Saturday, 30 May 2020

நமது ஆசிரம விளக்கம்

*இன்று பொகளூர் அகத்தியர் ஜீவ அருள்நாடி சித்தர் பீடத்துக்கு பயணம்*

குருவருள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றெல்லாம் பீடத்துக்கு போகிறோமோ அன்றெல்லாம் மிக நல்ல நாள் புண்ணிய நாள், சிறப்பான நாள், அய்யன் இருக்குமிடம் நாம் தொடர்ந்து செல்ல செல்ல, அய்யன் நாம் இருக்குமிடமான இந்த கூட்டுக்குள் வந்திருந்து வழிகாட்டி வழிநடத்தி, காத்து நின்று, அருள் பொழிந்து, ஆட்கொண்டு,  அமர்ந்து அருள் பாலிப்பார் என்பது திண்ணம்.

அய்யன் அருளால் விரைவில் இங்கோர் ஆலயம் அமைய வேண்டும். அதற்க்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஆலய தொண்டில் ஈடுபட்டு வழிவழியாக நம்  வம்சம் அனைத்தும் அய்யன் அருட்கடாட்ச பார்வையில் தழைத்தோங்க வேண்டும்.

ஆன்மீக இந்த பூமியில் தழைக்க தகுந்த இடம் வேண்டும்.

கோயில் கட்டி சாமியை அங்கே எழுந்தருளப்பண்ணுவதென்பது வேறு, இறைவன் குடி கொண்டுள்ள இடத்தில் கோயிலெழுப்பவதென்பது வேறு.

நாம் செய்வது இரண்டாவது ஆகும்.

சுயம்பு லிங்கத்தின் மெல் கோமாதா பால் பொழிவதும், அங்கே அதை கண்டு இறை ஆலயம் எழுப்புவதும் இரண்டாம் வகை. சரித்திரத்தில் அவ்வகை ஆலயங்கள் பல உள்ளன.

ஆனால் இறைவன் அமர்ந்து வாக்காக வெளிப்பட்டு. சிஷ்ய கோடிகளை உருவாக்கி பரிபாலனம் செய்வது என்பது மிக பெரிய விஷயம்.

நமது பீடம் என்பது சாதாரண பீடம் அல்ல. இந்த கலி காலத்தில் ஒரு சிறு நதியோரம், அகத்தியர் இன்றும் ஆசிரமம் அமைத்து வரும் பக்தர்களுக்கும் சிஷ்யகோடிகளுடனும் உரையாடி பேசி அறிவுரை கூறி சீடர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு நன்னெறிகளை போதித்து சித்தர்களாக உருவாக்கும் உண்மையான சித்தாஸ்ரமம்.

இதெல்லாம் யாருக்கு புரிகிறது.  நீங்கள் செல்லும் இடம் அய்யன் அமர்ந்துள்ள ஆசிரமம். அங்கே பணி செய்பவர்கள் ஆசிரம சீடர்கள். எவ்வளவு புனிதம்...


Friday, 29 May 2020

ஞானப்பாடல்

இகமொடு பரமனெவே நின்றாடும்
அவனருளால் அனைத்துமே இவனாகும்
பரலோக வாழ்வுமிங்கே நனவாகும்
இதிலிதற்கு இடங்கொடுப்பாய் புகழ்மைந்தனே
தாமரைமேல் அமர்ந்துள்ள அல்லிகையவள்
மணமுவந்துதான் உரைப்பாள் மேலும் பாரே
காணுகின்ற காட்சியெல்லாம் பிம்பமாகி
பிம்பமாகி நின்றதெல்லாம் எழுந்து ஆடி
பொறுளுனர்த்தி அருள்நிறையாய் நிறவிநிற்க
அருளுலகில் கண்ட காட்சி ஆட்சி செய்ய
பற்றி நீயும் நடந்திடுவாய் பாரில் நீயே
கண்டதொரு காட்சிதன்னை நினைவில்கொண்டு
வரும் பகலில் அதிசயங்கள் பலவும் காண்பாய்
பொருளுலகில் அருள் காட்சி மாயையாய் நிற்க
நிலவுலகில்   நீண்டு வாழும் ரகசியமறியார்
பொய் கூறி அற்பம் பேசி பொழுதும் போக்கி
இருக்குமிடமறியார் செல்லுமிடமறியார்
மரணமே வாழ்வின் நியதியெனக்கொண்டு
பாழ்குழிதனிலே விழத்துணிந்து பகுத்தறிவு பேசி த்திரிவார்
எத்திக்கும் பரவி நிற்கும்பரமனை காணார்
வீண் பிறவி எடுத்திங்கு இயம்புகிறாரே
தானத்துள் சிறந்த தானங்கள் பலவிருக்க
கிடைத்தரிய மனித பிறவியை தானஞ்செய்து
ஐந்தறிவு உயிர்களுக்கு உயர்வை தானம் அளித்து
தாம் கீழிறங்கி அல்லல்பட்டு, நிலையறியாமல்
இன்னும் எத்தனை பிறவியோ கீழேமேலே சென்றுகொண்டு
வீண் கதைகள் பேசி த்திரிந்து
உத்தமர் போல காட்டிக்கொண்டு
உழல்வோர் கோடானுகோடி
தவப்புதல்வன் நீயுமே இந்நிலை மாற்ற
தரணியிலே  வந்துதித்தாய் அறிந்துகொள்ளே
நிலை மாறும் இவ்வுலகில் நிலையாய் நீயும்
நிலைத்து நிற்க வழியும் சொன்னேன்
அறிவாய் நீயே
நீயே ஆத்மன் உயிரே கடவுளெனவே உணர்ந்துகொண்டாய்
பொருளற்று பிதற்றுவோர் தம் சபையில்  நீயமர்ந்து
எனை ப்பேசி பாடிப்புகழ்ந்து பகுத்து நீயும்
உண்மைதனை உரக்கவுரைத்து
மன்னர் போல வாழ்வதற்கு
சித்தர் வழி ஒன்றதுவே காட்டிடுவாய்
பித்தம் நீங்கி நிலைவாழ்வு நிலைபெறவே
ஞானக்களஞ்சியத்தை நீயவிழ்ப்பாய் சபைநடுவே
பார் போற்றும் பரமன் புகழ் போற்றி நீயூம்
வழிகாட்டி வழி நின்று துணையாக
புகழுலகம் செய்திடுவாய் அகமகிழ
அகமகிழ ஜெகத்தினிலே சிகரமேறி
உயர்நிலையை உயர்ந்து நின்று
உய்த்துய்வித்து உலகெங்கும் வலம்வந்து
ஆழ்ந்தனுபவித்து அதில்துய்த்து
ஆரம்பமும் முடிவும் ஒன்றெனவே கண்டுகொண்டு
வரமதுவும் நீயேயாகி சிவஜோதியிலேகி
பரப்ரம்ம பரமானந்த பரஞ்சோதியாய் பறந்துவிரிந்து
பால்வெளி தாண்டி பலகிரகங்கள் தாமும் படைத்து
தானுமாலயனாய் தன்னிகரற்ற தலைவனுமாகி
இகபரஜோதியாய் பவனி வந்து
அணைத்துமாகி இருந்து
ஒளிர் விடும் நிலையே உன் உள் நிலையே
உள் சென்றால் வெளி கிட்டும்
வெளியிலேயே நின்றால் இருளில் மூழ்கும்
அருட்பெருஞ்சோதியே ஆருயிர் என்றுணர்ந்து
திருவை உண்ணுடலில் ஆராதனை செய்து
அழியாத்திருமேனியனாய் ஆழியிலே வலம் வந்து
அழியாதிருப்பாய் என்மகனே நீயும்
உன் குடியும் உன் வம்சமும் வழிவழியாய்
பற்றி நின்று பாரினிலே தருமந்தழைத்து
என்றென்றுமாய் காலசக்கரமாய் நீநின்று
சுழன்றோடி இயங்கும்பணிசெய்து
இருப்பாகவே நீ இருப்பாய் சிரஞ்சீவியாக என்றென்றும்


இவநுடற்ப்பெயர்
- தி. இரா. சந்தானம்

இவனாத்மனின் இடமடையாளம் அகத்தியம்.

தஞ்சை பெரியகோயில் ஸ்ரீவாராகி அம்மன்🙏

தஞ்சை பெரியகோயில்
ஸ்ரீவாராகி அம்மன்🙏


ஏன்னுள்ளெழுந்த பாடல்

ஒரு பாடல் மனதில் வந்துதித்து குதித்தெழுந்து எழுத்துருவாய் உருப்பெற்று ஏழுந்து நின்ற இடம் கீழே
👇👇👇👇👇👇👇

கருமுகிழ்தண்ணில் சிறுமுகில் எதுவோ
வானவர் கண்ட மருந்தோ
உலவிடும் காலை உடைக்குமிடமெதுவோ
செவிமடித்திடுமோ செய்வினை தீர
விழிமறுகி பொருளுருகி பரவெளியில் பறந்திடுமோ நிலைத்திடிமோ
அருளுலகில் இவன் நுழைய
பரகதியை இவன் அடைய
கரமதனில் காலுயர்த்தி நின்றாடும் அம்பலத்தே
அகமகிழ்ந்து அருளுலகில் இவனடைந்த நிலையை
எடுத்தியம்ப எவர்வல்லர்
சடுதியினில். வந்துதிக்கும் சங்கரனார் திருவடித்தான்
மயிலேறி அவன் பறக்க தமிழ் சிறக்க அமுத மொழியாய்
வரும் திங்கள் செவ்வாயில் வந்துதிக்கும் வேலவனே
அருள்தனயே தரும் நீரும் திருநீறும் சேர்ந்ததுவே
பொருளுலகில் அகப்பட்டார் கேள்வியென்ன
பலத்திசைகள் பலவகைகள் பலவாறெண்ணி
போகுவோர் தன்னில் உட்புகுத்தி
எரிதனிலே வேகுமது காயம்
இனிமேல்தான் மற்றவையும் ஆரம்பமாச்சே
கயல்விழியும் தனி உடலாய் ஒன்றி நின்று
மானோடு கூடி மக்களுமாகி
சிக்கலுமாகி சிலிர்த்திட்ட வாழ்வு தன்னை
உரைத்திட்ட சம்பவங்கள் தொகுப்புமாகி
கலந்திட்ட கனலோடு இருப்புமாகி
எடு வேலை இவனுலகில் நித்தமுஞ் சொன்னேன்
பகலிரவு நீக்கமுற பால்வெளியில் பறந்திட வேண்டும்
கயிலையில் வாழுமென்னீசன்
திருத்தாள் போற்றி பணிந்திட்டால்
ஜெகமதுவும் சுருங்கியுள்ளே கைக்குள்ளடக்கம்
பாரினிலே ஜீவ ஜோதி ஒன்றே போதும்
பல நிலைகள் கடந்துமே சேர  வைக்கும்
திகம்பர ஜோதியதை கண்டுநீயும்
திக்கெட்டும் முறைகண்டும் வகுத்துப்பாரும்
அருள்நிறையே அருள்நிறையே அருள்நிறையே

இவநுடற்ப்பெயர்
- தி. இரா. சந்தானம்

இவனாத்மனின் இடமடையாளம் அகத்தியம்.

Thursday, 28 May 2020

காந்தாரிக்கு கிருஷ்ணர் உபதேசம்

காந்தாரி

“நீ கபட நாடக வேஷதாரி என மீண்டும் ஒருமுறை நிரூபித்தாய் கண்ணா!  நீ

 பரசுராமனாகப் பிறந்து குடித்த க்ஷத்திரிய இரத்தம் போதவில்லையா?

நீயே உலகின் முழு முதல்வன் எனினும் இப்போரைத் தடுக்கவில்லையே? மாறாக அதைத் திறம்பட நடத்தி என் மக்களை மட்டும் அழித்தாயே? உனக்கு இது தகுமா?

 ஒரு பிள்ளையைப் பெற்றவளே அதை இழந்தால் வரும் சோகம் சொல்லில் அடங்காது. உன் அன்னைக்கும் அது நன்றாகவே தெரியுமல்லவா? நீ பிறக்கும் முன்னமேயே ஆறுபேரைக் கொன்றுவிட்டுப் பிறந்தவனாயிற்றே! உனக்கு எங்கே ஒரு அன்னையின் வலி தெரியப் போகிறது.

இப்போது நான் உனக்குச் சாபமிடுகிறேன்! எப்படி என் சந்ததிகள் என் கண் முன்னே அழியும் கொடுமையை நான் கண்டு நொந்தேனோ அதே போல் நீயும் உன் வருஷ்ணி குலமும் சர்வ நாசம் அடையப்போகிறீர்கள்!

உன் கண் முன்னேயே யாதவர் இரத்தம் அருவி போல் வழிந்தோடப் போகிறது!  இன்றிலிருந்து 36ம் வருடம் அது நடக்கும்! இது என் பதிவ்ரதா சக்தியின் மேல் ஆணை!”

என்று மகாசபையில், அவையோர் அனைவரும் கல்லாய்ச் சமைந்து, நா வறண்டு, பேச்சு மூச்சின்றி அதிர்ச்சியில் உறைந்து போகும் வண்ணம் கிருஷ்ணனைச் சபித்த பின்பு காந்தாரி தன் அந்தப்புரத்துக்குத் திரும்புகிறாள்.

லோகநாயகன், ஜகத்ரக்ஷகன், புருஷோத்தமன் என தானே தன் மனக்கோயிலில் அனுதினமும் வழிபட்ட பெரும்தெய்வத்துக்குத் தானே சாபம் கொடுத்தேனே என்று ஒரு பக்கம் வேதனைப்பட்டாள்.

 எனினும், அவள் கோபம்  அவளுக்கு நியாயமாகவே தோன்றிற்று. கொடும் போர் முடிந்து சிறிது அமைதி திரும்பியபின், இப்போதுதான் சில்லென காற்று வரத் தொடங்கியுள்ளது போலும் என நினைத்துக்கொண்டே தூங்கிப்போனாள்.

திடீரென எதோ சப்தம் கேட்க, தெய்வீக நறுமணம் அறையில் பரவ கண் விழித்தாள்.

 கிருஷ்ணன் கையில் குழல், துளசி மாலை மற்றும் பீதக வாடையுடன் முகத்தில் எப்போதும் இருக்கும் மந்தகாசப் புன்னகையோடு அருகில் நின்றிருந்தான். 

ஒரு நொடியில் கௌரவர் நூற்றுவர் முகங்களும் அவள் மனக்கண்ணில் மின்னலென வந்து போயின. கோபம் மீண்டும் கொப்பளிக்க

“எங்கே வந்தாய்? இன்னும் யார் உயிர் வேண்டும் உனக்கு? வாய்க்கு வாய் நான் உன் பக்தை எனச் சொல்வாயே? இது தான் உன் பக்தரக்ஷண லக்ஷணமா?”

“காந்தாரி இன்னும் கோபம் தீரவில்லையோ?”

“என் நூறு புதல்வர்கள், கோடி வீரர்கள், பல கோடி குதிரை, யானை என இவ்வளவு பேரழிவு தேவையா கிருஷ்ணா? நீயே இதைத் தடுத்திருக்கலாமே? உன்னால் முடியாததா என்ன?

“என் முடியாது? தடுத்திருக்க முடியும். அல்லது அனைத்தையும் என் ஸங்கல்பத்தாலேயே நினைத்த மாத்திரத்தில் அழித்திருக்க முடியும்”

“பிறகு ஏன் செய்யவில்லை?

“காந்தாரி! நீ என் பரம பக்தை. அதோடு சிறந்த பதிவ்ரதையும் கூட. அதனால் உனக்கு பதில் சொல்ல நான் விரும்புகிறேன். கேள்!

 இந்த யுகம் பாரதப்போரோடு முடிகிறது. ஸம்பவாமி யுகே யுகே என்பது படி, புது யுகம் பிறக்க, பழையது அழிய வேண்டும். பாசம் எனும் கருமேகம் உன்னை மட்டுமல்ல உன் கணவனின் கண்களையும் மறைத்தது.

அந்த மாயத்திரை இன்னும் விலகவில்லை. அந்தகம் நிறைந்த இந்த மாளிகையில் ஒரே ஒரு அகல் விளக்கு விதுரன் மட்டுமே. அவன் மட்டுமே என்னை பூரணமாக அறிவான்”

“கிருஷ்ணா! உன்னை நான் இன்று அறிந்து கொண்டேன். நீயும், விதுரனும்  பக்ஷபாதம் கொண்டவர்கள்”

“காந்தாரி! என் பக்தனை நிந்தித்தால் வரும் பாவம் என்னை நிந்திப்பதினும் கொடியது. அதனால் தான் இன்று உன் சாபத்தை நான் ஏற்றுக்கொண்டேன். உன்னுடைய இந்த கேள்விக்கு நான் விடைகூறுமுன்  நீ பதில் சொல்.

முதலில் ஏன் நீ உன் கணவனைச் சபிக்கவில்லை? சக்கரவர்த்தி நினைத்திருந்தால், இந்தப் போரே நிகழ்ந்திருக்காது.

 பாண்டவர்கள் நியாயமாகக் கேட்ட ஆட்சியை ஏன் அவர் கொடுக்க விரும்பவில்லை? ஆரம்பத்திலிருந்து துரியோதனை பாபியாக வளரவிட்டதே அவரது கண்மூடித்தனமான பிள்ளைப்பாசம் அல்லவா?

நீ பதிவ்ரதை என்பது உன் கணவனுக்கு! ராஜமாதாவாக இந்த நாட்டு மக்களின் நலனை நீ ஒரு கணம் எண்ணிப்பார்த்திருப்பாயா?

பிறகு, பீஷ்ம, கிருப, துரோணாதிகளை ஏன் நீ சபிக்கவில்லை? தன் சஹோதரர்களின்  தர்ம பத்தினியையே பல்லாயிரம் பேர் முன்னிலையில் துரியோதனனும், துச்சாதனனும் மானபங்கப்படுத்திய பின்பும் மௌனம் சாதித்தனரே?

 மேலும், விபீஷணன் போல விதுரன் மட்டுமல்லவா மனசாட்சிக்குப் பயந்தான்? மற்றோர் எல்லாரும் செஞ்சோற்றுக்கடன் என்ற போர்வையில் துரியனுக்காக போரும் புரிந்தனரே? பெரியவர்களைச் சபிக்க முடியாது என்ற எண்ணமோ?

உன் மகன்?  தன் சகோதர்களையே  அடிமைகளாக்கி, அவமானப்படுத்தி அவர்களின் மனைவியையே “மடியில் வந்து அமர்வாய்” என விளித்து மாபாதகம் செய்தானே?

மேலும்,  “ஜ்யேஷ்ட ப்ராதா பித்ரு சமான:” என்று உனக்குத் தெரியாதா? தன் 99 சகோதரர்களுக்குத் தந்தையாக இருக்க வேண்டியவன் தன் சுயநலத்திற்காக அவர்களைப் பலி கொடுத்தானே? அவனை ஏன் சபிக்கவில்லை?

 பிள்ளைப்பாசம் அறிவுக்கண்ணை மறைத்ததோ? நீ இப்போது கேட்கும் நியாயம் அன்று எங்கே போனது? அவனைக் கேட்டாயா?

ஏன் சகுனியை சபிக்கவில்லை? அவன்தான் உண்மையில் உடன்பிறந்தவள் குடும்பத்தை கூற்றின் மறுஉருவம் போல் சர்வ நாசமாக்கியவன்.

“கிருஷ்ணா! சகுனி என் சகோதரன். மேலும், நீ மேற்கூறிய அனைவரும் என் உற்றார் உறவினர் ஆச்சாரியர்கள் அல்லவா?

“பார்த்தாயா காந்தாரி! அறியாமை உன் புத்தியை மட்டுமல்ல பக்தியையும் மறைக்கிறது. அப்போது நான் யார்? உனக்கு   சொந்தமில்லையா?  பாண்டவர் என்னை சொந்தமெனக் கொண்டனர். அதனால் பிழைத்தனர்.

“கபடனே! குந்தி உன் சொந்த அத்தை. அதனால் தான் ஒருதலை நீதியாக பாண்டவர் பக்கம் நின்று என் குலத்தை வேரோடு சாய்த்துவிட்டாய்”

“பேதையே! அதுவல்ல நிஜம். உலகில் நல்லோரெல்லாம் என் சொந்தம். நான் அவர்களுக்குப் பூரணமாய் சொந்தம். அவர் மனமே நான் நித்யவாசம் செய்யும் வீடு.

“சரி அதைவிடு காந்தாரி! பாண்டவர் அழிந்து துரியோதனன் பட்டம் கொண்டிருந்தால் உனக்கு மகிழ்ச்சி தானே ஏற்பட்டிருக்கும்? அது சுயநலம் அல்லவா? அதற்கு என்ன செய்தால் தகுமோ அதை துரியோதனாதிகளைச் செய்ய விட்டாயே?

“கிருஷ்ணா! ஒரு தாய் தன் மக்கள் நன்றாய் இருக்க வேண்டும் என நினைப்பது தவறா?”

“அப்படியானால் நான் இந்த உலகுக்கெல்லாம் தாயன்றோ! எனக்கும் சுயநலம் இருக்கக் கூடாதா? உலகம் முழுமையும் என் சொத்து. அதை நல்விதம் ஆத்தலும், காத்தலும் என் பொறுப்பு. அதையே செய்தேன்”.

என் அவதார நோக்கை நிறைவேற்ற இந்தப்போர் ஒரு சாக்கே. ஆனால் ஏன் அதை தனி ஒருவனாக நான் செய்யவில்லை? ஏன்  என எண்ணிப்பார்.

“என் 100 பிள்ளைகளையும் கொன்றுவிட்டாயே? இனி நான் எண்ணிப்பார்க்க என்ன இருக்கிறது?

“அப்படியில்லை. நான் கர்மேந்த்ரியங்களுக்கு அப்பாற்பட்டவன் எனினும், சில விதிமுறைகளை நான் பின்பற்றுகிறேன்.

கர்மா – அவரவர் முன்வினைப் பயன்கள்
பகுத்தறிவு – நல்லவை, தீயவைகளை அறிந்து கொள்ளும் திறன்.

இயற்கையின் கட்டுப்பாட்டிலுள்ள  இவ்விரண்டிலும் நான் தலையிடுவதில்லை”

மேலும், இராமனாக ஏன் காடுகளில் திரிந்து வானரர் உதவியோடு இராவணனை அழிக்க நான் சிரமப்பட்டிருக்க வேண்டுமென எண்ணிப்பார். நான் உயர்வற உயர் நலம் உடையவன். அதை யாருக்கும் விளம்பரப்படுத்த அவசியமில்லாதவன். ஆனால் என் பக்தர்கள்? பக்தர்களுக்கு ஏற்றம் அளித்தல் என் கடமை.

போரில்லாவிட்டால் அபிமன்யு எனும் வீரன் சரித்திரத்தில் எவ்வாறு இடம் பெற்றிருப்பான்? கர்ணனின் கொடைத்திறனும், செஞ்சோற்றுக்கடன் தீர்த்த தீரமும் எப்படி விளங்கியிருக்கும்? பீஷ்மனின் வைராக்யம் எப்படி மற்றவர்க்கு ஒரு உதாரணமாக அமைந்திருக்கும்?

மறுபுறம், அஸ்வத்தாமன், ஜயத்ரதன், அவ்வளவு ஏன்? உன் சகோதரன் போன்ற கீழ்மக்களிடம் இருந்து பிறருக்குப் பாடம் புகட்டவேண்டியது என் கடமையல்லவா?

“எனினும், எங்கள் பக்கம் நீ இருக்கவில்லையே கண்ணா?”

“அதற்கும் ஒரு வாய்ப்பு வந்ததே காந்தாரி. உன் மகன் தான் நிராயுதபாணியான நான் வேண்டாம் என்று என் சேனைகளை எடுத்துக்கொண்டான். மேலும் விதுரனின் வடிவில், அவன்  திருவாக்கில் நான் உங்கள் கூடவே இருந்தேனே? நல்லோர் உருவில் என்றும் நான் இருப்பேன். என்னை அறிய நீங்கள் முயலவில்லை. உன் கனவில் இன்று நான் வர வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒரு கணம் நினைப்பவர்க்கே ஓடி வருபவன் நான். நீ என் பக்தை.

“கிருஷ்ணா! உன்னையே சபித்த என்மேல் இவ்வளவு உனக்கு அன்பும் கருணையுமா உள்ளன?”

“காந்தாரி! உன் சாபத்தை நான் ஏற்றுக்கொண்டு உன்னை பெரும் பாவத்திலிருந்து காத்தருளினேன்”

“பெரும் பாவமா? அது என்ன கிருஷ்ணா?”

“ஒருவேளை நீ பாண்டவர் யாரையாவது சபித்திருந்தால், பாகவத அபசாரம் எனும் படுகுழியில் வீழ்ந்திருப்பாய். என்னை நிந்தித்தலிலும் அது மிக மிகக்கொடுமையான பாவம்”.

“கிருஷ்ணா! ஜனார்தனா! என் அறிவுக்கண்களைத் திறந்தாய். ஆனால் என் சக்திக்கு ஏற்ற உன்னைச் சரணடையும் ஒரு உபாயம் சொல்வாயா?”

“கலங்காதே! பதினெட்டு அத்தியாயங்களாய் அர்ச்சுனனுக்கு உரைத்ததை ஈரடியில் உனக்குச் சொல்கிறேன்.

அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோக்க்ஷேமம் வஹாம் யஹம் ||

“நீயென்றால் அது நானே. உனக்குள் இருந்து உன்னைப் பேசவைத்தேன். கர்மாவுக்கு பேதம் இல்லை. நான் உட்பட. உன் சாபம் பலிக்கும். என் பழைய பகைவன் வாலியே என்னை அழிக்க வேடனாக வந்து வஞ்சம் தீர்ககப்போகிறான். நான் அழிவற்றவன். அவதாரம் மறையலாம். ஆனால்,

பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம் |
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே ||

என்ற என் வாக்கிற்கேற்ப நான் என் எண்ணப்படி மீண்டும் மீண்டும் பிறப்பேன்”

“கிருஷ்ணா! அறிவுச்சுடர் ஏற்றியவனே! போதும் இந்த வாழ்வு! இனி நான் என் கணவருடன் அனைத்தையும் துறந்து வடக்கிருந்து உன் நிழல் தேடி வந்து சேர்வேன்”.

இவ்வாறு கூறியதும் சட்டென்று நினைவு வந்தவளாய், எழுந்து அமர்ந்தாள். கனவு என்றாலும், அதன் உட்பொருளை உணர்ந்து அவள் மனம் தெளிந்தது. திருதராஷ்ட்ரனைக் கண்டு உடனே கானகம் ஏக முடிவு செய்து மெல்ல அவன் அறை நோக்கி நடந்தாள்.

கரிய உருவம் ஒன்று பின்னால் சிரித்தபடி நின்றது.🌿

🙏ஆயில்ய நாளில் அவன் தாள் வணங்கி 🙇‍♀️இன்று 28.5.2020 பீடத்தில் குருவார பூஜையில் குருநாதர் அகத்திய பெருமான்🌺🌹🌸🌷🌼 அபிஷேகம் மற்றும் ஆரத்தி படங்கள் 🙏

🙏ஆயில்ய நாளில் அவன் தாள் வணங்கி 🙇‍♀️இன்று 28.5.2020 பீடத்தில் குருவார பூஜையில் குருநாதர் அகத்திய பெருமான்🌺🌹🌸🌷🌼 அபிஷேகம் மற்றும் ஆரத்தி படங்கள் 🙏













தட்சிணாமூர்த்தி அஷ்டகம்

தட்சிணாமூர்த்தி அஷ்டகம்

அகணித குணகணமப்ரமே மாத்யம்
ஸகல ஜகத் ஸ்திதி ஸம்யமாதி ஹேதும்!
உபரத மனோ யோகி ஹ்ருன் மந்திரம் தம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

நிரவதி ஸுக மிஷ்ட தாதாரமிட்யம்
நதஜன மனஸ்தாப பேதைக தக்ஷம்
பவ விபின தவாக்னி நாமதேயம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

த்ரிபுவனகுரும் ஆகமைக ப்ரமாணம்
த்ரிஜகத் காரண ஸூத்ர யோக மாயம்
ரவிசத பாஸ்வர மீஹீத ப்ரதானம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

அவிரத பவ பாவனாதி தூரம்
பத பத்மத்வய பாவிணாம் அதூரம்
பவ ஜலதி ஸுதாரணாங்கிரி போதம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

க்ருத நிலய மனிசம் வடாகமூலே
நிகம சிகாப்ராத போதிதைக ரூபம்
த்ருத முத்ராங்குஸி கம்ய சாருரூபம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

த்ருஹிண ஸுத பூஜிதாங்க்ரி பத்மம்
பத பத்மானத மோக்ஷதான தக்ஷம்
க்ருத குருகுலவாஸ யோகி மித்ரம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

யதிவரஹ்ருதயே ஸதாவிபாந்தம்
ரதிபதி சதகோடி ஸுந்தராங்க மாத்யம்!
பரஹித நிரதரத்மனாம் ஸுஸேவ்யம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

ஸ்மித தவள விகாஸிதான னாப்ஜம்
ஸ்ருதி ஸுலபம் வ்ருஷபாதிருட காத்ரம்
ஸித ஜலஜ ஸுசோப தேணா காந்திரம்!
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

வ்ருஷப க்ருதமிதம் இஷ்ட ஸித்திதம்
குருவர தேவ ஸந்திதௌ படேத்ய:
ஸகல துரித துக்க வர்க்க ஹசனிம்
வ்ரஜதி சிதம் ஞானவான் சம்புலோகம்!!

இராத் தங்கார்

இராத் தங்கார்

மதுரையில் பிறந்த பெண்களும், மதுரைப் பெண்ணைக் கட்டிக்கொண்ட மாப்பிள்ளைகளும் மதுரையிலிருந்து வேறு ஊர்களுக்குச் சென்றால், இரவில் அந்த ஊர்களில் தங்கமாட்டார்கள்.  எவ்வளவு நேரம் ஆனாலும் சரி, இரவு தூங்குவதற்கு மதுரைக்கு வந்து சேர்ந்துவிடுவர்.  இந்தப் பழக்கம் மதுரையில் தொண்டுதொட்டு இருந்து வருகிறது.  இதற்குக் காரணம் என்னவென்று கேட்டால், எங்களது அன்னை அருள்மிகு மீனாட்சியம்மனும், அப்பன் சொக்கநாதனும் எந்த ஊருக்குச் சென்றாலும், அந்த ஊரில் இராத் தங்கமாட்டார்கள்.  இரவுவோடு இரவாகப் புறப்பட்டு மதுரை வந்து சேர்ந்துவிடுவர்.  எனவே நாங்களும் எந்த ஊருக்குப் பயணமானாலும் அந்த ஊரில் இரவு தங்காமல் மதுரைக்குத் திரும்பிவிடுவோம் என்று விளக்கம் கூறுகின்றனர். மதுரை அருள்மிகு மீனாட்சியம்மையும், அப்பன் சொக்கனாதனும் எந்த ஊருக்குச் சென்றனர்?  ஏன் இரவோடு இரவாக மதுரைக்குத் திரும்பினர்?  என்ற வரலாற்றை அறிவோம்.மதுரைக்குத் தென்கிழக்கே 18கி.மீ. தூரத்தில் மதுரை-இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது ‘திருப்பூவணம்‘ என்னும் ஊர்.  இவ்வூர் இப்போது ‘திருப்புவனம்‘ என்று தவறாக அழைக்கப்படுகிறது.  மதுரையை மன்னர்கள் ஆட்சிசெய்த காலத்தில் திருப்பூவணமானது மதுரைமாநகரின் கிழக்கு எல்லையாக விளங்கியது.  இந்த ஊரில் பொன்னனையாள் என்ற நடனமாது வசித்து வந்தாள்.  திருப்பூவணம் கோயிலில் நாட்டிய இலக்கணப்படி சிவனது சந்நிதியின் முன்பு தினமும் நடனமாடுவாள்.  சிவனடியார்க்கு எல்லாம் நித்தமும் அன்னதானம் செய்து வந்தாள்.  அடியார் உணவருந்தி எஞ்சியதைத் தான் உண்டு வாழ்ந்து வந்தாள்.  இவ்வாறு வாழ்ந்து வரும் அவளது தூய பக்தியை உலகத்தோருக்கு எடுத்துக் காட்டவேண்டும் என விரும்பம் கொண்டான் அருள்மிகு திருப்பூவணன்.  “தேரில் எழுந்தருளுவதற்காகத் தங்கத்தினால் ஆன திருமேனியைச் செய்திட வேண்டும்“ என்ற எண்ணத்தை பொன்னனையாளின் உள்ளத்திலே விதைத்தான்.

“திருப்பூவணம் உற்சவமூர்த்தியைத் தங்கத்தில் செய்து கொடுக்க வேண்டும்“ என்ற எண்ணம் பொன்னனையாளின் உள்ளத்திலே ஊன்றி வளரத் துவங்கியது.  அவள், உற்சவமூர்த்தியின் வடிவத்தை மெழுகில் செய்து, அதன் வடிவத்தைத் தங்கத்தில் வார்த்து எடுக்கும் வகையில் “கரு“ செய்து வைத்திருந்தாள்.  ஆனால், நாள்தோறும் அவள் கையில் வரும் பொருள் எல்லாம் அடியார்க்கு அன்னதானம் செய்வதிலேயே செலவாகிக்கொண்டிருந்தது.  தங்கம் வாங்கும் அளவிற்கு அவளிடம் பணம் சேரவில்லை.

மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரர், குலபூடண பாண்டிய மன்னனுக்கு பொற்கிழி வழங்கிய கதையைப் பொன்னனையாள் படித்திருந்தாள்.  எனவே அவள் மதுரை சென்று அன்னை மீனாட்சியையும் சோமசுந்தரேசுவரரையும் வணங்கித் தனக்குத் தேவையான தங்கத்தைத் தந்து அருளுமாறு வேண்டிக் கொண்டாள்.  “எல்லாமே எனக்கு வேண்டும்“ என்று எல்லோரும் வேண்டிக் கொள்ளும் இக்கலிகாலத்தில், இவளோ, திருப்பூவணம் உற்சவமூர்த்திக்காக வேண்டிக்கொள்கிறாளே!, இவளுக்கு அருள வேண்டும் என்று அம்மையும் அப்பனும் திருவுள்ளம் கொண்டனர்.

பங்குனிமாதம் உத்திர நட்சத்திரம் முழுமதி (பௌர்ணமி) நாளன்று, திருப்பூவணத்தில் பொன்னனையாள் நடத்தும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அடியார் எல்லாம் திருவமுது செய்து கொண்டிருந்தனர்.  அங்கே சித்தர் வடிவில் சிவபெருமான் எழுந்தருளினார்.  ஓர் அடியார் வந்து அமர்ந்திருப்பதை அறிந்து கொண்ட பொன்னனையாள் அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கி அன்னம் உண்ண வருமாறு அழைத்தாள்.  அவளது அழைப்பினை ஏற்றுக் கொண்ட சித்தரும், “நீ ஏன் மெலிந்து உள்ளாய்?“ என்று அன்போடு கேட்டார்.  “சாமி, நாள்தோறும் வரும் பொருள் எல்லாம் அன்னதானத்திற்கே செலவாகிவிடுகிறது.  உற்சவமூர்த்தியைத் தங்கத்தில் செய்ய வேண்டும் என்ற எனது ஆவல் ஒன்றே எனது உள்ளத்தின் உள்ளே இருந்து எனது உடலினை உருக்கிவருகிறது. வேறு எந்தவிதமான கவலையும் இல்லை, சாமி“ என்றாள். 

“தானத்துள் சிறந்த அன்னதானத்தைச் செய்து வருகிறாய்,  எனவே உன் பெயருக்கு ஏற்றபடி பொன்னால் ஆன உற்சவமூர்த்தியை நீ செய்திடுவாய்“ என ஆசி வழங்கினார்.   சித்தர் பெருமான் பொன்னனையாளை நோக்கி, “நீ உனது வீட்டில் உள்ள உலோகப் பாத்திரங்களை எல்லாம் இங்கே எடுத்துவா“ என்று கூறினார். சித்தரது  அணைப்படியே, பொன்னனையாளும் அவளது வீட்டிலிருந்து அனைத்து உலோகப் பாத்திரங்களையும் எடுத்துச் சென்று சித்தர் முன் வைத்தாள்.  சித்தரும் அப்பாத்திரங்களின் மேல் திருநீற்றைத் தூவி, “இத்தை  நீ இரா  எரியில் இட்டு எடுக்கின்  பொன்னாம்“ என்று அருளிச் செய்தார்.  அதாவது, இவற்றை நீ இன்று இரவு எரியும் உலையிலே இட்டால் பொன் கிடைக்கும் என்று கூறினார்.

சித்தரது வார்த்தைகளைக் கேட்ட பொன்னனையாளும், வந்திருப்பது மதுரையம்பதி முதல்வனே என்பதை உணராதவளாய்,  “சாமி தாங்களே இன்று இரவு இங்கே தங்கி, இவற்றையெல்லாம் உருக்கிப் பொன்னாக மாற்றித் தரவேண்டும்“ என விண்ணப்பித்தாள்.  அர்த்தசாம பூசைக்கு மதுரை சென்று விடவேண்டும் என்று விருப்பம் கொண்ட சிவபெருமான், பொன்னனையாளின் கோரிக்கைக்கு இசையவில்லை. அர்த்தசாம பூசைக்கு மதுரைக்கு சென்றுவிட வேண்டும் என்றே விருப்பம் கொண்டு, நான் சொன்னதுபடிச் செய்வாய் எனக்கூறி மறைந்துவிட்டார்.  சித்தர் வடிவில் வந்தவர் அருளிச்செய்த விதத்தைக்கொண்டு வந்தவர் மதுரையம்பதி முதல்வனே என அறிந்து கொண்டாள்.  சித்தர் சொன்னபடிய எல்லா உலோகங்களையும் தீயிலிட்டு உருக்கத் தங்கம் உருகி வந்தது.  உருகி வந்த தங்கத்தைக் கொண்டு தான் ஏற்கனவே கருக்கட்டி வைத்திருந்த வார்ப்பில் ஊற்றி எடுத்தாள்.  வார்ப்பினை உடைத்து எடுக்கும்போது உற்சவமூர்த்தியின் அழகைக்கண்டு வியந்து “அச்சோ, அழகியபிரானோ“ என்று அன்பினால் அழைத்து கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள்.  இதனால் உற்சவமூர்த்தியின் கன்னத்தில் வடு உண்டானது.  இதனை இன்றும்  நேரில் தரிசித்து வணங்கலாம். 

பங்குனிமாதம் உத்திரநட்சத்திர நாளன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சி 36ஆவது திருவிளையாடலாகும்.  இத் திருவிளையாடலின்போது ஒவ்வொரு வருடமும் மதுரையிலிருந்து அருள்மிகு சோமசுந்தரேசுவரரையும் அன்னை மீனாட்சியையும் திருப்பூவணத்திற்கு எழுந்தருளச் செய்து, இராத் தங்காமல் அர்த்தசாம பூசைக்கு மதுரைக்குத் திருப்பித் தூக்கி வந்து விடுவர். 

மதுரையைத் திருமலைநாயக்க மன்னன் ஆண்ட போது, இவ்விழா சிறப்பாக நடைபெற்றது.  ஒருவருடம், பங்குனி உத்திரநாளன்று இவ்வாறு அன்னை மீனாட்சியையும் அப்பன் சொக்கநாதனையும் திருப்பூவணத்திலிருந்து மதுரைக்குத் திரும்பித் தூக்கி வரும்போது வைகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருந்தது.  இதனால் சிலைமான் என்ற ஊரின் அருகே பெரும் வெள்ளம் பாதையைக் கடந்து ஓடியது.  எனவே சுவாமியையும் அம்மனையும் வெள்ளத்தைக் கடந்து தூக்கிச் செல்ல முடியவில்லை.  சிலைமானுக்கு அருகில் உள்ள கீழடி என்ற ஊரின் வழியாகத் தூக்கிச் செல்ல முயன்றனர்.  கால்வாயிலும் வைகையாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், மனித முயற்சிகள் பயனளிக்க வில்லை.  நிலைமையை உணர்ந்து கொண்ட திருமலைநாயக்க மன்னன் அருகில் உள்ள ஊர்களில் எல்லாம் பறையறிவிக்கச் செய்தார்.  அர்த்த சாமத்தில் ‘மதுரையம்பதியின் முதல்வன்‘ ஆற்று வெள்ளத்தைக் கடக்க முடியாமல் இருப்பதை அறிந்து ஓடிவந்த உதவினர். தோன்றாத்துணையாய் ஈசனும் வந்து திருவருள் புரிந்தான்.  அன்னை மீனாட்சியும் அப்பன் சொக்கனும் நல்லபடியாக மதுரைக்குத் திரும்பிச் சென்று அர்த்தசாம பூசையில் கலந்துகொண்டனர்.  மன்னன் திருமலை நாயக்கனும் நிம்மதியாக உறங்கி எழுந்தான்.  எழுந்தவுடன் அமைச்சரை அழைத்து, தங்களது உயிரையும் பொருட்டாக மதியாமல் அர்த்த சாமத்தில் வந்து உதவியி அனைவரையும் அழைத்து வருமாறு ஆணையிட்டான்.  உதவியோர் அவனைவருக்கும் ஒரு கிராமத்தையே தானமாக வழங்கினான்.  சாமத்தில் வந்து உதவியோருக்குச் சன்மானமாக வழங்கப்பட்டதால், அந்தக் கிராமத்திற்குப் பெயர் ‘சாம நத்தம்‘ என்ற பெயர் உண்டானது. 

இத்திருவிளையாடல் நடைபெற்ற காலந் தொட்டு, அருள்மிக மீனாட்சியம்மைக்கும் அப்பன் சொக்கநாதனுக்கும் “இராத் தங்கார்“ என்ற காரணப் பெயர் உண்டானது.  அன்றைய நாளிலிருந்து அன்னை மீனாட்சி பிறந்த மதுரையம்பதியில் பிறந்த பெண்கள் யாரும் இராத் தங்கார்.  அதுபோல், மதுரையில் திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளைகள் யாரும் இராத்தங்கார்.  எப்பாடு பட்டேனும் இரவுக்குள் மதுரை வந்து சேர்ந்துவிடுவர். 

மன்னன் திருமலை நாயக்கருக்குப் பின்னர் பல்வேறு ஆட்சிமாற்றங்கள் உண்டாகி, ஆங்கிலேயேர் ஆட்சி செய்த காலத்தில் இந்த விழாவானது திருப்பூவணத்தில் நடைபெறுவது நின்றுபோய், மதுரையின் வடகரையில் உள்ள திருவாப்புடையார் கோயிலில் நடைபெறலானது.

பன்னிரெண்டாவது மந்திர காண்டம் நூலில் சொல்லப்பட்ட அபூர்வ மந்திர ரகசியங்கள்

பன்னிரெண்டாவது மந்திர காண்டம் நூலில் சொல்லப்பட்ட அபூர்வ மந்திர ரகசியங்களை சித்தர்களின் குரல் வாயிலாக பகிர்கிறேன்.......

வாலவய தானமனோன்மணியே காப்பு

மந்திரகஞ சொல்லுதற்கு வாலை காப்பு

பாலவிநாயகர் வசிய மந்திர பீஜம்

பத்தியுடன் ஆஆஆ ஈஈஈ வென்று லட்சம்

ஞானமுள்ள சுப்பிரமணியர் மந்திர பீஜம்

நாட்டமுள்ள சரவணபவ் உம் உம் அம் அம் என்று லட்சம்

ஆலமுண்ட  ஈஸ்பரனார் மந்திர பீஜம்

அன்பாக  ஒ ஐ உ இ ஆ என்றோதே சித்தே

பாலவிநாயகர் வசிய மந்திர பீஜம்

ஓம் ஆஆஆ ஈஈஈ சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

சுப்பிரமணியர் மந்திர பீஜம்

ஓம் சரவணபவ உம் உம் உம் அம் அம் சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

ஈஸ்பரனார் மந்திர பீஜம்

ஓம் ஒ ஐ உ இ ஆ சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

சித்தியாம் ஈஸ்வரியின் மந்திர பீஜம்

சிறப்பாக இடாயி இடாயி டாகினி டிடிடி றீங் கென்றும்

பத்தியாய் ருத்ரவசிய மந்திர பீஜம்

பரிவாக றங் அங் சங் றீங் கென்றும் லட்சம்

சத்தியாம் மகேஸ்வரியின் மந்திர பீஜம்

சுகமாம் சிங் மங் அங் றீங் கென்று லட்சம்

முத்திதருஞ் சதாசிவத்தின் மந்திர பீஜம்

முறையோடு சிவாயநம வென்று ஒதுவாமே--

ஈஸ்வரியின் மந்திர பீஜம்

ஓம் இடாயி இடாயி டாகினி டிடிடி றீங் சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

ருத்ரவசிய மந்திர பீஜம்

ஓம் றங் அங் சங் றீங் சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

மகேஸ்வரியின் மந்திர பீஜம்

ஓம் சிங் மங் அங் றீங் சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

சதாசிவத்தின் மந்திர பீஜம்

ஓம் சிவாயநம சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

ஆமப்பா மகாவிஷ்ணு  மந்திர பீஜம்

அரிதான ஓம்நமோ நாராயணா வென்று லட்சம்

வாமப்பா சிவ வசிய மந்திர பீஜம்

வகையாக ஓம் றீம் நமா நமஹா வென்று லட்சம்

தாமப்பா  பிரம்மாவின் மந்திர பீஜம்

சதிராக நங் கிலிங் சிங் மங் கென்று லட்சம்

நாமப்பா சரஸ்வதியின் மந்திர பீஜம்

நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்ரி என்றோற் சித்தே

மகாவிஷ்ணு  மந்திர பீஜம்

ஓம் நமோ நாராயணா சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

சிவ வசிய மந்திர பீஜம்

ஓம் றீம் நமா நமஹா சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

பிரம்மாவின் மந்திர பீஜம்

ஓம் நங் கிலிங் சிங் மங் சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

சரஸ்வதியின் மந்திர பீஜம்

ஓம் வாணி ஸ்ரீம் காயத்ரி சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

சித்தான சிதம்பரத்தின் மந்திர பீஜம்

செபித்திடு நீ நமசிவய வென்று லட்சம்

சாத்தான ஸ்ரீராம மந்திர பீஜம்

சரதமோடு ஸ்ரீராம ராமநம ஓம் என்று லட்சம்

வித்தான மஹால்ட்சுமி மந்திர பீஜம்

விதரண ஸ்ரீம் ஐம் கிலிம் சௌம் என்று

முத்தான அஞ்சனா தேவி மந்திரம்

முறையுடனே றங் றங் றங் றீங் கென்று லட்சமொதே

சிதம்பரத்தின்  வசிய மந்திர பீஜம்

ஓம் நமசிவய சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

ஸ்ரீராம மந்திர பீஜம்

ஓம் ஸ்ரீராம ராமநம ஓம் சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

மஹால்ட்சுமி மந்திர பீஜம்

ஓம் ஸ்ரீம் ஐம் கிலிம் சௌம் சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

முத்தான அஞ்சனா தேவி மந்திரம்

ஓம் றங் றங் றங் றீங் சுவாஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

லட்சமாம் அனுமாரின் மந்திர பீஜம்

இதமாக ஓம் ராமதூதா அனுமந்தராய நமஹா வென்று லட்சம்

அச்சமில்லா கருடனுட மந்திர பீஜம்

அன்புடனே ஓம் நம் லம் மம் லம் என்றும்

இச்சையுடன் நீதான் சிம் லம் வம் என்று லட்சம்

இனிமையுடன்  லம் யம் லம் என்று லட்சம்

பச்சமுடன் வாலை மந்திர வசிய பீஜம்

பரிவாக ஹரி ஓம் நமஹா வென்றோதே

அனுமாரின் மந்திர பீஜம்

ஓம் ராமதூதா அனுமந்தராய நமஹா- லட்சம் உருசெபிக்க சித்தியாகும்

கருடனுட மந்திர பீஜம்

ஓம் நம்லம் மம்லம் சிம்லம் வம்லம் யம்லம்  சுவாஹா

வாலை மந்திர வசிய பீஜம்

ஓம் ஹரி ஓம் நமஹா

ஓதவே பகவதியின் மந்திர பீஜம்

உமை ஹரி பகவதி சுவாத்திரி ஓம் யென்று லட்சம்

நீதமுள்ள திரிபுரையாள் மந்திர பீஜம்

நியமமுடன் ஓம் றீம் ஸ்ரீம் நமஹா வென்று லட்சம்

பேதமுல்லா வராகியின் மந்திர பீஜம்

பிரிமயமொடு அங் உங் றிங் கென்று நல்ல

சாதகமாய் ஐயும் கிலியும் சௌம் என்று லட்சம்

சரியாகச் செபிக்கமன துறையுங் காணே.

பகவதியின் வசிய மந்திர பீஜம்

ஓம் ஹரி பகவதி சுவாத்திரி ஓம் சுவாஹா

திரிபுரையாள் மந்திர பீஜம்

ஓம் றீம் ஸ்ரீம் நமஹா

வராகியின் மந்திர பீஜம்

ஓம் அங் உங் றிங் ஐயும் கிலியும் சௌம் சுவாஹா

உரைக்கிறேன் காளியின் மந்திர பீஜம்

ஓம் ஆம் காளி வா வா வென்று லட்சம்

நிறைக்கு மோகினி மந்திர வசிய பீஜம்

 நேராக ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் மோகினி என்று லட்சம்

வடிவான ஓம் நீலி கபாலி திரி சூலி என்று லட்சம்

 மறைப்பில்லா தேசெபிக்க சித்தியாகும்

வாகான ஜின்னுவுந்தான் வசியமாச்சே.

காளியின் மந்திர பீஜம்

ஓம் ஆம் காளி வா வா சுவாஹா

மோகினி மந்திர வசிய பீஜம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் மோகினி சுவாஹா

ஜின்னு வசிய மந்திரம்

ஓம் நீலி கபாலி திரி சூலி சுவாஹா

ஆச்சப்பா வீரபத்திர மந்திர பீஜம்

அகோரயா வீரா புர புர அரிஅரி என்றும்

பாச்சப்பா வீர வீர சங்கரா காலகண்டா

பரிவாக வீர கோராயா வீ வீ வீ என்றுலட்சம்

கூச்சப்பா பைரவரின் மந்திர பீஜம்

 கூங் காங் கெங் சங் சங் என்று லட்சம்

மாச்சல்லிலா தேயுருவை செபித்து வந்தால்

வயிரவருந தெரிசனைக்கு வருவார் சார்ந்தே.

வீரபத்திர மந்திர பீஜம்

ஓம் அகோராயா வீரா புர புர அரிஅரி வீர வீர சங்கரா காலகண்டா வீர கோராயா வீ வீ வீ சுவாஹா

பைரவரின் மந்திர பீஜம்

ஓம் கூங் காங் கெங் சங் சங் சுவாஹா

சாந்தமுடன் கிங்கிலியன் மந்திர பீஜம்

சரியாகப் புறோம் புறோம் கிங்கிலியா என்றும்

மாந்திரிகம் சங்கு வங்கு யங்கு என்று

மன்னு சிவாயநம நமசிவய என்று லட்சம்

எந்தலேனு மாடனது மந்திர பீஜம்

இயல்புடனே அவவும் உவ்வும் என்று மிக்க

பாந்தமுற வேயங்கிஷ மாடா என்றும்

பணிவாக லட்சம்முரு என்றும் போடே.

கிங்கிலியன் மந்திர பீஜம்

ஓம் புறோம் புறோம் கிங்கிலியா சங்கு வங்கு யங்கு சிவாயநம நமசிவய சுவாஹா

மாடன் மந்திர பீஜம்

 ஓம் அவ்வும் உவ்வும் அங்கிஷமாடா சுவாஹா

என்றுநீ மொட்டையனார் மந்திர பீஜம்

இதமாகவே டாங் டாங் லிங் கிலீங் என்று

நன்றுநீ அரிஅரி ஓம் என்று லட்சம்

நயமுடன் தான் செபிக்க சித்தியாகும்

அன்று காட்டேரி தேவதைகள் தன்னை

அன்புடனே வசப்படுத்த மந்திர பீஜம்

இன்று நீ ஓம் சிங் வங் டங் என்று லட்சம்

இசை பெறவே செபித்திடநற் சித்தியாமே.

மொட்டையனார் மந்திர பீஜம்

ஓம் டாங் டாங் லிங் கிலீங் அரி அரி ஓம் சுவாஹா

காட்டேரி வசிய மந்திரம்

ஓம் சிங் வங் டங் சுவாஹா

ஆமாப்பா இருளனுடன் மந்திர பீஜம்

ஆ ஆ ஊ ஊ அம் அம் அவ்வும் ஒவ்வும் என்றும்

தாமப்பா உம் உவ்வும் ஆவாவா என்றும்

தனியாக லட்சம்முரு செபிக்க சித்தி

நாமப்பா அரசனுட மந்திர பீஜம்

நலம் பெறவே அர அர அர சம் பம்  வா என்றும்

வேமப்பா பலவீரா அகோர பரதேவா என்றும்

வினையமோடு லட்சம்முரு செப்புவாயே

இருளனுடன் மந்திர பீஜம்

ஓம் ஆ ஆ ஊ ஊ அம் அம் அவ்வும் ஒவ்வும் உம் உவ்வும் ஆ வாவா சுவாஹா

அரசனுட மந்திர பீஜம்

ஓம் அர அர அர சம் பம் வா பலவீரா அகோர பரதேவா சுவாஹா

செப்புவேன் பிசாசுபேய் களையோட்டதான்

சிறப்பான மந்திர பீஜதைக்கேளு

ஒப்புரம்ஓம் ஏவா ஏவா மங் சிங் என்றும்

உயர் தம்பய தம்பய பம் பம் நமஹா என்றும்

தப்புவரா தேலட்சம் உருசெப்பிக

சரணடைந்தே அதிவிரைவில் ஓடிபோகும்

மூப்பும் முறை யோர்ந்தமகான் இதையறிந்தால்

மூதண்ட மந்திரத்தை விடார்கள் பாரே.

பிசாசுபேய் களையோட்ட

ஓம் ஏவா ஏவா மங் சிங் தம்பய தம்பய பம்பம் நமஹா

விடாதேநீ சபைகட்ட மந்திர பீஜம்

விரும்புவேன் கேள் அங் றங் மங் வங் என்றும்

திடமாக சிங் மங் அங் மங் ஓம் என்றும்

செப்புவாய் ள்;லட்சம் முரு செப்பிபாயானால்

நடமாடு மனிதருக்கும் சபையோறுக்கும்

நாட்டமுடன் இருப்பவர்க்கும் பார்ப்பவருக்கும்

இடமாக செய்ஜலந் மந்திரத்தின் இயல்புபாரே.

சபைகட்ட மந்திர பீஜம்

ஓம் அங் றங் மங் வங் சிங் மங் அங் மங் ஓம் சுவாஹா

பாரப்பா அட்டதிக்குப் பாலகர்க்கு

பரிவான மந்திர பீஜத்தை கேளு

சீரப்பா வீட்சணிவா  வா வீரா பார் பார் என்றும்

சிறப்பாகப் புறோம்புறோம் றீங் கங் சிங் சிங் என்றும்

கூறப்பா மங் டங்  றீங் வங் வங் பங் என்றும்

குணமுடன் றீ றீ றீ றீ  கிறாங் என்றும்

காரப்பா மங் ராங் ராங் வறீம் பம் வம் என்றும்

கணக்குலட்சம் முருசெபித்து அடக்கஞ்செய்யே.

அட்டதிக்குப் பாலகர்க்கு

வீட்சணி வாவா  வீரா பார் பார் புறோம் புறோம் றீங் கங் சிங் சிங் மங் டங்  றீங் வங் வங் பங் றீ றீ றீ றீ  கிறாங் மங் ராங் ராங் வறீம் பம் வம் சுவாஹா

அடக்குவாய் மந்திரத்து காதிகேளு

அன்புடனே ஓம் என்ற எழுத்தைசேரு

வடக்குமுகம் இருந்து லட்சம் உருத்தான் போடு

மனமகிழ எத்தெய்வம் வேண்டுமோதான்

சடக்கென்று தேவதைபேர் மந்திரத்தோடே

தான் சேர்த்து செபித்திடத்தே வகைதானிருக்கும்

படக்கெனவே அதைகண்டு பயங்கொள்ளாதே

பணிந்து நீ கேட்ட வரந் தருவார்பாரே.

ஓம் என்ற மந்திரத்தை முதலில் சேர்த்து எந்த தெய்வம் வேண்டுமோ அந்த தெய்வத்தின் பெயரை வடக்கு முகமாக அமர்ந்து லட்சம் உரு செபிக்க வேண்டும்.

தருவார்கள்ஓமென்ற அட்சரத்துள்

சகலஜீவ தயாபரனும் இதற்குள்ளாச்சு

வருவில்லா சிவனயனார் மந்திரந்தானும்

வடிவான அட்சரத்துள் இருப்பதாச்சு

குருபரனாம் விநாயகன்றன் சுழிதானப்பா

குவலையங் களுக்குமுன்னே பிறந்தமூலம்

திருவான வினாயகரின் சுழியை முந்தி

செபிப்பாய் நீ மந்திரகாண்டம் பதினாறு முற்றே.


கலிகாலம்

கலிகாலம் :                              பரிட்ஷித் மகாராஜா கலியை பார்த்து சில கேள்விகள் கேட்கிறார்.இது தர்ம சாஸ்திரத்தை நிலை நிறுத்தும் பூமி. உனக்கு இங்கு இடமில்லை.என் நாட்டை விட்டு வெளியே போ?. கலி நிதானமாக பதில் சொல்கிறார்.நான் ஏன் வெளியே போகவேண்டும்.என்னை சிருஷ்டி செய்தவர் பகவான்.கிருத யுகம்,திரேதா யுகம்,துவாபர யுகத்தை யார் சிருஷ்டித்தார்களோ அவரை போய் கேட்டு விட்டு வா.அவரே தான் அடுத்து கலியுகம் ஆரம்பிக்கும் என்கிறார்.அவரை போய் கேட்டு விட்டு வா. பிறகு போகிறேன்.பாம்பு கடிக்கும் போது பாம்பை ஏன் அடிகிறீர்கள்? பாம்பு என்ன தவறு செய்தது.சிருஷ்டி செய்தவர் பகவான்.அதனால் கலி புருஷன் ஆகிய என்னை கேள்வி கேட்காதே.பகவானைக்கேள்.  அப்படி என்றால்? பரிட்ஷித் கேட்கிறார். அப்படி என்றால் அப்படி தான் .                                        அழுத்தம் திருத்தமாக கலி புருஷன் இடம் இருந்து பதில் வந்தது.  உன் நாட்டில் நான் ஒரு ஓரமாக தங்கி கொள்கிறேன்.உன் மக்களை அங்கு வராமல் பார்த்து கொள்ளேன்.அதை விட்டு விட்டு என்னை ஏன் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைக்கிறாய்.           சரி சரி நான் உன் நாட்டில் கலியுக தர்மத்தை நிலை நாட்ட வந்து நுழைந்து விட்டேன்.எனக்கு எல்லையை ஏற்படுத்தி கொடு.அதை தாண்டி நான் வரமாட்டேன்.வந்தால் கேள்.இது சத்தியம்.பரிட்ஷித் மகாராஜா யோசிக்க ஆரம்பித்தார். இப்போது கலிபுருஷன் விஸ்தாரமாக கேட்கிறார்.எங்கே சூதாட்டம் நடைபெறுகிறதோ,எங்கே மதுபானம் குடிக்கபடுகிறதோ, எங்கே பெண்கள் அவமரியாதை செய்து இம்சிக்க படுகிறார்களோ, பிராணிகள் எங்கே வதைபடுகிறதோ இந்த நாலு வித இடங்களில் கலி தலைவிரித்து ஆடும். மேலும்  தங்கத்தில் ஆசை அதிகம் இருக்கும் இடத்தில்,பொய் பேசும் இடத்தில்,கோபம் இருக்கும் இடத்தில்,ஆணவம் - மதம் -செருக்கு தலைவிரித்து ஆடும் இடத்தில் , பகைமை இருக்கும் இடத்தில்,பேராசை இருக்கும் இடத்தில் நான் ஆட்சி செய்வேன்.நான் ஆட்சி செய்யும் இந்த இடங்களில் உன் மக்களை வராமல் பார்த்துக் கொள்.இந்த இடங்களுக்கு வராமல் இருந்தால் நான் யாரையும் பீடிக்க மாட்டேன் என்று கலிபுருஷன் பரிஷித் மகாராஜாவிடம் வினயமாக கூறினார்.                                            சரி கலியுகத்தில் நாம் துன்பபடாமல் இருக்க - நம்மை காத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்?     மேற்சொன்ன இடங்களுக்கு செல்லாமல் இருக்க வேண்டும்.மேலே சொன்ன பாப காரியங்களை செய்யாமல் இருக்க வேண்டும்.                                  பாகவத அபசாரம் படாமல் இருக்க வேண்டும். அபசாரம் என்றால் என்ன?புரியவில்லையே?           சொல்கிறேன். பக்தி மார்கத்தில் உள்ள வர்களை இழிவாக பேசாமல் இருக்க வேண்டும்.தினமும் நாம சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.முடிந்த பொழுது திவ்ய தேசங்கள் சென்று தரிசிக்க வேண்டும்.வீட்டில் துளசி செடி வைத்து பூஜை செய்ய வேண்டும்.நலிந்த கோயில்களை புதுபிக்க வேண்டும்.நாம சங்கீர்தனம் செய்து மனதால் இறைவனை தினைக்க வேண்டும்.இவைகளை நாம் செய்து வந்தால் நம்மை கலி நெருங்காது.கலியுக தெய்வமான ஶ்ரீநிவானை வணங்கி வாயால் பாடி மனத்தினால் துதிப்போம்.செய்த பாவங்கள் குறையும்.பாக்யம்.


Wednesday, 27 May 2020

எந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரியுமா

*எந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரியுமா?*

*பரிகாரத் தலங்கள் ஆயுள் பலம் வேண்டுதல்..*

1.அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,திருக்கடையூர்,
2.அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி
3.அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம்,
4.அருள்மிகு சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம்,
5.அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி,
6.அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில். திருப்பைஞ்ஞீலி.
7.அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், வாஞ்சியம்,

*ஆரோக்கியத்துடன் வாழ..*

1.அருள்மிகு தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை.
2.அருள்மிகு பவஒளஷதீஸ்வரர் திருக்கோவில்,திருத்துறைப்பூண்டி.
3.அருள்மிகு பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம்.
4.அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
5.அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான்.
6.அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
7.அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், வைத்தீஸ்வரகோவில்.

*எதிரி பயம் நீங்க..*

1.அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில், மேல்மலையனூர்.
 *2.அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், கல்மண்டபம் இராயபுரம் ,சென்னை.*
3.அருள்மிகு காலபைரவர் திருக்கோவில், கல்லுக்குறிக்கி. கிருஷ்ணகிரி.
4.அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோவில், திருமோகூர்.
5.அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டித்தெரு, சென்னை.
6.அருள்மிகு தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் திருக்கோவில்,அதியமான்கோட்டை.
7.அருள்மிகு தில்லைகாளியம்மன் திருக்கோவில், சிதம்பரம்.
8.அருள்மிகு பிரத்யங்கராதேவி திருக்கோவில், அய்யாவாடி. கும்பகோணம்.
9.அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில், ஆணைமலை.
10.அருள்மிகு முனியப்பன் திருக்கோவில், பி.அக்ரஹாரம், தர்மபுரி.
11.அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோவில், படவேடு.
12.அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில், கொல்லங்குடி

*கடன் பிரச்சனைகள் தீர..*

1.அருள்மிகு அன்னமலை தண்டாயுதபாணி திருக்கோவில், மஞ்சூர், ஊட்டி
2.அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு.
3.அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோவில், திருச்சேறை, கும்பகோணம்.
4.அருள்மிகு சிவலோகதியாகர், நல்லூர்பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி.
5.அருள்மிகு திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோவில், திருமலை.

*கல்வி வளம் பெருக…*

1.அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில், மாதவரம்.
2.அருள்மிகு தேவநாதசுவாமி திருக்கோவில், திருவஹிந்தீபுரம், கடலூர்.
3.அருள்மிகு மகாசரஸ்வதி அம்மன், கூத்தனூர். பூந்தோட்டம்.
4.அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோவில், செட்டிபுண்ணியம்.

*குழந்தைப்பேறு அடைய…*

1.அருள்மிகு ஏகம்பரநாதர் திருக்கோவில், காஞ்சிபுரம்.
2.அருள்மிகு சங்கரராமேஸ்வரர் திருக்கோவில், தூத்துக்குடி.
3.அருள்மிகு சிவசுப்ரமண்யசுவாமி திருக்கோவில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.
4.அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
5.அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில், ஆயக்குடி, தென்காசி.
6.அருள்மிகு மயூரநாதசுவாமி திருக்கோவில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.
7.அருள்மிகு முல்லைவனநாதசுவாமி திருக்கோவில், திருக்கருகாவூர்.
8.அருள்மிகு நச்சாடை தவிர்தருளியசுவாமி திருக்கோவில், தேவதானம், ராஜபாளையம்.
9.அருள்மிகு விஜயராகவபெருமாள் திருக்கோவில், திருபுட்குழி.

*குடும்பத்தில் ஒற்றுமை ஓங்க…*

1.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்.
2.அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு.
3.அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில், முத்தனம்பாளையம்.திருப்பூர்
4.அருள்மிகு கல்யாணவிகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர்.
5.அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில், சங்கரன்கோவில்.
6.அருள்மிகு நவநீதசுவாமி திருக்கோவில், சிக்கல்.
7.அருள்மிகு பள்ளிக்கொண்டீஸ்வரர் திருக்கோவில், ஊத்துக்கோட்டை,சுருட்டப்பள்ளி.
8.அருள்மிகு மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா திருக்கோவில், மஞ்சக்கம்பை.
9.அருள்மிகு மாரியம்மன்,காளியம்மன் திருக்கோவில், ஊட்டி
10.அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில், பரிக்கல்.
11.அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவில், உறையூர்
12.அருள்மிகு ஸ்தலசயனப்பெருமாள் திருக்கோவில், மாமல்லபுரம்.

*செல்வ வளம் சேர…*

1.அருள்மிகு அனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில், அடையாறு.
2.அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோவில், பெசண்ட்நகர், சென்னை.
3.அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
4.அருள்மிகு பக்தவச்சலப்பெருமாள் திருக்கோவில், திருநின்றவூர்.
5.அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோவில், மயிலாப்பூர்.

*திருமணத்தடைகள் நீங்க…*

1.அருள்மிகு உத்வாகநாதசுவாமி திருக்கோவில், திருமணஞ்சேரி.
2.அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோவில், கரூர்.
3.அருள்மிகு கல்யாணவேங்கடரமணசுவாமி திருக்கோவில், தான்தோன்றிமலை.
4.அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
5.அருள்மிகு சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவபெருமாள் திருக்கோவில், பாரிமுனை.
6.அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவில், பேரூர். கோவை.
7.அருள்மிகு நித்யகல்யாண பெருமாள் திருக்கோவில், திருவிடந்தை.
8.அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோவில், நல்லாத்தூர்.
9.அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.

*தீவினைகள் அகன்றிட..*

1.அருள்மிகு காலபைரவர் திருக்கோவில், குண்டடம்.
2.அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டி தெரு, சென்னை.
3.அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோவில், கோயம்பேடு.
4.அருள்மிகு சரபேஸ்வரர் திருக்கோவில், திருபுவனம்.
5.அருள்மிகு சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் திருக்கோவில், நடுப்பட்டி, மொரப்பூர்.
6.அருள்மிகு பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.

*நிலம், வீடு, மனை அமைந்து சங்கடங்கள் தீர…*

1.அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர்.
2.அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில், தீர்த்தமலை, அரூர்.
3.அருள்மிகு பூவராகசுவாமி திருக்கோவில், ஸ்ரீமுஷ்ணம்.
4.அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல். காஞ்சீபுரம்.

*நோய், நொடிகள் தீர…*

1.அருள்மிகு இருதயாலீஸ்வரர் திருக்கோவில், திருநின்றவூர்.
2.அருள்மிகு தோரணமலை முருகன் திருக்கோவில், தோரணமலை.
3.அருள்மிகு பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.
4.அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
5.அருள்மிகு வீர்ராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.
6.அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.
7.அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார் விளாகம். ஸ்ரீவில்லிப்புத்தூர்.

*பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண…*

1.அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
2.அருள்மிகு பாதாள பொன்னியம்மன் திருக்கோவில், கீழ்ப்பாக்கம், சென்னை.
3.அருள்மிகு மகாதேவர் திருக்கோவில், செங்கனூர்.கேரளா

*முன்னோர் வழிபாட்டிற்கு..*

1.அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில், பவானி.
2.அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோவில், கொடுமுடி.
3.அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவில், அரன்வாயல். கவரப்பேட்டை.
4.அருள்மிகு  வீரராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.
6.அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம்.
7.அருள்மிகு திருப்பள்ளிமுக்கூடல். குருவிராமேஸ்வரம் திருக்கோவில், திருவாரூர்
8 காசி காசி விஸ்வநாதர்
9 பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்
10 அருள்மிகு  சொறிமுத்து அய்யனார் கோயில்
பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்.

சக்தி கவசம் (வஜ்ஜிர பஞ்சர கவசம்)

" சக்தி கவசம் (வஜ்ஜிர பஞ்சர கவசம்)
"

அம்மன் இக்கவசத்தை முருகப்பெருமானுக்கு அருளினார், பின்னர் முருகப்பெருமானால் அகஸ்தியமுனிவருக்கு அருளபட்டது.

சக்தி  கவசம் என்னும் தமிழ்நூல் 12 பாடல்கள் கொண்டது. அதிவீரராம பாண்டியர் எழுதிய காசி காண்டம் என்னும் நூலின் 72ஆம் அத்தியாயம் வஜ்ஜிர பஞ்சர கவசம். இதனைச் சக்தி கவசம் என்றும் கூறுவர். நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு.
துர்க்கன் என்னும் அரக்கனை அம்மை அழித்து நின்ற நிலையில் துர்க்கை எனப்பட்டாள். துர்க்கையை வணங்கிய முகுந்தன் முதலான தேவர்கள் இந்தக் கவசத்தைச் சொன்னார்களாம்.

துர்க்கையின் உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் இன்னின்ன அம்சம் என்று கூறி அது தன்னைக் காக்கவேண்டும் என்று கூறுவது சக்திகவசம்.

சக்தி  கவசம்:

1. அங்கையில் கரகம் தாங்கும் பிரமாணி அருளி னோடும்
துங்கமென் சென்னி காக்க; வயிணவி துகளி லாகம்
எங்கணும் காக்க செய்ய ஏந்தெழில் உருத்தி ராணி
தங்கும்எண் திசையும் அன்பு தழைத்திட இனிது காக்க

2. கொன்னுனைச் சூலிசென்னி மயிரினைக் குறித்துக் காக்க
மன்னுவெண் பிழைதாழ்சென்னி வயங்கொளி நெற்றி காக்க
பன்மயிர்ப் புருவம் நாளும் பரிவொடும் உமையாள் காக்க
என்னையாள் முக்கண் ஈசன் இறைவிகண் இணைகள் காக்க

3. வயமிகும் இமய வல்லி மூக்கினை மகிழ்ந்து காக்க
செயையோடு விசயை மேல்கீழ் இதழினைச் சிறந்து காக்க
அயிலுடைச் சுருதி தூய அஞ்செவி காக்க தண்ணெண்
பயின்மலர் உறையுஞ் செய்வி பல்வினை உவந்து காக்க

4. சண்டிமென் கபோலம் காக்க தவள நாள் மலரில் வைகும்
ஒண்தொடி நன்னாக் காக்க விசயைமங் கலைமற் றொவ்வாக்
கண்கவர் நாடி காக்க காத்தியா யனிஎஞ் ஞான்றும்
முண்டக மலரில் தூய முகத்தினைச் சிறந்து காக்க

5. காளமுண் டிருண்டநீல கண்டிமென் கழுத்துக் காக்க
கோளில்பூ தார சத்தி சுவர்ப்புறம் காக்க கூர்மி
நீளொளிச் சந்தி காக்க வயிந்திரி நெறியி னோடும்
தோளிணை காக்க பத்மை துணைமலர் அங்கை காக்க

6. கமலைகை விரல்கள் காக்க விரசைகை உகிர்கள் காக்க
திமிரம்உண் டொளிரும் வெய்யோன் மண்டலத் துறையும் செல்வி
எமதிரு வாகுமூலம் காக்கவா னவர்கள் ஏத்த
அமிர்தல கரிநாள் நாளும் அகன்மணி மார்பம் காக்க

7. தரித்திரி இதயம் காக்க தயித்தியர்ச் செகுப்போள் மிக்க
கருத்தொடு முலைகள் காக்க சகத்தினில் இறைமை பூண்டோள்
திருத்தகு வயிறு காக்க திகழ்தபோ கதி தன்னுள்ளத்
தருத்தியின் உந்தி காக்க அசைவளர் முதுகு காக்க

8. கருதரு விகடை கடிதலம் பாமை வாய்ந்த
குருமணிச் சகனம் காக்க குகாரணி குய்யம் காக்க
அருள்தர வரும் அபாய கந்தினி அபானம் காக்க
தெருளுடை விபுலை என்றும் சிறப்புடைக் குறங்கு காக்க

9. லளிதைமென் முழந்தாள் காக்க இயற்சபை கணைக்கால் காக்க
களிதரு கோரை வாய்ந்த பரட்டினைக் காக்க மிக்க
அளிகொள்பா தலத்தில் செல்வோள் அணிகெழு புறந்தாள் காக்க
ஒளிர்நகம் விரல்கள் சந்திரி உக்கிரி உவந்து காக்க

10. தலத்துறை மடந்தை உள்ளங் காலினை காக்க தண்ணென்
மலர்த்திரு மனையைக் காக்க வயங்குகேத் திரதை யோங்கி
உலப்பில்கேத் திரங்கள் காக்க பிரியகரை ஒழிவ றாது
நலத்தகு மக்கள் தம்மை நன்குறக் காக்க அன்றே

11. உயர்சனா தனிஎஞ் ஞான்றும் ஒழிவறும் ஆயுள் காக்க
மயர்வறு சீர்த்தி யாவும் மாதேவி காக்க மிக்க
செயிரறு தருமம் யாவும் தனுத்திரி சிறந்து காக்க
இயல்புடைக் குலத்தை வாய்ந்த குலதேவி இனிது காக்க

12. சற்கதி பிரதை நல்லோர் இயைபினைத் தயாவிற் காக்க
விற்கொடும் போரில் நீரில் வெளியினில் வனத்தில் சூதில்
இப்புறம் அதனில் ஓங்கு சர்வாணிகாக்க என்னாப்
பொற்றரு மலர்கள் தூவிப் புங்கவர் ஏத்தி னாரே.

சக்தி கவசம் முற்றிற்று.

இந்த வஜ்ஜிர பஞ்சரத்தை எவர் ஒதினாலும் அவர்களுடைய உடலிலுண்டாகிய வெப்பு நோயொழியும், எட்டுத்தரம் நீரில் அபிமந்திரித்து அதனை உட்கொண்டால் வயிற்றிலே பொருந்திய குன்மம், சூலை முதலிய நோயனைத்தும் நீங்கும். இரவில் வழி பிள்ளையைப் பெறமாட்டாமல் வருத்தப்படுகின்ற மாதருடைய அருகிலிருந்து ஒதினாலும் அல்லது நீரிலோதி உட்கொள்ளக் கொடுத்தாலும் விரைவிலே வருத்தம் நீங்கிப் பிள்ளைகளைப் பெறுவார்கள். போரிலே ஒதினால் பகைவர்கள் தோல்வியடைவார்கள். சிறு பிள்ளைகளுக்கு நீரிலோதி உட்கொள்ளக் கொடுத்தால் நோய்கள் நீங்கும். இதை எவரோதினாலும் அவர்களை உமாதேவியார் காப்பாற்றி யருளுவார்.

Monday, 25 May 2020

கோமாதா வுடன் ஒரு உரையாடல் 🙂

அவ்வளவுதான் சநாதன தர்மம் என்பது😍 இரண்டு நாட்களாக  என் வீட்டிற்கு ஏன் வரவில்லை எனக் கேட்கும் பெண்ணை சமாதானப்படுத்தும் கோமாதா.


கிருஷ்ண சபதம்

*கிருஷ்ண சபதம்!*

மஹாபாரதத்தில் ஓர் அருமையான காட்சியை சித்தரிக்கிறார் வேத வியாஸர். சோகத்தின் உச்ச கட்டம் அது. அதில்தான் ஸ்ரீகிருஷ்ணர் தன்னைப் பற்றியும் தன் அரும் குணநலன்களைப் பற்றியும் பேசுகிறார். அதாவது அவருக்குப் பேச வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. கிருஷ்ண சரிதத்தைக் கேட்கும் பக்தர்களான நாம் பரவசப்படுகிறோம்.

பாரத யுத்தம் முடிந்தது. த்வாரகை மீள்கிறார். ஸ்ரீகிருஷ்ணர். உற்சாகமான வரவேற்பு. தந்தை வஸுதேவரையும் அன்னையையும் அடி பணிந்து வணங்குகிறார் கிருஷ்ணர். நடந்ததை உன் வாயாலேயே சொல் என்று கேட்கிறார் வஸுதேவர். விஸ்தாரமாக யுத்தத்தைச் சொன்ன கிருஷ்ணர் ஒரு விஷயத்தை மட்டும் வஸுதேவருக்குச் சொல்லவில்லை. அதுதான், அவரது பேரனான அபிமன்யுவின் மரணம். சோகத்தினால் முதியவர் துக்கப்படக் கூடாது என்பது கிருஷ்ணரின் எண்ணம். ஆனால் சுபத்திரையோ கிருஷ்ணரை நோக்கி, அபிமன்யுவின் வதத்தைச் சொல்லும் என்று கூறி மயக்கமுற்று விழுகிறாள். அதைக் கண்ட வஸுதேவரும் மயக்கமுறுகிறார்.
ஒருவாறு அவர்களைத் தேற்றிய கிருஷ்ணர் அஸ்வமேத யாகம் செய்யுமாறு யுதிஷ்டரரிடம் கூற யாக ஏற்பாடுகள் பிரமாதமாக ஆரம்பிக்கப்படுகின்றன.

 இறந்து பிறந்த குழந்தை: யாகத்திற்காக அனைவருடனும் ஹஸ்தினாபுரத்திற்குக் கிருஷ்ணர் வந்த அந்த சமயத்தில்தான் மிக்க சோகமான நிகழ்ச்சி நடைபெற்றது. உத்தரையின் பிரசவ நேரம் அது. குழந்தையும் பிறந்தது. ஆனால் பிரம்மாஸ்திரம் பிரயோகிக்கப்பட்டதால் குழந்தை மரித்து பிறந்தது. குந்தி தேவிக்கும், உத்தரைக்கும் அரண்மனையில் இருந்த இதர அனைவருக்கும் துக்கம் தாளவில்லை. கிருஷ்ணரை எப்படியாவது குழந்தையை உயிர்ப்பித்துத் தருமாறு வேண்டிய குந்தி தேவி கிருஷ்ணருடைய பிரதிக்ஞையை நினைவு படுத்துகிறாள். அஸ்வத்தாமாவினால் பிரம்மாஸ்திரம் ஏவப்பட்ட காலத்தில் மரித்துப் பிறக்கும் குழந்தையை நான் உயிர்ப்பிக்கிறேன் என்று நீ பிரதிக்ஞை செய்திருக்கிறாய் என்று நினைவு படுத்துகிறாள் குந்தி.

கிருஷ்ணருக்கு துக்கம் தாளவில்லை. அப்படியே ஆகட்டும் என்று உரக்கச் சொல்லி அனைவரையும் சந்தோஷப்படுத்தியவாறே உத்தரையின் பிரசவ அறைக்குள் செல்கிறார். அங்கே உத்தரை கட்டுக் கடங்காத துயரத்துடன் கிருஷ்ணரைப் பார்த்தவுடன் அழுது புலம்பலானாள். குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு, இதோ இங்கே வந்திருக்கும் கிருஷ்ணரை நமஸ்கரிக்காமல் இருக்கிறாயே என்றெல்லாம் கூறிப் புலம்புகிறாள்.

 கிருஷ்ணரே! என் குழந்தையை உயிர்ப்பித்துத் தாரும் என்று கூறி அவள் அழ, கூடவே அங்கு குழுமியிருந்த அனைவரும் அழ அந்தச் சமயத்தில் எழந்தது கிருஷ்ண சபதம்! உத்தரை கிருஷ்ணரை நமஸ்கரித்து எழுந்தாள். உடனே கிருஷ்ணர் ஆசமனம் செய்து பிரம்மாஸ்திரத்தை அதன் விளைவு இல்லாமல் போகச் செய்தார். பின்னர் அந்தக் குழந்தை உயிருடன் எழுவதைப் பற்றி உலகமெல்லாம் அறியும் படி பிரம்மாண்டமான ஒரு சபதத்தைச் செய்தார்.

உத்தரையே! நான் பொய் சொல்லவில்லை. இது உண்மையாகவே ஆகப் போகிறது. எல்லா மக்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இந்தக் குழந்தையை உயிருள்ளதாக ஆக்குகிறேன். நான் ஒரு பொழுதும் விளையாட்டுக்களிலும் கூடப் பொய் சொன்னதில்லை. யுத்தத்திலிருந்து புறம் காட்டியது இல்லை. இது உண்மையானால் இந்தக் குழந்தை உயிருடன் வாழட்டும். எனக்கு தர்மத்திலும் அந்தணர்களிடத்திலும் அதிகமான அன்பு இருக்குமானால், இறந்து பிறந்த இந்த அபிமன்யுவின் குழந்தை ஜீவித்திருக்கட்டும். நான் ஒரு பொழுதும் அர்ஜுனனிடத்தில் விரோதத்தை எண்ணாமலிருப்பது உண்மையானால் மரித்த இந்தக் குழந்தை ஜீவிக்கட்டும். சத்தியமும் தர்மமும் என்னிடத்தில் எப்பொழுது நிலை பெற்றிருக்குமானால் அபிமன்யுவின் புத்திரனும் இறந்தவனுமாகிய இந்தக் குழந்தை ஜீவிக்கட்டும்.
நான் கம்ஸனையும் கேசியையும் தர்மமாகக் கொன்றது உண்மையானால் இப்பொழுது இந்தக் குழந்தை மறுபடியும் பிழைக்கட்டும்.

 இப்படி கிருஷ்ணர் சபதத்தை உலகம் முழுவதும் அறியுமாறு உரக்கக் கூறினார். பின்னர் பிரம்மாவும் ருத்திரமும் பூஜித்த தன் பாதத்தால் குழந்தையின் கால் முதல் தலை வரையில் தடவினார். உடனே அந்தக் குழந்தை மெல்ல மெல்ல தன் பிரக்ஞையை அடைந்தது; பின்னர் அசைந்தது. உயிர் பிழைத்த குழந்தையைக் கண்டு அனைவரும் ஆனந்த மிகுதியால் கிருஷ்ணரைப் புகழ்ந்தனர். பிரம்மாஸ்திரமோ கிருஷ்ணரால் உபசம்ஹாரம் செய்யப்பட்டதால் பிரம்மாவை அடைந்தது. இப்படியாக ஸ்ரீ கிருஷ்ணரின் சபதம் நிறைவேறியது. ஆஸ்வமேதிக பர்வம் அறுபத்தொன்பதாம் அத்தியாயத்தைப் படிப்பவர்களின் மனம் ஆனந்தம் அடைவதோடு கிருஷ்ணரின் மஹிமையை அவர் வாயாலேயே சொல்லக் கேட்ட பெருமையையும் அடையும்.

கிருஷ்ணரின் அரிய பெரிய பெருமைகளை மனம் காலம் எல்லாம் அசை போட்டாலும் முழுவதையும் உணர்ந்ததாகச் சொல்ல முடியுமா? கிருஷ்ணர் தான் வாழ்ந்தது தர்ம வாழ்க்கையையே என ஏன் உரக்கச் சொல்லவேண்டும்?

 அதற்குக் காரணம் இருக்கிறது - சிசுபாலன் நூறு பொய் நிந்தனைகளைக் கூறும்வரை அவனை வதம் செய்யாமல் விடுகிறேன் என்று அவன் தாய்க்கு வரம் அருளினார் கிருஷ்ணர். கோபம் தலைக்கேற வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லிப் பொய்களை அடுக்கிக் கொண்டே போனான் சிசுபாலன். இள எருது போல கொழுத்தவனான கிருஷ்ணன் மாமனான கம்ஸனுடன் போர் செய்து அவனைக் கொன்றிட்டான். தந்திர வகைகளால் எத்தனையோ யுத்தங்களையும் செய்து முடித்தான். தன்னையே ஆதாரமாகக் கொண்டு சார்ந்துள்ள சுற்றத்தார்களில் தான் ஒருவன் மட்டுமே மேம்பட்டு தந்திரமாகத் தனக்கு உரியதாக ராஜ்யத்தைக் கைப்பற்றி ஆள்பவன் ஆனான்.

கம்ஸனைக் கொல்லுதல், சங்கு உருவத்தில் கடலில் வாழ்ந்த பஞ்சஜனன் என்னும் அசுரனைக் கொல்லுதல், பதினெட்டு முறை ஜராசந்தனுடன் போர் செய்து வெற்றி பெறல், காலயவனென்ற மிலேச்ச ராஜனைத் தந்திரத்தால் அழித்தல், ருக்குமியைப் பங்கப் படுத்தல் ஆகிய அனைத்தையும் சுட்டிக் காட்டும் விதத்தில் இவை அனைத்தும் வஞ்சனை அல்லவா என்று வஞ்சனையினால் அமரும் எத்தனை மலைந்தான் என்று ஆவேசப்பட்டு சிசுபாலன் கத்தினான். ஆனால் அதில் கோபம் இருந்ததே தவிர சத்தியம் இல்லை.

சிசுபாலன் போலவே துரியோதனன் உள்ளிட்டோரும் பல பொய்ப் பழிகளை கிருஷ்ணர் மீது சுமத்தியதுண்டு. ஆகவே தன் மீது பொய் நிந்தனை சொல்வோர் சொன்னதெல்லாம் பொய்களே என்று உலகிற்குத் தெரிவிக்கும் வண்ணம் சத்தியப் பிரகடனம் செய்ய வேண்டி, உத்தரையின் சிசுவான பாண்டவரின் ஒரே வாரிசான பரீட்சித்தை உயிர்ப்பிக்க வேண்டிய உச்சகட்டத்தில் கிருஷ்ணர் தன்னைப் பற்றிப் பிரகடனம் செய்யும் இந்த அரிய காட்சி அமைகிறது. எங்கு கிருஷ்ணர் இருக்கிறாரோ அங்கு சத்தியமும், தர்மமும், வெற்றியும் நிச்சயம் அவர் அருளால் இறந்தவரும் எழுவர்.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !

மஹாபெரியவா - கலவையில் நடந்த ஒரு நிகழ்வு

*கலவையில் கிடைத்த அனுபவம்,....... *

சக்தி விகடன் பொறுப்பாசிரியர் திரு. ரவி பிரகாஷ் கூறுகிறார்…..                                                                                 
இங்கே, காஞ்சிப் பெரியவர் ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பற்றிச் சமீபத்தில் எனக்குத் தெரிய வந்த சிலிர்ப்பூட்டும் தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உண்மையிலேயே பெரியவர் பெரியவர்தான்!


நாற்பது ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப் பெரியவரின் ஜன்ம தினத்தன்று அவரைச் சந்தித்து ஆசி பெறுவதற்காக ‘கலவை’யில் எக்கச்சக்கக் கூட்டம் திரண்டிருந்தது. அப்போது ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தன் மனைவியோடு, ஸ்வாமிகளின் தரிசனத்துக்காக முன் வரிசையில் காத்திருந்தார். அவர் கழுத்திலும், அவரின் மனைவியின் கழுத்திலும் காதிலும் தங்க நகைகள் ஏராளம் மின்னின. அவர் ஒரு பெரிய தொழிலதிபர் என்பது பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது.


பெரியவர் தம் அறையிலிருந்து வெளிப்பட்டதும், முன்னால் இருந்த அந்தத் தம்பதி மீதுதான் அவரது பார்வை விழுந்தது. அந்தத் தொழிலதிபரை, “எப்படி இருக்கே?” என்று விசாரித்தார் பெரியவர்.


அதற்கு அந்தத் தொழிலதிபர், தான் செய்து வரும் தான தருமங்கள் பற்றியும், தொடர்ந்தாற்போல் நான்கு நாட்களுக்குத் தன் சொந்தச் செலவில் இலவசமாக ஏழை பிராமணர்களுக்கு ‘சமஷ்டி உபநயனம்’ செய்து வைத்தது பற்றியும் சொல்லிவிட்டு, அது தொடர்பான கையேடுகளைப் பெரியவரிடம் காண்பித்தார். அதை வாங்கிப் பார்வையிட்ட பெரியவர், “சரி, இதுக்கெல்லாம் உனக்கு எவ்வளவு செலவாச்சு?” என்று கேட்டார். தொழிலதிபர் பெருமிதம் தொனிக்கும் குரலில், “சில லட்ச ரூபாய்கள் ஆகியிருக்கும்” என்றார்.


பெரியவர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பின்னர், “அதிருக்கட்டும்… திருநெல்வேலில தக்ஷிணாமூர்த்தின்னு ஒரு பையன் இருந்தானே, அவன் இப்போ எப்படி இருக்கான்?” என்று சன்னமான குரலில் கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பாராமல் நகர்ந்து போய்விட்டார்.


தொழிலபதிபர் அப்போது அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் குமுறிக் குமுறி அழத் தொடங்கிவிட்டார். அவர் மனைவி அவரைச் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. அதற்குள் பத்திரிகையாளர்கள் சிலர் அங்கு கூடி, அவர் ஏன் அழுகிறார் என்று விசாரித்தனர்.

அதற்கு அவர், “நான் அயோக்கியன்… அயோக்கியன்..!” என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரை ஒருவாறு சமாதானப்படுத்தி விஷயத்தைக் கேட்டதற்கு அவர் சொன்னார்…

“எனக்கு ஒரு அக்கா உண்டு. அவள் கணவனை இழந்தவள். அவளுக்கு ஒரு பையன். அவன் பெயர்தான் தக்ஷிணாமூர்த்தி. அவர்கள் இருவரும் என் வீட்டில்தான் தங்கி வளர்ந்தார்கள். பின்னர் அக்கா காலமாகிவிட்டாள். அதன்பின் அந்தப் பையனை என் வீட்டில் வைத்திருக்க விரும்பாமல், வீட்டை விட்டுத் துரத்தி விட்டேன். அதன்பின் அவன் எங்கே போனான், என்ன ஆனான் என்று எனக்குத் தெரியாது. ‘ஊருக்கெல்லாம் சமஷ்டி உபநயனம் செய்து வைப்பதாய் பெருமை பேசுகிறாய். ஆனால், உன் சொந்தச் சகோதரி மகனை மறந்துவிட்டாய். நீ பெரிய தர்மவானா?’ என்றுதான் பெரியவர் இப்போது என்னை மறைமுகமாகக் கேட்டார். உடனடியாக அந்தப் பையனைத் தேடிக் கண்டுபிடித்து, நல்ல முறையில் வளர்த்துப் பெரியவனாக ஆக்க வேண்டியது என் பொறுப்பு!” என்றபடி தன் மனைவியுடன் கிளம்பிச் சென்றார் அந்தத் தொழிலதிபர்.

காளிகாம்பாள் மகிமை

1677 ம் ஆண்டு சத்ரபதி சிவாஜி வணங்கி வழிபட்டு சென்ற சென்னை #காளிகாம்பாள் கோயில் பற்றிய சில தகவல்கள்...

1.காளிகாம்பாள் ஆலயம் 3000 ஆண்டு பழமையானது. மட்டுமின்றி வரலாற்று சிறப்புடையதாகவும் திகழ்கிறது.

2. ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டி ருப்பதால் இத்தலத்தில் நீங்கள் செய்யும் எல்லா வேண்டுதல்களும் குறைவின்றி வெற்றி பெறும்.

3. தற்போதுள்ள ஆலயம் 1639-ம் ஆண்டு விஸ்வகர்மா குலத்தவரால் கட்டப்பட்டு, இன்றும் சீரும், சிறப்புமாக பரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது.

4. சிதம்பரத்தில் வழிபட்டால், திருவண்ணாமலையை நினைத்தால், காளையார் கோவிலில் காலடி எடுத்து வைத்தால், திருவாரூரில் பிறந்தால் மோட்சகம் கிடைக்கும் என்பார்கள். அது போல பாரிமுனை காளிகாம்பாள் தலத்தில் குங்குமம் பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும்.

5. காளிகாம்பாள் கோவிலுக்கு செல்லும் போது அவசரப்பட்டு வழிபாடுகளை செய்யாதீர்கள். ராஜகோபுரம், நடராஜ மண்டபம், காயத்ரி மண்டபம் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. நின்று நிதானமாக ரசித்து பார்த்து வரலாம்.

6. காளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

7. காளிகாம்பாள் ஆலயத்தின் பரிவார தேவதை கடல் கன்னியாகும்.

8. காளிகாம்பாள் ஆலயம் கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறாள்.

9. ஆதிபராசக்தி தன்னை பல சக்திகளாக தோற்றுவித்த சித்தாடல் செய்து வருகிறாள். அந்த அபூர்வ சக்திகளுள் ஒருவளே அன்னை காளிகாம்பாள்.

10. காளிகாம்பாளின் அவதாரம் நீலியாய், சூலியாய், காளியாய் உருவகப்படுத்தப் பட்டுள்ளது.

11. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், தும்பட்டம், வீண் பெருமை, தன்நிலை உணராமை போன்றவற்றை காளிகாம்பாளை வழிபட, வழிபட நம் மனதில் இருந்து நீங்கச் செய்யலாம்.

12. அன்னை காளிகாம்பாளிடம் பாரதியார் போன்று உரிமையோடு பேசி மனதை பறி கொடுத்தால் நிச்சயம் அவள் பக்தர்களின் உள்ளத்தை பக்குவப்படுத்துவாள் என்பது நம்பிக்கை.

13. காளிகாம்பாள் அருள்புரியும் இத்தலத்தில் இந்திரன், குபேரன், விராட் புருஷனான ஸ்ரீ விஸ்வகர்மா ஆகியோர் போற்றி துதித்துள்ளனர்.

14. காளிகாம்பாள் அவதரித்த இடத்தை நம் முன்னோர்கள் “சொர்ணபுரி” என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.

15. நாகலோக கன்னிகளும், தேவலோக கன்னிகளும் அன்னை காளிகாம்பாளை வழிபட்டு பூர்வ ஜென்ம புண்ணியங்களை அடைந்தனர்.

16. காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பன்றிமலை சுவாமிகள், காயத்ரி சுவாமிகள், தவத்திரு ராமதாசர் உள்பட பல மகான்கள், ஆன்மீகப் பெரியோர்கள் காளிகாம்பாளை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

17. பவுர்ணமி தோறும் இரவு 7 மணிக்கு அம்பாளுக்கும், ஸ்ரீ காயத்ரி தேவிக்கும் கூட்டு வழிபாடும், பூஜையும் நடைபெறும்.

18. இத்தலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5 மணிக்கும், ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கும் சிறுவர்களுக்கான நீதி போதனை மற்றம் ஆன்மீக வகுப்பு இலவசமாக நடைபெறும்.

19. காளிகாம்பாள் கோவிலில் 18-7-14 தொடங்கி 9 வெள்ளிக்கிழமைகள் ஆடித்திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

20. இத்தலத்தில் வெள்ளிக்கிழமை தோறும் கன்னி பூஜை, கோ பூஜை, திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.

21. இத்தலத்தில் நடைபெறும் சுவாசினி பூஜை சிறப்பு மிக்கது. இந்த பூஜை சுமங்கலிகளுக்கு விசேஷ அருள் தருவதாகும். இதற்காகவே சென்னையில் வேறு எங்கும் இல்லாதபடி இத்தலத்தில் “சுவாசினி சங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

22. இத்தலத்தில் அமாவாசை தோறும் ஸ்ரீகாயத்ரி தேவிக்கும், விஸ்வ பிரம்மத்துக்கும் விஸ்வகர்ம வழிபாட்டுக் குழு சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

23. காளிகாம்பாள் மொத்தம் 12 அம்சங்களைக் கொண்டவள். அதில் ஒரு அம்சம், காஞ்சீபுரத்து காமாட்சி அம்மனாகும்.

24. இத்தலம் இரு பிரகாரங்கள் கொண்டது. உள் பிரகாரத்தில் அருணாசலேஸ்வரர், நவக்கிரகங்கள், வள்ளி-தெய்வானை சமேத முருகர், ஸ்ரீ வீரபகாமங்கர், அவர் சீடர் சித்தையா, ஸ்ரீ கமடேஸ்வரர், ஸ்ரீதுர்கா, ஸ்ரீ சண்டிமகேஸ்வரர், பைரவர், பிரம்மா, சூரிய-சந்திரர்கள் உள்ளன. வெளிப்பிரகாரத்தில் சித்தி விநாயகர், கொடி மரம், வடகதிர்காம முருகன், ஸ்ரீசித்தி புத்தி விநாயகர், ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீதுர்கா, யாகசாலை, ஸ்ரீநடராசர், ஸ்ரீமகாமேரு, ஸ்ரீவீரபத்திர மகா காளியம்மன், ஸ்ரீ நாகேந்திரர், ஸ்ரீவிஸ்வ பிரம்மா சன்னதிகள் அமைந்துள்ளன.

25. திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் ஸ்ரீ காளிகாம்பாள் கருவறையில் உள்ள மூலவருக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து, அந்த மஞ்சளை பயன்படுத்தி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

26. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழம் தீபம் ஏற்றி வழிபடுவது கூடுதல் நன்மை தரும்.

27. இத்தலத்தில் மேற்கு நோக்கிய நிலையில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயரை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

28. இத்தலத்தில் தம்புச் செட்டித் தெருவில் உள்ள கிழக்கு கோபுர வாசல், “குண வாயில்” என்றும், அரண்மனைக்காரன் தெருவில் உள்ள மேற்கு கோபுர வாசல் “குட வாயில்” என்றும் அழைக்கப்படுகிறது.

29. சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம், காணபத்யம், சவுரம் ஆகிய 6 சமயங்களுக்கும் பொதுவானவளாக காளிகாம்பாள் இயங்குகிறாள்.

30. இத்தலம் சிவனும்-சக்தியும் அருள்பாலிக்கும் தலமாக கருதப்படுகிறது.

31. இத்தலத்தின் உற்சவர் பெயர் பெரிய நாயகி.

32. காளிகாம்பாள் தலத்தில் உள்ள ஒவ்வொரு சன்னதியும், பகுதியும் வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.

33. இத்தலத்தின் வடமேற்கு பகுதியில் அகோர வீரபத்திர சுவாமி உள்ளார். பவுர்ணமி தினத்தன்று அவருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபட்டால் பில்லி, சூனியம், ஏவல் போன்றவை விலகி விடும்.

34. “உள்ளம் உருகுதய்யா… முருகா…” என்று டி.எம்.சவுந்தராஜன் பாடிய பாடலை கேட்டிருப்பீர்கள். மிகவும் இனிமையான அந்த கந்தன் பாடலை இயற்றியவர் ஸ்ரீ ஆண்டவன் பிச்சி என்பவர் ஆவார். 1952-ம் ஆண்டு அவர் காளிகாம்பாள் கோவிலில் உள்ள வடசுதிர்காம முருகப்பெருமான் சன்னதி முன்பு அமர்ந்து இந்த பாடலை பாடினார்.

35. இத்தலத்தின் தல விருட்சமாக மாமாரம் உள்ளது.

36. வசந்த நவராத்திரியை முன்னிட்டு கடந்த 31.3.2014 முதல் 8.4.2014 வரை குங்கும லட்சார்ச்சனை நடந்தது. இந்த குங்கும லட்சார்ச்சனை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

37. காளிகாம்பாளை முறைப்படி தியானித்து வழிபடுபவர்கள் நிச்சயம் செல்வந்தர்கள் ஆகி விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

38. கோவிலின் வாசலில் இருக்கும் கிழக்கு ராஜகோபுரம் 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது.

39. இந்த கோவில் கடற்கரையில் இருந்த போது காளிகாம்பாள் மிகவும் உக்கிரமாணவளாக இருந்ததாகவும், தம்பு செட்டி தெருவுக்கு மாறிய பிறகு சாந்தம் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

40. காளிகாம்பாலுக்கு “நெய்தல் நில காமாட்சி” என்றும் ஒரு பெயர் உண்டு.

41. மச்ச புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம், பவிஷ்ய புராணம் ஆகிய புராணங்களில் இந்த கோவில் பற்றி குறிப்புகள் உள்ளது.

42. இந்திரன், குபேரன், வருணன், வியாசர், பராசரர், அகத்தியர், ஆங்கீரேசர், புலஸ்தியர், விராட புருஷன் விஸ்வகர்மா ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர்.

43. புராணங்களில் இத்தலம் சொர்ணபுரி, பரதபுரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

44. இத்தலத்துடன் தொடர்புடைய சரித்திர சிறப்பு பெற்ற நிகழ்ச்சிகள் கோவிலில் அதை சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

45. இத்தலத்தில் வழிபட்டால் காஞ்சீபுரம் காமாட்சி அம்மனையும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

46. சிவனுக்கும், பார்வதிக்கும் ஏற்பட்ட ஊடலை பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசனம் முடிந்து சிவன்-பார்வதி திரும்பி வரும்போது, ஊடல் உற்சவம் நடத்தப்படுகிறது.

47. விராட புருஷ விஸ்வகர்மா சன்னதியில் வழிபடும் போது “ஓம் தேவ தேவ மகா தேவ விஸ்வப்பிரம ஜகத் குருவே நம” என்று சொல்லி வழிபாடு செய்யலாம். 48. இத்தலத்தில் பூந்தேர், கிண்ணித்தேர், வெள்ளித் தேர் என்று மூன்று வகையான தேர்கள் உள்ளன.

49. இத்தலத்தில் மொத்தம் 33 பஞ்சலோக சிலைகள் உள்ளன. தொல் பொருள் ஆய்வுத் துறையினர் இதை பதிவு செய்துள்ளனர்.

50. இந்த கோவில் உள்ளது போன்று இந்தியாவில் வேறு எங்கும், எந்த தலத்திலும் கிண்ணித் தேர் இல்லை.

51. தினமும் இரவு இத்தலத்தில் நடக்கும் அர்த்த ஜாம பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது.

52. அம்பாள் முன்பு அனைவரும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாலயத்தில் தரிசனத்துக்காக யாரிடமும் சிறப்பு கட்டணம் வசூலிப்பது இல்லை. யாராக இருந்தாலும் வரிசையில் வந்துதான் அம்பாளை வழிபட வேண்டும்.

53. இத்தலத்தில் பக்தர்கள் யாரும் இரவில் தங்க அனுமதிக்கப்படுவதில்லை.

54. சமீபத்தில் இத்தலத்துக்காக அருகில் உள்ள மூன்று மனைகள் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் வாங்கப்பட்டன. அந்த இடத்தில் தற்போது ஆலய விஸ்தரிப்புப் பணி நடந்து வருகிறது.

55. தினமும் இத்தலத்தில் மூன்று கால பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

56. மற்ற மாதங்களை விட கார்த்திகை மாதம் இத்தலத்தில் கோலாகல பூஜைகள் நடத்தப்படும். அதுவும் காளி பிறந்த தினமான கார்த்திகை அமாவாசை தினத்தன்று காளி ஜெயந்தி விழா மிக சிறப்பாக நடைபெறும்.

57. இத்தலம் தோன்றி சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.

58. தமிழ்நாட்டில் இருந்து மட்டுமின்றி வெளி நாடுகிளல் இருந்தும் பலர் இத்தலத்துக்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

59. காளிகாம்பாள் சன்னதி முன்பு 12 கால் மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தால் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

60. சன்னதி முகவரி :
212 ,தம்புச்செட்டி தெரு, மண்ணடி, ப்ராட்வே, சென்னை-600001.✍🏼🌹

Thursday, 21 May 2020

சாஸ்தா அவதாரங்கள்





Forward message


சாஸ்தா அவதாரங்கள்

(நான் படித்து புரிந்து கொண்டதை இங்கு பதிவிடுகிறேன்)

எப்படி விஷ்ணு பத்து (தசா) அவதாரங்கள் உண்டோ., அதே போல சாஸ்தாவிற்கும் எட்டு  அவதாரங்கள் உண்டு.

சாஸ்தா வழிபாடு மிகவும் தொன்மையானது. புராண., இதிகாச காலங்களுடன் சம்பந்தப்பட்டது. தமிழ் கலாசாரத்திற்கும் தமிழர் வழிபாட்டுக்கும் உரிய  தெய்வமாகவே சாஸ்தா விளங்குகிறார். சாஸ்தாவின் அவதாரங்கள் பற்பல. எனினும் எட்டு அவதாரங்களைக் குறிப்பாகச் சொல்வார்கள்.

அஷ்ட சாஸ்தாக்களுக்கும் மையமானவர் *ஆதி பூதநாதர்.* இவர்., பூர்ணா — புஷ்கலா தேவியருடன் கையில் செண்டாயுதம் ஏந்தி காட்சியளிக்கிறார். சாஸ்தாவின் செண்டாயுதத்தை கொண்டுதான் கரிகாலச் சோழன் இமயமலை வரை சென்று வென்று திரும்பியதாகக் குறிப்பு உள்ளது. கிராமம்., நகரம்.,  நாடு., வீடுகளைக் காத்து வருபவர் இந்த ஆதி பூதநாதர். மழை பெய்து., நீர் வளம் நிலவளம் பெருக்கி பயிர் செழிக்க அருள்பவர். காணாமல் போன  பொருட்களை மீட்டுத் தருபவர்.

அஷ்ட சாஸ்தாவில் முதலாமவர்., *சம்மோஹன சாஸ்தா.* கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சாஸ்தா இவரே., நாம் வீட்டில் இல்லாத நேரத்தில்  நமது வீட்டையும் நம் குடும்பத்தாரையும் காத்தருள்பவர். இல்லற ஒற்றுமையை ஓங்கச் செய்பவர்.

இரண்டாவதாக *கல்யாண வரத சாஸ்தா.* இவர் தம் இரு தேவியருடன் பத்துக் கரங்களில் ஆயுதங்கள் தாங்கி., அபய ஹஸ்தம் காட்டி., மங்களம் வழங்குகிறார். திருமணத் தடைகளை தகர்க்கிறார்.

மூன்றாவதாக *வேத சாஸ்தா (ஸிம்ஹாரூட சாஸ்தா)* வேதங்கள் துதிக்கும் திருப்பாதங்கள் உடையவர். சர்வ வேத சாரமான ஞானத்தை அருள்கி றார். வேதங்கள் தழைக்க அருள்புரிகிறார். சிம்ஹத்தை வாஹனமாக உடையவர்.

நான்காவதாக *ஞான சாஸ்தா.* வாக்கு வன்மையை அளிப்பவர். ஞானமும் விஞ்ஞானமும் போதிப்பவர்.  மாணிக்க வீணையை ஏந்திய கையுடன்., கல்லால மரத்தின் அடியில் அமர்ந்துள்ள தக்ஷிணாமூர்த்தி போல்., குரு ஸ்தானத்தில் அமர்ந்து மேதா தக்ஷிணாமூர்த்தியாக காட்சியளிக்கிறார். சகலருக்கும் கல்வி அறிவு வழங்குபவர்.

ஐந்தாவதாக *சந்தான பிராப்தி சாஸ்தா.* குழந்தைப் பேறு தருபவர். ராமாயணத்தில் புத்திர காமேஷ்டி யாகம் நடந்தபோது யாகக் குண்டத்திலிருந்து  கையில் பாயச பாத்திரத்துடன் ஒரு ‘‘மகத்பூதம்’’ தோன்றியது என்று வால்மீகி வர்ணிப்பது இந்த சந்தான பாக்கியம் அருளும் சாஸ்தாவையே ஆகும். 

ஆறாவதாக *ஸ்ரீ தர்ம சாஸ்தா.* சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தாவை அனைவருக்கும் தெரியும். தவறுகளை களைந்து., பிழைபல பொறுத்து ஞானத்தை மௌனமாக உபதேசித்து., அனைவரையும் தடுத்தாட்கொண்டு முக்தி நிலை அருள்பவர்.

ஏழாவதாக *மஹா சாஸ்தா (கஜாரூட சாஸ்தா)* கையில் கதை., அங்குசம்., பாசம்., சூலம் போன்ற ஆயுதங்களோடு., மதம் கொண்ட யானை மீதமர்ந்து எதிரிகளை அழிப்பவ ராக திகழ்கிறார். வாழ்வில் வெற்றி மேல் வெற்றி தருகிறார்.

எட்டாவதாக *வீர சாஸ்தா (அஸ்வாரூட சாஸ்தா)* ஆதிசங்கரர் பக்தியோடு இவரைத் தொழுது ஸ்தோத்திரங்களை  இயற்றியுள்ளார். கைகளில் ஆயுதங்கள் தாங்கி., மின்னலை விட வேகமாகச் செல்லும் பாி மீதேறி., தீயவர்களை அழிப்பவர். மண்ணின் மைந்தர்களை  காக்கும் மாவீரன்.

கிரிவலமுறை

கிரிவலமுறை : திருஅருணாசலேச்வரர் கோயிலருகிலுள்ள இரட்டைப் பிள்ளையார் சந்நிதியின் பின்புறத்தினின்று திருஅண்ணாமலையைத் தரிசிக்க வேண்டும். இதற்குச் “சாணக்ய தரிசனம்“ என்று பெயர். அறிவில் சிறந்த சாணக்யர் தம் சபதத்தை இறையருளால் நிறைவேற்றித் தம் குடுமியை மீண்டும் முடிந்த இடம் இதுவே. இத்தரிசனத்தால் குழந்தைகளுக்குக் கல்வியறிவு விருத்தியாகும்.. படிப்பில் மந்தமாயுள்ள பிள்ளைகள் இத்தரிசன மஹிமையால் கல்வியில் நல்ல முன்னேற்றமடைவர். இவ்விடத்தில் சிலேட்டு, எழுதுகோல்கள், நோட்டுப் புத்தகங்கள் போன்றவற்றைத் தானமளித்தால் இதன் பலனாய் அவர்தம் குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெறுவர்.  ஸ்ரீ இரட்டைப் பிள்ளையார் தரிசனத்திற்குப் பின் திரு அருணாசல சிவன் கோயில் கிழக்குக் கோபுரம் வழியே உள் நுழைந்து, இடப்புற வாயில்படிப் பிள்ளையார், கோபுரத்தின் உட்புறம் வலது, இடப்புறமுள்ள ஸ்ரீகாளிதேவியர், கம்பத்து இளையனாராகிய ஸ்ரீமுருகன், ஸ்ரீநந்தீஸ்வரர், கிளிக்கோபுரம், இடப்புறம் திரும்பி ஸ்ரீபிரம்மலிங்கம் ஆகிய இறைமூர்த்திகளைத் தரிசித்துத் தெற்குக் கோபுரம் குளத்தருகே, மூன்று கோபுரங்களைக் காணும், முக்கூட்டுத் தரிசனத்தைக் கண்டு, தெற்குக் கோபுரவாயில் வழியே வெளிவந்து கிரிவலத்தைத் துவங்க வேண்டும். முக்கூட்டுத் தரிசனத்தின் பலனால் குடும்பத்தில் மனைவி, மக்களிடையேயுள்ள பிரச்சனைகள் சுமூகமாகத் தீர்ந்து மன அமைதி கிட்டும். அலுவலகம், குடும்பம், பொருளாதாரத் துன்பங்களில் அவதியுறுவோர்க்கு முக்கூட்டுத் தரிசனம் நல்வழிகாட்டி அமைதியைத் தரும். இதற்கெல்லாம் ஆழ்ந்த குரு நம்பிக்கை தேவை.
கிரிவலத் துவக்கம் : 1. ஸ்ரீ இரட்டைப் பிள்ளையாரில் துவங்கும் திருஅண்ணாமலை கிரிவலத்தில் மௌனம் அனுஷ்டிப்பது சிறந்தது.
2. ஓம் நமசிவாய, ஓம் முருகா, ஓம் நமோ நாராயணா, ஸ்ரீகாயத்ரி மந்திரம்,, ராம நாம தாரக மந்திரம் போன்ற இறை நாமாக்களை, இறைத் துதிகளை இடைவிடாது கூட்டாகப் பாராயணம் செய்தலும் மௌனத்திற்குரிய பூரண பலனளிக்கும்.
3. கிரிவலத்தில் செருப்பு அணிதல் கூடாது. ஆண்கள் வேஷ்டியை மேல்பகுதி இடப்புறமாகச் செருகி அணிதல் சிறந்தது. பஞ்சகச்சம் (OR) மேற்கு வங்கம்/ஆந்திர பாணியில் வேஷ்டியைக் கச்சம் வைத்துக் கட்டினால் சுவாச நிலை சீர்பட்டு மனம் அமைதி பெறும். பெண்கள் மடிசார் முறையில் புடவை அணிவது உத்தமமானது.
4. நெற்றிக்கு மஞ்சள்/விபூதி/குங்குமம்/சந்தனம்/சிந்தூரம்/ நாமம் ஏதேனும் இட்டுத்தான் கிரிவலம் வரவேண்டும்.
5. கிரிவலம் வருகையில் பழங்கள், பிரெட், பிஸ்கட், சாதம், நீர், மோர், உடைகள் போன்றவற்றை எடுத்துச் சென்று ஆங்காங்கே ஏழைகளுக்கும், பசுக்கள் போன்றவற்றிற்கும் தானமாக அளித்திட அவற்றின் பலன்கள் அபரிமிதமாகப் பெருகி நமக்கு ஆசியளிக்கின்றன.
பெரியோரின் ஆசி
பிரபஞ்சத்தில் சர்வேஸ்வர மூர்த்தியே ஸ்தூல ரூபமாக விளங்கும் ஒரே மலை திருஅண்ணாமலை, ஆதலின் மஹரிஷிகள், யோகிகள், ஞானிகள், முமூட்சுக்கள் போன்றோர் எப்போதும் வெவ்வேறு ரூபங்களில் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து இறைவனை ஸ்தூல ரூபத்தில் தரிசித்து பேரானந்தம் அடைந்து அதனைக் கிரிவலம் வருவோர்க்கு ஆசியாக அளித்திட அவர்தம் புண்ணிய சக்தியே இறையருளால் நம் துன்பங்களைத்   துடைக்கின்றன.
  1. நம் வசு, ருத்ர, ஆதித்ய பித்ரு தேவர்களும், உத்தம கந்தர்வர்களும், மஹரிஷிகளும் வெவ்வேறு ரூபங்களில் நம் தான தருமங்களைப் பெற்று நம்மை ஆசீர்வதிக்கின்றனர். திருஅண்ணாமலையின் தெய்வீக விசேஷம் என்னவெனில் எப்போதும், எந்நேரமும் யாரேனும் ஒருவரேனும் கிரிவலம் செய்த வண்ணம் இருப்பர். கிரிவலப் பகுதியில் ஸ்ரீகாயத்ரீ தரிசனம், ஏகமுக தரிசனம், ஸ்ரீசோமாஸ்கந்த தரிசனம், பஞ்சமுக தரிசனம், தசமுக தரிசனம் என பலவகைப்பட்ட தரிசனங்கள் உண்டு. இதைத் தக்க குருமூலம் அறிவோமாக!
  2. நம் குருமங்கள கந்தர்வா நூற்றுக்கணக்கான கிரிவல தரிசனங்களை இறையடியார்களுடன் கிரிவலம் வந்தவாறே அவற்றின் மஹிமைகளோடு காட்டியுள்ளார். இத்தகைய ஆன்மீகப் பெரியோர்களை நாடினால் திருஅண்ணாமலையின் ஆன்மீக இரகசியங்களை நன்கு உய்த்துணரலாம்.
  3. செங்கம் ரோடில் இருந்து கிரிவலப்பாதை பிரியும் இடத்தில் இருந்து சிறிது தொலைவில் சிங்கமுகம் கூடிய சுதையுடன் “சிவராஜ சிங்க தீர்த்தம்“ உள்ளது. இவ்விடத்தில் எந்த ஒரு மனிதனும் தான் வாழ்க்கையில் செய்த எவ்விதக் கொடிய தீவினைக்கும், தீயபழக்கத்திற்கும், (மது, புகை, தகாத உறவுகள், களவு ) தக்க முறையில் இத்தீர்த்தத்தில் பரிகாரம் தேடலாம். ஆனால் தன்னால் பாதிக்கப்பட்டோர்க்குத் தக்க நிவாரணமளித்து அத்தவறை மீண்டும் செய்யலாகாது என்ற வைராக்கியம் மேற்கொள்ள வேண்டும். தவறிடில் கடும் சாபங்கள் உண்டு.
  4. அடி அண்ணாமலையில் ஸ்ரீஆதி அண்ணாமலையாரைத் தரிசித்து, தசமுக தரிசனத்தைப் பெற வேண்டும்.
  5. பல தரிசனங்களை அடுத்து வருவது சிவசக்தி ஐக்யஸ்வரூப தரிசனம் ஆகும். இங்கு சக்தி சொரூபமாக ஸ்ரீபார்வதிதேவி மலைமுகடாக உச்சியின் முன் காட்சியளிக்கின்றாள். உச்சியே சிவம், முன்னிற்கும் முகடே சக்தி. இவ்விடத்தில் தான் ஸ்ரீஅருணாச்சலேஸ்வரரின் பரிபூரண இறையருளுடன் நம் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்தமஹாபுருஷரின் குருவருளுடனும், நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் அருட்கடாட்சத்தால் “ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம்“ நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இவ்விடத்திலிருந்து பெறுகின்ற சிவசக்தி ஐக்ய சொரூப தரிசனத்தால் குழந்தைப் பேறு கிட்டும். ஒரு நிலைப்பட்ட நிலை எளிதில் கூடும். இது பல யுகங்களில் ஸ்ரீஅகஸ்திய மஹாபிரபுவின் பாரம்பர்ய சித்த புருஷர்கள் தங்கி அருள்பாலித்த விசேஷப் பகுதியாகும்.
  6. ஸ்ரீகுபேரலிங்க தரிசனம், ஸ்ரீஇடுக்குப் பிள்ளையார் தரிசனம், பஞ்சமுக லிங்க தரிசனம் இவற்றுடன் இரட்டைப் பிள்ளையார் கோயிலுக்கு முன்னுள்ள ஸ்ரீபூத நாராயணப் பெருமாள் சன்னதியில் தான் கிரிவலம் நிறைவு பெறும்.
  7. ஓம்காரப் பிரணவத்தில் துவங்கி இப்பூதவுடலில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருவதற்கு அருள்பாலித்த ஸ்ரீபூத நாராயணப் பெருமானை வணங்கி் கிரிவலத்தைப் பூரணம் செய்திடல் வேண்டும்.
  8. இக்கிரி வலத்திற்குப் பிறகு கோவிலில் ஸ்ரீஅருணாசலேஸ்வரரையும், ஸ்ரீஉண்ணாமுலையம்மையையும் வணங்கிடில் பிரார்த்தனா பலன் பரிபூரணமடையும்.

Wednesday, 20 May 2020

வள்ளலாரின் மரணமில்லா பெருவாழ்வு -சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர் தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே.!

*தூங்கினால் அருள் கிடைக்காது*.!

இறைவன் இரவு பகல் காணாது இயங்கி கொண்டு உள்ளார்.இறைவன் குழந்தைகளாகிய
ஆன்மாக்கள் கண் உறங்கலாமா ? 

அருள் பெற்று மரணத்தை வெல்ல வேண்டுமானால் தூங்காமல் இருப்பதே  சுகம் தரும் செயலாகும்.

நாம் எந்த எந்த வகையில் மரணத்தை வெல்ல முடியும்.வெல்லாம்  என்று வழி தெரியாமல் அலைந்து கொண்டு உள்ளோம்

ஜீவகாருண்யத்தால் மரணத்தை வெல்லலாம் என்று சன்மார்க்க அன்பர்கள் நினைத்துக் கொண்டு உள்ளார்கள்.அது ஒருவகை இம்மை இன்ப வாழ்க்கை. இம்மை இன்ப லாபத்திற்கு பயன் உள்ளதாக இருக்கும்.

மேலும் மோட்ச வீட்டின் திறவு கோல் கிடைக்கும். அருள் கோட்டையின் கதவு திறந்து உள்ளே போக இறைவன் அனுமதியும் அருளும் வேண்டும்.

உலகியல் வாழ்க்கையில் ஈடுபாடுள்ள மனிதர்கள் எவரும் மரணத்தை வெல்ல வாய்ப்பே இல்லை.

நாம் உலக வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டு வாழ்வதால் இறைவனை முழுமையாக நேசிக்க வாய்ப்பே இல்லை.

*இறைவனை தொடர்பு கொள்ள தூங்காமல் விழித்திருந்து இடைவிடாது அன்பு செலுத்த வேண்டும்.*

ஒரு மனிதனுக்கு உணவு உட்கொண்டால் உறக்கம் கண்டிப்பாக வரும் என்பதை வள்ளலார் பல பாடல்களில் தெரியப்படுத்துகின்றார்.
வள்ளலார் பாடல் !

சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரச சன் மார்க்கத்
திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம்

ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்
உலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே

வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ
மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா

சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்
தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே.!

மனிதர்கள் உலக வாழ்க்கையில் ஈடுபாடு உள்ளதால் உணவு உட்கொள்ள வேண்டியது அவசியமாகும்..
உணவால் உறக்கம் கண்டிப்பாக வரும்.

உறக்கம் வருவதால் இந்திரியங்கள் மற்றும் தத்துவங்கள் யாவும் தழைத்து மனம் புத்தி சித்தம் அகங்காரம் உள்ளம் யாவும் தன் விருப்பம்போல் புறத்தில் சென்று அலைந்து திரிவதால் உயிரையும் உடம்பையும் காப்பாற்ற முடியாமல் மரணத்திற்கு இட்டு செல்லும்.

*எனவேதான் வள்ளலார் தன் வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொண்டார் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்*

மற்ற ஞானிகளைவிட  வள்ளலார் வித்தியாசமானவர்.
தனித்தன்மை வாய்ந்தவர்.வேறு எந்த ஞானிகளுடனும் வள்ளலாரை  ஒப்பிட்டு பார்ப்பது அறியாமையாகும்.

வள்ளலார் பாடல் !

கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும்
கனவே கண்டு உளம் மகிழ்வேன் கனவொன்றோ நனவும்

எண்அடங்காப் பெருஞ்ஜோதி என்இறைவர் எனையே
இணைந்திரவு பகல்காணா தின்புறச்செய் கின்றார்

மண்உறங்கும் மலைஉறங்கும் வளைகடலும் உறங்கும்
மற்றுள எல்லாம் உறங்கும் மாநிலத்தே நமது

பெண் உறங்காள் எனத்தாயர் பேசிமகிழ் கின்றார்
பெண்கள்எலாம் கூசுகின்றார் பெருந்தவஞ்செய் கிலரே.!
பற்றும்
இந்த உலகில் உள்ள பஞ்ச பூதங்களும்.
கிரகங்களும் உறங்கலாம்.மண் உறங்கும். மலை உறங்கும். வளை கடலும் உறங்கலாம் .மற்றும் உள்ள எல்லாமும் உறங்கலாம்.

இங்கே நமது பெண் உறங்காள் எனத்தாயார் பேசி மகிழ்கின்றார் பெண்கள் எலாம் கூசுகின்றார் பெருந்தவம் செய்கிலரே என்கின்றார்.

*மாயையானது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடத்தில் சொல்கிறது*.

இந்த பஞ்ச பூத உலகில் உள்ள ஆன்மாக்கள் எல்லாம் பெண்களாகும்.
பெண்கள் ஆண்களை விரும்ப வேண்டும் .இங்கே ஆண் என்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும். அதாவது ஆன்மாக்கள் அன்பு செலுத்தி ஆண்டவரை காதல் கொள்ள வேண்டும்.

இங்கே வள்ளலார் என்ற பெயருடைய ஓரே ஒரு ஆன்மா மட்டும் உண்ணாமல் உறங்காமல் ஆண்டவர் வருவார் வருவார் என்று இரவு பகல் காணாமல் விழித்திருக்கின்றது.

இந்த ஆன்மாவைப் போல் உலகில் எந்த ஆன்மாவும் இறைவரை தொடர்பு கொள்ள இப்படி ஒரு பெருந்தவம் செய்யவில்லை என்கின்றதாம்.

*மேலும் வள்ளலார் பாடல்கள்* *!

தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன்
ஏக்கம் தவிர்ந்தேன்என்று உந்தீபற
இன்னமுது உண்டேன்என்று உந்தீபற.!

தூக்கம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே
ஆக்கமென ஓங்கும்பொன் அம்பலத்தான் - ஏக்கமெலாம்
நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன்வடிவம்
தாங்கினேன் சத்தியமாத் தான்.!

தூக்கம்எனும் கடைப்பயலே சோம்பேறி இதுகேள்
துணிந்துனது சுற்றமொடு செல்லும் அரைக் கணத்தே
தாக்கு பெருங் காட்டகத்தே ஏகுக நீ இருந்தால்
தப்பாதுன் தலைபோகும் சத்தியம் ஈ தறிவாய்
ஏக்கமெலாம் தவிர்த்துவிட்டேன் ஆக்கமெலாம் பெற்றேன்
இன்பமுறு கின்றேன்நீ என்னைஅடை யாதே
போக்கில்விரைந் தோடுக நீ பொற்சபைசிற் சபைவாழ்
பூரணர்க்கிங் கன்பான பொருளன் என அறிந்தே.!

மேலும் பதிவு செய்கிறார்.

தூங்கலை மகனே எழுக நீ விரைந்தே
தூய நீர் ஆடுக துணிந்தே
பாங்குற ஓங்கு மங்கலக் கோலம்
பண்பொடு புனைந்து கொள் கடிகை
ஈங்கு இரண் டரையில் அருள்ஒளித் திருவை
எழில் உற மணம்புரி விப்பாம்
ஏங்கலை இது நம் ஆணைகாண் என்றார்
இயன்மணி மன்றிறை யவரே.!

தூக்கங் கெடுத்தான் சுகங்கொடுத்தான் என்னுளத்தே
ஏக்கந் தவிர்த்தான் இருள்அறுத்தான் - ஆக்க மிகத்
தந்தான் எனை ஈன்ற தந்தையே என்றழைக்க
வந்தான்என் அப்பன் மகிழ்ந்து.!

தூங்காதே விழித்திருக்கும் சூதறிவித் தெனைஆண்ட துரையே என்னை
நீங்காதே என்னுயிரில் கலந்துகொண்ட பதியேகால் நீட்டிப் பின்னே
வாங்காதே விரைந்திவண் நீ வரல்வேண்டும் தாழ்த்திடில் என் மனந்தான் சற்றும்
தாங்காதே இதுநினது தனித்ததிரு வுளமறிந்த சரிதம் தானே.!

தூக்கமும் துயரும் அச்சமும் இடரும்
தொலைந்தன தொலைந்தன எனைவிட்
டேக்கமும் வினையும் மாயையும் இருளும்
இரிந்தன ஒழிந்தன முழுதும்
ஆக்கமும் அருளும் அறிவும்மெய் அன்பும்
அழிவுறா உடம்பும்மெய் இன்ப
ஊக்கமும் எனையே உற்றன உலகீர்
உண்மை இவ் வாசகம் உணர்மின்.!

தூக்கம் தொலைத்தான்என்று ஊதூது சங்கே
துன்பம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே
ஏக்கம் கெடுத்தான்என்று ஊதூது சங்கே
ஏம சபையான்என்று ஊதூது சங்கே.!

மேலே கண்ட பாடல்கள் யாவும் தூக்கத்தை தொலைத்ததும் தூங்காத விழித்திருக்கும் சூதுகளை தெரிந்து கொண்டதையும்.தூக்கத்தினால் வரும் துயரம் அச்சமும் பயமும் இடையூறும் மரணம் தவிர்த்ததையும் .
தூக்கத்தை வென்று  இறைவனுடன் கலந்து கொண்ட அருள் வல்லபத்தையும்.
ஆனந்த நெகிழ்ச்சி களையும். தெளிவாக மேலே கண்ட பாடல்களிலே பதிவு செய்துள்ளார்.

வள்ளலார் வாழ்க்கையில் தூங்கியதே இல்லை. எப்போதும் தூங்காமல் விழிப்புடனே இருப்பார்.

*ஒருமனிதன் ஒரு நாளைக்கு ஒருமணி நேரம் தூங்கப் பழகினால் ஆயிரம் வருடம் உயிர் பிரியாமல் வாழலாம் என்பார் வள்ளலார்*.

எனவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொள்வதற்கும் அருள் பெறுவதற்கும் தூக்கமும் ஒரு தடை என்பதை சுத்த சன்மார்க்க அன்பர்கள் தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கு போதிக்க வேண்டும்.

 உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம்
விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க!

 சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
உத்தம னாகுக வோங்குக வென்றனை!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

அஷ்டமா சித்திகள்

Copied from Face book சித்தர்களின் குரல்

"அஷ்டமா சித்திகள்"  குறித்த என் குருநாதர் திருமூலர் பெருமான் திருமந்திரத்தில் சொல்லியுள்ள அபூர்வ யோக  ரகசியங்களை உங்களுடன் ஆழமாக இன்று சித்தர்களின் குரல் வாயிலாக விரிவாக பகிர்கிறேன்...

640 - எட்டு சித்திகளும் கிட்டும்.
------------------------------------------------------

பணிந்து எண்திசையும் பரமனை நாடித்
துணிந்து எண்திசையும்தொழுது எம் பிரானை
அணிந்து எண்திசையினும் அட்டமாசித்தி
தணிந்து எண்திசைச் சென்று தாபித்தவாறே.

எண்திசைகளிலும் சிவனே உயர்ந்தவன் என்று துணிந்து அந்தப் பரமனை நாடிப் பணிய வேண்டும். எண்திசைகளிலும் சிவனைத் தொழுதல் எட்டு சித்திகளும் தாமே வந்தடையும்.

641 - பிறவி நீங்கும்.
-----------------------------------

பரிசுஅறி வானவர் பண்பன் அடியெனத்
துரிசுஅற நாடியே தூவெளி கண்டேன்
அரியது எனக்கு இல்லை அட்டமாசித்தி
பெரிது அருள் செய்து பிறப்பு அறுத்தானே.

தேவர்களின் பக்குவத்துக்கு ஏற்ப அருளை வழங்கும் பண்புடையவன் சிவன். அவன் திருவடிகளே அடைக்கலம் என்று நான் அடைந்த போது என் குற்றங்கள் நீங்கிப் பரவெளியைக் கண்டேன். அரிய பொருள் என்று எனக்கு எதுவும் இல்லை. எட்டு சித்திகளையும் எனக்குத் தந்து என் பிறவிப் பிணியையும் நீக்கினான் சிவன்.

642 - சிவப்பேறு.
---------------------------

குரவன் அருளில் குறி வழி மூலப்
பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசை சேரப்
பெரிய சிவகதி பேறு எட்டாம் சித்தியே.

குருவின் அருளால் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை ஜீவசக்தியுடன் பொருத்த வேண்டும். அது குறிவழியே வெளியே பாய்வதைத் தடுத்து மேலே ஏற்ற வேண்டும். சாம்பவி அல்லது கேசரி என்ற இரண்டு முத்திரைகளில் ஏதோ ஒன்றைச் செய்தால் சிவகதியைப் பெறலாம் அதன் பயனாக எட்டு சித்திகளையும் பெறலாம்.

சாம்பவி :-
கண் பார்வையை மூக்கு நுனியில் நிறுத்தி அனாஹதச் சக்கரத்தைப் பார்த்துக் கொண்டிருத்தல்

கேசரி:-
கண் பார்வையை புருவ மத்தியில் நிறுத்தி ஆக்ஞா சக்கரத்தைப் பார்த்துக் கொண்டிருத்தல்.

643 - பரகாயம் பெறலாம்.
--------------------------------------------

காயதி பூதம், கலை, காலம், மாயையில்
ஆயாது அகல அறிவு ஒன்று அனாதியே
ஓயாப் பத்தி அதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலும் ஆமே.

வான் முதலிய பஞ்ச பூதங்கள், கலை, காலம், மாயை என்ற தத்துவங்கள் இவற்றில் தோயாமல் அகன்று செல்லவேண்டும். ஆன்ம அறிவுடன் நீங்காத சக்தியைக் கூட்டினால் அழியாத மேலான உடலைப் பெறலாம்.

644 - கர்மயோகம்.
-------------------------------

இருபதி னாயிரத் தெண்ணூறு பேதம்
மருவிய கன்மமாம் அந்த யோகம்
தரும் இவை காய உழைப்பு ஆகும் தானே
அரும் இரு நான்காய் அட்ட மாசித்திக்கே.

கர்ம யோகம் இருபதாயிரத்து எண்ணூறு பேதங்களை உடையது. இவைகள் அனைத்துமே உடல் உழைப்புக்கள் ஆகும். அஷ்டாங்க யோகத்தில் இவைகள் அடங்குவதால் அட்டமா சித்திகளை அளிக்கும் வல்லமை கொண்டது கர்ம யோகம்.

645 - கேவல கும்பகம் சித்திக்கும்.
-----------------------------------------------------------

மதிதனில் ஈராறாய் மன்னும் கலையில்
உதயம்அது நால் ஒழியர் ஓர் எட்டுப்
பதியும்; ஈராறு ஆண்டு பற்று அறப் பார்க்கில்
திதமான ஈராறு சித்திகள் ஆமே.

சந்திர நாடியாகிய இட கலையில் இழுக்கப் படும் மூச்சு பன்னிரெண்டு அங்குலம் உள்ளே செல்லும். பிங்கள நாடி வழியாக வெளிப்படும் மூச்சு நான்கு அங்குலம் மட்டுமே. மீதி எட்டு அங்குலம் மூச்சு உள்ளே தங்கும். உலகப் பற்றை விட்டு விட்டு இதை உறுதியாகக் கவனித்து வந்தால் பெரும் சித்திகள் கைக் கூடும்.

646 - சித்திகள் வந்து சேரா!
-----------------------------------------------

நாடும் பிணியாகும் நம் சனம் சூழ்ந்தக்கால்
நீடும் கலை, கல்வி, நீள் மேதை கூர் ஞானம்
பீடு ஒன்றினால் வாயாச் சித்தி பேதத்தின்
நீடும் துரம் கேட்டால் நீள் முடிவு ஈராறே.

நம் உறவினர்கள் நம்மைச் சூழ்ந்து இருந்தால் அதனால் பந்தம் உண்டாகும். கலையறிவு, கல்வி, கூர்மையான அறிவு, நிறைந்த அறிவு இவை நமக்குச் சித்திக்கா! பேதமாக இருந்து கொண்டு பெருகும் ஒலியினைப் பன்னிரண்டு ஆண்டுகள் விடாமல் கேட்டால் நமக்குச் சித்திகள் சித்திக்கும்.

647 - பெறும் பயன்கள் இவை.
-----------------------------------------------------

ஏழா னதில் சண்டவாயுவின் வேகியாம்;
தாழா நடை பல யோசனை சார்ந்திடும்;
சூழான ஓர் எட்டில் தோன்றா நரை திரை ;
தாழான ஒன்பதில் தான் பரகாயமே.

நாதத்தை அறிந்து கொண்டவர் ஏழு ஆண்டுகளில் சண்ட மாருதம் போலச் செல்லும் வேகத்தைப் பெறுவார். நடை தளராமல் வெகு தொலை செல்ல வல்லவர் ஆவார். எட்டு ஆண்டுகளுக்குப் பின் நரை திரை இவை தோன்றா. ஒன்பது ஆண்டுகளில் அழியாத, மேலான, ஓர் உடல் கிடைக்கும்.

648 - பெறும் பிற பயன்கள் இவை.
------------------------------------------------------------

ஈரைந்தில் பூரித்துத் தியான ருத்திரன்
ஏர்வு ஒன்று பன்னொன்றில் ; ஈராறாம் எண்சித்தி
சீர் ஒன்று மேல்ஏழ் கீழ்ஏழ் புவிச் சென்று
ஏர் ஒன்று வியாபியாய் நிற்றல் ஈராறே.

பத்து ஆண்டுகள் தொடர்ந்த தியானப் பயிற்சியால் கீழே போகும் சக்திகளை மேலே நிரப்பிக் கொண்டு ஒரு ருத்திரன் போல விளங்கலாம். பதினோரு ஆண்டுகளில் எட்டு சித்திகள் சித்திக்கும், பன்னிரண்டு ஆண்டு தியானப் பயிற்சியால் கீழ் உலகங்கள் ஏழு, மேல் உலகங்கள் ஏழு இவற்றில் எதற்கும் சென்று வரும் ஆற்றல் கிடைக்கும்.

649 - யோகியரின் சித்திகள்.
--------------------------------------------------

தானே அணுவும் சகத்துத்தன் நோன்மையும்
மானாக் கனமும், பரகாயத் தேகமும்,
தான் ஆவது பரகாயம் சேர் தன்மையும் ,
ஆனாத உண்மையும், வியாபியும் ஆம் எட்டே.

தானே மிகச் சிறிய அணிமாவாகவும்; உலகத்தைப் போன்ற பெரிய மகிமாவாகவும்; அளக்க முடியாத கனத்தை உடைய கரிமாவாகவும், வானத்தைப் போன்று லேசான லகிமாவாகவும், அழிவில்லாத உடலைப் பெறும் பிராப்தியாகவும், அயலான் உடலை அடைய வல்ல பிரகாமியமாகவும்; உண்மையான ஈசத்துவமாகவும்; உலகம் முழுவதையும் தன் வயப்படுத்தும் வசித்துவமாகவும் பெருமையுடன் கூறப்படும் யோகியர் அடையும் எட்டு சித்திகள்.

விளக்கம்:
************
1. அணிமா: மிகவும் நுட்பமான உடலை எடுத்தல்
2. மகிமா : மிகவும் பருமனான உடலை எடுத்தல்
3. கரிமா : மிகவும் கனமான உடலை எடுத்தல்
4. லகிமா : மிகவும் லேசான உடலை எடுத்தல்
5. பிராப்தி : அழியாத உடலை எடுத்தல்
6. பிராகாம்யம் : விரும்பிய பிற உடலில் புகுதல்
7. ஈசத்வம் : எல்லோருக்கும் மேம்பட்டு இருத்தல்
8. வசித்வம்: எல்லோரையும் தன்வசப்படுத்துதல்

650 - முக்தி சித்திக்கும்.
----------------------------------------

தாங்கிய தன்மையும் தான் அணுப் பல்லுயிர்
வாங்கிய காலத்தும் மற்று ஓர் குறை இல்லை,
ஆங்கே எழுந்த ஓம் அவற்றுள் எழுந்தும் மிக்கு
ஓங்கிவர முத்தி முந்தியவாறே.

சிவயோகி அணுவின் தன்மையை அடைந்த போதும், பல வேறு உடல்களைத் தாங்கிய போதும், அவற்றை மீண்டும் வாங்கி ஒடுக்கிய போதும் ஒரு மாற்றமும் நிகழாது. "ஓம்" என்னும் பிரணவ நாதம் மேலே எழுந்து சென்று சஹஸ்ரதளத்தை அடையும் பொழுது யோகிக்கு முக்தி உண்டாகும்.

651 - பிரணவ யோகம் செய்யும் காலம்.
--------------------------------------------------------------------

முந்திய முந்நூற்று அறுபது காலமும்
வந்தது நாழிகை வான் முதலாயிடச்
சிந்தை செய் மண் முதல் தேர்ந்தறி வார்வலர்
உந்தியுள் நின்று உதித்து எழுமாறே.

கதிரவன் தோற்றம் முதல் உள்ள முப்பது நாழிகைகள் வான், காற்று, தீ, நீர், பூமி என்ற பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆறு ஆறு நாழிகையாகக் கொள்ளப்படும். இரவும் முப்பது நாழிகைகள். இதுவும் நிலம், நீர், தீ, காற்று, வானம் என்ற வரிசையில் ஒவ்வொன்றுக்கும் ஆறு ஆறு நாழிகைகளாகக் கொள்ளப் படும். இதை அறிந்து கொண்டு கதிரவனின் உதயத்துக்கு முன்னும் பின்னும் உள்ள வானத்துக்குரிய ஆறும் ஆறும் ஆகிய பன்னிரண்டு நாழிகைகளை பிரணவ யோகத்துக்குப் பயன் படுத்தினால் கொப்பூழில் உள்ள கதிரவனை மேலேற்றித் தலைக்குக் கொண்டு போக இயலும். இதனால் நாதமும், விந்துவும் வந்து அமையும்.

652 - உடலைக் கடந்த இன்பம் கிடைக்கும்.
-------------------------------------------------------------------------

சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே
முத்தம் தெரிந்தும் உற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கு அற்றோர்
சித்தம் பரத்தில் திருநடத்தோரே.

வெளியில் செல்லாமல் அடக்கப்பட்ட மனம் மாறிச் சிவமயம் ஆகிவிடும். முக்தியை ஆராய்ந்து, அதை அறிந்து கண்டு கொண்ட சிவயோகியர் மோனத்தில் இருப்பர். அவர்கள் ஐம்பொறிகளுடன் தொடர்பு அற்றவர்கள். அதனால் மனத் தூய்மை பெற்றவர். அறிவு என்ற வானத்தில் தத்துவங்களைக் கடந்து சிவத்துடன் பொருந்தி இருப்பர். அதனால் அவர்கள் உடலைக் கடந்த ஒரு தெய்வீக இன்பம் அடைவர்.

653 - ஒன்பது வாயுக்கள்.
-------------------------------------------

ஒத்த இவ்ஒன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இவ்ஒன்பதின் மிக்க தனஞ்சயன்
ஒத்து இவ் ஒன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்ததே.

உடலில் இயங்குகின்ற ஒன்பது வாயுக்களும் சமமாக இருக்க வேண்டும். ஏதொன்றும் மிகுதியாகவும் கூடாது. குறையவும் கூடாது. இவ்வொன்பதைத் தவிர தனஞ்சயன் என்ற பத்தாவது வாயுவும் உடலில் உள்ளது. ஒத்து இயங்கும் இவ்வொன்பது வாயுக்களுடன் தனஞ்சயனும் கூடி இயங்கினால் உடலும் உயிரும் நீங்காமால் கூடி இருக்கும்.

உடலில் உள்ள பத்து வாயுக்கள்:-
**************************************
பிராணன்,
அபானன்,
வியானன்,
சமானன்,
உதானன்,
நாகன்,
கூர்மன்,
கிருகரன்,
தேவதத்தன்,
தனஞ்சயன்.

654 -  தனஞ்சயனின் அவசியம்.
----------------------------------------------------

இருக்கும் தனஞ்சயன் ஒன்பது காலில்;
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்;
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்,
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.

தனஞ்சயன் என்ற வாயு மற்ற வாயுக்கள் உள்ள நாடிகளில் பொருந்தி இருக்கும் . அது இருநூற்று இருபது மூன்றாவது மண்டலம் ஆகிய அகந்தை மண்டலத்தில் பொருந்தி இருக்கும். தனஞ்சயன் உடலில் இல்லாவிட்டால் அந்த உடல் வீங்கி வெடித்துவிடும். அதனால் எல்லா வாயுக்களும் உடலில் இருந்து நீங்கிய பிறகே தனஞ்சயன் என்னும் வாயு நீங்கும்.

முக்கியமான பத்து நாடிகள்:-
*********************************
இடை,
பிங்களை,
சுழிமுனை,
சிங்குவை,
புருடன்,
காந்தாரி,
அஸ்தி,
அலம்புடை,
சங்கினி,
குரு.

655 - தனஞ்சயன் திரிபால் உண்டாகும் நோய்கள்.
----------------------------------------------------------------------------------

வீங்கும் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமும் கூனு முடமாதாய்
வீங்கும் வியாதிகள் கண்ணில் மருவியே.

கழலை, சிரங்கு, குட்டம், சோகை, வாதம், கூன், முடம், கண்ணில் தோன்றும் வியாதிகள் இவை
தனஞ்சயன் மாற்றத்தால் உண்டாகும்.

656 - கூர்மன் திரிபால் உண்டாகும் நோய்கள்.
------------------------------------------------------------------------------

கண்ணில் வியாதி உரோகம் தனஞ்சயன்
கண்ணில் இவ்ஆணிகள் காசம் அவன் அல்லன்
கண்ணினில் கூர்மன் கலந்திலன் ஆதலால்
கண்ணனில் சோதி கலந்ததும் இல்லையே.

தனஞ்சயன் என்ற வாயுவின் திரிபினால் நோய்கள் உண்டாகும். கண்களில் உண்டாகும் பூக்களும் காச நோயும் தனஞ்சயனால் தோன்றுவதில்லை. கண்ணில் கூர்மன் என்ற வாயு பொருந்தா விட்டால் கண் நோயுண்டாகும். கண்ணில் ஒளியும் இராது.

657 - சிறிய ஆசைகளை உணர்தல்.
-------------------------------------------------------------

நாடியி னோசை நயன மிருதயம்
தூடி யளவுஞ் சுடர் விடு சோதியைத்
தேவருளீசன் றிருமால் பிரமனும்
ஓவற நின்றங் குணர்ந்திருந்தாரே.

கண்கள் இதயம் இவற்றில் நாடியின் ஓசை விளங்கும். சிறிய ஒலியை உண்டாக்கும் அந்தச் சுடரை மும்மூர்த்திகளும் இடைவிடாது அங்கே பொருந்தி உணர்ந்திருந்தனர்.

658 -  ஒன்பது வாயில்கள்.
---------------------------------------------

ஒன்பது வாசல் உடையது ஓர் பிண்டத்துள்
ஒன்பது நாடி உடையது ஓர் ஓர் இடம்;
ஒன்பது நாடி ஒடுங்க வல்லர்கட்கு
ஒன்பது வாசல் உலை; நல ஆமே.

உடலில் உள்ள ஒன்பது வாயில்களையும் அடைத்துவிட்டால், மற்ற ஒன்பது நாடிகளும் பத்தாவது நாடியாகிய சுழுமுனையில் சென்று ஒடுங்கும். அங்கனம் அவற்றைப் பொருத்தித் தவம் செய்பவர்கள் அழியாத உடலைப் பெறுவார்கள்.

659 - குருவின் உபதேசம்.
---------------------------------------------

ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு முனைச்செல்ல
வாங்கி இரவி, மதி வழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழும் தரித்திட,
ஆங்குஅது சொன்னோம் அருவழி யோர்க்கே.

குண்டலினி சக்தியான தீயின் கீழே சுழுமுனை செல்லும்படிச் செய்ய வேண்டும். கதிரவன் கலையில் இயங்கும் பிராணனைத் திங்கள் கலையில் செல்லும்படிச் செய்ய வேண்டும். இதை ஏழு உலகங்களையும் தாங்க யோக நெறியில் நிற்பவருக்கு உரைத்தோம்.

660 - சுழுமுனைத் தியானம்.
-------------------------------------------------

தலைப்பட்ட வாறு அண்ணல்தையலை நாடி
வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல்
துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால்
விலைக்கு உண்ணா வைத்தோர் வித்துஅது ஆமே.

பிரமரந்திரத்தில் விளங்குகின்ற சிவசக்தியரை நாட வேண்டும். வலையில் அகப்பட்ட மான் எங்கும் போகாமல் இருப்பது போல, மூச்சுக் காற்றைச் சுழுமுனையிலேயே செலுத்த வேண்டும். இத்தகைய சுழுமுனைத் தியானம் இதைச் செய்பவருக்கு மட்டுமன்றிப் பிறருக்கும் பயன் தரும்.

661 - பிரணவ உபாசனை.
----------------------------------------------

ஓடிச் சென்று அங்கே ஒரு பொருள் கண்டவர்
நாடியின் உள்ளாக நாதம் எழுப்புவர்;
தேடிச் சென்று அங்கே தேனை முகந்து உண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் காட்டுமே.

மூலாதாரத்தில் இருந்து சுழுமுனை வழியே மேலே சென்றால் சஹஸ்ர தளத்தை அடைந்து அங்கே இருக்கும் சிவ சக்தியரை வணங்கலாம். இவ்வாறு வணங்குபவர் அங்குள்ள நாடியின் உள்ளே இருக்கும் நாதத்தை வெளிப்படுத்துவார். அங்கு உண்டாகும் அமுதத்தை அருந்துவார். உடல் என்னும் பாசறையில் குடியிருக்கும் காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாச்சரியம் என்ற ஆறு பகைவர்களைச் சிறைப்படுத்துவார்.

662 - ஒன்பது கன்னியர்.
------------------------------------------

கட்டிட்ட தாமரை ஞானத்தில் ஒன்பது
மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
கட்டிட்டு நின்று களங்கனி ஊடு போய்ப்
பொட்டு இட்டு நின்று பூரணம் ஆனதே.

சஹஸ்ரதளத்துடன் கட்டப்பட்ட சுழுமுனை நாடியில் ஒன்பது சக்தியர் உள்ளனர். அவர்கள் அங்கிருந்து ஜீவர்களை உலகமுகப்படுத்திக் கொண்டு உள்ளனர். ஜீவர்கள் பக்குவம் அடைந்த பிறகு அவ்வொன்பது சக்தியரும் செயல் அற்றுச் சக்தியுடன் பொருந்தி நின்றனர். அப்போது மூலாதாரத்தில் இருந்த குண்டலினி தொண்டைச் சக்கரமாகிய விசுத்தியின் வழியே சென்று புருவ மத்தியில் உள்ள ஆக்ஞை சக்கரத்தை அடைந்து அங்கே முழுச் சக்தியானது.

663 - பராசக்தியே செய்விப்பவள்!
-----------------------------------------------------------

பூரணச் சத்தி ஏழு மூன்று அறை ஆக
ஏர்அணி கன்னியர் எழு நூற்றஞ்சு ஆயினர்
நாரணன், நான்முகன் ஆகிய ஐவர்க்கும்
காரணம் ஆகிக் கலந்து விரிந்ததே.

பராசக்தியே ஏழு கன்னியர்களாக ஆவாள். இச்சை, ஞானம், கிரியை இவற்றின் வேறுபாடுகளால் அந்த ஏழு கன்னியர் இருபத்தொரு அழகிய கன்னியர் ஆவார்கள். ருத்திரன், நான்முகன், திருமால், மகேசுவரன், சதாசிவன் என்னும் ஐவருக்கும் காரணமாகி அந்த இருபத்தொரு கன்னியர்களே நூற்று ஐந்து கன்னியர்களாக ஆவார்கள். இவ்வாறு ஐந்து மூர்த்திகளின் அனைத்துத் தொழில்களையும் செய்விப்பவள் பராசக்தி தேவியே ஆவாள்.

664 - நாதத்தில் விளங்குவாய்!
------------------------------------------------------

விரிந்து குவிந்து விளைந்த இம்மங்கை
கரந்து உள்எழுந்து, கரந்து அங்கு இருக்கின்
பரந்து குவிந்தது பார்முதல் பூதம்
இரைந்து எழுவாயு இடத்தில் ஓங்கே.

இவ்வாறு விரிந்து நிற்கும் சக்தியே பிறகு மீண்டும் ஒடுங்கி விடுவாள். பலவகையான போகங்களையும் விளைவிப்பாள். சிவத்துடன் நின்று அதன் பின்னர் மறைந்து ஒடுங்கி விடுவாள். மேலே எழுகின்ற நாதத்தில் நீ ஓங்கி விளங்குவாய்.

665 -  விந்துத் தானம்.
-------------------------------------

இடையொடு பிங்கலை என்னும் இரண்டு
மடைபடும் வாயுவும் மாறியே நிற்கும்.
தடைஅவை ஆறு எழும் தண்சுடர் உள்ளே
மிடை வளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே.

நாதத்தில் ஒடுங்கி விட்டவர்களுக்கு இடைகலை பிங்கலை என்னும் இரண்டும் அடைபட்டுவிடும்.
சுழுமுனை திறந்து கொள்ளும். அவர்களின் சுவாசம் மெல்ல இயங்கும். ஆறு ஆதாரங்களும், ஏழு சக்திகளும் நீங்கிச் சந்திர மண்டலத்தில் புருவ மத்தியில் விந்துத் தானத்தில் அடங்கும்.

666 - சிவன் தன்னை அறியச் செய்தல்.
--------------------------------------------------------------------
ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கு இருக்கில்
அடங்கி அடங்கிடும் வாயு அதனுள்
மடங்கி மடங்கிடும் மன் உயிருள்ளே
நடங் கொண்ட கூத்தனும் நாடுகின்றானே.

உள்ளம் ஒருமைப்பட்டு புருவ மத்தியில் இருந்தால், மூச்சுக் காற்றும் கட்டுப்பட்டு நின்று விடும். சீவன் வெளி உலக நோக்கம் இல்லாமல் அகத்தின் மீது நோக்கம் கொண்டு விடும். அப்போது உயிரில் கலந்து விளங்கும் ஈசன், சீவனுக்குத் தன்னை வெளிப்படுத்துவான்.

667 - தூண்டா விளக்கு.
----------------------------------------

நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்
தேடி உடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிடும்
மாடில் ஒருகை மணிவிளக்கு ஆனதே.

பாயும் இடத்தில் நாத ஒலியுடன் சென்று, அங்கு நிலை பெற்று விளங்கும் சிவ சக்தியரைப் பொருந்தும் சுழுமுனை ஒரு தூண்டா விளக்கு ஆகும். அது பாசறையில் தங்கி இருக்கும் இருள் என்னும் கொடிய பகைவனை அடையாளம் காட்டுகின்றது.

668 - எண் சித்திகள்.
------------------------------------

அணிமாதி சித்திக ளானவை கூறில்
அணுவி லணுவின் பெருமையி னேர்மை
இனுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குத் தானாதல் என்றெட்டே.

அணிமா முதலிய எட்டு சக்திகள் இவை:
1. அணுவில் அணுவாதல்.
2. பெரியதில் பெரியது ஆதல்.
3. அசைக்க முடியாத கனம் அடைதல்.
4. இறகு போல லேசாதல்.
5. மேலே உள்ள வானத்தைத் தொடுதல் 6. எல்லா பூதங்களிலும் கலந்து எழுதல். 7. உயிர்களுக்கு எல்லாம் கருத்தாக ஆதல்.
8. எங்கும் தானாக இருத்தல்.

669 -  அமுதம் உண்பர்.
---------------------------------------

எட்டாகிய சித்தி யோரெட்டி யோகத்தால்
கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும்
ஒட்டா நடுநாடி மூலத்த னல்பானு
விட்டான் மதியுண்ண வும்வரு மேலதே.

அட்டாங்க யோகத்தால் அடக்கி ஆள இயலாத மூச்சுக் காற்றை ஒருவர் அடக்கி ஆளலாம். அவர் எட்டுப் பெரிய சித்திகளையும் அடையலாம். மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி, சுழுமுனை நாடி வழியே மேலே செல்லலாம் . அக்கினி மண்டலம், கதிரவன் மண்டலம் இவற்றைக் கடந்து செல்லலாம். சந்திர மண்டலத்தில் உள்ள அமுதத்தையும் உண்ணலாம்.

670 - திரிபுரை சக்தி.
-----------------------------------

சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தால்
புத்திக ளானவை எல்லாம் புலப்படும்
சித்திக லெண் சித்தி தானந் திரிபுரைச்
சக்தி அருள்தரத் தானுள வாகுமே.

பழக்கத்தால் நல்ல முன்னேற்றம் அடைவிக்கும் அட்டாங்க யோகம். அதைப் பயின்று மேலே செல்லச் செல்ல பலன்கள் பலப்பல கிடைக்கும். எட்டு சித்திகள் கிடைக்கும்; ஞானம் தானே வெளிப்படும்; எண் சித்திகளும் திரிபுரை சக்தியே ஆனதால் அவள் அருளால் சித்தியும், புத்தியும் தாமே கிடைக்கும்.

671 - அணிமா சக்தி.
------------------------------------

எட்டுஇவை தன்னோடு எழிற்பரம் கைகூடப்
பட்டவர் சித்தர் பரலோகம் சேர்தலால்
இட்டமது உள்ள இறுக்கல் பரகாட்சி
எட்டு வரப்பும் இடம்தான் நின்று எட்டுமே.

எட்டு பெரிய சித்திகளுடன் எல்லாம் வல்ல பரஞானமும் பெற்ற ஒருவர் சித்தர் ஆகி விடுவார். இவர் சிவலோகத்தை அடைந்து, தனக்கு மிகவும் விருப்பமான சிவபெருமானுடன் பொருந்தி இருப்பார்.

672 - விரும்பும் உலகம் சேரலாம்!
----------------------------------------------------------

மந்தர மேறு மதிபானுவை மாற்றிக்
கந்தாய்க் குழியில் கசடுஅற வல்லோர்க்குத்
தந்துஇன்றி நற்கமிய லோகம் சார்வாகும்
அந்த உலகம் அணிமாதி ஆமே.

மலையாகிய தலையில் சந்திர, சூரிய கலைகளை மாற்ற வேண்டும். சுழுமுனையை அடிக்கப் பட்ட ஒரு முளையைப் போல ஆக்கி விட வேண்டும். விந்துவின் நீக்கம் என்பதே இருக்கக் கூடாது. இப்படிப்பட்டவருக்கு நரம்புகள் இல்லாத ஒரு பிரணவ உடல் கிடைக்கும். அவர் அதன் மூலம் நல்ல உலகத்தை அடைய முடியும். அந்த உலகம் தன்னை அடைந்தவருக்கு எட்டு சித்திகளையும் அளிக்க வல்லது.

673 - வெல்ல இயலாது.
-----------------------------------------

முடிந்திட்டு வைத்து முயங்கில் ஓராண்டில்
அணிந்த அணிமா கைதானாம் இவனும்
தணிந்த அப்பஞ்சினும் தான் நொய்யது ஆகி
மெலிந்து அங்கு இருந்திடும் வெல்ல ஒண்ணாதே.

விந்து நீக்கம் இல்லாமல் சேமித்து வைத்துக் கொண்டு ஓராண்டு யோக முயற்சியில் ஈடுபட வேண்டும். அப்போது அணிமா சக்தி கிடைக்கும். அது கிடைத்தால் அந்த சித்தன் மெலிந்த நுட்பமான பஞ்சை விட மிகவும் மெலிந்து இருப்பான், அவனை வெல்ல முடியாது..

674 - இலகிமா.
--------------------------

ஆகின்ற அத்தனி நாயகி தன்னுடன்
போகின்ற தத்துவம் எங்கும் புகலதாய்ச்
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்ற ஐயாண்டில் மா லகு ஆகுமே.

பராசக்தி ஆக்கத்தைத் தருபவள். மூலாதரத்தில் இருந்து மேலே செல்லும் எல்லா தத்துவங்களிலும் அந்த சக்தி தேவையான் காலத்துக்குத் தன்மயமாகி நின்றால் இலகிமா என்னும் சித்தி ஐந்து ஆண்டுகளில் கைவரும்.

675 - சிவ தரிசனம்.
---------------------------------

மாலகு ஆகிய மாயனைக் கண்டபின்
தான்ஒளி ஆகித் தழைத்து அங்குஇருந்திடும்
பால்ஒளி ஆகிப் பரந்து எங்கும் நின்றது
மேல்ஒளி ஆகிய மெய்ப்பொருள் காணுமே.

இலகிமா என்னும் சித்தியைப் பெற்ற ஆன்மா தானே ஒளியாக விளங்குவான். அந்தப் பேரொளியில் திளைத்து இருப்பான். பால் போன்ற ஒளியுடன் பரவி நிற்கும் ஆன்மாவுக்கு அப்போது மேலான சிவ தரிசனம் கிடைக்கும்.

தொடரும்........

குறிப்பு:-
*********
மேலும் திருமூலர் பெருமானால்   உலகுக்கு அருளப்பட்ட அபூர்வ  யோக முறையை  முழுமையாக தனிப்பட்ட என்னுடைய திருமந்திர whatsaap  வகுப்பில் online இல் நேரடியாக அனுபவமாக  கற்பிக்கிறேன். கற்க விரும்புபவர்கள் கற்று கொள்ளுங்கள். உலகில் எங்கிருந்தாலும் நேரடியாக whatsaap மூலம் கற்று கொள்ளும் அறிய வாய்ப்பு. கற்க விரும்புபவர்கள் சித்தர்களின் குரல் ஆலோசகர் ராம் குமார் அவர்களை (+918903834667) தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வகுப்பில் இணையவும்.

         - சித்தர்களின் குரல் shiva shangar