Thursday, 30 July 2020

அகத்தியம் - நாள் - 31/07/2020 - இன்றைய தலைப்பு நிதர்சனம்


அகத்தியம் - நாள் - 31/07/2020 -  இன்றைய தலைப்பு

நிதர்சனம்

ஓம் அற்புத நாயகனே போற்றி

ஓம் ஆதி சக்தி புதல்வனே போற்றி

ஓம் அகிலம் எல்லாம் ஆளும் ஈசனே போற்றி

ஓம் பரிபூரண ஜோதியே போற்றி

!!!!!!!!!!!!!!!!!!!!!!

நான்  மெதுவாக நடந்து  கொண்டு இருந்தேன்

ஓம் அகத்துள்ள அகத்தியரே போற்றி 
பெரும்பாலானவர்கள் எனக்கு எதிர் திசையில் நடந்து கொண்டு  இருந்தனர்

வெகு சிலர் நான் செல்லும் திசையில் சென்று கொண்டு இருந்தனர்

இரண்டு திசைகளிலும் பலவேறு வழிகள் இருந்தன

நான் செல்லும் திசையிலும் பலர் அதே திசையில் செல்லும் வேறு  சில வழிகளில் நடந்து கொண்டு இருந்தனர்

அவரவர்கள் திசைக்கேற்ப சிவப்பு ஆடை, பச்சை ஆடை மஞ்சள் ஆடை வெள்ளை ஆடை போன்றவை அணிந்து கொண்டு தங்களை அடையாளப்படுத்தி கொண்டு இருந்தனர்

அவரவருக்கு தாம் செல்லும் வழி தான்  சிறந்த வழி என்று நினைப்பு

சில வழிகள் பளபள ப்பான் தரையுடன் வசதிகளுடன் இருந்தது

நான் செல்லும் வழி கரடு முரடாக இருந்தது

சிலர் செல்லும் வழியில் இளைப்பாற இடங்கள் உயர்ந்த வகை உணவு என்று இருந்தன

எம் வழியில் வெறும் காலில் குத்தும் கல்லில் வெய்யிலில் நடக்க வேண்டும்

சிலர் என்னை பார்க்கின்றனர். என்னை எடை போடுகின்றனர் எனக்கு முன் நான் செல்லும் பாதையில் யார் செல்கிறார்கள் என்று பார்க்கின்றனர். பின்னர் இவனை தொடர்ந்து சென்று பார்க்கலாம் என்று கூடவே வருகின்றனர்

என்னிடம் முள் குத்தாமல் இருக்க செருப்பு உள்ளது, கரடு முரடில் ஏறி செல்ல ஊன்று கோல் உள்ளது. வழிப்பயணத்துக்கு தேவையான உணவு பொருள் உள்ளது. என்னை அறிந்தவர்கள் என்னை நம்புவார்கள் என்னிடம் இருட்டில் ஒளிர்விடும் ஒளி காட்டும்  கருவி உபகரணம் உள்ளது. என்னிடம் தொலை  தூரத்தில் உள்ளவர்கள்களை தொடர்பு கொண்டு பேசும் கருவி உள்ளது.  வான் வழியே உதவி அளிக்கும் ஆசான்கள் உள்ளனர்

இருட்டுவதற்குள் இலக்கை அடைந்து விட வேண்டும். இலக்கை அடைந்து விட்டால் இருட்டில் கூட நம்மால் தெளிவாக பார்க்க முடியும்.   மற்றவர்களின் நிலை உணர முடியும் உதவ முடியும். மீண்டும் பயணம் செய்து கஷ்டப்பட தேவையில்லை. இலக்கை அடைந்து விட்டால் என்றுமே இருளே இல்லை

இருளில் வாழவும் பலர் பழகி கொண்டனர் கொண்டனர். அதுவே பெரிய திறமை என்று எண்ணி கொண்டனர். வெளியான வெளிச்சத்தில் வாழ்பவர்களை அவர்கள் சவால் விடுகின்றனர். ஒளி பொருந்தியோர் அவர்களை நெருங்கியவுடனே அந்த வெளிச்சத்தில் அவர்கள் தம் நிலை உணர்ந்து சரண் அடைகின்றனர்

எல்லோரும் வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்து வெளிச்சத்தை நோக்கி நடக்க வேண்டும்
எங்கோ சென்றால் விரைவில் இருள் கவிழ்ந்து பயணம் முற்றுப்பெரும்

அதை விடுத்து வெளிச்சத்தை நோக்கிய திசையில் பயணிக்காமல் ஒரு இலக்கே இல்லாமல் பயணித்தால் விரைவில் இருள் கவிழ்ந்து பயணம் முடிவுக்கு வரும்

அதிலும் சிலர் வெளிச்சத்துக்கு எதிர் திசையில் விரைவாக ஓடி மிக விரைவாக இருளை அடைந்து தம் பயணத்தை முடித்து கொள்கின்றனர்



அகத்தியம் சிந்தனை தேனமுது சார்வரி வருடம் ஆடி மாதம் 15ஆம் தேதி கேட்டை நட்சத்திரம் ஏகாதசி திதி குருவாரம்


அகத்தியம் சிந்தனை தேனமுது

சார்வரி வருடம் ஆடி மாதம் 15ஆம் தேதி கேட்டை நட்சத்திரம் ஏகாதசி திதி குருவாரம்

போற்றி வழிபாடு

அருட்பேராற்றலே போற்றி
அருள் ஞான ஜோதியே போற்றி
அருள் இசை அமுதே போற்றி
அருள் ஞான சித்தரே போற்றி
அருட் பேரரரசரே  போற்றி
அகண்ட ஜோதி வடிவே போற்றி
அகத்தியம் தந்த அகத்தீசா போற்றி
ஆழி பேரலையே போற்றி

குருநாதா போற்றி போற்றி போற்றி

தியானம் - பாமாலை

உன்னை போற்றி இந்த நாளும் துவங்கிட
தன்னையே போற்றி வாழும் மாந்தர்களையெல்லாம்
கருணையுடன் கண்டு காருண்யம் புரிந்து
அவருள்ளே மலர்ந்து அறிவுஜோதி அகலை ஏற்றி
இருளகற்றி அருள் புரிவீர்காளாக என் குருநாதரே

தத்துவ மணிகள்

வாழ்க்கை விவசாயம் - விவசாயமே வாழ்க்கை வாழ்க்கையே ஒரு விவசாயம்

மண்ணில் விதை விதைத்தல்
மண் என்பது நீ. விதை என்பது உன் பிறவி காரணம். விதைப்பவன் உன் குருநாதன் சித்தன். குருநாதன் நல்ல மண்ணாகி தேடி தேடி விதைக்கிறான். என்ன விதை விதைக்க வேண்டும் என்பது அவன் முடிவு. குருநாதரின் விதை அல்லவா. தன அணைத்து ஆற்றல்களையும் சகல குணாதிசியங்களையும் உள்ளடக்கி ஒரு சிறிய விதையாக்கி மண்ணில் விதைக்கிறான். அதுவே பிறவி விதை முளை விடும் பொது மண்ணில் மனிதனாய் அல்லது விலங்காய் அல்லது பறவையாய் அந்தந்த மண்ணின் தன்மைக்கேற்ப வளரும். அகத்திய மரத்தின் விதை வீரியம் வாய்ந்தது. அது முளைத்து விட்டால் அற்புத சக்திகளுடன் விளங்கும். அகத்திய விதையை வளர்ப்பதற்கு மண்ணாகிய நீ முதல் தயாராக இருக்க வேண்டும்.

மண்ணின் தன்மையை அதிக வல்லமையுடன் பெருக்கி கொள்ள வேண்டும். வேண்டாத பயிர்களை களைய வேண்டும் நீர் ஓட்டம் அளவிற்கு ஏற்ற இறக்கங்கள் அமைய வேண்டும் நல்ல இயற்கை  உரங்கள் இட வேண்டும்.
உரங்கள் என்பது மனித வாழ்க்கையில் அறநெறிகள் தருமம் சத்தியம் கருணை ஈகை குணம் அன்பு கடமை ஆகியவை. நல்ல குணங்கள் இல்லாத இடத்தில் அகத்தியம் விதை வளராது.

மண்ணில் நீர் பாய்ச்சி பயிர் செய்ய வேண்டும், மழை நீர் வேண்டும், குளம் வேண்டும், ஆறு வேண்டும் கிணறு வேண்டும். இவை தான் கோவில் ஜீவ சமாதி சக்தி பீடங்கள் சமுத்திர க்ஷேத்ரங்கள் மலை க்ஷேத்ரங்கள் புனித யாத்திரை க்ஷேத்ரங்கள் ஆகியவை. அருள் சக்தி ஆசி தான் அந்த நீர். நீர் இல்லாவிட்டால் பயிர் வாடி விடும். அருள் இல்லாவிட்டால் உயிர் வாடி விடும்




🙏இன்று 30.07.2020 பீடத்தில் குருநாதர் அகத்திய பெருமானுக்கு🌺🌹🌸🌷🌼 நடைபெற்ற குருவார பூசை படங்கள் 🙏

🙏இன்று  30.07.2020 பீடத்தில் குருநாதர் அகத்திய பெருமானுக்கு🌺🌹🌸🌷🌼 நடைபெற்ற குருவார பூசை படங்கள் 🙏






Wednesday, 29 July 2020

பௌர்ணமி யாகம் பூஜைக்கு தேவையான பொருட்கள் பௌர்ணமி சித்தர் யாகம் சித்தர் வழிபாடு - நமது பொகளூர் பீடத்தில், திங்கட்கிழமை 03.08.2020 ஆடி பௌர்ணமி

பௌர்ணமி யாகம் பூஜைக்கு தேவையான பொருட்கள்
பௌர்ணமி சித்தர் யாகம் சித்தர் வழிபாடு - நமது பொகளூர் பீடத்தில்,
திங்கட்கிழமை 03.08.2020
ஆடி பௌர்ணமி

சமித்து - 500
தேன் - 500
நெய்  - 500
பன்னீர் - 250
கங்கை தீர்த்தம் - 300
அரிசி தானம் - 1600
தீவனம் - 500
பழங்கள் - 500
மலர்கள் - 1000
அபிஷேக பொடிகள் - 500
ஹோம மூலிகைகள் - 500
நவகிரக தானியங்கள் - 500
பூரணாகுதி பட்டு - 200
பூரணாகுதி செட் - 200
5 ரூபாய் கட்டி கற்பூரம் 20 Nos - 100
சாணி வரட்டி - 50 - 250

T.R. SANTHANAM
AC/NO. 500101012027531
CITY UNION BANK
THUDIYALUR BRANCH
IFSC CIUB0000560


பகவத் பாத கிரந்த ரத்னாவளி ஸ்தோத்திரங்கள் மற்றும் சுலோகங்கள் அடங்கிய அருமையான புத்தகம்

சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் அவர்கள் வெளியிட்ட ஸ்ரீ பகவத் பாத கிரந்த ரத்னாவளி ஸ்தோத்திரங்கள் மற்றும் சுலோகங்கள் அடங்கிய அருமையான புத்தகம் தபால் செலவு சேர்த்து 200 ரூபாய் மட்டுமே.. உங்களுக்கு வேண்டுமென்றால் என்னை தொடர்பு கொள்ளவும்.. அறந்தாங்கி சங்கர் 9444160161.

இந்தப் புத்தகத்துடன் ஸ்ரீ மஹா பெரியவா அருள் இசை பாடல்கள் புத்தகம் இலவசமாக அனுப்பப்படும்




ஆபத்தில் ஆசாரம் பார்த்தால் ஆண்டவனே சிரிப்பான்

*ஆபத்தில் ஆசாரம் பார்த்தால் ஆண்டவனே சிரிப்பான்*..!

ஆசாரம் ... ஆகாரமும் எப்போதும் வேண்டுமா*?

*உத்தங்க மகரிஷி*
அந்த வனாந்திரமான பிரதேசத்தில் கால் கடுக்க நடந்து கொண்டிருந்தார்.

தாகம் அவரை வாட்டி வதைத்தது.

""என்ன தாகம் இது!
உயிரே போய்விடும்போல் அல்லவா இருக்கிறது?

கண்ணன் அவரைச்
சோதிக்கிறானா?

ஆம். உண்மையிலேயே அதுதானே நடக்கிறது! முனிவர் அல்லவா அவர்

எப்போதாவது யாரேனும் முனிவர்கள் அடியவர்கள் உபசரித்தால் கனிகள பசும்பால் மட்டும் சாப்பிடுவதுண்டு மற்றபடி காற்றும் நீருமே ஆகாரம்

இன்றென்ன இப்படி ஒரு தாகம்! அங்கே ஒரு பொய்கை்கூடத் தென்படவில்லை.

உத்தங்கர் தாகத்தின் கொடுமை பொறுக்காமல் காலோய்ந்து உட்கார்ந்து விட்டார்

""கண்ணா! என் உணர்வுகளை எல்லாம் வென்று விட்டதாக மமதை கொண்டேன்.

இந்தப் பாழும் தாக உணர்வை வெல்ல முடியவில்லையப்பா! பிராணனே போய்விடும் போல் இருக்கிறதே?

கிருஷ்ணா எங்கிருந்தாவது எனக்கு ஒரு குவளை நீர் கிடைக்க நீ அருளக்கூடாதா?

வாய்விட்டுக் கதறியும் கூட அந்தக் கதறல் ஏன் அவன் செவியை எட்டவில்லை?

அஸ்தினாபுரத்தில் பாஞ்சாலியின் கதறல் கேட்டு துவாரகையிலிருந்து சேலை வழங்கியவன், இன்று தன் கதறலைக் கேட்டு ஒரு குவளை தண்ணீர் தருவதில் என்ன சிரமம்?

கண்ணனின் கருணைக் கடல் வற்றிவிட்டதா?

பாஞ்சாலியைப் பற்றி நினைத்ததும் உத்தங்கருக்கு பாரதப் போரின் போது கண்ணன் அவருக்கு வழங்கிய ஒரு வாக்குறுதி ஞாபகத்தில் வந்தது.

"அதன்படி இப்போது கண்ணன் அவருக்குத் தண்ணீர் தந்ததாக வேண்டுமே?

பரம்பொருள் வாக்குதவறுமாஎன்ன?'

உத்தங்கர் திகைத்தார்.

அவர் மனத்தில் பழைய நினைவுகள் படம் படமாய் விரிந்தன

பாரதப் போர் முடிந்து கண்ணன் துவாரகை திரும்பும் வழியில் உத்தங்க மகரிஷி கண்ணனைக்
கண்டார்.

பாரதப் போர் நிலவரம் எதுவும் உத்தங்கருக்குத் தெரியாது.

தவத்திலேயே ஆழ்ந்திருந்த அந்த மகரிஷி கண்ணனை வணங்கிவெகுபிரியமாய் விசாரித்தார்.

""கண்ணா! பாண்டவர்களுக்கும்கவுரவர்களுக்கும் இடையேநட்புறவை ஏற்படுத்தினாய்அல்லவா?"

எல்லோரும் நலம் தானே?

பீஷ்மர் எப்படி இருக்கிறார்?''

கண்ணன் பணிவோடு நடந்த அனைத்தையும் சொன்னான்.

பீஷ்மர் இறந்துவிட்டார்

கவுரவர்கள் கொல்லப்பட்டார்கள் வள்ளல் கர்ணனும் கூட மாண்டு போனான்

இப்போது தர்மபுத்திரரின் அரசு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்திகளை முதன் முறையாக கேட்ட உத்தங்கரின் கோபம் எல்லை மீறியது.

கண்ணன் கடவுள் என்ற எண்ணத்தைக் கூட அந்தக் கோபம் பின்னுக்குத் தள்ளிவிட்டது.

"என்ன சொல்கிறாய் கண்ணா?"

நீ நினைத்தால் அவர்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தியிருக்க முடியாதா?

ஏராளமான பேர் கொல்லப்படுவதில் என்ன ஆனந்தம் உனக்கு? நீ நினைத்தது தானே நடக்கும்?

அவ்விதமெனில் நீ ஏன் அனைவரையும் காப்பாற்ற
வேண்டும் என்று நினைக்கவில்லை?

இதோ உன்னைச் சபிக்கப்போகிறேன்!''

உத்தங்கர் கமண்டலத்திலிருந்து கண்ணனுக்குச் சாபம் தருவதற்காக ஒரு பிடி தண்ணீரை கையில்
எடுத்து விட்டார்.

கண்ணன் அந்தத் தண்ணீரைச் சடாரென்று தட்டிவிட்டான்

தனக்குச் சாபமளிப்பதன் மூலம்அவரது தவவலிமை குறைந்து போவதைத் தான் விரும்பவில்லை
என்றும்

அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதே தன் அவதார நோக்கமென்றும் அதைக் கருத்தில் கொண்டே செயல்பட்டதாகவும் விளக்கினான்.

மனித அவதாரத்தில் மனித சக்திக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்றும், அதை மீறித் தான்
செயல்பட்டும் கூட துரியோதனனை மாற்ற இயலவில்லை என்றும் கண்ணன் கூறியதைக் கேட்டு உத்தங்கர் மனம் நெகிழ்ந்தார்

உத்தங்கரைப் பாசம் பொங்கப் பார்த்த கண்ணன்

அர்ச்சுனனுக்குப் போர்க்களத்தில் கீதை சொன்ன போது தான் காட்டிய விஸ்வரூப தரிசனத்தை உத்தங்கருக்கும் காட்டினான்

அவர் பிரமிப்போடு விஸ்வருபத்தை தரிசித்தார்.

மீண்டும் பழைய வடிவம் பெற்ற கண்ணன்

உத்தங்கரிடம் கனிவோடு சொன்னான்.

""ஏதேனும் ஒரு வரம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள் உத்தங்கரே!''

""கண்ணா! உன் விஸ்வரூப தரிசனத்தையே பார்த்துவிட்ட பிறகு இனி வேறென்ன வேண்டும் எனக்கு?

உன்னைச் சபிக்க எடுத்த என் கை நீரைத் தட்டிவிட்டாயே! அதனால் அல்லவோ என் தவம் பிழைத்தது!

என் கை நீரைத் தட்டி விட்ட நீ எப்போது எங்கே எனக்கு நீர் தேவைப்பட்டாலும் அது கிடைக்க
அருள்வாயாக

இந்த வரமும் கூட எனக்குத் தேவையில்லை தான்
வரம் கேள் என்று பரம்பொருளே சொன்ன பிறகு அதன் கட்டளையைப் பணிவதே சரி என்பதால் இதைக் கேட்டேன்!''

கண்ணன் கலகலவென்று நகைத்தான்.

"அப்படியே ஆகுக!' என்று சொல்லி வாழ்த்திவிட்டு சென்றுவிட்டான்.

வனப் பிரதேசத்தில் தாகத்தால் தவித்துக் கொண்டிருந்த உத்தங்கர் இப்போது திகைத்தார்.

"அன்று கண்ணன் தந்த வரம் பொய்ப்பிக்குமா? ஏன் இன்னும் தண்ணீர் கிட்டவில்லை?'

அப்போது தொலை தூரத்தில் ஒரு புலையன் வருவது தென்பட்டது

கையில் ஒரு குவளை நீரோடும் சுற்றிலும் நாய்களோடும் வந்து கொண்டிருந்தான்.

""சாமி எங்க இங்க வந்து மாட்டிக்கிட்டீங்க? தண்ணீர் இல்லாத காடாச்சே இது? தாகம்
வாட்டுதா? தண்ணீர் தரட்டுமா?
வாங்கிக் குடிக்கிறீங்களா?''

கடும் தாகத்திலும் உத்தங்கரின் ஆசாரம் அவரைத் தடுத்தது.

போயும் போயும் புலையன் கையால் நீர் வாங்கி அருந்தவா?

""சீச்சி! தள்ளிப் போ!'' .. அவனை விரட்டினார்

"சாமீ, தள்ளிப் போன்னு சொன்னீங்களே?

எதைத் தள்ளிப் போகச் சொல்றீங்க? என் உடலையா? ஆன்மாவையா?

உடலுக்கே சாதி கிடையாது என்கிறபோது, ஆன்மாவுக்கு ஆண், பெண் பால் வேற்றுமை கூடக் கிடையாதே சாமி?

எல்லா உடலும் சாகப் போகிறது தானே?

சாகாத உடல் இருந்தாச் சொல்லுங்க.

அதை உசந்த சாதி உடல்னு நான் ஒப்புக்கிறேன்!''

உத்தங்கர் திகைத்தார்.

" ஒரு புலையன் என்ன அழகாக வேதாந்தம் பேசுகிறான்! யார் இவன்?

""யாரப்பா நீ?'' திகைப்போடு கேட்டார்

பதில் சொல்ல அவன் அங்கே இல்லை

அவனும் உடன் வந்த நாய்களும் சடாரெனக் காட்சியை விட்டு மறைந்துவிட்டன

""கண்ணா! என் தெய்வமே! என்ன சோதனை இது? வந்தது யாரப்பா?'' உத்தங்கர் கதறினார்

அவரின் செவிகளில் இனிய புல்லாங்குழல் நாதம் கேட்டது.

திரும்பிப் பார்த்தார்

கண்ணன் குறும்பு தவறும் புன்முறுவலோடு நின்று கொண்டிருந்தான்

""உத்தங்கரே! உமக்கு நீர் தருவதாகத்தான் வாக்குறுதி தந்தேனே தவிர யார் தருவார்
என்று உத்தரவாதம் தரவில்லையே

நாய்களோடு கீழ்ச்சாதி என நீர் எண்ணும் புலையன் வடிவில் வந்தவன் யார் தெரியுமா?

தேவேந்திரன் அவனிடம் உத்தங்கர் என் பக்தர் தாகத்தால் வாடுகிறார் அவருக்கு நீரையல்ல
அமிர்தத்தையே கொண்டு கொடு என்றேன்

அவன் மனிதர்களுக்கு அமிர்தம் கிடைப்பதை விரும்பவில்லை.

புலைய வடிவில் செல்கிறேன் அவர் ஏற்றால் வழங்குகிறேன் என்றான்

அவன் எதிர்பார்த்த படியே நீர் அவன் உருவைக் கண்டு வெறுப்படைந்தீர்.

அமிர்தத்தை இழந்துவிட்டீர்!''

உத்தங்கரின் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது.

""உத்தங்கரே! கீழச்சாதியினர் என்று உங்களைப் போன்றோர் கருதும் மனிதர்களால் தானே உலகம் நடக்கிறது?

உழவுத் தொழில் செய்வோர் மண்பாண்டம் செய்வோர் ஏன் கழிவை அகற்றுவோர்
இவர்களெல்லாம் தொழிலை நிறுத்திவிட்டால் உலகம் என்ன ஆகும்

வர்ணாஸ்ரமம் என்பது தொழில் சார்ந்த பிரிவே தவிர பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை
என்பதை ஏன் நீங்கள் உணரவில்லை

கீழ்ச்சாதியினர் என்று உங்களைப் போன்றோர் ஒதுக்கும் மனிதர்கள் செய்யும் தொழில் தானே
அமிர்தம்

அந்த அமிர்தத்தால் தானே உலகம் அழியாமல் நிலையாய் நிற்கிறது

அவர்கள் இல்லாவிட்டால் என்றோ உலகம்அழிந்திருக்குமே ஒரு பிரிவினரை ஒதுக்கினால் அவர்கள் மூலம் கிடைக்கும் அமிர்தத்தையே அல்லவா உலகம் இழக்க நேரிடும்?

உத்தங்கர் கண்களைத் துடைத்துக்கொண்டார்.

பக்திப் பரவசம் நிறைந்தவராய்,

" *கண்ணா*! நீ அர்ச்சுனனுக்குச் சொன்னது அர்ச்சுன கீதை

எனக்குச் சொன்னது உத்தங்க கீதை

இந்த கீதையின் உண்மையை உலகம் உணரட்டும்

பிரபோ! என் மனதில் தெளிவு பிறக்க உன் ஆசி தேவையப்பா!' என்றார்.

கண்ணனின் கரம் அவருக்கு ஆசி வழங்கியது. பின் அவனது உருவம் அவர் #நெஞ்சுக்குள் புகுந்து
மறைந்தது.

*ஆபத்தில் ஆசாரம் பார்த்தால் ஆண்டவனே சிரிப்பான்*.

தொகுப்பு:
ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்
🦅 சர்வம்🌎 விஷ்ணு மயம்

Tuesday, 28 July 2020

சிந்தை ஆசி நூல் – 3 29/07/2020, புதன்கிழமை, சார்வரி வருடம் ஆடி மாதம் 14 ஆம் திகதி, விசாகமும் அனுஷமும் கூடி நின்ற நேரம் தசமி திதி


சிந்தை ஆசி நூல் – 3

29/07/2020, புதன்கிழமை,
சார்வரி வருடம் ஆடி மாதம் 14 ஆம் திகதி, விசாகமும் அனுஷமும் கூடி நின்ற நேரம் தசமி திதி

அகத்தியன் விளக்கம்

அகத்தில் இருப்பவன்

அகத்தில் தீயாக இருப்பவன்

உடலில் உயிராக இருப்பவன்

ஈசனின் சிற்றம்பல இயக்கம்

அகத்தில் தீயாக இருந்து உயிரை இயக்குபவன்

உயிர் சூட்சுமத்துக்கு காரணகர்த்தா

உயிர் உடலில் புக வகை செய்பவன்

பாப புண்ணிய கணக்குகளை உயிரில் பதிவு செய்பவன்

விதியை செய்பவன்

உயிரை உடலில் இருந்து பிரிக்கும் காலத்தை நிர்ணயிப்பவன்

கால சக்கரத்தை சுழல செய்பவன்

ஓம்காரத்தில் ஒடுங்குபவன்

அணைத்து அண்டங்களையும் ஓம்காரத்தால் இயக்குபவண்

சீவனில் உள்ள சிவன்

உருவத்தில் அவனே சிவன்



பரமன் விளக்கம்

பர - பரவெளி பரமசிவன் பரமேஸ்வரன் ஆகிய தன்மைகளை கொண்டிருப்பவன்
ரம - ராமன் என்று பொருள் கொள்ள வேண்டும் - ராமனின் தன்மைகளை கொண்டிருப்பவன் - பெருமாள் ஸ்வரூபம்
பரம - பிரமன் என்று பொருள் கொள்ள வேண்டும்

இவ்வாறு முமூர்த்திகளின் ஒருங்கிணைந்த ஸ்வரூபமாக விளங்கும் சித்தன் - பரம சித்தன்

பரமன் என்றால் பராக்ரமம் உடையவன் என்று பொருள்படும்

பொருள்படும்படி அவனது பராக்ரமங்கள் எண்ணற்றவை

பர + = பரம்பொருள் மனித நிலையில் மண்ணில் வந்து அவதரித்த நிலை

பரம் +   = பரம்பொருள் அகத்தியன் வடிவம் என்றும் பொருள் கொள்ள வேண்டும்

பரம = ப்ரேம என்றும் கொள்ள வேண்டும் - அணைத்து ஜீவா ராசிகளின் மீதும் ப்ரேமம் கொண்டவன்


தேன் விளக்கம்


மிகவும் உயர்ந்தது தேன்
- மிக சிறந்தது அமிழ்தம் தமிழ் மங்களம்  இறவா நிலை சிரஞ்சீவித்துவம்


அதனால் தான் உயர்வான இடத்தில் தேனீ கூட்டில் தேன் இருக்கும்
- நமது உடலில் தலை உயர்வான இடத்தில் இருக்கும். அதன் மத்தியில் தேன்கூடு ஒன்று இருக்கும்.

தேன் சிறுக சிறுக சேர்க்கப்படும்
- நமது புண்ணியங்கள் பல பிறவிகளாக சிறுக சிறுக சேர்க்கப்பட்டு சுழுமுனையில் இருப்பு வைக்கப்படும்

தேன் அருமருந்தாகும்
- சுழுமுனையில் உள்ள அமிழ்தமானது அணைத்து நோய்களையும் தீர்க்கும் - அணைத்து வரங்களையும் அளிக்கவல்ல கற்பக தரு ஆகும்

தேன் கெடாமல் அப்படியே இருக்கும்
- நமது புண்ணிய பலம் அழிவற்றது, சுழிமுனை ஆற்றல் பெருந்தன்மையுடையது. எந்நாளும் வற்றாது.

தேனில்  பொருட்கள் இட்டு வைத்தால் கெடாமல் அதே தன்மையுடன் பல காலம் இருக்கும்
- நமது வீடாகிய கூட்டில் - அதாவது உடலில் தென் அமிழ்தம் சுரந்தால் அது பரந்து உடலெங்கும் கலந்தால் உடலுக்கு அழிவென்பதே இல்லாது போகும்

நல்ல தேனை எறும்புகள் உண்ணாது
- இத்தகைய சிறப்பு வாய்ந்த நமக்குள்ளேயே இருக்கும் ஆற்றல்களை மனம் விரும்பாமல் போலி மாயா மாயை யிலேயே சிக்கி நல்ல சக்திகளை நாடாமல் மாயையில் இருக்கும்

நல்ல தேன் சிறிது கசப்பாகவும் இருக்கும்
போலிகளை போல மாயை இல்லாமல், உண்மை சத்தியம் என்பது கவர்ச்சி விளம்பரம் இல்லாமல் நிலையாக நிலைத்து நிற்கும். மாயை போல ஆடம்பரம் பகட்டு இருக்காது

தேன் தங்க நிறத்தில் ஜொலிக்கும்
ஆற்றல் வெளிப்படும் பொது ஜோதி உள்ளிருந்து சுடர் விட்டு பிரகாசிக்கும்


எச்சில் விளக்கம்


நூல் ஓதுபவன் பற்றற்று அசைவற்று இன்பம் துன்பம் கடந்த நிலையில் தன்னிலையில் நின்று சமநிலையில் நடுவு நிலையில் எந்த பக்கமும் சாயாமல் இருக்க வேண்டும். ஒரு பொருள் கசக்கினால் கசக்கும் நிலையில் உள்ள பொருளை கையில் வாங்கி எப்படி வாங்கப்பட்டதோ அப்படியே எந்த வித மாற்றமும் இல்லாமல் அப்படியே கொடுக்க வேண்டும். வாங்குபவர் கைகள் சுத்தமாக இருந்தால் தான் அது சாத்தியம். கைகள் சுத்தமாக இல்லாமல் கறையாக இருந்தால் அந்த கறை கொடுக்கும் பொருளில் ஒட்டிக்கொண்டால் இறைவனை குறை கூறுவது ஏனோ? சுவடி ஓதும் இடங்களில் நித்தமும் பூஜை புனஸ்காரங்கள் செய்து மனம் அகத்தியதில் லயிக்க லயிக்க அசுத்தங்கள் களையப்பட்டுக்கொண்டே இருக்கும். அசுத்தங்களே சேராத நிலையில் மீண்டும் மீண்டும் பூஜை தொடர தொடர சுத்தமான செப்பு பாத்திரத்தை மேலும் துலக்க துலக்க அது ஜொலிப்பதை போல நூல் வாசிப்பவனும் ஜொலிப்பான். முதலில் அசுத்தத்தை களைய வேண்டும், பிறகு தான் ஜொலிப்பு என்பது வரும். இதை புரிந்து கொள். ஒரு வாக்கை பெரும் போது அதன் சுத்த தன்மையை தீர்மானிப்பது இதழ் ஓதுபவனின் மனத்தூய்மையே. அகத்தியனை தொழும் இடத்தில அகத்தியனை குருவாக இருந்து நடத்தும் இடத்தில் மனத்தூய்மை என்பது எள்ளளவும் என்றுமே குறையாது. இதழ் ஓதுபவனுக்கு யோகம் என்பது முக்கியம். பக்குவம் என்பது அதி முக்கியம். மனம் அடங்கிய பெரும் பக்குவப்பட்ட நிலையில் ஒருவன் இதழ் ஓத வேண்டும். இல்லையேல் அவனுள் இறைவனால் சுரக்கும் தேன் அவன் வாய் வழியாக எச்சில் படமால் வர வேண்டுமானால் மனதிடம் வேண்டும் நாவில் ஒருபொருளை வைத்தால் கூட எச்சில் சுரக்காத நிலை போல அருள் கேட்பவன் எத்தகைய நிலையில் இருந்தாலும் அவன் பொருட்டு இதழ் ஓதுபவன் தன மனதை கொண்டு ஆராயாமல் அவனுக்குண்டதான தேனினை அப்படியே நிறம் சுவை மாறாமல் அளவு குறையாமல் கொடுக்க வேண்டும். தேனில் மேலும் சுவைக்காக ஏலக்காய் சேர்க்கலாம் நெல்லிக்கனி சேர்க்கலாம், அதில் தவறேதும் இல்லை என்று இவன் எண்ணி விட கூடாது. தபால் காரர் உள்ளே என்ன இருக்கும் என்று  வேண்டிய அவசியமில்லை. தபாலை நல்ல முறையில் கொண்டு சேர்த்தால் அதுவே போதுமானது. செய்து வாசிப்பவன் தானும் ஒரு வரியை சேர்த்து சுவைபட கூறுவதாக எண்ணி செய்திகளை மாற்றம் செய்து கூற கூடாது. ஒருவன் ஆசானை நம்பி வரும் போது அவன் எதுவும் ஆராயாமல் வருவது அனைத்துமே பரம்பொருள் வாக்கியம் என்று நல்ல நம்பிக்கையுடன் வருவான். அதனால் அந்த நம்பிக்கையை யாரும் குலைக்க கூடாது. பரம்பொருள் வாசகம் என்பது உண்மை. அந்த உண்மை நிலைக்க எம் வழி வரும் அணைத்து ஆசான்களும் பாடுபடவேண்டும் என்பதே எனது வாக்கியமாகும். மேலே உள்ள இந்த வாக்கு என் மகனின் மனதில் இருந்து உதித்தாலும் இதில் எந்த கலப்படமும் இல்லாத அகத்தியம் என்பது உண்மை. இதுவே அதற்க்கு உதாரணம். ஆசிகள் சுபம்.

உள் எழுக்களை கொணர்ந்தவன் இவண்

அகத்தியன் சந்தானம்
இருப்பிடம் - அகத்தியததில் இருந்து.