவன் என்பதன் பொருள்....

நல்ல கழுத்தைக் கொண்டவன். 


1. வேதம் தமிழ் செய்மாறன் என்றுபோற்றப்படுபவர்...

நம்மாழ்வார்


2. சமயக்குரவர் நால்வரில் திருவிளையாடலில் இடம்பெறும் இருவர்...

திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்


3. தஞ்சாவூரில் உள்ள மூலவர்

பிரகதீஸ்வரர் அல்லது பெருவுடையார்


4. அஷ்டாங்கவிமானத்தில் எத்தனை கருவறைகள் இருக்கும்?

மூன்று கருவறைகள்


5. கேசி என்ற அரக்கன் கண்ணனைக் கொல்ல எந்த உருவத்தில் வந்தான்?

குதிரை


6. அன்னதானம் செய்த மணிமேகலையுடன் ஒப்பிடப்படும் தெய்வம்....

அன்னபூரணி


7. விஷ்ணுவை அடைய பக்தி நெறியை விட எளிய சாதனமாக கருதப்படுவது....

பிரபத்தி நெறி (விஷ்ணுவை சரணடைதல்)


8. பெருமாள் கள்ளழகராக அருள்பாலிக்கும் தலங்கள்

அழகர்கோவில், ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம்) கள்ளபிரான் கோயில்


9. திருமாலின் ஆயுதங்களில் பெண்ணாக கருதப்படுவது....

கவுமோதகி என்னும் கதாயுதம்


10. மதுரையின் எல்லையை பாம்பு காட்டியதால் உண்டான பெயர்....

ஆலவாய். 



1. அக்னிப்பூ என்பது எந்தக் கடவுளைக் குறிக்கும்?

முருகப்பெருமான்


2. வாரணமாயிரம் என்பதன் பொருள்....

ஆயிரம் யானைகள்


3. "எம்பாவாய்' என முடியும் பாடல்கள் கொண்ட நூல்...

திருப்பாவை, திருவெம்பாவை


4. சிவபெருமான் மீது திருப்பல்லாண்டு பாடியவர்....

சேந்தனார்


5. மன்மதன் பவனிவரும் தேர்...

பூந்தென்றல்


6. "உள்ளத்துள்ளே ஒளிக்கும் ஒருவன்' என்று இறைவனைக் குறிப்பிடுபவர்...

திருமூலர்


7. காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு ஆலவட்டம்(விசிறி) வீசி சேவை செய்தவர்...

திருக்கச்சிநம்பிகள்


8. தமருகந்த திருமேனியாக (தனக்குத்தானே எழுப்பியது) ராமானுஜர் அருள்புரியும் தலம்....

மேல்கோட்டை(கர்நாடகா)


9. திருநாவுக்கரசரின் உடன் பிறந்த சகோதரி....

திலகவதியார்


10. கந்தரநுபூதி பாடிய முருகனைப் போற்றியவர்...

அருணகிரிநாதர் 


1. இறைவனிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய அடியவர்....

திருஞானசம்பந்தர்


2. "நாமார்க்கும் குடியல்லோம்' என்று கோபம் கொண்டு எழுந்தவர்...

திருநாவுக்கரசர்


3. "ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் ஈசன்' என்று பாடியவர்....

சுந்தரர்


4. "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்' என்று போற்றியவர்...

மாணிக்கவாசகர்


5. "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்று துதித்தவர்....

திருமூலர்


6. "உழைக்கும் பொழுதும் அன்னையே' என்று ஓடி வரும் அருளாளர்....

அபிராமி பட்டர்


7. "மாயனுக்காக கனா கண்டேன் தோழீ நான்' என்று கூறியவர்....

ஆண்டாள்


8. ஈன்ற தாய் மறுத்தாலும் அன்புக்காக ஏங்கும் குழந்தையாய் உருகியவர்...

குலசேகராழ்வார்


9. "வாடினேன் வாடி வருந்தினேன்' என்று பெருமாளிடம் வருத்தப்பட்டவர்...

திருமங்கையாழ்வார்


10. "நாரணன் அன்னை நரகம் புகாள்' என்று பாசுரம் பாடியவர்....

பெரியாழ்வார். 



1. திருவண்ணாமலையில் ஜீவசமாதியாகியுள்ள சித்தர்....

இடைக்காட்டுச்சித்தர்


2. கோயில் என்பதன் பொருள்....

கடவுளின் வீடு, அரண்மனை


3. நால்வர் என்று குறிக்கப்படும் அடியார்கள்....

சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்


4. சித்தாந்தத்தில் "சஞ்சிதம்' என்று எதைக் குறிப்பிடுவர்?

முன்வினைப்பாவம்


5. ஏழு கடல் மணலை விடவும் அதிக பிறவி எடுத்ததாகப் பாடியவர்...

அருணகிரிநாதர்


6. கோளறுபதிகம் யார் மீது பாடப்பட்ட நூல்?

சிவபெருமான்


7. சிவபெருமானுக்கு பிரியமான வேதம்...

சாமவேதம்


8. மகாவிஷ்ணுவின் மார்பில் உள்ள அடையாளம்....

ஸ்ரீவத்சம் 


9. கண்ணனைக் கொல்ல வந்த பேய் வடிவ அரக்கி....

பூதனை


10. "அயோநிஜர்' என்று குறிப்பிடப்படும் மூவர்....

பொய்கையாழ்வர், பூதத்தாழ்வார், பேயாழ்வார் 


1.சப்தமாதர்களில் திருமாலின் அம்சமாக விளங்குபவள்...

வைஷ்ணவி


2. சுவாமிமலையின் புராணப் பெயர்....

திருவேரகம்


3. "நமசிவாய' மந்திரத்தை இசைவடிவில் ஜெபித்தவர்...

ஆனாய நாயனார்


4. முருகன் வள்ளியை மணம் செய்த முறையை.... என்பர்

களவு மணம்


5. யாருக்காக சிவபெருமான் விறகு விற்ற லீலை நடத்தினார்?

பாணபத்திரர்


6. ஆழ்வார்களால் பாடப்பட்ட தலங்களை எப்படி குறிப்பிடுவர்?

மங்களாசாசனம் பெற்ற தலங்கள்


7.அப்பர் கயிலைக்காட்சி கண்டு அம்மையப்பரை பாடிய தலம்...

திருவையாறு


8. சிவபாதசேகரன் என்று சிறப்புப் பெயர் கொண்டவர்...

ராஜராஜசோழன்


9. "மறந்தும் புறம் தொழா மாந்தர்' (திருமாலைத் தவிர மற்றவர்களை வணங்காதவர்)என்னும் பாடல் அடி இடம்பெற்ற நூல்...

நான்முகன் திருவந்தாதி


10. நான்முகன் திருவந்தாதியைப் பாடியவர்...

திருமழிசையாழ்வார். 


1. கிருஷ்ணருக்குரிய துவாதச (12 எழுத்து) மந்திரம்.....

ஓம் நமோ பகவதே வாசுதேவாய (ஓம் என்பது ஒரே எழுத்து)


2. கிருஷ்ணர் உபதேசித்த கீதைக்குரிய கோயில் எங்குள்ளது?

குரு÷க்ஷத்திரம்


3. கிருஷ்ணர் நாரதருக்கு .... இசைக்க பாடம் நடத்தினார் தெரியுமா?

வீணை


4. கிருஷ்ணாவதாரமே மகாவிஷ்ணுவின் .... அவதாரம் என்று சிறப்பிப்பர்

முழுமையான(பூர்ண)


5. பாகவதத்தில் கிருஷ்ணரைப் போற்றும் பகுதி.....

பத்தாவது அத்தியாயம்


6. எட்டு ராணிகளுடன்(அஷ்ட மகிஷி) கண்ணன் வீற்றிருக்கும் தலம்....

துவாரகை


7. கோவர்த்தனன் என்ற திருநாமத்தோடு கண்ணன் அருளும் தலம்...

மதுரா


8. எல்லா உறவுநிலைகளிலும் கண்ணனைப் போற்றிப் பாடியவர்...

பாரதியார்


9. கிருஷ்ணலீலா தரங்கிணியைப் பாடிய அருளாளர்...

நாராயண தீர்த்தர்


10. மன்னார்குடியில் பசுமேய்த்த கோலத்தில் இருப்பவர்.....

ராஜகோபாலன் 


1. வாமனன் என்பதன் பொருள்.....

குறுகியவன், அழகானவன்


2. சீர்காழியில் அருள்பாலிக்கும் உலகளந்த பெருமாள்.....

தாடாளன்


3. பலிச்சக்கரவர்த்தி யாகம் செய்த இடம்....

நர்மதை நதிக்கரை


4.ஆண்டாள் "ஓங்கி உலகளந்த உத்தமன்' என்று போற்றும் அவதாரம்....

வாமனனாய் வந்து திருவிக்ரமமூர்த்தியாய் உயர்ந்தது


5. உலகளந்த பெருமாளைப் போற்றும் திருப்பாவை பாடல்கள்....

3,17, 24


6. வாமனரின் பெற்றோர்....

காஷ்யபர், அதிதி


7. விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வாமனமூர்த்தி எத்தனையாவது திருநாமம்?

152


8. மகாபலி எதற்காக யாகம் செய்தான்?

இந்திரபதவி பெறுவதற்காக 


9. வாமனரைப் பிரதிபலிக்கும் தமிழ் இலக்கியம்...

திருக்குறள்


10. அதிதிக்கு வாமனர் எத்தனையாவது பிள்ளை?

12 


1. ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசித்த புராணம்....

பிரம்மாண்ட புராணம்


2. பிரம்மாண்ட புராணப்படி சக்திபீடங்கள் எத்தனை உள்ளன?

51


3. தாடங்கத்தை(தோடு) சக்கரமாக அணிந்திருக்கும் அம்பிகையர்....

திருக்கடையூர் அபிராமி, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி


4. பராசக்தி என்பதன் பொருள்...

அளவிடமுடியாத அருட்சக்தி 


5. மந்திரங்களுக்கு கட்டுபட்டவள் என்பதால் அம்பிகையை.... என்பர்.

மந்திரிணி


6. சக்தி தலங்களில் மந்திரிணி பீடமாக விளங்கும் திருத்தலம்...

மதுரை 


7. பஞ்சபூதத்தலங்களில் மண் தலத்தில் அருள்புரியும் 

அம்பிகை... காஞ்சி காமாட்சி 


8. இந்தியாவின் கடைக்கோடியில் விளங்கும் சக்திபீடம்....

கன்னியாகுமரி


9. மன்மதனால் அம்பிகைக்கு கோயில் எழுப்பட்ட திருத்தலம்...

கவுகாத்தி காமாக்யா கோயில் (அசாம்)


10. திருவாலங்காட்டை சக்தி பீடங்களில்..... பீடமாகச்சொல்வர்.

காளிபீடம். 


1. தேவாரத்தில் விநாயகர் வணக்கம் இடம்

பெற்றுள்ள தலம்... திருவலிவலம் (திருவாரூர் மாவட்டம்)


2. தேவாரத்தில் முதல் ஏழு திருமுறைகளிலும் பாடல்பெற்ற சிவன்...

வேதாரண்யேஸ்வரர்


3. சுந்தரரின் தோழராக கைலாயத்திற்கு உடன் சென்றவர்....

சேரமான் பெருமான் நாயனார்


4. ராமபிரானால் கொல்லப்பட்ட வானரம்

வாலி


5. சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர்....

சோமாஸ்கந்தர்


6. திருப்பதி ஏழுமலையான் மீது பக்தி செலுத்திய ஆங்கிலேயர்...

சர். தாமஸ் மன்றோ


7. சுதர்சனம்(சக்கரம்) என்பதன் பொருள் .....

நல்ல காட்சி


8. முருகப்பெருமான் பாலனாக வலம் வந்த மயில் ....

இந்திரமயில்


9. தானான திருமேனியாக ராமானுஜர் அருள்புரியும் தலம்...

ஸ்ரீரங்கம்


10. கயிலை தரிசனம் பெற அருள்புரியும் விநாயகர் துதிப்பாடல்...

விநாயகர் அகவல். 


1. பாரதியார் பாடிய காளி எங்கு அருள்புரிகிறாள்?

உஜ்ஜயினி(மத்தியபிரதேசம்)


2. வங்காள மக்கள் துர்கா 

பூஜையின் போது..... என்று சொல்லி தேவியை வணங்குவர். ஜய அம்பே! ஜகதம்பே!! (அம்பாளுக்கே வெற்றி! உலக நாயகிக்கு வெற்றி)


3. அம்பாள் வதம் செய்த அசுரனின் பெயரால் வழங்கும் தலங்கள்...

மைசூரு(மகிஷன்), கோலாப்பூர்(கோல்ஹாசுரன்)


4. ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற சக்திபீடம்...

காயத்ரி பீடம் (புஷ்கரம்)


5. கைலாயத்தில் அம்பிகையின் அம்சமாக இருக்கும் ஏரி...

மானசரோவர் 


6. சங்கீத மும்மூர்த்திகளால் பாடப்பெற்ற அம்பிகை....

நீலாயதாட்சி(நாகப்பட்டினம்)


7. சத்ரபதி வீரசிவாஜி வழிபட்ட தமிழக அம்பிகை...

சென்னை காளிகாம்பாள்


8. மீனாட்சியம்மனுக்கு தங்க ஷுவை காணிக்கையாக்கிய ஆங்கிலேயர்...

ரோஸ்பீட்டர்


9. அம்பிகை இல்லறம், துறவறம் என இருநிலைகளில் அருளும் தலம்....

திருவாரூர்(நீலோத்பலாம்பாள், கமலாம்பாள்) 


10. சரஸ்வதி, லட்சுமி, காளி மூவரும்மூலவராகவிளங்கும் தலம்...

கோலாப்பூர்(மகாராஷ்டிரா) 



1. சப்தாஸ்வன் என்று சிறப்புப்பெயர் கொண்டவர்...

சூரியன்(ஏழு குதிரைகளைக் கொண்டவன்)


2. மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து சிவபதம் பெற்ற அடியவர்....

மூர்த்திநாயனார் 


3. ஆறுபடைவீட்டில் குகாசலம் எனப்படும் தலம்...

சுவாமிமலை


4. திருமால் மீது முகுந்தமாலை பாடிய ஆழ்வார்...

குலசேகராழ்வார்


5. யுகங்களில் தர்மயுகம் என்று சிறப்பிக்கப்படுவது....

கிருதயுகம்


6. ராமாயணத்தில் மந்திர ரத்தினமாகத் திகழ்வது...

சுந்தர காண்டம்


7. துளசிதாசர் இந்தியில் எழுதிய ராமாயணம்...

ராமசரித மானஸ்


8. ராஜரிஷியான விஸ்வாமித்திரரின் இயற்பெயர்....

கவுசிகன்


9. பூதத்தாழ்வார் பாடிய பிரபந்தப்பாடல்....

இரண்டாம் திருவந்தாதி


10. நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்.....

காளஹஸ்தி 


1. பிருந்தாவனத்தில் கண்ணனைக் கொல்ல பசுங்கன்றாக வந்தவன்...

வத்சாசுரன்


2. கண்ணனைக் கொல்ல கம்சனால் அனுப்பப்பட்ட கொக்கு அசுரன்....

பகாசுரன்


3. எந்தப் பாம்பின் மீது கண்ணன் நர்த்தனம் புரிந்தான்....

காளிங்கன்


4. கண்ணன் மீது கொண்ட பக்தியால் கோபியர்கள் பாடிய பாடல்.....

கோபிகாகீதை


5 .கேசி என்பவன் ..... வடிவத்தில் கண்ணனைக் கொல்ல முயன்றான்.

குதிரை 


6. யமுனையாற்றில் கண்ணனிடம் விஸ்வரூப தரிசனம் பெற்ற பக்தர்....

அக்ரூரர்


7. தந்தம் இரண்டையும் ஒடித்து, கண்ணன் கொன்ற யானை......

குவலயாபீடம்


8. மதுராவில் கண்ணனோடு மல்யுத்தம் செய்து தோற்ற இருவர்....

முஷ்டிகன், சாணூரன்


9. கண்ணனை மணக்க விரும்பி துவாரகைக்கு தூது அனுப்பியவள்.....

ருக்மணி


10. ஏழுகாளைகளை அடக்கியதால், கண்ணனை மணந்த ராஜகுமாரி......

நாக்னஜித் 


1. தீபாவளியின் பெருமையைச் சொல்லும் புராணம்...

பிரம்ம வைவர்த்த புராணம்


2. நரகாசுரனின் பெற்றோர்....

வராஹமூர்த்தி, பூமிதேவி


3. நரகாசுரனின் இயற்பெயர்....

பவுமன்(பூமியின் பிள்ளை)


4. கிருஷ்ணரோடு யுத்தம் செய்ய நரகாசுரன்... வாகனத்தில் வந்தான்

யானை


5. நரகாசுரனின் மகன் பெயர்.....

பகதத்தன்


6. தீபாவளியை ..... நாளில் கொண்டாடி மகிழ்கிறோம்

ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி


7. தீபாவளி ஸ்நானத்தை ..... என்றும் அழைப்பதுண்டு

நரகசதுர்த்தசி ஸ்நானம்


8. கங்காதேவி தீபாவளியன்று எதில் வசிப்பதாகக் கூறுவர்?

வெந்நீர்


9. தீபாவளிநாளில் எண்ணெயில் ..... இருப்பதாக ஐதீகம்

லட்சுமிதேவி


10. வடநாட்டில் தீபாவளியன்று ....... வழிபாடு நடத்துவர். 

லட்சுமி பூஜை, குபேர பூஜை 



1.கந்தசஷ்டி கவசத்தை எழுதியவர்...தேவராய சுவாமிகள்


2. சண்முக கவசத்தை எழுதியவர்...பாம்பன் சுவாமிகள்


3. கந்தரநுபூதியை பாடிய அருளாளர்.....அருணகிரிநாதர்


4. திருமுருகாற்றுப்படை பாடிய சங்கப்புலவர்....நக்கீரர்


5. முருகனால் வெட்டிய கை வளரப் பெற்ற பெண்ணடியார்...முருகம்மையார்


6. ஊமைப்பிள்ளையாய் இருந்து முருகனருளால் பாடியவர்...குமரகுருபரர்


7. முருகனிடம் தமிழ் மொழியைக் கற்றறிந்த முனிவர்...அகத்தியர்


8. கண்ணாடியில் திருத்தணி முருகனை தரிசித்து மகிழ்ந்தவர்...வள்ளலார்


9. வயலூர் முருகனை இஷ்டதெய்வமாக போற்றிய அடியவர்....வாரியார்


10. முருகன் அல்லது அழகு என்ற நூலை எழுதியவர்....

திரு.வி.க.,


1. அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்...

திருச்சோற்றுத்துறை ( திருவையாறு அருகில் உள்ளது)


2. பக்தருக்காக விறகினைச் சுமந்த சிவபெருமான்...

மதுரை சொக்கநாதர் 


3. தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்...

திருச்சி தாயுமானவர்


4. மார்கண்டேயனைக் காக்க எமனை சிவன் உதைத்த தலம்...

திருக்கடையூர்( காலசம்ஹார மூர்த்தி)


5. பார்வதியைத் தன் இடப்பாகத்தில் ஏற்றபடி அருளும் தலம்...

திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்)


6. பஞ்சபூதங்களில் காற்றுக்குரிய சிவன் எங்கு வீற்றிருக்கிறார்?

காளஹஸ்தி


7. அம்பிகையே உச்சிக்கால பூஜை செய்யும் தலம்...

திருவானைக்காவல்(திருச்சி) ஜம்புகேஸ்வரர் கோயில்


8. அடியும் முடியும் காணா முடியாதவராக சிவன் அருளும் கோயில்...

திருவண்ணாமலை


9. காளியோடு சேர்ந்து சிவன் திருநடனம் ஆடிய தலம்...

திருவாலங்காடு நடராஜர் கோயில் (கடலூர் மாவட்டம்)


10. கருவறையில் சடைமுடியோடு காட்சிதரும் சிவலிங்க கோயில்கள்.....

திருவையாறு ஐயாறப்பர், சிவசைலம் சிவசைலநாதர் கோயில் (திருநெல்வேலி மாவட்டம்) 



1. சிவபெருமானின் வாகனம்

ரிஷபம்(காளை)


2. மதுரையில் நடராஜர் ஆடும் தாண்டவம்....

சந்தியா தாண்டவம்


3. ஆதிசங்கரர் முக்திலிங்கத்தை ஸ்தாபித்த திருத்தலம்...

கேதார்நாத்


4. சிவலிங்கத்தை எத்தனை பாகங்களாகக் குறிப்பிடுவர்?

மூன்று(பிரம்ம, விஷ்ணு, ருத்ரபாகம்) 


5. பாம்பன்சுவாமிகளின் சமாதிக்கோயில் எங்குள்ளது?

திருவான்மியூர்


6. மூங்கிலை தலவிருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள்....

திருநெல்வேலி, திருவெண்ணெய்நல்லூர்


7. சிவ வடிவங்களில் வசீகரமானதாகப் போற்றப்படுவது....

பிட்சாடனர்


8. உடம்பைக் காற்று போல லேசாக்கும் பயிற்சி....

அஷ்டமாசித்திகளில் ஒன்றான லகிமா 


9. சிவபெருமானை ஆடு பூஜித்த தலம்....

திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்)


10. தண்ணீரில் விளக்கேற்றிய சிவனடியார்......

நமிநந்தியடிகள்( திருவாரூர்) 


1. பில்வப்பிரியை (வில்வத்தை விரும்புபவள்) என்பது யாரைக் குறிக்கும்?

லட்சுமி


2. செவ்வாய், சனி கிரகத்தின் தொல்லைகளை நீக்கும் பெண் தெய்வம் யார்?

மகாலட்சுமி


3. மகாலட்சுமி கிரக தோஷங்களை நீக்கும் சக்தி படைத்தவள் என்று சொல்லும் நூல் எது?

ஸ்ரீசூக்தம்


4. ஸ்ரீசூக்தத்தை எழுதியவர் யார்?

மகாகவி வேங்கடாத்வரீ


5. இரு கை கொண்டு வாங்க வேண்டிய பொருட்கள்...

புத்தகம், வெற்றிலை பாக்கு, திருநீறு, தங்க நகை, உடை.



6. இரவில் சாப்பிடக்கூடாதவை என சாஸ்திரம் தடுப்பது..

கஞ்சி, இஞ்சி, தயிர்சாதம், நெல்லிக்காய், பாகற்காய், கீரை.


7. யார் வீட்டில் செல்வம் தங்காது?

காலையும், மாலையும் உறங்குபவர் வீட்டில்...


8. வீட்டில் லட்சுமி தங்க ஆதிசங்கரர் அளித்துள்ள ஸ்தோத்திரம்..

கனகதாராஸ்தவம்


9. பாற்கடலில் லட்சுமியின் அருகில் நிற்கும் மரங்கள்

பாரிஜாதம், கற்பகதரு.


10."விஜயா' என்ற பெயர் யாரைக் குறிக்கும்?

ராஜலட்சுமி. 


1. பிரம்மலிபி என்பதன் பொருள்.....

தலையெழுத்து


2. சுப்ரமண்ய புஜங்கம் பாடியவர்....

ஆதிசங்கரர் 


3. பட்சிராஜர் என்று போற்றப்படுபவர்...

கருடாழ்வார்


4. கருடனின் அம்சமாகப் பிறந்த ஆழ்வார்....

பெரியாழ்வார்


5. வாசுதேவன் என்பதன் பொருள்....

எங்கும் நிறைந்தவன் (எங்கும் பரவியிருப்பவன்)


6. அர்ச்சகர் அம்பிகையாக சிவனை பூஜிக்கும் தலம்....

திருவானைக்காவல்


7. தேவாரத் தலங்களில் சுக்கிரதோஷம் போக்கும் சிவன்.....

கஞ்சனூர் அக்னீஸ்வரர் (தஞ்சாவூர் மாவட்டம்)


8. நவரத்தினங்களில் செவ்வாய்க்குரிய கல்...

பவளம் 


9. செயல் தடையின்றி நிறைவேற அருளும் விநாயகர் துதி....

காரியசித்தி மாலை


10. புகழ்பெற்ற அனுமன் சாலிஸாவைப் பாடியவர்....

துளசிதாசர் 


1.பிருந்தா என்பது யாரைக் குறிக்கும்?

துளசி


2. துளசியைத் தமிழில் .... என்று வழங்குவர்.

துழாய்


3. முருகனுக்கு மலரால் உண்டான பெயர்....

கடம்பன்(கடப்பமலர் முருகனுக்கு உகந்தது)


4. விஷ்ணு மூர்த்தமாக ....... கல்லை பூஜிப்பர். 

சாளக்ராமம்


5. சிவன் "அம்மா' என்று யாரை அழைத்து மகிழ்ந்தார்?

காரைக்காலம்மையார்


6. தாச(பக்தி அடிமை) மார்க்கத்தில் சிவனைப் போற்றியவர்....

திருநாவுக்கரசர்


7. வாழ்நாளில் ஒருமுறை கூட பழநியைத் தரிசிக்காதவர்....

பாம்பன் சுவாமிகள்


8. ராமானுஜரை 18முறை வரவழைத்த பின் உபதேசித்தவர்....

திருக்கோஷ்டியூர் நம்பி


9.ராசிமண்டலத்தில் சூரியன் ஐப்பசியில்.... கதி அடைகிறார். 

நீச்சகதி(ஆற்றலை இழந்துவிடும் நிலை)


10. இந்திரனின் மகன் சயந்தன் வழிபட்ட சிவன்....

திருப்புத்தூர் திருத்தளிநாதர் (சிவகங்கை மாவட்டம்) 



1. முல்லைவனமாகத் திகழ்ந்த சிவத்தலம்...

திருக்கருக்காவூர்


2. பஞ்ச சபைகளில் சித்திரசபை எனப்படுவது...

குற்றாலம்


3. தினமும் பிரதோஷ பூஜை நடக்கும் தலம்....

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்


4. அஷ்டமாசித்திகளில் கூடுவிட்டு கூடு பாய்வதை ... என்பர்

பிராகாமியம்


5. தன்னைக் கொல்ல வந்தவரையும் வணங்கியவர்....

மெய்ப்பொருள் நாயனார்


6. தடாதகை என்னும் பெயரில் வளர்ந்தவள்...

மதுரை மீனாட்சி


7. குமரகுருபரர் முருகன் மீது பாடியது...

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்


8. குசேலர் வாழ்ந்த அவந்தி எந்த மாநிலத்தில் உள்ளது?

மத்திய பிரதேசம் (தற்போது உஜ்ஜயினி)


9. அலங்காரத்தில் விருப்பம் கொண்ட முருகன் அருளும் தலம்.....

திருச்செந்தூர்


10. சூர்ப்பனகை என்பதன் பொருள்....

முறம் போன்ற நகம் கொண்டவள். 



1. சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நாள்....

தை முதல்நாள்(மகர சங்கராந்தி)


2. "ஞாயிறு போற்றுதும்' என்று சூரியனை போற்றும் இலக்கியம்...

சிலப்பதிகாரம்


3. சூரியனின் ரதத்தில் இருக்கும் குதிரைகள் எத்தனை?

ஏழு


4. சூரியவம்சத்தில் உதித்த கொடைவள்ளல்....

கர்ணன்


5. சூரியனைப் பழம் என்று எண்ணி வானில் பறந்த வீரன்....

அனுமன்


6. ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனை .... என்று குறிப்பிடுவர்

ஆத்மகாரகர்( ஆத்மாவிற்கு உரியவர்)


7. சூரியன் முழுஆற்றலோடு எந்த ராசியில் இருப்பார்?

மேஷம்(சித்திரைமாதம்)


8. சூரியனின் ஒற்றைச் சக்கர தேருக்கு சாரதியாக இருப்பவர்....

அருணன்


9. சூரியனுக்கு ஆற்றல் தரும் காயத்ரி மந்திரத்தை உலகிற்கு வழங்கியவர்...

விஸ்வாமித்திரர்


10. சூரியவம்சத்தில் மகாவிஷ்ணு எடுத்த அவதாரம்....

ராமாவதாரம் 


1. முக்கண்ணன் என்று போற்றப்படுபவர்....

சிவன்


2. தாமரைக்கண்ணன் என்று அழைக்கப்படுபவர்...

திருமால்


3. மீன் போன்ற கண்களை உடைய அம்பிகை....

மீனாட்சி


4. விசாலாட்சி என்பதன் பொருள்.....

அகன்ற கண்களைப் பெற்றவள்


5. நாட்டரசன் கோட்டையில் (சிவகங்கை) அருளும் தேவி...

கண்ணுடைய நாயகி


6. கவுதமரிஷியால் ஆயிரம் கண்களை சாபத்தால் பெற்றவன்...

இந்திரன்


7. சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள்...

ருத்ராட்சம்


8. கண்ணுக்கு அழகு தரும் பண்பு எது?

தாட்சண்யம்(கருணை)


9. முருகனுக்கு எத்தனை முகங்கள்?

ஆறு


10. சிவனால் எரிக்கப்பட்ட மன்மதனை... என்ற பெயரால் அழைப்பர்.

அனங்கன்(அங்கம் இல்லாதவன்) 


1. ராவணனின் தம்பிகளில் மூத்தவன்....

கும்பகர்ணன்


2. அக்ஷன் என்பவன் யார்?

ராவணனின் இரண்டாவது மகன்


3. ராமசகாயன் என்று அழைக்கப்படுபவன்...

சுக்ரீவன்


4. ராவணனின் அழிவிற்கு விதையிட்டவள் யார்?

சூர்ப்பனகை


5 . விஸ்வமித்திரரின் கட்டளையால் ராமன் யாரைக் கொன்றார்?

தாடகை 


6. சீதைக்கு அசோகவனத்தில் உதவி செய்த அரக்கி...

திரிஜடை


7. இந்திரஜித்தின் தாய் ...

மண்டோதரி


8. சீதையை அபகரிக்க ராவணனுடன் மாயமானாக வந்தவன்...

மாரீசன்


9. ரகுவம்சத்தின் குலகுருவாக இருந்தவர்....

வசிஷ்டர்


10. ராமாயணத்தில் கரடி முகத்துடன் இருப்பவர்... 

ஜாம்பவான் 



1. "கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா' என்று பாடியவர்....

பாரதியார்


2. காகமாக வந்து சீதைக்கு துன்பம் கொடுத்தவன்...

ஜெயந்தன்


3. கூடற் கலாபமயிலாக விளங்கும் அம்பிகை....

மதுரை மீனாட்சி


4.புதனுக்குரியசிவன்கோயில்....

திருவெண்காடு (நாகப்பட்டினம் மாவட்டம்)


5. திருவாய்மொழி பாடியவர்....

நம்மாழ்வார்


6. சிவன் மீது திருப்பல்லாண்டு பாடியவர்....

சேந்தனார்


7. சரவணன் என்பதன் பொருள்...

நாணற்காட்டில் பிறந்தவன்


8. நூபுர கங்கை தீர்த்தம் எங்கு உள்ளது?

அழகர்கோவில்


9. யசோதையாக கண்ணனுக்குத் தாலாட்டுப் பாடியவர்...

பெரியாழ்வார்


10. திருச்சாத்து உருண்டை என்னும் மருந்து வழங்கும் தலம்....

வைத்தீஸ்வரன் கோவில் 



1. காஞ்சி வரதராஜரிடம் மிகுந்த பக்தி கொண்ட அடியவர்....

தொட்டாச்சாரியார்


2. பட்சிராஜர் என்று சிறப்பிக்கப்படுவது....

கருடன்


3. பாண்டவர்களில் ஜோதிட நிபுணர்...

சகாதேவன்


4. சைவ சித்தாந்த சாஸ்திர நூல்கள் எத்தனை?

பதினான்கு


5. பிதாமகர் பீஷ்மரின் பெற்றோர்...

சந்தனு, கங்கா


6. மதுரையில் சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்....

64


7. தெய்வீகமான வடகிழக்கு திசையை .... என்று குறிப்பிடுவர்.

ஈசானம்


8. அர்ஜூனனுக்குரிய கொடி...

அனுமன் கொடி


9. கண்ணனை அழிக்க கம்சன் அனுப்பிய கொக்கு அசுரன்...

பகாசுரன்


10. தசரதருக்குப் புத்திரசாபம் கொடுத்தவன்....

ஜலபோஜன். 



1. திருநாவுக்கரசரின் இயற்பெயர்....

மருள்நீக்கியார்


2. பிரகலாதனுக்கு தாயின் கருவிலேயே உபதேசித்தவர்....

நாரதர்


3. விழிக்கே அருளுண்டு' என்று அம்பிகையைப் பாடியவர்...

அபிராமி பட்டர்


4. சுப்ரபாதம் என்பதன் பொருள்...

நல்ல காலைவேளை


5. கூடற்கலாப மயில் எனப்படும்அம்பிகை ....

மீனாட்சி அம்மன்


6. ஆழ்வார்களில் அமர்ந்தபடி காட்சியளிப்பவர்...

நம்மாழ்வார்


7. தட்சிணேஸ்வர காளியுடன் நேரில் பேசிய அருளாளர்...

ராமகிருஷ்ண பரமஹம்சர்


8. தாமரையின் பேரால் குறிக்கப்படும் சங்கரரின் சீடர்....

பத்மபாதர்


9. சென்னை காளிகாம்பாளை வழிபட்ட மன்னர்....

சத்ரபதி சிவாஜி


10. "கடை விரித்தேன்.. கொள்வாரில்லை' என்று வருந்தியவர்...

வள்ளலார்



1.விஸ்வாமித்திரருக்கு "ராஜரிஷி' பட்டம் தந்தவர்...

பிரம்மா


2. தசரதன் என்பதன் பொருள்....

பத்துதிசைகளிலும்தேர் செலுத்துபவன்


3. ராமநாமத்தால் தவசீலராக மாறிய வேடன்...

ரத்னாகரன்(வால்மீகி) 


4. ஆதிசேஷனின் அம்சமாகப் பிறந்த ராம சகோதரர்...

லட்சுமணன்


5. விதேக நாட்டில் பிறந்ததால் சீதைக்கு.... என பெயர்

வைதேகி


6. சுக்ரீவன் யாருடைய அம்சம் கொண்டவர்?

சூரியன்


7. சிவ வடிவங்களில் வசீகர மூர்த்தியாகத் திகழ்பவர்...

பிட்சாடனர்


8. முதலை உண்ட சிறுவனை வரவழைத்த அடியவர்....

சுந்தரர்


9. ஸ்ரீருத்ரம் (மந்திரம்) ஜெபித்து சிவனருள் பெற்றவர் ...

ருத்ரபசுபதி நாயனார்


10. பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர்....

திருத்தொண்டர் புராணம்



1."ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று பாடியவர்.......

திருமூலர்


2. தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கும் மரம்....

கல்லால மரம்


3. சூரியவழிபாட்டுக்கு உகந்த மலர்...

செந்தாமரை


4. "பாலூட்டும் தாயினும் அன்பு மிக்க சிவன்' என்று பாடியவர்.....

மாணிக்கவாசகர்


5. சுந்தரரோடு கயிலாயம் சென்ற அடியார்...

சேரமான் பெருமாள் நாயனார்


6. .......வேரில் விநாயகர் சிலை செய்து வழிபடுவர்.

வெள்ளெருக்கு 


7. கந்தபுராண ஆசிரியர் கச்சியப்பருக்கு அருள் செய்த முருகன் எங்கிருக்கிறார்?

காஞ்சி குமரக்கோட்டம் 


8. விஷ்ணுவின் கையில் உள்ள வில்லின் பெயர்....

சார்ங்கம்


9. ஸ்ரீருத்ரம் ஜெபித்து சிவனை அடைந்த அடியவர்....

ருத்ரபசுபதியார்


10. மீனாட்சியம்மன் மீது பஞ்சரத்னம் பாடியவர்...

ஆதிசங்கரர்



1. புராணரத்தினம் என்று போற்றப்படுவது...

பாகவதம்


2. திருமால் .....நிலத்திற்குரிய கடவுள்.

முல்லை


3. ஆலமர் செல்வன் என்று போற்றப்படுபவர்....

தட்சிணாமூர்த்தி


4. இளைய பெருமாள் என்று யாரைக் குறிப்பிடுவர்?

லட்சுமணன்


5. இளைய ஆழ்வார் என்று போற்றப்படுபவர்....

ராமானுஜர்


6. அரியர்த்தர் என்று குறிப்பிடப்படுபவர்...

சங்கரநாராயணர்


7. திருமால் துயில் நீங்க பள்ளியெழுச்சி பாடியவர்...

தொண்டரடிப்பொடியாழ்வார்


8. அர்ஜுனனுக்கு கொடியால் உண்டான பெயர்.....

கபித்வஜன்(அனுமன்கொடி கொண்டவன்)


9. முகூர்த்தம் என்பதன் கால அளவு...

90 நிமிடம்


10. பீஷ்மர் தர்மருக்கு உபதேசித்த மந்திரம்.....

விஷ்ணு சகஸ்ரநாமம்.


1. விநாயகர் என்பதன் பொருள்......

உயர்ந்த தலைவர்


2. அருணகிரிநாதருக்கு நடனக்காட்சி அளித்த முருகன்...

வயலூர்முருகன்


3. இசைஞானியார் என்ற பெண் நாயன்மாரின் மகன்....

சுந்தரர்


4. இரவும்பகலும் இடைவிடாமல் ஸ்ரீருத்ரம் ஓதியவர்...

ருத்ரபசுபதியார்


5. நவநிதிகளுக்கும் அதிபதியாகத் திகழ்பவர்...

லட்சுமி குபேரர்


6. கங்கையின் பெருமை குறித்து ஆதிசங்கரர் எழுதிய நூல்....

கங்காஷ்டகம்


7. சூரியனுக்குரிய மூன்று நட்சத்திரங்கள்....

கார்த்திகை, உத்திரம், உத்திராடம்


8. உடுப்பி கிருஷ்ணரை ஆராதித்த அருளாளர்....

மத்வாச்சாரியார்


9. சூரியவம்ச மன்னர்களில் சத்தியத்திற்காகவே வாழ்ந்தவன்...

அரிச்சந்திரன்


10. ஆதிசங்கரருக்கு சிவன் அளித்த லிங்கம் எங்குள்ளது?

சிருங்கேரி (சந்திரமவுலீஸ்வரர்)



1.தசரதபுத்திரர்களில் ஆதிசேஷனின் அவதாரமாக குறிப்பிடப்படுபவர்....

லட்சுமணர்


2. கண்ணில் கண்ட உயிர்களை எல்லாம் குருவாக ஏற்றவர்....

தத்தாத்ரேயர்


3. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றவர்....

திருமூலர்


4. முருகனின் அருளால் கை வளரப் பெற்ற அடியவர்...

முருகம்மையார்


5. விநாயகர் மீது காரியசித்தி மாலை பாடியவர்...

கபிலர் 


6.திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து வந்தவர்....

குலச்சிறையார்


7. திரிலோக சஞ்சாரி என்று சிறப்புப்பெயர் பெற்றவர்....

நாரதர்


8. பொதிகைமலையில் உற்பத்தியாகும் நதி

தாமிரபரணி


9. ஆண்டவனை அரை நிமிஷமாவது வணங்கச் சொல்லும் அடியவர்...

அருணகிரிநாதர்


10. எமதர்மனின் தங்கையாக கருதப்படும் புனித நதி....

யமுனை


1. நவநிதிக்கும் அதிபதியாக குபேரனை நியமித்தவர்.....

சிவன்


2.குபேரமந்திரம் இடம் பெற்றுள்ள வேதம்...

யஜூர்


3. கலியுகம் முடியும் வரை குபேரனுக்கு வட்டிசெலுத்துபவர்....

திருப்பதி வெங்கடாஜலபதி


4. குபேரனின் மனைவி....

சித்ரரேகா


5. குபேரனின் வாகனங்கள்....

குதிரை, கிளி, நரன்(மனிதன்)


6. குபேரன் ஆட்சி செய்யும் பட்டினம்...

அளகாபுரி


7. குபேரனுக்குரிய திசை....

வடக்கு


8. அட்சயம் என்பதன் பொருள்....

குறைவில்லாதது


9. திரவுபதி மானம் காக்க புடவை தந்த கிருஷ்ணர் சொன்னது வார்த்தை...

"அட்சயஅட்சய' (வளர்க வளர்க)


10. அட்சயபாத்திரம் ஏந்தியிருக்கும் காப்பியத்தலைவி....

மணிமேகலை


1. சந்தனம் கிடைக்காமல் சிவனுக்காக தன் கையையே அரைத்தவர்....

மூர்த்திநாயனார்


2. 3000 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்த அருளாளர்.....

திருமூலர்


3. பிள்ளைகளுக்கு நாவுக்கரசரின் பெயரை இட்ட அடியவர்...

அப்பூதியடிகள்


4. அபிஷேகப்பாலைக் கொட்டியதந்தையின் கால்களை வெட்டியவர்....

சண்டேஸ்வரர்க்ஷ


5. பொன்மீனை சிவனுக்கு அர்ப்பணித்தவர்...

அதிபத்தர்


6. சிவபெருமானை காளை மாடு பூஜித்த தேவாரத்தலம்....

திருவையாறு


7. நந்தீஸ்வரரின் மனைவி...

சுயசாம்பிகை

8. மதுரையில் நடராஜர் ஆடிய நடனம்....

சந்தியாதாண்டவம்


9. அம்பிகை பூஜித்த லிங்கத்தை... என குறிப்பிடுவர்

தேவிக லிங்கம்


10. சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாகத் திகழ்பவர்...

சோமாஸ்கந்தர்.


1. நரசிம்மர் அவதரித்த நட்சத்திரம்.....

சுவாதி


2. திவ்யதேசங்களில் நவநரசிம்மர் அருளும் தலம்...

அகோபிலம்


3. அகோபிலம் என்பதன் பொருள்.....

சிங்ககுகை


4. ஒரே நேர்கோட்டில் அமைந்த மூன்று நரசிம்ம தலங்கள்....

பரிக்கல், பூவரசன்குப்பம், சிங்ககிரி(அபிஷேககுப்பம்)


5. பிரகலாதனின் பெற்றோர்...

இரண்யன், கயாது


6.சித்ராபவுர்ணமியில்அவதரித்தவர்....

சித்ரகுப்தர்


7. சைவ வைணவ ஒற்றுமைக்காக மதுரையில் விழா நடத்தியவர்....

திருமலை நாயக்கர்


8. சித்ராபவுர்ணமியில் வைகையாற்றில் இறங்கும் பெருமாள்...

அழகர்கோவில் கள்ளழகர்


9. கள்ளழகரிடம் சாபவிமோசனம் பெற தவமிருந்தவர்...

மண்டூகமகரிஷி


10.சித்ராபவுர்ணமியில் இந்திரன் பூஜித்த சிவன்.....

சுந்தரேஸ்வரர்(மதுரை)


1. பொய்கையாழ்வார் பாடிய பிரபந்தம் .....

முதல் திருவந்தாதி


2. பத்மாவதியாக திருமகளை வளர்த்த மன்னர்.....

ஆகாசராஜன்


3. முற்பிறவியில் எலியாக இருந்த சக்கரவர்த்தி....

பலி


4.நவக்கிரகங்களில் குருவிற்கு உரிய ரத்தினம்....

புஷ்பராகம்


5. லட்சுமியின் உடன்பிறந்த சகோதரர்....

சந்திரன்


6. சுக்ரீவனின் மனைவி......

உருமை


7. குமரகுருபரர் சரஸ்வதி மீது பாடிய பாடல்...

சகலகலாவல்லிமாலை


8. மற்றவர்கள் அறியாதபடி சிவனை வழிபட்ட அரசி...

மங்கையர்க்கரசி


9. நாயன்மார்களில் ஒருவரான இசைஞானியாரின் மகன்....

சுந்தரர்


10. ஆறுநாட்கள் தொண்டு செய்து சிவனோடு கலந்தவர்...

கண்ணப்பர்




1. தென்னாடுடைய சிவனே போற்றி என்று பாடியவர்.....

மாணிக்கவாசகர்


2. சிவனுக்கு உகந்த விரதம்...

சோமவார விரதம்(திங்கள்கிழமை )


3. கல்ஆலமரத்தின் கீழ் வீற்றிருப்பவர்.....

தட்சிணாமூர்த்தி


4. பார்வதிஆறுகுழந்தைகளை ஒன்றாக்கி முருகனுக்கு இட்டபெயர்...

கந்தன்(ஒன்று சேர்க்கப்பட்டவன்)


5. திருச்செந்தூரின் புராணப் பெயர்....

திருச்சீரலைவாய்


6. தமிழ் இலக்கியத்தில் காளியை .... என்று குறிப்பிடுவர்.

கொற்றவை


7. லம்போதர் என்று விநாயகரை அழைக்க காரணம்....

பெருவயிறு பெற்றவர் என்பதால்


8. துளசிதாசர் எழுதிய இந்தி ராமாயணம்...

ராமசரித மானஸ்


9. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறிய சித்தர்....

திருமூலர்


10. வன்னி இலை நவக்கிரகங்களில் யாருக்குரியது?

சனீஸ்வரர் 



1. ஆதிசங்கரர் சுப்ரமண்ய புஜங்கம் பாடிய தலம்....

திருச்செந்தூர்


2 முருக நாமத்தை எப்போதும் ஜெபித்த பெண் அடியார்.....

முருகம்மையார்


3. கந்தசஷ்டிகவசம் யார்மீது பாடப்பட்டது?

சென்னிமலை முருகன்


4. குருவாக உபதேசித்த முருகன் அருளும் தலம்...

சுவாமிமலை


5. சித்தன்வாழ்வு என அழைக்கப்படும் தலம்....

பழநி


6. பாம்பன்சுவாமிகள் முருகன் மீது பாடிய பாடல்கள்....

6666


7. முருகனை வணங்க நாலாயிரம் கண்கள் தேவை என பாடியவர்.....

அருணகிரிநாதர்


8. ஆறுபடைவீடுகளில் முதல்வீடாக திகழும் தலம்...

திருப்பரங்குன்றம்


9. சரவணன் என்பதன் பொருள்...

நாணல்காட்டில் பிறந்தவன் 


10. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் பாடிய அடியவர்....

குமரகுருபரர் 


1. திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...

திருஞானசம்பந்தர்


2. அறம் வளர்த்த நாயகியாக அம்பிகை அருளும் தலம்...

திருவையாறு


3. மணலால் சிவலிங்கம் வடித்து அம்பாள் பூஜித்த தலம்...

காஞ்சிபுரம்


4. ஊன் உடம்பே ஆலயம் என்று போற்றியவர்....

திருமூலர்


5. நவக்கிரகங்களில் புதனுக்குரிய இரு கோயில்கள்...

திருவெண்காடு, மதுரை 


6. கந்தசஷ்டி கவசம் பாடியவர்.........

தேவராய சுவாமிகள்


7. லலிதா சகஸ்ரநாமத்திற்கு இணையான நூல்...

அபிராமி அந்தாதி


8. பிரயாகை என்ற சொல்லின் பொருள்....

பிரம்மா யாகம் செய்த இடம் 


9. ஆதிசங்கரர் சித்தியடைந்த தலம்....

கேதார்நாத்


10. திருக்குறளில் எத்தனை குறள்....

1330.


1. மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....

தேவேந்திரன்


2. சிங்காரவேலனாக முருகன் அருளும் தலம்....

சிக்கல்(நாகப்பட்டினம் மாவட்டம்)


3. ஆண்டான் அடிமை மார்க்கத்தில் சிவனைப் பாடியவர்...

திருநாவுக்கரசர்


4. மாணிக்கவாசகர் முக்திபெற்ற சிவத்தலம்...

சிதம்பரம்


5. மது,கைடபர்களை வதம் செய்து வேதத்தை மீட்டவர்....

ஹயக்ரீவர்


6. நைவேத்தியப் பிரியராக விளங்கும் தெய்வம்.........

விநாயகர்


7. வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்லோகங்கள்....

24,000


8. கோபுரக்கலசங்களில் நிரப்பிவைக்கும் தானியம்...

வரகு


9. ஓரங்க நமஸ்காரம் என்பது ......

தலை தாழ்த்தி இறைவனை வணங்குதல்


10. வடமாநிலங்களில் உள்ள கழுதை வாகன அம்பிகை 

சீதளமாதா




1. தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....

ஸ்வர்பானு


2. பார்க்கவன் எனக் குறிப்பிடப்படும்கிரகம் .......

சுக்கிரன்


3. பார்கவி எனப்படும் பிருகுமகரிஷியின் மகள்.....

லட்சுமி


4. மூதேவி என்பதன் பொருள்......

முதலில் தோன்றியவள்(மூத்ததேவி என்பதன் சுருக்கம். திருமகளுக்கு மூத்தவள்) 


5. அஷ்டமாசித்திகளில் அணிமா என்பது .........

உடலை சிறிய அணுவாகமாற்றுதல் 


6. அடியார்களுக்கு ஆடை வழங்கித் தொண்டு செய்தவர்......

நேசநாயனார்


7. சிவன் மீது சேந்தனார் பாடிய பாடல்...

திருப்பல்லாண்டு


8. பன்னிருதிருமுறை பாடல்களைப் பாடியவர்கள்.....

27


9. மங்களவாரம் எனக் குறிப்பிடப்படும் கிழமை....

செவ்வாய்


10. செல்வவளம் தரும் தனஆகர்ஷண சக்கரம் உள்ள கோயில்......

திருவானைக்காவல்



1. ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...

கதாதரர்


2. திருநாவுக்கரசர் பாடிய திருமுறைகள்....

4,5,6 


3. ராமாயணத்தில் ...... பாராயணம் செய்வது சிறப்பு.

சுந்தரகாண்டம்


4.திருவருட்பாவை பாடிய அருளாளர்...

வள்ளலார்


5. நம்மாழ்வார் மீது பாசுரம் பாடிய ஆழ்வார்.....

மதுரகவியாழ்வார்


6. "சுமித்ரா' என்பதன் பொருள்....

நல்ல நட்புடையவள் 


7. ஸ்ரீவிருட்சம் என்று போற்றப்படும் மரம்....

வில்வம்


8. யானை சிவபெருமானை பூஜித்த தலங்கள்.....

திருவானைக்காவல், திருவாடானை


9. சிவனால் திருமணத்தை நிறுத்தி ஆட்கொள்ளப்பட்டவர்.....

சுந்தரர்


10. சீதைக்கு உதவிய அரக்கர் குலப்பெண்...

திரிசடை(விபீஷணன் மகள்)


1. திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....

ராமானுஜர்


2.ஆண்டாள்கோயிலில் திருப்பணிசெய்த நாயக்க மன்னர்...

திருமலை நாயக்கர்


3. தெலுங்கு மொழியில் ஆண்டாளைப் போற்றும் நூல்...

ஆமுக்த மால்யதா


4. வடபத்ரசாயி என்பதன் பொருள்....

ஆலிலையில் துயில்பவன்


5. ஆண்டாள் பாடிய பாசுரங்கள்......திருப்பாவை (30), நாச்சியார்

திருமொழி(143 பாசுரங்கள்)


6. ரங்கநாதரை ஆண்டாள் மணம் செய்த நாள்....

பங்குனி உத்திரம்


7. வேதாந்ததேசிகர் ஆண்டாள் மீது பாடிய நூல்....

கோதாஸ்துதி


8. திருமணத்திற்காக ஆண்டாள் நேர்ச்சை செய்த கோயில்........

அழகர்கோவில்


9. ஸ்ரீவில்லிபுத்தூரின் புராதனப்பெயர்....

செண்பக வனம்


10. கல்வெட்டுகளில் ஆண்டாள் கோயிலை .... என்று குறிப்பிட்டுள்ளனர். 

சூடிக்கொடுத்த நாச்சியார் கோயில்





1) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?

1863, ஜனவரி 12


2) அவரது நிஜப்பெயர் என்ன?

நரேந்திரன்


3) விவேகானந்தரின் பெற்றோர் யார்?

விஸ்வநாததத்தர்-புவனேஸ்வரி தேவி


4) விவேகானந்தரின் ஆன்மிக துவக்கம் நிகழ்ந்தது எந்த வயதில்?

14


5) குருதேவர் ராமகிருஷ்ணரை அவர் சந்தித்தது எப்போது?

1881 நவம்பர் (18 வயதில்)


6) கன்னியாகுமரி கடலின் நடுவிலுள்ள பாறையில் விவேகானந்தர் தியானம் செய்தது எப்போது?

1892 டிசம்பர் 25,26,27.


7) விவேகானந்தருக்கு பிடித்தமான நிகழ்ச்சி

ராமாயண சொற்பொழிவு கேட்டல், ராமாயணப் பாடல்களை ரசித்தல்.


8) சிகாகோவில் விவேகானந்தர் உரையாற்றிய அரங்கின் பெயர்

கொலம்பஸ் ஹால்


9) சிகாகோ கொலம்பஸ் ஹாலில் விவேகானந்தரின் பேச்சைக் கேட்க கூடியிருந்தவர்கள் எண்ணிக்கை...

7000.


10) விவேகானந்தர் சர்வமத மகா சபையில் பேசிய முதல் வார்த்தை....

சகோதரர்களே! சகோதரிகளே!



1.ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?

மேற்குவங்க மாநிலம் காமார்புகூர்


2. ராமகிருஷ்ணரின் பெற்றோர் யார்?

அப்பா க்ஷுதிராம், அம்மா சந்திரமணி


3. ராமகிருஷ்ணர் பிறந்த இடம் எத்தகையது?

நெல் வேக வைக்கும் அடுப்பு இருந்த சிறிய அறை


4. ராமகிருஷ்ணர் பிறந்த நாள்...

1836, பிப்ரவரி 17


5. ராமகிருஷ்ணர் யாருடைய அம்சமாகப் போற்றப்பட்டார்?

ஸ்ரீமன் நாராயணன்


6. ராமகிருஷ்ணரை அவரது தாய் பிரசவித்த போது <உதவியவர்....

கொல்லர் இனத்தைச் சேர்ந்த "தனி' என்ற பெண்மணி.


7. ராமகிருஷ்ணரின் இளமைப் பெயர்...

கதாதரன்


8. ராமகிருஷ்ணரின் செல்லப் பெயர்...

கதாயீ


9. ராமகிருஷ்ணர் வழிபட்ட தெய்வம்...

தட்சிணேஸ்வரம் காளி


10. ராமகிருஷ்ணரின் முக்கிய சீடர்...

விவேகானந்தர்.



1. ஐந்தாவது வேதமாக கருதப்படும் நூல்.....

மகாபாரதம்


2. கிருஷ்ணர் மீது ஜயதேவர் பாடிய பாடல்......

கீதகோவிந்தம்


3. மயில் வாகன மயூரேச விநாயகர் எங்கிருக்கிறார்?

மகாராஷ்டிராவிலுள்ள மோர்காம்


4. அர்ஜுனன் மகன் அபிமன்யு...அபிமன்யுவின் மகன் யார்?

பரீட்சித்து 


5. கபீர்தாசருக்கு பாத தீட்சை வழங்கிய மகான்...

ராமானந்தர்


6. புத்தரின் இளமைக்கால பெயர்.....

சித்தார்த்தர்


7. கண்ணில் கண்ட 24பேரை குருவாக ஏற்றவர்....

தத்தாத்ரேயர்


8. சீடர்கள் குருவிடம் பணிவாக நடப்பதை ....என்பர்

நைச்யபாவம்(தன்னை தாழ்வாக நினைப்பது)


9. திருக்கோஷ்டியூர் நம்பியிடம் மந்திர உபதேசம் பெற்றவர்.....

ராமானுஜர்


10. என் கடன் பணி செய்து கிடப்பதேஎனபாடியவர்.....

திருநாவுக்கரசர்



1. வாமனரின் பெற்றோர்........

அதிதி, காஷ்யபர்


2. அதிதி மகப்பேறு வேண்டி மேற்கொண்ட விரதம்...

பயோவிரதம்


3. திருவோணத்திற்குரிய நட்சத்திர தேவதை....

மகாவிஷ்ணு


4.மகாபலி யாருடைய வம்சத்தில் பிறந்தவன்?

பிரகலாதன்வம்சம்


5. இந்திரபதவிபெற மகாபலி நடத்திய யாகம்.....

அஸ்வமேத யாகம்


6. யக்ஞோபவீதம் என்னும் பூணூலை வாமனருக்கு வழங்கியவர்....

தேவகுரு பிருகஸ்பதி


7. மகாபலி அஸ்வமேதயாகம் நடத்திய நதிக்கரை.....

நர்மதா


8. மகாபலி தானம் கொடுப்பதைத் தடுக்க முயற்சித்தவர்....

அசுரகுரு சுக்ராச்சாரியார்


9. மகாபலி சக்கரவர்த்தியின் மனைவி....

விந்தியாவளி


10. வாமனசரித்திரம் கேட்டதன் பலன்....

மழை பொழியும்



1. வேதம் தமிழ் செய்த மாறன் என்று போற்றப்படுபவர்..........

நம்மாழ்வார்


2. பல ஹோமங்கள் நடத்திய பாண்டிய மன்னன்.....

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி


3. வேதங்களை "ஸ்ருதி' என்று அழைப்பது ஏன்?

எழுதிப் படிக்காமல், காதால் கேட்டு மனப்பாடம் செய்வதால்!


4. விஷ்ணுவுக்குரிய சாளகிராமக்கல் ..... நதியில் கிடைக்கிறது.

நேபாளத்தில் ஓடும் கண்டகி 


5. ராமன் என்பதன் பொருள்.........

ஆனந்தமாக இருப்பவன்


6. 13 எழுத்து கொண்ட ராமநாமம்.....

ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்


7."உடையவர்' என்று அழைக்கப்படுபவர்.....

ராமானுஜர்


8. சுவாமி என்பதன் பொருள்........

சொத்துக்கு உரிமையானவர்


9. சுவாமி என்பதற்கு நேரான தமிழ்ச்சொல்.....

உடையவர்


10. "சுவாமி' என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்?

சுப்பிரமணியர்




1. திருமலைக்கு நடந்து செல்லும் மலைப்பாதையின் பெயர்..........

சோபன மார்க்கம்


2. சோபனமார்க்கம் தொடங்கும்மலையடிவாரப்பகுதி......

அலிபிரி


3. திருப்பதி கோயிலுக்கு ......... என்று பெயர்

ஆனந்தநிலையம்


4.ஆனந்தநிலைய விமானத்திற்கு தங்கமுலாம் பூசியவர்......

கிருஷ்ணதேவராயர்


5. திருப்பதியில் அன்றாடம் வரவுசெலவைக் கேட்பவர்......

கொலுவு சீனிவாசர்


6. தோமாலா சேவையில் மூலவர்வெங்கடேசருக்கு........ சாத்துவர்

துளசிமாலை 


7. திருப்பதி உற்சவரின் திருநாமம்......

மலையப்பசுவாமி


8. அதிகாலையில் சுப்ரபாதசேவை தொடங்கும் நேரம்..........

2.30மணி


9. திருப்பதி சீனிவாசரின் சகோதரராகக் கருதப்படுபவர்....

கீழ்திருப்பதி கோவிந்தராஜர்


10. பத்மாவதியை சீனிவாசர் திருமணம் செய்த இடம்.....

ஸ்ரீநிவாசமங்காபுரம்



1. வாகீச முனிவர் என்று குறிப்பிடப்படுபவர்....

திருநாவுக்கரசர்


2. காரணம் இல்லாமல் உயிர்கள் மீது இறைவன் காட்டும் கருணையை ...... என்பர்

அஹைதுக கிருபா


3. ஷாண்மாதுரர் என்பதன் பொருள்....

ஆறுதாயார்களைக் கொண்டவர்(முருகனை கார்த்திகைப்பெண்கள் ஆறுபேர் வளர்த்ததால்)


4. பக்திசாரர் என்று குறிப்பிடப்படும் ஆழ்வார்.....

திருமழிசையாழ்வார்

5.மும்மூர்த்திகளில் பரிபாலனமூர்த்தியாக இருப்பவர்.....

விஷ்ணு(பரிபாலனமூர்த்தி- காப்பாற்றுபவர்)


6. பிரம்மாவின் மூன்று மனைவியர்....

சரஸ்வதி, காயத்ரி, சாவித்ரி


7. நடராஜரின் பாதத்தில் பாம்பு வடிவில் சுற்றிக் கொண்டவர்.....

பதஞ்சலி முனிவர்.


8.வேதாந்ததேசிகர் ராமானுஜர் மீது பாடிய நூல்....

யதிராஜ ஸப்ததி


9. ஆழ்வார்களில் ராமன் மீது பக்தி கொண்டவர்....

குலசேகராழ்வார்


10.ஆதிசங்கரர் ஸ்தாபித்த முக்திலிங்கம் எங்குள்ளது?

கேதார்நாத்



1. மலைநாட்டு (கேரளா) திவ்யதேசங்கள் எத்தனை?

13 


2. ஆலிநாடன் என்று குறிப்பிடப்படுபவர்... ...

திருமங்கையாழ்வார்


3. கண்ணனுக்கு எட்டுவித மலர்களைச் சூட்டி அழகுபார்த்தவர்.....

பெரியாழ்வார்


4.ஏழுபிரகாரங்கள் கொண்ட திவ்யதேசம்.....

ஸ்ரீரங்கம்


5. திவ்ய தேசங்களில் 108வது திருத்தலம்....

பரமபதம்


6.தொண்டரடிப்பொடியாழ்வாரின் இயற்பெயர்.....

விப்ரநாராயணன்


7. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர்....

நாதமுனிகள்


8.எழுந்திருக்க முயலும் கோலத்தில் பள்ளி கொண்ட பெருமாள் எங்கிருக்கிறார்?

கும்பகோணம் சாரங்கபாணி


9.முதலாழ்வார் மூவரும் பெருமாளை தரிசித்த தலம்......

திருக்கோவிலூர்


10. நேபாளத்தில் உள்ள திவ்யதேசம்.....

முக்திநாத்


1. சரஸ்வதி மீது அந்தாதிப்பாடல் பாடியவர்....

கவிச்சக்கரவர்த்தி கம்பர்


2. ஆள்காட்டி விரலை நீட்டிய கோலத்தில் சரஸ்வதி அருளும் தலம்......

கங்கை கொண்ட சோழபுரம்


3. அம்சவல்லி என்ற பெயரின் பொருள்.....

சரஸ்வதி (அன்னவாகனத்தில் வீற்றிருப்பவள்)


4. மயிலில் வீற்றிருக்கும் சரஸ்வதிக்கு ..... எனப் பெயர்.

வர்ஹவாகினி


5. சரஸ்வதி அருளால் இந்தி பேசும் அருள்பெற்றவர்......

குமரகுருபரர்


6. சரஸ்வதிக்குரிய திதி, நட்சத்திரம்....

நவமி, மூலம்









7. திபெத்தியர்கள் சரஸ்வதியை ... என அழைப்பர்.

யங்சன்ம


8. ஞானபீடம் விருதின் சின்னமாகத் திகழ்பவள்...... 

வாக்தேவி(சரஸ்வதி)


9. ராமானுஜருக்கு சரஸ்வதி அருளிய பட்டம்......

பாஷ்யக்காரர்


10.ஒட்டக்கூத்தர் சரஸ்வதியை எவ்வாறு குறிப்பிடுகிறார்...

சொற்கிழத்தி



1.சேக்கிழாரின் இயற்பெயர்.....

அருண்மொழித்தேவர்


2. சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க தவமிருந்தவர்கள்.....

வியாக்ரபாதர், பதஞ்சலி


3. உபமன்யுவுக்காக பாற்கடலை வரவழைத்தவர்.........

சிவபெருமான்


4. கிருஷ்ணருக்கு சிவதீட்சை வழங்கியவர்.....

உபமன்யு 


5. நடராஜரின் தூக்கிய திருவடியை .... என்பர்

குஞ்சிதபாதம்


6. தாருகாவனத்து ரிஷிகளை மயக்க விஷ்ணு எடுத்த கோலம்.....

மோகினி


7. தில்லை அந்தணர்களுக்கு யாகத்தீயில் கிடைத்த நடராஜர்......

ரத்தினசபாபதி


8. உமாபதி சிவாச்சாரியார் எழுதியசித்தாந்த நூல்....

சித்தாந்த அட்டகம்


9. கருவறையில் சிவ அபிஷேக தீர்த்தம் வழியும் இடம்.....

கோமுகி


10. பெரியகோயில்களில் தினமும் எத்தனை முறை பூஜை நடக்கும்?

ஆறுகாலம்



1. சிவனுக்கு "ஆசுதோஷி' என்ற பெயர் உள்ளது. அதன் பொருள்.......

விரைந்து அருள்புரிபவர்


2. சிவசந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கி கோஷ்டத்தில் இருப்பவர்.....

லிங்கோத்பவர்


3. சிவனுக்குரிய மூர்த்தங்கள்(சிலை வடிவங்கள்) எத்தனை?

64


4.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாகத் திகழ்பவர்....

சோமாஸ்கந்தர்



5. பஞ்சசபைகளில் வெள்ளிசபையாக விளங்குவது.....

மதுரை


6. சிவனைப் போற்றும் சைவ சாத்திரங்களின் எண்ணிக்கை.....

14


7. தேவாரம் என்பதன் பொருள்......

தெய்வத்திற்கு சார்த்தும் மாலை


8. சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடியவர்....

சேந்தனார்


9. பன்னிருதிருமுறைகளில் உள்ள பாடல்கள் எத்தனை?

18,350


10. திருக்கார்த்திகை திருவிழா சிறப்பாக நடத்தப்படும் தலம்.....

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்